*******

இதை ஒருபக்கம் தள்ளி வைத்துவிட்டு பார்த்தாலும் 'ஒலக தீவிரவாதத்தை ஒட்டுமொத்தமாக வேரறுபோம்...!' என வெற்று கோஷமிடும் அமெரிக்கா - பிரட்டனுக்கு பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்குவதே தெரியாதா என்ன ? பின்லேடனைத் தேடுகிறோம் என்பதாக பாகிஸ்தான் ஆப்கான் நாடுகளை இன்ஞ் பை இன்ஞ் ஆக சாட்டிலைட் உதவியுடன் சல்லடை போடும் அமெரிக்காவிற்கு ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாத முகாம்கள் இருப்பது தெரியாதா என்ன ?
தெரிந்தும், தான் பாதிக்கப்படாதவரையில் தான் அதில் தலையிடக் கூடாது என்று நினைப்பதைவிட பாகிஸ்தான் - இந்திய அரசியல் உறவுகளுக்குள் எப்போதும் பதட்டம் நிலவினால் தான் அவர்கள் தன்னிடமிருந்து ஆயுதம் வாங்குவார்கள் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். எனவே இது குறித்து அமெரிக்காவோ, இங்கிலாந்தோ இந்தியாவிற்கு எந்த விதத்திலும் உதவுவார்கள் என்று நினைப்பதைவிட அவர்கள் அம்முகாம்களுக்கு மறைமுக உதவி செய்யக் கூடாது என்பதே இந்தியாவின் அவர்களிடையே ஆன வேண்டுதலாக இருக்க முடியுமே தவிர்த்து, அவர்கள் முகாம்களை அழிக்க உதவுவார்கள் என்பது வெறும் மனப்பால் குடிக்கும் முயற்சியே.

ஆனால் அமெரிக்க இரட்டை கட்டிட தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஆதாரபூர்வமாக பாகிஸ்தானில் தீவிரவாத முகாம் இயங்குவது பற்றி வீடியோக்களுடன் கொடுத்த தகவல்களின் படிதான் அமெரிக்காவின் பார்வை ஆப்கான் பக்கம் திரும்பி அங்கிருந்த தலிபான்களை விரட்டி அடித்துவிட்டு பின்லேடனை இன்னும் தேடிவருவதாகச் சொல்லுகிறார்கள்.
நேற்று பிரிட்டன் சென்றிருந்த ப.சிதம்பரம்..... "பாக்., பயங்கரவாத முகாம்களை அழிக்க அமெரிக்கா, பிரிட்டன் உதவ கோரிக்கை " - விடுத்துள்ளார். இதைப் படித்துவிட்டு......பிற நாட்டின் போர் தொடுக்க அமெரிக்காவிற்கு இருக்கும் அதே காரணம் ஏன் இந்தியாவிற்கு இல்லை ? என்று நினைத்தால் ப.சி யின் கோரிக்கை வெறுப்பையும், ஏமாற்றத்தையுமே வரவழைக்கிறது. ஒரு (திருடன்... இன்னொரு) திருடனிடம் சென்று மற்றொரு திருடனைக் காட்டிக் கொடுக்கச் சொன்னால் எதுவும் நடக்குமா ?
ஏன் தான் இவனுங்க எல்லோருக்கும் நன்கு தெரிந்த தீவிரவாத முகாம் இருக்கும் இடங்கள் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்காமல் வெறும் ஒத்திகையும், நாடகமுமாக மக்களிடம் நடித்துக்காட்டுகிறார்களோ !
இந்தியாவிற்கு அமெரிக்காவைப் போல் துணிவும் இல்லை துப்பும் இல்லை. இது காங்கிரசு அரசாக இருந்தாலும் சரி, அதற்கு முன்பு இருந்த இந்து அரசியல் நடத்திய பிஜெபி அரசாக இருந்தாலும் சரி...இவை பற்றிப் பேசுவது வெறும் கண் துடைப்பு மட்டுமே.......அதையும் யாருக்காக செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இன்ஷா அல்லா....!
15 கருத்துகள்:
ulleen ayyaa
inga ivanugalukku ulkatchi sandaiyai thirkavee time paththala
ithula ithuvaa mukkiyam??!?!
கோவியாரே, அணு ஆயுதம் வைத்திருக்கும் 2 நாடுகள் போரில் ஈடுபடுவது பெரும் நாசத்தை தரும் 2 பக்கமும்.. ப.சி.யின் கோரிக்கை சும்மா லுலுலாய்க்கு.. இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதன் பலனை பாகிஸ்தான் தினம் தினம் அறுவடை செய்கிறது.. அந்த நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைத்தாகிவிட்டது.. பாதுகாப்பின்மையை அதிகரிக்க செய்தாகிவிட்டது.. பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கித் தவிக்கிறது.. இதெல்லாம் இயற்கையாய் நிகழவில்லை.. இந்தியாவால் நிகழ்ந்தவை என்று சிறுபிள்ளைக்கும் தெரியும்.. உளவியல் ரீதியான யுத்தம் தான் மிக மோசமானது... அதை இந்தியா மிக சிறப்பாகவே செய்கிறது.. அந்த நாடு சிதறுண்டு போகும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை.. அமெரிக்கா நிதி உதவி அளிக்கவில்லை என்றால் அவர்களால் உயிர் வாழவே முடியாது..
இந்தியா வேடிக்கைப் பார்க்கிறதென்பது பொய் குற்றசாட்டு. எல்லாம் செய்துக்கொண்டுதான் இருக்கிறது.
அந்த கடைசிவரி எதுக்கு?
உண்மைதான்.... யோசிக்க வேண்டிய ஒன்று ... அது போல சஞ்சாய் சார் சொல்வதிலும் உண்மை இருப்பதாக தெரிகின்றது.. எதையும் முன் பின் யோசிக்கதான் வேண்டும்...
என்ன சொல்வது, எனக்கு என்னமோ இந்திய நிலைப்பாடு சரியாகத்தான் தோன்றுகின்றது. அரசியல்வாதிகள் எப்படி இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகளின் கருத்துக்களை ஏற்க்கின்றார்கள். அவர்களும் இராஜ தந்திர நடவடிக்கைகளை சரியாக எடுக்கின்றார்கள். நாம் அமெரிக்கா போல அவசரப் பட்டு, நடவடிக்கை எடுத்தால், அது எந்தப் பயனையும் தராது. மிகக் குறைவான இந்திய முஸ்லீம் இளைஞர்கள் தவிர, அதிகமானேர் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையும்,உறுதியும் கொண்டுள்ளனர். போர் போன்ற நடவடிக்கைகளால் கசப்புனர்வைத்தான் தரும். ஆனால் இராஜதந்திர நடவடிக்கைகளின் காரணமாக பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தியுள்ளேம். இப்பக் கூட நேத்து அமெரிக்கா போய் மூக்குடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பேட்டியைப் படித்தால் புரியும். ஒரு காலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தனது செவந்த் பிளீட் கப்பல் படையை சிங்கையில் இருந்து நகர்த்திய அமெரிக்கா இன்று வெறும் பணமும், ஆயுதங்களும் மட்டும் கொடுத்து விட்டு கையை விரித்தது. இது நேற்றைய செய்தி. நன்றி.
பித்தனின் வாக்கு
என்ன சொல்வது, எனக்கு என்னமோ இந்திய நிலைப்பாடு சரியாகத்தான் தோன்றுகின்றது. //
நற....! நற....!
:(
சஞ்சய் காந்தி சொல்வதுதான் சரியெனத் தோன்றுகிறது.
நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை வரிமாறாமல் சஞ்சய் எழுதி இருக்கும் கோஇன்ஸிடெண்ட் ஆச்சர்யமூட்டுகின்றது.
அந்த கடைசியில் நீங்கள் எழுதி இருக்கும் இன்ஷாஅல்லாஹ் சம்மந்தமில்லாமல் வலிய திணிக்கப்பட்டிருப்பதாகவே படுகின்றது. உங்களை சரியாக அரியாத பலர் அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் சாத்தியமுண்டு. தேவையா என்று நீங்கள் எழுதியதை நீங்களே மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு முடிவெடுங்கள். என்ன செய்றீங்கன்னு பாக்குறேன்...இன்ஷாஅல்லாஹ் :)
// எம்.எம்.அப்துல்லா said...
நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை வரிமாறாமல் சஞ்சய் எழுதி இருக்கும் கோஇன்ஸிடெண்ட் ஆச்சர்யமூட்டுகின்றது.
அந்த கடைசியில் நீங்கள் எழுதி இருக்கும் இன்ஷாஅல்லாஹ் சம்மந்தமில்லாமல் வலிய திணிக்கப்பட்டிருப்பதாகவே படுகின்றது. உங்களை சரியாக அரியாத பலர் அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் சாத்தியமுண்டு. தேவையா என்று நீங்கள் எழுதியதை நீங்களே மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு முடிவெடுங்கள். என்ன செய்றீங்கன்னு பாக்குறேன்...இன்ஷாஅல்லாஹ் :)
//
மற்றவர்களை விடுங்க. நான் எதுவும் தவறாக சொல்லவில்லை என்று என்னை அறிந்தவர்கள் உணர்ந்தால் அது போதும், புரியாதவர்களுக்கு விளக்கவும் முடியாது நான் முயற்சிப்பதும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் காந்தி சொன்னது தான். ஈஸ்வரன் அல்லா என்பது இறைவனின் வேறு வேறு மொழிப் பெயர்கள்
/ப.சி.யின் கோரிக்கை சும்மா லுலுலாய்க்கு.. /
பரவாயில்லையே! காங்கிரஸ் காரர்களுக்குக் கூட, பானா சீனாவே வெறும் லுலுலாய்தான் என்பது விரைவில் தெரிந்துவிடும் போல் இருக்கிறதே!
கையாலாகாத் தனத்துக்கு, உளவியல் யுத்தத்தை இந்தியா சிறப்பாகவே செய்து வருகிறது என்று பாராட்டுப் பத்திரம் வேறு!
பாகிஸ்தான் மட்டுமே இல்லை, பக்கத்தில் உள்ள எந்த ஒரு அண்டை நாட்டிலுமே, நேபாளம், மியான்மர், வங்காளதேசம், இலங்கைஎல்லாவற்றிலுமே அரசியல் ஸ்திரத் தன்மை இல்லை, பொருளாதாரச் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிற rogue states என்பது கொஞ்சம் செய்திகளைப் படிக்கிற எவருக்குமே தெரிந்தது தான்! அது எல்லாமே இந்தியாவின் வேலைதானா?
உள்ளூரில் சத்தியமூர்த்தி பவனில் வேட்டியை கிழித்துக் கொண்டு சண்டை போடுவதற்கே நேரம் போதவில்லை, தான் ஜெயிக்கவிட்டாலும் பரவாயில்லை, தனக்கு எதிர் கோஷ்டிக்காரன் வந்துவிடக் கூடாது என்று எதிரியிடமே கூட்டு வைப்பதற்கே நேரம் இல்லை, இதில் சர்வதேச அரசியல் எதற்கு சஞ்சய்?
கோவி கண்ணன்!
கொஞ்சம் உரக்கவே கேளுங்கள்! காங்கிரஸ்காரர்களுக்கு ஏன் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் துணிவு, துப்பு இல்லை?
மும்பை தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடந்தபோது இஸ்ரேல் பாணியில் இந்தியா தாக்குதல் நடத்திவிடக் கூடாது என்பதில், அமெரிககா மிகவும் கவனமாகவே இருந்தது, arm twisting இருந்தது என்பது,எல்லோருக்குமே தெரியும்.
நாற்பது வருஷமாக, பாகிஸ்தான் தீவீரவாதிகளைப் பயிற்சி கொடுத்து, இந்தியாவுக்குள் நாச வேலைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறது. மும்பைத் தாக்குதலின் போது, மேலிடத்து உத்தரவுக்காக எட்டு மணி நேரத்திற்கும் மேலாக,NSG காத்திருக்க வேண்டி இருந்தது.
காங்கிரஸ்கட்சி , குறிப்பாக நேரு, நேரு குடும்பத்து வாரிசுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த, இருக்கும் தருணங்களில் எல்லாம், இந்திய அரசுக்கும் சரி, கட்சிக்கும் சரி முதுகெலும்பே இருந்ததில்லையே!
கோளாறு, ஒரு உறுதியான அரசியல் நிலைபாடு எடுக்கத் தெரியாத கோழைகள் தலைவர்களாக இருப்பதில் தான்! இதை 1962 இந்திய சீன யுத்தத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு வருகிறோமே, இன்னுமா சந்தேகம்!
எலேய்.. நம்ம கிஸ்னமூர்த்தி ஐயா வந்த்துட்டார்.. எல்லாம் ஓடுங்கடே... இந்த மனுஷனுக்கு மட்டும் எப்டி தான் இம்புட்டு அறிவோ? ஹ்ம்ம்ம்... கோடியில் ஒருவர்.. சார் நல்லா படிங்க.. அது கேடியில் ஒருவர் இல்லை.. :))
//உள்ளூரில் சத்தியமூர்த்தி பவனில் வேட்டியை கிழித்துக் கொண்டு சண்டை போடுவதற்கே நேரம் போதவில்லை,//
அட இப்போல்லாம் ஜட்டியவே உறுவறாங்களாம் சார்.. அந்தப் பக்கம் போய்டாதிங்க...
நம்ம இந்தியா ஆணோடும் சேராத பெண்ணோடும் செராத அரசு என கவனகர் கனக சுப்புரத்தினம் என்ற சொற்பொழிவாளர் கூறுகிறார்.அதாவது ஆண் போன்று அதிரடியாக வீரியமாக முடிவும் எடுக்காமல்...பெண் பொல பின் வருவதை முன்குட்டியே சிந்தித்து முடிவெடுக்காமல்...எதிர்கட்சி திட்டுவதற்கேற்ப யாருக்கும் பாதிக்காத வகையில் (அதாவது ஆளும்கட்சிக்கு )முடிவெடுக்க யோசித்து க்கொண்டே இருக்கும் கோழை அரசு என்பதாம்...இதுதான் உன்மை..
சஞ்சய் சொல்வதே சரியெனப்படுகிறது.
இதை மதங்களின் அடிப்படையில் பார்க்காமல் நாடுகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.
குறிப்பிட்ட மதக்காரர்கள் சாக எவனும் குண்டுவைப்பதில்லை. எல்லோருக்கும் தான் பாதிப்பு.
கருத்துரையிடுக