பின்பற்றுபவர்கள்

3 மார்ச், 2010

சத்யானந்தம், சேரு, அதிரச லீலா !

சத்யானந்தத்தின் படுக்கை அறையைக் காட்சிகளை பன் தொலைக்காட்சி காட்டியுள்ளது. பன் தொலைகாட்சி இதற்கு முதன்மைத்துவம் கொடுத்து, தலைப்புச் செய்தியாகக் காட்டி நீலப்படம் போல் காட்சிகளை ஓடவிடுவதன் பின்புலம், பேரம் தெரியவில்லை, இருந்தாலும் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு அந்த (காமக்) காட்சிகளைப் பார்ப்பதை பெற்றோர்கள் தவிர்பது நல்லது. பன் தொலைகாட்சியின் இந்த திடீர் சேவை திராவிடத்தை தாங்கிப் பிடிக்க, பகுத்தறிவை வளர்க்க எடுக்கும் நடவடிக்கை என்று என்னால் நினைக்க முடியவில்லை.

சத்தியானந்தம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை பேசக் கூடியவர், சமுக மாற்றம் ஏற்படுத்தும் பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் பெரியாருடன் ஒப்பிட்டு எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராவாக அண்மையில் தான் எழுத்தாளர் சேறு, அஜய் தொலைகாட்சியில் விளம்பரம் (போல்) பேசி இருந்தார். சத்யானந்ததின் இருட்டு அறையில் பன் தொலைகாட்சி வெளிச்சம் போடுவதற்கு முன்பே சேறுவின் பக்கத்தில் சத்யானந்தம் பற்றிய விளம்பரங்களையும், புகழுரைகளை, பரப்புரைகள் மாயமாக மறைந்துவிட்டு இருக்கிறது.

பொறுப்பான எழுத்தாளர்கள் சத்யானந்தம் போன்ற சாமியார்களை அவதாரங்கள் என்பது போல் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வாசகர்களை பலியாக்கும் முன், தான் தெளிதல் நல்லது. சத்யானந்தம் லீலைகள் குறித்து மற்றபடி பெரிய கருத்து ஒன்றும் இல்லை. இன்று ஒருவர் நாளை வேறொருவர் என்பதாக சந்தியானந்ததின் முறை இன்று வந்திருக்கிறது அவ்வளவு தான். முன்பே 'நான் குறிப்பிட்ட பெண்ணுடன் தொடர்பு உள்ளவன்' அல்லது அவரைத்தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் அறிவித்துவிட்டு பல்கி சாமியார் போல் தம்பதி சகிதமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தால் சத்யானந்ததின் லீலைகள் பெரிய விசயமாகவே ஆகி இருக்காது. காவி உடையும், கலியுக கண்ணனைப் போன்று அருள் கைகளும், கோல்கேட் விளம்பரம் போல் பளீர் சிரிப்புமாக 'வளமாக' வ(ளர்)ந்த சாமியார் தாம் ஒரு பிரம்மச்சாரி என்பதாக நம்ப வைத்தார், மற்றபடி அவர் தாம் பிரம்மச்சாரி என்று வெளியே சொன்னாரா என்பது தெரியவில்லை.

பொதுவாக இந்துக்களின் நம்பிக்கை காவி உடை உடுத்துபவர் காமத்தை கட்டுப் படுத்திக் கொண்டவர் என்பது, அந்த உடையை சத்யானந்தம் அணிந்து கொண்டு சாமியார் பிஸ்னஸ் செய்ததால்தான் பெண்ணுடன் ஆன லீலை பெரிய விசயமாக்கப்படுகிறது, இல்லை என்றால் 'என் படுக்கை அறையைப் படம் பிடித்தார்கள்' என்று சாமியார் மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்புள்ள தொலைக்காட்சியின் மீது போட்டிருக்கக் கூடும். சாம்பார் லீலை புத்தகத்தின் அடுத்த பகுதியாக அதிரச லீலையை எழுத உட்கார்ந்துவிடுவார் சேறு. மற்றபடி சதியானந்ததை உண்மையான ஞானி, அவதாரம் என்று நம்பிய அப்பாவி பக்தர்களுக்குத்தான் பெருத்த அவமானம்.

சத்யானந்தம்' இந்த படக்காட்சி கணிணி வரைகலை மூலம் உருவாக்கப்பட்டது போலியானது, என் புகழுக்கும் வளர்ச்சிக்கும் களங்கம் கற்பிக்க நினைப்பவர்களின் சதி, இதை நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்' என்றோ 'கதவை திறந்தால் காற்றுவருவதைப் போல் அவர்களை திறந்த மனதுடன் மன்னிக்கிறேன்' என்றோ ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு புதிய கிளையை திறக்கப் புறப்படுவார்.

இதற்க்காக அனைத்து சாமியார்களும் சத்யானந்தம் போல் தான் என்று நினைப்பவர்களும் உண்டு, எனக்கு தெரிந்து கேள்வி பட்ட வரையில் பல சாமியார்கள் அப்படித்தான், ஆனால் விதி விலக்குகள் உண்டு. திருமணமானப் பெண் காதலுடன் ஓடிப் போய்விட்டாள் என்பதற்காக திருமணமாகப் போகும் பெண்கள் எல்லோருமே அப்படித்தான் என்று முத்திரை குத்த நினைப்பதும் கூட பொது புத்திதான். சத்யானந்தம் செய்தது சாதாரண செயல் ஆனால் காவி உடை போட்டுக் கொண்டு, தத்துவம் பேசிக் கொண்டு இதைச் செய்வது நம்பிக்கை துரோகம்.

போலி சாமியார்கள் அம்பலப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

57 கருத்துகள்:

Romeoboy சொன்னது…

\\போலி சாமியார்கள் அம்பலப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.//

அண்ணே செம கிண்டல் + சாட்டை அடி. என்னை பொறுத்த வரை ஆசாமி எல்லாம் சாமியா பார்க்ககூடாது.

Robin சொன்னது…

//...பல சாமியார்கள் அப்படித்தான், ஆனால் விதி விலக்குகள் உண்டு// - புரியுது, புரியுது!
//போலி சாமியார்கள் அம்பலப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.// கரெக்டு.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

அம்பலப் படுத்தப் படுவதில் எந்தத் தவறும் இல்லை! ஆனால், ஊடகங்களுக்கும், பதிவர்களுக்குமே கூட இந்த விஷயத்தில் செலெக்டிவ் அம்னீஷியா இருப்பது போலத் தான் தெரிகிறது!

உதாரணமாக, காஞ்சி தேவனாதனைப் பெண்கள் கூடி விளக்குமாற்றால் அடிக்கிற புகைப்படத்தைத் தினத்தந்தி வெளியிட்டது. மிகவும் சரி!

வெளிநாட்டில் இருந்து டூரிஸ்ட் விசாவில் பல வருடமாகத் தங்கி, அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறேன் என்ற பெயரில் சின்னஞ்சிறுமிகளைப் சீரழித்து நீலப் படம் எடுத்தானே ஒரு டேனிஷ் குடிமகன், அவனை இந்த நாட்டு மக்களும், ஊடகங்களும், நீதிமன்றமும் என்ன செய்து விட்டன?

கிருத்துவப் பாதிரிமார்கள் தொடர்ந்து இந்த மாதிரியான விவகாரங்களில் சிக்கிக் கொண்டு அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன! அதிக சாதனை செய்தவனுடைய பெயரை சாலைகளுக்கும், சிலை திறப்பதையும் நாமுடைய அரசியல்வாதிகள் வெட்கமில்லாமல் செய்வார்கள்.

தமிழச்சியும் ரஞ்சிதமானவருமான அந்த நடிகை இதில் முன்னேற்பாடாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறாரோ, அதன் பின்னால் என்ன பேரமோ என்பது தெரியாமல் இந்த ஒரு செய்தியை விமரிசிப்பது சரியாக இருக்காது என்றே எனக்குப் படுகிறது.

ers சொன்னது…

சாமியாரின் வீடியோ...

குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கவும்...

அடல்ஸ் ஒன்லி...


நித்யானந்தாவின் காமக்கதை

ers சொன்னது…

அடல்ஸ் ஒன்லி
குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கவும்...

சாமியாரின் காமக்கதை வீடியோ

துளசி கோபால் சொன்னது…

இன்றையப் பொழுது ரொம்ப இனிதாக விடிஞ்சது நித்யாவின் லீலைகள் காட்சி!!!!
சாரு என்ன சொல்வாரோ!!!!!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

குடும்பத்தைவிட்டு, தொழிலைவிட்டு இவர் பின்னால் ஓடியவர்கள் என்ன செய்ய போகிறார்கள்???

வருண் சொன்னது…

வம்புல எதுலயும் மாட்டாமல் இருக்க பேரையெல்லாம் மாத்தீட்டீங்க போல இருக்கு.

நம்ம சேறு "வைரஸை" தன் தளத்தில் கொண்டு வந்ததே இந்த எழவையெல்லாம் தெரிந்துதான்னு சொல்றாங்க.

இதுக்குத்தான் கண்டவனையும் கடவுள்னு சொல்லிக்கிட்டு திரியக்கூடாது.
உள்ள கடவுள்கள் போதாதா???

பெயரில்லா சொன்னது…

முதல் மூணு பத்தி மட்டும் குசும்பன் எழுதின மாதிரி இருந்தது :)

கோவி.கண்ணன் சொன்னது…

// வருண் said...

வம்புல எதுலயும் மாட்டாமல் இருக்க பேரையெல்லாம் மாத்தீட்டீங்க போல இருக்கு.//

வருண்,

பேரா முக்கியம், தகவல் போய் சேரனும். கிசு கிசு போல் படிப்பதில் தான் கிக் இருக்குங்கிறாங்கே.
:)

மர்மயோகி சொன்னது…

போலி சாமியார்கள் அடையாளம் காணப்பட வேண்டியவர்களே ..ஆனால் சன் டி வி யின் நோக்கம் சந்தேகத்திற்குறியதே.

வேடிக்கை மனிதன் சொன்னது…

//பொதுவாக இந்துக்களின் நம்பிக்கை காவி உடை உடுத்துபவர் காமத்தை கட்டுப் படுத்திக் கொண்டவர் என்பது, அந்த உடையை சத்யானந்தம் அணிந்து கொண்டு சாமியார் பிஸ்னஸ் செய்ததால்தான் பெண்ணுடன் ஆன லீலை பெரிய விசயமாக்கப்படுகிறது, இல்லை என்றால் 'என் படுக்கை அறையைப் படம் பிடித்தார்கள்' என்று சாமியார் மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்புள்ள தொலைக்காட்சியின் மீது போட்டிருக்கக் கூடும்.//

உண்மை தான். மடாதிபதிகள், தலைவர்கள் (வழிகாட்டிகள்) தப்பு செய்கிறபோது அது வெளிச்சத்துக்கு வந்து பிரபலியமாவது இயல்புதான். அதன் அடிப்படை காரணம் சாமியார்கள் காமத்தை தொலைத்தவர்கள் என்றும், தலைவர்கள் தங்களை ஒழுக்க சீலர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதே. அது சரி நம் கடவுள்கள், தேவகுல தலைவன் இந்திரன் போன்றவர்களுக்கே பெண்கள் தேவைப் படும் போது சாமியார்கள் எம்மாத்திரம்.

SurveySan சொன்னது…

//மற்றபடி சதியானந்ததை உண்மையான ஞானி, அவதாரம் என்று நம்பிய அப்பாவி பக்தர்களுக்குத்தான் பெருத்த அவமானம்.///

எவ்ளோ பேரு, அவசர அவசரமா அவரு படத்தை எடுத்து கவுத்து வச்சாங்களோ ;)

வால்பையன் சொன்னது…

அதே அதே!

தமிழ் உதயம் சொன்னது…

எல்லோரும் மனிதர்கள் தான். நம்மை விட அவர் எந்த விதத்தில் உயர்வு என்று தூக்கி வைத்தீர்கள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//பன் தொலைகாட்சி இதற்கு முதன்மைத்துவம் கொடுத்து, தலைப்புச் செய்தியாகக் காட்டி நீலப்படம் போல் காட்சிகளை ஓடவிடுவதன் பின்புலம், பேரம் தெரியவில்லை,//

அதே டவுட்தான் எனக்கும்.

எந்த மதத்தலைவர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே. புனிதம் எங்கிருந்து வந்தது?

//சத்யானந்தம் செய்தது சாதாரண செயல் ஆனால் காவி உடை போட்டுக் கொண்டு, தத்துவம் பேசிக் கொண்டு இதைச் செய்வது நம்பிக்கை துரோகம்.//

இது பாய்ண்ட்.

Unknown சொன்னது…

TRUTH ABOUT THE CULT OF THE SO-CALLED SWAMI 'PARAMAHAMSA' NITHYANANDA: ORGANIZED FRAUD
THIS BLOG IS DEDICATED TO EXPOSING THE TRUTH ABOUT PARAMAHAMSA NITHYANANDA, THE CULT OF NITHYANANDA, AND ALL OF NITHYANANDA'S BRANCHES INCLUDING THE LIFE BLISS FOUNDATION, THE NITHYANANDA FOUNDATION, THE NITHYANANDA VEDIC TEMPLE IN MONTCLAIR, CA, THE NITHYANANDA VEDIC TEMPLES IN MILPITAS, CA, DELAWARE, OH, ST. LOUIS, MO, PHOENIX, AZ, OKLAHOMA CITY, OK, SEATTLE, WA, THE HINDU UNIVERSITY OF AMERICA(HUA), & NITHYA YOGA.

Unknown சொன்னது…

TRUTH ABOUT THE CULT OF THE SO-CALLED SWAMI 'PARAMAHAMSA' NITHYANANDA: ORGANIZED FRAUD
THIS BLOG IS DEDICATED TO EXPOSING THE TRUTH ABOUT PARAMAHAMSA NITHYANANDA, THE CULT OF NITHYANANDA, AND ALL OF NITHYANANDA'S BRANCHES INCLUDING THE LIFE BLISS FOUNDATION, THE NITHYANANDA FOUNDATION, THE NITHYANANDA VEDIC TEMPLE IN MONTCLAIR, CA, THE NITHYANANDA VEDIC TEMPLES IN MILPITAS, CA, DELAWARE, OH, ST. LOUIS, MO, PHOENIX, AZ, OKLAHOMA CITY, OK, SEATTLE, WA, THE HINDU UNIVERSITY OF AMERICA(HUA), & NITHYA YOGA.

Unknown சொன்னது…

exposing nithya - link-http://nithyananda-cult.blogspot.com/2009/10/paramahamsa-nithyananda-fails.html

ராவணன் சொன்னது…

//போலி சாமியார்கள் அம்பலப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை//

சாமியார் என்றாலே போலிதான்,அது என்ன போலிச் சாமியார்?

நீங்களுக்கும் ஒருவருக்கு சிலைடு போட்டுக் காட்டிக்கொண்டுள்ளீர்கள்!
எந்தப் புற்றில் எந்த பாம்போ?
எனக்கேன் வம்பு? பேரம்,forum எதுவும் எனக்குத் தெரியாது?

கோவி.கண்ணன் சொன்னது…

// ராவணன் said...

//போலி சாமியார்கள் அம்பலப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை//

சாமியார் என்றாலே போலிதான்,அது என்ன போலிச் சாமியார்?

நீங்களுக்கும் ஒருவருக்கு சிலைடு போட்டுக் காட்டிக்கொண்டுள்ளீர்கள்!
எந்தப் புற்றில் எந்த பாம்போ?
எனக்கேன் வம்பு? பேரம்,forum எதுவும் எனக்குத் தெரியாது?//

உங்களுக்கு ஒரே பதில் தான், பக்கத்து வீட்டுக்காரி ஓடிப் போய்விட்டாள் என்பதற்காக தன் மனைவியை சந்தேகப்படுவனும், சந்தேகப்பட வேண்டும் என்று சொல்லுபவனும் தரங்கட்டவர்கள் என்றே சொல்லுவார்கள்.

வால்பையன் சொன்னது…

@ கோவி கண்ணன்!

சாமியார் என்று ஒருவர் தேவையேயில்லை! அப்படியிருக்க நல்ல சாமியார், போலி சாமியாஎ என்று தர பிரிப்பது சரியில்லை தான்!

ராவணன் சொல்வதில் என்ன தவறு கண்டீர்கள்!

நாம் தானே சும்மா இருப்பவரை தூக்கி விடுகிறோம், பின் குத்துதே, குடையுதே என்கிறோம்!

என்னை பொறுத்தவரை அவரது கருத்து வேறு நட்பு வேறு! அவரை விமர்சனம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதே என் கருத்து!
(யாரை சொல்றேன்னு தெரியுதுல்ல)

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
@ கோவி கண்ணன்!

சாமியார் என்று ஒருவர் தேவையேயில்லை! அப்படியிருக்க நல்ல சாமியார், போலி சாமியாஎ என்று தர பிரிப்பது சரியில்லை தான்!

ராவணன் சொல்வதில் என்ன தவறு கண்டீர்கள்!

நாம் தானே சும்மா இருப்பவரை தூக்கி விடுகிறோம், பின் குத்துதே, குடையுதே என்கிறோம்!

என்னை பொறுத்தவரை அவரது கருத்து வேறு நட்பு வேறு! அவரை விமர்சனம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதே என் கருத்து!
(யாரை சொல்றேன்னு தெரியுதுல்ல)
//

ஒருவரின் நடத்தையை வைத்து வேறொருவரை விமர்சனம் செய்வதை நான் வரவேற்பதில்லை. ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சேற்றுக்குள் செந்தாமரை இருக்கும் என்று சொல்வதையும் நாம ஏற்றுக் கொள்கிறோம்.

என்னைப் பொருத்த அளவில் பகுத்தறிவு வியாபாரிகளும் போலிசாமியார்களும் ஒண்ணு தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வாரியார் வள்ளலார் போன்ற நல்லவர்களையும் நான் பார்த்து கேள்வி பட்டு இருக்கிறேன்.

வால்பையன் சொன்னது…

வாரியாரை சமீபத்தில் டோண்டு கிழித்தாரே! படிக்கவில்லையா!?

நல்லது செய்யுறதுக்கு எதுக்கு சாமியார் வேடம்!

நல்லவனா காட்டிகிறதுக்கு தானே!?

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
வாரியாரை சமீபத்தில் டோண்டு கிழித்தாரே! படிக்கவில்லையா!?

நல்லது செய்யுறதுக்கு எதுக்கு சாமியார் வேடம்!

நல்லவனா காட்டிகிறதுக்கு தானே!?
//

டோண்டு விமர்சனமா ? அவர் பார்பன சோவை தாங்கிப் பிடிக்காமல் இருந்தால் அவர் விமர்சனம் பற்றி கருத்து கூறலாம். வாரியார் பார்பனர் இல்லையே. தினமலர் கூட நித்யானந்தன் ஒரு பார்பனாக இருந்தால் முதல் பக்கத்தில் தகவல் வெளி இட்டு இருக்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லது செய்யுறதுக்கு எதுக்கு சாமியார் வேடம்!

நல்லவனா காட்டிகிறதுக்கு தானே!?//

நல்லது செய்பவர்களில் சாமியார்களே முதலில் இருப்பதால் போலிகள் சாமியார் வேடம் போடுகிறார்கள் என்று உங்களால் ஏன் கருத முடியவில்லை.

வால்பையன் சொன்னது…

//நல்லது செய்பவர்களில் சாமியார்களே முதலில் இருப்பதால் போலிகள் சாமியார் வேடம் போடுகிறார்கள் என்று உங்களால் ஏன் கருத முடியவில்லை.//


வரட்டு வாதமா இருக்கே!
பெரும்பான்மையான நல்லது செய்பவர்கள் சாமியார்கள் என்ற வாதம் இந்த்துதுவா ஆதரவாளரை தவிர வேறு ஒருவரால் சொல்ல முடியும் என என் மனம் நம்ப மறுக்கிறது!

நட்பிற்கும், அவரது தொழிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது!?

கோவி.கண்ணன் சொன்னது…

//வரட்டு வாதமா இருக்கே!
பெரும்பான்மையான நல்லது செய்பவர்கள் சாமியார்கள் என்ற வாதம் இந்த்துதுவா ஆதரவாளரை தவிர வேறு ஒருவரால் சொல்ல முடியும் என என் மனம் நம்ப மறுக்கிறது!

நட்பிற்கும், அவரது தொழிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது!?//

வரட்டு வாதமும் இல்லை முரட்டு வாதமும் இல்லை.

போலி டாக்டர்களை 'நம்பும்' நீங்கள் போலி டாக்டர்களின் உருவாக்கம், டாக்கடர்கள் மீது மக்கள் வைக்கும் மதிப்பும் நம்பிக்கையும் தான், ஒரு போலி டாக்டர் அல்லது 10 போலி டாக்டர் சிக்கிவிட்டான் என்பதற்காக மருத்துவத் தொழிலே தேவையற்றது என்கிற உங்கள் வாதமும் தான் எனக்கு வரட்டு வாதமாக இருக்கிறது, ஒருவரின் அறிவு நிலை, பகுத்தறிவு நிலை அனைவரையும் அளக்கும் அறிவு நிலை அல்ல என்பதாவது உண்மை என்பதை ஒப்புக் கொள்வீர்களா ?

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

என்ன கொடுமை இது?.. இப்படித்தான் இரண்டு நாளைக்கு இதைப்பற்றி பேசுவோம், அப்புறம்???...

இதெல்லாம் மக்கள் சாமியார்கள்மேல் வச்சிருக்கிற நம்பிக்கை.. என்னைக்கு நம்பிக்கை பொய்த்துவிடுகிறதோ தெரியலியே ..

வால்பையன் சொன்னது…

டாக்டர்களும், சாமியார்களும் ஒன்று தான் என்றால் நீங்கள் சொல்வது தான் சரி(உங்களுக்கு)!

இனி நான் சொல்ல என்ன இருக்கு!?

அமர பாரதி சொன்னது…

கோவி,

சேறு அவரைத் தூக்கிப் பிடித்து வேறு ஒரு காரணத்துக்காக இருக்கும். சத்யாவுக்கு வரும் பணத்தையும் கிடைக்கும் மரியாதையையும் பார்த்து இவ்வளவு சுலபமாக சாமியார் தொழிலில் வரும் போது, தானும் அதே போல ஆகிவிட்டால் என்ன என்று யோசித்ததின் விளைவே அது.

அதனால்தான் தன்னுடையை மனைவி திடீரென்று "மகனே" என்று அழைத்தது மற்றும் துர்க்கையின் அவதாரம் என்றேல்லாம் பொணைய ஆரம்பித்தது. சரியான ரெஸ்பான்ஸ் இல்லையென்றது அந்த பரவசம் தனக்கே வந்து விட்டது என்று எழுத ஆரம்பித்தது அந்த சேறு. பொதுவாக அளவுக்கு மீறிய பேராசை உடையவர்கள் சேறு போல முயல்வார்கள்.

சத்யாவுக்கும் இந்த நிலை சுலபமாக எட்டி விடவில்லை. இப்போழுதும் சட்டப்படி சத்யா என்ன தவறு செய்தார் என்று புரியவில்லை. விசுவாமித்திரனையே மயக்கும் மேனகைகள் இருக்கும் போது சத்யாவை மயக்குவதா கடினம்?.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
டாக்டர்களும், சாமியார்களும் ஒன்று தான் என்றால் நீங்கள் சொல்வது தான் சரி(உங்களுக்கு)!

இனி நான் சொல்ல என்ன இருக்கு!?
//

இப்ப தான் நாம் ஆங்கில மருத்துவத்திற்கு மாறி இருக்கிறோம்.
சித்தர் வைத்தியம் தான் சித்த வைத்தியம் ஆனது. அது சரி மருத்துவர்கள் பலர் சாமியார்களின் பக்தர்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா ?

:)

வால்பையன் சொன்னது…

//மருத்துவர்கள் பலர் சாமியார்களின் பக்தர்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா ?//

மருத்துவம் என்பது தொழில், அதை அவர்கள் படித்து அதையே பின்பற்றுகிறார்கள், அவர்களிலும் முட்டாள்கள் இருக்கலாம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது!

சாமியார் மாட்டிய பிறகு, எதோ கனாகண்ட மாதிரி வெளியே சொல்லாமல் இருப்பார்கள்!

ராவணன் சொன்னது…

//உங்களுக்கு ஒரே பதில் தான், பக்கத்து வீட்டுக்காரி ஓடிப் போய்விட்டாள் என்பதற்காக தன் மனைவியை சந்தேகப்படுவனும், சந்தேகப்பட வேண்டும் என்று சொல்லுபவனும் தரங்கட்டவர்கள் என்றே சொல்லுவார்கள்//

நான் பெண்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
மேலும் மாட்டிக்கொள்ளும் சாமியார்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டெ ஊள்ளது.நீங்கள் குறிப்பிடும் சேறுவும் நேற்றுவரை அந்த சாமியாருக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தவர்தான்.
புரிந்தால் சரி.....இல்லையென்றால் ஜூட்....நான் அவனில்லை....

கல்வெட்டு சொன்னது…

.


கோ.வி,
நேற்றுவரை எழுத்தாளர் சாமியாருக்கு கொ.ப.செ ஆகத்தான் இருந்தார். இன்று மாட்டிக்கொண்டவுடன் பல்டி அடித்துவிட்டார்.

சாமியார்களில் இரண்டுவகைதான்.

மாட்டிக்கொண்டவர்.
இன்னும் மாட்டாதவர்.

***

பிச்சாத்து ஒன்னுக்கை கட்டுப்படுத்த (அடக்கி காலம் முழுவதும் சிறுநீர் கழிக்காமல் இருப்பது) முடியாதவர்கள் விந்து சுரப்பதைக் கட்டுப்படுத்த முடியுமா?

ஒன்னுக்குப்போவதுது போல , காமம் இயற்கையானது. அதை தடுக்கிறேன் பேர்வழி என்று இருந்தால் உளவியல் சிக்கல்தான். விவேகானந்தராக இருந்தாலும் சுரக்கும் விந்து அதுபாட்டுக்கு கனவில் அல்லது தன்னை அறியாமல் வெளியேறும். (டாக்டர்ஸ் ப்ளீஸ்)

வாஸக்டமியில்கூட விந்து உற்பத்தியை நிறுத்துவது இல்லை. அது வெளியேரும் குழாயை முடிச்சுப்போடுகிறார்கள்.


***


உங்களின் நண்பர் என்பது சரி. ஆனால் அவரின் தொழிலுக்கான அங்கீகாரம் எனது போல இருக்கிறது உங்களின் விளம்பரங்கள்.

என்னளவில் நிச்சயம் இவரின் ஜோசிய ஆன்மீக செயல்பாடு தவறு.

உங்கள் நண்பர் என்ன தொழில் செய்கிறார்? என்பது உங்களுக்குத் தெரியும்.
What he does for living?

அவரது தொழில் ...

1. பங்குச்சந்தை ஜோசியம், அது சம்பந்தமான கூட்டம்
3. ஆன்மீக புத்தகம் அது சம்பந்தமான கூட்டம்

அது தாண்டி கொள்கை பரப்பலாக..

4. வர்ணாசிரம கருத்துகள்
5. ஜெனரல் ஜோசியம்

***

ஜோசியம் என்பது அருள்வாக்குபோல.
மக்களை இப்படி நம்ப வைப்பது சட்டப்படி குற்றமில்லையென்றாலும், மனசாட்சி ??

பங்குச்சந்தையைக் கட்டுப்படுத்தும் செபி என்ற அமைப்பே ஜோசியர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையில் , தகடு வியாபாரி போல பங்குச்சந்தை ஜோசியம் விற்பது தவறு அல்லவா?

SEBI asks investors to keep away from astrology tips
New Delhi/Mumbai, Feb 14 (PTI)

Investing in stocks is often described as a game of luck and stars, but market regulator SEBI does not seem to agree and has cautioned investors against falling prey to astrological predictions.

FYI:
http://www.deccanherald.com/content/52603/sebi-asks-investors-keep-away.html

நெஞிச்ல் கைவைத்துச் சொல்லுங்கள், ஜோசியத்தால் பங்கைக் கணிக்க முடியுமா?

அது அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் அல்லவா இருக்கிறது?

அப்படி முடியும் என்று அந்தத் தொழில் செய்வது தவறு இல்லையா? அந்த நோக்கம் ஏமாற்றுதல் இல்லையா? :-(((((

நாளை ஒரு குடும்பம் இவரால் முதலீடு செய்து , அப்புறம் அதைத் தொலைத்து நடுத் தெருவிற்கு வந்தால் ... அப்போது நீங்கள் கதை எழுதி கொ.பா.செ செய்தது போல் பல்டி அடித்து விடுவீர்களா?

***

அந்த சாமியாருக்கு கொ.ப.செ வாக இருந்து இப்போது ஒருவர் பல்டி அடித்துவிட்டார். அதனால் யாரும் எந்த சாமியாருக்கும் கொ.ப.செ வாக இருத்தல் ஜாக்கிரதை என்ற உணர்வில்...சொல்வதுதான் இது.

மனைவியை சந்தேகப்படும் உதாரணம் சரியானது அல்ல.
ஒரு தோழி சாமியாரிடம் ஏமாந்தாள் என்றால் அதைச் சொல்லி நம் வீட்டுப் பெண்களை அலர்ட் செய்வோமே அது போலத்தான்.

***

ஜோசியத் தொழில், சாமியார்த் தொழில், பாலியால் தொழில்கள் முறைப்படுத்தப்படவேண்டும். நிறைய எழுதலாம். ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நேரம் கிடைத்தால் எனது பதிவில் தொடருகிறேன்.


.

கல்வெட்டு சொன்னது…

.

கோ.வி,

//ஒருவரின் நடத்தையை வைத்து வேறொருவரை விமர்சனம் செய்வதை நான் வரவேற்பதில்லை.//


நீங்கள் சொவது சரிதான். Agreed

*

ஆனால் ஒரு தொழிலை ( or an event) ஐ endorse செய்யும் முன் அந்த தொழில் உங்கள் கருத்துக்கு ஏற்புடையதா? உண்மையில் அது சாத்தியமா என்பதை பார்க்க வேண்டாமா?

அவர் உங்களுக்கு நண்பர், ஆனால் சாமியார்த் தொழிலை endorse செய்யத்தான் வேண்டுமா?

:-(((

கதை எழுதுபவர் செய்ததும் இதுவே


.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

on the right side of your blog, one more saamiyar's abroad tour advt is running and shining

கோவி.கண்ணன் சொன்னது…

//கோ.வி,
நேற்றுவரை எழுத்தாளர் சாமியாருக்கு கொ.ப.செ ஆகத்தான் இருந்தார். இன்று மாட்டிக்கொண்டவுடன் பல்டி அடித்துவிட்டார்.

சாமியார்களில் இரண்டுவகைதான்.

மாட்டிக்கொண்டவர்.
இன்னும் மாட்டாதவர்.//

கல்வெட்டு அண்ணா,

சாமியார் என்றாலே தப்பு செய்யனும் இல்லாவிடில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லுவீர்கள் போல

:)

//பிச்சாத்து ஒன்னுக்கை கட்டுப்படுத்த (அடக்கி காலம் முழுவதும் சிறுநீர் கழிக்காமல் இருப்பது) முடியாதவர்கள் விந்து சுரப்பதைக் கட்டுப்படுத்த முடியுமா?

ஒன்னுக்குப்போவதுது போல , காமம் இயற்கையானது. அதை தடுக்கிறேன் பேர்வழி என்று இருந்தால் உளவியல் சிக்கல்தான். விவேகானந்தராக இருந்தாலும் சுரக்கும் விந்து அதுபாட்டுக்கு கனவில் அல்லது தன்னை அறியாமல் வெளியேறும். (டாக்டர்ஸ் ப்ளீஸ்)

வாஸக்டமியில்கூட விந்து உற்பத்தியை நிறுத்துவது இல்லை. அது வெளியேரும் குழாயை முடிச்சுப்போடுகிறார்கள்.
//
விந்தை கட்டுபடுத்துவது படுத்தாது பிரச்சனையே இல்லை, பெண்ணுடன் ஆனத் தொடர்ப்பு.....
நம்ம நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் முப்பது வயது விதவை பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருந்தார்கள், அதற்காக அவர்கள் அனைவருமே வேறு ஒரு ஆணை மனதில் சுமந்தார்கள், அதில் பலர் கெட்டுப் போனார்கள் என்று சொல்ல முடியுமா ? நாம வைக்கும் அளவு கோளில் எல்லோருமே பொருந்துவாங்க என்று சொல்வது ஒரு கட்டுமானம் தானே. விதவை பெண்கள் மட்டுமல்ல அதே போல் மனைவியை பறிகொடுத்த எத்தனையோ ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.

***
//உங்களின் நண்பர் என்பது சரி. ஆனால் அவரின் தொழிலுக்கான அங்கீகாரம் எனது போல இருக்கிறது உங்களின் விளம்பரங்கள்.

என்னளவில் நிச்சயம் இவரின் ஜோசிய ஆன்மீக செயல்பாடு தவறு.

உங்கள் நண்பர் என்ன தொழில் செய்கிறார்? என்பது உங்களுக்குத் தெரியும்.
What he does for living?

அவரது தொழில் ...

1. பங்குச்சந்தை ஜோசியம், அது சம்பந்தமான கூட்டம்
3. ஆன்மீக புத்தகம் அது சம்பந்தமான கூட்டம்

அது தாண்டி கொள்கை பரப்பலாக..

4. வர்ணாசிரம கருத்துகள்
5. ஜெனரல் ஜோசியம்

//

அவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரை நாடுபவர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும், அரசியல் கூட தொழில் தானே. அந்த தொழிலும் மக்களை முதலீடாக வைப்பது தானே. எனக்கு அவர் நண்பர், என்னைப் பொருத்த அளவில் அவர் ஒரு ஆன்மிகவாதி. அவரை முழுவதுமாக நம்புங்கள், நான் உறுதி அளிக்கிறேன் போன்ற வாக்கு மூலங்களை நான் எங்கும் அளிக்கவில்லை. அவர் நிகழ்ச்சி பற்றிய குறிப்பு தகவலாக வெளி இட்டு இருக்கிறேன்.

//ஜோசியம் என்பது அருள்வாக்குபோல.
மக்களை இப்படி நம்ப வைப்பது ...ஜோசியம் விற்பது தவறு அல்லவா?
//

சினிமா கூட மலிவான பொழுது போக்கு, நேர விரயம் என்று சொல்லுகிறோம், ஆனாலும் அதன் தேவை உள்ளவர்களை நாம் தடுக்க முடியாது இல்லையா ? நான் எங்காவது அவர் செய்யும் தொழில் பற்றி அக்கரையோ உயர்வோ சொல்லி இருக்கிறேனா ? எனக்கு தொடர்ப்பு தேவை அற்றது

//நெஞிச்ல் கைவைத்துச் சொல்லுங்கள், ஜோசியத்தால் பங்கைக் கணிக்க முடியுமா?//

மழைவரும் என்று அறிவியல் உதவியால் சொல்லப்படும் வானிலை அறிக்கை கூட பலிப்பது இல்லை :) அதனால் வானிலை அறிக்கை தவறு என்று சொல்லுவீர்களா ? இப்பவும் சொல்கிறேன் அவர் ஜோதிடம் அவருக்கும், அவரை நம்புவர்களுக்கும் இடையே ஆனது, அதில் தலை இடுவது எனக்கு தேவை அற்றது

//நாளை ஒரு குடும்பம் இவரால் முதலீடு செய்து...போல் பல்டி அடித்து விடுவீர்களா?//

நான் யாருக்கும் ஜோதிடம் பார்க்க இவரை நாடுங்கள் என்று சொல்லவில்லை.

***

//அந்த சாமியாருக்கு கொ.ப.செ வாக இருந்து ...து.//

ஒரு எழுத்தாளர் காசுக்கு கூவுவதற்கும் நான் ஓம்காரின் நிகழ்சி பற்றி அறிவித்திருப்பதும் ஒன்று இல்லை. ஸ்வாமி ஓம்கார் அற்புதம் செய்கிறார் என்று நான் எங்கும் எழுதவில்லை

//மனைவியை சந்தேகப்படும் உதாரணம் சரியானது அல்ல.
...
//
நான் பொதுவான உதாரணம் தான் சொன்னேன், யாரையும் குறிப்பிட வில்லை, நம்ம வீட்டுப் பெண்களையும் ஏன் அவ்வாறு சாமியார்களை நாடுபவர்கள் என்று நினைக்கனும் ? நீங்கள் சொல்வதை ஏன் பொது புத்தி என்று சொல்லக் கூடாது ?

//ஜோசியத் தொழில்,...//

முடிந்தால் போலி சாமியார்களை ஒழிப்பது எப்படி என்கிற எனது மூன்று ஆண்டுகளுக்கும் முன்பு எழுதிய (http://govikannan.blogspot.com/2007/12/blog-post_27.html) பதிவை பார்க்க.

வால்பையன் சொன்னது…

//சாமியார் என்றாலே தப்பு செய்யனும் இல்லாவிடில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லுவீர்கள் போல//

வாயை திறக்கலைனா சாமியார்ன்னு ஒத்துக்க மாட்டாங்க, வாயை திறந்தா மரம், சி.டி படிக்கும்னு உளரி வச்சு மாட்டிகிறோம்!

என்ன பண்ணாலும் சிக்கலாவே முடியுதே,
என்னமோ போடா மாதவா!

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

வாயை திறக்கலைனா சாமியார்ன்னு ஒத்துக்க மாட்டாங்க, வாயை திறந்தா மரம், சி.டி படிக்கும்னு உளரி வச்சு மாட்டிகிறோம்!//

அது பற்றி நான் அவர் பதிவில் கேட்டு இருக்கிறேன். மரம் செடி கொடி இசை கேட்டு வளருகிறது என்று சொன்னால் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள். நான் பொதுவாக இவற்றை நம்புவது இல்லை.

பித்தனின் வாக்கு சொன்னது…

// மரம் செடி கொடி இசை கேட்டு வளருகிறது என்று சொன்னால் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள். //
மரம் மற்றும் செடிகள் நம்மை பற்றியும் நமது செய்கைகளயும், அன்பையும் புரிந்து கொள்கின்றன. அவைகள் தங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட வைப்பிரேஷனில் பேசிக் கொள்கின்றன என்றும் விஞ்ஞான ஆய்வுகளில் நிருபிக்கப் பட்ட ஒன்று. சிறு வயதில் நான் என் வீட்டு ஜாதிக்கொடியுடன் உரையாடுவது உண்டு. நான் அருகில் சென்றால் காற்று இல்லாவிட்டால் கூட மெதுவாக அசைந்தாடும். நன்றி.

வால்பையன் சொன்னது…

//நான் என் வீட்டு ஜாதிக்கொடியுடன் உரையாடுவது உண்டு//

சின்ன வயசுலயே உங்களுக்கு சாதிவெறி வந்துருச்சா!?

:)

இப்போ நின்னு பேசுங்க, கீழ்பாக்கத்துக்கு அட்ரஸ் சொல்லுவாங்க!

கல்வெட்டு சொன்னது…

.

கோ.வி,

//சாமியார் என்றாலே தப்பு செய்யனும் இல்லாவிடில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லுவீர்கள் போல//

இல்லை கோவி. அது அப்படியல்ல.

ஒருவன் ஒரு அமைப்பில் சேர்ந்து இருக்க அல்லது ஒரு அமைப்பை தோற்றுவிக்க அல்லது ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க ஒரு அடிப்படைக்காரணம் இருக்கும்.

ஒருவன் ஏன் தன்னை சாமியார் என்று அறிவித்துக் கொள்கிறான்?

Why do they exists as a samiyar ? What is the purpose or the need or the goal

நீங்களும் நானும் அல்லது வேறு யாரோ ஒருவர் மனிதனாக செய்ய முடியாததை , சாமியார் வேடத்தில் இருப்பதாலேயே ஒருவரால் செய்ய முடிகிறது என்றால் அது அந்த வேடத்தைப் பயன்படுத்தி ஏமாற்றும் முயற்சியே.

**********************

//விந்தை கட்டுபடுத்துவது படுத்தாது பிரச்சனையே இல்லை, பெண்ணுடன் ஆனத் தொடர்ப்பு.....நம்ம நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் முப்பது வயது விதவை பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருந்தார்கள், அதற்காக அவர்கள் அனைவருமே வேறு ஒரு ஆணை மனதில் சுமந்தார்கள், அதில் பலர் கெட்டுப் போனார்கள் என்று சொல்ல முடியுமா ? //

ஏன்..ஏன்...ஏன் ..கோவி. சாமியார் நண்பர் என்பதால் வரும் வார்த்தைகள். :-(((((

1. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் யாரும் விரும்பி சாகும்வரை கைம்பெண்ணாக இருக்கவில்லை.

2.மதம், சமூகம் என்று அவர்களை நிர்ப்பந்தம் செய்தது. நீங்கள், அது எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கலாம்.
சிம்பிள்.... சமூக்கட்டுகளை உடைத்தபின்னர் இப்போது நடக்கும் மறுமணங்களே சாட்சி.

3.வெள்ளை சேலை கட்டி மொட்டை அடித்துவிட்டால் அவர்களுக்கான கருப்பையில் முட்டை உருவாகாது என்று நினைக்கிறீர்களா?

வெள்ளை சேலை கட்டி மொட்டை அடித்துவிட்டால் மாதம் தோறும் வரும் கருப்பை இரத்தச் சுத்திகரிப்பு நடக்காது என்று நினைக்கிறீர்களா?

வெள்ளை சேலை கட்டி மொட்டை அடித்துவிட்டால் மாதம் தோறும் வரும் கருப்பை இரத்தச் சுத்திகரிப்பு நிகழவில் நடக்கும் இயல்பான ஹார்மோன் மாற்றங்கள் நடக்காது என்கிறீர்களா?

நிச்சயம் அவர்களுக்கு எல்லா காம உணர்வுகளும் இருந்து இருக்கும். சமூகத்திற்காக கட்டுப்படுத்தியிருப்பார்கள்.


கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று மொள்ளமாரிகள் கட்டுப்பாடு விதித்தபோது அடங்கித்தான் இருந்தார்கள்.
அதற்காக அவர்களுக்கு கோவிலுக்குள் நுழையும் ஆசை இல்லை என்றா சொல்கிறீர்கள்?
‍‍‍...

வருத்தமாய் உள்ளது கோவி. எப்படி இப்படி எல்லாம் ?????


********

// அவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரை நாடுபவர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும், அரசியல் கூட தொழில் தானே. //

அவரின் தொழில் சார்ந்த நிகழ்ச்சியை என்டார்ஸ் செய்பவர்களும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். காசு கொடுத்தால் ஜட்டியில்கூட விளம்பரம்போட்டுக்கொள்ளும் விளம்பர நடிகர்கள் வேண்டுமானால் காசுக்காக எதையும் விளம்பரம் செய்யலாம்.

*******

// எனக்கு அவர் நண்பர், என்னைப் பொருத்த அளவில் அவர் ஒரு ஆன்மிகவாதி. அவரை முழுவதுமாக நம்புங்கள், நான் உறுதி அளிக்கிறேன் போன்ற வாக்கு மூலங்களை நான் எங்கும் அளிக்கவில்லை. அவர் நிகழ்ச்சி பற்றிய குறிப்பு தகவலாக வெளி இட்டு இருக்கிறேன்.//

எழுத்துவியாதிகூட அவரை நம்புங்கள் என்று எங்கும் சொன்னது இல்லை. நான் நம்புகிறேன். அவரரின் நிகழ்ச்சி இங்கே இத்தனை மணிக்கு என்றுதான் விளம்பரம் இட்டார்.

******



Contd....

.

கல்வெட்டு சொன்னது…

Contd....

// சினிமா கூட மலிவான பொழுது போக்கு, நேர விரயம் என்று சொல்லுகிறோம், ஆனாலும் அதன் தேவை உள்ளவர்களை நாம் தடுக்க முடியாது இல்லையா ? நான் எங்காவது அவர் செய்யும் தொழில் பற்றி அக்கரையோ உயர்வோ சொல்லி இருக்கிறேனா ? எனக்கு தொடர்ப்பு தேவை அற்றது//


பாலியல் தேவை உள்ளவன் பாலியல் தொழிலாளியை நாடுகிறான். அதை யாரும் தடுக்க முடியாது சட்டத்தால்கூட .

ஆனால், அதற்கான விளம்பரம் செய்பவர்களை அடைக்கி வாசிங்க என்று கேட்கலாம்.

கைகாட்டி மரங்களாக இருப்பவர்கள் அதிக கூட்டத்தைச் சேர்கிறார்கள். :-(((

******


// மழைவரும் என்று அறிவியல் உதவியால் சொல்லப்படும் வானிலை அறிக்கை கூட பலிப்பது இல்லை :) அதனால் வானிலை அறிக்கை தவறு என்று சொல்லுவீர்களா ?//


ஏன் கோவி இப்படி...எப்படி இப்படியெல்லாம் மாறுகிறீர்கள்?

1. வானிலை அறிக்கை பற்றிய சரியான தகவல்கள் உங்களிடம் உள்ளதா? அதாவது அது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று? கீழே நான் சொல்வது ஒரு உதாரணம்... வானிலை அறிவியல்.

2. பத்து நாள் கழித்து மழை வரும் அல்லது புயல் வரும் என்று சொல்லும்போது அதன் சாத்தியக்கூறு 50 சதவீதம் .

3.அதையே 5 நாள் கழித்து உறுதிப்படுத்தும்போது அதன் சாத்தியக்கூறு 70 சதவீதம்.

4. அதையே ஒரு நாளைக்கு முன்னாள் உறுதிப்படுத்தும் போது அதற்கான சத்தியக்கூறு 90 சதவீதம்.

5.அதையே 3 மணி நேரத்து முன்னால் உறுதிப்படுத்தி தற்காப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்போது அதற்கான சாத்தியக்கூறு 99 சதவீதம்.

************

// நான் யாருக்கும் ஜோதிடம் பார்க்க இவரை நாடுங்கள் என்று சொல்லவில்லை.//

உங்கள் விளம்பரத்தின் நோக்கம்?

அறிவிப்பின் நோக்கம்?

நீங்கள் வா என்று சொல்லவில்லை. நடக்கிறது என்று தக‌வல் சொல்கிறீர்கள்.

யாரவது பார்த்தால் விரும்பினால் கூட்டத்திற்கு வந்து அருள் பெறலாம்.

எந்த எந்த தொழில்களுக்கு விளம்பரம் செய்வீர்கள்? உங்களின் விதி முறைகளைத் தெரிந்து கொள்ளலாமா? தொழில் (பணத்திற்காக) அல்லாமல் நல்லெண்ணம் அடிப்படையில் இருள் நீக்கிக்கு விளம்பரம் செய்வீர்களா?


***

//ஒரு எழுத்தாளர் காசுக்கு கூவுவதற்கும் நான் ஓம்காரின் நிகழ்சி பற்றி அறிவித்திருப்பதும் ஒன்று இல்லை. ஸ்வாமி ஓம்கார் அற்புதம் செய்கிறார் என்று நான் எங்கும் எழுதவில்லை//

நீங்கள் எழுதவில்லை என்றால் யார் இந்த Slide ல் எழுதியது..


* வாழ்க்கையில் முழுமையையும் வெற்றியையும் அடைய

* உடல் , மனம் மற்றும் ஆன்மாவில் உள்ள சிக்கல்களை களைந்து முழுமனிதனாக்கும் பயிற்சி


.


இதை நீங்கள் endorse செய்கிறீர்களா என்பதுதான் கேள்வி .


***********
// நான் பொதுவான உதாரணம் தான் சொன்னேன், யாரையும் குறிப்பிட வில்லை, நம்ம வீட்டுப் பெண்களையும் ஏன் அவ்வாறு சாமியார்களை நாடுபவர்கள் என்று நினைக்கனும் ? நீங்கள் சொல்வதை ஏன் பொது புத்தி என்று சொல்லக் கூடாது ?//

சொல்லலாம்.
ஒரு நிகழ்வை நீங்கள் இப்படித்தான் பார்க்க வேன்டும் என்று சொல்ல எனக்கு என்ன உரிமை உள்ளது?

*********

//முடிந்தால் போலி சாமியார்களை ஒழிப்பது எப்படி என்கிற எனது மூன்று ஆண்டுகளுக்கும் முன்பு எழுதிய (http://govikannan.blogspot.com/2007/12/blog-post_27.html) பதிவை பார்க்க.//


இடிப்பாரை இல்லா மன்னன் போல... ஜல்லிக்கூட்டங்களால் சூழப்பட்ட எழுத்துவியாதிகள் போல இருக்கலாம்.

நான் நிச்சயமாய் ஜல்லி அல்ல. :-)))

உங்களின் எழுத்துக்கும் இந்த " உடல் , மனம் மற்றும் ஆன்மாவில் உள்ள சிக்கல்களை களைந்து முழுமனிதனாக்கும் பயிற்சி" விளம்பரத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை ..... நீங்கள் கேட்ட விதவைப் பெண் கேள்வியில் இருந்தே அறிய முடிந்தது. :-((((


***

அனைத்தும் உங்கள் விருப்பம். எல்லாம் நலமாய் முடியட்டும்.

.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோ.வி,

இல்லை கோவி. அது அப்படியல்ல.

ஒருவன் ஒரு அமைப்பில் சேர்ந்து இருக்க அல்லது ஒரு அமைப்பை தோற்றுவிக்க அல்லது ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க ஒரு அடிப்படைக்காரணம் இருக்கும்.

ஒருவன் ஏன் தன்னை சாமியார் என்று அறிவித்துக் கொள்கிறான்?
கோ.வி,
Why do they exists as a samiyar ? What is the purpose or the need or the goal

நீங்களும் நானும் அல்லது வேறு யாரோ ஒருவர் மனிதனாக செய்ய முடியாததை , சாமியார் வேடத்தில் இருப்பதாலேயே ஒருவரால் செய்ய முடிகிறது என்றால் அது அந்த வேடத்தைப் பயன்படுத்தி ஏமாற்றும் முயற்சியே.
//
கல்வெட்டு அண்ணா,
இந்த கேள்வியை தனக்குத் தானே 'வள்ளலார்' கூட கேட்டு இருக்கிறாரான்னு தெரியவில்லை. கேள்விக்கு அப்பாற்பட்டது உள்ளுணர்வு, பொது நலம் என்று கூட சொல்லுவார்கள், அதற்காக நான் நண்பரை வள்ளலாருடன் ஒப்பிடவில்லை

//ஏன்..ஏன்...ஏன் ..கோவி. சாமியார் நண்பர் என்பதால் வரும் வார்த்தைகள். :-((((( //

நீங்கள் ஒப்பிடும் அளவுக்கு நான் சாருவோ அவரு நித்யானந்தமோ அல்ல. மேலே டாக்டர், போலி டாக்டர் உதாரணம் தான்.

//1. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் யாரும் விரும்பி சாகும்வரை கைம்பெண்ணாக இருக்கவில்லை.

2.மதம், சமூகம் என்று அவர்களை நிர்ப்பந்தம் செய்தது. நீங்கள், அது எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கலாம். சிம்பிள்.... சமூக்கட்டுகளை உடைத்தபின்னர் இப்போது நடக்கும் மறுமணங்களே சாட்சி.//

நிர்பந்தமும் இல்லை தீப்பந்தமும் இல்லை, வெளிநாடுகளில் கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாத பெண்கள் உண்டு.

//3.வெள்ளை சேலை கட்டி மொட்டை அடித்துவிட்டால் அவர்களுக்கான கருப்பையில் முட்டை உருவாகாது என்று நினைக்கிறீர்களா?

வெள்ளை சேலை கட்டி மொட்டை அடித்துவிட்டால் மாதம் தோறும் வரும் கருப்பை இரத்தச் சுத்திகரிப்பு நடக்காது என்று நினைக்கிறீர்களா?

வெள்ளை சேலை கட்டி மொட்டை அடித்துவிட்டால் மாதம் தோறும் வரும் கருப்பை இரத்தச் சுத்திகரிப்பு நிகழவில் நடக்கும் இயல்பான ஹார்மோன் மாற்றங்கள் நடக்காது என்கிறீர்களா?

நிச்சயம் அவர்களுக்கு எல்லா காம உணர்வுகளும் இருந்து இருக்கும். சமூகத்திற்காக கட்டுப்படுத்தியிருப்பார்கள்.

//

இப்படியெல்லாம் சொல்லவே முடியாது நண்பரே, எல்லா பெண்ணையும் ஜொள்ளுவிடும் ஆண்கள் கூடப் பிறந்தவளை ஜொள்விடாமல் இருக்க ஜீனா தடுக்குது ? பண்பாடு தானே.

//வருத்தமாய் உள்ளது கோவி. எப்படி இப்படி எல்லாம் ????? //

எனக்கும் தான் வருத்தமாக இருக்கிறது, எவனோ தவறு செய்வதற்கு தவறே செய்தாதவர்களும் அவமானப்படுத்தப்படுகிறார்களே என்று என்ன செய்வது.


********

//அவரின் தொழில் சார்ந்த நிகழ்ச்சியை என்டார்ஸ் செய்பவர்களும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். காசு கொடுத்தால் ஜட்டியில்கூட விளம்பரம்போட்டுக்கொள்ளும் விளம்பர நடிகர்கள் வேண்டுமானால் காசுக்காக எதையும் விளம்பரம் செய்யலாம்.//

கல்வெட்டை படித்துப்பாருங்கள் அருமையாக எழுதுவார் என்று நான் பிறருக்கு கூறும் முன் உங்கள் தொழில் எனக்கு என்னவென்றே எப்போதும் தெரியாது, என்னைப் பொருத்த அளவில் நீங்கள் நல்ல எழுத்தாளர் உங்கள் கருத்து போய் சேரவேண்டும் என்று விரும்புவேன்.

*******

//

எழுத்துவியாதிகூட அவரை நம்புங்கள் என்று எங்கும் சொன்னது இல்லை. நான் நம்புகிறேன். அவரரின் நிகழ்ச்சி இங்கே இத்தனை மணிக்கு என்றுதான் விளம்பரம் இட்டார்.

//

நீங்கள் தான் அவங்க இருவரால் பாதிக்கபப்ட்டது போல் புலம்புறிங்க :) ஒரு ஆசிரியர் மாணவியை கர்பம் ஆக்கினர் என்பதற்காக பள்ளிகளை இழுத்து மூடுங்கள் என்று சொல்வது சரியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// மழைவரும் என்று அறிவியல் உதவியால் சொல்லப்படும் வானிலை அறிக்கை கூட பலிப்பது இல்லை :) அதனால் வானிலை அறிக்கை தவறு என்று சொல்லுவீர்களா ?//


ஏன் கோவி இப்படி...எப்படி இப்படியெல்லாம் மாறுகிறீர்கள்?

1. வானிலை அறிக்கை பற்றிய சரியான தகவல்கள் உங்களிடம் உள்ளதா? அதாவது அது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று? கீழே நான் சொல்வது ஒரு உதாரணம்... வானிலை அறிவியல்.

2. பத்து நாள் கழித்து மழை வரும் அல்லது புயல் வரும் என்று சொல்லும்போது அதன் சாத்தியக்கூறு 50 சதவீதம் .

3.அதையே 5 நாள் கழித்து உறுதிப்படுத்தும்போது அதன் சாத்தியக்கூறு 70 சதவீதம்.

4. அதையே ஒரு நாளைக்கு முன்னாள் உறுதிப்படுத்தும் போது அதற்கான சத்தியக்கூறு 90 சதவீதம்.

5.அதையே 3 மணி நேரத்து முன்னால் உறுதிப்படுத்தி தற்காப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்போது அதற்கான சாத்தியக்கூறு 99 சதவீதம்.
//

எனக்கு தெரிந்து 24 மணி நேரத்திற்குள் என்ன நடக்கும் என்று ஜோதிடர்கள் கூறுவது இல்லை. இல்லாவிடில் அம்மா கூட வாக்கு அளித்தவுடன் பணிக்கரிடம் ரிசல்டு கேட்டுவிட்டு ஒய்வெடுக்கப் போய்விடுவார் :) அதனால் 3 மணி நேர வானிலையை நான் எடுத்துக் கொள்ளவில்லை

//உங்கள் விளம்பரத்தின் நோக்கம்?

அறிவிப்பின் நோக்கம்?

நீங்கள் வா என்று சொல்லவில்லை. நடக்கிறது என்று தக‌வல் சொல்கிறீர்கள்.

யாரவது பார்த்தால் விரும்பினால் கூட்டத்திற்கு வந்து அருள் பெறலாம்.//


அவர் அருள் பெற வாருங்கள் என்று அழைக்கவில்லை. சொற்பொழிவு, மூச்சு பயிற்சி என்று தானே குறிப்பிட்டு இருக்கிறார். அதுவும் சிங்கையில் நடக்கிறது, சக பதிவர் நண்பராக அறிவிப்பை நானும் வெளி இடுகிறேன்

//எந்த எந்த தொழில்களுக்கு விளம்பரம் செய்வீர்கள்? உங்களின் விதி முறைகளைத் தெரிந்து கொள்ளலாமா? தொழில் (பணத்திற்காக) அல்லாமல் நல்லெண்ணம் அடிப்படையில் இருள் நீக்கிக்கு விளம்பரம் செய்வீர்களா?//

எனக்கு நேரிடையாக தெரியாதவர்கள் பற்றி நான் விளம்பரம் செய்வதில்லை. விமர்சிப்பது உண்டு

//நீங்கள் எழுதவில்லை என்றால் யார் இந்த Slide ல் எழுதியது..


* வாழ்க்கையில் முழுமையையும் வெற்றியையும் அடைய

* உடல் , மனம் மற்றும் ஆன்மாவில் உள்ள சிக்கல்களை களைந்து முழுமனிதனாக்கும் பயிற்சி//
இலவச நிகழ்ச்சி தான். தான் அப்படி இல்லை என்று நினைப்பவர்களுக்கு. தெரிஞ்சவங்களுக்கு நீங்களும் வழிமொழியலாம். நான் அப்படித்தான் செய்கிறேன்.
:)
//இதை நீங்கள் endorse செய்கிறீர்களா என்பதுதான் கேள்வி . //

அதெல்லாம் பரம ரகசியம் :)

கல்வெட்டு சொன்னது…

.
//நிர்பந்தமும் இல்லை தீப்பந்தமும் இல்லை, வெளிநாடுகளில் கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாத பெண்கள் உண்டு. //

நீங்கள் கேட்டது இந்தியா பற்றி.
மன்னிக்கவும் ...ஏன் இப்படி இன்று? :-))))

************

//இப்படியெல்லாம் சொல்லவே முடியாது நண்பரே, எல்லா பெண்ணையும் ஜொள்ளுவிடும் ஆண்கள் கூடப் பிறந்தவளை ஜொள்விடாமல் இருக்க ஜீனா தடுக்குது ? பண்பாடு தானே.//

நான் சொன்னது அறிவியல் உடற் சம்பந்தப்பட்டது ஊகம் அல்ல.


****


//கல்வெட்டை படித்துப்பாருங்கள் அருமையாக எழுதுவார் என்று நான் பிறருக்கு கூறும் முன் உங்கள் தொழில் //

அப்படிச் செய்தால் அது என தொழில் சார்ந்தது அல்லவே?

எழுத்து மட்டுமே. அது பிளாக் அன்ட் வொயிட்டாக பார்வைக்கு உள்ளது.

எனது தொழில் மீதான் திறமைகளை எப்படி பிளாக்க வைத்து அளப்பீர்கள்?

நீங்கள் செய்வது அவரின் தொழிலுக்கான விளம்பரம். :-))

***

// ஒரு ஆசிரியர் மாணவியை கர்பம் ஆக்கினர் என்பதற்காக பள்ளிகளை இழுத்து மூடுங்கள் என்று சொல்வது சரியா ?//

சரியில்லை கோவி.
நீங்கள் செய்வது சரியானது.
எனது பதிவிலும் விளம்பரத்தை ஓட்டுகிறேன்.

:-))

..

அருள் பெற்று ஷேமமாய் இருங்கோ

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு


.
//நிர்பந்தமும் இல்லை தீப்பந்தமும் இல்லை, வெளிநாடுகளில் கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாத பெண்கள் உண்டு. //

நீங்கள் கேட்டது இந்தியா பற்றி.
மன்னிக்கவும் ...ஏன் இப்படி இன்று? :-))))
//

வெளிநாடுகளில் கூட கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்யாத பெண்கள் உண்டு. கூட என்பது விடுபட்டுவிட்டது, கூட இருப்பதால் அதில் இந்தியா உண்டு.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படிச் செய்தால் அது என் தொழில் சார்ந்தது அல்லவே?

எழுத்து மட்டுமே. அது பிளாக் அன்ட் வொயிட்டாக பார்வைக்கு உள்ளது.

எனது தொழில் மீதான் திறமைகளை எப்படி பிளாக்க வைத்து அளப்பீர்கள்?//

அதே அதே அவர் எழுதுவதை வைத்து அவர் தொழிலே செய்யவில்லை என்று நீங்கள் கூறுவீர்களா ? அதை வெளிப்படுத்துவதும் படுத்தாததும் அவர் விருப்பம்

கல்வெட்டு சொன்னது…

////அதே அதே அவர் எழுதுவதை வைத்து அவர் தொழிலே செய்யவில்லை என்று நீங்கள் கூறுவீர்களா ? அதை வெளிப்படுத்துவதும் படுத்தாததும் அவர் விருப்பம்//

அவர் தொழில் செய்கிறார்.
உதாரணம் பங்கு வர்த்தக ஜோசியம்.
அது தவறான அணுகுமுறை.
நம்பியவர்கள் பாதிக்கப்படலாம்.

செபி வார்னிங் பார்க்க.

அதனால் அவரின் தொழில் சரியல்ல என்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//////அதே அதே அவர் எழுதுவதை வைத்து அவர் தொழிலே செய்யவில்லை என்று நீங்கள் கூறுவீர்களா ? அதை வெளிப்படுத்துவதும் படுத்தாததும் அவர் விருப்பம்//

அவர் தொழில் செய்கிறார்.
உதாரணம் பங்கு வர்த்தக ஜோசியம்.
அது தவறான அணுகுமுறை.
நம்பியவர்கள் பாதிக்கப்படலாம்.

செபி வார்னிங் பார்க்க.

அதனால் அவரின் தொழில் சரியல்ல என்கிறேன். //

கல்வெட்டு அண்ணா,

நான் ஆன்மிகம் நாத்திகம் இவற்றின் இரண்டுக்குமே தனிப்பட்ட ஆதரவாளன் கிடையாது, எதிரியும் இல்லை, எனது தளம் சாதி மறுப்பு, மதமறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு மற்றபடி தமிழில் ஆன்மிகம் பேசினாலும் நாத்திகம் பேசினால் நான் எதிர்ப்பு காட்டுவதில்லை. ஓம்கார் என்ன தொழில் செய்கிறார் என்பது எனக்கு தேவை இல்லாத ஒன்று நீங்கள் சொல்வது போல் சோதிடம் என்றாலும் கூட வளர்ச்சி கண்ட அரசியல் தொழிலை விட கேவலமானது இல்லை. சோதிடத்தில் தனிமனிதர்கள் ஏமாறுகிறார்கள் என்றாலும் அரசியல் தொழிலால் சமூகமே ஏமாற்றப்படுகிறது. அரசியல் தொழில் சரி இல்லை என்று சொல்லுவீர்களா ? அது மக்கள் நலன் என்ற போர்வையில் நடை பெறுகிறதே அன்றி என்னைப் பொருத்த அளவில் அரசியல் கூட மோசமான தொழிலே. இவரிடம் சோதிடத்திற்காக வருபவர்கள் பலன் பெருகிறார்களா என்பதைவிட எதோ ஒரு நிம்மதியுடன் போகிறார்கள் (இல்லாவிடில் இவரால் தொடர்ந்து சோசியம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது) என்பதால் இவர் அவர்களை ஏமாற்றுகிறார் என்று என்னால் கருத முடியவில்லை.

வால்பையன் சொன்னது…

//இவரிடம் சோதிடத்திற்காக வருபவர்கள் பலன் பெருகிறார்களா என்பதைவிட எதோ ஒரு நிம்மதியுடன் போகிறார்கள் (இல்லாவிடில் இவரால் தொடர்ந்து சோசியம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது) என்பதால் இவர் அவர்களை ஏமாற்றுகிறார் என்று என்னால் கருத முடியவில்லை. //


சாரு தோத்துடார் போங்க!
எப்படி சப்பைக்கட்டு கட்டுவது என்று கற்று கொள்ள அவரை உங்களிடம் ட்ரெயினிங் அனுப்பனும்!

கல்வெட்டு சொன்னது…

கோ.வி,

ஒருவரை ஆதரிப்பது என்று முடிவு எடுத்துவிட்டால் அதை நோக்கி எப்படி வேண்டும் என்ராலும் கருத்துச் சிதைவு செய்யலாம் என்பதற்கு இந்தப் பதிவு நல்ல உதாரணம்.

(உடனே நான் எதிர்க்க முடிவு செய்துள்ளேன் என்று நீங்கள் இன்னொரு வானிலை உதாரணம் கொடுக்கலாம். )

உங்களின் முரண்கள்:

1. இந்தியாவில் பழைய காலத்தில் இருந்த பெண்களுக்கு இயற்கையாக உடல் ரீதியான மாற்றங்கள் இருக்கும். ஆனால் சமூகத்திற்க்காக சமூகம் விதித்த கட்டுப்பாட்டை மீறமுடியாமல் இருந்தனர் என்று சொன்னால், ......

வெளி நாட்டிலும் திருமணம் செய்யாமல் இருந்தனர் என்று சொல்கிறீர்கள்.

அய்ரோப்பிய‌ நாடுகளில் திருமணத்திற்கும் , பாலியல் உறவிற்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் உடல் தேவைகளை சமூகம் மறுப்பது இல்லை.

2. வானிலை அறிக்கை பற்றிய உங்கள் கருத்து. இஅதை உங்களால் ஜோசியத்துடன் ஒப்பிட எப்படி முடிகிறது. ???? :-((((

3. அரசியல்வாதிகளின் உதாரணம். .. எதற்கு ? நாளை நீங்கள் ஒரு அரசியல்வாதியை endorse செய்தாலும் நான் கேட்கத்தான் செய்வேன்.

4. இப்படிச் சொல்வது

//இவரிடம் சோதிடத்திற்காக வருபவர்கள் பலன் பெருகிறார்களா என்பதைவிட எதோ ஒரு நிம்மதியுடன் போகிறார்கள் (இல்லாவிடில் இவரால் தொடர்ந்து சோசியம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது) என்பதால் இவர் அவர்களை ஏமாற்றுகிறார் என்று என்னால் கருத முடியவில்லை. //

இன்னமும் இருள்நீக்கி சுப்புவிடம் மக்கள் ஆசி வாங்கிக் கொண்டுதான் உள்ளார்கள். அவருக்கு விளம்பரம் கொடுப்பீர்களா?

அவர் உங்களுக்கு நண்பர் இல்லை ... நண்பன் என்றால் அவன் சமூகத்தைக் கெடுத்தாலும் விளம்பரம் செய்வேன் ஏன் என்றால் ஒரு நிம்மதியுடன் போகிறார்கள் என்று சாரு பாணியில் பல்டி அடிப்பீர்கள் என்றே நினைக்கிறேன்

இன்னமும் இதே நித்தியாவை நம்பிக்கொண்டு , இது சாமியின் தப்பில்லை அந்த பெண்ணின் தவறு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

அவருக்கும் நீங்கள் விளம்பரம் செய்யலாம்...ஏன் என்றால் உங்கள் சாமியாரிடம் நிம்மதியடைபவர்களைவிட இந்தச் சாமியாரிடம் நிம்மதியடைபவர்களின் பட்டியல் அதிகம்... ஓ அவர் உங்கள் நண்பர் அல்லவே மன்னியுங்கள்.


5. இந்தச் சாமியாரின் விளம்பரத்தை....

---------------------
* வாழ்க்கையில் முழுமையையும் வெற்றியையும் அடைய

* உடல் , மனம் மற்றும் ஆன்மாவில் உள்ள சிக்கல்களை களைந்து முழுமனிதனாக்கும் பயிற்சி
------------------

நீங்கள் endorse செய்கிறீர்களா?
என்றால் "அது இரகசியம்" என்று சொல்லிவிட்டு இவரிடம் சோதிடத்திற்காக வருபவர்கள் ஏதோ ஒரு நிம்மதியுடன் போகிறார்கள் என்பதற்காக அவரை நீங்கள் ஆதரித்துக் கொண்டு....

இருள் நீக்கி சுப்புவை மட்டும் எதிர்ப்பது (அவரிடமும் சிலர் வந்து நிம்மதியாய்தான் சொல்கிறார்கள்) எங்ஙனம்?

.


.

இந்த நிலையில் நீங்கள் இராம கோபலனைச் சாடுகிறீர்கள். உங்களுக்கு இந்தச் சாமியார்போல இராம கோபலனுக்கு ஏதோ ஒரு புண்ணாக்குச் சாமியார்.

**

முடிந்தால் இதற்கு ஆம் / இல்லை என்று சொல்லுங்கள்...


=======================
உங்கள் சாமியாரின் விளம்பரம்....

‍‍‍‍‍‍‍‍
* வாழ்க்கையில் முழுமையையும் வெற்றியையும் அடைய

* உடல் , மனம் மற்றும் ஆன்மாவில் உள்ள சிக்கல்களை களைந்து முழுமனிதனாக்கும் பயிற்சி

==========

நீங்கள் endorse செய்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த நிலையில் நீங்கள் இராம கோபலனைச் சாடுகிறீர்கள். உங்களுக்கு இந்தச் சாமியார்போல இராம கோபலனுக்கு ஏதோ ஒரு புண்ணாக்குச் சாமியார்.
**
முடிந்தால் இதற்கு ஆம் / இல்லை என்று சொல்லுங்கள்...
=======================
உங்கள் சாமியாரின் விளம்பரம்....
‍‍‍‍‍* வாழ்க்கையில் முழுமையையும் வெற்றியையும் அடைய
* உடல் , மனம் மற்றும் ஆன்மாவில் உள்ள சிக்கல்களை களைந்து முழுமனிதனாக்கும் பயிற்சி
//

கல்வெட்டு அண்ணா,

உங்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் மறுமொழி அளிக்கவில்லை, அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நான் உங்கள் கேள்விகளுக்கு பதிலாகத்தான் சொன்னேன், அதை உங்களை திருப்திபடுத்தாது என்றும் தெரியும்.

கெட்டவர்கள் என்று யாருமே பிறப்பது கிடையாது, சூழல், தன்னலம், பேராசை இவை தான் ஒரு மனிதனை மிருகம் ஆக்குகிறது, ஒரு போலி சாமியார் சிக்கினார் என்றால் எல்லோருமே போலிகள் தான் என்றோ ஒரு நாள் சிக்குவார்கள் என்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை. என் அப்பா கூட சோதிடம் சொல்லுபவர் தான் எனக்கு தெரிந்து ஒருவரிடமும் பைசா காசு வாங்கியதில்லை, அவர்களாக விருப்பப் பட்டு கொடுப்பதை கோவில் உண்டியலில் போட்டுவிடுவார். எதோ ஒரு பிரச்சனை என்று வருபவர்கள் மன நிம்மதியோடு செல்லுவார்கள், வேறொரு நாள் திரும்பவம் வருவார்கள், இப்படி வருபவர்களில் மீனவர்களே மிகுதி. வெள்ளி / செவ்வாய் எங்கள் வீட்டில் அப்பாவுக்கு காத்தி இருப்பவர் எண்ணிக்கக 15 வரையில் இருக்கும்., அந்த இரண்டு நாளில் மாலை வேளைகளில் அவருடைய சொந்த தொழிலை முடித்துவிட்டு தான் அவர்களுக்காக சோதிடம் பார்த்து சொல்லுவார். அதில் நான் எந்த ஒரு போலித்தனமும் ஏமாற்றும் பார்த்தது இல்லை. சோதிட நம்பிக்கை இருக்கும் குடும்பத்தில் பிறந்த எனக்கு அப்போது சோதிடத்தில் நம்பிக்கை இருந்தது, இப்போது நான் அதுபற்றி நினைப்பதே கிடையாது, சோதிடம் நான் பார்த்துக் கொள்வதும் கிடையாது. நாள் நட்சத்திரம் திதி, ஏன் என் அப்பாவுக்கு திவசம் கொடுப்பதோ, அமாவாசை விரதம் கூட இருப்பது கிடையாது, என்னைப் பொருத்த அளவில் இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதைவிட தேவை அற்றது என்று நினைக்கிறேன்.

நித்யானந்தர் போலவே நீங்கள் சாமியார்களை நினைக்கிறீர்கள், என் அப்பாவைப் போல் வெறும் சேவையாக ஆன்மிகம் மற்றும் சோதிடத்தை வைத்திருப்பவர்களும் உள்ளார்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் நண்பர் ஒருவருக்கு பைனான்சில் நட்பின் காரணமாக நம்பிக்கையோடு கடன் வாங்கிக் கொடுக்கிறீர்கள், நாளை அவர் உங்களை ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்று முன்பே நினைத்து முடியாது என்பீர்களா ? ஆனால் இது போன்ற கடன் பெற்ற பிறகு ஏமாற்றியவர்களையும் நாம் பார்த்து தான் வருகிறோம். பொது புத்தியாக அங்கெல்லாம் நாம் சிந்துத்து நண்பர்களுக்கு நோ சொல்வது கிடையாது. நீங்க ரொம்ப குழப்பத்தில் இருக்கிங்க ஏனெனில் உங்களுக்கு தெரிந்தது நாத்திகம் வெறுப்பது ஆன்மிகம். நான் இரண்டையுமே தள்ளி நின்று தான் பார்க்கிறேன்

வால்பையன் சொன்னது…

//நித்யானந்தர் போலவே நீங்கள் சாமியார்களை நினைக்கிறீர்கள்,//

இதே போல் தான் சங்கராச்சாரி, ஜெயேந்திரர், பிரேமானந்தா, சதுர்வேதி இப்போ நித்தியானந்தா! இப்படியே நமக்கு நாமே சமாதானம் சொல்லிகுவோம்!

காசா, பணமா!

வால்பையன் சொன்னது…

//நீங்க ரொம்ப குழப்பத்தில் இருக்கிங்க ஏனெனில் உங்களுக்கு தெரிந்தது நாத்திகம் வெறுப்பது ஆன்மிகம். நான் இரண்டையுமே தள்ளி நின்று தான் பார்க்கிறேன் //

நானும் தான் குழப்பத்தில் இருக்கீறேன்!
எவ்வளவு தூரம் தள்ளி நிக்கனும்னு சொன்னா நாங்களும் தள்ளி நின்னுக்குவோம்! சுவரு இடிக்காம இருந்தா சரி!

கல்வெட்டு சொன்னது…

.

//பொது புத்தியாக அங்கெல்லாம் நாம் சிந்துத்து நண்பர்களுக்கு நோ சொல்வது கிடையாது. நீங்க ரொம்ப குழப்பத்தில் இருக்கிங்க ஏனெனில் உங்களுக்கு தெரிந்தது நாத்திகம் வெறுப்பது ஆன்மிகம். நான் இரண்டையுமே தள்ளி நின்று தான் பார்க்கிறேன்//

.


கோவி,
உங்களின் மீதோ அல்லது நாம் பேசிக் கொண்டிருக்கும் கருத்தின் ஆதரமான ஓம்காரின் மீதோ எனக்கு வெறுப்பு இல்லை.


1. நான் நத்திகவாதி கிடையாது.

2. அதுபோல ஆன்மிகவாதியும் கிடையாது.

???

நாத்திகமும் ஆன்மிகமும் கடவுளைப் பற்றிய கருத்தின் இரண்டு துருவங்கள்.

எனவே, கடவுளை மையப்படுத்தி நான் என்னை அடையாளம் காண்பது இல்லை.

என்னைக் கேட்டால் "கடவுளா அதனால் என்ன? இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? எனக்கு தேவையில்லாத ஒன்று " என்றுதான் சொல்வேன்.

பகுந்து ஆராயும் குணம் உள்ளது . அவ்வளவே.

சொல்லிக்கொடுத்தை கேள்வி கேட்கும் குணம். அதை எந்த இசத்திற்கும் பலி கொடுக்க நான் விரும்பவில்லை.

****

காவி கட்டியவர்களில் எனக்கு பிடித்தவர்களும் உள்ளார்கள். குன்றக்குடி அடிகளார் (இப்போது இருப்பவருக்கு முந்தியவர்) ஒரு உதாரணம். ஆன்மீகம் தாண்டிய சமூகப்பணிகளுக்காக அவரைப் பிடிக்கும். அவரைத்தாண்டி அந்த மடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.

**

ஓம்காரின் சனாதன பார்ப்பனிஸ வேதச் சார்பும் , அவரின் சோதிடமும் எனக்கு உவந்தது அல்ல. அதனால் தான் நீங்கள் என்டார்ஸ் செய்கிறீர்களா என்றேன்.


எனது ஆதரவு எதிர்ப்பு விமர்சனம் என்பது கருத்து மற்றும் செயல் சார்ந்தது அவ்வளவே.

நாளையே ஓம்கார் வர்ணாசிரமத்தை , அதைச் சொல்லும் கீதையை தீயில் போட்டால் அந்த நிகழ்விற்கு நிச்சயம் தோள் கொடுப்பேன்.

**

ஏன் அப்பா ஜோசியம் விளக்கம் எல்லாம்???

இவரின் இந்த விளம்பரத்தை நான் என்டார்ஸ் செய்கிறேன் அல்லது இல்லை என்று சொன்னால் போதும்.

கூகிள் விளம்பரங்கள் எனது பதிவில் உள்ளது. நான் அதை என்டார்ஸ் செய்யவில்லை. (காசுக்காக வைத்துள்ளேன் ... மாதம் நான்கு பேர் படிக்கிறார்கள்... நான் வருடம் இரண்டு எழுதுகிறேன்)


//உங்கள் நண்பர் ஒருவருக்கு பைனான்சில் நட்பின் காரணமாக நம்பிக்கையோடு கடன் வாங்கிக் கொடுக்கிறீர்கள், நாளை அவர் உங்களை ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்று முன்பே நினைத்து முடியாது என்பீர்களா ?//



நிச்சயம் அவர் எதற்கு பணம் கேட்கிறார் என்று கேட்டே அந்தச் செயல் எனக்கு உகந்ததாக ( என்டார்ஸ் செய்ய முடிந்த) இருந்தால் மட்டுமே செய்வேன். அப்படிச் செய்து அதற்குப்பின்னால் அவர் மாறினால் நான் பொறுப்பு அல்ல....ஆனால் குறைந்த பட்சம் அவர் செய்யும் செயல் எனக்கு உகந்ததா என்று பார்ப்பேன்.


**

நான் முழப்பத்தில்தான் உள்ளேன். நான் தெளிந்தவன் என்று சொன்னால் அது என்னை நான் ஏமாற்றும் செயல்.



புரிந்துணர்வுடன் உரையாடியமைக்கு நன்றி !


.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்