பின்பற்றுபவர்கள்

4 மார்ச், 2010

ஞான மரபும், வெளிநாட்டு சதியும் !

நேற்றுவரை இந்து மதத்தை உய்விக்க மறு அவதாரம் எடுத்த விவேகநந்தர் என புனித பிம்பம் ஆக்கி புகழ்ந்த இந்து அமைப்புகள் அது கிழிந்த மூத்திரப் பை என்று தெரிந்ததும், சத்யானந்தனின் ஆசிரம அமைப்புகளை அடித்து நொறுக்கி இருக்கிறதாம். வேடம் களைந்ததால் இவர்கள் உருவாக்கிய புது விவேகநந்தனை இவர்களே காலி செய்கிறார்கள். சத்யாநந்தனனுக்கு இவர்கள் செய்த விளம்பரம், அவனுடைய அசுர வளர்ச்சியும் துபாய் வேல்ர்ட் கட்டிடம் போல் வெகுவாக உயர்ந்து ஒரே நாள் நில அதிர்வில் தரைமட்டம் ஆனது போல் ஆகிவிட்டது.

சந்தடி சாக்கில் 'கிந்து' லேகியம் விற்கும் 'வெற்றி' எழுத்தாளர் குழுமம், சத்யானந்தரின் அம்பலத்தால் கிந்து ஞானமரபுக்கு பாதிப்பு ஏற்படுமா ? என்று கேள்வி எழுப்பி விடையும் சொல்கிறார்கள். தலித்தை கோவிலுனுள் சேர்க்காததற்கும், அனைத்து மதத்தினர் அர்சகர் ஆகும் திட்டத்திற்கு தடைவாங்கியும், தமிழ் வழிபாட்டு முறை என்றால் முகம் சுளிக்கும் இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு 'ஞான மரபு' பற்றி வெற்றி எழுத்தாளர் மிகவும் கவலைப்படுகிறார். எங்க கிந்து மதத்தில் பிரம்மாச்சாரியம் எல்லாம் கிடையவே கிடையாது பெளத்த மதத்தின் 'சன்னியாசம், பிரம்மச்சாரியம்' என வேண்டாத ஒன்றை கிந்து மதம் எடுத்துக் கொண்டுதால் இது போன்ற அவமானங்களை சந்திக்க நேர்ந்துவிட்டது என்று முத்து உதிர்கிறார்கள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக சத்யானநந்ததிற்காக மீடியா கிடைத்த போதெல்லாம் கூவிய சேறு எழுத்தாளர், சத்யானந்தன் ஸ்திரீ லோலன் தான் ஆனாலும் அவனிடம் நோய்களை குணப்படுத்தும் சக்தி இருப்பது உண்மை, நேரில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவரே தான் உடல் நலம் இல்லாமல் படுத்திருந்த போது சத்யானந்ததின் ஆசி பழிக்கவில்லை, கஞ்சு பாத்திரத்தைக் கூட திறக்க தெம்பு இல்லாமல் இருந்ததாகவும் யாரோ ஒரு வாசகர் உதவியால் மருத்துவமனை சென்றதாகவும் அதே கட்டுரையில் சத்யானந்ததின் சக்தி பற்றி முன்னுக்கு பின் உளரலாகவே எழுதி இருக்கிறார். தான் விளம்பரம் செய்தது தவறு அல்ல, சத்யானந்தம் மோசமானவன் தான் என்பதை இப்படியாக உணர்த்துகிறாராம். அவரை படிப்பவர்கள் ஐயோ.....முட்டிக் கொள்ளுங்க.

நவீன வீவேகந்தர் நாறிப் போய்விட்டார், கிந்து மததிற்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்று அலறும் கூட்டங்கள், கிந்து மதம் மேன்மை அடைய என்ன செயதது என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் போலி சாமியார்களை அடையாளம் காட்டும் வேலையாவது செய்தார்களா ? தெரியவில்லை, மாட்டிக் கொண்டால் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை உடனடியாக சொல்லி மாட்டிக் கொண்ட அமைப்பை தாக்குவதின் மூலம் கிந்து மதம் காக்கப்படும் வருணாசிரமம் காக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

இதைவிடப் பெரிய காமடி சத்யானந்தம் சிக்கிக் கொண்டது நல்லது தான் என்று எதுவுமே சொல்லாமல், இது கிந்து எதிரிகளின் சூழ்ச்சி, வெளிநாட்டு மதமாற்றுக் கும்பலின் சதி என்றால் உளறிக் கொட்டுவதற்கு 'வெற்றி' எழுத்தாளர் ஆமாம் போடுகிறார். வெளி நாட்டுக்காரன் ஒரு வேளை சதி செய்கிறான் என்றே வைத்துக் கொண்டாலும் சத்யானந்தம் போன்ற கார்பரேட் சாமியார்களுக்கு 200 ஏக்கர் பரப்பில் அமைந்த ஆசிரமங்கள், 1000 கிளைகள், உலகம் தழுவிய 1000 கோடி டாலர் ஆசிரம சொத்துகள், யாரால் வந்தது ? வெளி நாட்டுக்காரன் பணம் தானே ? பாதிக்கபடுபவன் வெளிநாட்டுக்காரனாக இருக்கும் போது அதை அவன் தான் அம்பலப்படுத்தி இருந்தாலும் அதில் தவறு ஏது ?

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளை காமசூத்திர,தாந்திரீக யோக குண்டலினி, என்ற பெயர்களில் போலி கிந்து அமைப்புகள் கூடாரம் அடித்து தாக்கி வருகின்றனர். கிந்து மதத்தில் தான் உண்மையான ஆன்மீகம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் நம்பிக்கையில் வாரிசு அற்ற தங்கள் சொத்துகளை வெளி நாட்டினர்கள் முழுவதுமாக அளிக்கிறார்கள், பில்கேட்ஸ் 10000 தொழிலாளர்களை, 1000 அலுவலங்களை வைத்து செய்யும் ஒரு தொழிலில் கிடைக்கும் வருவாய் போல 1000 ஆசிரமக் கிளைகள் தொடங்கி கிந்து சாமியார்கள் வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டு அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். வெளிநாட்டுக்காரனுக்கு கோபம் வருமா வராதா ?

கிந்து சேவை அமைப்புகள் சாமியார்களின் அளவுக்கு மிஞ்சிய அசுரவளர்ச்சி, அவர்களின் சொத்து குவிப்பு இவற்றையெல்லாம் கண்டு கொள்ளமல் இருந்துவிட்டு, அவர்கள் மாட்டிக் கொண்டால் கைகழுவதும் இல்லாமல் அவர்களின் அமைப்பில் எதுவுமே தெரியாமல் எதோ தேடல் என்று சென்று அங்கே சேர்ந்து அங்கேயே தங்கி இருக்கும் அப்பாவிகளையெல்லாம் தாக்குகிறார்கள். சத்யானந்ததிற்கு பேராதரவு கொடுத்து கட்டுரைகள், அருளுரைகள் வெளி இட்ட செய்தி இதழ்கள் தற்போது சூடான விற்பனைக்கு சத்யானந்த சம்போகம் வெளி இடுகிறார்கள். இவர்களையாவது கிந்து அமைப்புகள் கண்டித்ததா ?

கிந்து மதம், ஞான மரபு என்ற சப்பைக் கட்டும் 'வெற்றி' எழுத்தாளர் இதை வைத்து நித்யபுரம் என்னும் நாவல் எழுதினால் நன்கு விற்கும்.

கிந்து மதத்தை எவனும் காத்துவரவில்லை, அதுவாகவே அவ்வப்போது போலிகளை அம்பலப்படுத்தி காத்துக் கொண்டு தான் வருகிறது. சத்யானந்தம் சிக்கியதற்கு உணர்ச்சி வசப்படும், ஆவேசப்படும் இந்துக்கள் சத்தியானந்தம் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் இந்து மதத்தின் கற்பக விருச்சம் என்ற பெயரில் அசுர வளர்ச்சி பெற்ற ஒரு எட்டி மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு சாய்க்கப்பட்டுவிட்டதாக நினைத்து மகிழலாம்.

இந்த சூழலில் உடனடித் தேவை மற்றும் சேவை எதுவென்றால் சத்யானந்தனின் ஆசிரமத்தில் அற்பணித்துக் கொண்டவர்களை மீட்டு அவர்களின் இல்லங்களில் ஒப்படைத்து அவர்களுக்கு உளவியல் மருத்துவரை வைத்து பயிற்சி கொடுத்து, மன அழுத்ததில் இருக்கும் அவர்களின் தற்கொலைகளைத் தடுக்கலாம். தாம் தவறு செய்துவிட்டோம், வாழ்க்கையை வீண் அடித்துவிட்டோம் என்கிற குற்றவுணர்வுகளில் இருந்து மீட்டு, அவர்களை குத்திக் காட்டாமல் அவர்களுக்கு நல்வாழ்வு அமைய ஏற்பாடு செய்வது தான் ஹிந்து மததிற்கு செய்யும் உண்மையான சேவை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

18 கருத்துகள்:

பித்தனின் வாக்கு சொன்னது…

தங்களின் கட்டுரையில் கடைசி பத்தி மிகவும் நன்று. சிறந்த ஆலோசனை. ஆனால் பரபரப்பு மட்டும் மூலதனமாகக் கொண்டவர்கள், அவர்களின் படங்களைப் போட்டுப் பிழைபார்கள், மாறாக அவர்களின் மறுவாழ்விற்க்கு செயல்புரிய மாட்டார்கள்.

விவேக ஆனந்தர் என்று விவேகானந்தரை இழுப்பது மட்டும் ஏன் என்று புரியவில்லை. நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//விவேக ஆனந்தர் என்று விவேகானந்தரை இழுப்பது மட்டும் ஏன் என்று புரியவில்லை. நன்றி.//

நான் இழிவாகக் குறிப்பிடவில்லை, விவேகநந்தரைப் போல் போஸ் கொடுத்தார் சத்யானந்தன் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

பித்தனின் வாக்கு சொன்னது…

// விவேகநந்தரைப் போல் போஸ் கொடுத்தார் சத்யானந்தன் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன். //

தங்களின் விளக்கத்திற்கு நன்றி.

படிப்பவர்கள் சந்தடி சாக்கில் விவேகானந்தரை இழுத்துருக்கின்றீர்கள் என நினைக்க வாய்ப்பு உண்டு.

வால்பையன் சொன்னது…

இந்த்துவா எழுத்தாலாரின் ஞானமரபு கட்டுரை பலரது டிக்கியில் ஐஸ் வைத்தது போல் இருந்ததாம், சத்தியானந்தா வைத்த சூடு அப்பொழுது தான் தணிந்தது என பலரது கட்டுரையிலும், பின்னூட்டத்திலும் கண்டேன்!

நாயை குழிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது நக்கி தான் தின்னும்!
இது திருந்தாத ஜென்மங்கள்!

வால்பையன் சொன்னது…

//விவேக ஆனந்தர் என்று விவேகானந்தரை இழுப்பது மட்டும் ஏன் என்று புரியவில்லை. நன்றி.//

ஆமா அவரை கயிறு கட்டி இழுத்துட்டாங்க!
அவரு எனக்கு தராம புக்கா புடிச்சார் அதனால நான் தான் இழுக்கச்சொன்னேன்!

அக்பர் சொன்னது…

பாதிக்கப்பட்டவர்களின் நலனைப்பற்றி எழுந்துள்ள கேள்வி வரவேற்கத்தக்கது.

பித்தனின் வாக்கு சொன்னது…

// அவரு எனக்கு தராம புக்கா புடிச்சார் அதனால நான் தான் இழுக்கச்சொன்னேன்! //
நீங்க கூடத்தான் எனக்குத் தராமல் புல்லையும் குடிச்சிங்க, இது எல்லாம் நான் வெளியில சொன்னனா என்ன. லூசுல விடு வால்ஸ்.

..:: Mãstän ::.. சொன்னது…

ஹஹஹஹ...

ரெம்ப நாள்களுக்கு பிறகு நல்லா சிரித்தேன்... நல்லா ஒரு கேலியா எழுதிருக்கீங்க கோவிஜி, இத்தனைநாள் இப்படி ஏன் எழுதாம விட்டீங்க???


<<<
துபாய் வேல்ர்ட் கட்டிடம் போல் வெகுவாக உயர்ந்து ஒரே நாள் நில அதிர்வில் தரைமட்டம்
>>>

நல்ல உதாரணம்!

<<<
அவரை படிப்பவர்கள் ஐயோ.....முட்டிக் கொள்ளுங்க.
>>>
ஹஹஹ... இதான் சூப்பர்.

<<<
கார்பரேட் சாமியார்களுக்கு 200 ஏக்கர் பரப்பில் அமைந்த ஆசிரமங்கள், 1000 கிளைகள், உலகம் தழுவிய 1000 கோடி டாலர் ஆசிரம சொத்துகள், யாரால் வந்தது ? வெளி நாட்டுக்காரன் பணம் தானே ? பாதிக்கபடுபவன் வெளிநாட்டுக்காரனாக இருக்கும் போது அதை அவன் தான் அம்பலப்படுத்தி இருந்தாலும் அதில் தவறு ஏது ?
>>>
இது சிந்திக்க வைக்கிற கேள்வி... அது எப்படி உங்களுக்கு மட்டும் இப்படிலலம் தோணுது?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவியார்!
இந்த மடத்தில் சிக்கியவர்களுக்கு மன அமைதிப் படுத்துவது எவ்வளவு முக்கியமோ? அவ்வளவு முக்கியம் இனிமேல் இளம் சமுதாயம் இப்படிப்பட்டோரின் வலையில் சிக்காது; பாதுகாத்தல்
இறையை இவர்கள் தங்கள் இல்லத்திலே காணும் மனநிலையை உருவாக்க வேண்டும்.
எந்தக் காவியையும் பாடசாலைகளுக்குள் அனுமதிக்காது; பாடசாலைகளையும்மாணவர்களையும் பாதுகாத்தல்.
அத்துடன் எல்லாவற்றையும் இறைவனால் கூடத் துறக்கமுடியாது எனும் உண்மையைப் புலப்படுத்த வேண்டும்.
ஆச்சிரமங்களால் நடத்தப்படும் அத்தனை பாடசாலைகளும் அரச கண்காணிப்பில் வைக்க வேண்டும்.
இதற்கு அரசு, பொதுமக்களில் இருந்து தகுந்தோரைத் தேர்வு செய்யவேண்டும்.
ஒரு இந்தியப் பிரதம மந்திரி தான் தன் சிறுநீரைக் குடிப்பதால் நலமுடன் இருப்பதாகக் கூறிய போதும்; இந்தியர்கள் எவருமே சிறுநீர் குடிக்கவில்லை. பலர் அதை விமர்சித்தார்கள்.
ஆனால் இன்று நடிகர்களும்;எழுத்தளர்களும்;சாமிமாரும் சொல்லும் நரகல்களையெல்லாம் ஏற்குமளவுக்கு
நம் சமுதாயம் சிந்தனை நலிந்ததாகிவிட்டது.
இதை வைத்து மாற்றி மாற்றி அத்தர் பல்டி அடிக்கிறார்கள்.
உங்களைப் போல் எனக்கும் சாருவின் இறுதிக் கட்டுரை சினத்தை வரவைத்து; இப்போதும் அந்த அற்பனிடம் ஏதோ அளவிட முடியா ஆற்றல் அறிவு இருக்காம்; இது போதாதா? பின்னால் ஓடும்
மந்தைகளுக்கு.
இவன் குமுதத்தில் கதைவைத் திற ...எழுதிய போது; இவன் வயதென்ன? இவன் என்ன? துறவி வேசம் போடுகிறான்...இது நாறும் என நினைத்தேன்.
சாரு மூன்றாவது குருவாக ஏற்றபோது, என்மனம் தெளிவானது...ஆனால் இவ்வளவு விரைவில் ஆகுமென
நினைக்கவில்லை.
இவனோ பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சேர்த்து உல்லாச வாழ்வு வாழ்ந்துள்ளான்; இவனுக்கு
இன்னும் பரிந்து பேசுவோர் இருப்பது வேடிக்கை.
பல கோடி பேர் முற்றும் துறந்த அபிலாசைகளற்ற அவதாரபுருசர் என நம்பி இவன் படத்தைப் பூசை அறையில் வைத்து வணங்கி; வரவேற்பறையில் கொழுவி மகிழ்ந்துள்ளார்கள். ஆனால் இதையெல்லாம்
நன்கறிந்தும் எந்த வித அசூசையின்றி அவருடன் ( சாரு பாணியில் எழுத மனம் வரவில்லை)சல்லாபித்த இந்த நடிகை கூட "ஐயோ "பாவம் என்கிறார்கள். இந்த மனிதாமானிகள்...
இந்த நடிகைக்கு முட்டாய் கொடுத்து ஏமாற்றும் வயதல்ல.
எனவே இனியாவது இந்த வேடதாரிகளை ,காவியே இல்லா இந்தியாவை உருவாக்க இளய பாரதம் விழிப்புறும் என நம்புவோம்.
அந்த வகையில் திருவண்ணாமலை ராஜசேகருக்கு நன்றி!

சுல்தான் சொன்னது…

"கிந்து மதத்தில் பிரம்மாச்சாரியம் எல்லாம் கிடையவே கிடையாது பெளத்த மதத்தின் 'சன்னியாசம், பிரம்மச்சாரியம்' என வேண்டாத ஒன்றை கிந்து மதம் எடுத்துக் கொண்டுதால் இது போன்ற அவமானங்களை சந்திக்க நேர்ந்துவிட்டது என்று முத்து உதிர்கிறார்கள்"

கீழே ஜெ.மோ
"ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாக அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது. திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான்..."

கடைசி பாராவில் இப்போது அவசியம் செய்ய வேண்டியதென்ன என யோசித்திருப்பது நன்று. அருமை.

சுல்தான் சொன்னது…

//துபாய் வேல்ர்ட் கட்டிடம் போல் வெகுவாக உயர்ந்து ஒரே நாள் நில அதிர்வில் தரைமட்டம் ஆனது போல் ஆகிவிட்டது//
?!?!?!

கோவி.கண்ணன் சொன்னது…

////துபாய் வேல்ர்ட் கட்டிடம் போல் வெகுவாக உயர்ந்து ஒரே நாள் நில அதிர்வில் தரைமட்டம் ஆனது போல் ஆகிவிட்டது//
?!?!?!//

வெறும் உவமை தான். கட்டிடம் உயரம் உண்மை, சாமியாரின் செல்வாக்கு சாய்ந்தது உண்மை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்த சூழலில் உடனடித் தேவை மற்றும் சேவை எதுவென்றால் சத்யானந்தனின் ஆசிரமத்தில் அற்பணித்துக் கொண்டவர்களை மீட்டு அவர்களின் இல்லங்களில் ஒப்படைத்து அவர்களுக்கு உளவியல் மருத்துவரை வைத்து பயிற்சி கொடுத்து, மன அழுத்ததில் இருக்கும் அவர்களின் தற்கொலைகளைத் தடுக்கலாம். தாம் தவறு செய்துவிட்டோம், வாழ்க்கையை வீண் அடித்துவிட்டோம் என்கிற குற்றவுணர்வுகளில் இருந்து மீட்டு, அவர்களை குத்திக் காட்டாமல் அவர்களுக்கு நல்வாழ்வு அமைய ஏற்பாடு செய்வது தான் ஹிந்து மததிற்கு செய்யும் உண்மையான சேவை..
//

பயனுள்ள பஞ்சு! நன்று!!

தீப்பெட்டி சொன்னது…

'கிந்து'மதம்
சத்யானந்தர்
'வெற்றி' எழுத்தாளர்
சேறு எழுத்தாளர்

எதற்கு இந்த போலிப் பெயர்கள்? உண்மையான பெயர்களைச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? இல்லை என்ன பயம்? நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுரையின் மொழி கிசுகிசுக்களுக்கோ, போலி கிண்டல்களுகோ, உறுதிப்படுத்தாத தகவல்களுக்கோ பயன்படுத்தபடுவதாயிற்றே! அழுத்தமான கருத்துகளை ஆணித்தரமாக தெரிவிக்க வேண்டிய விஷயங்களில் ஏனிந்த மேல்பூச்சு வேலை? சம்பந்தப்பட்டவர்களை திருப்திபடுத்தவா இல்லை அவர்களின் வாசக ரசிகர்களை திருப்திபடுத்தவா?

வெறும் சுவாரஸ்யத்திற்காக மட்டுமேயென்றால்... நான் ஒன்றும் சொவதற்கில்லை..

அப்புறம் சிவாஜி-எம்.ஜி.ஆர், ரஜினி-கமல், விஜய்-அஜித் இளையராஜா-ஏ.ஆர் ரகுமான் வரிசையில் சாரு-ஜெயமோகன் என எதிலுமே இரட்டையர்களைத் தேடும் உங்கள் மனப்பாங்கும் நிறைவைத் தந்தது..

பெரியார்-வள்ளலார் கூட நல்ல இரட்டையர்கள்தான்..

பிரியமுடன் பிரபு சொன்னது…

கடைசியா சொன்னது நல்லாயிருக்கு

மதி.இண்டியா சொன்னது…

ஆனால், ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும்

இதுதான் ஜெ சொன்னதின் சாரம் , பொதுவா உங்களுக்கு புரிதலில் சிரமம் இருக்கலாம் .

http://www.jeyamohan.in/?p=6653

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுதான் ஜெ சொன்னதின் சாரம் , பொதுவா உங்களுக்கு புரிதலில் சிரமம் இருக்கலாம் .

http://www.jeyamohan.in/?p=6653//

இந்த சாரத்தில் வெளி நாட்டு சதியும் சேர்த்தே சொல்லப்பட்டு என்று நினைக்கிறீர்களா ? அதையும் தானே அங்கே படித்தேன்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

நல்லதொரு ஆய்வுக்கட்டுரை - இறுதிப்பத்தி மிக நன்று - இன்றைய உடனடித் தேவை அதுதான் - நன்று நன்று

நல்வாழ்த்துகள் கோவி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்