பின்பற்றுபவர்கள்

15 மார்ச், 2010

அப்போது நான் சமாதி நிலையில் இருந்தேன் !

கடந்த வெள்ளி மாலை 7 மணிக்கு ஸ்வாமி ஓம்காரின் 'தினம் தினம் திருமந்திரம்' சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றி நேரடியாக மின் அஞ்சல் வழியான தகவல் மட்டுமே என்பதால் பொதுமக்களில் அன்று கோவிலுக்குள் வந்திருந்தவர்கள் மற்றும் மின் அஞ்சல் கிடைக்கப் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் வந்திருந்தனர்.

ஸ்வாமி ஓம்கார் வழக்கம் போல் கலக்கினார், நகைச்சுவையாக பேசினார், கேள்வி பதில்களுக்கு சிறப்பாக பதில் சொன்னார், 1:30 மணி நேரம் சொற்பொழிவாற்றினார் என்றெல்லாம் வந்தவர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்தார்கள். எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது, நான் சமாதி நிலையில் இருந்தேன். சொற்பொழிவு நிறைவில், அரங்க மின் விசிறியை நிறுத்திவிட்டு எல்லோரும் சுண்டல் சாப்பிடப் போவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது விழிப்படைந்தேன். நிகழ்வைப் பற்றி பதிவர் கிரி எழுதினால் சிறப்பாக இருக்கும், ஸ்வாமி ஓம்கார் கோவை திரும்பிய பிறகு நிகழ்வுகளைப் பற்றி எழுதுவார் என நினைக்கிறேன்.
********

மறுநாள் (சனி கிழமை) கேபிள் சங்கர் மற்றும் ஸ்வாமி ஓம்காருடன் பதிவர் சந்திப்பு, 15க்கும் மேற்பட்ட பதிவர்களுடன் சிறப்பாக நடந்தேறியது, லேசான மழை மாலை வெயிலை தனித்திருந்தது, கேபிளுடன் மதியம் உண்டுவிட்டு, ஸ்வாமி ஓம்காரின் யோக வகுப்புகள் முடிந்து வரும் வரை அவருக்காக காத்திருந்தோம், பின்னர் அவரையும் அழைத்துக் கொண்டு சந்திப்பு நடைபெறும் இடம் சென்றோம், அனைவரும் வந்து சேர மாலை 5 ஆகி இருந்தது, சினிமா தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி, தனது துய்புகளை கேபிள் பகிர்ந்து கொண்டார். ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் தொடர்புடைய கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை தெரிவித்தார், சில பர்சனல் கேள்விகள் வெகு பர்சனல் என்பதால் அவற்றை தவிர்த்தார். ராஜேஷ் அண்ணன் கொண்டுவந்த மிளகாய் பஜ்ஜி மற்றும் பச்சை பட்டானி சுண்டலுடன் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.
(பிரபாகர், சுதாகர்(பித்தனின் வாக்கு), மகேந்திரன் (முரு நண்பர்), ஜோ மில்டன், கேபிள் சங்கர் (விஐபி 1), வெற்றிக்கதிரவன், முகவை இராம்குமார், ஜோசப் பால்ராஜ், ஸ்வாமி ஓம்கார் (விஐபி 2) முரு என்கிற அப்பாவி முரு, சரவணன் - வேடிக்கை மனிதன், கோவி, ஜெகதீசன், புகைப்படம் எடுத்தது அறிவிலி இராஜேஷ்
********

மறுநாள் (நேற்று) கேபிளுடன் செந்தோசா உல்லாச தளத்தில் சுற்றினோம், அங்கே புதிதாக வரவிருக்கும் யுனிவர்சல் ஸ்டுடியோவின் முகப்பை பார்வை இட்டுவிட்டு, சூதாடும் தளத்திற்கு வந்தோம், வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு இலவச நுழைவு என்றாலும் ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை தகுதி பார்க்கிறார்கள். கேபிள் அரை ட்ராயர் அணிந்திருந்ததால் நுழைவுக்கு 'நோ' சொல்லிவிட்டார்கள். மாலை மணி 3 இருக்கும், ஸ்வாமி ஓம்காரும் அந்நேரம் அன்றைய யோகா வகுப்புகளை முடித்திருந்ததால் அவரையும் செந்தோசாவிற்கு வெற்றிகதிரவனுடன் வரச் சொன்னோம், கேபிள் 'அண்டர் வாட்டர் வேர்ல்ட்' எனப்படும் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தை கண்டபின்னர். ஓம்காரும் அங்கு வந்து சேர்ந்தார், பிறகு வெற்றிக் கதிரவனுடன் அருங்காட்சியகத்தையும், பின்னர் மூவரும் டால்பின் விளையாட்டு காட்சிகளையும் கண்டபின்னர், வெளியே வந்தார்கள். இடையே ஜெகதீசன் கானா பிரபாவிற்கு தகவல் சொல்ல, ஞானசேகரை நான் வரச் சொல்லி இருந்தேன், அவரும் வந்து சேர பின்னர் டொன்லீயுடன் அங்கு வந்து சேர்ந்தார் கானா. மாலை 6 ஐத் தாண்டி இருந்தது, அப்படியே நடையாக லேசர் ஒளிக்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து அங்கே 7:45 காட்சிக்கு அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நான் திரும்பி விட்டேன்.

எதிர்பாராமல் ஒன்றன் பின் ஒருவராக செந்தோசாவில் ஆஸ்திரேலியா, சிங்கை, இந்திய பதிவர்கள் மொத்தம் 8 பேர் சந்தித்த நிகழ்வாக அமைந்தது.

33 கருத்துகள்:

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல படங்கள். சுவாமியின் விளக்கங்கள் அருமை, அறிவிலி அவர்களின் சுண்டலும்,பஜ்ஜியும் ரொம்ப நல்லாயிருந்தது.

ஆமாங்கன்னே நீங்க சமாதி நிலையில் இருந்ததுக்கு நான் சாட்சி. நடுவுல பேயா மாறி எழுந்து நடந்து போட்டாக் கூட புச்சிங்களே. அப்புறம் தியானம்,சமாதின்னு சொல்லி குறட்டை கூட விட்டிங்களே. நான் பார்த்தங்கண்ணா.

சுல்தான் சொன்னது…

நீங்கள் சமாதி நிலையில் இருக்கும்போது உங்களைப் பார்க்க இஞ்சிதா வந்தாங்களாமே! தெரியுமா? தெரியதா? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...

நீங்கள் சமாதி நிலையில் இருக்கும்போது உங்களைப் பார்க்க இஞ்சிதா வந்தாங்களாமே! தெரியுமா? தெரியதா? :))//

அதெல்லாம் யாரும் படம் வெளி இட்டால் தான் நம்புவேன்

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

நாடுவிட்டு நாடு போனாலும் பதிவர்கள் சந்தித்தால் டீ வடை பஜ்ஜி போண்டா சுண்டலை மறப்பதில்லை போல!

கோவி கண்ணன்! சமாதிநிலையைப் பட்டாணி சுண்டல் வாசம் வந்து கெடுத்திருக்குமே!

டீயும் பொறையும் போலப் பதிவர் உலகக் கலாசாரம் வாழ்க!

கோவி.கண்ணன் சொன்னது…

// கிருஷ்ணமூர்த்தி said...

நாடுவிட்டு நாடு போனாலும் பதிவர்கள் சந்தித்தால் டீ வடை பஜ்ஜி போண்டா சுண்டலை மறப்பதில்லை போல! //

நாங்கள் வீட்டில் இருந்து செய்து எடுத்துப் போவோம்.

// கோவி கண்ணன்! சமாதிநிலையைப் பட்டாணி சுண்டல் வாசம் வந்து கெடுத்திருக்குமே!//

நிகழ்ச்சி காலையில் இல்லை, மாலையில் தான்.

// டீயும் பொறையும் போலப் பதிவர் உலகக் கலாசாரம் வாழ்க!//

எப்படியோ, முகங்கள் அறிமுகம் ஆகிறது, நட்புகள் பெருகுகின்றன.

என். உலகநாதன் சொன்னது…

கோவி சார்,

ஒவ்வொரு முறையும் வர நினைக்கிறேன். முடியாமலே போகிறது.

கிரி சொன்னது…

கோவி கண்ணன் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி குறுகிய நேரம் என்பதால் ஒரு பதிவாக எழுத முடியாது.. நீங்கள் சென்று வந்த பதிவர் சந்திப்போடு இதையும் ஒரு பகுதியாக எழுதலாம்.

கேபிள் சங்கர் ஷார்ட்ஸ் போட்டு வந்து அருமையான ஒரு வாய்ப்பை இழந்து விட்டார் ... ஷார்ட்ஸ் மட்டுமல்ல செருப்பு கூட அணிந்து வரக்கூடாது. ஷு அணிந்தால் மட்டுமே அனுமதி!

SanjaiGandhi™ சொன்னது…

நல்லாருங்க..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சொற்பொழிவு வீடியோ கிடைக்குமா...சிங்கப்பூர் அன்னிய நாடு மாதிரியே தெரியவில்லை நீங்கள் எல்லாம் அங்கே இருப்பதால்...

வடுவூர் குமார் சொன்னது…

நான் அங்கு இல்லையே என்று இருக்கு!!

துளசி கோபால் சொன்னது…

வடை, போண்டா இல்லாத பதிவர் சந்திப்பா!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

நல்ல படங்கள். சுவாமியின் விளக்கங்கள் அருமை, அறிவிலி அவர்களின் சுண்டலும்,பஜ்ஜியும் ரொம்ப நல்லாயிருந்தது.

ஆமாங்கன்னே நீங்க சமாதி நிலையில் இருந்ததுக்கு நான் சாட்சி. நடுவுல பேயா மாறி எழுந்து நடந்து போட்டாக் கூட புச்சிங்களே. அப்புறம் தியானம்,சமாதின்னு சொல்லி குறட்டை கூட விட்டிங்களே. நான் பார்த்தங்கண்ணா.//

:)

யாரோ மாலை போட்டாங்க, பூ வச்சாங்கன்னு சொல்லாதவரை ஓகே !

கோவி.கண்ணன் சொன்னது…

// என். உலகநாதன் said...

கோவி சார்,

ஒவ்வொரு முறையும் வர நினைக்கிறேன். முடியாமலே போகிறது.//

நேரம் காலம் வாய்க்கனும் இல்லையா. பேச்சிலர்கள் என்றால் எங்கும் செல்ல முடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// கிரி said...

கோவி கண்ணன் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி குறுகிய நேரம் என்பதால் ஒரு பதிவாக எழுத முடியாது.. நீங்கள் சென்று வந்த பதிவர் சந்திப்போடு இதையும் ஒரு பகுதியாக எழுதலாம்.//

நான் வற்புறுத்தவில்லை, பரிந்துரை மட்டுமே. பதிவர் சந்திப்புக்கு வராததால் உங்களுக்கு பைன் போடலாம்னு தீர்மானம் முடிவாகி இருக்கு. :)

// கேபிள் சங்கர் ஷார்ட்ஸ் போட்டு வந்து அருமையான ஒரு வாய்ப்பை இழந்து விட்டார் ... ஷார்ட்ஸ் மட்டுமல்ல செருப்பு கூட அணிந்து வரக்கூடாது. ஷு அணிந்தால் மட்டுமே அனுமதி!//

:) ஷூ மேட்டர் சரிதான், ஆனால் அதை கூட கூடே செல்பவரிடமிருந்து சைஸ் சரியாக இருந்தால் வாங்கி மாட்டிக்கிடலாம். பேண்டை உருவிக் கொள்ள முடியாதே.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...

நல்லாருங்க..

12:30 PM, March 15, 20//

நன்றி நித்ய பொடியானந்தா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

சொற்பொழிவு வீடியோ கிடைக்குமா...சிங்கப்பூர் அன்னிய நாடு மாதிரியே தெரியவில்லை நீங்கள் எல்லாம் அங்கே இருப்பதால்...//

யாரெனும் ரகசிய வீடியோ எடுத்தார்களான்னு தெரியவில்லை. மற்றபடி வீடியோ எதுவும் எடுக்கவில்லை. :)

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...

நான் அங்கு இல்லையே என்று இருக்கு!!//

நீங்கள் இதில் ஆவல் காட்டினீர்கள், கண்டிப்பாக உங்களுக்கு வருத்தமாக இருக்கும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

வாழ்த்துகள் கோவி அண்ணே..

சுதந்திர யோகி சொன்னது…

////அப்போது நான் சமாதி நிலையில் இருந்தேன் !////


அடுத்த நித்தி(ஒம் கார் )...தர்மானந்தா(கோவி ) ரெடி ..........

பொது மக்களே உஷார் .....

அறிவிலி சொன்னது…

:-)

பிரபாகர் சொன்னது…

முதல் நாள் கிடைச்ச சந்தோஷத்தில அடுத்தநாள் கிடைக்க இருந்த அரிய வாய்ப்பை கோட்டைவிட்டிருக்கேன் என இப்போதான் புரியுது...

கலக்கல் விமர்சனம் அண்ணே!

பிரபாகர்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

திருமந்திரம் சொற்பொழிவிற்கு அதிக விளம்பரம் கொடுத்து கூட்டத்தினை வரவழைத்திருக்கலாமே ! ஓம்கார் உட்கார ஸ்டூல் தான் கிடைத்ததா ? எளிய முறையில் சம்பிரதாயம் இல்லாத அன்புடன் குழுமிய நட்பின் கூட்டமா ?

நல்ல படங்கள் - பதிவர் சந்திப்பில் கலக்கிட்டீங்களா

SanjaiGandhi™ சொன்னது…

//அப்போது நான் சமாதி நிலையில் இருந்தேன் !//

அப்போது உங்களுக்கு யார் பணிவிடை செய்தது? விடியோ ரிலிஸ் ஆனப் பிறகு தான் உங்களுக்கும் தெரியுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...

//அப்போது நான் சமாதி நிலையில் இருந்தேன் !//

அப்போது உங்களுக்கு யார் பணிவிடை செய்தது? விடியோ ரிலிஸ் ஆனப் பிறகு தான் உங்களுக்கும் தெரியுமா?//

வெளிச்சப் பதிவர் தான் அருகில் உட்கார்த்து இருந்தார், அவருக்கு ஒருவேளை யாரும் செய்தார்களா என தெரிந்திருக்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...

அன்பின் கோவி

திருமந்திரம் சொற்பொழிவிற்கு அதிக விளம்பரம் கொடுத்து கூட்டத்தினை வரவழைத்திருக்கலாமே ! ஓம்கார் உட்கார ஸ்டூல் தான் கிடைத்ததா ? எளிய முறையில் சம்பிரதாயம் இல்லாத அன்புடன் குழுமிய நட்பின் கூட்டமா ?

நல்ல படங்கள் - பதிவர் சந்திப்பில் கலக்கிட்டீங்களா//

ஏற்பாடு செய்தது சிறிய இடம் அதனால் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்ய முயற்சிக்கவில்லை.

கருத்துக்கு நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் கோவி அண்ணே..//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

/சுதந்திர யோகி said...

////அப்போது நான் சமாதி நிலையில் இருந்தேன் !////


அடுத்த நித்தி(ஒம் கார் )...தர்மானந்தா(கோவி ) ரெடி ..........

பொது மக்களே உஷார் .....//

:) எப்படியோ மீடியாவில் வந்தால் சரி !

கோவி.கண்ணன் சொன்னது…

/துளசி கோபால் said...

வடை, போண்டா இல்லாத பதிவர் சந்திப்பா!!!!//

யாருக்கேனும் கிடைக்கவில்லை என்றால் வட போச்சேம்பாங்க, அதனால் வடைக்கு தடை.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரபாகர் said...

முதல் நாள் கிடைச்ச சந்தோஷத்தில அடுத்தநாள் கிடைக்க இருந்த அரிய வாய்ப்பை கோட்டைவிட்டிருக்கேன் என இப்போதான் புரியுது...

கலக்கல் விமர்சனம் அண்ணே!

பிரபாகர்.//

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...

:-)//

:0)

காவேரி கணேஷ் சொன்னது…

கேபிளை வைத்து பதிவர் சந்திப்பா, சினிமா சுவராசியத்திற்கு பஞ்சம் இரு்க்காது.

சிங்கை பதிவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு சொன்னது…

// யாரோ மாலை போட்டாங்க, பூ வச்சாங்கன்னு சொல்லாதவரை ஓகே ! //
சேச்சே நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். நீங்க சமாதி நிலையில் இருந்த போது ஒருத்தர் உங்களுக்குப் பணிவிடை கூடச் செய்தார்களே. அதை எல்லாம் நான் வெளியில் சொல்லவில்லை.

Cable Sankar சொன்னது…

அநியாயமாய் என்னை கேசினோவுக்குள் விடாமல் சதி செய்யத சப்பை மூக்கன் ஒழிக..:()

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்