செய்தி ஊடகங்கள் நான்காம் தூண், சமூதாயத்தை, சமுதாய எண்ணங்களைக் கட்டமைப்பதில் அவையே முதல் தூண். அவர்கள் வெளியிடும் தகவல் மக்கள் வெறும் தகவலாக எடுத்துக் கொள்வது இல்லை என்பது ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.
ஒரு முறை அமெரிக்காவில் வெள்ளத்தினால் உணவு திண்டாட்டம் ஏற்பட்ட போது அமெரிக்க கடைகள் பல சூறையாடப்பட்டன, பொருள்களை அள்ளிச் சென்றவர்கள் பற்றிய பல்வேறு ஊடக செய்திகள் படங்களுடன் வெளியாகி இருந்தனவாம், அதில் வெள்ளையர்கள் அள்ளிச் சென்றதைப் பற்றிய செய்திகளில் "உணவுக்காக பொருள்களை எடுத்துச் சென்றனர்" என்றும் கருப்பர்கள் அள்ளிச் சென்றது பற்றிய படச் செய்திகளில் "உணவுக்காக பொருள்களைச் திருடிச் சென்றனர்" என்றும் வெளியாகி இருந்தனவாம்.
அவன்:
வடசென்னை பகுதியில், பகல் நேரத்தில் பூட்டப்பட் டிருந்த வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 110 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெரம்பூர் கோபால் தெருவைச் சேர்ந்தவன் சுந்தர் (25). இவன் 2006ம் ஆண்டு செம்பியம் மற்றும் பெரவள்ளூர் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.
இவன் மீது 12க்கும் மேற் பட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்த சுந்தர், மளிகைக் கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்தான். கடைக்கு வரவேண்டிய பணத்தை, சென்னையில் உள்ள பல வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று காசோலைகளாக பெற்றான். அதை வங்கியில் செலுத்தி, பணமாக மாற்றி கடைக்கு கொண்டு வந்து சேர்த்து வந்தான். பூக்கடை, யானைக்கவுனி, ஏழு கிணறு, கொத்தவால் சாவடி, எஸ்பிளனேடு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பூட்டிக் கிடக்கும் வீடுகளில் பகல் நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.
அவர்:
காஞ்சிபுரம்:அர்ச்சகர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கோவில் நிர்வாகிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் மச்சேஸ்வரர் கோவில் உள்ளது. தனியார் கோவில். இக்கோவிலில் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன்(35) அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் கோவிலுக்கு வந்த பெண்களிடம் கோவில் உள்ளே உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேவநாதன் தலைமறைவானார். முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த 16ம் தேதி காஞ்சிபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரணடைந்தார். அவரை, ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். நீதிபதி இரண்டு நாட்கள் அனுமதி அளித்தார்.
அது :
இந்த இரு (அவன், அவர்) செய்திக்குரிய அது.... தமிழில் நெ.1 (என்று சொல்லிக் கொள்ளும்) நாளிதழான தினமலர் (தமிழர்கள் தினமலரை காசு கொடுத்து வாங்கிப் படிப்பது சொந்த செலவில் சூனியம்)
*****
பார்பனீயம் என்றால் என்ன ? புரியல தயவு செய்து விளக்கவும்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
கட்டமைத்தல் என்றால் என்னவென்று ஆராய்ச்சி செய்தால், தினமலரின் செய்திக்குறிப்பில் ஏகப்பட்ட விவரங்கள் கிடைக்கும் போலிருக்கே !
கூர்ந்த பார்வை தான் போங்க உங்களுக்கு !
நல்ல ஒரு பொதுநல பார்வை, வாழ்த்துக்கள்.
தவறு செய்பவன் சட்டமோ வேதமோ படித்தவனாயின் அவனது தண்டனை அதே தவறை செய்த சாதாரண மனிதனின் தண்டனையை விட பத்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பதாய் எப்போதோ படித்த நியாபகம் இருக்கிறது.
அதை நடை முறையில் கொண்டு வரும் வரை இந்த பிரச்சனை தீராது.
பார்பனீயம் என்றால் என்ன ?
நேக்கு விளங்கிடுத்து,பார்பனீயம் என்றால் பெரியவானு அர்த்தம். பெரியவா செஞ்சா சாத் சாத் அந்த பெருமாளே செஞ்சமாதிரி
அஹமத் என்ற இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவன் வெலுர் சின்னகடைத்தெருவில் அராஜகமும் அட்டுழியங்களூம் செய்துவருகிரான் அவன் மீது பல கிரிமினல் வ்ழக்கு உள்ளது
கட்டையன் என்ற தியாகு திருநெல்வேலி பளையபஜாரில் கட்டபச்சாயது முதல் ஆள் கடத்தல் வரை அனைத்து சட்டவிரோத செயல்கலையும் செய்துவருகிரான்
(இரண்டாவது உள்ளவரின் மதமோ இனமோ குரிப்பிடவில்லை அவரை கிரிமினலாகவும் காட்டவில்லை இதை தின(மலம்) மட்டும் அல்ல அனைத்து ஊடகங்களும் ஒரே மாதிரிதான்)
மறுபடியும் சமுகம் சார்ந்த பதிவு.மிக அருமை.
intha dinamalaththai serntha dondu (ghandu)parppananukke velichcham.
//இந்த இரு (அவன், அவர்) செய்திக்குரிய அது.... தமிழில் நெ.1 (என்று சொல்லிக் கொள்ளும்) நாளிதழான தினமலர் (தமிழர்கள் தினமலரை காசு கொடுத்து வாங்கிப் படிப்பது சொந்த செலவில் சூனியம்)//
அட ஆமாம்... ஆனாலும் நீங்கள் தினமலருக்கு லிங்க் கொடுத்திருப்பது!!! எங்களுக்கு சூனியம் கொடுப்பதுப்போல இருக்கே!
//TBCD said...
கட்டமைத்தல் என்றால் என்னவென்று ஆராய்ச்சி செய்தால், தினமலரின் செய்திக்குறிப்பில் ஏகப்பட்ட விவரங்கள் கிடைக்கும் போலிருக்கே !
கூர்ந்த பார்வை தான் போங்க உங்களுக்கு !
//
மிக்க நன்றிங்கோ, எந்த ஒரு தகவலிலும் உள்நோக்கமும் இணைந்தே இருக்கும் என்பது பதிவுலகம் சொல்லி தந்த பாடம்.
//சிங்கக்குட்டி said...
நல்ல ஒரு பொதுநல பார்வை, வாழ்த்துக்கள்.//
பாராட்டுக்கு நன்றி !
//தவறு செய்பவன் சட்டமோ வேதமோ படித்தவனாயின் அவனது தண்டனை அதே தவறை செய்த சாதாரண மனிதனின் தண்டனையை விட பத்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பதாய் எப்போதோ படித்த நியாபகம் இருக்கிறது.//
தெரிந்தே தவறு செய்பவன் மிகப் பெரிய குற்றவாளிம்பாங்க, புத்திசாலிகள் விஞ்ஞான முறையில் தவறு செய்வார்களாம், இவர்கள் செய்வது நேரிடையாகவே தெரிகிறது, இவர்கள் அறிவாளிகள் இல்லை, கோழைகள்
// வேடிக்கை மனிதன் said...
பார்பனீயம் என்றால் என்ன ?
நேக்கு விளங்கிடுத்து,பார்பனீயம் என்றால் பெரியவானு அர்த்தம். பெரியவா செஞ்சா சாத் சாத் அந்த பெருமாளே செஞ்சமாதிரி
//
சங்கர் ராமனை கொன்றது பெருமாள்னு நான் நம்பவில்லை
:)
தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.
கோவியாரே,
ரொம்பக் கூர்மையான பார்வை உங்களுக்கு. பாராட்டுக்கள்..
இது மாதிரியான மரியாதை விகுதிகள் அவரவர் வகிக்கும் பதவிக்கேற்ப வந்து விழுவது தான்..
இதைப் படிச்சிப்பாருங்க.. “கூடலூரைச்சேர்ந்த முனியாண்டி என்பவர் நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார்” என்று தான் வரும்..
இங்கு வந்த மரியாதை விகுதி அவர் வகித்த பதவி பொறுத்து வருவது தானே தவிர ஜாதி பார்த்து வருவதில்லை..
பதிவர் மாதவராஜ் அவர்களின் (மீள்பதிவு) இடுகை
http://mathavaraj.blogspot.com/2009/10/blog-post_29.html
கருத்துரையிடுக