பின்பற்றுபவர்கள்

12 மார்ச், 2010

பெரியாரிஸ்டுகளை வெறுக்கிறேன் !

அண்மையில் சாருவின் நித்யானந்தம் பற்றிய பேட்டியை ஜூவி வெளி இட்டிருந்தது, அதில் சாரு என்ன உளறினார் என்பது நமக்கு தேவையற்றது. இருந்தாலும் அந்த பேட்டியின் தொடக்கத்தில் சாருவை 'பெரியாரிஸ்ட்' என்பதாக முன்மொழிந்து பேட்டியை தொடங்கி இருந்தார்கள்.

செய்தி இதழ்கள் பெரியாரிஸ்ட் என்று அறிமுகப்படுத்துவது சாரு போன்றவர்களைத் தான். இந்த செய்தி இதழ்கள் பெரியார் பெயரை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது. இதே போல் ஒருமுறை ஜெயமோகன் குமரி மைந்தனை பெரியாரிஸ்ட் என்று குறிப்பிட்டு பலரிடம் கண்டனங்களைப் பெற்றார். குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் இல்லை, தமிழ்தேசியவாதி என்று கூறிக் கொள்பவர் என்றாலும் அண்ணா போன்றவர்களின் தமிழ்தேசிய எண்ணமும் குமரிமைந்தனின் தமிழ் தேசியமும் வேறு வேறானவை. 'ஹீலிங்' பயிற்சிக்கு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தனும், நான் இஸ்லாம் பாரம்பரியத்தில் வந்தவன், அதனால் என்னால் அசைவம் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் நான் நித்தியின் ஆசிரமத்தில் ஹீலிங் செய்யும் பயிற்சி எடுக்கவில்லை. நித்தி நோய்களை குணப்படுத்துகிறார் என்று நான் எழுதியது முற்றிலும் உண்மை நான் தவறாக எதையும் எழுதிவில்லை என்று குறிப்பிடாமல் 'ஹீலிங், அசைவம்' என சப்பைக் கட்டி இருந்தார் சாரு. எந்த ஒரு இஸ்லாமிய பாரம்பரியத்தில் வளர்ந்தவர்களும் ஒரு மனிதனை தெய்வம் ஆக்கி, கடவுளுக்கு இணையானவராக வைத்துப் பார்த்ததில்லை. சாரு இஸ்லாமிய பாரம்பரியம் கொண்டவரும் இல்லை, பெரியாரிஸ்டும் இல்லை. சாரு இஸ்லாமிய பாரம்பரியம் என்று அவர் பிரியாணி சாப்பிடுவதைத்தான் சொல்கிறார் என்றால் அதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம், பிரியாணி விரும்பி சாப்பிடும் நான் ஹீலிங் பயிற்சிக்காக சைவம் சாப்பிட விரும்பவில்லை என.

"நித்யானந்தரின் வழிமுறையில் ‘சொஸ்தப்படுத்துபவர்கள்’ என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர். நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார். அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும். மது அருந்தக் கூடாது. அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது." - சாரு

பிரியாணி, மாமிசம் சாப்பிடுவது மட்டும் தான் இஸ்லாமிய பின்னனியா ? இஸ்லாமிய பின்னனியாளர்கள் சாமியார்களுக்கு சாமரம் வீசியது, காலில் விழுந்து கிடந்தது கிடையாதே.

"உங்களையெல்லாம் 1000 பெரியார்கள் வந்தாலும் திருத்தமுடியாது" என்று கூறிய விவேக், உயர்வர்க்க மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டு படிக்காத பாமரர்களின் மூட நம்பிக்கைகளை முற்போக்கு என்ற பெயரில் நகைச்சுவையாக்கி கல்லா பார்த்தவர் தான் நடிகர் விவேக், இவருக்கும் பெரியாருக்கும் எள்ளளவும் தொடர்பே இல்லை, அப்படி இருந்திருந்தால் இவரால் திருப்பதி, பழனி மொட்டைகளையோ (அதையும் ஏழைகள் மட்டுமே போடுகிறார்கள்) , ஐயப்பனின் பெண்கள் மீதான தீட்டுகளையோ சாடி இருக்க முடியும். விவேக் புரட்சி செய்கிறார், புண்ணாக்கு செய்கிறார், சின்னக் கலைவாணர் என்றெல்லாம் புகழ அவரும் கலைமாமனி, பத்ம பூசன் போன்ற விருதுகளை 'திரையில் மூட நம்பிக்கை விழிப்புணர்வு' ஊட்டி பெற்றுக் கொண்டார்.

விவேக்கின் பெரியார் கருத்துகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு, கீழ்கண்ட வீடியோவே சான்று.





எந்த ஒரு பெரியாரிஸ்டும் ஆசாமிகளை சாமி என்று புகழ்ந்தது கிடையாது, சாரு பெரியாரிஸ்டாம், விவேக் பெரியாரைப் பரப்புகிறாராம்.

24 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

அண்ணே விவேக் ஒரு போலி

மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடுவதை தண்ணீர் வீணாகுது என் ஒரு படத்தில் கிண்டலடிப்பார்
ஆனால் இந்த சினிமாகார பயலுக ஒரு பெண்ணை மணிகணக்கில் தண்ணீர் ஊற்றி நனைய விட்டு படம் எடுப்பார்கள்

எந்த நேரமும் பீர் பாட்டிலோடுதான் பல படங்களில் வலம் வருவார்

Sanjai Gandhi சொன்னது…

எச்சுஸ்மி பாஸ்.. இந்த சோ கால்ட் இஸ்டுகள் எந்த கெரகத்தில் வாழ்பவர்கள்?

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...

எச்சுஸ்மி பாஸ்.. இந்த சோ கால்ட் இஸ்டுகள் எந்த கெரகத்தில் வாழ்பவர்கள்?//

"சோ" கல்ட் இஸ்டா ? நவக்கிரகத்தில் பூமி பெயர் இல்லையா ?

:)

Sanjai Gandhi சொன்னது…

கோவிஜி நீங்க தீவிரமான ஆச்சார்யர் ஆய்ட்டு வரிங்க.. நவ கெரகம் என்பதே தப்பு.. இன்னும் ஏராளமான கெரகம் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் “கணிப்பு”. சமீபத்தில் ஒரு கெரகம் கண்டுபிடிச்சி இருக்கிறதா கூட படிச்சேன்.. இனி உங்க பஞ்சாங்கம் எல்லாம் மாறும்.. அல்லது பரணில் ஏறும்.. :)

அருண்மொழிவர்மன் சொன்னது…

உண்மைதான் கோவி. அதிலும் விவேக் போன்ற தீவிரமான வாஸ்து பார்க்கும் வழக்கம் கொண்டவர்களை இன்னமும் பெரியாரின் வழிவந்தவர்களைப் போல தகிடுதித்தம் வேறு கிடையாது

பித்தனின் வாக்கு சொன்னது…

உங்களின் கட்டுரையில் ஒரு உண்மை மட்டும் புரிகின்றது. படத்தில் அவன் கிண்டல் அடித்த போது, இந்துக்கள் அல்லது பாமர இரசிகர்கள் வெறும் சிரித்து விட்டுப் போனார்கள். வெறியர்கள் மட்டும் எதிர்த்தார்கள்,அதுவும் பெரிய அளவு இல்லை. அனால் அவனுக்கு ஆட்சியாளர்கள் பாராட்டு, பட்டம்,விருது எல்லாம் கொடுத்தார்கள். அதுவே அவன் ஆதரித்துப் பேசியதும் போட்டுக் கும்முகின்றார்கள்.அப்போதும் அவன் பேச்சை மக்கள் மதிப்பது இல்லை. வெறும் நகைச்சுவை நடிகனாக மட்டும் பார்க்கின்றார்கள். விவேக் மற்றும் சாரு, மஞ்சள் துண்டு,கண்ணதாசன்,சிவாஜி கனேசன் எல்லாருக்கும் இதே நிலைதான். அனாலும் உங்கள் கட்டுரை அருமை. இடத்திற்கு ஏற்றார்ப் போல கூத்தடிக்கும் கூத்தாடிகளுக்காக ஏன் உங்களின் அருமையான சிந்தனைகளை செலவிடுகின்றீர்கள்,சமூக மாற்றம் அல்லது சமுதாய சிந்தனைகளுக்காக செலவிடலாமே. நன்றி. இதுக்காகத்தான் நான் பலமுறை உங்களிடம் வாதிடுகின்றேன். எனது கருத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன் உங்களின் அருமையான சிந்தனைகளை செலவிடுகின்றீர்கள்,சமூக மாற்றம் அல்லது சமுதாய சிந்தனைகளுக்காக செலவிடலாமே. நன்றி. இதுக்காகத்தான் நான் பலமுறை உங்களிடம் வாதிடுகின்றேன்.//

உங்களிடம் கேட்டுவிட்டு தான் இனி எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். நல்லது கெட்டது எல்லாம் உங்களுக்குத்தான் நல்லா தெரிகிறது.

ஜெகதீசன் சொன்னது…

//
உங்களிடம் கேட்டுவிட்டு தான் இனி எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். நல்லது கெட்டது எல்லாம் உங்களுக்குத்தான் நல்லா தெரிகிறது.
//
LOL!!!!
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//bala has left a new comment on your post "பெரியாரிஸ்டுகளை வெறுக்கிறேன் !": //

ஏற்கனவே பலரிடம் பலமுறை செருப்படி பட்ட பாலா உன்னூடைய புன்னூட்டம் என் பதிவுக்கு தேவையற்ற ஒன்று, உன்னை மனிதனாகக் கூட பலரும் ஏற்க மறுக்கும் நிலையில் நானும் நித்தித் தொடரை குமுதம் நிறுத்தியது போல் உன் புன்னூட்டங்களை வெளி இட விரும்பவில்லை.

பித்தனின் வாக்கு சொன்னது…

// உங்களிடம் கேட்டுவிட்டு தான் இனி எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். நல்லது கெட்டது எல்லாம் உங்களுக்குத்தான் நல்லா தெரிகிறது. //

விளையாட்டுக்குச் சொல்கின்றீர்களா? அல்லது கோபத்தில் சொல்கின்றீர்களா எனப் புரியவில்லை. கோபமாக இருந்தால் மன்னிக்கவும்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

நீங்களும் என்னை மாதிரி உக்காந்து எல்லா பழைய வீடியோவும் பாகுரிங்க போல.

ரஞ்சிதா வீடியோக்கு அப்புறம் நித்திக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் ஆயிருச்சு போல

Rajan சொன்னது…

//சாரு இஸ்லாமிய பாரம்பரியம் என்று அவர் பிரியாணி சாப்பிடுவதைத்தான் சொல்கிறார் என்றால் அதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம்,//


ஹா ஹா ஹா ! கிளப்புங்கள்

Rajan சொன்னது…

//விவேக்கின் பெரியார் கருத்துகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு, கீழ்கண்ட வீடியோவே சான்று//

விவேக் மாநிலம் முழுதும் உள்ள தேவர் இன சங்க விழாக்களில் கை நனைத்து விட்டு சாதி வேறுபாடு பத்தி வாய் காத்து வரைக்கும் கிழிய நாயம் பேசறஆளு

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சாருவை பெரியாரிஸ்ட் என்று பகர்ந்த அந்த ஜந்துவை தூ என்று துப்பிவிடமுடியும் என்று நினைத்தால் முடியாமல் போகும்பட்சத்தில், சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!

என்னை நிராயுதபாணியாக்கிற அந்த ஜந்துவிற்கு நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது." - சாரு
//

புத்தி பேதலிச்சு பேசுறவனையெல்லாம் நம்புறது உங்க தப்பு!

பெயரில்லா சொன்னது…

எல்லாரும் முதலில் நன்றாகத்தான் தொடங்குகிறார்கள். பின்னர் பணம், புகழ் எனவாகும்போது, அதை தமக்கு அளித்தவர்களைப் பாதிக்குமே என்பதற்காக அவர்கள் தங்கள் கொள்கைகளை அடக்குகிறார்கள். அல்லது மாற்றிக்கொள்கிறார்கள்.

இப்படி விவேக்கின் சரிவை நியாயப்படுத்தலாம். எனினும், பொதுவாழ்கையில் உள்ளவர்கள் - நடிகர்கள், அரசியல்வாதிகள் - போன்றோரிடம் consistency பார்த்தல் நமக்கு நாமே சூடுபோட்டுக்கொள்வதாகும்.

எழுத்தாளனுக்கு இது தேவையில்லை. எனினும் எழுத்தாளன் பொது விச்யங்களில் தலையிட்டு அவற்றைப்பற்றி எழுதும்போது, அவனும் நடிக்கிறான்; அல்லது, சரிகிறான் பல்வேறு கரணியங்களுக்காக -ஜெயகாந்தன், சாருநிவேதிதா எ.டு.

பெரியாரிஸ்ட் என்பவர் பெரியாரின் அனைத்துக்குகொள்கைகளையும் ஏற்றுக்கொள்பவரா? அல்லது வேண்டியவற்றை மட்டும் கொள்பவரா?

ஏனென்றால், ஜெயலலிதாவும் சிலவேளைகளில் பெரியார் கொள்கையென்கிறார். அவர் படத்தையும் மேடையில் வைக்கிறார். வி.காந்த், வைகோ, இப்படி பலர்.

ஒரே குழப்பம்தாம்.

Kesavan சொன்னது…

என்னை பொறுத்த வரை யாருமே பெரியாரிஸ்ட் கிடையாது . எல்லாம் வெளி உலகத்துக்கு வேஷம் போடுகிறவன் தான்.

கல்வெட்டு சொன்னது…

ராஜன் said...
//விவேக் மாநிலம் முழுதும் உள்ள தேவர் இன சங்க விழாக்களில் கை நனைத்து விட்டு சாதி வேறுபாடு பத்தி வாய் காத்து வரைக்கும் கிழிய நாயம் பேசறஆளு//

அய்யா வைரமுத்து என்ன பண்றாக அல்லது அய்யா பாரதிராஜா என்ன பண்றாகா..எல்லோரும் சாதி என்று வந்தால் பல்டி அடிப்பார்கள்.


சாதிச் சங்கத்தில் சொம்பு தூக்காத அறிவாளிகள் குறைவு.

நடிகர், கதை எழுதிகள் என்று எல்லோரும் யாருக்கு சொம்பு தூக்கலாம் என்று காத்து இருப்பார்கள் போல.

சுஜாதா ( கதை,சினிமா எழுத்து என்று இருந்தவர்) பார்ப்ஸ் சங்கத்தில் கலந்துகிட்டு "அவாவைவிட இவா" எழுதுறேன் என்று கூக்குரலிட்டவர்தான். படுத்துக்கிடக்கும் புலிகூட "நக்கிப்பிழக்கும் நாய்கள்" என்று சமஸ்கிரகத்துக்கு சொம்பானவர்தான்.

சாதி,மதப் பற்று இல்லாத மனிதர்கள் குறைவு. :-((((

.

இனியா சொன்னது…

ungal Vallalaarum Periyaarum ondruthaan padatthil kooda periyaar sariyaa theriya maattengiraare....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணே! உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனக்கு பிடித்த 10 பெண்கள்

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

ராஜ நடராஜன் சொன்னது…

எதிரிகள் நீங்கள்-சொல்வது சாரு.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

எல்லாமே ஒரு விளம்பரம் தாண்ணே.

வஜ்ரா சொன்னது…

http://arabnews.com/saudiarabia/article29180.ece

பேராசிரியர் பெரியார் தாச"ர்" பெரியார் மடத்தைவிட்டு ஓடி அரேபியாவில் உள்ள மக்காவில் தஞ்சம் புகுந்துவிட்டாராமே ?

என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

இணைய பெரியாரிஸ்டுகள் மயான அமைதி காக்கும்ப் போதே தெரிகிறது...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணே உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்