பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2010

கலவை 31 / மார்ச் / 2010 !

தாந்திரிகம் : ஒருவழியாக நித்தி ஆசிரம தலைமை பதவியை துறந்திருக்கிறார். முற்றும் துறந்தவருக்கு ஒட்டிக் கொண்டு இருந்தது அந்த பதவியோ (!). கிடக்கிறவ கிடக்கா கிழவியை தூக்கி மனையில் வை, என்பதற்கு ஏற்ப நித்தியின் காம விளையாட்டுகளை 'தாந்திரிக யோக பயிற்சி முறை' என்று வகைப்படுத்தி இருக்கிறது ஒரு (தமிழ்) இந்து இணையத்தளம். கேட்கிறவன் கேணையனாக இருந்தால்.... கேபிள் ஷங்கர் எடுக்கப் போகும் படத்தின் நாயகி கேஆர்விஜயா தான் என்பார்கள் போல. அதுவே யோகப் பயிற்சி என்றால் திருமணம் ஆனவர்கள் செய்வதெல்லாம் தியானப் பயிற்சியா ? பிறகு எதைத்தான் இவர்கள் பிரம்மச் சாரியம் என்று நித்தி மடத்தினர் விற்றார்கள் என்று தெரியவில்லை. நித்தியின் குசுவிற்கும் குணப்படுத்தும் சக்தி இருந்தது உண்மை தான் என்று எழுதிய எழுத்தாளர், ரிப்போர்டர் கட்டுரை ஒவ்வொன்றிலும் 'நான் அப்போதே சந்தேகப்பட்டேன்' என்பதாக நடந்த ஒவ்வொரு நிகழ்வைப் பற்றி எழுதும் போது தன் தீர்க்க தரிசனத்தை இடைச் சொருகிறார். அப்படி என்றால் இந்தாளு ஏன் நித்தி மாட்டும் வரை அவனுக்கு கொள்கை பரப்பு செயலாளாராக இருந்தார் ? லெனின் கருப்பன் கூடவே இருந்து காட்டிக் கொடுத்தான் என்றால் இந்த ஆளை எதில் சேர்ப்பது ? எட்டைய புரக்காரர்கள் பதில் தெரிந்தால் கூறுங்கள்.

கிரிக்கெட் பார்க்க அனுமதிக்காததால் வீட்டை விட்டு ஓடத் துணியும் மாணவர்கள் : சென்னையில் ஒரு எப் எம் வானொலியில் விளம்பரமாக 'என்னை கிரிக்கெட் பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு ஓடிவிடுவேன்' என்று சொல்வதாக ஐபிஎல்லுக்கு விளம்பரம் செய்கிறார்கள். கேட்கும் போதே எரிச்சலாக இருக்கிறது, இவனுங்களையெல்லாம் யார் தடுப்பது என்று குறை பட்டுக் கொண்டார் ஒரு நண்பர். கொடுமை தானே. சூப்பர் மேன் விளம்பரத்தைப் பார்த்து ஒரு சிறுவன் தானும் பறக்க முடியும் என்று நினைத்து மாடியில் இருந்து குதித்து இறந்து போனான் என்பது பலருக்கும் நினைவு இருக்கும். தேர்வு நேரத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதுமில்லாமல் பிஞ்சு மனதில் நஞ்சு வைக்கும் இது போன்ற விளம்பரங்கள்........கண்டிக்கப்பட வேண்டும்

கடவுள் துகள் ஆராய்ச்சி : வெற்றிபெற்றது என்று ஒரு தகவல் படித்தேன். அதன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. ஆப்ரேசன் சக்ஸஸ் பட் பேசண்ட் டெட்.. என்று வருமா என்று தெரியவில்லை. பெருவெடிப்பு என்பது நிகழ்ந்திருக்க முடியும் என்பது ஊகமே.....அதை நிருபனம் செய்ய முடியுமா என்பதே அந்த ஆராய்ச்சின் முயற்சி, அதற்கான செலவுகளால் பல ஏழை நாடுகளின் பசிகளை ஆண்டுக்கணக்கில் போக்கி இருக்க முடியும். இப்போது மதவாதிகளின் கவலையே ஆராய்ச்சி முடிவுகள் பொய்யாகிப் போனால் மாற்றிக் கொள்ள காரணங்கள் தேவைப்படும் என்பதே. மதவாதிகள் சலிக்காமல் அறிவியலுடன் ஒன்று பட நினைப்பது பாராட்டப்பட வேண்டியது. இன்னுமா உலகம் இவர்களையெல்லாம் நம்புது என்பதே மதவாதிகளின் பலம்.

இடைத் தேர்தல் : ஆளும் கட்சி வெற்றிபெருவதென்பது எழுதாதவிதி. காரணம் அரசு இயந்திரம் முழுமையாக ஆளும் கட்சியின் கட்டுபாட்டில் தான் இருக்கும், இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவு மகிழ்ச்சியே அளிக்கிறது. வன்னிய சாதிப் பெரும்பாண்மையினால் ஒரு சட்டமன்ற தொகுதியை வெல்ல முடியும் என்கிற சாதி சார்ந்த, கட்டுமான நம்பிக்கைகள் உடைய வேண்டும் என்பதே விருப்பம். இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடை பெறும் வேளையில் அந்த இடைத் தேர்தல் தொகுதி மக்களுக்கு மட்டும் அதிஷ்ட தேவதை பண மழை பெய்திருக்கிறாள் என்பது தவிர்த்து இந்த தேர்தலால் என்ன நன்மையும் ஏற்படப் போவதில்லை


போலி மருந்து பிதா மகன்கள் : பிடிபட்டவன் / சரணடைந்தவன் குங்குமப் பொட்டுடன் சிரித்துக் கொண்டே வருகிறான். (எவனோ இன்னமும் சொல்கிறான்...கடவுள் நம்பிக்கை உள்ளவன் குற்றம் செய்ய அச்சப்படுவானாம்!)அரசியல் கைதிகள் போராட்டத்தின் போது தான் இவ்வாறு சிரித்துக் கொண்டே வருவார்கள். இப்போதெல்லாம் லஞ்சம் ஊழல், பொது சொத்தை கொள்ளை கொண்டவன் முதல் அனைத்து கயவாளிகளும் குற்றம் செய்திருக்கிறோம் அல்லது குறைந்த அளவாக குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறோம் என்கிற சிறு உறுத்தல் கூட முகத்தில் இல்லாதபடி சிரித்துக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது, அவர்கள் இந்திய அரசு சட்டங்களையும், நீதிகளையும் பார்த்து ஏளனம் செய்வது போலவே புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் காவல் விசாரணை, பிறகு பிணைய விடுப்பு, அப்பறம் கேஸ்....அதிலும் தண்டனை என்றால் மேல் நீதிமன்றத்தால் விடுதலை முடியும், இதற்கு இடையே எனக்கு தமிழ் தெரியாது, பெங்காலியில் மொழி பெயர்த்து தாருங்கள் என்பது போன்ற இழுத்தடிப்புகள் இன்னும் எவ்வளவோ இருக்கே......அதுக்குள்ள வயதும் 80 ஆகி இயற்கை மரணம் அடையாமல் போய்விடுவார்களா என்ன ? எல்லாம் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை தான். மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்வதற்கு பல வழிகள் இருப்பது போலவே மாட்டிக் கொண்டால் தண்டனை அடையாமல் இருக்க ஆயிரம் வழிகள் உண்டு. மனிதச் சட்டத்தில் நிருபனம் செய்ய இயலாத குற்றங்கள் முகமூடிக் கொள்ளைக்காரர்களாலும், ஏலியன்களாலும் செய்யப்படுபவை என்பதாக மறுவிசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது............யப்பா....மதுரை தினகரன்......இன்னும் என்னன்வோ நினைவுக்கு வருது..........பெருமூச்சு தவிர்த்து வேறென்ன வரும்.

7 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

//பிடிபட்டவன் / சரணடைந்தவன் குங்குமப் பொட்டுடன் சிரித்துக் கொண்டே வருகிறான். (எவனோ இன்னமும் சொல்கிறான்...கடவுள் நம்பிக்கை உள்ளவன் குற்றம் செய்ய அச்சப்படுவானாம்!)//


அப்படி சொல்றவன் தான் தல முதல் திருடன்!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அனைத்துமே அருமை.

Veliyoorkaran சொன்னது…

எவனோ இன்னமும் சொல்கிறான்...கடவுள் நம்பிக்கை உள்ளவன் குற்றம் செய்ய அச்சப்படுவானாம்///

அண்ணன்..இப்டியெல்லாம் சொல்லாதீங்க..சாமி பெரிய அயோக்ய பய..அப்பறம் கண்ண குத்துவான்..!

ரோஸ்விக் சொன்னது…

கலவை கலக்கல் அண்ணா... தண்டனைகளிலிருந்து தப்புவது குற்றம் செய்வதை விட அவர்களுக்கு எளிதாகிப் போனது.

எங்கள் ஊரிலும் ஒரு தொடர் கொள்ளைக்காரன் (திருடன்) வேறு ஒரு பிரச்சனையில் ஒரு கடையின் முன்பு கையில் இரண்டு சக்கர வாகனத்தின் Shock Absorber கம்பியுடன் நின்று கொண்டு சவால் விடுகிறான். போலீசுக்கிட்ட சொல்லி என்னடா பண்ணுவீங்க?? ஒரு மயி__யும் புடுங்க முடியாது. ஏற்கனவே எம் பேருல நிறைய கேசு இருக்கு... அதிக பட்சம் 15 நாளு தான் எனக்கு... என்கிறான். காவல் துறை ஏற்கனவே செத்து விட்டதால்... இதைகேட்டு சாவதருக்கு எவனும் இல்லை.

Kodees சொன்னது…

கோவி, இதைப் படிச்சீங்களா?
http://www.jeyamohan.in/?p=6954

கோவி.கண்ணன் சொன்னது…

//ஈரோடு கோடீஸ் said...
கோவி, இதைப் படிச்சீங்களா?
http://www.jeyamohan.in/?p=6954
//

அது ஏப்ரல் 1

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சூப்பரப்பு!

அருமை!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்