பின்பற்றுபவர்கள்

29 மார்ச், 2010

கால் கழுவும் கலாச்சாரம் !

பண்பாடு என்ற அளவில் அன்றாட செயல்களில் சிலவற்றை நேரிடையாக சொல்வது நாகரீகமின்மையாக கருதப்பட்டு அவை மறை பொருளாகச் சொல்லப்படும், அதுவே இடக்கரடக்கல் என்னும் இலக்கணச் சொல், சளி சிந்துதல் என்று சொல்லாமல் மூக்கு சிந்துதல் என்பார்கள், குண்டி / சூத்து கழுவுதலை கால்கழுவுதல் என்பார்கள். இடக்கரடக்கல், குழூக்கூறி ஆகியவை மறை பொருளாகச் சொல்லப்படும் செயல் குறித்த சொற்களின் மறுவடிவம் அல்லது குறியீடு. இருந்தாலும் இங்கே கால் கழுவுவது என்றால் நான் இடக்கரடக்கலான குண்டி கழுவுவது பற்றிச் சொல்லவில்லை.

*****

ஒருவரின் இழிவுகளை சுமப்பதன் மூலம் நாம் அவரைப் போற்றுகிறோம் என்பது பண்பாடாம். இப்படித்தான் இராமன் என்னும் அண்ணனை உயர்வு படுத்த தம்பி பரதன் அவனது செருப்பை வைத்து நாடாண்டான் என்பது இராமாயணக் கதை. உன் கால் செருப்பு கூட எனக்கு உயர்வு தான் என்று சொல்வதாகப் பொருள். பிறரை எதை வைத்து 'செருப்பால் அடிப்பேன்' என்று கேவலப்படுத்துகிறோமோ, மற்றவருக்கு 'செருப்பாக இருப்பேன்' என்று உயர்வாகச் சொல்வது போன்ற பண்பாட்டு விழுமியங்கள் காலந்தோறும் இருந்தே வருகின்றன. என்னைப் பொருத்த அளவில் இது தேவையில்லாத உணர்ச்சி மிகுதலின் வெளிப்பாடுகள், ஒருவரின் காலில் விழுதலும் மற்றவரை காலை வாரிவிடுவதும் கிட்ட தட்ட ஒன்று தான். ஒன்றின் பெயர் பணிவாம் மற்றொன்று துணிவாம்.

திருமணச் சடங்கின் போது பெற்றோர்களுக்கு பாத பூசை செய்வது பார்பனிய வழி இந்து திருமண முறையில் ஒரு சடங்கு. பெற்றோர்களின் காலில் பூசை செய்வதை பிள்ளைகள் விரும்பியே செய்கின்றனர் என்றாலும் இது பெற்றோர்களுக்கு பேரனந்ததை தந்துவிடுமா ? அப்படியே என்றாலும் அந்த நிகழ்வின் போது எந்த ஒரு விதவை தாய்க்கும் அந்த தகுதி கொடுக்கப்படுவதில்லை. விதவை தாயின் மக்களின் திருமணத்தின் போது வேறொரு மூத்த பெரியப்பா, சித்தப்பா தம்பதிகளுக்கு அந்த பாத பூசை நடக்கும், அவர்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வைப்பார்கள். பாத பூசை என்பது பெற்றோர்களுக்கு மதிப்பதற்கு செய்யும் ஒரு சடங்கு என்றாலும் இரு பெற்றொரும் இருந்தால் மட்டுமே அதுவும் கிடைக்கும்.

கால்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது தவிர்த்து கால் உட்பட பிற(ர்) உடல் உறுப்புகளுக்களை ஒருவர் மதிக்க வேண்டியது இல்லை. ஒருவரின் மீதான மரியாதை என்பது அவருடைய முழுவுருவத்திற்கும் அன்றி தனித்தனியாக கால், கை, தலை முதலியவற்றிற்கானது அல்ல. சாமியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் புனித பிம்பங்கள் முற்றையும் துறந்ததாகச் சொல்லிக் கொண்டு பக்தர்கள் கால் கழுவி, பாத பூசை செய்யச் சொல்வதைவிட சக மனிதனை இழிவு படித்தும் நிகழ்வு எதுவும் இல்லை. அப்படியே செய்ய அது என்ன கழிவரைக்கே செல்லாத காலா என்ன ? இதையும் விடக் கொடுமை காஞ்சிப் பெரியவாள்கள் திறந்த வெளியில் தான் ஆய் போவார்களாம், அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம். அதை புனித பணியாக சிலர் செய்துவருவதாகவும் பலர் படித்திருக்கக் கூடும். மனித உடல்கழிவுகள் ஒருவருக்கு சந்தனமாகவும், மற்றவருக்கு மலமாகவும் போகுமா என்ன ? இது போன்ற இழிவுகளையும் ஒரு மனிதன் தன்னைத் தாழ்த்திக் செய்வதையெல்லாம் இறைப் பணி என்று உளறவும் செய்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனம் உவந்து செய்யும் இந்த செயல்களையெல்லாம் கூட வயது வந்த பெற்றொர்களுக்கு பிள்ளைகள் செய்யாமல் வேலைக்காரர்களை வைத்து செய்யும் நிலையில் ஒரு சாமியாரின் கழிவுகளுக்கான பணிவிடைகளில் என்ன புனித தன்மை இருந்துவிடப் போகிறது.

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொள்ளும் சாமியார்கள், சாமியாரிணிகள் பலரும் பக்தர்கள் பாத பூசை செய்வதை அனுமதிப்பதும் இல்லாமல் அதற்கு கட்டணம் வேறு வைத்து வசூலிக்கிறார்கள். இந்த நாற்றம் பிடித்த சாமியார்களின் செயல்களை இந்து மத இடிதாங்கிகள் கண்டித்ததே இல்லை. பாத பூசை செய்வதில் பக்தனுக்கு பலன் உண்டு என்றால் அதே சாமியார்களுக்கு குண்டி கழுவி விடுவது பன்மடங்கு பலன் தரும் என்று சொல்லிவிட முடியுமா ? அந்த அளவுக்கு இன்னும் செல்லாதது ஓரளவு ஆறுதலே அளிக்கிறது, அதுவும் ஒரு புனித சேவை என்று எதோ ஒரு பக்தி இலக்கியத்தில் கோடிட்டு இருந்தால் சாமியார்களுக்கு குண்டி கழிவி விட டெண்டர் விட்டு வசூல் நடத்தினாலும் நடத்திவிடுவார்கள்.

*****

சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைவருமே நம்மைப் போல் எலும்பும் சதையும், கழிவு உறுப்புகளும் உள்ள மனிதர்கள் தாம், அவர்கள் உடலில் இருந்து வியர்வை, சீழ், மலம், சிறுநீர், விந்து, கண்ணீர் ஆகிய அனைத்து கழிவுகளும் வெளியேறும். இன்னும் சொல்லப் போனால் நம்மைப் போலவே பெற்றோர்களின் உடல் உறவின் மூலம், கழிவு உறுப்பின் வழியாக பிறந்தவர்கள் தான் அனைத்து மத சாமியார்கள் மற்றும் மத போதகர்கள் அனைவருமே. அவர்களது தனித்தன்மை என்பது அவர்கள் நடவடிக்கை மட்டுமே அன்றி உடல் அல்ல. சாமியார்களுக்கு கால்கழுவுதல், இலை போடுதல் போன்றவற்றிற்கு பதிலாக முதியோர் இல்லங்களுக்குச் சென்று குளிக்கக் கூட இயலாத நிலையில் நலிவுற்றிருக்கும் மூத்தவர்களுக்கு அப்பணிவிடைகளைச் செய்தால் கிடைக்கும் அவர்களின் மனதிலிருந்து கொடுக்கும் வாழ்த்தும், ஆசியும் எந்த ஒரு முக்தி பெற்ற அல்லது முக்தி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்களால் கூட அளிக்க முடியாது.






எந்த ஒரு சாமியார் பாத பூசையால் மகிழ்கிறானோ, அவ்வாறு செய்ய அனுமதிக்கிறானோ, பணிவிக்கிறானோ அவன் போலி சாமியாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் மக்களை இழிவு படுத்திப் பார்பவன் ஒரு உண்மையான துறவியாக இருப்பதற்கு வாய்பே இல்லை. தன்னை அவதாரம் மற்றும் கடவுள் என்று விளம்பரம் செய்ய இவ்வாறு செய்கிறார்கள்.

54 கருத்துகள்:

செந்தில் நாதன் Senthil Nathan சொன்னது…

சிந்திக்க வைத்த பதிவு...கொஞ்சம் யோசிச்சிட்டு பதில் சொல்றேன்..

ஆளவந்தான் சொன்னது…

//
இதையும் விடக் கொடுமை காஞ்சிப் பெரியவாள்கள் திறந்த வெளியில் தான் ஆய் போவார்களாம், அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம்.
//

இந்த மேட்டர் புதுசா இருக்கே.. அப்போ வாழையிலையில சாப்பாடு போட்டா அவருக்கு அது “ஆயி” மாதிரி தெரியுமா? இல்லியா ?.. :))

கொடுமடா சாமீயா(ர்களா)

priyamudanprabu சொன்னது…

அதுவும் ஒரு புனித சேவை என்று எதோ ஒரு பக்தி இலக்கியத்தில் கோடிட்டு இருந்தால் சாமியார்களுக்கு குண்டி கழிவி விட டெண்டர் விட்டு வசூல் நடத்தினாலும் நடத்திவிடுவார்கள்.
///////////


haa haa
ஹா ஹா
அண்ணே அதுக்கும் பக்தகோடிகள் சிலர் ரெடியா இருப்பாங்க
அதெல்லாம் பகுதறிவாளிக்கு புரியாதும்மாங்க

மோனி சொன்னது…

பச்ச பசுஞ் சோலையிலே
பாடி வந்த பூங்குயிலே...

aandon ganesh சொன்னது…

romba nalla matter sollirikinga.
pala en nanbarkaluku mail panirikan.
nanri ayya.

aandon ganesh சொன்னது…

romba nalla matter sollirikinga.
pala en nanbarkaluku mail panirikan.
nanri ayya.

Test சொன்னது…

// முதியோர் இல்லங்களுக்குச் சென்று குளிக்கக் கூட இயலாத நிலையில் நலிவுற்றிருக்கும் மூத்தவர்களுக்கு அப்பணிவிடைகளைச் செய்தால் கிடைக்கும் அவர்களின் மனதிலிருந்து கொடுக்கும் வாழ்த்தும், ஆசியும் எந்த ஒரு முக்தி பெற்ற அல்லது முக்தி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்களால் கூட அளிக்க முடியாது //
படித்ததில் பிடித்தது...

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
எந்த ஒரு சாமியார் பாத பூசையால் மகிழ்கிறானோ, அவ்வாறு செய்ய அனுமதிக்கிறானோ, பணிவிக்கிறானோ அவன் போலி சாமியாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் மக்களை இழிவு படுத்திப் பார்பவன் ஒரு உண்மையான துறவியாக இருப்பதற்கு வாய்பே இல்லை. தன்னை அவதாரம் மற்றும் கடவுள் என்று விளம்பரம் செய்ய இவ்வாறு செய்கிறார்கள்.
//

ரொம்ப சரியா சொன்னீங்க...உண்மையிலேயே சாமியாரா இருக்கவங்க இதையெல்லாம் அனுமதிக்க மாட்டாங்க...போலி தறுதலைகளை இதுல இருந்தே தெரிஞ்சிக்கலாம்..

(இதுல அவன் காலை கழுவ காசு வேற கட்டணுமாம்!)

பனித்துளி சங்கர் சொன்னது…

/////சாமியார்களுக்கு கால்கழுவுதல், இலை போடுதல் போன்றவற்றிற்கு பதிலாக முதியோர் இல்லங்களுக்குச் சென்று குளிக்கக் கூட இயலாத நிலையில் நலிவுற்றிருக்கும் மூத்தவர்களுக்கு அப்பணிவிடைகளைச் செய்தால் கிடைக்கும் அவர்களின் மனதிலிருந்து கொடுக்கும் வாழ்த்தும், ஆசியும் எந்த ஒரு முக்தி பெற்ற அல்லது முக்தி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்களால் கூட அளிக்க முடியாது./////

மதம் என்பதையும் தவிர்த்து சில அருமையான , யதார்த்தமான கருத்துக்களை முன் வைத்து இருக்கிறீர்கள் ,,

பூரணம் சொன்னது…

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம்பறிக்க உபதேசம் பகர்வோ மென்பான் ஆரப்பா பிரம்மநிலை காட்டா மற்றான் ஆகாசப் பொய்களையு மவன் தான் சொல்வான் நேரப்பா சீடனுக்குப் பாவமாச்சு நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான் விதியாலே முடிந்ததென்று விளம்பு வானே

-காகபுசுண்டர்

Kesavan சொன்னது…

//அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம். அதை புனித பணியாக சிலர் செய்துவருவதாகவும் பலர் படித்திருக்கக் கூடும்.//

இது உண்மையா பொய்யா ? யாரோ ஒருவர் சொன்னதின் பெயரில் எழுதினால் அது தவறாக இருக்கும் . ஒருவரை பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டு மானாலும் சொல்லலாம் . அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசிய மில்லை . நான் இப்படி எழுதுவதால் நான் பெரியவாளை suport செய்வதாக எண்ண வேண்டாம் .

Kesavan சொன்னது…

//மனித உடல்கழிவுகள் ஒருவருக்கு சந்தனமாகவும், மற்றவருக்கு மலமாகவும் போகுமா என்ன ? //

இன்றும் துப்புரவு ஊழியர்கள் மனித கழிவுகளை எடுத்து கொண்டு தான் இருகிறார்கள் .

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

//அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம். அதை புனித பணியாக சிலர் செய்துவருவதாகவும் பலர் படித்திருக்கக் கூடும்.//

இது உண்மையா பொய்யா ? யாரோ ஒருவர் சொன்னதின் பெயரில் எழுதினால் அது தவறாக இருக்கும் . ஒருவரை பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டு மானாலும் சொல்லலாம் . அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசிய மில்லை . நான் இப்படி எழுதுவதால் நான் பெரியவாளை suport செய்வதாக எண்ண வேண்டாம் .//

தம்பி கேசவா,

உனக்காக நான் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் சென்று எல போட்டவங்க யாருன்னு கொண்டு வந்து கேசவன் முன் நிறுத்தச் சொல்லி வேண்டுகோள் வைக்க முடியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் காஞ்சிபுர மடத்திற்கு சென்றுவருபவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Kesavan said...

//மனித உடல்கழிவுகள் ஒருவருக்கு சந்தனமாகவும், மற்றவருக்கு மலமாகவும் போகுமா என்ன ? //

இன்றும் துப்புரவு ஊழியர்கள் மனித கழிவுகளை எடுத்து கொண்டு தான் இருகிறார்கள் .//

இப்ப நீ என்ன சொல்ல வர்றே....? அவர்களுக்கு சந்தனமாக மணக்கிறது அதனால் தான் அந்த வேலையை (விரும்பி?) செய்கிறார்கள் என்றா ?

புரியலைப்பா

Kesavan சொன்னது…

//காஞ்சிபுர மடத்திற்கு சென்றுவருபவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.//

அண்ணே , நான் கடந்த 30வருடங்களாக காஞ்சிபுரத்தில் தான் இருக்கிறேன் . அந்த மடத்திற்கும் சென்றிருக்கிறேன் . அங்கு எனக்கு தெரிந்தவர்களும் இருகிறார்கள் . இது வரை அந்த மாதிரி விஷயங்கள் கேள்வி பட்டதில்லை .

Kesavan சொன்னது…

நான் சொல்வது என்னவென்றால் ஒரு அரசாங்கமே அந்த வேலையை செய்ய சொல்கிறதே என்று ஆதங்கம் தான். அதை நீங்கள் சொல்லாமல் ஒரு தனிப்பட்ட மனிதர் ஆய் போவதும் அங்கு அவருக்கு பணிவிடை செய்வது பற்றியும் சொல்கிறீர்கள் .

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

//காஞ்சிபுர மடத்திற்கு சென்றுவருபவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.//

அண்ணே , நான் கடந்த 30வருடங்களாக காஞ்சிபுரத்தில் தான் இருக்கிறேன் . அந்த மடத்திற்கும் சென்றிருக்கிறேன் . அங்கு எனக்கு தெரிந்தவர்களும் இருகிறார்கள் . இது வரை அந்த மாதிரி விஷயங்கள் கேள்வி பட்டதில்லை .//

சமபந்தி போஜனத்துக்கு இலை போடுகிறோம் வாருங்கள் என்பது போல்
இதெல்லாம் வெளியே சொல்லி விளம்பரப்படுத்தி தான் செய்யனும் என்பது போன்ற உன் அப்பாவித்தனமான பதில் சிரிப்பை வரவழைக்குது. எதுக்கும் ஊருக்கு போனால் காதோடு காதாக கேட்டுப் பார்த்தால் சொல்லுவார்கள் என்று கருதுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

நான் சொல்வது என்னவென்றால் ஒரு அரசாங்கமே அந்த வேலையை செய்ய சொல்கிறதே என்று ஆதங்கம் தான். அதை நீங்கள் சொல்லாமல் ஒரு தனிப்பட்ட மனிதர் ஆய் போவதும் அங்கு அவருக்கு பணிவிடை செய்வது பற்றியும் சொல்கிறீர்கள் .//

அரசாங்கம் அந்த வேலைக்கு மாதம் ஒருலட்சம் சம்பளம் கொடுத்தால் 'இதெல்லாம் வேத காலத்திலேயே செய்திருக்கா' ன்னு சொல்லிக் கொண்டு வேலைக்குச் செல்ல ஆட்கள் ரெடியாகத்தான் இருக்கு.

Kesavan சொன்னது…

//சமபந்தி போஜனத்துக்கு இலை போடுகிறோம் வாருங்கள் என்பது போல் இதெல்லாம் வெளியே சொல்லி விளம்பரப்படுத்தி தான் செய்யனும் என்பது போன்ற உன் அப்பாவித்தனமான பதில் சிரிப்பை வரவழைக்குது. எதுக்கும் ஊருக்கு போனால் காதோடு காதாக கேட்டுப் பார்த்தால் சொல்லுவார்கள் என்று கருதுகிறேன் //

//சமபந்தி போஜனத்துக்கு இலை போடுகிறோம் வாருங்கள் என்பது போல் இதெல்லாம் வெளியே சொல்லி விளம்பரப்படுத்தி தான் செய்யனும் என்பது போன்ற உன் அப்பாவித்தனமான பதில் சிரிப்பை வரவழைக்குது. எதுக்கும் ஊருக்கு போனால் காதோடு காதாக கேட்டுப் பார்த்தால் சொல்லுவார்கள் என்று கருதுகிறேன் //

ஓஹோ . நீங்கள் அப்படிதான் அவர் எப்படி மலம் கழிக்கிறார் என்று காதோடு காது கொடுத்து செய்தியை வாங்கினீங்க என்று நான் கருதுகிறேன் .

கோவி.கண்ணன் சொன்னது…

//ஓஹோ . நீங்கள் அப்படிதான் அவர் எப்படி மலம் கழிக்கிறார் என்று காதோடு காது கொடுத்து செய்தியை வாங்கினீங்க என்று நான் கருதுகிறேன் .//

தம்பி,

நான் தான் தவறாக சொல்கிறேன் என்று நிருபனம் செய்ய அடிக்கடி காஞ்சி செல்லும் நீ ஏன் ஒரு எட்டு சென்று கேட்டு வந்து உண்மையைச் சொல்லக் கூடாது, உண்மையை கண்டுபிடித்துச் சொன்னால் அதையும் நான் பதிவில் போடுவேன்.

Kesavan சொன்னது…

//தம்பி,
நான் தான் தவறாக சொல்கிறேன் என்று நிருபனம் செய்ய அடிக்கடி காஞ்சி செல்லும் நீ ஏன் ஒரு எட்டு சென்று கேட்டு வந்து உண்மையைச் சொல்லக் கூடாது, உண்மையை கண்டுபிடித்துச் சொன்னால் அதையும் நான் பதிவில் போடுவேன். //

இது என் வேலை அல்ல . உங்கள் செய்தி தவறானது . நீங்கள் தவறாக செய்தியை போட்டு விட்டு அது உண்மையா இல்லய என்று அதற்கு நாங்கள் ஆராய்ச்சி பண்ண வேண்டுமா . ஆமா மத்த சாமியார் எப்படி போவாங்கன்னு உங்களுக்கு செய்தி வரலையா. சங்கராசார் பத்தி மட்டும் தான் வந்ததா. அத பத்தியும் எழுதினா நாட்டுக்கு ரொம்ப நல்லதா இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

//தம்பி,
நான் தான் தவறாக சொல்கிறேன் என்று நிருபனம் செய்ய அடிக்கடி காஞ்சி செல்லும் நீ ஏன் ஒரு எட்டு சென்று கேட்டு வந்து உண்மையைச் சொல்லக் கூடாது, உண்மையை கண்டுபிடித்துச் சொன்னால் அதையும் நான் பதிவில் போடுவேன். //

இது என் வேலை அல்ல . உங்கள் செய்தி தவறானது . நீங்கள் தவறாக செய்தியை போட்டு விட்டு அது உண்மையா இல்லய என்று அதற்கு நாங்கள் ஆராய்ச்சி பண்ண வேண்டுமா . ஆமா மத்த சாமியார் எப்படி போவாங்கன்னு உங்களுக்கு செய்தி வரலையா. சங்கராசார் பத்தி மட்டும் தான் வந்ததா. அத பத்தியும் எழுதினா நாட்டுக்கு ரொம்ப நல்லதா இருக்கும்//

தம்பி, பெரியவா உள்ளே சென்றிருந்த போது நக்கீரினல் வெளிவந்து நாறிய தகவல் தான் இது, மறுக்கும் மற்றும் ஆர்வம் உள்ள நீ தான் இது பற்றிய உண்மை தெரிந்து கொள்ள வேண்டும். நெல்லிக் குப்பத்தை சேர்ந்த ஒருவர் பெயர் கிருஷ்ண மூர்த்தி என்று நினைக்கிறேன் அவர் தான் ஆஸ்தான இலை போடுபவராம். எனக்கு இன்னும் பலர் இருப்பார்கள் என்றே தெரிகிறது. தயவு செய்து தகவல் அறிந்து வந்த தெளியப்படுத்தவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

//தம்பி,
நான் தான் தவறாக சொல்கிறேன் என்று நிருபனம் செய்ய அடிக்கடி காஞ்சி செல்லும் நீ ஏன் ஒரு எட்டு சென்று கேட்டு வந்து உண்மையைச் சொல்லக் கூடாது, உண்மையை கண்டுபிடித்துச் சொன்னால் அதையும் நான் பதிவில் போடுவேன். //

இது என் வேலை அல்ல . உங்கள் செய்தி தவறானது . நீங்கள் தவறாக செய்தியை போட்டு விட்டு அது உண்மையா இல்லய என்று அதற்கு நாங்கள் ஆராய்ச்சி பண்ண வேண்டுமா . ஆமா மத்த சாமியார் எப்படி போவாங்கன்னு உங்களுக்கு செய்தி வரலையா. சங்கராசார் பத்தி மட்டும் தான் வந்ததா. அத பத்தியும் எழுதினா நாட்டுக்கு ரொம்ப நல்லதா இருக்கும்//

தம்பி, பெரியவா உள்ளே சென்றிருந்த போது நக்கீரினல் வெளிவந்து நாறிய தகவல் தான் இது, மறுக்கும் மற்றும் ஆர்வம் உள்ள நீ தான் இது பற்றிய உண்மை தெரிந்து கொள்ள வேண்டும். நெல்லிக் குப்பத்தை சேர்ந்த ஒருவர் பெயர் கிருஷ்ண மூர்த்தி என்று நினைக்கிறேன் அவர் தான் ஆஸ்தான இலை போடுபவராம். எனக்கு இன்னும் பலர் இருப்பார்கள் என்றே தெரிகிறது. தயவு செய்து தகவல் அறிந்து வந்த தெளியப்படுத்தவும்.

Barari சொன்னது…

காஞ்சி சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது அவர் மலம் கழிக்க வளைஇலை கொடுத்ததாக பத்திரிக்கையில் செய்தியாக வந்து இருந்தது.அதுவும் ஜைல் அதிகாறியே பேட்டி கொடுத்து இருந்தார்.

Kesavan சொன்னது…

//தம்பி, பெரியவா உள்ளே சென்றிருந்த போது நக்கீரினல் வெளிவந்து நாறிய தகவல் தான் இது, மறுக்கும் மற்றும் ஆர்வம் உள்ள நீ தான் இது பற்றிய உண்மை தெரிந்து கொள்ள வேண்டும். நெல்லிக் குப்பத்தை சேர்ந்த ஒருவர் பெயர் கிருஷ்ண மூர்த்தி என்று நினைக்கிறேன் அவர் தான் ஆஸ்தான இலை போடுபவராம். எனக்கு இன்னும் பலர் இருப்பார்கள் என்றே தெரிகிறது. தயவு செய்து தகவல் அறிந்து வந்த தெளியப்படுத்தவும்.//

ஹா ஹா ஹா . நீங்களே ஒத்துகொள்ளாத பத்திரிகையில் வந்த செய்தியை ஆதாரமாக காட்டுகிறீர்கள். நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிகை அதில் வரும் செய்திகள் முழுவதும் உண்மை இல்லை என்று எல்லாருக்கும் தெரியும் .

Kesavan சொன்னது…

//காஞ்சி சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது அவர் மலம் கழிக்க வளைஇலை கொடுத்ததாக பத்திரிக்கையில் செய்தியாக வந்து இருந்தது.அதுவும் ஜைல் அதிகாறியே பேட்டி கொடுத்து இருந்தார்.//

ஒரு கைதி கேட்டு கொடுத்தார்களா . காமெடியா இருக்கு ? இதுலேந்த அது ஒரு பொய்யான தகவல் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா . ஒரு கைதி என்ன வனும்னாலும் கொடுதுடுவான்களா ? அவர ஜெயில்ல போடணும்னு தீர்மானம் பண்ணி போட்டவங்க அவர் கேக்கறது எல்லாம் கொடுகராங்கலம்

முகமூடி சொன்னது…

// நக்கீரினல் வெளிவந்து நாறிய தகவல் தான் இது, மறுக்கும் மற்றும் ஆர்வம் உள்ள நீ தான் இது பற்றிய உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் //

நக்கீரன் அக்மார்க் உண்மை மட்டுமே எழுதும் பத்திரிக்கை, அதில் எழுதப்படும் எதையும் அப்படியே நம்பி அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொள்வதற்கு பெயர்தான் பகுத்தறிவா? வாழ்க! வளர்க!!

பி.கு: நான் இங்கு பேசுவது உங்களுக்கு ”தேவையானதை” மட்டும் கேள்வி கேட்காமல் உண்மை என்று நம்ப விழையும் உங்களின் புத்தியை பற்றி மட்டுமே.. எனக்கும் எதாவது முலாம் பூசிவிட்டுவிட்டு ”கலக்கிட்டோம்ல” என்று சுய இன்பம் அடைய முயற்சிக்கவேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// முகமூடி said...

// நக்கீரினல் வெளிவந்து நாறிய தகவல் தான் இது, மறுக்கும் மற்றும் ஆர்வம் உள்ள நீ தான் இது பற்றிய உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் //

நக்கீரன் அக்மார்க் உண்மை மட்டுமே எழுதும் பத்திரிக்கை, அதில் எழுதப்படும் எதையும் அப்படியே நம்பி அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொள்வதற்கு பெயர்தான் பகுத்தறிவா? வாழ்க! வளர்க!!

பி.கு: நான் இங்கு பேசுவது உங்களுக்கு ”தேவையானதை” மட்டும் கேள்வி கேட்காமல் உண்மை என்று நம்ப விழையும் உங்களின் புத்தியை பற்றி மட்டுமே.. எனக்கும் எதாவது முலாம் பூசிவிட்டுவிட்டு ”கலக்கிட்டோம்ல” என்று சுய இன்பம் அடைய முயற்சிக்கவேண்டாம்.//

வாங்க முகமூடி அண்ணே. பெரியவா சின்னவா என்றால் மட்டும் வந்துடுறியள். மற்ற பதிவுகளுக்கும் உங்கள் அருளுரை கிட்ட வேண்டும் என்று அடியேனின் அவா.

நக்கீரன் உண்மையை எழுதுகிறானா பொய் எழுதுகிறானா என்பதை சம்பந்தப் பட்டவா 'என் புகழுக்கு களங்கம்' என்று கலங்கி கேஸ் போட்டு (அந்த கேஸ் இல்லை) மான நட்ட ஈடு கேட்டு கோடிகளை ரொப்பிக் கொள்ளலாமே. அவாளே சும்மாதானே இருக்கா. நீங்க ஏன் குதிக்கிறேள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஹா ஹா ஹா . நீங்களே ஒத்துகொள்ளாத பத்திரிகையில் வந்த செய்தியை ஆதாரமாக காட்டுகிறீர்கள். நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிகை அதில் வரும் செய்திகள் முழுவதும் உண்மை இல்லை என்று எல்லாருக்கும் தெரியும் .

5:55 PM, March 31, 2010//

ஆமாம் நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கை. சோ இராமசாமியின் துக்ளக் பச்சை பத்திரிக்கை. துரித ஸ்கலிதம் உள்ளவாளுக்கு உள் அட்டைப் படத்தில் வெளம்பரம் கொடுத்து சேவை செய்றாள். தினமலர் 1 ஆம் நம்பர் தேசபக்தி, துணுக்கு மூட்டை என்ற பெயரில் நடிகையின் உள்ளாடையில் எத்தனை கொக்கிகள் உட்பட எழுதும்.

வாங்க சர்டிபிகேட் அத்தாரிட்டி நம்மிடம் தான் இருக்கு எல்லோருக்கும் கொடுப்போம்

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

//காஞ்சி சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது அவர் மலம் கழிக்க வளைஇலை கொடுத்ததாக பத்திரிக்கையில் செய்தியாக வந்து இருந்தது.அதுவும் ஜைல் அதிகாறியே பேட்டி கொடுத்து இருந்தார்.//

ஒரு கைதி கேட்டு கொடுத்தார்களா . காமெடியா இருக்கு ? இதுலேந்த அது ஒரு பொய்யான தகவல் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா . ஒரு கைதி என்ன வனும்னாலும் கொடுதுடுவான்களா ? அவர ஜெயில்ல போடணும்னு தீர்மானம் பண்ணி போட்டவங்க அவர் கேக்கறது எல்லாம் கொடுகராங்கலம்

6:00 PM, March 31, 2010//

என்னையா இது அடாவடியாக இருக்கே. செயிலுக்குள் கஞ்சாவும், சரக்கும் செல்லும்.. போகும் போது அரை அடி வாழை இலை போகாதா என்ன ?

பெரியவா செயிலுக்குள்ளே பூசை செய்தா என்பதாவது உனக்கு தெரியுமா ? அதுக்கும் போலிஸ்காரவா தான் சாமான் வாங்கிக் கொடுத்திருக்கா.

பெயரில்லா சொன்னது…

//
இதையும் விடக் கொடுமை காஞ்சிப் பெரியவாள்கள் திறந்த வெளியில் தான் ஆய் போவார்களாம், அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம்.
//

//இந்த மேட்டர் புதுசா இருக்கே.. அப்போ வாழையிலையில சாப்பாடு போட்டா அவருக்கு அது “ஆயி” மாதிரி தெரியுமா? இல்லியா ?.. :))//

ஒரு வேளை எல்லாவற்றையும் மாற்றி செய்வாரோஎன்னவோ... கழிவறையில் சாப்பிடுவாராக்கும்.. சாமியாச்சே :)

Kesavan சொன்னது…

//ஹா ஹா ஹா . நீங்களே ஒத்துகொள்ளாத பத்திரிகையில் வந்த செய்தியை ஆதாரமாக காட்டுகிறீர்கள். நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிகை அதில் வரும் செய்திகள் முழுவதும் உண்மை இல்லை என்று எல்லாருக்கும் தெரியும் .

5:55 PM, March 31, 2010//

ஆமாம் நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கை. சோ இராமசாமியின் துக்ளக் பச்சை பத்திரிக்கை. துரித ஸ்கலிதம் உள்ளவாளுக்கு உள் அட்டைப் படத்தில் வெளம்பரம் கொடுத்து சேவை செய்றாள். தினமலர் 1 ஆம் நம்பர் தேசபக்தி, துணுக்கு மூட்டை என்ற பெயரில் நடிகையின் உள்ளாடையில் எத்தனை கொக்கிகள் உட்பட எழுதும்.

வாங்க சர்டிபிகேட் அத்தாரிட்டி நம்மிடம் தான் இருக்கு எல்லோருக்கும் கொடுப்போம் //



என்னமோ நான் மத்த பத்திரிகையை தூக்கி பிடிச்சிண்டு பேசற மாதிரி சொல்றீங்க.நீங்களே ஒத்துக்காத பத்திரிகைல வந்த செய்தியை ஆதரம காமிக்கறீங்களே அது தான் காமெடி யா இருக்கு .

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னமோ நான் மத்த பத்திரிகையை தூக்கி பிடிச்சிண்டு பேசற மாதிரி சொல்றீங்க.நீங்களே ஒத்துக்காத பத்திரிகைல வந்த செய்தியை ஆதரம காமிக்கறீங்களே அது தான் காமெடி யா இருக்கு .

6:18 PM, March 31, 2010//

முகமூடி அண்ணனுக்கு பதில் சொல்லி இருக்கேன் பாரு தம்பி,

பத்திரிக்கை செய்தி தவறு என்றால் பெரியவா அவதூறுவழக்கு போடனும், அவரால முடியவில்லை என்றால் ஆதங்கப்படும் நீ அதை அவருக்காகப் போடனும், இரண்டுமே இல்லாமல் நான் தான் பத்திரிக்கை பெயர் உட்பட எழுதி இருக்கிறேனே. மறுபடியும் என்கிட்ட வந்த தகவல் பொய் என்றால் என்ன பொருள். பொய்யாகவே இருக்கட்டும் என்று நினைப்பது உன் உரிமை அதை நான் தடுக்க வில்லையே.

Kesavan சொன்னது…

//என்னையா இது அடாவடியாக இருக்கே. செயிலுக்குள் கஞ்சாவும், சரக்கும் செல்லும்.. போகும் போது அரை அடி வாழை இலை போகாதா என்ன ?

பெரியவா செயிலுக்குள்ளே பூசை செய்தா என்பதாவது உனக்கு தெரியுமா ? அதுக்கும் போலிஸ்காரவா தான் சாமான் வாங்கிக் கொடுத்திருக்கா.//

//என்னையா இது அடாவடியாக இருக்கே. செயிலுக்குள் கஞ்சாவும், சரக்கும் செல்லும்.. போகும் போது அரை அடி வாழை இலை போகாதா என்ன ?

பெரியவா செயிலுக்குள்ளே பூசை செய்தா என்பதாவது உனக்கு தெரியுமா ? அதுக்கும் போலிஸ்காரவா தான் சாமான் வாங்கிக் கொடுத்திருக்கா.//



இதற்கு நான் பதில் சொல்ல தேவை இல்லை . ஜெயில்ல எது கேட்ட கிடைக்கும் என்று உங்களுக்கே தெரியும் .

பெயரில்லா சொன்னது…

//தம்பி, பெரியவா உள்ளே சென்றிருந்த போது நக்கீரினல் வெளிவந்து நாறிய தகவல் தான் இது,
//

இந்த தகவல் நக்கீரனிலும் வந்ததா தெரியாது, ஆனால் ஜு.விகடனில் வந்தது.

பெயரில்லா சொன்னது…

நல்ல வேளை காலை மட்டும் கழுவச்சொல்றானுங்கள், அதற்கு மேலே வேற எதையாவது சொல்லாம விட்டான்களே!, அதற்கும் நம்ம ஆளுங்க தட்சணை கொடுத்து கழுவி விட தயாரா இருப்பானுங்க!

Kesavan சொன்னது…

//பத்திரிக்கை செய்தி தவறு என்றால் பெரியவா அவதூறுவழக்கு போடனும், //



நான் தன ஏற்கனவே சொல்லிவிட்டேனே . நான் சங்கராசாரியின் அபிமானி அல்ல என்று . அப்பறம் அவர் கேஸ் போட்ட எனக்கு என்ன போடாட்ட எனாகு என்ன . நீங்கள் சொன்னது நம்பத்தகுந்த பத்திரிகையில் வந்த செய்தி அல்ல . அவ்வளவு தான் . சாக்கடையில் கல் எறிந்தால் நம் துணி தான் அழுக்கு ஆகும் . இதே மாதிரி ஆயிரம் பேர் எழுதுவான் . எல்லார் மேலயும் கேஸ் போட்டுண்டே இருந்த அவ்வளவு தான் .

முகமூடி சொன்னது…

// எனக்கும் எதாவது முலாம் பூசிவிட்டுவிட்டு ”கலக்கிட்டோம்ல” என்று சுய இன்பம் அடைய முயற்சிக்கவேண்டாம் //னு தெளிவாத்தானே சொல்லியிருந்தேன், அப்புறமும் ஏன் // பெரியவா சின்னவா என்றால் மட்டும் வந்துடுறியள். //னு இந்த சின்ன புத்தி..

பத்திரிக்கை விக்கணும்னா கோபால் பொண்டாட்டி தவிர மத்த எல்லா பொம்பளைய பத்தியும் கீழ்த்தரமா கிசுகிசு எழுதுவான் நக்கீரன்ல. அத மறுத்து சம்பந்தப்பட்டவர்கள் கேஸ் போடலைன்னா உடனே “விஷயம் தெரியுமா, இந்த வாரம் இந்த நடிகை தேவடியான்னு நக்கீரன்லயே சொல்லிட்டான்” என்று வெட்டி ”உண்மை” புரளும் லெவல்லயே இருந்துகிட்டு என்னத்துக்கு அப்பப்போ பகுத்துமயிரு வியாபாரம் வேற.

சாமியர் பற்றிய உங்க கருத்து உடன்படக்கூடியதுதான் என்றாலும் அத கால் - ஐ மீன் ஜஸ்ட் லெக் - கழுவறவனோட நம்பிக்கையா பார்க்ககூடாது. அதாவது செத்து போன அப்பாவோட லெகசிய கேர் ஓவர் பண்ணும் நம்பிக்கையில சில குடும்ப உறுப்பினர்கள், ஏன் பகுத்தறிவு வாழைப்பழமே காவடி சுத்தும்போது என்னவோ ஒரு எழவு நம்பிக்கைக்காக சில சில்லுண்டிகள் எவனவன் காலயோ கழுவி அதத்தான் புண்ணியம்னு தேடுறாங்கன்னு நினைச்சிக்க வேண்டியதுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பத்திரிக்கை விக்கணும்னா கோபால் பொண்டாட்டி தவிர மத்த எல்லா பொம்பளைய பத்தியும் கீழ்த்தரமா கிசுகிசு எழுதுவான் நக்கீரன்ல. அத மறுத்து சம்பந்தப்பட்டவர்கள் கேஸ் போடலைன்னா உடனே “விஷயம் தெரியுமா, இந்த வாரம் இந்த நடிகை தேவடியான்னு நக்கீரன்லயே சொல்லிட்டான்” என்று வெட்டி ”உண்மை” புரளும் லெவல்லயே இருந்துகிட்டு என்னத்துக்கு அப்பப்போ பகுத்துமயிரு வியாபாரம் வேற.//

அண்ணே...நடிகைகளைப் பற்றி நீங்கள் மேற்சொன்ன தகவலெல்லாம் குறிப்பா இந்த இந்த நடிகைகள் விபச்சாரிகள் என்று படத்துடன் போட்ட தகவல்களை நான் தினமலரில் தான்னே படித்திருக்கிறேன். நக்கீரன் ஆன்லைன் எடிசனுக்கு விண்ணப்பிக்கவில்லை. நீங்க நக்கீரனின் தீவிர வாசகர் போலும்

//சாமியர் பற்றிய உங்க கருத்து உடன்படக்கூடியதுதான் என்றாலும் அத கால் - ஐ மீன் ஜஸ்ட் லெக் - கழுவறவனோட நம்பிக்கையா பார்க்ககூடாது. அதாவது செத்து போன அப்பாவோட லெகசிய கேர் ஓவர் பண்ணும் நம்பிக்கையில சில குடும்ப உறுப்பினர்கள், ஏன் பகுத்தறிவு வாழைப்பழமே காவடி சுத்தும்போது என்னவோ ஒரு எழவு நம்பிக்கைக்காக சில சில்லுண்டிகள் எவனவன் காலயோ கழுவி அதத்தான் புண்ணியம்னு தேடுறாங்கன்னு நினைச்சிக்க வேண்டியதுதான்.//

:) அப்படியே ஒரு பெரியார்தாசன் போன்ற பகுத்தறிவு வாழைப்பழம் மதச் சாக்கடையில் விழுந்தால் மட்டும்... அது என்ன மதமாக இருந்தாலும் நீங்க வரவேற்று கட் அவுட் வைக்கப் போறிங்களா என்ன ?

Kesavan சொன்னது…

கோவியரே நாளைக்கே கோர்ட்டுல பெரியவா மேல தப்பு இல்லேன்னு தீர்ப்பு சொல்லிட்டா நீங்க ஒத்து கொள்வீர்களா ? காசு கொடுத்து ஜெயிசிடாங்கன்னு சொல்ல மாடீங்க . அந்த மாதிரி கோர்ட்டுல கேஸ் போடா சொல்றீங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//// எனக்கும் எதாவது முலாம் பூசிவிட்டுவிட்டு ”கலக்கிட்டோம்ல” என்று சுய இன்பம் அடைய முயற்சிக்கவேண்டாம் //னு தெளிவாத்தானே சொல்லியிருந்தேன், அப்புறமும் ஏன் // பெரியவா சின்னவா என்றால் மட்டும் வந்துடுறியள். //னு இந்த சின்ன புத்தி..//

நீங்கள் பிரபல / பிராபல மற்றும் மூத்த பதிவர் என்பதால் எனக்கு சொல்லி இருக்கத் தேவை இல்லை என்பதே என் கருத்து, உங்களை யாரு டிஸ்கி போட்டு பின்னூட்டம் போடச் சொன்னது. நான் பெற்ற இன்பம் பெருக வையகம் என்பது சுய இன்பத்திற்கு பொருந்தாதோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan


கோவியரே நாளைக்கே கோர்ட்டுல பெரியவா மேல தப்பு இல்லேன்னு தீர்ப்பு சொல்லிட்டா நீங்க ஒத்து கொள்வீர்களா ? காசு கொடுத்து ஜெயிசிடாங்கன்னு சொல்ல மாடீங்க . அந்த மாதிரி கோர்ட்டுல கேஸ் போடா சொல்றீங்களா ?
//

தம்பி கேசவன்,

சாட்சி இல்லாமல் நீ ஒரு கொலை செய்தால் நீ குற்றவாளி இல்லை என்பதே நீதிமன்ற தீர்பாக இருக்கும். பெரியவா குற்றவாளியா...ப்ளாஸ்டிக் வாளியா என்று நான் சொல்லவரவில்லை. இங்கு வாழை இலை மேட்டர் தான் ஓடுது

Kesavan சொன்னது…

//சாட்சி இல்லாமல் நீ ஒரு கொலை செய்தால் நீ குற்றவாளி இல்லை என்பதே நீதிமன்ற தீர்பாக இருக்கும். பெரியவா குற்றவாளியா...ப்ளாஸ்டிக் வாளியா என்று நான் சொல்லவரவில்லை. இங்கு வாழை இலை மேட்டர் தான் ஓடுது //

அதை தான் நானும் சொல்றேன் . அதை விட்டுட்டு நீங்க தான் அவர் கேஸ் போட்டு வர வேண்டியது தானேன்னு நீங்க தானே சொன்னேங்க. இப்ப மேட்டர் மாறுதுன்னு சொன்ன எப்படி .
( பத்திரிக்கை செய்தி தவறு என்றால் பெரியவா அவதூறுவழக்கு போடனும், அவரால முடியவில்லை என்றால் ஆதங்கப்படும் நீ அதை அவருக்காகப் போடனும், இரண்டுமே இல்லாமல் நான் தான் பத்திரிக்கை பெயர் உட்பட எழுதி இருக்கிறேனே.)

இப்ப இருக்குற பத்திரிகைல என்ன வேணும்னாலும் எழுத வேண்டியது . அதை நம்பி நாலு பேரு அவன திட்ட வேண்டியதுதான் . ஆமா முதல்ல நான் கேட்டதுக்கு பதிலா காணும் . பரப்பான சாமியார் போறதா மட்டும் எழுதறீங்க . மத்த சாமியார் எப்படி போறன்னு தெரியலையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்ப இருக்குற பத்திரிகைல என்ன வேணும்னாலும் எழுத வேண்டியது . அதை நம்பி நாலு பேரு அவன திட்ட வேண்டியதுதான் . ஆமா முதல்ல நான் கேட்டதுக்கு பதிலா காணும் . பரப்பான சாமியார் போறதா மட்டும் எழுதறீங்க . மத்த சாமியார் எப்படி போறன்னு தெரியலையா ?//

உங்க தெருவில் வந்து உங்க தெரு சாக்கடை ஒரே நாற்றம் என்றால், ஐயா உங்க தெரு இதைவிட நாற்றம் என்று சொல்லமாட்டியா ?

மத்த சாமியார்களை கண்டிக்கும் முன் நம்ம மதத்து போலி பிரம்மச்சாரி சாமியார்களுக்கு காயடிக்கனும் இது தான் என் நிலைப்பாடு

ஆளவந்தான் சொன்னது…

//
மத்த சாமியார்களை கண்டிக்கும் முன் நம்ம மதத்து போலி பிரம்மச்சாரி சாமியார்களுக்கு காயடிக்கனும் இது தான் என் நிலைப்பாடு
//
ஏன் மத்த மதததை பேசினா நம்மள காயடிச்சுடுவாங்களா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

////
மத்த சாமியார்களை கண்டிக்கும் முன் நம்ம மதத்து போலி பிரம்மச்சாரி சாமியார்களுக்கு காயடிக்கனும் இது தான் என் நிலைப்பாடு
//
ஏன் மத்த மதததை பேசினா நம்மள காயடிச்சுடுவாங்களா? :)//

நமக்கு காயடிக்கிறார்களோ இல்லையோ நம்ம சாமியார்களுக்கு அவர்களே வந்து காயடிப்பார்கள்.

Kesavan சொன்னது…

//மத்த சாமியார்களை கண்டிக்கும் முன் நம்ம மதத்து போலி பிரம்மச்சாரி சாமியார்களுக்கு காயடிக்கனும் இது தான் என் நிலைப்பாடு//

உங்க ப்ளாக்ல மத்த மத்தது சாமியாரை பத்தியா எழுதினீங்க . நான் மதத்தை பத்தி பேசலை. இங்கு வாழை இலை மேட்டர் தான் ஓடுது. செய்தியே தப்புன்னு சொல்றேன் . ஆனா அதை விட்டுட்டு அவர் செய்தர்னு சொல்லி பேசிண்டு இருக்கீங்க . மத்ததுக்கு எல்லாம் ஆதாரம் எங்கேன்னு கேக்கறீங்க இல்ல . இந்த மட்டேருக்கு சரியான ஆதாரத்தை எடுத்துண்டு வாங்க நான் பதில் சொல்றேன் . அதை விட்டுட்டு அந்த ப்ளாக் ல சொன்னான் இந்த பத்திரிகைல சொன்னன்னு சொல்றீங்க . அப்பறம் பொய் எந்த சாமியாருக்கு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பண்ணிகொங்க . எனக்கு அதை பத்தி கவலை இல்லை . தப்பு தப்ப செய்தியை பத்து தடவை போட்ட நிஜம் ஆயிடுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்க ப்ளாக்ல மத்த மத்தது சாமியாரை பத்தியா எழுதினீங்க . நான் மதத்தை பத்தி பேசலை. இங்கு வாழை இலை மேட்டர் தான் ஓடுது. செய்தியே தப்புன்னு சொல்றேன் . ஆனா அதை விட்டுட்டு அவர் செய்தர்னு சொல்லி பேசிண்டு இருக்கீங்க . மத்ததுக்கு எல்லாம் ஆதாரம் எங்கேன்னு கேக்கறீங்க இல்ல . இந்த மட்டேருக்கு சரியான ஆதாரத்தை எடுத்துண்டு வாங்க நான் பதில் சொல்றேன் . அதை விட்டுட்டு அந்த ப்ளாக் ல சொன்னான் இந்த பத்திரிகைல சொன்னன்னு சொல்றீங்க . அப்பறம் பொய் எந்த சாமியாருக்கு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பண்ணிகொங்க . எனக்கு அதை பத்தி கவலை இல்லை . தப்பு தப்ப செய்தியை பத்து தடவை போட்ட நிஜம் ஆயிடுமா ?

1:39 PM, April 01, 2010
//

தம்பி,

நீ இவ்வளவு ஆர்வமாக இருப்பதைப் பார்க்கும் போது அடுத்த முறை ஊருக்கும் போகும் போது இலை மேட்டரைக் கேட்டுவருவாய் என நினைக்கிறேன். புகைப்படம் கிடைத்தால் நல்லது கருமத்தை பதிவிலும் போடலாம்.

//செய்தியே தப்புன்னு சொல்றேன் . //

தப்பா சரியான்ன்னு பெரியவா போகும் போது பக்கதில் இருக்கிறவாளுக்கு தான் அதெல்லாம் பற்றி தெரியும்.

நான் பத்திரிக்கை தகவலைத்தான் எழுதினேன்

ஆளவந்தான் சொன்னது…

ஏனுங்க கேசவன்.. அவரு என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றாரு.. அவரை ஏன் இந்த பாடு படுத்துறீங்க.. இதெல்லாம் வன்கொடுமைங்க :)

எதோ தெரியாம ஒரு விசயத்தை சொல்லிபுட்டாரு.. நீங்களும் ஆணி அடிச்ச மாதிரி, உங்க கேள்விய ஸ்ட்ராங்க கேட்டு புட்டீங்க.. அவரும் சுத்துனாரு.. சுத்துனாரு.. சுத்திகிட்டே இருந்தாரு.. அப்புறம் சுழிக்கே வந்து நம்ம இலையை பத்தி தான் பேசுறோம்னு ஆரம்பிச்சாரு, விட்ட இடத்துலேர்ந்து....

இது எனக்கென்னவே “மணிக்கூண்டு” காமெடி மாதிரி தான் தெரியுது... வாங்க சார் போய் புள்ள குட்டிகள படிக்க வைப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
ஏனுங்க கேசவன்.. அவரு என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றாரு.. அவரை ஏன் இந்த பாடு படுத்துறீங்க.. இதெல்லாம் வன்கொடுமைங்க :)

//

நோ டென்சன்,

கேசவன் எனக்கு தம்பி மாதிரி......15 ஆண்டு பழக்கம்.

ஆளவந்தான் சொன்னது…

//
நோ டென்சன்,

கேசவன் எனக்கு தம்பி மாதிரி......15 ஆண்டு பழக்கம்.
//

நான் கூட அவரு “போலி” கோவியோ நெனச்சுட்டேன் :)

Kesavan சொன்னது…

//தம்பி,

நீ இவ்வளவு ஆர்வமாக இருப்பதைப் பார்க்கும் போது அடுத்த முறை ஊருக்கும் போகும் போது இலை மேட்டரைக் கேட்டுவருவாய் என நினைக்கிறேன். புகைப்படம் கிடைத்தால் நல்லது கருமத்தை பதிவிலும் போடலாம். //

தவறான செய்தியை புலனாய்வு செய்வதற்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை . அதை உண்மைன்னு சொல்றவங்க ( உங்க பாஷை படி இல்லாததை இருக்குனு சொல்றவங்க தான் ) ஆதாரத்தை காமிக்கணும் . எனக்கு அவசியமில்லை



//தப்பா சரியான்ன்னு பெரியவா போகும் போது பக்கதில் இருக்கிறவாளுக்கு தான் அதெல்லாம் பற்றி தெரியும்.

நான் பத்திரிக்கை தகவலைத்தான் எழுதினேன் //

அதுக்கும் நீங்க சொல்ற பத்திரிகையையே கமேரவ எடுத்துண்டு போக சொல்லுங்க . அதை ஒரு பெரிய தொலைகாட்சியிலும் போட சொல்லுங்க . அதை பாக்கறதுக்கும் அதை உண்மைன்னு நம்பி செய்தியை போடறதுக்கும் ஒரு கூட்டமே இருக்கு . :)

Kesavan சொன்னது…

//ஆளவந்தான் said...
ஏனுங்க கேசவன்.. அவரு என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றாரு.. அவரை ஏன் இந்த பாடு படுத்துறீங்க.. இதெல்லாம் வன்கொடுமைங்க :)

எதோ தெரியாம ஒரு விசயத்தை சொல்லிபுட்டாரு.. நீங்களும் ஆணி அடிச்ச மாதிரி, உங்க கேள்விய ஸ்ட்ராங்க கேட்டு புட்டீங்க.. அவரும் சுத்துனாரு.. சுத்துனாரு.. சுத்திகிட்டே இருந்தாரு.. அப்புறம் சுழிக்கே வந்து நம்ம இலையை பத்தி தான் பேசுறோம்னு ஆரம்பிச்சாரு, விட்ட இடத்துலேர்ந்து.... //



ஏனுங்க நம்ம கோவியரை பத்தி தெரியாத . நாம ஒரு மேட்டரை பத்தி எழுதின அவர் என்னைக்குமே நேர பதில் சொல்ல மாட்டாரு . நம்மளை முதல்ல குழப்பிடுவாறு . நாமலும் எதோ பைத்தியக்காரன் மாதிரி அவரு கேக்கற கேள்விக்கு எல்லாம் பதிலை சொல்லிண்டு இருப்போம். அப்பறம் சொல்வாரு மேட்டரை விட்டுட்டு வேற எதோ பேசற நீ .



பேசாமல் இவருக்கு பதிவு உலகில் குழப்பவாதி என்று ஒரு பட்டம் கொடுக்கலாம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

தம்பி கேசவா,

//2004 நவம்பர் 17 நாளிட்ட இதழில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு..

காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, வயிற்றைக் கலக்குகிறது எனத் தெரிவித்த ஜெயேந்திரருக்கு டாய்லெட்டை அடையாளம் காட்டியிருக்கிறார்கள் போலீசார். நான் வெட்டவெளியில் போவதுதான் வழக்கம் என ஜெயேந்திரர் சொல்ல, அவர் பின்னாடியே ஒரு வாழை இலையை எடுத்துக் கொண்டு நெய்வேலி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்றார். அவர் வாழை இலையைத் தரையிலே விரிக்க, அதன் மேல் காலைக்கடன் கழித்தார் ஜெயேந்திரர். அதன் பின் இலையைச் சுருட்டி குப்பைக் கூடையில் போட்டார் கிருஷ்ணமூர்த்தி.
//

பெரியவா எந்த காவல் நிலையத்தில் 'இருந்தார்' என்று அறிந்து அவர்களிடம் கேட்டால் அவர்கள் உண்மையா பொய்யான்னு சொல்லுவாங்க. உண்மை என்றால் நீங்கள் இலை வாங்கிக் கொடுத்து உபயம் செய்வது உங்கள் விருப்பம்.

இதுக்கு முற்றுப் புள்ளி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்