பின்பற்றுபவர்கள்

16 மார்ச், 2010

அரசு ஊழியன் என்னும் கிங்கரகர்கள் !

அப்பாவிகளிடம் 'ரூல்ஸ்' பேசுவதில் அரசு ஊழியகர்கள் காட்டும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை, ஆனால் அவன் தனக்கு மேல் இருக்கும் உயர் அலுவர்களிடம் கூழைக் கும்பிடு போடும் போது கடமையும், தன் மானத்தை இழக்கிறோம் என்பதை துளியும் நினைப்பதில்லை, காரணம் தன்னலம், எப்படியாவது பதவி உயர்வு பெறுவதற்கு உயர் அலுவலர்களின் கழிவறையைக் கூட நாக்கால் தூய்மை செய்ய முயற்சிப்பார்கள்.

ஒரு கோடி அரசு திட்டம் அறிவித்துவிட்டு அதற்கு இரண்டு கோடியில் பாராட்டு விழா நடத்துவதையெல்லாம் எந்த அரசு ஊழியனும் மக்களின் வரிப்பணத்தில் நடை பெறும் முறைகேடு என்று வாய்திறந்து பேசமாட்டான், அங்கெல்லாம் கடமை என்று எதையும் நினைக்காமல் சலாம் போடுவது முதல் விழா முடியும் வரை நன்றி உள்ள நான்கு கால் விலங்கைவிட கூடுதலாகவே நன்றி வெளிப்படையாக தெரியும் படி நடந்து கொள்வான். இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால்,

8 ஆம் வகுப்பு மாணவ சிறுமி இலவச பேருந்து பயண அட்டையை மறதியாக வைத்துவிட்டு வந்துவிட்டாள் என்பதற்காக பேருந்து சோதனையாளர்களால் கடுமையாக பேசப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு அவளுக்கு 100 ரூபாய் வரை தண்டத் தொகை ரசீது கொடுக்கப்பட்டதாம். பொதுமக்களின் எதிர்ப்பிற்கு பிறகு 50 ரூபாய் குறைக்கப்பட்டு, அதையும் பொதுமக்கள் செலுத்திய பிறகே அம்மாணவியை பேருந்துனுள் அனுமதித்திருக்கிறார்கள். மாணவி செய்தது தவறு தான் என்றாலும் சீருடையில் பள்ளிக்கு வரும் மாணவிகள் 'பஸ் பாஸ்' எனப்படும் அடையாள அட்டைச் சோதனை கூட தேவையற்றது தான். பள்ளி நாட்கள் தவிர்த்து மற்ற நாட்கள் என்றால் கூட சோதனையாளர்களின் செயலை சரி என்று சொல்லலாம். ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச கல்வி, இலவச பேருந்து சேவைகளை தரவேண்டும் என்று பல்வேறு தரப்புகள் கோரிக்கையுடன் தான் இலவச திட்டங்களே நடைபெறுகின்றன. பள்ளிக்க்குச் செல்லும் ஒரு மாணவியிடம் 'ரூல்ஸ்' பேசுபவர்கள் ஏழை எளியவர்களின் நலன்களின் ஏதும் அக்கரை அற்றவர்கள் என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. ஒரு சோதனையாளர் மாணவியை அனுமதித்திருந்தால் அதை வேறொரு சோதனையாளர் அதே தடத்தில் கண்டுபிடிக்க ஏதுவும் வாய்ப்பு கிடையாது, இருந்தும் அவர்களை தடுப்பது யார் ?

ரூல்ஸ் பேசும் சோதனையாளர்கள் என்றாவது நடத்துனரின் பணப் பையை இதுவரை சோதனை போட்டு பொதுமக்களிடம் சில்லரை இல்லை என்று கூறி உபரியாக நிரப்பிக் கொண்டதைப் பற்றி அறிவித்திருக்கிறார்களா ? அது எங்கள் வேலை இல்லை என்று மறுபடியும் தங்களுக்கு சாதகமான ரூல்ஸ் பேசுவார்கள்.

வசதி குறைந்த மாணவர்கள் பள்ளி தொலைவில் இருந்தால் பேருந்தில் பயணிக்க அரசு இலவச பாஸ்களை வழங்குகிறது, ஆனால் சோதனைகள் என்ற பெயரில் சீருடை போட்டிருக்கும் மாணவர்களையும் இறக்கிவிடுவது அல்லது அபராதம் போடுவது எந்த விதத்திலும் ஞாயமே இல்லை. ஒரு ஊரில் ஒரு மாணவி தவறுதலாக மறந்து வந்திருந்தால் அரசு பேருந்து நட்டத்தில் இயங்கிவிடுமா ? அப்படி என்றால் இவர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் அவ்வப்போது வேலை நிறுத்தம் என்ற பெயரில் பேருந்துகளை இயக்காமல் இருப்பதால் நட்டம் அடைவது யார் ? அதை ஈடுகட்ட இவர்களின் ஊதியத்தைக் கொடுக்கிறார்களா ? இவர்களைப் பற்றி நினைத்தாலே டென்சன் தான் ஆகுது.

எனக்கு 15 வயது இருக்கும் போது 10 வயது தம்பியை அழைத்துக் கொண்டு வேளாங்கன்னி வரை உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பேருந்து பயணச் சீட்டு முறைகள் பற்றி அவ்வளவாக விபரம் தெரியாது, தம்பியின் வயதை வைத்து எனக்கு முழு டிக்கெட்டுகான பணத்தைக் கொடுத்து ஒரு டிக்கெட்டும், தம்பிக்கு அரைடிக்கெட்டுகான பணத்தைக் கொடுத்து (2ரூபாய் டிக்கெட் ஒண்ணு , 1 ரூபாய் டிக்கெட் ஒண்ணு வாங்கியது போக என்னிடம் இருந்தது மீதம் 1 ரூபாய் ) இன்னொரு டிக்கெட்டும் வாங்கி பேருந்துனுள் பயணம் செய்தேன், பேருந்து பாதி தொலைவு சென்றவுடன் நடத்துனர் ஒவ்வொரு பயணியிடமும் பயணச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார், இரண்டையும் கொடுத்தேன், 'என்னது 1 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு இவ்வளவு தூரம் வருகிறே ?' என்று கூறி, வேறு காசு இருக்கா என்று கேட்டார், இல்லை என்றேன், இறங்கிப் போ.....என்றார், எனக்கு ஒண்ணும் புரியல, தம்பி சின்னப் பையன் 10 வயது தான் ஆகுது அதனால் அவனுக்கு அரை டிக்கெட் தான் எடுத்தேன், இப்ப இறங்க சொல்றிங்களே' என்றேன். 'இது டவுன் பஸ்.....இதுல அரை டிக்கெட்டெல்லாம் கிடையாது, காசு இல்லாவிட்டால் இறங்கிப் போ' என்றார். என்னிடம் மீதம் இருந்த காசுக்கு அங்கிருந்து இன்னொரு முழு டிக்கெட் வாங்க முடியாது.....கையில் இருந்ததைக் காட்டினேன். இரண்டு பேரும் இறங்குங்க என்று கடுமையாகவே சொன்னார். வேறு வழியே இல்லாமல் தம்பியை மட்டும் பத்திரமாக சரியான இடத்தில் இறங்கச் சொல்லிவிட்டு, நான் பேருந்தைவிட்டு பாப்பா கோவில் என்னும் இடத்தில் இருந்து இறங்கி, கடுமையான வெயிலில் 5 கிலோ மீட்டர் நடந்தே வீட்டுக்கு வந்து மறுபடியும் பணம் எடுத்துக் கொண்டு வேறொரு பேருந்தில் சென்றேன். இதில் என்னுடைய தவறு டவுன் பஸ்ஸுக்கு அரை டிக்கெட் இல்லை என்று தெரியாதது மட்டுமே.

எவ்வளவோ உறவினர்களை, நண்பர்களை வித் அவுட்டில் அழைத்துச் செல்லும் நடத்துனர்கள், ஒரு 15 வயது பையனை நடுக்காட்டில் இறக்கிவிட்டு செல்வது என்பதை இப்போது நினைத்தாலும் வெறுப்பாகத்தான் இருக்கிறது.

அரசு ஊழியகர்கள் பொதுமக்களை மதிக்காவிட்டால் அல்லது கண்டிபான விதிமுறை பேசும் போது அவர்களை பொதுமக்களும் உதாசீனப்படுத்தனும், அவனும் சம்பளத்துக்கு வேலைப் பார்க்கும் ஒரு ஊழியன் தான் அதைவிட அவனுக்கு தனிப்பட்ட மரியாதைகள், 'சார்....சார்' என்ற விழிப்பு என்னைப் பொருத்த அளவில் தேவை அற்றது.

விதிமுறைகள் என்பது ஒழுங்குக்கான பரிந்துரைகள் மட்டுமே, மனிதாபிமானத்திற்கு முன்பு விதிமுறை பேசினால் மனிதனுக்கு சொல்லித்தரும் படி இயங்கும் இயந்திரங்களும் வேறுபாடுகள் இல்லை. பயண அனுமதிச் சீட்டை வைத்துவிட்டு வந்து சோதனையாளர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி அப்போது எவ்வளவு கதறி இருப்பாள், அவமானம் அடைந்திருப்பாள் என்று நினைத்தால் ஏற்கனவே அவமானம் அடைந்த அனுபவம் இருப்பதால் எனக்கு மனது பதைக்கிறது.

பாஸ்போர்ட் அலுவலக அலட்சியம்!

26 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ரூல்ஸ் பேசும் சோதனையாளர்கள் என்றாவது நடத்துனரின் பணப் பையை இதுவரை சோதனை போட்டு பொதுமக்களிடம் சில்லரை இல்லை என்று கூறி உபரியாக நிரப்பிக் கொண்டதைப் பற்றி அறிவித்திருக்கிறார்களா ? அது எங்கள் வேலை இல்லை என்று மறுபடியும் தங்களுக்கு சாதகமான ரூல்ஸ் பேசுவார்கள்.]]


தெளிவாய் சொன்னீங்க.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:((

பெயரில்லா சொன்னது…

நானும் அந்த செயிதிய படித்தேன்... என்னமோ இந்த கவர்மென்டே இவனுக கையில இருக்கிரது மாதிரி காட்டுரானுக.... These peoples are showing their power in only poverty peoples/ rural peoples. They cannot show their power to others...

Dear Government Servent's, I too agree your commitment and ur duties.. but r u ready to show the same thing to higher peoples... If your are ready to show, then i am the first one agree and giving honor to your duties...

Don't act too much such a chilly things....In the same bus , If any one of your relation is travel without ticket , r u ready to ask like these bullshit questions to them.... appadi ketta unkalukku saappaadu vettula kidaikkaathunnau theriyum... ponka sir...

வேடிக்கை மனிதன் சொன்னது…

//விதிமுறைகள் என்பது ஒழுங்குக்கான பரிந்துரைகள் மட்டுமே, மனிதாபிமானத்திற்கு முன்பு விதிமுறை பேசினால் மனிதனுக்கு சொல்லித்தரும் படி இயங்கும் இயந்திரங்களும் வேறுபாடுகள் இல்லை. //

அழகாகச் சொல்லி இருக்கீங்க.
என் வீட்டுக்கு முன்னாடி வண்டி மட்டும் நிக்காமப் போகட்டும் என்று மிரட்டும் அதிகாரவர்கதிடம் இவர்கள் ரூல்ஸ் எதுவும் பேசுவதில்லை. இல்லாதவன் என்றாலே இலக்காரம்தான்.

தத்துபித்து சொன்னது…

வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது இவனுகள நெனச்சாலே.

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கட்டுரை, முதியவர்கள்,பெண்கள், மாணவர்களிடம் மட்டும்தான் இந்த ரூல்ஸ் பேசுவாங்க. கும்பலாய் வேணும் என்று விதவுட்டில் போகும் கல்லூரி இளைஞர்களிடம் டிக்கெட்டே கேட்க மாட்டார்கள். இல்லை என்றால் கலாட்டா பண்ணுவார்கள் என்ற பயம்தான். நம்ம நாட்டில் இது எல்லாம் சகஜம் என்று ஆகிவிட்டது. தட்டிக் கேட்ட பொதுமக்களைப் பாராட்ட வேண்டும். நன்றி.

tirumayammari சொன்னது…

Gvt Servants should be educated that they are Public servants.The wages they are earning are given from the public exchequer they should understand.

ப.கந்தசாமி சொன்னது…

படிக்கப் படிக்க வயிறு பத்திக்கிட்டு எரியுதுங்க.

vasu balaji சொன்னது…

/தன் மானத்தை இழக்கிறோம் என்பதை துளியும் நினைப்பதில்லை, காரணம் தன்னலம், எப்படியாவது பதவி உயர்வு பெறுவதற்கு உயர் அலுவலர்களின் கழிவறையைக் கூட நாக்கால் தூய்மை செய்ய முயற்சிப்பார்கள்.

ஒரு கோடி அரசு திட்டம் அறிவித்துவிட்டு அதற்கு இரண்டு கோடியில் பாராட்டு விழா நடத்துவதையெல்லாம் எந்த அரசு ஊழியனும் மக்களின் வரிப்பணத்தில் நடை பெறும் முறைகேடு என்று வாய்திறந்து பேசமாட்டான், அங்கெல்லாம் கடமை என்று எதையும் நினைக்காமல் சலாம் போடுவது முதல் விழா முடியும் வரை நன்றி உள்ள நான்கு கால் விலங்கைவிட கூடுதலாகவே நன்றி வெளிப்படையாக தெரியும் படி நடந்து கொள்வான். /

மன்னிக்கணும் கோவி. என்னங்க கோவி இப்படி பேசிப்புட்டீங்க. வார்த்தைகளின் கடுமை வேறு. நெய்வேலி லிக்னைட்டில் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டானே ஜெனரல் மேனேஜர். அவன் அரசு ஊழியனல்ல. எந்தத் துறையிலும் சுயநலமற்ற ஊழியம் இல்லை.

ஆனால் அரசு ஊழியனுக்கு அரசாங்கமே வைத்த சட்டம் அரசைக் குறை கூறக் கூடாது. ஒழுக்க நெறிச்சட்டப் படி நடப்பேன் என்று முதல்நாள் உறுதி மொழி எடுக்கிறானே , அன்னைக்கே கொத்தடிமை நான் என எழுதிக் கொடுக்கிறான். இந்திய அரசியல் சட்டத்தின் 14வது ஷரத்து (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) ஒரு குடிமகனுக்கும் அரசு ஊழியனுக்கும் வேறு வேறு தெரியுமா உங்களுக்கு.

Unknown சொன்னது…

superb goviji, I voted!

சவுக்கு சொன்னது…

அரசு ஊழியர்கள் பற்றிய தங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அரசு ஊழியர் குடியிருப்பில் கவரில் பணம் வழங்கப் பட்டபோது, ஒரு ஓட்டு கூடுதலாக இருக்கிறது கவரில் பணம் கம்மியாக இருக்கிறது என்று சண்டையிட்ட அரசு ஊழியர்களை நான் அறிவேன். இந்த உலகிலேயே மிகுந்த சுயநலம் உள்ள கூட்டம் ஒன்று உண்டென்றால் அது அரசு ஊழியர்கள் மட்டுமே. நான், என் மனைவி, என் குடும்பம், ஜிபிஎஃப் லோன், சொசைட்டி லோன், அரை க்ரவுண்ட் நிலம், வசதியாக போக வர ஒரு வண்டி, இதைத் தவிர இவர்களுக்கு வேறு உலகமே தெரியாது. எவன் வீட்டில் இழவு விழுந்தால் இவர்களுக்கென்ன?

மணிகண்டன் சொன்னது…

இந்தியாவுல ஒவ்வொருத்தருக்கும் அடையாள அட்டை இருந்தா இந்த பிரச்சனை இல்லை. வீட்டு முகவரிக்கு fine கடிதத்தை அனுப்பிடலாம். பணத்தை பிறகு ஏதோ ஒரு இடத்துல போய் கட்டிக்கலாம்.

மாணவி எதுக்கு கதறி அழனும் ? வீட்டுக்கு திரும்பி போய் எடுத்துக்கொண்டு வர வேண்டியது தானே ?
இந்தியாவுல உள்ள மத்தியதர வகுப்பு மக்களோட பெரும் பிரச்சனை அவங்களோட சிந்தனை தான். அவனை விடறானே, அவன் இப்படி ஊழல் செய்யறானே, நமக்கு மட்டும் தான் ரூல்ஸா ? இந்த கேள்வியை கேட்டுக்கிட்டு எல்லா விதியையும் மீற வேண்டியது.

சோதனையாளர் அந்த சின்ன பெண்ணிடம் கடுமையாக பேசி இருந்தால் கண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால் மக்களுக்கு சுத்தமாக literacy இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.
யோசித்து பாருங்கள். டவுன் பஸ்ஸில் தனியாக தம்பியை அழைத்துக்கொண்டு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போக தெரிந்த உங்களுக்கு அரை டிக்கெட் விதிமுறை தெரியவில்லை. ஆனாலும் அந்த இடத்தில் இருந்த ஊழியர் செய்தது தவறே. (not legally but commonsense should dictate these situations).

எங்கள் வீட்டில் பலரும் அரசு ஊழியர்கள். ஆதலால் அவர்கள் செய்யும் வேலையும் / நண்பர்கள் செய்யும் வேலையையும் பார்த்தே வந்திருக்கிறேன். முற்றிலும் அவர்களை குறை சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. யாருக்கு தான் சுயநலம் இல்லை ? சொல்லுங்கள்.

CHANDRA சொன்னது…

அரசு ஊழியனாய் இருக்கோம்கிற கிப்பாத்துல எல்லோரையும் ஏளனமாய் பேசும் இவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்.என் மனைவி கர்ப்பினியாய் இருந்த சமயம் ஒரு சீட் மட்டும் அமர்வதற்கு கேட்டும், தூர பயணிகளுக்கு மட்டும்தான் இருக்கை மற்றவர்கல் நின்று தான் வரவேண்டும் என்று வம்படித்த அரசு ஊழியனின் அராஜகம் இன்னும் கண்ணில் நிற்கிறது. (இத்தனைக்கும் 90 கிமீ தூரமுள்ள ஊருக்கே இடம் தர மறுத்து விட்டான்)இவர்களில் பலர் மிருகங்கள். நாம சார்ன்னு கூப்பிட்டாலும் இவனுங்க மட்டும் வாய்யா, போய்யா தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//எங்கள் வீட்டில் பலரும் அரசு ஊழியர்கள். ஆதலால் அவர்கள் செய்யும் வேலையும் / நண்பர்கள் செய்யும் வேலையையும் பார்த்தே வந்திருக்கிறேன். முற்றிலும் அவர்களை குறை சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. //

மணி விதிவிலக்குகள் உதாரணம் ஆகாது. எனக்கு தெரிந்து 95 விழுக்காடு வெளியூர் அரசு பேருந்துகள் மோட்டல் எனப்படும் பாடாவதி ஓட்டல்களில் அவன் போடும் ஓசி பிரியாணிக்காக நிறுத்துகிறார்கள். இதில் ஒன்றுக்கு ஒன்றரை மடங்காக பணத்தைக் கொடுத்து பாதிக்கப்படுவது பயணிகள் தான்.

பெயரில்லா சொன்னது…

Well said Govi... Liked it.... Keep it up..
You know one thing, i have checked with most of the Government staff's son, (including son of an RTO, they used to tell that "Enga appa mattum lanjam vaanga maattaru)!!!!!!!!!..
have you ever come across!!!!!?????????????

KarthigaVasudevan சொன்னது…

சிந்திக்க வைக்கும் அர்த்தமுள்ள பதிவு .

//எவ்வளவோ உறவினர்களை, நண்பர்களை வித் அவுட்டில் அழைத்துச் செல்லும் நடத்துனர்கள், ஒரு 15 வயது பையனை நடுக்காட்டில் இறக்கிவிட்டு செல்வது என்பதை இப்போது நினைத்தாலும் வெறுப்பாகத்தான் இருக்கிறது//

இப்படி இன்னும் எத்தனையோ காரணங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன வெறுக்கத் தக்க வகையில்.ரேசன் கார்ட் புதிதாக வாங்கவோ இல்லை பிரித்து நீக்கி புதிய கார்ட் வாங்கவோ முயற்சிப்பவர்களைக் கேட்டால் இன்னும் நிறையச் சொல்ல வாய்ப்புஇருக்கக் கூடும்!"அரசு ஊழியர்கள் எனும் கிங்கரர்கள்" மெத்தச் சரி.சிலர் நியாயமானவர்களாக இருக்கலாம் ஆனால் பெரும்பான்மையும் இப்படித் தான்.

Test சொன்னது…

// நான் பேருந்தைவிட்டு பாப்பா கோவில் என்னும் இடத்தில் இருந்து இறங்கி, கடுமையான வெயிலில் 5 கிலோ மீட்டர் நடந்தே வீட்டுக்கு வந்து மறுபடியும் பணம் எடுத்துக் கொண்டு வேறொரு பேருந்தில் சென்றேன். இதில் என்னுடைய தவறு டவுன் பஸ்ஸுக்கு அரை டிக்கெட் இல்லை என்று தெரியாதது மட்டுமே//

இதனை படிக்கும் போதே மனது வலிக்கிறது.

பொன் மாலை பொழுது சொன்னது…

//இந்த உலகிலேயே மிகுந்த சுயநலம் உள்ள கூட்டம் ஒன்று உண்டென்றால் அது அரசு ஊழியர்கள் மட்டுமே. நான், என் மனைவி, என் குடும்பம், ஜிபிஎஃப் லோன், சொசைட்டி லோன், அரை க்ரவுண்ட் நிலம், வசதியாக போக வர ஒரு வண்டி, இதைத் தவிர இவர்களுக்கு வேறு உலகமே தெரியாது. எவன் வீட்டில் இழவு விழுந்தால் இவர்களுக்கென்ன? //

சொன்னது - சவுக்கு

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை !உண்மை.!! படிக்கும் காலங்களில் இத்தகைய கேவலமான வர்களை பார்த்து மனதில் ஒரு வெறுப்பே வந்ததால், அரசாங்க வேலைக்கே போவதில்லை என்ற முடிவில் இருந்தேன். பின்னர் தனியார் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். இவர்கள் போல என்னிடம் பணமும் சொந்த வீடும் இல்லை. ஆனால் என் சுய மதிப்பும் மரியாதையும் என்னை தலை நிமிர்ந்த மானத்துடன் வாழ வைக்கிறது. அதில் எனக்கு பெருமையும் கூட! இன்றும் கூட அரசு ஊழியர்களிடம் பேசும் தருணங்களில் அவர்களை கேவலமாகவே பார்க்கும் இயல்பே வந்துவிட்டது.

மொத்தத்தில் இவர்கள் பிணம் தின்னி கழுகள். இவர்களில் ஆண் , பெண்கள் வேறுபாடே இல்லை. எல்லோரும் மகா அல்பைகள், புழுக்கைகள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சரியா சொன்னீங்க.

அதிகார வந்தா சல்யூட் அடிக்கனும்னு தெரியாது ? :)
அது மாதிரிதான் இருக்கு நிலமை.

அரசு என்று இல்லை. அதிகாரம் உள்ள தனியார் ஊழியார்களும் இப்படித்தான் நடக்கிறார்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

விதி முறைகள் மனிதாபிமானத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் - உண்மை - ஆனால் அரசு ஊழியர்களின் செயலுக்கு யார் காரணம் - அதுவும் நாம் தானே ! சிந்தித்துப் பாருங்கள் - அவர்களின் வாதங்களையும் கேட்டுப் பாருங்கள்

இம்மானவிக்கு நேர்ந்தது என் மகளுக்கும் நேர்ந்திருக்கிறது

காலப் பறவை சொன்னது…

இவர்களுடைய சட்டத்தையும், ம............................... எளியவர்களிடம் தான் காண்பிப்பார்கள் போல.....

நல்ல பதிவு

Paleo God சொன்னது…

சட்டங்கள் எல்லோருக்குமானவை எனும்போது, அதை போடுபவர்கள் 200% அதனை கடுமையாக பின்பற்றும்போது, பொதுமக்களுக்கு தானாகவே ஒரு ஒழுங்குமுறை வந்துவிடும். அன்றி ஒரு சாராருக்கு மட்டுமே ரூல்ஸ் பொருந்தும் என்பது இது போன்ற பிரச்சனைகளுக்கே வழி வகை செய்யும். மற்றபடி அந்த பெண் குழந்தைக்கும், உங்களுக்கும் பிரயாணத்தின் போது பொறுமையாக
புரிய வைத்திருந்தாலே விதிமுறைகள் மீது ஒரு மரியாதை வந்திருக்கும் கடைபிடிக்கப்பட்டிருக்கும், வெறுப்பு வந்திருக்காது.

உங்கள் ஆதங்கம் சராசரியான எல்லோருக்குள்ளும் உண்டு, நானும் அதில் ஒருவனே..:)

Jawahar சொன்னது…

//அதைவிட அவனுக்கு தனிப்பட்ட மரியாதைகள், 'சார்....சார்' என்ற விழிப்பு என்னைப் பொருத்த அளவில் தேவை அற்றது//
!!!!!!!!!
நான் சிங்கப்பூர் வந்தா என்னை சார்ன்னு கூப்பிடுவீங்களா!

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் சிங்கப்பூர் வந்தா என்னை சார்ன்னு கூப்பிடுவீங்களா!

http://kgjawarlal.wordpress.com//

யாரையும் அப்படிக் கூப்பிடும் பழக்கம் இல்லை. வயது என்னைக் காட்டிலும் கூடுதலாக இருந்தால் பெயருட்ன் 'அண்ணா' சேர்த்துக் கொள்ளப்படும்.
:)

SIV சொன்னது…

This is the genral atitude of Indian ppl. Sorry to say this 90% of the pll if there are offered a govt job they will behave like this only.

priyamudanprabu சொன்னது…

அண்ணே இந்திய அரசு ஊழியர்களுக்கு கொம்பு முளைத்துள்ளது உங்களுக்கு தெரியாதா??
?
?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்