திருமணத்திற்கு முன்பான வயதுவந்தவரிடையேயான பாலியல் உறவு குறித்து குஷ்பு சொன்னக் கருத்துகள் சர்சையை ஏற்படுத்தியதும், அவருக்கெதிரான பொது நல வழக்கு தொடர்ந்ததும், அதை அவர் தள்ளுபடி செய்யக் கோரிய மனு கீழ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, பின்னர் மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில்,
"தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்."
- என்பதாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுகிறது.
*****
பிரச்சனை வயது வந்தவர்கள் திருமணம் ஆகுமுன் பாலியல் உறவு கொள்ளலாமா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல, அதை ஊக்குவிக்கலாமா என்பது பற்றியே. குஷ்பு சொன்னது பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதன் மூலம் பாலியல் நோய்களையும், வேண்டாத கற்பத்தையும் தடுக்கலாம் என்பது தான்.
பாலியல் வேட்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, ஆனால் திருமணம் இல்லாமல் தீர்த்துக் கொள்ளப்படுவதில் பாதிக்கப்படுவது எப்போதும் பெண் தான். ஆசைக்காட்டி மோசம் என்பார்கள் பெண்களுக்கு அப்படியான பாதிப்புகள் உண்டு. தான் சுவைத்தது போதாது என்பதுடன் மட்டுமில்லாமல் தொடர் இச்சைக்கு ஆளாகாத பெண்களை ஊருக்கும் காட்டிக் கொடுப்பது தவறான ஆண்களின் தவறான நடைமுறையாக இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது குஷ்பு சொன்ன 'பாதுகாப்பு' சாதனம் குறித்த எச்சரிக்கை தேவையே என்றாலும்.
என்னதான் பாதுகாப்புடன் உறவு கொண்டாலும் ஏமாற்றும் மனநிலையில் இருப்பவன் அந்தப் பெண்ணை விளம்பரப்படுத்திவிடுவான். தேவையற்ற கற்பம் என்கிற பெரிய பாதிப்பில் இருந்து 'லோலாயி' என்கிற சிறிய பாதிப்புடன் பெண் மீண்டுவிடுவாள் என்பது குஷ்புவின் நம்பிக்கை என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் எதற்கும் துணிந்தவளாக ஒரு பெண் பெற்றோர் சம்மதம் எதுவுமின்றி ஒரு ஆணை திருமணத்திற்கு முன்பே நாடினாள் அவனை எதிர்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இருந்தே ஆகவேண்டும் என்பதாகத்தான் சமூகம் கருதுகிறது என்று நினைக்கிறேன். அப்படித் துணிந்தவளுக்கு கற்பத்தைக் கலைத்துக் கொள்ள காலம் எடுக்காது என்பதும் உண்மையே. உண்மையான காதல் என்று டயாலாக் பேசி வேண்டாத வாரிசை வயிற்றில் சுமப்பவர்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். 'ஏண்டி அவனிடம் போனது தான் போனே.......பாதுகாப்பாக இருந்து கொள்ளக் கூடாதா ?' என்று கேட்டு பெண்ணை அரவணைத்துக் கொள்ளும் பெற்றோர்கள் நாட்டில் இருந்தால் குஷ்பு சொல்வது சரியாகக் கூட இருக்கும், அல்லது குஷ்பு சொல்வது தேவையற்றதாகக் கூட இருக்கும்.
மேல் தட்டு மக்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் திருமணத்திற்கு முன்பான உடலுறவுகள் பொதுவானது என்றாலும் அனைவரிடத்திலும் அந்த பழக்கம் இல்லை, அப்படியாக இருப்பவர்களுக்கு குஷ்புவின் யோசனை பயனும் அளிக்காது, அதையெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தது மற்றும் அதிலிருந்து மீளவும் தெரிந்திருப்பார்கள். நான் மேல் தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் பண்பாடு அற்றவர்கள் என்று சொல்லவரவில்லை, ஆனாலும் நடுத்தர வசதி பெரும்பான்மையினரைப் போன்று மிகுதியாக உணர்ச்சிவசப்பட்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதே சொல்லவருவது.
திருமணத்திற்கு முன்பு பாலியல் வேண்டுமா வேண்டாமா என்பதில் முடிந்த அளவுக்கு திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர்களிடத்தில் நம்பிக்கை வைத்து நல்வாழ்க்கை அமையும் என நினைக்கும் பெண்கள் இதில் சோதனை அளவுக்குக் கூட ஈடுபடக்கூடாது, பண்பாட்டிற்கும் நல்லது அல்ல என்று சொல்லி இருந்தால் பாராட்டலாம். ஆனால் குஷ்புவின் கருத்து அதை ஊக்கப்படுத்துவது போல் அமைந்தது என்பதாக எல்லோரும் புரிந்து கொண்டார்களா ? அல்லது குஷ்புவே அப்படித்தான் சொன்னாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
திருமணம் என்கிற அமைப்பு சமூகத்தில் இருக்கிறது, அதற்கு மையமாக இருப்பது பாலியல் உறவு, திருமணத்திற்குள் செல்லமாட்டேன் எனக்கு நம்பிக்கை இல்லை என்பவர்கள் எப்படியான உறவு வைத்திருந்தாலும் அது தவறு என்று யாருமே கூறிவிட முடியாது, ஆனால் பிரச்சனையின் மையம் 'திருமணம்' என்ற சொல்லையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு வருவது தான்.
திருமணத்திற்கு முன்பான மற்றும் பின்பான பிறநபர்களுடன் ஆன பாலியல் உறவு நம்பிக்கைத் தூரோகமே, உடல் மற்றும் மன ரீதியாக ஆண்கள், திருமணத்திற்கு முன்பான உறவுகள் தெரிந்தாலும் சமூகத்தால் மன்னிக்கப்படுகிறார்கள். பெண்ணையும் அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் சமூகத்தில் ஏற்படாத போது, இதில் பாதுகாப்பு சாதனம் என்பது அதன் பக்கவிளைவுகளை மட்டும் தான் காக்கும். நம்பிக்கை துரோகம் பரவாயில்லை என்போர்களுக்கு பாதுகாப்பு சாதனம் இருப்பதும் இல்லாததும் வெறும் உடல் நலம் தொடர்புடைய பிரச்சனை மட்டுமே.
ஐரோப்பியர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் ஆனால் ஐரோப்பிய ஆண்கள் எத்தனை முறை விவாகரத்து ஆகி இருந்தாலும், அவள் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவு கொண்டவள் என்று தெரிந்திருந்தாலும், நீலப்பட நாயகி என்றாலும் அந்த பெண்ணைப் பிடித்து இருந்தால் மணந்து கொள்வார்கள். நாம் ? நாம் ஏன் ஐரோப்பிய பண்பாட்டை பின்பற்றி நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ?
குஷ்பு சொல்வதைக் கேட்டு எந்த ஒரு பெற்றோரும் தங்கள் வயது வந்த மகள் அல்லது மகனுக்கு 'காண்டம் மணி'யும் சேர்த்து வைத்துக் கொள் என்று கொடுத்து அனுப்பும் மனநிலைக்கு மாறிவிடுவார்களா என்ன ?
ஆனாலும் அப்படி பெற்றோர்கள் இருப்பதில் தவறே இல்லை என்பது சிலரின் வாதமாக இருக்கிறது. குஷ்பு சொன்னது தனிமனித கருத்து என்றாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாயகி என்கிற அளவில் அவரது கருத்து பரவலாக சென்று சேருகிறது அதனால் அதைப் பலர் எதிர்த்தனர். குப்பனையும் சுப்பனையும் விளம்பரத்தில் போட்டால் ஒரு பொருள் விற்குமா ? பொருளின் மதிப்பு அதை விளம்பரப்படுத்துவர்களால் தானே பலரை அடைகிறது. நான் சொன்னது தனிப்பட்ட கருத்து என்பதை முன்பே குஷ்பு சொல்லி இருந்தால் இவ்வளவு கலேபரம் நடந்திருக்காது. அனுபவபட்டவர் போல சொல்கிறார் என்று விட்டு இருப்பார்கள்.
இணைப்பு : சுட்டி
பின்பற்றுபவர்கள்
24 மார்ச், 2010
திருமணத்துக்கு முன் பாலுறவு - குஷ்பு கருத்துக்கு தீர்ப்பு வந்தாச்சு !
பதிவர்:
கோவி.கண்ணன்
at
3/24/2010 02:20:00 PM
தொகுப்பு :
ஒலக அரசியல் சாக்கடை,
சமூகம்,
செய்தி கருத்துரை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
25 கருத்துகள்:
தமிழ்நாட்டு பெண்கள் திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது தவறில்லை..இது அவரவர் மனநிலை பொறுத்தது தான்..ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி ,திருமணத்திற்க்கு பிறகு கணவருடன் உடலுறவு கொள்வதே ,சரியான ஒழுக்கம் ...திருமணத்திற்க்கு முன் பிடித்தவர்களுடன் எல்லாம் பாதுகாப்பாக உடலுறவு கொள்வதற்க்கு பெயர் விபச்சாரி....என தமிழ் மக்கள் வரையரை செய்து வாழ்ந்து வருகின்றனர்...இதனால் குஷ்புவை செருப்பால் அடிக்க வேண்டும் என துடித்தனர்..தன்னை மணந்து கொள்ளும் ஆணுக்கு தன் கற்பை ,பத்தினி தன்மையை பரிசாக தருவதே தமிழ் பெண்களின் பண்பாடு..இதில் தான் குஸ்பு கருத்து வேறுபடுகிறது...
வாழ்க்கை முறைக்கும் சட்டதிட்டங்களுக்கும் இடைவெளி இருக்கவே செய்கிறது.
இதை வைத்து திருமணமாகாதவர்கள் அனைவரும், சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது நாம் சேர்ந்திருப்போம்னு சொல்ல போறாங்களா என்ன?
தமிழ் பெண்கள் திருமணத்துக்கு முன் உறவு கொள்வது கொடும் தவறு. .தன்னை மணந்து கொள்ளும் ஆணுக்கு தன் கற்பை ,பத்தினி தன்மையை பரிசாக தருவதே தமிழ் பெண்களின் பண்பாடு.
தமிழ் ஆண்கள் அப்படி இப்படிதான் இருப்பார்கள், ஆனாலும் அதில் பெரிய தவறு ஏதும் இல்லை. ஆண் விபரசாரி போன்ற சொற்பதம் ஏதும் இல்லாததால் ஆண்களின் திருமணத்துக்கு முன்னரான உறவுகள் தமிழுக்கு பிழை இல்லை.
ஆகவே...
//பிரச்சனை வயது வந்தவர்கள் திருமணம் ஆகுமுன் பாலியல் உறவு கொள்ளலாமா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல, அதை ஊக்குவிக்கலாமா என்பது பற்றியே.//
இடுகையின் சாரம் இங்கே முடிந்து விட்டதால் பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.
//தமிழ் நாட்டை பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி ,திருமணத்திற்க்கு பிறகு கணவருடன் உடலுறவு கொள்வதே ,சரியான ஒழுக்கம் .//
அப்ப தமிழ்நாட்டை தவிர மத்த இடங்களிலெல்லாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா!?
திருமணத்திற்கு முன் உறவு கொள்ளும் பெண் விபச்சாரி என்றால், திருமணத்திற்கு முன் உறவு கொள்ளும் ஆண் விபச்சாரனா!?
என்னங்காய்யா சட்டம் பெண்ணுக்கு மட்டும் கற்பு!
//நான் மேல் தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் பண்பாடு அற்றவர்கள் என்று சொல்லவரவில்லை...//
பண்பாடு என்பதே போலித்தனமானது ................
தெரு சண்டை ,பாத்ரும் கிறுக்கல் இதில் பார்த்தாலே தெரியும்.................
பண்பாடு என்ற ஒன்றே கிடையாது ........................
திருமணம் செய்யும் எல்லோரும் (99%) ஒருவனுக்கு ஒருத்தி யாக இல்லை ....மேல் தட்டு ,அடித்தட்டு மற்றும் சில்வர் தட்டு எல்லோரும் உடம்புக்கு ஒருத்தி யாக தான் இருக்கிறார்கள்...............
திருமணம் என்பது அனுமதிக்கப்பட்ட விபசாரம்............திருமணம் என்பது சமுதாயத்துக்கு தான் நல்லது ......மனதிற்கு ஏற்ற ஒன்று அல்ல ....
மனது என்பதே விபசார தன்மை கொண்டது ................எல்லா விசயத்திலும் மனது புதிது புதிதாக தான் நாடும் ............
New friends,new relatives என்று நாடுவது கூட அப்படினா தப்புதான் .............
கழிவு உறுப்பில் பண்பாடு காணும் கூட்டம் நம் போலி குமட்ட பண்பாட்டு கூட்டம்..........
மனது அளவில் பண்பாடு என்பதே கிடையாது ............15 to 30 வது வயது வரை எவன் ஒருவன் or ஒருவள் ஒருவனை(ளை) மட்டுமே நினைத்து வாழ முடிந்தால் அதுதான் அவனுடைய பண்பாடு.........இது சாத்தியம் என்று தோன்ற வில்லை ............
எந்த ஒரு ஆணும் சரி பெண்ணும் சரி வெளிபடையாக சுயமைதுனம் செய்வதை ஒத்து கொள்வதே கிடையாது ........
//பிரச்சனை வயது வந்தவர்கள் திருமணம் ஆகுமுன் பாலியல் உறவு கொள்ளலாமா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல, அதை ஊக்குவிக்கலாமா என்பது பற்றியே.//
18 வயதுக்கு மேல் சொந்த புத்திய use பண்ண parents சொல்லி தந்துட்டு gentle யா விலகிகணும்.................
ஊக்குவிக்கலாமா என்பதை விட parents தெளிவா புரிய வைக்கணும் .............பாலியல் வறட்சி கொண்ட போலி பண்பாடு கொண்ட இந்த சமுதாய மக்கள் முன் வர மாட்டார்கள் ....................
குஷ்பு சொன்னது 100% சரிதான் ...........
முகமூடிய கலுட்டுகப்பா........பண்பாட்டு நாத்தம் தங்க முடியல ................
காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. எது சரி, எது தப்பு என்பதில் தலைமுறை இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது.
நான் முதல் இடுகை இட்டது இந்த சர்ச்சையினால் தான்.
கோவி கண்ணன்.. குஷ்பூ கூறியதில் எனக்கும் ஒன்றும் தவறாக தோன்றவில்லை.. அவர் பாதுகாப்பாக இருங்கள் என்று மட்டும் தான் கூறினார் என்று நினைக்கிறேன். அனைவரையும் அப்படி இருக்க கூறவில்லை.
குஷ்பூவை இப்போது எதிர்க்கலாம்..இன்னும் கொஞ்சம் காலம் சென்றால் இதெல்லாம் சகஜமாகி விடும்..
நான் ரொம்ப நாளா பாலியல் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன் ..விரைவில் எழுதுகிறேன்..
என்ன என் தலைய உருட்டிருவாணுக! :-)))
//தன்னை மணந்து கொள்ளும் ஆணுக்கு தன் கற்பை ,பத்தினி தன்மையை பரிசாக தருவதே தமிழ் பெண்களின் பண்பாடு//
ஓகோ ! ஆணுக்கு இந்த பத்தினித் தன்மை ,பரிசு எடுதும் கிடையாதோ?
பத்தினித் தன்மை - பரிசு :))
தமிழ்நாட்டுப் பொண்ணுங்க பத்தினிங்க இல்லை என்ற ரீதியில் பேட்டி அளித்ததாக தானே வழக்குப் போட்டாங்க. இந்த தீர்ப்பு வேற மாதிரி இல்ல இருக்கு.. சரி போகட்டும்..
சட்டப் புத்தகத்தை வச்சித் தீர்ப்பு சொல்லுங்கய்யான்னா , ராதை கிருஷ்ணான்னு மேற்கோள் காட்டி தீர்ப்பு சொல்லி இருக்காரு தலைமை நீதிபதி.. அப்போ தீதிமதி முச்லிமா இருந்தா நபிகள் நாயகம் பேர் சொல்லி தீர்ப்பு சொல்வாரா? இந்துமதரசா ஆக்கிட்டாங்களே நீதிமன்றத்தை.. அவ்வ்வ்..
//SanjaiGandhi™ said...
தமிழ்நாட்டுப் பொண்ணுங்க பத்தினிங்க இல்லை என்ற ரீதியில் பேட்டி அளித்ததாக தானே வழக்குப் போட்டாங்க. இந்த தீர்ப்பு வேற மாதிரி இல்ல இருக்கு.. சரி போகட்டும்..
சட்டப் புத்தகத்தை வச்சித் தீர்ப்பு சொல்லுங்கய்யான்னா , ராதை கிருஷ்ணான்னு மேற்கோள் காட்டி தீர்ப்பு சொல்லி இருக்காரு தலைமை நீதிபதி.. அப்போ தீதிமதி முச்லிமா இருந்தா நபிகள் நாயகம் பேர் சொல்லி தீர்ப்பு சொல்வாரா? இந்துமதரசா ஆக்கிட்டாங்களே நீதிமன்றத்தை.. அவ்வ்வ்..
//
உங்கள் கேள்வி ஞாயமானது, நீதிபதிக்கு கிருஷ்ணனை அவமானப்படுத்திவிட்டார் என இந்துதுவ பாத்வா கொடுக்காமல் இந்துதுவாக்கள் எங்கே போனார்கள் ?
:)
//18 வயதுக்கு மேல் சொந்த புத்திய use பண்ண parents சொல்லி தந்துட்டு gentle யா விலகிகணும்.................
ஊக்குவிக்கலாமா என்பதை விட parents தெளிவா புரிய வைக்கணும் .............பாலியல் வறட்சி கொண்ட போலி பண்பாடு கொண்ட இந்த சமுதாய மக்கள் முன் வர மாட்டார்கள் ....................
குஷ்பு சொன்னது 100% சரிதான் ...........
முகமூடிய கலுட்டுகப்பா........பண்பாட்டு நாத்தம் தங்க முடியல ................//
நான் பதிவில் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன். திருமணம் என்கிற அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒரு தனிமனிதனுக்கு பொது இடத்தில் ஆடை இல்லாமல் போகக் கூட விருப்பம் என்று சொன்னால் அப்படியே செய் என்று பண்பாட்டு நாத்தம் 'பிடித்த' நாம தான் கண்ணை மூடிக் கொள்ளனுமா ?
//திருமணத்திற்கு முன் உறவு கொள்ளும் பெண் விபச்சாரி என்றால், திருமணத்திற்கு முன் உறவு கொள்ளும் ஆண் விபச்சாரனா!?//
இது மேட்டரு.. நானும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆதரிக்கிறேன்.. கற்பு என்பது பொதுவானதாக இருந்தால் போனாப் போகிறதென்று ஒத்துக்கலாம்.. பெண்களுக்கு மட்டும் தான் என்பது முழுவதும் ஏமாற்று வேலையே..
////நான் பதிவில் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன். திருமணம் என்கிற அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒரு தனிமனிதனுக்கு பொது இடத்தில் ஆடை இல்லாமல் போகக் கூட விருப்பம் என்று சொன்னால் அப்படியே செய் என்று பண்பாட்டு நாத்தம் 'பிடித்த' நாம தான் கண்ணை மூடிக் கொள்ளனுமா ?////
கோவி அப்பு ....,
காமம் என்பது இயற்கையான உணர்வு அப்பு ....பசி ,தாகம் போல .........
அந்த உணர்வுக்கு கல்யாணத்த பத்தி எதுவும் தெரியாது அப்பு ..........
பண்பாடு கற பேர்ல Urine ன ஒரு குறிப்பிட்ட காலம் வரை அடக்கி வை க்குது சமூகம்........நான் என்ன சொல்றன...Urine வந்தா toilet போ ,இல்லனா உடம்பு நாறிவிடும் கறேன்................
செய்வன திருந்த செய் [ பாதுகாப்பா...]
//ஒரு தனிமனிதனுக்கு பொது இடத்தில் ஆடை இல்லாமல் போகக் கூட விருப்பம் ....//
இது விருப்பம் தான்.....இயற்கை கிடையாது ..........அத முதல்ல புரிசுகண்ணும்...........
பொது இடத்தில் எப்படி நடந்துக்கணும் என்பது அடிப்படை அறிவு .......பண்பாடு கிடையாது ............
//திருமணத்துக்கு முன் பாலுறவு - குஷ்பு கருத்துக்கு தீர்ப்பு வந்தாச்சு !///
it was a observation made by supreme court...judgement (தீர்ப்பு) not yet given.
ஆக,
பயபுள்ள நித்தியானந்தா,ஜெயேந்திரா உள்ளிட்ட சாமிகள் செய்த(ற)தெல்லாம் சரின்னு கோர்ட்டுதான் உத்தரவு கொடுத்துட்டுதே!
பேஷ்! பேஷ்!!
//சுதந்திர யோகி
கோவி அப்பு ....,
காமம் என்பது இயற்கையான உணர்வு அப்பு ....பசி ,தாகம் போல .........
அந்த உணர்வுக்கு கல்யாணத்த பத்தி எதுவும் தெரியாது அப்பு ..........
பண்பாடு கற பேர்ல Urine ன ஒரு குறிப்பிட்ட காலம் வரை அடக்கி வை க்குது சமூகம்........நான் என்ன சொல்றன...Urine வந்தா toilet போ ,இல்லனா உடம்பு நாறிவிடும் கறேன்................
செய்வன திருந்த செய் [ பாதுகாப்பா...]
//ஒரு தனிமனிதனுக்கு பொது இடத்தில் ஆடை இல்லாமல் போகக் கூட விருப்பம் ....//
//இது விருப்பம் தான்.....இயற்கை கிடையாது ..........அத முதல்ல புரிசுகண்ணும்...........
பொது இடத்தில் எப்படி நடந்துக்கணும் என்பது அடிப்படை அறிவு .......பண்பாடு கிடையாது ............
//
நான் கருத்து திணிப்பு என்று எதையும் செய்யவில்லை. என்னுடைய கருத்தை நான் சொன்னேன். கலாச்சாராம் பண்பாடு எல்லாம் ஏமாற்றும் வேலை இஷ்டம் போல் இருக்கலாம் என்று நினைக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு யாருடைய கருத்தும் தேவைப்படாது.
அப்பறம் 'அப்பு' குப்பு... என்று நீங்கள் என்னை விளிப்பது எனக்கு பிடிக்கவில்லை. என்மீது உரிமை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் பழக்கமில்லை.
நீங்கள் என்னவேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்கள். எனக்கு கவலை இல்லை. ஆனால் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது அதை எதிர்ப்பதும் ஏற்பதும் என்னுடைய உரிமை.
கண்டமேனிக்கு கருத்து சொல்லும் முன் மற்றவர்களை மதிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். கருத்துக் குப்பைகளைவிட நம்ம செயல் பிறருக்கு எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும்.
கண்ணன்ஜி,
நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு கருத்து சிந்தனைக்குரியது, பாராட்டப் படவேண்டியது. தப்போ சரியோ அதை ஊக்குவிக்கலாமா என்பதுதான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறீர்களே, அதைச் சொல்கிறேன்.
தனக்கென்று இருக்கும் தனிப்பட்ட கருத்துக்களை ஒருவர் மீடியாவில் பேசுவது தவறு என்பது என் கருத்து.
அதுவும் சினிமா நடிகர் அல்லது நடிகை மாதிரி சக்தி வாய்ந்த நபர்கள் நிச்சயம் பேசக் கூடாது.
ஏனென்றால் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் எல்லாரும் கற்றவர்களோ சிந்தனாவாதிகளோ அல்ல.
அவர்களின் உடை, சிகை அலங்காரம், நடை, பாவனை எல்லாவற்றையும் அநிச்சையாக பின் பற்றத் துடிக்கும் படிப்பறிவோ சிந்தனையோ இல்லாத சாதாரண ரசிகர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். அவ்ர்களை மனதில் வைத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் பொறுப்பாக பிரபலஸ்தர்கள் பேச வேண்டும்.
http://kgjawarlal.wordpress.com
ஜவ்ஹர் அண்ணன்,
நீங்கள் சொல்வது எனக்கு முற்றிலும் சரியாகப் படுகிறது, இதைத்தான் நானும் வேறொரு நண்பரிடம் உரையாடியில் விவாதித்தேன்
அப்பறம் 'அப்பு' குப்பு... என்று நீங்கள் என்னை விளிப்பது எனக்கு பிடிக்கவில்லை. என்மீது உரிமை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் பழக்கமில்லை.
//
ஒரு வேளை நம்ம கொள்ளிமலை குப்ப சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன் பார்ட்டி!
கோவி.கண்ணன் அவர்களே ........,
//அப்பறம் 'அப்பு' குப்பு... என்று நீங்கள் என்னை விளிப்பது எனக்கு பிடிக்கவில்லை.//
'அப்பு' -ன்னு சொன்னது 'தப்பு' தான் - இனிமே விளிக்க மாட்டேன் ..........குப்பு -ன்னு நான் சொல்லவே இல்லையே ..............
//என்மீது உரிமை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் பழக்கமில்லை. //
வாங்க பழகுவோம் .....[ எனக்கு நிறைய கடன் வேற இருக்குது ........'கைமாத்து' கேக்கற அளவுக்கு பழகுவோம்]
//கண்டமேனிக்கு கருத்து சொல்லும் முன் மற்றவர்களை மதிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.//
என் உயிருக்கும் பிற உயிருக்கும் யாதொரு வேறுபாட்டையும் நான் காண வில்லை...
கருத்துக் குப்பைகளை தான் நான் மதிக்கவில்லை .......... உயிர்களை மதிக்கிறேன்.......
நம்முடைய பிரச்சினை என்னவென்றால் ...நம் உடல் மற்றும் கருத்துகள் தான் நாமாக நினைக்கிறோம் .............
//கருத்துக் குப்பைகளைவிட நம்ம செயல் பிறருக்கு எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும்.//
சரியாதான் சொல்றிங்க ........Blog எழுதி கருத்துக் குப்பைகளை சொல்லிக்கொண்டு இருக்கும் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் ...........................
//நான் சொன்னது தனிப்பட்ட கருத்து என்பதை முன்பே குஷ்பு சொல்லி இருந்தால் இவ்வளவு கலேபரம் நடந்திருக்காது. அனுபவபட்டவர் போல சொல்கிறார் என்று விட்டு இருப்பார்கள்.//
:-(((
இதற்கு பா.ம.க வின் வழக்குகள் மேல்.
//கல்வெட்டு said...
//நான் சொன்னது தனிப்பட்ட கருத்து என்பதை முன்பே குஷ்பு சொல்லி இருந்தால் இவ்வளவு கலேபரம் நடந்திருக்காது. அனுபவபட்டவர் போல சொல்கிறார் என்று விட்டு இருப்பார்கள்.//
:-(((
இதற்கு பா.ம.க வின் வழக்குகள் மேல்.
//
அண்ணே,
இதுல வருத்தப்பட என்ன இருக்கு, இந்த நிகழ்வுகளுக்கு வெகு முன்பே, அவரது திருமணத்திற்கும் முன்பே, அவரே எனக்கும் பிரபுக்கும் உடல் ரீதியான தொடர்புகள் இருந்தது என்று தான் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
100% பெண்களிடம் கற்பை எதிர்பார்பது தப்பு ...அப்படியெல்லாம் 100% எதிர்பார்க்காதீர்கள்.இது தான் இன்றைய உண்மை நிலை . இதையேதான் குஷ்பு என்ன மற்ற நடிகைகள் என்ன, மருத்துவர்கள் என்ன , பள்ளிகளில் கணெக்கெடுப்பு நடத்துவோர் என்ன , எல்லாரும் செல்வது
இதை குஷ்பு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
ஆனால், திருமணத்துக்கு முன் ஒரு ஆணுடனோ அல்லது பலருடனோ பாலுறவு அனுபவித்து விட்டு ஒரு பெண், திடீரென்று ஐயோ என்னை இவன் கற்பழித்து விட்டான் என்று குற்றம் சாட்டினால் அந்த ஆணுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை . இதையும் ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும்
பெண்களை காக்கிறேன் பேர்வழி என்று ஆண்களை கழுவிலேற்றும் காலமாகிவிட்டது
மேலும்
http://manakkan.blogspot.com/2010/04/blog-post_03.html
அன்புடன்
சுப்பு
கருத்துரையிடுக