பின்பற்றுபவர்கள்

19 மார்ச், 2010

எம் எப் ஹுசைன் பாகிஸ்தானுக்கு போய் இருக்கலாம் !

தென்னிந்தியாவை விட மத உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருப்பது என்றுமே வட இந்தியாதான். மதக்கலவரங்களுக்கு வட இந்தியா பெயர் பெற்றது. அதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு, இஸ்லாமிய படையெடுப்புகளால் மிகுதியாக பாதிப்புக்கு உள்ளாகியதும், வட இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் என மத அடிப்படைவாதத்தால் பிரிந்து போனதும் வட இந்தியர்களின் எண்ணத்தில் என்றுமே வடுவாக இருப்பவை.

****

எம் எம் ஊசேனின் ஓவியங்கள் புகழ்பெற்றவை, ஒரு ஓவியக் கலைஞன் என்ற வகையில் அவரின் திறமைகள் போற்றப்பட வேண்டியவையே, எந்த ஒரு கலைஞனும் தனது திறமையை அரசியல் சமூக உள்நோக்கில் நுழைத்தால் அதன் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். ஒரு மத நம்பிக்கையாளன் இன்னொரு மத நம்பிக்கையாளனை மதரீதியாக தீண்டுவது என்றுமே சர்சைக்கு உரியது தான். காரணம் நம்பிக்கைகளை விமர்சனம் செய்வதை எந்த ஒரு சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, ஏனினெல் நம்பிக்கைகள் தான் அந்த சமூகத்தின் தனி அடையாளமாகவே இருக்கின்றன. எப் எம் உசேன் என்றோ சரஸ்வதியை இந்து வழிபாட்டு உருவங்களை வரைந்த காலகட்டத்தில் சர்சை ஏற்படவில்லை, ஆனால் அவர் ஹிட்லரை அவமானப்படுத்ததான் நிர்வாணமாக வரைந்தேன் என்று சொன்ன பிறகே சர்சைகள் வெடித்தது. ஆக உசேன் மனதில் எதை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைப்பு இருக்கிறதோ அதுவே நிர்வாண ஓவியமாக ஆகிறது என்பதை உளறிக் கொட்டிவிட்டார். அதன் பிறகே இந்துத்துவ வாதிகளால் அவரது ஓவியக்கூடம் தீக்கிரையாக்கப்பட்டதும், கொலை மிரட்டல் போன்ற சம்பவங்களும் நடைபெற்றுவிட்டன.

உசேனுக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்தது போல் தெரியவில்லை, இந்த கலவரங்களெல்லாம் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை, ஆனால் திடிரென்று உசேன் இந்தியாவை விட்டு வெளியேறுவதை 'இந்தியாவில் வாழ்வாதே கேள்விக்குரியது என்கிற ஒரு கட்டமைப்பை உலக நாடுகளுக்குச் சொல்லிச் செல்வது போல் இந்திய கடவுச் சீட்டை ஒப்படைத்துவிட்டு 'நான் இந்தியாவை இன்னமும் நேசிக்கிறேன்' என்று சொல்லுகிறார். வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிவதான மனவருத்தம் என்பது தவிர்த்து இந்தியாவை அவர் நேசிப்பது போல் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தியா என்பது ஒரு சிறிய நாடு இல்லை இங்கே பலமாநிலங்கள் இருக்கின்றன, மத உணர்வு குறைந்த மாநிலங்கள் உள்ளன, உசேன் இந்தியாவை நேசிப்பது உண்மையானால் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவில் எதோ ஒரு மாநிலத்தில் வாழ்ந்து வந்திருக்க முடியும், ஒரு முஸ்லிம் என்ற அடையாளத்திலும் இருக்கும் அவரை இஸ்லாமிய சமூக, அரசியல் அமைப்புகள் போதிய பாதுகாப்புகளுடன் தென்னிந்தியாவிலேயே தங்க வைத்திருக்க முடியும். கேரள மதானிக்கு இல்லாத பாதுகாப்பு இன்மையா ஊசேனுக்கு தென்னிந்தியாவில் இருந்துவிடப் போகிறது. எல்லா மதத்தைச் சார்ந்த மத உணர்வை தூண்டுபவர்களும், தலைமைகளும் பாதுகாப்பாக உலாவும் தென்னிந்திய நகரங்கள் ஒன்றில் உசேனால் இருந்துவிட முடியாதா ?

உசேன் மனநிலையை வைத்துப் பார்க்கும் போது வெறும் அச்சுறுத்தல்களை காரணமாக கருத முடியவில்லை, அதையும் தாண்டி இந்தியா ஒரு இந்துநாடு என்கிற அங்கீகாரம் அவரே கொடுத்து இருப்பார் போல, அதனால் வெறுத்துப் போய் இஸ்லாமிய நாடு ஒன்றிற்கு இடம் பெயர்ந்திருக்கிறார். இதை தஞ்சம் புகுதல் அல்லது நாடுகடந்து சென்ற மனநிலை என்று என்னால் கருத முடியவில்லை.

உசேனின் பிடிவாதம் அப்படி தான் நிர்வாணமாக வரைந்த இந்து வழிபாட்டு உருவங்களை அழிக்காததும், அதற்காக மன்னிப்பு கேட்காததும் தொடர்ந்த நிலையில் அவருடைய முடிவு அவரே விரும்பி எடுத்துக் கொண்ட ஒன்று தான்.

இவ்வளவு பிடிவாதம், ஆணவம் உள்ள ஒருவர் நல்ல கலைஞராக இருந்து யாருக்கு பயன், கலைஞர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது, அப்படியே பட்டாலும் ஒரு மதத்தின் சார்பில் இருந்து கொண்டு இன்னொரு மதத்தை அதில் பழிப்பு காட்டுவது சிக்கலில் தான் முடியும். முகமதுவை ஓவியமாக வரைந்துவிட்டார்கள் என்று டென்மார்க் செய்திபத்திரிக்கை மீதும், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவும், அதை மறுபதிவு செய்த தினமலர் இணைய தளத்தை அரபியாவில் தடை செய்தததற்கு முயற்சித்து வெற்றிபெற்ற இஸ்லாமிய அமைப்புகள் கார்டூன் குறித்து ஆவேசப்பட எவ்வளவு உரிமை இருக்கிறது என்று நம்புகிறோமோ அதே உரிமையை ஒரு இந்துவுக்கும் கொடுத்துப் பார்த்தால் உசேன் செய்தது கடைந்தெடுத்த அயோக்கிய தனம் என்பது வெட்ட வெளிச்சம்.

உசேன் இந்திய பாஸ்போர்டை ஒப்படைத்து கண்ணீர் விட்டார் என்ற தகவலைப் படித்ததும் மனது துணுக்குற்றது, ஊசேன் செயல் குறித்து நினைத்துப் பார்த்தால் அவர் மீது வெறுப்பாகத்தான் இருக்கிறது. அவருக்கு வட இந்தியா, தென்னிந்தியா பிடிக்கவில்லை என்றால் பழைய இந்தியாவின் பகுதியாக இருந்த பாகிஸ்தானுக்கு சென்றிருக்கலாம்

இந்த கட்டுரையில் சொல்ல வந்தது.....'ஒரு மத நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மற்றொரு மதநம்பிக்கையை தூண்டிப் பார்பது விஷ(ம)த்தனம்' ஒரு திறமைவாய்ந்த கலைஞனாக இருந்து கொண்டு தனது கலையை தனது தனிமனித உணர்ச்சிக்கு பலியாக்கி இருக்கிறார் உசேன். இதில் மதப்பற்றறவர்கள் வருத்தப்படுவதில் ஞாயமே இல்லை. மததிற்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள் என்கிற சொல்லுக்கும் உசேன் பொருத்தமானவராக நடந்து கொள்ளவில்லை, அவர் அனைத்து மதங்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்திருந்தால் நாம் அவர் குறித்து வருத்தப்பட ஞாயம் உண்டு, அவர் விரும்பியே வேறு நாடு சென்றதற்கு அவர் தஞ்சம் புகுந்தார், நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தார் என்ற கற்பிதத்தமாக நாம் வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது.

36 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிக நுணுக்கமான நடு நிலமையான கண்ணோட்டம்.

இதுவரை இந்த விடயத்தை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் ஆதரித்தோ எதிர்த்தோதான் செய்தார்கள்.

உங்கள் விமர்சனம் இதுவரை அவரை ஆதரித்து வந்த என் கண்ணோட்டத்தை மாற்றி விட்டது.

மிக்க நன்றி கோ.வி

நாமக்கல் சிபி சொன்னது…

நல்ல பதிவு!

Unknown சொன்னது…

மிக நுணுக்கமான நடு நிலமையான கண்ணோட்டம்.

இதுவரை இந்த விடயத்தை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் ஆதரித்தோ எதிர்த்தோதான் செய்தார்கள்.

உங்கள் விமர்சனம் இதுவரை அவரை ஆதரித்து வந்த என் கண்ணோட்டத்தை மாற்றி விட்டது.

மிக்க நன்றி கோ.வி

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//'ஒரு மத நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மற்றொரு மதநம்பிக்கையை தூண்டிப் பார்பது விஷ(ம)த்தனம்' //

கோவையார்!
மிக உண்மை! நல்ல அலசல்

DHANA சொன்னது…

நடு நிலை நச்!

பிரபாகர் சொன்னது…

//இவ்வளவு பிடிவாதம், ஆணவம் உள்ள ஒருவர் நல்ல கலைஞராக இருந்து யாருக்கு பயன், கலைஞர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது, அப்படியே பட்டாலும் ஒரு மதத்தின் சார்பில் இருந்து கொண்டு இன்னொரு மதத்தை அதில் பழிப்பு காட்டுவது சிக்கலில் தான் முடியும். //

அண்ணா,

இந்த பிரச்சினை பற்றி தீர்க்கமாய் ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். நூறு சதம் உடன் படுகிறேன்.... இந்தியாவில் தான் முஸ்லீம்கள் மிக பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...

கார்டூன் விஷயத்தில் அவர்கள் காட்டிய ஆவேசத்தை நன்றாய் சுட்டியிருக்கிறீர்கள்...

பிரபாகர்.

பெயரில்லா சொன்னது…

நிஜத்தை, நேர்மையாக சொல்லி இருக்கிறிர்கள்

கிரி சொன்னது…

கோவி கண்ணன் உங்கள் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்.

பத்மநாபன் சொன்னது…

எழுத்தும் , கருத்தும் நடுவிலேயே பதிவு முழுவதும் பயணம் செய்து இருந்தது... நடுவுநிலையாளர்கள் குறைந்த இந்த சூழலில் நம்பிக்கை நட்சத்திரமாய் நீங்களும் உங்கள் பதிவும் ....வாழ்த்துக்கள் .

அறிவிலி சொன்னது…

அவரோட இனிஷியல தவிர எழுதியிருக்கறது எல்லாமே கரெக்டு. அப்படியே ஆமோதிக்கிறேன்.

குடுகுடுப்பை சொன்னது…

நல்ல பதிவு கோவி.
ஒரு மதம் சார்ந்தவன்,நான் அடுத்த மதத்தை விமர்சிப்பேன் என்று சொல்லி நேர்மையுடன் விமர்சிப்பது தவறல்ல, அந்த உரிமை இல்லாவிடில் விமர்சனமே இருக்கமுடியாது. ஆனால் ஹீசேன் கலை என்ற பெயரில் செய்தது நேர்மையற்ற களவானித்தனம். இப்போது வேறு நாட்டுக்கு சென்றிருப்பதும் அவரது சுயவிருப்பமே உயிருக்குப் பயந்து என்பது பம்மாத்து வேலை.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

எனக்குத் தெரிந்து இங்குள்ள எந்த இஸ்லாமியரும் அவர் வரைந்ததை ஆதரித்தாகத் தெரியவில்லை.

ராஜரத்தினம் சொன்னது…

//95 வயதில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒருவர் மனநிலை மாறுவதற்கு அவர் எவ்வளவு தூரம் அவமானப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. மத சகிப்புத்தன்மை எங்கள் நாட்டில் தான் இருக்கிறது என்று கூறுபவர்கள் வெட்கபபட வேண்டிய தகவலாக அவரது இடப் பெயர்வு நடந்திருக்கிறது. எவ்வளவோ இஸ்லாமியக் கலைஞர் இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை படைக்கிறார்கள். ஒரு ஓவியர் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்துவிட்டார் என்பதற்காக அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வேறு நாட்டிற்கு செல்ல முடிவெடுத்தது மன வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. 'மூடிக் கொண்டு இரு' என்பவர்கள் கைகள் வலுப் பெற்றுவிட்டது, மெல்ல மெல்ல மதவாதத்தின் பிடியில் சிக்கி வருகிறோம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல. 'ஹிந்துக்கள்' பாபர் முதல் ஒளரங்கசீப் வரை முகமதிய ஆட்சியாளர்களுக்கெல்லாம் சாமரம் வீசி, மந்திரியாக இருந்த போதெல்லாம் அவமானப்படாத இந்துமதம் ஒரு ஓவியனால் அவமானப் பட்டதாம்.//
மேற் பதிவு அவரை ஆதரிக்கிறதே?
என்னாச்சு? எது உங்கள் இறுதி முடிவு? ஆதரவா? எதிர்ப்பா?

சீமாச்சு.. சொன்னது…

நல்ல நடுநிலையான பதிவு.. பாராட்டுக்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இன்னொரு இந்த்துத்துவ வாதியின் நல்ல பதிவைப் படித்தாயிற்று!
:P

அறிவு ஜீவிகளின்(போலி முற்போக்கு வாதிகள்) அவசரக்குடுக்கைத்தனத்தை பின்னூட்டங்களின் காண இயலாதது நிறைவைத் தருகிறது!

:)))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//கலவை அருமை.

ஓவியம் வரைந்தது தவறுதான். படைப்பாளிக்கு படைப்புரிமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு. பிற மதத்தினரின் உணர்ச்சிகளையும் மதிக்க தெரியவேண்டும் //

இது உங்கள் முந்தைய பதிவுக்கு போட்ட பின்னூட்டம்.

suresh சொன்னது…

நம் நாட்டில் உள்ள மிகச்சிறந்த ஓவியர்களை எத்தனைபேருக்குத் தெரியும்?

பத்திரிகைகள் தேவையில்லாமல் இவர்போன்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரபலமாக்குகிறார்கள்.

நல்ல நடுநிலையான கருத்து.

priyamudanprabu சொன்னது…

நல்ல பதிவு!

Kesavan சொன்னது…

//ராஜரத்தினம்
//95 வயதில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒருவர் மனநிலை மாறுவதற்கு அவர் எவ்வளவு தூரம் அவமானப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. மத சகிப்புத்தன்மை எங்கள் நாட்டில் தான் இருக்கிறது என்று கூறுபவர்கள் வெட்கபபட வேண்டிய தகவலாக அவரது இடப் பெயர்வு நடந்திருக்கிறது. எவ்வளவோ இஸ்லாமியக் கலைஞர் இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை படைக்கிறார்கள். ஒரு ஓவியர் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்துவிட்டார் என்பதற்காக அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வேறு நாட்டிற்கு செல்ல முடிவெடுத்தது மன வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. 'மூடிக் கொண்டு இரு' என்பவர்கள் கைகள் வலுப் பெற்றுவிட்டது, மெல்ல மெல்ல மதவாதத்தின் பிடியில் சிக்கி வருகிறோம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல. 'ஹிந்துக்கள்' பாபர் முதல் ஒளரங்கசீப் வரை முகமதிய ஆட்சியாளர்களுக்கெல்லாம் சாமரம் வீசி, மந்திரியாக இருந்த போதெல்லாம் அவமானப்படாத இந்துமதம் ஒரு ஓவியனால் அவமானப் பட்டதாம்.//
மேற் பதிவு அவரை ஆதரிக்கிறதே?
என்னாச்சு? எது உங்கள் இறுதி முடிவு? ஆதரவா? எதிர்ப்பா?//

இப்படி ரெண்டு பக்கமும் எழுதினா தான் ரொம்ப SAFE இருக்க முடியும் .

கோவி.கண்ணன் சொன்னது…

கேசவன், இராஜரத்னம்,

ஒன்றைப் பற்றிய நிகழ்வுகளும், கருத்துகளும் மாறும் போது அதை ஏற்கும் மனநிலை எனக்கு இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் 'கொள்கை' பிடிவாதத்தில் இருந்து கொள்ளுங்கள் எனக்கு எதிர்ப்பு இல்லை. நான் புடிச்ச முயலுக்கு 3 கால்தான் என்பதை என்பதை என்னால் நான்கு கால் முயலை பார்க்கும் வரையில் உறுதியாக இருக்க முடியும், உங்களுக்கு வேண்டுமானல் முயல் 3 கால்களுடன் இருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படி ரெண்டு பக்கமும் எழுதினா தான் ரொம்ப SAFE இருக்க முடியும் .//

சேப்பும் இல்லை கீப்பும் இல்லை. 'விதிகள் காலத்தால் மாறும்' என்பதே என் பதிவின் தலைப்பு

Kesavan சொன்னது…

//இப்படி ரெண்டு பக்கமும் எழுதினா தான் ரொம்ப SAFE இருக்க முடியும் .//

//சேப்பும் இல்லை கீப்பும் இல்லை. 'விதிகள் காலத்தால் மாறும்' என்பதே என் பதிவின் தலைப்பு //

ஆமாம் விதிகள் காலத்தால் மாறும். நாளை மீண்டும் அவரை ஆதரித்து செய்தி வரும் பொது மீண்டும் நீங்கள் அன்றே நான் சொல்லிவிட்டேனே என்று சொல்லலாம் .

எதிர்த்து வரும் போதும் அன்றே நான் சொல்லி விட்டேனே என்று சொல்லலாம் . இந்த விதி மட்டும் தான் காலத்தால் மாறும் .

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

//இப்படி ரெண்டு பக்கமும் எழுதினா தான் ரொம்ப SAFE இருக்க முடியும் .//

//சேப்பும் இல்லை கீப்பும் இல்லை. 'விதிகள் காலத்தால் மாறும்' என்பதே என் பதிவின் தலைப்பு //

ஆமாம் விதிகள் காலத்தால் மாறும். நாளை மீண்டும் அவரை ஆதரித்து செய்தி வரும் பொது மீண்டும் நீங்கள் அன்றே நான் சொல்லிவிட்டேனே என்று சொல்லலாம் .

எதிர்த்து வரும் போதும் அன்றே நான் சொல்லி விட்டேனே என்று சொல்லலாம் . இந்த விதி மட்டும் தான் காலத்தால் மாறும் //

உனக்கு என்னதான்யா பிரச்சனை ?

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கட்டுரை. அனால் வேறு சில காரணங்களும் சொல்லப் படுகின்றது. அவர் கடந்த இரண்டு வருடங்களாக வரைந்து வருகின்றார். இப்ப போகனும் என்றே அல்லது பாஸ்போட்டைத் தரவேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கின்றது. இந்திய அரசியல் சட்ட சிறைத் தண்டனைக்கு பயந்துதான் அவ்விதம் செய்தார் என்று வரும் தகவல்கள் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
இந்திய அரசியல் சட்ட சிறைத் தண்டனைக்கு பயந்துதான் அவ்விதம் செய்தார் என்று வரும் தகவல்கள் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
//
உங்களுக்கு சிபிஐ, உள்துறை அளவுக்கு ஆளுங்க தெரிஞ்சு தகவல் வருதுன்னு நினைக்கும் போது 'நீங்க பெரியாளு தான்' என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

Barari சொன்னது…

திரு கோவியார் அவர்களே வடநாட்டில் இஸ்லாமிய படையெடுப்பு//தென்னாட்டில் இருந்தால் காப்பாற்ற பட்திருப்பார்//மதனிக்கு இல்லாத அச்சுருதத்லா// இதையெல்லாம் எந்த நோக்கத்தில் எழுதி இருக்கிறீர்கள்.வஞ்சக புகழ்ச்சியா? விளக்குவீர்களா?

ராஜரத்தினம் சொன்னது…

//ஒன்றைப் பற்றிய நிகழ்வுகளும், கருத்துகளும் மாறும் போது அதை ஏற்கும் மனநிலை எனக்கு இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் 'கொள்கை' பிடிவாதத்தில் இருந்து கொள்ளுங்கள் எனக்கு எதிர்ப்பு இல்லை. நான் புடிச்ச முயலுக்கு 3 கால்தான் என்பதை என்பதை என்னால் நான்கு கால் முயலை பார்க்கும் வரையில் உறுதியாக இருக்க முடியும், உங்களுக்கு வேண்டுமானல் முயல் 3 கால்களுடன் இருக்கலாம்.//
எனக்கு முயலின் கால் எத்தனை அப்படின்றது பிரச்னையல்ல. கொஞ்சம் பொறுத்திருந்தால் 4 கால் முயலையும் பார்த்திருக்கலாமே? அதுக்குள்ள என்ன அவசரம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Barari said...
திரு கோவியார் அவர்களே வடநாட்டில் இஸ்லாமிய படையெடுப்பு//தென்னாட்டில் இருந்தால் காப்பாற்ற பட்திருப்பார்//மதனிக்கு இல்லாத அச்சுருதத்லா// இதையெல்லாம் எந்த நோக்கத்தில் எழுதி இருக்கிறீர்கள்.வஞ்சக புகழ்ச்சியா? விளக்குவீர்களா?
//

உங்களுக்கு எப்படி விளங்குகிறதோ அப்படியே நீங்கள் விளங்கிக் கொள்வதில் எனக்கு ஏதும் எதிர்(பார்)ப்பு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கு முயலின் கால் எத்தனை அப்படின்றது பிரச்னையல்ல. கொஞ்சம் பொறுத்திருந்தால் 4 கால் முயலையும் பார்த்திருக்கலாமே? அதுக்குள்ள என்ன அவசரம்.//

இனி பதிவு வெளியிடும் முன் எழுதிய கருத்துகள் எதிர்காலத்தில் மாறுமா என்று உங்களிடம் அனுப்பி ஆலோசனைக் கேட்டு வெளியிட நீங்கள் அனுமதி தருவீர்களா ?

பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கு எத்தனை கால்கள் ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவி.கண்ணன்


// Barari said...
திரு கோவியார் அவர்களே வடநாட்டில் இஸ்லாமிய படையெடுப்பு//தென்னாட்டில் இருந்தால் காப்பாற்ற பட்திருப்பார்//மதனிக்கு இல்லாத அச்சுருதத்லா// இதையெல்லாம் எந்த நோக்கத்தில் எழுதி இருக்கிறீர்கள்.வஞ்சக புகழ்ச்சியா? விளக்குவீர்களா?
//

உங்களுக்கு எப்படி விளங்குகிறதோ அப்படியே நீங்கள் விளங்கிக் கொள்வதில் எனக்கு ஏதும் எதிர்(பார்)ப்பு இல்லை.//

ஓஓஓஓஓஓ!

அப்ப இது பின்புதுமையியல்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவி.கண்ணன் said...

கேசவன், இராஜரத்னம்,

ஒன்றைப் பற்றிய நிகழ்வுகளும், கருத்துகளும் மாறும் போது அதை ஏற்கும் மனநிலை எனக்கு இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் 'கொள்கை' பிடிவாதத்தில் இருந்து கொள்ளுங்கள் எனக்கு எதிர்ப்பு இல்லை. நான் புடிச்ச முயலுக்கு 3 கால்தான் என்பதை என்பதை என்னால் நான்கு கால் முயலை பார்க்கும் வரையில் உறுதியாக இருக்க முடியும், உங்களுக்கு வேண்டுமானல் முயல் 3 கால்களுடன் இருக்கலாம்.//

போன வாரம் விலங்குக்காட்சிச் சாலையில் முயல் பார்த்தோம். காலே தெரியலை. காதுகளும், வாலும் மட்டுமே தெரிந்தது!

காலு,வாலு,காது இதையெல்லாம் பாக்குறதுக்கு முன்னாடியே பட்டுன்னு இது முயல்னு உறுதியா சொன்னோம்!
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவி.கண்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
இந்திய அரசியல் சட்ட சிறைத் தண்டனைக்கு பயந்துதான் அவ்விதம் செய்தார் என்று வரும் தகவல்கள் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
//
உங்களுக்கு சிபிஐ, உள்துறை அளவுக்கு ஆளுங்க தெரிஞ்சு தகவல் வருதுன்னு நினைக்கும் போது 'நீங்க பெரியாளு தான்' என்பதை ஒப்புக் கொள்கிறேன்.//

பித்தனார் சாமிகளுக்கு ரா வில ஆளு இருக்காகளா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவி.கண்ணன் said...

//இப்படி ரெண்டு பக்கமும் எழுதினா தான் ரொம்ப SAFE இருக்க முடியும் .//

சேப்பும் இல்லை கீப்பும் இல்லை. 'விதிகள் காலத்தால் மாறும்' என்பதே என் பதிவின் தலைப்பு//

நானெல்லாம் படிக்க ஆரம்பிச்சா புள்ளயார்சுழி இருந்தா அதை ”உ” ந்னு உச்சரிச்சு படிச்சுட்டு தொடங்குறது. மெயின் கெட்டிங்-ஐ முதல்ல படிக்கனும். அப்புறம் தான் சப் கெட்டிங்.

உலகம் தட்டை>>உருண்டை(அவ்வளவுதானே)

உருண்டைக்கும் மேல மாறாது அதுதான் புரிதல்/உண்மை!

Kesavan சொன்னது…

//நல்ல கட்டுரை. அனால் வேறு சில காரணங்களும் சொல்லப் படுகின்றது. அவர் கடந்த இரண்டு வருடங்களாக வரைந்து வருகின்றார். இப்ப போகனும் என்றே அல்லது பாஸ்போட்டைத் தரவேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கின்றது. இந்திய அரசியல் சட்ட சிறைத் தண்டனைக்கு பயந்துதான் அவ்விதம் செய்தார் என்று வரும் தகவல்கள் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.//

என்னை பொறுத்த வரை இதில் சிறிதும் உண்மை இல்லை என்றே சொல்லுவேன். ஏன் என்றால் அவர் வரைந்தது இந்து கடவுளை . ஆகையால் அவருக்கு தண்டனை கொடுத்தால் சிறு பான்மையினருக்கு எதிரான கொடுமை என்று ஆரம்பித்து விடுவார்கள் இன்றைய அரசியல் வாதிகள் .

hayyram சொன்னது…

//கேரள மதானிக்கு இல்லாத பாதுகாப்பு இன்மையா ஊசேனுக்கு தென்னிந்தியாவில் இருந்துவிடப் போகிறது. // உண்மை.

anbudan
ram

www.hayyram.blogspot.com

கோவி.கண்ணன் சொன்னது…

நாமக்கல் சிபி,
பரிதி நிலவன்,
யோகன் அண்ணா,
தனா,
பிரபாகர்,
பத்மநாபன்,
Karruppu,
கிரி,
அறிவிலி,
குடுகுடுப்பை,
அப்துல்லா,
சீமாச்சு,
ஜோதிபாரதி,
அக்பர்,
சுரேஷ்,
பிரியமுடன் பிரபு,
கேசவன்,
இராஜரத்னம்,
பராரி
மற்றும் ஹேராம்
மற்றும்
அனைவருக்கும் மிக்க நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்