பின்பற்றுபவர்கள்

9 மார்ச், 2010

கலவை 09/மார்ச்/2010 !

மகான் மீண்டும் மனிதன் :

நித்யானந்தம் என்கிற இராஜசேகரை நடமாடும் தெய்வம் என்று புகழ்ந்தவர்களுல் பலர் நடிகர்கள் உள்ளனர். நமக்கு தெரிந்து சாரு நிவேதிதான் நித்யா புகழ் நித்தமும் பாடினார். நித்தி அம்பலப்பட்ட பிறகு தாம் நித்தியை சந்தேகக் கண் கொண்டு பார்த்தேன் என்ற ரீதியில் எழுதுவதுடன், நித்திக்கு குணப்படுத்தும் சக்தி இருப்பது உண்மை தான் என்றும் எழுதிவருகிறார். இது இப்படியே இருக்க நித்தி பற்றிய "நித்யானந்தா பற்றிய என் தொடர்(பு?) கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வர இருக்கிறது. " என்று அறிவிப்பு வெளி இட்டு அது வலைவாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்காது என்றும், ரிப்போர்டரிலேயே வாசித்துக் கொள்ளுங்கள் என்று ரிப்போட்டர் விற்பனைக்கு தனது வலை பக்கத்தில் விளம்பரம் வைத்திருக்கிறார். எல்லாம் தொழில் மயம் ! இவர்களெல்லாம் நினைத்தால் ஒருவனை மகான் ஆக்குவார்கள், மீண்டும் மனிதன் ஆக்குவார்கள். வாழ்க பத்திரிகா தர்மம்.

விண்ணைத்தாண்டி கிழிவாயா ?

கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி.......ங்கொய்யால...என்னடா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க என்று என்னை அடிக்க வராதீர்கள்...படம் முழுக்க வருவது இது தான்......எண்ணிப் பார்த்தால் மூன்று மணி நேர படத்தில் ஐம்பது லட்சம் கார்த்திக்கும், நாற்பது லட்சம் ஜெஸ்ஸியும் இருக்கலாம்...கரண்ட் வேலியில் மாட்டிக் கொண்ட காட்டுப் பன்றி போல...மீண்டும் மீண்டும் அதே தான்....எழுத்து இயக்கம் கவுதம் வாசுதேவ் மேனன்!

கதை...நடிப்பு...இசை...சரி இதெல்லாம் தான் நித்யானந்தானோட ஆன்மீகம் மாதிர் டவுசர் கிழிஞ்சி தொங்குதுன்னா....படத்துல சென்னை பசங்களோட லைஃப் ஸ்டைல காட்டியிருக்காங்கன்னு ஏதோ ஒர் பதிவில படிச்ச ஞாபகம்....எனக்கும் (கூட) சென்னை பத்தி கொஞ்சம் தெரியும்கிறதுனால சரி, அப்படி எதுனா காட்டினா நல்லாத் தான் இருக்கும்னு நானு வெய்ட் பண்ணேண்...அப்படி என்னத் தான் காட்றாய்ங்கன்னா...கே.எஃப்.சி...அப்புறம் ஒரு ஃபிகர் கூட ஒக்காந்து பேசுறான் பேசுறான் பேசுறான் பேசுறான்...பேசிக்கிட்டே இருக்கான்....ங்கொய்யால...இது தான் சென்னை பசங்க லைஃப் ஸ்டைல்னா, அந்த கருமாந்திர சென்னைல பொறந்து வளராததுக்கு பழனி முருகனுக்கு நான் பத்து ஜென்மத்துக்கு காவடி தூக்கணும்!

- இதை கண்டிப்பாக நான் எழுதவில்லை. இன்னும் இருக்கு அது சரி... பதிவில் தான்

பழம் பெரும் நடிகை :

காஞ்சனா என்றாலே வாயைப் பிளக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட பெருசுகளுக்குத்தான் தெரியும் நடிகை கனவுக் கன்னி காஞ்சனா பற்றிய பெருமை(!). பெங்களூருவின் புறநகர் பகுதியான எலகங்காவில் உள்ள கணேசா கோயிலுக்கு அருகில் வசித்து வரும் அவர் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். மஞ்சள் நிற பழைய நூல் புடவை, கிழிந்த ஜாக்கெட்டுடன் அந்த பகுதியை வலம் வரும் காஞ்சனா - என்று அந்த பழம் பெரும் நடிகையின் தற்போதைய நிலை பற்றி வருத்தப்பட்டு ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறது தினமலர்.


குட் பை தாத்தா எம்.எப்.ஹூசேன் :

95 வயதில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒருவர் மனநிலை மாறுவதற்கு அவர் எவ்வளவு தூரம் அவமானப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. மத சகிப்புத்தன்மை எங்கள் நாட்டில் தான் இருக்கிறது என்று கூறுபவர்கள் வெட்கபபட வேண்டிய தகவலாக அவரது இடப் பெயர்வு நடந்திருக்கிறது. எவ்வளவோ இஸ்லாமியக் கலைஞர் இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை படைக்கிறார்கள். ஒரு ஓவியர் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்துவிட்டார் என்பதற்காக அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வேறு நாட்டிற்கு செல்ல முடிவெடுத்தது மன வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. 'மூடிக் கொண்டு இரு' என்பவர்கள் கைகள் வலுப் பெற்றுவிட்டது, மெல்ல மெல்ல மதவாதத்தின் பிடியில் சிக்கி வருகிறோம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல. 'ஹிந்துக்கள்' பாபர் முதல் ஒளரங்கசீப் வரை முகமதிய ஆட்சியாளர்களுக்கெல்லாம் சாமரம் வீசி, மந்திரியாக இருந்த போதெல்லாம் அவமானப்படாத இந்துமதம் ஒரு ஓவியனால் அவமானப் பட்டதாம்.

தினகரன் செய்தி:
துபாய்: இந்தியக் குடிமகன் என்பதற்கான அங்கீகாரமான பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திருப்பிக் கொடுத்து விட்டார் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன். இந்துப் பெண் கடவுகள்களை நிர்வாண கோலத்தில் படம் வரைந்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் ஹூசேன். இதையடுத்து அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, வழக்குகளும் தொடரப்பட்டன. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறினார் ஹூசேன். சமீபத்தில் அவருக்கு கத்தார் நாடு, குடியுரிமை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியக் குடியுரிமையை கைவிட தீர்மானித்தார் ஹூசேன். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது இந்திய பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்து விட்டார் ஹூசேன். 95 வயதாகும் ஹூசேன், இந்திய ஓவியப் பிரியர்களால் இந்தியாவின் பிகாசோ என அழைக்கப்பட்டவர். நேற்று டோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்ற ஹூசேன், தனது பாஸ்போர்ட்டை அங்கு ஒப்படைத்தார்.

********

ஒருவர் : என்னங்க இந்த சாமியாரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கு ஆனால் ஆனால் இவர் பெயரை கேள்விப்பட்டதே இல்லையே.

மற்றொருவர் : இவன் தான் முன்பு கச்சிதானந்த சாமிகள் என்ற பெயரில் செல்வாக்கு பெற்று நடிகையின் அரவணைப்பில் மார்கெட் இழந்தான், இப்போது மார்கெட் இல்லாத நடிகைகளைப் பின்பற்றி பெயரை மாற்றி 'எச்சிதானந்த' ஸ்வாமிகளாகி வாய்ப்பு தேடிவருகிறான் எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்

22 கருத்துகள்:

Nat Sriram சொன்னது…

ஹுசைன் ஏன் அவர் கடவுள ஒரு ஸ்டாம்ப் சைசுல கூட வரையல அப்படின்னு நான் கேக்கல..அவர மாதிரியே அவர் பீல்ட்ல இருக்கிற பெரிய பின்நவீனத்துவ ஓவியர் சதீஷ் குஜ்ரால் கேட்டுருக்கார்..அவர வேணா நேபால் சிடிசன்ஷிப் வாங்கிக்க சொல்லலாமா? ஒ, அது கூட இப்போ கம்யூனிஸ்ட் நாடு ஆயிடிச்சோ..ஐய்யயோ..

ராஜரத்தினம் சொன்னது…

//ஓவியர் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்துவிட்டார்//

இது என்னடா அக்கிரமம். கேவலம் அவர் இந்த உலகத்தில் இல்லாத சரஸ்வதியை தானே வரைந்தார். இருந்த(?) முகமதுவையா வரைந்தார்?
அவருக்கு முழு உடை போட்டுத்தானே வரைந்தார். இந்த ஹூசைன் நாய், சிறுபான்மையினராக இந்துக்கள் இருக்கும் சிங்கையில் கூட இப்படி வரையமுடியாது. வரைந்திருந்தால் அந்த விரலை என்றோ வெட்டி எடுத்து அவன் வீட்டிற்கு முன்னால் தொங்க விட்டிருப்பார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

/ராஜரத்தினம் said...

//ஓவியர் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்துவிட்டார்//

இது என்னடா அக்கிரமம். கேவலம் அவர் இந்த உலகத்தில் இல்லாத சரஸ்வதியை தானே வரைந்தார். இருந்த(?) முகமதுவையா வரைந்தார்?
அவருக்கு முழு உடை போட்டுத்தானே வரைந்தார். இந்த ஹூசைன் நாய், சிறுபான்மையினராக இந்துக்கள் இருக்கும் சிங்கையில் கூட இப்படி வரையமுடியாது. வரைந்திருந்தால் அந்த விரலை என்றோ வெட்டி எடுத்து அவன் வீட்டிற்கு முன்னால் தொங்க விட்டிருப்பார்கள்.//

முகமது நபி கார்டூனை மறுபதிவு செய்த தினமலரை இந்தியா என்பதால் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ?

பிரம்மன் சரஸ்வதியை படைத்தானாம் பிறகு திருமணமும் செய்து கொண்டானாம், ஒரு அப்பன் மகளை அடைவதான கதை இதைவிட கேவலமாக எனக்கு நிர்வாண ஓவியம் தெரியவில்லை.

பெயரில்லா சொன்னது…

//சாரு நிவேதிதான் நித்யா புகழ் நித்தமும் பாடினார்.//

இவருக்கு சூரியன் கீழ் இருக்கும் எல்லாம் தெரியுமாம். ஆனால் நித்தியா,ரஞ்சிதா பற்றி தெரியாதாக்கும்.
ஒரு வேளை சூரியனுக்கு மேல் நித்தியாவும்,ரஞ்சிதாவும் படுக்கை போட்டார்கள் போல்

பெயரில்லா சொன்னது…

காஞ்சனா என்றாலே வாயைப் பிளக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட பெருசுகளுக்குத்தான் தெரியும் நடிகை கனவுக் கன்னி காஞ்சனா பற்றிய பெருமை(!)//
பழைய படங்களை பார்த்தால் அவர் அழகில் இளைஞர்களும் சொக்கி போவார்கள்

ராஜரத்தினம் சொன்னது…

//பிரம்மன் சரஸ்வதியை படைத்தானாம் பிறகு திருமணமும் செய்து கொண்டானாம், ஒரு அப்பன் மகளை அடைவதான கதை இதைவிட கேவலமாக எனக்கு நிர்வாண ஓவியம் தெரியவில்லை.//

ஹீ ஹீ அப்பா மகளை பண்ணி பண்ணி குழந்தை பெத்ததெல்லாம் காலம் பதிவு செய்து வைத்திருக்கிறது. எங்களின் காலம் உங்க காலத்தில் இதெல்லால் எழுத வேண்டிருக்கு.

hiuhiuw சொன்னது…

இவர்களெல்லாம் நினைத்தால் ஒருவனை மகான் ஆக்குவார்கள், மீண்டும் மனிதன் ஆக்குவார்கள். வாழ்க பத்திரிகா தர்மம்.//

ஜெய் ஹோ !

hiuhiuw சொன்னது…

விண்ணைத்தாண்டி கிழிவாயா ?//

அதே தான் !

hiuhiuw சொன்னது…

//கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி.......ங்கொய்யால...என்னடா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க என்று என்னை அடிக்க வராதீர்கள்...படம் முழுக்க வருவது இது தான்......எண்ணிப் பார்த்தால் மூன்று மணி நேர படத்தில் ஐம்பது லட்சம் கார்த்திக்கும், நாற்பது லட்சம் ஜெஸ்ஸியும் இருக்கலாம்...கரண்ட் வேலியில் மாட்டிக் கொண்ட காட்டுப் பன்றி போல...மீண்டும் மீண்டும் அதே தான்....எழுத்து இயக்கம் கவுதம் வாசுதேவ் மேனன்!//

என் பிரண்டு ஒருத்தன் இந்த கூத்தை நல்லா இருக்குனு சொன்னான் .... கெட்ட வார்த்தையில் திட்டினேன் .... போடா இதெல்லாம் பிகரோட பாக்கனும்னான் ... இந்த படத்துக்கு கூட்டிட்டு போனதால வந்த சண்டையே இன்னும் என்குடும்பத்துல முடிஞ்ச பாடில்ல

hiuhiuw சொன்னது…

//கதை...நடிப்பு...இசை...சரி இதெல்லாம் தான் நித்யானந்தானோட ஆன்மீகம் மாதிர் டவுசர் கிழிஞ்சி தொங்குதுன்னா....படத்துல சென்னை பசங்களோட லைஃப் ஸ்டைல காட்டியிருக்காங்கன்னு ஏதோ ஒர் பதிவில படிச்ச ஞாபகம்....எனக்கும் (கூட) சென்னை பத்தி கொஞ்சம் தெரியும்கிறதுனால சரி, அப்படி எதுனா காட்டினா நல்லாத் தான் இருக்கும்னு நானு வெய்ட் பண்ணேண்...அப்படி என்னத் தான் காட்றாய்ங்கன்னா...கே.எஃப்.சி...அப்புறம் ஒரு ஃபிகர் கூட ஒக்காந்து பேசுறான் பேசுறான் பேசுறான் பேசுறான்...பேசிக்கிட்டே இருக்கான்....ங்கொய்யால...இது தான் சென்னை பசங்க லைஃப் ஸ்டைல்னா, அந்த கருமாந்திர சென்னைல பொறந்து வளராததுக்கு பழனி முருகனுக்கு நான் பத்து ஜென்மத்துக்கு காவடி தூக்கணும்!//

நான் பதினோரு ஜென்மத்துக்கு நித்திக்கு ஹீரோயின் காவடி தூக்கணும்

hiuhiuw சொன்னது…

//காஞ்சனா என்றாலே வாயைப் பிளக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட பெருசுகளுக்குத்தான் தெரியும் நடிகை கனவுக் கன்னி காஞ்சனா பற்றிய பெருமை(!). பெங்களூருவின் புறநகர் பகுதியான எலகங்காவில் உள்ள கணேசா கோயிலுக்கு அருகில் வசித்து வரும் அவர் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். மஞ்சள் நிற பழைய நூல் புடவை, கிழிந்த ஜாக்கெட்டுடன் அந்த பகுதியை வலம் வரும் காஞ்சனா - என்று அந்த பழம் பெரும் நடிகையின் தற்போதைய நிலை பற்றி வருத்தப்பட்டு ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறது தினமலர்.//

சாந்தி நிலையம் காஞ்சனாவா? அடடே ! மானங்கெட்ட சங்கங்கள் இதுக்கு ஒரு வழியும் பண்ணாது ! பாராட்டு விழா நொட்ட மட்டும் தூக்கி புடிச்சுட்டுவந்துருவானுக

hiuhiuw சொன்னது…

//முகமதிய ஆட்சியாளர்களுக்கெல்லாம் சாமரம் வீசி, மந்திரியாக இருந்த போதெல்லாம் அவமானப்படதா இந்துமதம் ஒரு ஓவியனால் அவமானப் பட்டதாம்.//
அந்த ஓவியத்த பாத்தேன் ,,,, அது ஒன்னும் மூடு கெளப்பற மாதிரியே இல்ல

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணே உங்கள் கருத்தை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கலவை அருமை.

ஓவியம் வரைந்தது தவறுதான். படைப்பாளிக்கு படைப்புரிமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு. பிற மதத்தினரின் உணர்ச்சிகளையும் மதிக்க தெரியவேண்டும்.

ராஜரத்தினம் சொன்னது…

//பிரம்மன் சரஸ்வதியை படைத்தானாம் பிறகு திருமணமும் செய்து கொண்டானாம், ஒரு அப்பன் மகளை அடைவதான கதை இதைவிட கேவலமாக எனக்கு நிர்வாண ஓவியம் தெரியவில்லை//

இதற்கு மேல் இதைபற்றி நான் பேச போவதில்லை.(அப்படியே பேசிட்டாலும் விளங்கிடும்). கடைசியாக ஒன்று
ஒரு முஸ்லிம் அவனுடைய மதம் பிடிக்கவில்லையென்றால் மாறுகிறான்.கிருத்துவனும் அப்படியே. ஆனால் இந்த பெயரளவு இந்துக்கள் மட்டும் ஏன் அதை அவமானபடுத்துவதிலேயே குறியாய் இருக்கிறான். கேட்டால் ஓம்கார் பதிவு போட்டு டாபாய்க்கவேண்டியது. உங்கள் படியே வருகிறேன். ஒரு தெளிவில்லாத மகனுக்கு தன் தாய் ஒழுக்கமில்லாதவள் (அது உண்மையல்ல) என்று தெரிந்தால் ஒன்று அவளை அழித்துவிடுவான்( அது முடியும் பட்சத்தில்) இல்லேனா அவளை விட்டு விலகிவிடுவான். ஆனால் அதற்காக அவனும் அவளை தினமும் வன்கலவை செய்தால் அதை என்னவென்று சொல்வது. நீங்கள் (உங்கள் கோஷ்டி) செய்வது அதைத்தான். தயவு செய்து யோசியுங்கள்.

thamizan சொன்னது…

//இதற்கு மேல் இதைபற்றி நான் பேச போவதில்லை.(அப்படியே பேசிட்டாலும் விளங்கிடும்). //

மிகவும் சரியான வார்த்தை . தூங்குபவர்களை எழுபலாம் . தூங்கும் மாதிரி நடிபவர்களை எழுப்ப முடியாது. இவர்களை பொறுத்த வரை இறை மறுப்பு எழுத்தில் மட்டுமே . அவர்களின் வீட்டிற்கு சென்று பாருங்கள் . எந்த கடவுளை தூற்றுகிறார்கள் அந்த கடவுளின் படம் நிறைய இருக்கும் . இவ்வாறு சொல்லும் இவர்கள் ஏன் தீபாவளி பொங்கல் என்று பண்டிகை கொண்டாடுகிறார்கள் . அப்புறம் சொல்வார்கள் வீட்டில் உள்ளவர்களுக்காக மட்டும் என்று . அனால் இவர்களும் புது துணி போட்டு கொள்வார்கள் எல்லாமும் செய்வார்கள். இங்கு சொல்லும் வார்த்தைகளை அவர்களின் வீட்டில் போய் சொல்லுங்கள் . அங்காவது உங்கள் சொல்லுக்கு மதிப்பு இருகிறதா என்று ( இந்த விஷயத்தில் )

thamizan சொன்னது…

//இதைத்தான் பார்பனிய மேலாண்மை சிந்தனை என்பார்கள். முடிந்தால் சகித்துக் கொள் இல்லை என்றால் ஓடிவிடு என்று சொல்வது//

என்னப்பா எப்ப பார்த்தாலும் பார்பனன் பற்பனணு சொல்றீங்க. என்ன கோபம் உங்களுக்கு . ஓஹோ அவங்களை திட்டினா எதிர்த்து கேக்க மட்டான்னா ? இல்ல அவன பத்தி எழுதின நிறைய பேர் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்ன அது என்னமோ சரி தான். பேசறதுக்கு எந்த மேட்டர் கிடைகலேன்னாலும் உடனே பார்பனனை திட்டுவாங்க .

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னப்பா எப்ப பார்த்தாலும் பார்பனன் பற்பனணு சொல்றீங்க. என்ன கோபம் உங்களுக்கு . ஓஹோ அவங்களை திட்டினா எதிர்த்து கேக்க மட்டான்னா ? இல்ல அவன பத்தி எழுதின நிறைய பேர் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்ன அது என்னமோ சரி தான். பேசறதுக்கு எந்த மேட்டர் கிடைகலேன்னாலும் உடனே பார்பனனை திட்டுவாங்க .//

பார்பனியம் என்றால் உயர்வர்க்க மேலாண்மை சிந்தனை. அதில் தன் சாதி உயர்ந்தது என்று சொல்லும் அனைத்து சாதிக்காரனின் சிந்தனையும் உள்ளது.

கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், ஜைனர், பவுத்தர் என பல்வேறு மக்கள் வசித்தாலும் நாம 'ஹிந்து'நாடுன்னு சொல்ல முயற்சிகிறோம் இல்லையா ? அது போல் சாதிவெறி/மேலாண்மை சார்ந்த அடையாளச் சொல்லே பார்பனியம். அதைப்பார்பனர்களுக்கு மட்டும் உடைமை ஆக்கிக்கொள்ள முயற்சித்தால் வன்மையாக கண்டிக்கிறேன்

thamizan சொன்னது…

//பார்பனியம் என்றால் உயர்வர்க்க மேலாண்மை சிந்தனை. அதில் தன் சாதி உயர்ந்தது என்று சொல்லும் அனைத்து சாதிக்காரனின் சிந்தனையும் உள்ளது.

கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், ஜைனர், பவுத்தர் என பல்வேறு மக்கள் வசித்தாலும் நாம 'ஹிந்து'நாடுன்னு சொல்ல முயற்சிகிறோம் இல்லையா ? அது போல் சாதிவெறி/மேலாண்மை சார்ந்த அடையாளச் சொல்லே பார்பனியம். அதைப்பார்பனர்களுக்கு மட்டும் உடைமை ஆக்கிக்கொள்ள முயற்சித்தால் வன்மையாக கண்டிக்கிறேன் //

உங்க கிட்ட கேட்ட பார்பணியத்துக்கு இந்த மாதிரி பதில் சொல்லுவீங்க. அனால் இதை பொதுவாக படிபவர்கள் மனதில் பார்பனர்களை பற்றி தவறான எண்ணம் தானே ஏற்படும் . இனிமேல் எழுதும் பொது பார்பணியத்துக் - சாதிவெறி/மேலாண்மை சார்ந்த என்று எழுதுங்கள்.

அப்பறம் சாதிவெறி என்னமோ உயர் வகுப்பிற்கு மட்டும் தான் இருக்குதா, மத்தவங்களுக்கு கிடையாதா. இன்று நம் நாட்டில் உள்ளவர்கள் எல்லாருக்கும் சாதி வெறி இருக்கிறது . இதை நீங்கள் மறுக்க முடியாது .இன்னும் சொல்ல போனால் தினமும் ஒரு ஜாதி கட்சி ஆரம்பமாகிறது . எல்லாம் உயர் ஜாதி கட்சியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//
உங்க கிட்ட கேட்ட பார்பணியத்துக்கு இந்த மாதிரி பதில் சொல்லுவீங்க. அனால் இதை பொதுவாக படிபவர்கள் மனதில் பார்பனர்களை பற்றி தவறான எண்ணம் தானே ஏற்படும் . இனிமேல் எழுதும் பொது பார்பணியத்துக் - சாதிவெறி/மேலாண்மை சார்ந்த என்று எழுதுங்கள்.//

பார்பனர்கள் தவிர்த்து வேறுயாரும் தாங்கள் அனைவரையும் விட உயர்ந்தவர்கள், பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று விளம்பரப்படுத்துவது இல்லை. எனவே எது தன்னை உயர்வர்க்கம் என்ற அடையாளத்தை சமூகத்தில் திணிக்க முயற்சிக்கிறதோ அதைத்தான் உதாரணமாகக் காட்டுவார்கள். பார்பனர் தவிர்த்து வேறு யாருக்கும் வேதம் அல்லது அதன் அறிமுகம் தெரியாவிட்டாலும் இந்துக்கள் அனைவரையும் இந்து மற்றும் வேதமதம் சார்ந்தவர்கள் என்று பொதுப் படுத்துகிறீர்களே அது போல் தான். பார்பனியம் என்பது பொதுப் பெயர்.

//அப்பறம் சாதிவெறி என்னமோ உயர் வகுப்பிற்கு மட்டும் தான் இருக்குதா, மத்தவங்களுக்கு கிடையாதா. இன்று நம் நாட்டில் உள்ளவர்கள்

எல்லாருக்கும் சாதி வெறி இருக்கிறது . இதை நீங்கள் மறுக்க முடியாது .இன்னும் சொல்ல போனால் தினமும் ஒரு ஜாதி கட்சி ஆரம்பமாகிறது . எல்லாம் உயர் ஜாதி கட்சியா ?//

அப்படி சாதிக் கட்சி தொடங்குபவன் எவனுமே நான் உயர்ந்தவன் இல்லை என்று சொல்வதில்லை. நாங்கள் தாழ்ந்தவர் இல்லை என்று தான் சொல்லுகிறார்கள். ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ளும் போது நானும் தாழ்ந்தவன் இல்லை என்று சொல்வதை உங்களால் ஏன் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இரண்டையும் ஒன்றாக கருதி கண்டிக்க உங்களால் ஏன் முடியவில்லை. நான் சாதி வெறியும், சாதி சார்ந்த முன்னெடுப்புகளும் கூடாது என்றே தான் எழுதிவருகிறேன்.

மணிகண்டன் சொன்னது…

/* இந்துக்கள் அனைவரையும் இந்து */

அப்படின்னா ?

ஹுசைன் விஷயத்துல அவரை கல்லால அடிக்கணும், தூக்குல போடணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கற மக்கள் கிட்ட எல்லாம் பேசி புரியவைக்க முடியாது. ஆனா, இனி இது போன்ற மிரட்டல்கள் அதிகம் ஆக வாய்ப்பிருக்கிறது. வருத்தமளிக்கும் விஷயம் தான்.

Romeoboy சொன்னது…

\கரண்ட் வேலியில் மாட்டிக் கொண்ட காட்டுப் பன்றி போல..//

ஹா ஹா ஹா .. உங்க பாடு திண்டாட்டமா ஆச்சே தல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்