பின்பற்றுபவர்கள்

11 மார்ச், 2010

சீடர்கள் தப்பி ஓட்டம் !

இவர்கள் இருவரை பார்த்ததும் சென்னை விமான நிலையத்தில் "சீடர்கள் தப்பி ஓடுகிறார்களோ !?" என்று நினைத்திருப்பார்கள். நல்லவேளை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் யாரும் இல்லை, இருந்திருந்தால் தற்போதைய பரபரப்பில் ஊகமாக இருவரின் படங்களைப் போட்டு எதோ ஒரு நாளிதழில் பரபரப்பு செய்தி வெளி இட்டு இருப்பார்கள்.

ஸ்வாமி ஓம்கார் மற்றும் உலக பதிவர் கேபிள் சங்கர் (உண்மை தாங்க, என்னிடம் வலைப்பதிவு சாராத பல நண்பர்கள் கேபிளாரின் பதிவுகளை விரும்பிப் படிப்பதாக சொல்வதுண்டு) இருவர் வரவிருந்த புலி விமானம் சென்னையிலேயே 2:30 மணி நேரம் காலந்தாழ்த்தி புறப்பட குறித்த மாலை 8:30 மணிக்கு பதிலாக 10:30 மணிக்கு தரையிரங்கி, குடிநுழைவு சோதனைகளை முடித்துக் கொண்டு 11:00 மணிக்கு வெளியே வந்தார்கள்.
வெற்றிக் கதிரவன், நான்

வெற்றி கதிரவன் கேபிளாருக்கு சிறப்பு வரவேற்பு அட்டையை பிடித்திருந்தார். துக்கள் மகேஷ் முன்பே வந்துவிட்டார் ஜோசப் பால்ராஜ் தனது சொந்தக்காரை எடுத்துவந்து இருவரையும் வரவேற்க்க நின்றார். விஜய் ஆனந்த் தனது குட்டி பையனுடன் வந்திருந்தார், ஜெகதீசன், ரோஸ்விக் மற்றும் பிரபாகர் ஆகியோரும், ஓம்காரின் யோகா மாணவர் திரு வைரவன் வந்திருந்தார். வந்தவுடன் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்த பிரபாகர், 'கோவியார் வரவில்லையா ? என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். என்னைய ரொம்ப 'பெருசா'(!) நினைத்திருப்பார் போல :). நாங்களெல்லாம் காத்திருந்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் வெளியே வந்தார்கள். பெட்டியை அடையாளம் கண்டு எடுத்துவர நேரம் விரைந்துவிட்டதாம். "இமிக்ரேசன் பிரச்சனை ஒண்ணும் இல்லையே ?" ஓம்காரிடம் கேட்டேன். "நீளமான தலைமுடி வைத்திருந்தால் ஒருவேளை கேள்விகள் கேட்பாங்க போல, என்கிட்ட ஒண்ணும் கேட்கவில்லை" நகைச்சுவையாக சொன்னார்.
கேபிள் சங்கர், ஸ்வாமி ஓம்கார்

கேபிளாரிடம் நீங்கள் பரத்தை வைத்து இரண்டாம் பாகமாக இயக்கப் போகும் "தம்பிக்கு இந்த ஊரு" படத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை, போஸ்ட் மேன், பொட்டிக்கடை வைத்திருப்பவர் இப்படி சின்ன ரோலே இருந்தால் என்னை போட்டுவிடுங்க, என்னை வச்சு கதாநாயகனாக அடுத்தப்படம் எடுக்கும் போது சொல்லுங்க அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டு கால்சீட் தருகிறேன் என்று சோசப்பு லொள்ளினார். அவ்வ்வ்

"கேபிள் அங்கிள்" ன்னு சொன்னதால் எனக்கு அவமானமாகிப் போச்சு, நான் இப்படியே திரும்பிப் போகிறேன் என்று கேபிள் முரண்டு பிடிக்க அவரை சமாதானம் செய்து வெளியே கூட்டிவருவதற்கு 1000 முறை "சாரி அங்கிள்" சொல்லிவிட்டார் வெற்றிக்கதிரவன்.
மகேஷ், பிராபகர், கேபிள் சங்கர் மற்றும் ஜோசப்

ஜோசப், விஜய் ஆனந்த மகன், விஜய் ஆனந்த்

எல்லோரையும் அவரவர் இருப்பிடம் நோக்கி அனுப்ப மணி இரவு 11:45 ஆகி இருந்தது.

கேபிளார் ஒருவாரம் வரையில் இருப்பார், ஸ்வாமி ஓம்காரின் யோகா நிகழ்ச்சிகள் 10 நாள்கள் வரையில் நடக்கின்றது. இருவரின் தொடர்புகளுக்கான அலைபேசி எண்களை பிறகு இங்கு வெளி இடுகிறேன். (கேபிள் லொகேசன் பார்ப்பதிலும் கதாநாயகி தேர்விலும் பிசியாக இருந்தால் அலைபேசியை எடுக்க மாட்டார்)
:)

கேபிள் சங்கரின் அலைபேசி எண் (0065) 91010419

ஸ்வாமி ஓம்காரின் நிகழ்ச்சிகள் :



22 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

படங்கள் நல்லாயிருக்கு

ஐ போனில் எடுத்ததா?

கோவி.கண்ணன் சொன்னது…

முதல் 2 படம் ஐயங்கார் உபயம். :)

மற்ற படங்கள் ஐபோனு.

பித்தனின் வாக்கு சொன்னது…

கடைசி படத்தில் பவ்யமாக கையைக் கட்டிக் கொண்டு இருப்பவர் யாருங்க. எங்கனயோ பார்த்த மாதிரி இருக்கு. இவ்ளே பயம் பையன் கிட்டயா அல்லது விஜய் ஆனந்த் கிட்டயா?

நட்புடன் ஜமால் சொன்னது…

வருக!
வருக!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-))

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

சாமி நிகழ்ச்சி சிறக்கவும், கேபிள் அங்கு உண்டு பெருக்கவும் வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// எம்.எம்.அப்துல்லா said...

சாமி நிகழ்ச்சி சிறக்கவும், கேபிள் அங்கு உண்டு பெருக்கவும் வாழ்த்துகள்.//

கேபிள் இதுக்கும் மேல பெருத்தார் என்றால் போகும் போது 2 பயணச் சீட்டு கேட்பாங்க.

குசும்பன் சொன்னது…

//கதாநாயகி தேர்விலும்//

அண்ணே இப்படி சொல்லக்கூடாது, "டிஸ்கசனில்" பிஸியாக இருந்தால் என்று சொல்லனும்:)))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கேபிள் சங்கர் மற்றும் சாமி ஓம்கார் இருவரையும் வரவேற்போம்!

கேபிள் லொக்கேசன் பார்க்க வந்திருக்காரா?
எனக்கு கீரோ வாய்ப்பு கிடைக்குமான்னு கேக்கனும்!
:)
கோவியானந்தா,
பித்தானந்தா,
விசயானந்தா(பிரேமானந்தா)
திருலதிரு யூசுப் ஐயங்கார் எல்லோரும் போனேளா!?
:)

Santhosh சொன்னது…

மாப்பி,
டிஸ்கஸ்ன்னா வேற.. தேர்வுன்னா வேற :)..

சுவாமிஜிக்கு வரவேற்ப்பு அட்டை வைக்காத்தன் நுண்ணரசியலை கடுமையாக எதிர்க்கிறேன் :)..

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//திருலதிரு //

ஜோதிபாரதியண்ணன் தமிழ் ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு :))

Ravichandran Somu சொன்னது…

Welcome Swamiji, Cableji!

பித்தனின் வாக்கு சொன்னது…

// கோவியானந்தா,
பித்தானந்தா,
விசயானந்தா(பிரேமானந்தா)
திருலதிரு யூசுப் ஐயங்கார் எல்லோரும் போனேளா!?
:)//
ஜோதி இந்தக் குழந்தையை விட்டுட்டுப் போய்விட்டார்கள். புதங்கிழமை வருவதாக கூறினார்கள், ஆனால் ஏர்போர்ட்டுக்ப் போவதை சொல்லவில்லை. நான் டூ விடலாம்மா என்று யோசித்துக் கொண்டுள்ளேன். ஆனால் இரவு 11.45 என்பதால் எனக்கு சிரமம் ஆதலால் கேக்கவில்லை.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

தலைப்பை பார்த்தவுடன் அண்ணன் இன்னும் மேட்டரை விடலையான்னு நினைச்சேன்.

வாழ்த்துகள் அண்ணா.

வருகை புரிந்தவர்களுக்கும் உங்களுக்கும்.

ஆமா முன்னாடி பார்த்த போட்டோக்களை விட இதில் இளமையா இருக்கிங்க. ஏதாவது சாமிகிட்ட மருந்து சாப்பிட்டிங்களா :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமா முன்னாடி பார்த்த போட்டோக்களை விட இதில் இளமையா இருக்கிங்க. ஏதாவது சாமிகிட்ட மருந்து சாப்பிட்டிங்களா :)//

கேபிளை அங்கிள் ஆக்கினதால உங்களுக்கு அப்படித் தெரிகிறதென்றாலும் யூத்தெல்லாம் அப்படித்தான் இருப்பாங்க.

மனதில் மகிழ்ச்சி நிலைத்திருந்தால் இளமை என்றுமே பின் தொடரும் - கோவியானந்தா

இதைத்தான் நித்தி பெயராக வைத்திருக்கிறார். :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

///மனதில் மகிழ்ச்சி நிலைத்திருந்தால் இளமை என்றுமே பின் தொடரும் - கோவியானந்தா ///

இது புதுசா...

நிகழ்காலத்தில்... சொன்னது…

//மனதில் மகிழ்ச்சி நிலைத்திருந்தால் இளமை என்றுமே பின் தொடரும் - கோவியானந்தா

இதைத்தான் நித்தி பெயராக வைத்திருக்கிறார். :)//

ஆசிரமத்திற்கு இடம் பார்த்து விட வேண்டியதுதான் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

/நிகழ்காலத்தில்... said...

//மனதில் மகிழ்ச்சி நிலைத்திருந்தால் இளமை என்றுமே பின் தொடரும் - கோவியானந்தா

இதைத்தான் நித்தி பெயராக வைத்திருக்கிறார். :)//

ஆசிரமத்திற்கு இடம் பார்த்து விட வேண்டியதுதான் :)))//

அப்பறம் ஆசிரமத்துக்குள் கேமரா வைக்க இடம் பார்க்கனும்.

:)

ரோஸ்விக் சொன்னது…

அந்த air hostess சொன்னதை குறிப்பிட மறந்துட்டீங்களே...

நம்ம கேபிளார்... நான் எல்லாம் யூத்து... பிளைட்-ல புடிக்காம நின்னுகிட்டே வருவோம்னு அடம் பிடிச்சத சொல்லவே இல்ல...

VISA சொன்னது…

thalaivara seekiram anupi vaiunga. chennai sornthu poachu.

Ashok D சொன்னது…

:)

பனித்துளி சங்கர் சொன்னது…

புகைப்படங்கள் அனைத்தும் அருமை !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்