இந்த செய்தியை படித்துவிட்டு 'வேண்டுதல்கள் என்றால் என்ன ?' என்று கேள்வி எழுகிறது.
மட்டை ஆட்டத்தில் தன் அணி வெற்றி பெற வேண்டும் அம்பாணி குடும்பத்தார் மூலம் 2 கோடி ரூபாய்களை திருப்பதி உண்டியலில் பெருமாளுக்கு (லஞ்சமாக) போடப்பட்டதாம், மும்பை அணி தோற்றுவிட்டதால் அதை மண்ணைக் கவ்வவைத்துவிட்டார் பெருமாள், பெருமாளே டோனிக்கு தான் ரசிகர் என்று சொல்லிவிடலாமா ? அல்லது கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் சென்னை வெற்றி பெற இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உண்டியலில் போட்டு இருப்பார்களோ ?
*******
* பக்கத்து வீட்டுக்காரன் பாடையில் போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் சாமி வரம் கொடுக்குமா ?
* என்னை திட்டியவன் நாசமாகப் போகவேண்டும் என்று வேண்டிக் கொண்டால் சாமி வரம் கொடுக்குமா ?
சிலர் வேண்டுதல் என்பதோடு நிறுத்தாமல் சூனியம் வைக்கவும் கிளம்புவார்கள், சூனியம் பலிக்கும் என்பது பலர் நம்பிக்கை, அப்படி என்றால் ஜெ சார்பில் கருணாநிதி குடும்பத்துக்கு சூனியம் வைக்கலாம். காங்கிரஸ் கோஸ்டிகள் உள்ளுக்குள் கோஷ்டி ஒழிப்பிற்கு சூனியம் வைத்து ஒழித்துவிட்டால் சோனியாவிற்கு தலைவலி மிச்சமாகும். சூனியம் சோதிடத்தின் ஒரு பிரிவு, கிரக நிலைகளை ஒப்பிட்டு ஒருவருக்கு மோசமான நிலை இருக்கும் போது சூனியம் வைத்தால் பலிக்கும் என்பது சூனியக்காரர்களின் சோதிட மற்றும் சூனிய நம்பிக்கை.
கிரிக்கெட் சூதாட்டங்களை தவிர்த்து பார்த்தால் விளையாட்டு என்பது இரு அணியினருக்கிடையேயான போட்டி, இதில் திறமை தான் வெற்றி பெரும், வெற்றி யை உறுதி செய்வோர் தவறிழைக்காமல் கடுமையாக போட்டி கொடுத்தால் வெற்றி பெற முடியும், விளையாட்டின் சித்தாந்தங்கள் அனைத்தும் இது தான். அது தவிர்த்து விளையாட்டில் வெற்றி என்பது எதிரியை ஏமாற்றுவதோ, குதறுக்கு வழியில் பெருவதோ இல்லை. தன் அணி வெற்றி பெற வேண்டும் என்கிற வேண்டுதல் கூட தவறு இல்லை, ஆனால் அதற்காக முன்பணமாக உண்டியலில் லஞ்சம் போடுவதெல்லாம் இறை நம்பிக்கையை கேலிக் குரியாக்கும் ஒரு தவறான முன் உதாரணம் ஆகும்.
போட்டியில் வெற்றி பெருவதைவிட தோல்வியே அடையாமல் இருக்க வேண்டுமென்றால் போட்டி இடாமல் இருப்பது தான் ஒரே (மாற்று) வழி. அதை விடுத்துவிட்டு தோல்விக்கு அஞ்சி கடவுளுக்கு கையூட்டு கொடுப்பவர்கள் வெற்றி என்பதையே வாங்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் பொருள். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுதல்கள் பயனளித்தாலும் கூட போட்டியில் எதிரணியில் இருப்போரை ஏளனம் செய்வது போலாகும்.
திருப்பதி சாமி சென்னை அணிக்கு வேண்டாதவரா ? வெற்றி தோல்விகளில் மூன்றாம் நபர் தலையீடுகள் இல்லை என்றால் அது ஞாயமான முடிவாகும், அதில் ஆண்டவன் என்கிற மூன்றாம் நபர் தலையீடு இருந்தால்
கிடைப்பது எதுவாக இருந்தாலும் அது அநீதி தான்.
உண்மையைச் சொல்லப் போனால் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் நமாஸ் செய்தாலோ, சிலுவை குறி போட்டுக் கொண்டாலோ, இந்துக்களைப் போல் வேண்டிக் கொண்டாலோ அதை மாற்று மத சமூகத்தினர் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் தரையில் விழுந்து அல்லாவுக்கு நன்றி என்று நமாஸ் செய்வதை ரசிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர் யார் ?
விளையாட்டினுள் மதமோ வேண்டுதல்களோ நுழைவதை நேர்மையான விளையாட்டு என்று கொள்ள முடியுமா ? வேண்டிக் கொண்டு காசு போடுகிறவன் போடுகிறான் உனக்கென்ன என்று கேட்டாலும் கூட......'அட இவனுங்க நிஜமாலும் திறமையால் வெற்றி பெறவில்லையா ?' என்று பதில் வருமா வராதா ?
எந்த வித அநீதிகளும், ஞாயம் பற்றிய கேள்விகள் எதுவும் இல்லாத போட்டிகளில் தன்பக்கம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவோர் போட்டியிடாமல் இருப்பதே போட்டிக்கான நன்மதிப்பு. விளையாட்டில் அரசியல், மதரீதியான வேண்டுதலகள் இவையெல்லாம் நுழையும் போது திறமை என்பதே கேள்விக்குரியாகிவிடுகிறது.
பின்பற்றுபவர்கள்
27 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
24 கருத்துகள்:
//மட்டை ஆட்டத்தில் தன் அணி வெற்றி பெற வேண்டும் அம்பாணி குடும்பத்தார் மூலம் 2 கோடி ரூபாய்களை திருப்பதி உண்டியலில் பெருமாளுக்கு (லஞ்சமாக) போடப்பட்டதாம், மும்பை அணி தோற்றுவிட்டதால் அதை மண்ணைக் கவ்வவைத்துவிட்டார் பெருமாள், பெருமாளே டோனிக்கு தான் ரசிகர் என்று சொல்லிவிடலாமா ? அல்லது கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் சென்னை வெற்றி பெற இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உண்டியலில் போட்டு இருப்பார்களோ ? //
எந்த கடவுளும் காணிக்கையை விரும்புவதில்லை . அவரை அன்பாக நினைத்தாலே போதும் அவன் நமக்கு நல்ல வழியை காமிப்பார். நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு உண்டியல் வைத்து அதில் எங்களால் முடிந்த போது பணத்தை போட்டு வைப்போம் . திருபதி செல்லும் போது அந்த பணத்தை வைத்து தான் பயணம் செய்வோம் . இவர்கள் செய்வது எல்லாம் விளம்பரத்திற்காக தவிர வேறு எதுவும் இல்லை.
//உண்மையைச் சொல்லப் போனால் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் நமாஸ் செய்தாலோ, சிலுவை குறி போட்டுக் கொண்டாலோ, இந்துக்களைப் போல் வேண்டிக் கொண்டாலோ அதை மாற்று மத சமூகத்தினர் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் தரையில் விழுந்து அல்லாவுக்கு நன்றி என்று நமாஸ் செய்வதை ரசிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர் யார் ? //
இதில் எதுவும் தவறு இருபதாக தெரியவில்லை . அவரவர்கள் அவர்கள் சார்ந்த மதத்தின் படியோ சமுதாயத்தின் படியோ கடவுளை வணங்குகிறார்கள் . கடவுளை எங்கு வேண்டுமானாலும் வணங்கலாம்.
வெற்றி தோல்விகளில் மூன்றாம் நபர் தலையீடுகள் இல்லை என்றால் அது ஞாயமான முடிவாகும், அதில் ஆண்டவன் என்கிற மூன்றாம் நபர் தலையீடு இருந்தால்
கிடைப்பது எதுவாக இருந்தாலும் அது அநீதி தான்!!!
திரு கோவி கண்ணன்,நல்ல பதிவு,
நன்றி.
//வேண்டிக் கொண்டு காசு போடுகிறவன் போடுகிறான் உனக்கென்ன என்று கேட்டாலும் கூட......'அட இவனுங்க நிஜமாலும் திறமையால் வெற்றி பெறவில்லையா ?' என்று பதில் வருமா வராதா ?//
சரிதான் ....கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து ..ஐயோ வெற்றி பெறனுமே என்று பதட்டதுடன் விளையாடி வெற்றி பெறுவதை காட்டிலும் ..தோற்பதே மேல் .......எவன் ஒருவன் தோல்வியை கண்டு பதட்டபடவில்லையோ அவன் தான் உண்மையான வெற்றியாளன்....
டோனி -யிடம் தோல்வியை கண்டு கலங்காத மனபோக்கு இருப்பது (உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் ) தான் வெற்றிக்கு காரணம் என நான் நினைகிறேன் .....
நன்று! விளையாட்டில் திறமைக்கு தான் மதிப்பு கொடுக்க வேண்டும்!
இந்த பதிவின் நோக்கம் கடவுளை விமர்சிப்பதா?அல்லது கிரிகெட் வீரரை விமர்சிப்பதா?
வேண்டுதல், துதித்தல் எல்லாமே ஹம்பக்கா தான் தெரியுது!
பயனுள்ள பதிவு.
கிரிக்கெட்டும் மற்றைய விளையாட்டுக்கள் போன்றுதான் ஆனால் ஏனோ அதனை மட்டும் செல்லப்பிள்ளையாக்கி வர்த்தக ரீதியில் பணம் ஈட்டும் சூதாட்டமாகவே ஆக்கிவிட்டார்கள். கிரிக்கெட்டின் Fast Food வடிவம்தான் 20 - 20
என்ன கோவி கண்ணன்
இந்த மாதிரி நியூஸூக்கெல்லாம் பதிவை போட்டுக்கிட்டு. படிச்சு சிரிங்க இந்த கோமாளிங்கள பாத்து
நம்பிக்கை பலர் வாழ்வின் ஆதாரமாக செயல்படுகிறது என்பதை மறுக்க முடியாது. அது எதன்மேல் என்பதில்தான் வேறுபாடு. தன் திறமையின்மேல் இருந்தால் அது சரியென்று எல்லோரும் ஒத்துக்கொள்கிறோம். கடவுள் மேல் என்றால் அதை மூடநம்பிக்கை என்று எள்ளுகிறோம். இந்த விஷயம் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் ஸெர்வ்டு இதுதான் நடக்குது.
கொல்லூர் கோவிலில் கும்ப்ளே ஜெயிக்க வேண்டுதல் நடந்துச்சு.
ஆனா...பூஜையை வாங்கிக்கிட்ட, வீரபத்ரர் கண்டுக்கலையே!!!!!
நான் அப்போ அங்கே ஐ விட்நஸ்.
// Dr.P.Kandaswamy said...
நம்பிக்கை பலர் வாழ்வின் ஆதாரமாக செயல்படுகிறது என்பதை மறுக்க முடியாது. அது எதன்மேல் என்பதில்தான் வேறுபாடு. தன் திறமையின்மேல் இருந்தால் அது சரியென்று எல்லோரும் ஒத்துக்கொள்கிறோம். கடவுள் மேல் என்றால் அதை மூடநம்பிக்கை என்று எள்ளுகிறோம். இந்த விஷயம் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று.//
அப்படியே சாமி செவிசாய்கிறது என்று வைத்தே கொண்டாலும்,
பிரச்சனை... இரு அணிகளுமே அதே கோவிலில் போய் வேண்டுதல் நடத்தினால் சாமி யாருக்கு தீர்ப்பு சொல்லும் ?
:)
//அப்படியே சாமி செவிசாய்கிறது என்று வைத்தே கொண்டாலும், பிரச்சனை... இரு அணிகளுமே அதே கோவிலில் போய் வேண்டுதல் நடத்தினால் சாமி யாருக்கு தீர்ப்பு சொல்லும் ? :) //
எவன் ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை இருக்கிறதோ அவனே இறுதியில் ஜெயிகிறான். கடவுளிடம் வேண்டி கொண்டால் அவன் ஜெயிபதற்கு வழியை தான் காண்பிப்பான். அந்த வழியை பின்பற்றினாலே நாம் ஜெயிக்கலாம் .
ஒரு சிறிய கதை :
ஒருவன் தனக்கு லாட்டரியில் ஒரு கோடி ருபாய் பணம் பரிசு வர வேண்டும் என்று தினமும் கடவுளிடம் வேண்டி கொண்டானாம் . கடவுள் அவனுடைய வேண்டுதலுக்கு செவி சாய்த்து அவனுக்கு லாட்டரியில் பரிசு வர ஆசிர்வாதம் செய்து விட்டு சென்று விட்டாராம் . கொஞ்ச நாள் கழித்து நாம் ஆசிர்வாதம் செய்தவன் எப்படி இருக்கிறான் என்று பார்க்க கடவுள் வந்தாராம் . அனால் அவன் பழைய படியே வேண்டி கொண்டிருந்தானாம் . உடனே கடவுள் வந்து நான் தான் ஏற்கனவே உனக்கு ஆசிர்வாதம் செய்து விட்டேனே என்று சொன்னாரம் . அப்பொழுது தான் தெரிஞ்சுது இவன் கடவுளிடம் லாட்டரியில் பரிசு வேண்டும் என்று வேண்டி கொண்டானே தவிர அந்த லாட்டரி சீட்டை வாங்க வில்லை என்று . எப்படி அவனுக்கு பணம் கிடைக்கும் . அதனால் கடவுள் ஆசிர்வாதம் பலிக்க வேண்டு மென்றாலும் நாம் சிறிதாவது முயற்சி செய்ய வேண்டும் .
// Kesavan said...
எவன் ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை இருக்கிறதோ அவனே இறுதியில் ஜெயிகிறான். கடவுளிடம் வேண்டி கொண்டால் அவன் ஜெயிபதற்கு வழியை தான் காண்பிப்பான். அந்த வழியை பின்பற்றினாலே நாம் ஜெயிக்கலாம் .//
திரும்பவும் விதண்டாவாதம், சச்சினு ஒரு அணி, டோணி ஒரு அணி இருவீரர்களுமே நன்றாக விளையாடக் கூடியவர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், இவர்கள் வேண்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் கேள்வி. சாமி யாருக்கு பரிதாபப்படும் ? அல்லது உங்க பாணியில் ஆசிர்வதிக்கும்னு சொல்லுங்க.
//திரும்பவும் விதண்டாவாதம், சச்சினு ஒரு அணி, டோணி ஒரு அணி இருவீரர்களுமே நன்றாக விளையாடக் கூடியவர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், இவர்கள் வேண்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் கேள்வி. சாமி யாருக்கு பரிதாபப்படும் ? அல்லது உங்க பாணியில் ஆசிர்வதிக்கும்னு சொல்லுங்க. //
இங்க விதண்ட வாதம் நான் பண்ணலை . நீங்க தான் பண்றீங்க . கடவுள் நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் இருந்தால் ஜெயிக்கலாம்னு சொல்லியாச்சு.
//இங்க விதண்ட வாதம் நான் பண்ணலை . நீங்க தான் பண்றீங்க . கடவுள் நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் இருந்தால் ஜெயிக்கலாம்னு சொல்லியாச்சு.
3:11 PM, April 30, 2010//
நல்லா யோசிச்சு பதில் சொல்லு, சம பலம் உள்ள இரு அணிகளில் ஒன்று சாமியை வேண்டிட்டு விளையாடப் போகுது, வேண்டாமல் விளையாடப் போகும் அணிக்கு சாமி ஆப்பு வச்சிட்டு, வேண்டி கொள்ளும் அணிக்கு கப்பு கொடுத்துடுமா ?
அய்யா லாட்டரி!
கடவுள் லாட்டரில் பரிசு விழும்னு சொல்லிட்டா அது காத்துல பறந்து வந்தாவது மடியில விழனும்! அப்படி முடியாட்டி என்னாத்துக்கு அந்த மசுரு கடவுளு!
//திரும்பவும் விதண்டாவாதம், சச்சினு ஒரு அணி, டோணி ஒரு அணி இருவீரர்களுமே நன்றாக விளையாடக் கூடியவர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், இவர்கள் வேண்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் கேள்வி. சாமி யாருக்கு பரிதாபப்படும் ? அல்லது உங்க பாணியில் ஆசிர்வதிக்கும்னு சொல்லுங்க. //
//நல்லா யோசிச்சு பதில் சொல்லு, சம பலம் உள்ள இரு அணிகளில் ஒன்று சாமியை வேண்டிட்டு விளையாடப் போகுது, வேண்டாமல் விளையாடப் போகும் அணிக்கு சாமி ஆப்பு வச்சிட்டு, வேண்டி கொள்ளும் அணிக்கு கப்பு கொடுத்துடுமா ? //
கடைசியா நீங்க எழுதின ரெண்டு பதில பாருங்க . முதல்ல ரெண்டு அணியும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்று சொன்னிங்க, அடுத்தது ஒரு அணி சாமியை வேண்டிட்டு விளையாட போகுதுன்னு சொல்றீங்க . நீங்க எப்படி அந்த அணி சாமியை கும்பிடலைன்னு சொல்றீங்க , அத முதல்ல சொல்லுங்க , முதல்ல நீங்க தெளிவாகுங்க .
வேண்டிகொள்ளும் என்றால் உண்டியலில் கொண்டுபோய் கொட்டும் என்ற அர்த்தத்தில் சொல்லியிருப்பார்!
இங்கே அதை பத்தி தானே பேச்சு!
நான் என்னோட கருத்தை சொல்லியாச்சு . இதற்கு மேல் ஒன்னும் சொல்வதற்கில்லை . நீங்க தேஞ்சு போன ரெகார்ட் மாதிரி இதையே மாத்தி மாத்தி கேபிங்க, நீங்க எவ்வளவு கேள்வி கேட்டாலும் என்னுடைய பதிலை நான் ஏற்கனேவே சொல்லியாச்சு . நம்புவது நம்பாதது அவரவர்கள் நம்பிக்கை .
//என்னுடைய பதிலை நான் ஏற்கனேவே சொல்லியாச்சு .//
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க லாட்டரி!
கோவியை தவிர மற்றவர்களுக்கு பதில் சொல்வது சொல்லாதது என் விருப்பம்
//
கோவியை தவிர மற்றவர்களுக்கு பதில் சொல்வது சொல்லாதது என் விருப்பம் //
உங்கள் பக்தியை கண்டு மெச்சினேன்!, லாட்டரி சீட்டு வரம் வேண்டுமா!?
உண்டியல்ல கொட்டினவனை வெற்றி பெற வைக்கணுமோ.. வெற்றிபெற வச்சா அதைவிடக் கூடக் கொண்டுவான் எண்டு நினைச்சு மற்றவனை வெற்றிபெற வைக்கிறதோ என்னோட விருப்பம். அதை நான் ஏன் வெளியில சொல்லணும்..
- கடவுள்
லாட்டரியைக் குடுத்துட்டு பிறகு வந்து கடவுள் அவனைக் கேட்டுத்தான் தெரிஞ்சுகொண்டாராம் அவன் ஏன் இன்னும் பழையபடி இருக்கிறான் எண்டு... :))
கருத்துரையிடுக