பின்பற்றுபவர்கள்

10 மார்ச், 2010

தினமலர் பரிந்துரை செய்த ஆன்மிக சிந்தனையாளர் நித்தி !

நித்தியை ஆன்மிகவாதி என்ற லேபிள் கொடுத்து மக்கள் முன் அறிமுகப் படுத்தியவர்கள் பலர், நித்தி அம்பலப்பட்ட பிறகு தடாலடியாக பலர் நித்திக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது போல் நித்தி பற்றிய எதிர்கருத்துகளைத் திரட்டி எழுதிவருகிறார்கள், நித்தியின் விடியோவைப் போட்டு காசு பார்த்தாலும் நக்கீரன் சென்ற ஆண்டே நித்தி ஒரு கல்லூரியில் மாணவிகளுக்கு கட்டுபிடி சிகிச்சை செய்து கசமுசா செய்தார் என்று வெளி இட்டிருந்தது. நக்கீரன் குழுமம் நடத்தும் ஆன்மிக இதழ் மற்றும் தினகரனில் நித்தி கட்டுரைகள் வந்ததா என்று சரியாக தெரியவில்லை. குமுதம் நித்திக்காக கதவை திறந்து வைத்திருந்தது. தினமலர் நித்தியை சிறந்த ஆன்மிகவாதிகளுல் ஒருவர் பட்டியலில் இணைத்து அவரின் அருளுரைகளை வெளி இட்டுவந்தது. இவை எல்லாம் நித்தி வீடியோவில் சிக்கும் முன்பு தான். தினமலர் தற்போது நித்தியை ஆன்மிக அருளாளர்கள் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டிருந்தது.

தற்போது இருக்கும் பட்டியலில் நித்திபெயர் இல்லை. தினமலர் முன்பே நித்தியை நம்பவில்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதற்கும் கூகுள் கேச் வழியாகத் தலைப்பைத் தேடலாம் என்று பார்த்தால் நித்தி அம்பலப்படும் முன் தினமலர் நித்தியையும் ஆன்மிகவாதிகளின் பட்டியலில் இணைந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

நித்தி சிக்கிய பிறகு


நித்தி சிக்குவதற்கு முன்
****

லோக குரு, ஜெகத் குரு, அவதாரம் இவை எல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு செய்தி இதழ்கள் சூட்டும் வெறும் புகழ்ச்சி மகுடம், வேடம் களையும் போது செய்தி இதழ்களே தொடர்புடைய அந்த நபருக்கு செருப்பு மாலை போடுகிறார்கள். இவர்கள் ஆன்மிகவாதிகள் என்று அறிமுகப்படுத்தும் நபர்களே இப்படி என்றால் 'வாலிப வயோதிக அன்பர்களுக்கான சிட்டுக்குருவி லேகியம், சித்தவைத்திய விளம்பரம், அவர்களாகவே இட்டுக்கட்டி எழுதிக் கொள்ளும் திரைச் செய்திகள் இவை எல்லாம் அப்பாவிகளை ஏமாற்ற செய்தி இதழ்கள் தரும் தரமற்ற சேவை விளம்பரங்களின்றி வேறென்ன ?

34 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

காஞ்சிப் பெரியவர் என்பது யார்?

தேவனாதனா?

ஜெயேந்திரனா?


இவங்க ரெண்டு பேரும் நித்தியானந்தத்த விட மோசமாச்சே!?

தினமலரைப் தினமும் படிச்சுக் கிட்டே இப்படி அம்பேல் பண்ணுறியளே!?

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

காஞ்சிப் பெரியவர் என்பது யார்?

தேவனாதனா?

ஜெயேந்திரனா?


இவங்க ரெண்டு பேரும் நித்தியானந்தத்த விட மோசமாச்சே!?

தினமலரைப் தினமும் படிச்சுக் கிட்டே இப்படி அம்பேல் பண்ணுறியளே!?//

தப்பா புரிஞ்சிட்டேள், காஞ்சி பெரியவா என்று அவர்கள் குறிப்பிட்டு இருப்பது சந்திரசேகர ஸ்வாமிகள்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

தினமலரை ஒரு பார்ப்பனப் பத்திரிகையாக மட்டுமே பார்த்து, நீங்கள் விமரிசித்திருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை! ஏதோ ஒரு விதத்தில் தினமலர் மீது உங்களுடைய அரிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதால் அதைப் பற்றிக் கூட ஒன்றும் சொல்வதற்கில்லை.

நித்தியை ஆன்மீக குருவாக அறிவித்து வெளிப்படுத்தியது முதலில் தினமலர் இல்லை! வணிகம் செய்வதில் மிகவும் சாமர்த்தியக்காரர்களான செட்டியார்ப் பத்திறிகை குமுதம் தான் நித்தியானந்தாவை, இன்றைய ரேஞ்சுக்கு உயர்த்திப் பிடித்தது!

நித்தி சிக்கிக் கொண்டதும், அதையும் வெட்கமில்லாமல்,படம்பிடித்துக் காசு பார்த்துக் கொண்டிருக்கும் குமுதம் உங்களுடைய கண்களுக்குத் தெரியாது இல்லையா!

Typical dravidian bias! Always getting things in the wrong perspective!

Sanjai Gandhi சொன்னது…

//நித்தியை ஆன்மிகவாதி என்ற லேபிள் கொடுத்து மக்கள் முன் அறிமுகப் படுத்தியவர்கள் பலர், நித்தி அம்பலப்பட்ட பிறகு தடாலடியாக பலர் நித்திக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது போல் நித்தி பற்றிய எதிர்கருத்துகளைத் திரட்டி எழுதிவருகிறார்கள், நித்தியின் விடியோவைப் போட்டு காசு பார்த்தாலும் நக்கீரன் சென்ற ஆண்டே நித்தி ஒரு கல்லூரியில் மாணவிகளுக்கு கட்டுபிடி சிகிச்சை செய்து கசமுசா செய்தார் என்று வெளி இட்டிருந்தது. நக்கீரன் குழுமம் நடத்தும் ஆன்மிக இதழ் மற்றும் தினகரனில் நித்தி கட்டுரைகள் வந்ததா என்று சரியாக தெரியவில்லை. குமுதம் நித்திக்காக கதவை திறந்து வைத்திருந்தது. தினமலர் நித்தியை சிறந்த ஆன்மிகவாதிகளுல் ஒருவர் பட்டியலில் இணைத்து அவரின் அருளுரைகளை வெளி இட்டுவந்தது. இவை எல்லாம் நித்தி வீடியோவில் சிக்கும் முன்பு தான். தினமலர் தற்போது நித்தியை ஆன்மிக அருளாளர்கள் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டிருந்தது./

இந்த 11 வரிகளில் 11 முறை நித்தி என்ற சொல் இடம் பெற்றிருக்கின்றன. ஏன் ஸ்வாமிஜி, எதுவும் வேண்டுதலா?

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...

தினமலரை ஒரு பார்ப்பனப் பத்திரிகையாக மட்டுமே பார்த்து, நீங்கள் விமரிசித்திருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை! ஏதோ ஒரு விதத்தில் தினமலர் மீது உங்களுடைய அரிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதால் அதைப் பற்றிக் கூட ஒன்றும் சொல்வதற்கில்லை.//

நான் இந்த பதிவில் தினமலரை பார்பன பத்திரிக்கை என்று குறிப்பிடவில்லை. இந்த பதிவில் பார்பன என்ற சொல்லும் இல்லை.

//நித்தியை ஆன்மீக குருவாக அறிவித்து வெளிப்படுத்தியது முதலில் தினமலர் இல்லை! வணிகம் செய்வதில் மிகவும் சாமர்த்தியக்காரர்களான செட்டியார்ப் பத்திறிகை குமுதம் தான் நித்தியானந்தாவை, இன்றைய ரேஞ்சுக்கு உயர்த்திப் பிடித்தது!
//

குமுதம் செட்டியார் பத்திரிக்கை என்று நீங்கள் இங்கே குறிப்பிடும் வரை தெரியாது. நான் சாதிய அடையாளம் குறிப்பிட்டு இருக்கிறேன் என்பதாகச் சொல்லும் நீங்கள் மற்றொரு பத்திருக்கைக்கு சாதிய முத்திரைக் குத்துவது சரியான நகை முரண்.

//
நித்தி சிக்கிக் கொண்டதும், அதையும் வெட்கமில்லாமல்,படம்பிடித்துக் காசு பார்த்துக் கொண்டிருக்கும் குமுதம் உங்களுடைய கண்களுக்குத் தெரியாது இல்லையா!//

குமுதம் பற்றி நேற்றைய இன்றைய இரு பதிவுகளிலுமே நீங்கள் சொன்ன காசு பார்க்கும் மேட்டரை குறிப்பிட்டு இருக்கிறேன்.

//Typical dravidian bias! Always getting things in the wrong perspective!//

இதுக்கு எதிர்பாகத்தான் நானும் சொல்லனும். இருந்தாலும் நான் சொல்ல விரும்பல.
:)

நன்றிங்க ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//
இந்த 11 வரிகளில் 11 முறை நித்தி என்ற சொல் இடம் பெற்றிருக்கின்றன. ஏன் ஸ்வாமிஜி, எதுவும் வேண்டுதலா?//

சஞ்செய், உனக்கு புள்ளிவிவர புலின்னு பட்டம் கொடுத்தால் என்ன ?

Sanjai Gandhi சொன்னது…

விசயகாந்து கூட கூட்டணி வந்தாலும் வரலாம்னு சொல்றாங்க கோவிஜி.. அதுக்கு ஒத்திகை தான்.. :))

( எதாச்சும் புள்ளிவிவரம் சொல்லித்தானே அவர் கூட சேராம இருக்கனும்..:) )

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏதோ ஒரு விதத்தில் தினமலர் மீது உங்களுடைய அரிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள் //

கிருஷ்ணமூர்த்தி ஐயா,

நீங்கள் தினமலரின் மதுரை ஏஜென்சி என்று தெரிந்தால் நான் தினமலர் குறித்து எழுதுவதைக் குறைத்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு உண்மை தெரியனும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...

விசயகாந்து கூட கூட்டணி வந்தாலும் வரலாம்னு சொல்றாங்க கோவிஜி.. அதுக்கு ஒத்திகை தான்.. :))

( எதாச்சும் புள்ளிவிவரம் சொல்லித்தானே அவர் கூட சேராம இருக்கனும்..:) )//

கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் மூப்பனாருக்கு கூட இருந்ததில்லை 'பொடியன்' உனக்கு அந்த வாய்ப்பு கொடுப்பாங்களா என்ன ?

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/நீங்கள் தினமலரின் மதுரை ஏஜென்சி என்று தெரிந்தால் நான் தினமலர் குறித்து எழுதுவதைக் குறைத்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு உண்மை தெரியனும்./

எவருக்கும் ஏஜண்டாக இருந்து பழக்கமில்லை! தினமலர் டைப் செய்திகளை நான் விரும்பிப் படிப்பவனுமல்ல. ஆனால், இங்கே உண்மை கொஞ்சம் திசை திருப்பப் பட்டிருக்கிறது, குமுதம் மாதிரி உயர்த்திப் பிடித்துக் காசுபார்த்தவர்களும் சரி, இழிவுபடுத்திச் செய்தி போட்டு அதிலுமே காசு பார்த்த நக்கீரன் மாதிரி ஊடகங்களும் சரி, நித்தி மாதிரி மோசடிகளை வளர்த்து விட்டதே இந்த ஊடகங்கள் தான்! ஊடகங்களால் வளர்க்கப் பட்ட ஒரு கொழுத்த ஆடு, ஊடகங்களாலேயே பலி கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைத் தவிர வேறெந்த உண்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

ஊரான் தோட்டத்தை மேய்ந்து நாசப் படுத்தும் வேறு சில ஆடுகளும் ஊடகங்கள் உதவியால் இங்கே கொழுத்து வளர்ந்து கொண்டிருக்கின்றன! என்ன மாயமோ, அற்புதமோ, அந்த ஆடுகளின் தந்தை பெயர், அப்புறம் வரிசையாக மற்றவர்கள் பெயரும் கூட வரலாம், சென்னை நகர வீதிக்கு வைக்கப் பட்டிருக்கிறது!

லதானந்த் சொன்னது…

சாதி இரண்டொழிய வேறில்லை.
1) ஏமாத்துறவன்
2) ஏமாறுகிறவன்

Unknown சொன்னது…

இவங்க எல்லாருமே இப்படித்தான் பாஸ்.

நித்தியின் ஊது கோல் (தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டாம் :))
சாருவின் சமீபத்திய அறிவிப்பை பார்த்தீர்களா

Chitra சொன்னது…

தினமலரும் குமுதமும் இன்னும் இவை போன்ற பிற பத்திரிகைகளும் படித்து ஆன்மிகத்தை வளர்த்து கொள்ளும் மக்கள்.

Robin சொன்னது…

தீண்டாமையை கடைபிடித்த பெரியவாளை(?) ஆதரிக்கும் தினமலரை பார்ப்பன பத்திரிகை என்றழைப்பதில் தவறென்ன?

வேடிக்கை மனிதன் சொன்னது…

//ஊடகங்களால் வளர்க்கப் பட்ட ஒரு கொழுத்த ஆடு, ஊடகங்களாலேயே பலி கொடுக்கப் பட்டிருக்கிறது//

வழிமொழிகிறேன்.

மணிஜி சொன்னது…

சாமியார்களில் இரண்டு வகைதான்..

1. மாட்டிக்கொண்டவன்

2. மாட்ட்க்கொள்ளாதவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//தண்டோரா ...... said...

சாமியார்களில் இரண்டு வகைதான்..

1. மாட்டிக்கொண்டவன்

2. மாட்ட்க்கொள்ளாதவன்//

இல்லாவிடில் வேற இரண்டு

1. ஆணுறை மாட்டிக்கொண்டவன்

2. ஆணுறை மாட்ட்க்கொள்ளாதவன்

:)

Raja சொன்னது…

i am still waiting for my comment to release here.. regarding 'swami' omcar...

கோவி.கண்ணன் சொன்னது…

// Raja said...

i am still waiting for my comment to release here.. //

திரு ராஜா,

கோவி.கண்ணன் எனது அவதூறு பின்னூட்டத்தை ரிலிஸ் செய்யவில்லை என்று தஞ்சாவூர் கல்வெட்டுக்கு அருகில் எழுதிவிட்டு குத்த வைத்து உட்காரவும்.

Raja சொன்னது…

//கோவி.கண்ணன்
// Raja said...

i am still waiting for my comment to release here.. //

திரு ராஜா,

கோவி.கண்ணன் எனது அவதூறு பின்னூட்டத்தை ரிலிஸ் செய்யவில்லை என்று தஞ்சாவூர் கல்வெட்டுக்கு அருகில் எழுதிவிட்டு குத்த வைத்து உட்காரவும்.
2:24 PM, March 10, 2010//

இதுல என்ன அவதூறு கண்டீங்க‌, மாட்டிய திருடன் நித்தியானந்தன், நீங்க சப்போர்ட் பண்ற மாட்டாத திருடனுங்க பத்தி கேட்டேன்...அது அவதூறா? அந்த திருடனும் மாட்னதுக்கப்புறம்... தஞ்சாவூர் என்னா.. எல்லா கல்வெடுலயும் எழுதிடலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Raja said...

//கோவி.கண்ணன்
// Raja said...

i am still waiting for my comment to release here.. //

திரு ராஜா,

கோவி.கண்ணன் எனது அவதூறு பின்னூட்டத்தை ரிலிஸ் செய்யவில்லை என்று தஞ்சாவூர் கல்வெட்டுக்கு அருகில் எழுதிவிட்டு குத்த வைத்து உட்காரவும்.
2:24 PM, March 10, 2010//

இதுல என்ன அவதூறு கண்டீங்க‌, மாட்டிய திருடன் நித்தியானந்தன், நீங்க சப்போர்ட் பண்ற மாட்டாத திருடனுங்க பத்தி கேட்டேன்...அது அவதூறா? அந்த திருடனும் மாட்னதுக்கப்புறம்... தஞ்சாவூர் என்னா.. எல்லா கல்வெடுலயும் எழுதிடலாம்.//

உங்களைப் போன்ற ஆட்கள் விபச்சாரி கைது என்ற செய்தியைப் படித்துவிட்டு தான் உண்டு என்று இருக்கும் எதிர்த்த வீட்டுப் பெண்ணிடம் சென்று நீ கூட அப்படித்தான் நீயும் ஒருநாள் மாட்டுவாய் அப்ப தெரியும் என்று வாய்க்கு வந்தபடி கூறினால் அப்போது கிடைக்கும் பாருங்கள் செருப்படி, சொல்லிப் பார்த்துவிட்டு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வால்பையன் சொன்னது…

யார் அந்த குழந்தையானந்தா சாமி!?

காஞ்சி பெரியவர் என்பவர் கூலிப்படை வைத்து கொலை செய்பவரா!?

சிருங்கேரி சங்கராச்சாரி!?

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

யார் அந்த குழந்தையானந்தா சாமி!?

காஞ்சி பெரியவர் என்பவர் கூலிப்படை வைத்து கொலை செய்பவரா!?

சிருங்கேரி சங்கராச்சாரி!?//

தெரியலையே...ஒருவேளை அந்த சாமியார் குழந்தையோடு இருப்பதை ஒப்புக் கொண்டதால் அந்த பெயர் நிலைத்ததோ என்னவோ !

வால்பையன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி ஐயா,

நீங்கள் தினமலரின் மதுரை ஏஜென்சி என்று தெரிந்தால் நான் தினமலர் குறித்து எழுதுவதைக் குறைத்துக் கொள்கிறேன். //


குத்தூசி பட்டம் வாங்க தயாரா இருப்பிங்க போலயே!

வால்பையன் சொன்னது…

//லதானந்த் said...

சாதி இரண்டொழிய வேறில்லை.
1) ஏமாத்துறவன்
2) ஏமாறுகிறவன்//


வேடிக்கை பாக்குற சாதியை விட்டுடிங்களே சார்!

ப.கந்தசாமி சொன்னது…

இந்தப்பதிவில் தினமலர் , குமுதம் இரண்டும் பத்திரிக்கைகளாகத்தான் பார்க்கப்பட்டிருக்கிறதே தவிர இதில் சாதி எங்கே வருகிறது என்று எனக்குப் புரியவில்லை.

இந்தப்பின்னூட்டத்திற்கு 'நீ ஒரு மானங்கெட்ட சாதி, அதனால்தான் உனக்குப்புரியவில்லை என்று பதில் வந்தாலும் வரலாம.

அப்புறம் கண்ணன், இந்த சிட்டுக்குருவி லேகிய விளம்பரம் ஒன்று அனுப்புங்களேன், எங்க குரூப்ல ரெண்டு மூணு பேருக்கு அர்ஜெண்ட்டா தேவைப்படுது.

கட்டபொம்மன் சொன்னது…

///தப்பா புரிஞ்சிட்டேள், காஞ்சி பெரியவா என்று அவர்கள் குறிப்பிட்டு இருப்பது சந்திரசேகர ஸ்வாமிகள். ///

அப்டியா...?..

Kesavan சொன்னது…

பழைய பட்டியலில் 16 பேர் இருந்தனர். புதிய பட்டியலில் 12 பேர் தானே இருகின்றனர். மற்றவர்கள் என்ன செய்தார்கள். :)
அன்னை , பட்டினத்தார் , அகோபில மட ஜீயர் இவர்களின் பெயர்களை ஏன் எடுத்து விட்டார்கள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

போலிச்சாமியார் விளம்பரங்களை விட போலி வைத்தியர்கள் விளம்பரங்கள்தான் அதிகம் வருகிறது. செய்தி மாதிரியே வெளியிட்டு அடியில் பொடி எழுத்தில் விளம்பரம் என்று போடுவார்கள்.

அது போல். பேப்பர் அல்லது புத்தகத்தின் ஏதாவது ஓரத்தில் பொடி எழுத்துக்களில் இந்த புத்தகத்தில் வெளியாகும் விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று. என்னா ஒரு பத்திரிகை சட்டம்.

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
லோக குரு, ஜெகத் குரு, அவதாரம் இவை எல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு செய்தி இதழ்கள் சூட்டும் வெறும் புகழ்ச்சி மகுடம், வேடம் களையும் போது செய்தி இதழ்களே தொடர்புடைய அந்த நபருக்கு செருப்பு மாலை போடுகிறார்கள்.
//

ஏதோ சொல்வாங்களே...உயிரோட இருந்தா மீனு செத்தா கருவாடு...சில நேரம் கருவாடு மீனை விட நல்லா விக்கும்...

எப்படி இருந்தாலும் இவனுங்களுக்கு காசு...குமுதம் தொடர் ஆரம்பிக்க போறானுங்களாம்...தினமலர் தினமும் நியூஸ் போட்றானுங்க...நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைன்னு சொல்லிக்கிற ச்சீ..வி..என்ன பண்ணப் போறானுங்கன்னு தெரியலை...

ஆனா ஒண்ணு...இவனுங்க இந்த பொழப்புக்கு விபச்சாரம் செய்ய போகலாம்!

அது சரி(18185106603874041862) சொன்னது…

ஆமா, ரெண்டாவது பட்டியல்ல அகோபில மடம் ஜீயரை காணோமே?? அடுத்து அவரு வீடியோவா இல்லை ஆளு டிக்கட் வாங்கிட்டாரா?

மணிகண்டன் சொன்னது…

In the next five years, if pranava peedam is caught up in controversies and people blame you that you are the one who made it popular through internet, what would be your response ? (This is not to demean omkar but just a question to you)

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிகண்டன் said...

In the next five years, if pranava peedam is caught up in controversies and people blame you that you are the one who made it popular through internet, what would be your response ? (This is not to demean omkar but just a question to you)//

என்னிக்காவது இறப்போம் என்று தெரிந்து இன்னிக்கு மனிதர் எவரும் ஆசைப்படாமல், சாப்பிடாமல் இருப்பது இல்லை.

ஒரு யானைக்கு மதம் பிடித்தவுடனேயே, எல்லா யானைக்கும் ஒரு நாள் மதம் பிடிக்கத்தான் செய்யும், சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று நினைப்பது தேவையற்ற அச்சம்.

நாளைக்கு நீங்க கூட சாமியாராக போனால் உங்களுக்கும் கூட என்னால் உத்திரவாதமெல்லாம் தரமுடியாது.

நான் ஓம்காரின் கோவில் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு செய்திருக்கிறேன். மற்றபடி அவர் வாழும் தெய்வம், இறைவனின் திரு அவதாரம் என்றெல்லாம் எங்கேயும் குறிப்பிட வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்க நித்தியால் ரொம்ப பாதிகப்பட்டது போல் தெரிகிறது. எல்லா டாக்டரும் டாக்டர் பிராகாஷ் ஆக மாறிவிடுவார்களோ என்கிற அச்சம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

மணிகண்டன் சொன்னது…

// நீங்க நித்தியால் ரொம்ப பாதிகப்பட்டது போல் தெரிகிறது. எல்லா டாக்டரும் டாக்டர் பிராகாஷ் ஆக மாறிவிடுவார்களோ என்கிற அச்சம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. //

True. And also i am a bit skeptical when someone talks about soul cleansing, inner enlightment and all !!! But you did not understand my question relative to this article. But anyways, it is nothing that important to answer. Leave it.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்