பின்பற்றுபவர்கள்

2 மார்ச், 2010

வரப் போகும் மெகா தொடர்கள் !

சில சமயம் மெகாதொடர்களுக்கு வரும் சுண்டி இழுக்கும் விளம்பரங்கள், பார்வையாளர்களை மணிக்கு தொலைகாட்சிக்கு முன்பு அழைக்கிறது. குறிப்பாக விஜய் தொலைகாட்சியின் 'ரோஜா கூட்டம்'. இனி எதோ ஒரு தொலைகாட்சியில் வரப் போகும் மொகாதொடர்கள் பற்றிய சிறு சிறு அறிமுகங்கள்

*********


கணவன் கண்டதெல்லாம்

மனைவியின் அனைத்து பக்கங்களையும் அறிந்த கணவன், கணவனின் வேறு பக்கங்களை அறியாத மனைவி இவர்களை வைத்து பக்கம் பக்கமாக வசனமே இல்லாமல் அவர்களின் உணர்ச்சிகள், வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டி புரட்டி எங்கெல்லாம் செல்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காணத்தவறாதீர்கள் 'கணவன் கண்டதெல்லாம்'

மாங்கல்ய தோரணம்
கவலையில்லாத கணவன், சீரியல்களின் கண்ணீருக்குக் கூட கலங்கும் மனைவி, இவர்களுடைய உலகம் மிகச் சிரியது, வீட்டில் இருவருமே சேர்ந்து இருக்கும் நேரம் வெறும் 2 மணி நேரம் தான், அப்பவும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளமாட்டார்கள், இவர்களுக்கு இடையே ஒரு பெண் நுழையும் போது இவர்கள் என்ன ஆனார்கள் ?

தேன்கூடு
மனைவி சரி இல்லை என்று நினைக்கும் கணவன், மாதச் சம்பளம் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கும் மனைவி, இவர்களுக்கு இரு குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் ஒரு புதிர்காலமா ?.


மல்லிகை தோட்டம்
ராஜு, தீபா இவங்க இரண்டு பேர் தான் இந்த கதையின் முக்கிய பாத்திரமென்றாலும் தட்டுமுட்டு சாமான்களாக நிறைய பாத்திரங்கள் இவங்க காதலுக்கு எதிர்பாக நிற்கிறார்கள், இடையில் ராஜுவின் மனம் சோபாவின் பக்கம் செல்கிறது, அவனை விடாமல் துறத்தும் தீபா.....இவங்க சேர்ந்தாங்களா ? பிரிந்தார்களா ?

சோபனா
சாப்ட்வேர் மனைவி, சாதாரண வேலை பார்க்கும் கணவன், மகிழ்ச்சியான இல்லம். இவை எல்லாம் சென்ற மாதம் வரை உண்மை. திடிரென்று வேலையை விடச் சொல்லும் கணவன், விவரம் தெரியாமல் துடிக்கும் மனைவி, இவர்களுக்கிடையே பிரச்சனை பெரிதாக இவன் தான் காரணமா ? திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு

வானம் வாழ்க்கைபடும்
இவங்க குடும்பம் ரொம்ப பெரியது, இவங்க போடும் சண்டையும் தான், இவங்க குடும்பத்தின் திடீர் குழப்பத்திற்குக் காரணம் அவங்க அப்பா, 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார். அம்மாவின் சோகத்தில் பங்கெடுக்கும் வயது வந்த இரு பிள்ளைகள், இவர்களின் பல பக்கங்கள்.


யப்பா.........முடியல.

15 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

இதுக்கெல்லாமா நேரம் இருக்கு உங்களுக்கு

ஆச்சர்யம் தான் ...

பித்தனின் வாக்கு சொன்னது…

அய்யோ, அய்யோ யாராவது வந்து காப்பாத்துங்களேன். எங்க அண்ணாச்சி நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்தார். தெரியாம டீ வீ சீரியல் பாத்துப் போட்டார். இப்படிக் கலங்கிப் போய்ட்டார். நல்லா இருந்த மனுசனை இப்படிப் புலம்ப விட்டுட்டாங்களே.....

சரி சரி சீரியல் விளம்பரம் தான பார்த்தீங்க. சீரியல் மட்டும் ஒரு மாசம் பார்த்தீங்க அம்புட்டுதான். ஆமா கையில் ரிமோட்டுடன் டீ வீ பார்க்க மாட்டிங்களா?

Romeoboy சொன்னது…

ஹா ஹா பேசாம நீங்களே ஒரு மெகா சீரியல் டைரக்ட் பண்ணுங்க தல.

ஷாகுல் சொன்னது…

உங்களுக்கு என்ன பாஸ்! நீங்க மூனு மணி நேரம் முன்னாடி இருக்கீங்க. அதனால் எல்ல சீரியலையும் பாக்கலாம். நாங்க மூனு மணிநேரம் பின்னாடி இருக்கோம். வீட்டுக்கு போகும் போது மிட் நைட் மசாலாதான் ஓடுது.

நீங்க குடுத்து வச்சவங்க :)))))))

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சீரியல் குடும்பத்துல உள்ளவங்களின் உறவை ரொம்ப சீரியசாக்குகிறதே !

சீரியல் குடும்பத்துல உள்ளவங்களின் உறவை ரொம்ப சீரியசாக்குகிறதே !

குடும்பத்தோட உக்கார்ந்து பார்க்கவேண்டிய தொடர்ன்னு விளம்பரம் கொடுக்கிறாங்க..., பார்த்த ஐந்தாவது நிமிஷத்துலயே குடும்பத்துல விரிசலை உண்டாக்கிவிடுகிறதே! என்ன செய்ய?...

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...

இதுக்கெல்லாமா நேரம் இருக்கு உங்களுக்கு

ஆச்சர்யம் தான் ...//

நான் சீரியல் பார்ப்பது இல்லை, விளம்பரம் மட்டும் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

பித்தனின் வாக்கு said...

அய்யோ, அய்யோ யாராவது வந்து காப்பாத்துங்களேன். எங்க அண்ணாச்சி நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்தார். தெரியாம டீ வீ சீரியல் பாத்துப் போட்டார். இப்படிக் கலங்கிப் போய்ட்டார். நல்லா இருந்த மனுசனை இப்படிப் புலம்ப விட்டுட்டாங்களே.....

சரி சரி சீரியல் விளம்பரம் தான பார்த்தீங்க. சீரியல் மட்டும் ஒரு மாசம் பார்த்தீங்க அம்புட்டுதான். ஆமா கையில் ரிமோட்டுடன் டீ வீ பார்க்க மாட்டிங்களா?//

நான் சீரியல் பார்ப்பது இல்லை, விளம்பரம் மட்டும் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ROMEO said...

ஹா ஹா பேசாம நீங்களே ஒரு மெகா சீரியல் டைரக்ட் பண்ணுங்க தல.//

கணவர்களின் மொத்த சாபமும் எனக்கு கிடைக்கும், நீங்க கொடுப்பது வரமா சாபமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சீரியல் குடும்பத்துல உள்ளவங்களின் உறவை ரொம்ப சீரியசாக்குகிறதே !

சீரியல் குடும்பத்துல உள்ளவங்களின் உறவை ரொம்ப சீரியசாக்குகிறதே !//


குடும்பத்தோட உக்கார்ந்து பார்க்கவேண்டிய தொடர்ன்னு விளம்பரம் கொடுக்கிறாங்க..., பார்த்த ஐந்தாவது நிமிஷத்துலயே குடும்பத்துல விரிசலை உண்டாக்கிவிடுகிறதே! என்ன செய்ய?...//

சீரியலை சீரியசாக எடுத்துக்குவாங்க போல :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷாகுல் said...

உங்களுக்கு என்ன பாஸ்! நீங்க மூனு மணி நேரம் முன்னாடி இருக்கீங்க. அதனால் எல்ல சீரியலையும் பாக்கலாம். நாங்க மூனு மணிநேரம் பின்னாடி இருக்கோம். வீட்டுக்கு போகும் போது மிட் நைட் மசாலாதான் ஓடுது.

நீங்க குடுத்து வச்சவங்க :)))))))//

சத்தியமாக நான் எந்த சீரியலையும் பார்ப்பது கிடையாது.

தமிழ் உதயம் சொன்னது…

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை "சீரியல்"

வடுவூர் குமார் சொன்னது…

இவ்வ‌ள‌வு க‌தை கை வ‌ச‌ம் இருக்கா? அப்ப‌டியோவ்,சின்ன‌த்திரை ம‌க்க‌ள் கொடுத்துவைத்த‌வ‌ர்க‌ள் தான்.

ராமலக்ஷ்மி சொன்னது…

//யப்பா.........முடியல.//

இப்பவே கண்ணைக் கட்டினா எப்படி:)? இந்த சீரியல் அலை இன்னும் பலகாலத்துக்கு ஓயப் போவதில்லை!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என்ன தலைவரே, இன்னிக்கு ஜாலி மூட்ல இருக்கிறீங்களா.

ஆமா இந்த சீரியல்களெல்லாம் உண்மையிலேயே வரப்போவுதா.

பேரைக்கேட்டாலே சும்மா அதிருதே.

ஆனா அண்ணா நமக்கு நெட் மாதிரி வீட்டுப் பெண்களுக்கு டிவி.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

நெடும் தொடர் என்ற இனிய வார்த்தையை கழகம் கண்டு பிடித்து உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்