பின்பற்றுபவர்கள்

8 மார்ச், 2010

சிங்கையில் ஸ்வாமி ஓம்காரின் திருமந்திரம் சொற்பொழிவு !

வரும் வெள்ளி அன்று மாலை மணி 7:00 - 9.00 மணி வரை, பிரபல வலைப்பதிவர் மற்றும் ஆன்மிக அடியார் திரு ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சொற்பொழிவு நடை பெற இருக்கிறது.

இடம் : வடபத்திர காளியம்மன் கோவில்
நாள் : 12 மார்ச் 2010, வெள்ளிக்கிழமை; நேரம் மாலை 7:00 - 9:00

அனைவரும் வருக அனுமதி இலவசம். சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*****

நாத்திகம் பேசும் நீ ஏன் ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வைத்திருக்கிறாய் என்று பல நண்பர்கள் வியப்புடன் கேள்வியாகவே கேட்கிறார்கள். நான் என்னவோ ஆன்மிக எதிரி என்றும் தீவிர பகுத்தறிவாளன் பெரியார் தொண்டன் என்கிற பிம்பத்தை படிப்பவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். மூடநம்பிக்கையையும், மதவெறி, சாதிவெறியையும் எதிர்ப்பவன் இறை நம்பிக்கையற்றவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதே ஆன்மிக மற்றும் நாத்திக நண்பர்களின் எண்ணமாக இருக்கிறது. இது மிகவும் தவறு. மக்களுக்கு பயனிளிக்க வேண்டிய ஒன்று எந்த பெயரில் இயங்கினால் என்ன என்பதை நினைக்க மறந்துவிடுகிறார்கள்.

இந்த பொது புத்திப் புரிதலில் கொள்கை ரீதியான தவறுகள் பெரும்பாலும் மறைக்க அல்லது மன்னிக்கப் படுகிறது. நிறுவனம் அல்லது வணிக மயமாகி இருக்கும் கொள்கைகள் என்ற அளவில் (நாள்பட்ட) தலைமையில் கீழ் இயங்கும் பகுத்தறிவு வாதமோ, ஆன்மிகமோ எல்லாம் ஒன்று தான். எந்த ஒரு கொள்கையும் தலைமையை வைத்து அளவிட செய்ப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கொள்கைக்கான தொண்டன் என்ற பெயரில் தலைமை முறைகேடுகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்று எழுதாத விதியாக எல்லாவித அமைப்புகளிலும் உண்டு.

எனது நிலைப்பாடுகள் என்ற அளவில் பலமுறை நான் எழுதி இருப்பவை, சாதி எதிர்ப்பு அல்லது சாதிச் சம உரிமை. மதவாத எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, தாய் மொழி உணர்வு இதன் அடிப்படையில் தான் நான் எழுதிவருகிறேன். பிறரைத் தாழ்த்தாத வீழ்த்தாத நம்பிக்கைகள் எதையும் நான் குறை சொன்னது கிடையாது. ஓப்பீட்டு அளவில் எங்கள் மதத்தில் தான் அனைவரும் உய்வு அடைகிறார்கள் போன்ற மதபற்று போலி ஆன்மிகத்தை கடுமையாகவே சாடி இருக்கிறேன். பார்பனியம் என்கிற தளத்தில் உயர்வர்க்க, ஆளுமைகளைச் செய்யும் பார்பனர்களையும் பிற சாதியினரையும் கடுமையாகவே சாடி இருக்கிறேன். மற்றபடி பல்வேறு மதம், சமூகம் சார்ந்த நெருக்கமான நண்பர்கள் எனக்கு உண்டு. கொள்கை அளவிலான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் போது அங்கே நட்பையோ, தனிப்பட்ட குணநலன்களையும் நான் கருத்தில் கொள்வது இல்லை. எனக்கு பல தரப்பு நண்பர்கள் உண்டு, அதிலும் ஆன்மிகம் பேசுபவர்கள், ஆன்மிக வாதிகள் நிறையவே உண்டு. நான் கண்ணை மூடிக் கொண்டு நாதிகன் பேசுபவனும் அல்ல கண்ணை மூடிக் கொண்டு ஆன்மிகம் என்ற பெயரில் அடவாடிகள் செய்யும் மதவாதிகளை ஆதரிப்பவனும் அல்ல. நான் பெரியார் மற்றும் வள்ளலார் ஆகியோரை சமமாகவே போற்றுகிறேன் என்பது என் வலைப்பதிவில் அவர்கள் இணைந்திருக்கும் படமே தரவு.

*****

ஸ்வாமி ஓம்கார் பதிவுகள் தமிழ் மணத்தில் புதிதாக இணைந்த போது அவருக்கு பின்னூட்டம் இட்டவர்கள் மிகக் குறைவு, ஏனெனின்றால் இந்து ஆன்மிகம் என்ற பெயரில் பார்பனிய மேலாண்மை போற்றும் கருத்துகளே வெளிவருகிறது என்பதால் ஸ்வாமி ஓம்கார் எழுத வந்த போது, இவரும் ஒரு இந்துத்துவவாதியோ என்று நினைக்க வைத்திருக்கும். நான் அவரது தொடக்க கால 'குரு கீதை' பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட போது கூட அப்படியாக நினைத்தேன். ஆனால் அவரது மறுமொழிகள் இந்துமதத்தை தாங்கிப் பிடிப்பதாக இல்லாமல் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருந்தது. மேலும் புனிதம், புனிதத்துவம் என்ற இனிப்பு தடவி எதையும் எழுதாமல் எதார்த்தமாக எழுதிவந்தார். பிறகு அவருடன் மின் அஞ்சல் தொடர்பு என நட்பாக தொடர்ந்தது அவரது அறிமுகம். தமிழகம் சென்றிருந்த போது கோவையில் நேரடியாக சந்தித்தேன். ஆசிவாங்கவோ, ஜோதிடம் பார்க்கவோ செல்லவில்லை. இணையத்தின் வழியாக அறிமுகம் ஆன நண்பர் என்ற அளவில் தான் எங்கள் சந்திப்பு அமைந்தது. இன்றளவிலும் அப்படித்தான். ஸ்வாமி ஓம்கார் மற்றவர்களுக்கு சாமியார், ஸ்வாமிஜி. வால்பையன் , கல்வெட்டு போன்றவர்கள் பார்வையில் மற்றொரு போலி சாமியார். எப்படியோ....என்னைப் பொருத்த அளவில் மனம் விட்டுப் பேசக் கூடிய நல்ல நண்பர்.

சிங்கையில் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். எனக்கு தெரிந்தது சோதிடம் மற்றும் ஆன்மிகம், ஆன்மிக நிகழ்ச்சி நடத்தலாம், என்னுடைய மாணக்கர் ஒருவர் இருக்கிறார். அவரும் கூட சிங்கையில் நிகழ்ச்சி நடத்தக் கேட்டுக் கொண்டார் என்று ஸ்வாமி ஓம்கார் என்னிடம் குறிப்பிட்டார். அவரது தினம் தினம் திருமந்திர நூல் வெளியான பிறகு, ஏற்பாடு செய்யுங்கள் திருமந்திரம் பற்றி சொற்பொழிவு நடத்துகிறேன் என்றார். அவரது மாணக்கருடன் கலந்து பேசினேன். அவருக்கு தேவை ஸ்வாமி ஓம்கார் நடத்தும் யோகா வகுப்புகள் தான். ஏனெனின்றால் அவரால் 10 - 15 நாட்களுக்கு இந்தியாவில் தங்கி ஸ்வாமி ஓம்காருடன் யோகா கற்றுக் கொள்ள நேரம் வாய்கவில்லை. கூடவே அவரது நண்பர்கள் பலருக்கும் யோக கற்றுக் கொள்ள ஆவல் (யோகாவும் இந்திய ஆன்மிகம் ஒன்றுக் கொண்டு தொடர்புள்ளது என்றாலும், இப்பொழுதெல்லாம் எளிமை படுத்தி ஆன்மிகம் கலக்காமல் பலர் மதச் சார்பற்ற யோகா நடத்துகிறார்கள்)
எனவே திருமந்திரம் சொற்பொழிவுடன் யோகா வகுப்புகளும் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு, ஸ்வாமி ஓம்காருக்கு தேதிகளைக் குறிப்பிட்டு, தங்கும் இடம் முதல் அனைத்தும் ஏற்பாடுகளையும் ஸ்வாமியின் மாணக்கர் மற்றும் நான் இணைந்து செய்தோம்.

ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சியினூடே சனி அல்லது ஞாயிறு பதிவர் சந்திப்புகள் உண்டு. தேதி முடிவு செய்யவில்லை. பின்னர் சிங்கைப் பதிவர்களுடன் கலந்து பேசிவிட்டு எழுதுகிறேன்.

இசை, இயல் தமிழில் இருக்கும் பல்வேறு பக்தி இலக்கியங்களில் திருமந்திரம் சிறப்பு வாய்ந்தது, அதனை ஸ்வாமி ஓம்கார் எளிய விளக்கங்கள் மூலம் திருக்குறள் போல் எளிமை படுத்தி பக்தியாளர்களுக்கு பயனளிக்கும் நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். ஸ்வாமி ஓம்காரின் சொற்பொழிவு அவரது நூல்கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பொருத்த அளவில் ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் சார்ந்த ஒரு இலக்கிய பேச்சாளர் என்பதாகத்தான் நான் அவரை வரவேற்க மற்றும் முன்மொழிய முடிவு செய்தேன்.

நித்யானந்தன் அம்பலப்பட்டு கிடக்கும் இந்த வேளையிலும் ஒப்புக் கொண்டுள்ளபடி நிகழ்ச்சி நடத்த துணியும் ஸ்வாமி ஓம்காரை மனதாரப் பாராட்டுகிறேன்.

சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சிங்கைப் பதிவர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடம் தெரிவித்து அழைக்க வேண்டுகிறேன். யோக வகுப்புகளுக்கு பதிவு செய்வோர் என்னையோ அல்லது ஸ்வாமி ஓம்காரின் மாணாக்கர் திரு வைரவன் (9750 4503) அவர்களையோ அழைத்து பதிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகள் இலவசம்.



பதிவர்கள் அனைவரின் வருகையால் ஆதரவால் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமையும். நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக !

32 கருத்துகள்:

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கருத்துக்கள் கோவி அண்ணா, மிக்க நன்றி.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//இன்றளவிலும் அப்படித்தான். ஸ்வாமி ஓம்கார் மற்றவர்களுக்கு சாமியார், ஸ்வாமிஜி வால்பையன் , கல்வெட்டு போன்றவர்கள் பார்வையில் போலி சாமியாராகக் கூட இருக்கும், என எப்படியோ....என்னைப் பொருத்த அளவில் மனம் விட்டுப் பேசக் கூடிய நல்ல நண்பர்.

//

எனக்கும் சாமியுடன் அதே நிலைப்பாடுதான்.

நண்பர் சாமியின் சிங்கை நிகழ்ச்சி சிறப்புடன் அமைய இறைவனை வேண்டுகின்றேன்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்

குசும்பன் சொன்னது…

கோவி அண்ணாச்சி வீடியோ எப்ப வரும்?

ச்சே சொற்பொழிவு வீடியோ கவரேஜ் உண்டான்னு கேட்டேன்?:))))

அண்ணாச்சி சுவாமி ஓம்காருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அவர் பேச்சை கேட்டாவது என்னை மாதிரி நல்ல பிள்ளையா இருக்க பாருங்க.

Kesavan சொன்னது…

நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஓம்கார் சாமியை சிங்கைக்கு வருக வருக என வரவேற்கிறோம்!

இந்த வயதில் பக்தி இலக்கியங்களை சாமி படித்தறிந்து பகர்வது வியப்புதான்!

சாமி தமிழ் மந்திரம் ஓதட்டும், இனிமையாகும் பொழுதில் செவிமடுப்போம்!

மந்திரம் என்றால் புரியாது என்பது பொதுவான எண்ணம். ஆனால் திருமந்திரம் நம் தமிழாயிற்றே!

சந்திப்போம் சாமியை!

Ravichandran Somu சொன்னது…

//மூடநம்பிக்கையையும், மதவெறி, சாதிவெறியையும் எதிர்ப்பவன் இறை நம்பிக்கையற்றவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதே ஆன்மிக மற்றும் நாத்திக நண்பர்களின் எண்ணமாக இருக்கிறது. இது மிகவும் தவறு. //

சரியாகச் சொன்னீர்கள்....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

வடுவூர் குமார் சொன்னது…

நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்த‌ உங்க‌ள் இருவ‌ருக்கும் சிங்கையில் இல்லாவிட்டாலும் சிங்க‌ப்பூர் ம‌க்க‌ள் சார்ப்பில் ந‌ன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெகதீசன் சொன்னது…

:)

அறிவிலி சொன்னது…

:)

பரிசல்காரன் சொன்னது…

வெற்றியை நிகழ்ச்சி பெற வாழ்த்துகள்.

(வித்யாசமா சிந்திக்கணும்ல)

கோவி.கண்ணன் சொன்னது…

/பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள் கோவி அண்ணா, மிக்க நன்றி.//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கும் சாமியுடன் அதே நிலைப்பாடுதான்.

நண்பர் சாமியின் சிங்கை நிகழ்ச்சி சிறப்புடன் அமைய இறைவனை வேண்டுகின்றேன்.//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.ராதாகிருஷ்ணன் said...

நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...

கோவி அண்ணாச்சி வீடியோ எப்ப வரும்?

ச்சே சொற்பொழிவு வீடியோ கவரேஜ் உண்டான்னு கேட்டேன்?:))))

அண்ணாச்சி சுவாமி ஓம்காருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அவர் பேச்சை கேட்டாவது என்னை மாதிரி நல்ல பிள்ளையா இருக்க பாருங்க.//

:) அரண்டவன் கண்ணுக்கு காவியெல்லாம் நித்யானந்தா.

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஓம்கார் சாமியை சிங்கைக்கு வருக வருக என வரவேற்கிறோம்!

இந்த வயதில் பக்தி இலக்கியங்களை சாமி படித்தறிந்து பகர்வது வியப்புதான்!

சாமி தமிழ் மந்திரம் ஓதட்டும், இனிமையாகும் பொழுதில் செவிமடுப்போம்!

மந்திரம் என்றால் புரியாது என்பது பொதுவான எண்ணம். ஆனால் திருமந்திரம் நம் தமிழாயிற்றே!

சந்திப்போம் சாமியை!//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ரவிச்சந்திரன் said...


சரியாகச் சொன்னீர்கள்....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...

நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்த‌ உங்க‌ள் இருவ‌ருக்கும் சிங்கையில் இல்லாவிட்டாலும் சிங்க‌ப்பூர் ம‌க்க‌ள் சார்ப்பில் ந‌ன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...

:)//
:)

கோவி.கண்ணன் சொன்னது…

/ அறிவிலி said...

:)//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ரிசல்காரன் said...

வெற்றியை நிகழ்ச்சி பெற வாழ்த்துகள்.

(வித்யாசமா சிந்திக்கணும்ல)//

:) மிக நன்றி !

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவியார்!
தங்கள் நிலைப்பாடு பற்றிய தெளிவான விளக்கம் எப்போதும் போல்;
நிகழ்வு சிறப்புற அமையட்டும்.

Unknown சொன்னது…

இவர் ஒண்ணும் நம்ம நித்யா சாமி மாதிரி இல்லையே !!

அப்பாவி முரு சொன்னது…

”பூனைக்குட்டி” முழுசா வெளிவந்துடுச்சே!!!

அப்பாவி முரு சொன்னது…

புலி என்று நினைத்தவரெல்லாம், வெறும் பூனைதானே என்றெண்ணிவிடப் போகின்றார்கள்...

நிகழ்காலத்தில்... சொன்னது…

தங்களின் முயற்சி அனைவருக்கும் பயனாக வாழ்த்துகிறேன்..

Unknown சொன்னது…

நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் மைந்தன்


இவர் ஒண்ணும் நம்ம நித்யா சாமி மாதிரி இல்லையே !!
//

ஒட்டுமொத்த இந்து சமயமும் நித்தி இராஜசேகர் காலில் இருந்தது போல் தாங்கள் நினைத்திருந்தீர்களா ?
:)

ரோஸ்விக் சொன்னது…

நிகழ்ச்சி சிறப்புற அமைய வாழ்த்துகள்.

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல முயற்சி. உங்கள் நிகழ்ச்சி வெற்றிகரமாய் நிகழ என் வாழ்த்துக்கள்.

தனிப்பட்ட முறையில் பகுத்தறிவு உணர்வும் அதே சமயத்தில் ஆன்மீக தேடலும் இருப்பது மிகவும் இயற்கையானது. கருத்துக்களை ஆழ சிந்தித்து ஒரு தெளிவு ஏற்பட்டால்தான் வாழ்க்கையின் பொருள் விளங்கும்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

நிகழ்ச்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள்

ஸ்வாமி ஓம்கார் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலும் சிங்கை வந்து தன் கடமையைச் செய்வது பாராட்டுக்குரியது. பதிவர் சந்திப்புகளிலும் மொக்கை மெயிலிலும் சாதாரண மனிதராக இயல்பாக கலந்து கொள்வதும் மகிழ்ச்சியைத் தருகிறது.

நல்வாழ்த்துகள் கோவி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்