நான் நெருப்பு நரி இணைய உலாவி பயன்படுத்துகிறேன். நேற்று ஜெயமோகன் வலைத்தளத்திற்கு சென்ற போது மால்வேர் எனப்படும் இணைய தளம் வழியாக பரவும் மென்பொருள் கிருமியின் பக்கம் தானாகவே திறந்து 'உன் கணிணியில் வைரஸ் இருக்கு.....சரி பார்க்கவா ?' என்று கேட்டது. உடனேயே எச்சரிக்கையுடன் நெருப்பு நரியின் கழுத்தை பிடித்து நெறித்துவிட்டேன். (Task Manager > Processes > Firebox > End Task) . ஒருவேளை வேறு இணையத்தளத்தில் இருந்து வந்திருக்காலம் என்கிற முடிவில் விட்டுவிட்டேன். இன்று மறுபடியும் ஜெயமோகன் வலைப்பதிவுக்குச் சென்றால் அதே மென்பொருள் கிருமி (packupdate_build30_2045.exe)அதே வேலையைக் காட்டி உன் கணிணியில் நிறுவட்டுமா ? என்று கேட்டது. அது உலவியில் காட்டும் படம் நம் கணிணியில் வைரஸ் இருப்பது போன்று வெறும் தோற்றம் தான். ஆனால் அதை நம்பி நாம் அதை (packupdate_build30_2045.exe) க்ளிக் செய்துவிட்டால் அப்பறம் கணிணியில் கிருமி சம்மணம் போட்டு அமர்ந்துவிடும்.
(படத்தின் மீது அழுத்தி பெரிதாகப் பார்க்கவும், அது வெறும் ப்ளாஸ் இமேஜ் தான்... உண்மையில் உங்கள் கணிணியில் பிரச்சனை எதுவுமே இருந்திருக்காது, இது காட்டும் ஐபியும் தவறான ஐபி)
கிருமி எதிர்ப்பு மென்பொருளை (Anti-Virus) கணிணியில் நிறுவாதவர்கள், ஜெயமோகன் வலைத்தளத்திற்கு தற்காலிகமாக செல்வதைத் தவிர்க்கவும், விரைவில் வலைத்தள நிர்வகிக்கும் பொறுப்பாளர்களிடம் சொல்லி அதை ஜெயமோகன் சரி செய்வார் என்று நம்புகிறேன்.
கணிணியில் அந்த மென்கிருமி நுழைந்தால், கணிணி நினைவகம் பாதிப்புக்கு உள்ளாகும், ஸ்பேம் சர்வராக மாறி அந்த கணிணியில் இருந்து நிமிடத்திற்கு 1000 ஸ்பேம் (வியாபார, விளம்பர) மின் அஞ்சல்களை இணையம் வழியாக அனுப்பத் துவங்கும், அதற்கே ப்ராசரின் முழு பலமும் தேவைப்படும் என்பதால் கணிணியின் மற்ற வேலைகள் மிக மிக மெதுவாக நடைபெறும். நீக்குவதற்கு Anti-Virus மென் பொருளை நாட வேண்டி இருக்கும், இல்லை என்றால் முழு இயங்கியையுமே ( Operating System) நீக்கிவிட்டு (Format), திரும்பவும் நிறுவ (Install) நேரிடலாம்.
ஜெயமோகன் வலைத்தளத்தில் கிருமி என்று அவரது வாசகர்கள் அவருக்கு தகவலைக் கொண்டு சேர்த்து அதனைச் சரி செய்யச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
22 கருத்துகள்:
ஆமாம், மூன்றுநாட்களுக்கு முன் ஜெயமோகன் தளத்திற்குப் போய் ஒன்றையும் திறவாமல் மிரண்டுபோய் ஓடிவந்துவிட்டேன்.
திரும்ப இதுவரை துணியவில்லை. 'சிக்கல் தீர்ந்தது' என்று அறிவிக்கவும் உங்களைப் போல் ஒருவர் முன்வந்தால் நல்லது.
நானும் இதை கவனித்தேன். அவரும் அடுத்த அறிவிப்பு வரைக்கும் புது பதிவுகள் இருக்காது என ஒரு குட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேவையற்ற விட்ஜெட்டுகள் போடாமல் இருப்பதுவே நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்படியா !
நல்லவேளையாக முன் கூட்டியே தெரிந்தது . தகவலுக்கு நன்றி
//நான் நெருப்பு நரி இணைய உலாவி பயன்படுத்துகிறேன்//
நெருப்பு நரி(ஹ.. ஹ.. ஹ ) ......... தமிழ் -இல் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பது தமிழ் சினிமாவுக்கு மட்டும்தான் ..........
//......... தமிழ் -இல் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பது தமிழ் சினிமாவுக்கு மட்டும்தான் .....//
தமிழ் திரையுலகுக்கு மட்டும் தான் என்றிருக்க வேண்டும்.
:)
//திரும்ப இதுவரை துணியவில்லை. 'சிக்கல் தீர்ந்தது' என்று அறிவிக்கவும் உங்களைப் போல் ஒருவர் முன்வந்தால் நல்லது.//
யாராவது அறிவிப்பாங்க. பார்ப்போம்.
//வையற்ற விட்ஜெட்டுகள் போடாமல் இருப்பதுவே நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
அவர் பதிவில் விட்ஜட் இருப்பது போல் தெரியவில்லை. சில சமயம் வலைத்தள ஹோஸ்டட் சர்வரில் வைரஸ் புகுந்திருக்க வாய்ப்பு இருக்கு. நான் அப்படித்தான் நினைக்கிறேன்
// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அப்படியா !
நல்லவேளையாக முன் கூட்டியே தெரிந்தது . தகவலுக்கு நன்றி//
வருகைக்கு நன்றி !
அறியத்தருவதற்கு பெரு நன்றிகள்!
ஹ்ம்ம்ம்ம்.... இது அவுரு வேலையா
இருக்குமோ?
சே... சே...
தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க
ஜெயமோகனே ஒரு கிருமி, அவரின் வலை தளத்தில் கிருமி இருப்பதில் வியப்பில்லை - இப்படிக்கு நித்திய பக்தர் சாரு
அடபோங்கப்பா. வைரஸாவது கிய்ரஸாவது.
ஏன்யா இப்படி ஆளாளுக்கு வைரஸ்னா பயப்படுறீங்க?
நான் இப்பதான் ஜெயமோகன் சைட்டுக்கு போய் அந்த வைரஸ் காட்டிய காமெடி ஷோவை ஜாலியா ஆற அமர பாத்துவிட்டு வந்து இந்த கமென்ட் எழுதுறேன்.
ஏன்னா நான் வைரஸே வர முடியாத உபுன்டு லினக்ஸ் பயன்படுத்துகிறேன்.
Free Ubuntu Linux CD OS comes to your Home போய் பதிவு செய்யுங்கள். பத்து வாரத்துக்குள் விண்டோஸ் போல அழகான உபுன்டு சிடி உங்க வீட்டுக்கு வரும். அதை இன்ஸ்டால் செய்துவிட்டு என்னை மாதிரி வைரஸ் பயம் இல்லாமல் browse செய்ங்கபா.
என்னை கேட்டா நான்கூட தர ரெடியா இருக்கேன்.
Internet explorer' யை விட fire fox சிறந்தது என்று ஒரு கணிப்பு பரவலா இருக்கு, ஆனா சமீபத்தில் வந்த ஒரு ரிப்போர்ட் பார்த்திங்கன புரியும்
http://prosecure.netgear.com/community/security-blog/2009/11/web-browser-vulnerability-report---firefox-leads-the-pack-at-44.ப்ப்
//ஏன்னா நான் வைரஸே வர முடியாத உபுன்டு லினக்ஸ் பயன்படுத்துகிறேன்.//
இது IE மற்றும் fire fox கதை தான்..... விண்டோஸ் அதிகமா பயன்படுத்துவதால் வைரஸ் எழுதுவோரின் டார்கெட் எல்லாம் விண்டோஸ் மேல இருக்கு.....இதுவே உபுன்டு லினக்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமானால், அதற்கும் வைரஸ் வரும்........:-)
இதனாலேயே என் கணினி குரு முகுந்தன் விண்டோஸ் 98 பாவித்தான். அதற்கென இப்போது யாரும் வைரஸ்களை உருவாக்குவதில்லை எனக் கூறினான்.
அது உண்மையா இல்லை சும்மா என்னைக் கலாய்த்தானா என்பதை யாராவது சொல்லுங்கப்பூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// dondu(#11168674346665545885) said...
இதனாலேயே என் கணினி குரு முகுந்தன் விண்டோஸ் 98 பாவித்தான். அதற்கென இப்போது யாரும் வைரஸ்களை உருவாக்குவதில்லை எனக் கூறினான்.
அது உண்மையா இல்லை சும்மா என்னைக் கலாய்த்தானா என்பதை யாராவது சொல்லுங்கப்பூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
லினெக்ஸ், யுனிக்ஸ், ஆப்பிள் தவிர்த்து அனைத்து விண்டோக்களும் பாதிப்பு அடையக் கூடியதே
வைரஸ் எச்சரிக்கை
April 21, 2010 – 8:51 pm
நண்பர்களே ,
சில நாட்களாக நம் தளம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது , முதல் பக்கத்துக்கு பின் வைரஸ் தாக்கியுள்ளதாகவும் , அதை நீக்க இதை இன்ஸ்டால் செய்யுங்கள் என்றும் செய்தி வருகிறது .
அப்படி எதையும் நிறுவ வேண்டாம் , அது உங்கள் கணினியை பாதிக்கும் , தளத்தை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டுள்ளது , அது முடியும் வரை புதிய பதிவுகள் எதுவும் இருக்காது .
சிரமத்துக்கு மன்னிக்கவும் .
மேற்பார்வையாளர்
- ஜெயமோகன் வலைப்பதிவில் இருந்த தகவல்
//இதுவே உபுன்டு லினக்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமானால், அதற்கும் வைரஸ் வரும்........:-)//
அப்படி இன்னும் ஆகவில்லை. அதுவரை வைரஸ் இல்லாத உபுன்டுவை பயன்படுத்தலாமே.
//அப்படி இன்னும் ஆகவில்லை. அதுவரை வைரஸ் இல்லாத உபுன்டுவை பயன்படுத்தலாமே.//
உண்மை! தங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
கோவி,
தகவலை மக்களுக்கு எடுத்துச் சென்றமைக்கு நன்றி. தற்போது சரியாகிவிட்டது. சிரமத்திற்கு மன்னிக்கவும்
எனக்கு அந்தப் பிரச்சனைகள் இல்லை, நான் சாரு,பீரு, ஜெயமோகன் பேன்றவர்களின் பிலாக்கைப் படிப்பதில்லை. பிரபலமானவர்களின் எழுத்தைப் படிப்பதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அவர்கள் ஒரு ஜடெண்டி வைத்துக் கொண்டு,அதன் ஆளுமையை நம் மீது திணிப்பார்கள். நமது தனித்திறன் பாதிக்கும். ஆதலால் படிப்பதில்லை.
கருத்துரையிடுக