இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது குறித்து பல்வேறு ஊகங்கள், தகவல்கள் இந்திய ஊடகங்களில் பரப்பப்படுகிறது. உலகப் பகுதிகளில் பொதுவாக வட இந்தியர்களுக்கு எதாவது இடர்கள் என்றால் அதை இந்திய அளவு தேசிய பொது சிக்கலாக காட்டுவதே வடஇந்திய ஊடகங்களின் வேலை. அதுமட்டுமல்ல மைய அரசும் வட இந்தியர்கள் பிரச்சனை என்றால் உடனே நடவெடிக்கை எடுப்பார்கள், அண்மையில் பிரான்சோ இத்தாலியோ எங்கோ ஒரு நாட்டில் சிங்குகளுக்கு முண்டாசு தடை விதிக்கப்பட்ட போது பிரதமர் மன்மோகன் சிங் மீசை துடித்தது, உடனே பேச்சு வார்த்தை நடத்தி பாரம்பரியம் பழக்கவழக்கம் இதிலெல்லாம் எவரும் தலையிட முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இருந்து பிற நாடுகளுக்கு குடியேரியவர்கள் குறிப்பாக மலேசியாவில் சென்ற ஆண்டு நடந்த பெரும் கலவரங்களில் இந்திய அரசு முதலில் அது மலேசிய நாட்டின் பிரச்சனை என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தார்கள். எங்கேயும் போகவேண்டாம் இங்கே தமிழ்நாட்டில் இராமேஷ்வரம் பகுதியில் ஆண்டுக்கு 50 மீனவர்களுக்கும் மேல் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படுகின்றனர், அவர்கள் பிடித்த மீன்கள், படகுகள் வரை அனைத்தும் பிடுங்கப்பட்டு அவர்களை அம்மண சித்திரவதை செய்து குத்துயிரும் குலை உயிருமாக திருப்பி துரத்திவிடுவது வாடிக்கையாகவே நடக்கிறது, இதைப் பற்றி இந்திய அரசு அலட்டிக் கொண்டதே குறைவு, அப்படியே அலட்டிக் கொண்டாலும் அது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு... கூட்டணி பாதிப்பு என்கிற ரீதியில் கண்தொடைப்பாக விமானம் விடுகிறோம், கப்பல் விடுகிறோம், ஹெலிக்காப்டரில் ரோந்துவருகிறோம், நிலைமையை அணுக்கமாக கண்காணித்து அறிக்கை விடுகிறோம் என்பதாக பேட்டி அளிப்பதுடன் சரி.
மீனவர்கள் தாக்கப்படுவது மாதந்திர வாடிக்கைப் போல் தொடர்ந்து நடந்தேறிவரும்.
இந்திய நிலப்பரப்பில் தென்மாநிலங்களை இணைத்துக் கொள்வதுடன் தென்மாநில வாக்காளரின் வாக்குகள் என்பதைத் தவிர்த்து தென்னக மக்களின் நலன் குறிப்பாக தமிழக மக்களின் நலன் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள், அதே சமயத்தில் ஏஆர்ரஹ்மான் போன்றோர் சொந்த முயற்சியில் புகழடைந்தால் அவர்களை தமிழர் என்று குறுக்காதீர்கள் இந்தியர் என்று சொல்லுங்கள் என்றெல்லாம் அறிவுரை கூறுவார்கள். வட இந்தியர்கள் தேசியவாதம் தென் இந்திய மக்களின் நலன் குறித்ததே அல்ல, கர்நாடகாவும், தமிழகமும், பிற தென் இந்திய மாநிலங்களும் தண்ணீர் பிரச்சனையில், தெலுங்கானா உட்பட மாநில உரிமை குறித்து உழன்று கொண்டிருந்தால் அவையெல்லாம் மாநிலப் பிரச்சனை என்று கூறி தேசியவாதத்தை தற்காலிகமாக கக்கத்திற்குள் ஒளித்துக் கொள்வார்கள்
ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு காரணமாக அவர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதாக தனது கண்டிபிடிப்பில் ஒரு கட்டுரையை எழுதி வெளி இட்டிருக்கிறது தினமலர். இதே தினமலர் நேற்று இந்தி எதிர்பாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி அளிக்கிறார்கள் அவர்கள் தேசவிரோதிகள் போல் காட்டி (தேசத்தின் மொழியைப் புறக்கணிக்கிறவர்கள் தேசவிரோதிகள் தான் என்பது அவர்கள் சித்தாந்தம்) ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறது.
இவர்கள் ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதை தெளிவுபடுத்தாமல் குழப்பி அதில் இந்திய தேசியம் என்கிற கருத்து திணிப்பை வைப்பதுடன் அதை வழக்கமான கோணங்கித்தன எழுத்து இட்டுக்கட்டு மூலம் பரப்பிவருகிறார்கள். தேசிய அடையாளம் என்பதே பல்வேறு மொழிகளுக்கான (மொழியால் பழக்கவழங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட) உரிமை என்பதே, அதை ஒரு மொழியைத் திணித்து ஏற்படுத்திவிட முடியாது என்கிற புரிதல் இருந்தும், பெரும்பாண்மை ஆளவேண்டும் என்கிற சிந்தாந்தாத்தில் தேசிய பொது மொழி என்ற சொல்லில் ஹிந்தி வலியுறுத்துபர்களிடம் பேசுபவர்களிடம் நடுநிலைமையோ, நேர்மையான கருத்துகளையோ பெற்றுவிட முடியுமா ?
இந்தியர்கள் வெளி நாடுகளில் அடிவாங்குவது அனைவருக்குமே வருத்தமளிப்பது உண்மைதான் என்றாலும் அது அனைத்து மாநில, இந்திய இன மக்கள் அப்படி அடிவாங்கும் போது இருக்க வேண்டும். முதலை வடிக்கும் கண்ணீருக்கும் இவர்கள் கண்ணீருக்கும் ஒரே வேறுபாடுகளே கிடையாது. 'வட இந்தியர் உயிர்தான் உயிர் தென்னிந்தியர் உயிரெல்லாம் மயிர்' என்பது வட மாநில மக்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் இருக்கிறதென்றால் தினமலரும் அதையே பின்பற்றகிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்? - இன்றைய தினமலர்
மராத்தி கோஷம் மற்றவர்களுக்கு தான் : அவங்க பிள்ளைகளோ இங்கிலீஷ் மீடியம்
(வட) இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன் - எழுத்தாளர் ஜயமோகன் வலைப் பக்கத்தில்
டெல்லியில் நீங்கள் இருந்திருந்தால் வட இந்தியர்கள், சீக்கியர்கள் குறிப்பாக, நடந்துகொள்ளும் முறையை அறிந்து மனம் கசந்திருப்பீர்கள். குறிப்பாக தென்னிந்தியர்களை அவர்கள் நடத்தும் விதம். அவர்களுக்கு விசித்திரமான ஒரு உயர்வு மனப்பான்மை. பெரும்பாலான உயர்வு மனப்பான்மைகள் ஆழமான தாழ்வு மனப்பான்மையில் இருந்து செயற்கையாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவை. தென்னிந்தியர்களை மூளைக்காரர்கள் என்று அவர்கள் சரியாகவோ தப்பாகவோ எண்ணிக்கொண்டு வரும் உயர்வு மனப்பான்மையா இது?
மேலும் வாசிக்க...
பின்பற்றுபவர்கள்
18 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
22 கருத்துகள்:
<<<
இந்திய நிலப்பரப்பில் தென்மாநிலங்களை இணைத்துக் கொள்வதுடன் தென்மாநில வாக்காளரின் வாக்குகள் என்பதைத் தவிர்த்து தென்னக மக்களின் நலன் குறிப்பாக தமிழக மக்களின் நலன் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள், அதே சமயத்தில் ஏஆர்ரஹ்மான் போன்றோர் சொந்த முயற்சியில் புகழடைந்தால் அவர்களை தமிழர் என்று குறுக்காதீர்கள் இந்தியர் என்று சொல்லுங்கள் என்றெல்லாம் அறிவுரை கூறுவார்கள்
>>>
அதானே?
<<<
'வட இந்தியர் உயிர்தான் உயிர் தென்னிந்தியர் உயிரெல்லாம் மயிர்'
>>>
:(
<<<
குறிப்பாக தென்னிந்தியர்களை அவர்கள் நடத்தும் விதம். அவர்களுக்கு விசித்திரமான ஒரு உயர்வு மனப்பான்மை.
>>>
உண்மையே உண்மை...
நீங்கள் சொல்வது மிகவும் சரி
தேசிய ஒருமைப்பாடு , வேற்றுமையில் ஒற்றுமை என தமிழ்நாட்டில்தான் சொல்லி வருகிறோம்
வட நாட்டில் அத்தகைய மனபோக்கு இல்லை என்பதே உண்மை
தங்கள் கருத்து நன்றாக உள்ளது
நேற்று என்னுடைய நண்பரிடம் நான் இந்தியாவின் வில்லத்தனத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளை வரிக்குவரி அப்படியே எழுதியுள்ளீர்கள். இந்த பதிவிற்கு நன்றி!
எனக்குத் தெரியாத விசயம் இது. ஆனால் மீனவர்கள் தாக்கப் படுவதற்க்கு காட்டப் படும் மொத்தனமும், அதுக்கு தமிழக அரசின் அமைதியும், கும்மியடிக்கும் பதிவர்கள் மத்திய அரசை மட்டும் அடிக்கும் கும்மிகளும் அவர் அவர்களின் சுய நலத்தைக் காட்டுகின்றன. நன்றி.
//பித்தனின் வாக்கு said...
எனக்குத் தெரியாத விசயம் இது. ஆனால் மீனவர்கள் தாக்கப் படுவதற்க்கு காட்டப் படும் மொத்தனமும், அதுக்கு தமிழக அரசின் அமைதியும், கும்மியடிக்கும் பதிவர்கள் மத்திய அரசை மட்டும் அடிக்கும் கும்மிகளும் அவர் அவர்களின் சுய நலத்தைக் காட்டுகின்றன. நன்றி.
2:18 PM, November 18, 2009
//
இந்தியக் கடலோரப் பாதுகாப்பு, எல்லைப் பகுதிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரிந்தும் கருணாநிதியின் கோவணம் ஏன் துவைக்காமல் இருக்கு அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று உங்களைப் போன்றோர் சுட்டும் போது அதைக் காமடியாகத்தான் எடுத்துக் கொள்ளமுடிகிறது.
வெளிநாட்டுக்காரங்க என்றால் யாருக்குமே ஆகாது போல !!
என்ன கொடுமை இது !!! இல்ல கண்ணன் அண்ணே !! ....
//கண்தொடைப்பாக விமானம் விடுகிறோம், கப்பல் விடுகிறோம், ஹெலிக்காப்டரில் ரோந்துவருகிறோம், நிலைமையை அணுக்கமாக கண்காணித்து அறிக்கை விடுகிறோம் என்பதாக பேட்டி அளிப்பதுடன் சரி.//
இதை தடுக்க தாயுள்ளத்தோடு பரிசீலித்த மத்திய அரசு, கரையிலிருந்து 10 மைல் தான்டி சென்றால் லட்ச ரூபாய் அபராதம், சிறை மற்றும் மீன் பிடி தளவாடங்கள் பறிப்பு என பல திட்டங்களை அமல் படுத்தியுள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ் நாட்டில் பாதிப்பு அதிகம். இதில் தமிழக மக்களையும் கட்சிகளையும் கூட குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும். மீனவர்களுக்காக எல்லா கட்சியும் (ஒரு கட்சி விடாமல்) இணைந்து மக்கள் மத்தியில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினால் மத்திய அரசு பணிந்து தான் ஆக வேண்டும்.
ஆனால் நம் தமிழ் நாட்டில் ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். எந்த கட்சி முடிவெடுத்தாலும் அதுக்கு எதிர் முடிவு எடுத்தால்தான் வளர முடியும் என்று நினைப்பவர்காளுக்கு மக்கள் பிரச்சனைக்காக போராட நேரம் ஏது.
மக்கள் போராடத்தயார் ஆனால் வழி நடத்த நல்ல தலைவர்கள் இல்லை.
//கருணாநிதியின் கோவணம் ஏன் துவைக்காமல் இருக்கு//
கழட்டினா தானே துவைக்கறதுக்கு.அப்படி கழட்டிட்டா "தொங்குறதையெல்லாம் அறுத்து தள்ளும்" கோவியார் (அதானே உங்க ஹாபி..) எங்கே வந்து காஸ்ட்ரேட் செய்து விடுவாரோ என்ற பயம் தான் கழட்டாமல் வைத்திருக்கக் காரணம்.இது தெரிந்துமா இந்த கேள்வி?//
//maruthu said...
//கருணாநிதியின் கோவணம் ஏன் துவைக்காமல் இருக்கு//
கழட்டினா தானே துவைக்கறதுக்கு.அப்படி கழட்டிட்டா "தொங்குறதையெல்லாம் அறுத்து தள்ளும்" கோவியார் (அதானே உங்க ஹாபி..) எங்கே வந்து காஸ்ட்ரேட் செய்து விடுவாரோ என்ற பயம் தான் கழட்டாமல் வைத்திருக்கக் காரணம்.இது தெரிந்துமா இந்த கேள்வி?//
//
பாலாப் போனவன் பின்னூட்டம் மாதிரியே இருக்கே. அவனா ?
அவ்வ்வ்
அடுத்து அடுத்து பின்னூட்டம் இட்டால் டெலிட் டெலிட் அவனுக்கும் ஒரு பின்னூட்டம் தான் அனுமதிப்பேன்.
//கழட்டினா தானே துவைக்கறதுக்கு.அப்படி கழட்டிட்டா "தொங்குறதையெல்லாம் அறுத்து தள்ளும்" கோவியார் (அதானே உங்க ஹாபி..) எங்கே வந்து காஸ்ட்ரேட் செய்து விடுவாரோ என்ற பயம் தான் கழட்டாமல் வைத்திருக்கக் காரணம்.இது தெரிந்துமா இந்த கேள்வி?//
மருது,
தொங்குறதையெல்லாம் அறுத்து வீழ்த்துவதற்கு, கோவி என்ன விகரமாதித்தனா?அவன் கூட வேதாளம் புகுந்த தொங்கும் உடலைத் தானே வீழ்த்துவான்?ஒருவேளை, இந்த நவீன விக்ரமாதித்தன் உடலில் வேதாளமாக அலையும் பெரியார் புகுந்து விட்டாரா,அதனால் தான் இந்த வினோதமான முன்ன்னேற்றமா.தலை சுத்துதப்பா.
கோவியாரின் வினோத குணங்களை ஆராய்ந்து ஆய்வு செய்யும் மருதுவிடம் தான் இந்த கேள்வி கேட்க முடியும்.
//இந்தியர்கள் வெளி நாடுகளில் அடிவாங்குவது அனைவருக்குமே வருத்தமளிப்பது உண்மைதான் என்றாலும் அது அனைத்து மாநில, இந்திய இன மக்கள் அப்படி அடிவாங்கும் போது இருக்க வேண்டும்//
ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் இந்திய குடிஉரிமை வச்சுருந்தாங்க, மலேசியாவில் அப்படியா ? போராட்டாம் பன்னவுங்க எந்த நாட்டு குடிஉரிமை வச்சுருந்தாங்க ?
மலேசியாவில் நடந்த சம்பவமும், ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதும் ......ரொம்ப எளிதா கோதுடீங்க .
நிறைய சுட்டி கொடுத்தீங்க ஏன் மலேசியா சம்பவம் சுட்டி கொடுக்கலை......
வெளிநாட்டு பிரச்சினையில் பிரிவினை இல்லை, உள்நாட்டில் இருப்பது என்னமோ உண்மை தான், முக்கியமாக மீனவர்கள் சம்பவம்......
சரியாக சொன்னீர்கள்..
இத்தனை குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தால்,எல்லாமே தப்புத் தப்பாகத் தான் தெரியும்!
ஓராண்டுக்கு முன்னால், மும்பையில் தீவீரவாதிகள்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தருணத்தில், இங்கே தமிழ் வலைப்பதிவுலகம், குறைந்தபட்சம் அங்கே செத்து மடிந்தவனுக்காக, ஒரு வரி எழுதவில்லை. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி, அந்தத் தாக்குதலை நடத்தியது இந்து தீவீரவாதிகள்தான் என்று "கண்டுபிடித்து" சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவ்வளவு கூட வேண்டாம்! சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆந்திராவுக் கர்நாடகமும் ஏராளமான உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்ட போது, இங்கே எத்தனை பேர் குறைந்தபட்சம் வாயளவிலாவது அனுதாபம் கொண்டிருப்பார்களென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!
தி.சா. ராஜு எழுதிய சிறுகதை ஒன்று, 1965 ஆம் ஆண்டு கல்கி, அக்டோபர் மாதம் வெளிவந்த ராணுவ மலரில் எழுதியது. அதில் ஒரு வரி வரும்:
"எண்ணெய் மட்டுமே தண்ணீரை விலக்குவது இல்லை! தண்ணீரும் கூடத்தான்!"
தமிழருக்காகக் குரல் கொடுக்க வடக்கே எவரும் இல்லையே என்று கேட்பதற்குமுன்னால் நாம் வடக்கே வாழும் சாதாரண மக்களுக்காக என்றாவது கவலைப் பட்டிருக்கிறோமா என்று நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு பேசுவது நல்லது.
இப்படியே வெறும் பேச்சாகப் பேசிக் கொண்டு தான் எதுவும் செய்ய மாட்டேன், ஊர் வந்து என்வீட்டில் உலை வைத்துப் பொங்கிப் போட வேண்டும் என்றிருப்பதனால் தான், வடக்கே இருப்பவர்கள் கிடக்கட்டும், இங்கே தென்பகுதியில் திராவிடப் பகுதியில் ஆந்திராவுக்குப் போனால், தமிழனை 'அரவமா' என்று கேட்டு ஒதுக்குகிறான். மலையாளத்தில், 'பாண்டி' என்று அழைத்துக் கேவலப்படுத்துகிறான், கர்நாடகத்தில், தமிழனை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறான்.
எண்ணெய் மட்டுமல்ல தண்ணீரும் கூடத்தான் ஒதுக்குகிறது!
கிருஷ்ணமூர்த்தி ஐயா,
கார்கில் போரில் மரணமடைந்த தமிழக வீரர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.
கார்கில் போரில் அள்ளிக் கொடுத்ததும் தமிழகம் தான்.
பாபர் மசூதி இடிப்புக்கு தமிழக பங்களிப்பு குறைவு தான் :)
//ஓராண்டுக்கு முன்னால், மும்பையில் தீவீரவாதிகள்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தருணத்தில், இங்கே தமிழ் வலைப்பதிவுலகம், குறைந்தபட்சம் அங்கே செத்து மடிந்தவனுக்காக, ஒரு வரி எழுதவில்லை. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி, அந்தத் தாக்குதலை நடத்தியது இந்து தீவீரவாதிகள்தான் என்று "கண்டுபிடித்து" சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
//
இருக்கலாம், அதுக்கும் முன் மலேக்கான் குண்டு வெடிப்பும், குஜராத் கலவரம் பற்றி கேள்வி பட்டு இருந்தார்களோ என்னவோ ! ஆனால் அதைச் சாக்கிட்டு இந்திய இஸ்லாமியர்களை பாகிஸ்தான் செல்லச் சொல்லும் தேதியவாததிற்கும் நம்மவர்கள் ஆதரவு கொடுக்கவே மாட்டடர்கள், அப்போது இந்திய ஆதரவுடன் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருந்த ஈழப்போர் நடந்தது என்பதையும் நீங்கள் கூறி இருக்க வேண்டும்.
//அவ்வளவு கூட வேண்டாம்! சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆந்திராவுக் கர்நாடகமும் ஏராளமான உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்ட போது, இங்கே எத்தனை பேர் குறைந்தபட்சம் வாயளவிலாவது அனுதாபம் கொண்டிருப்பார்களென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!
//
அதை நம் நீலகிரி நிலச் சரிவுக்கும் சொல்லலாம் அல்லவா ? நீலகிரி மக்களுக்கு பிற மாநில, மத்திய அரசிடம் கிடைத்த உடனடி உதவிகள் என்ன ?
/நீலகிரி மக்களுக்கு பிற மாநில, மத்திய அரசிடம் கிடைத்த உடனடி உதவிகள் என்ன ?/
ஊட்டியில் தற்போது இருக்கும் என்னுடைய நண்பரிடம் விசாரித்தபிறகே இதை எழுதுகிறேன்:
சரிவுகளில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய ராணுவம் முழு வீச்சுடன் செயல் பட்டுள்ளது.
நீலகிரியில் ஏற்பட்டுவரும் சேதம் வெறும் மழையினால் மட்டுமே அல்ல. அங்கே வீடுகள் சரிவை, உயிர்ப்பலியை சிறிதுகாலம் மலைப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.
சுற்றுச்சூழலுக்கு, வியாபாரமயமாக்கும் கான்க்ரீட் காடுகள் வளர்ந்து வருவதே பெரும் காரணமாக இருக்கிறது.
காரணமானவர்கள், காரணிகள் எல்லோருக்குமே தெரிந்தது தான்!அதைப் பற்றியெல்லாம் பேச மாட்டோம்!
/வட இந்தியர் உயிர்தான் உயிர் தென்னிந்தியர் உயிரெல்லாம் மயிர்/
இப்படி மட்டுமே பேசிக் கொன்டிருந்தால் எப்படி திரு.கண்ணன்?
பிரிவினையைப் பேசிக்கொண்டிருப்பதே கூடத் தமிழனுக்கு வியாதியாகிப்போய்விடுகிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?
//இப்படி மட்டுமே பேசிக் கொன்டிருந்தால் எப்படி திரு.கண்ணன்?
பிரிவினையைப் பேசிக்கொண்டிருப்பதே கூடத் தமிழனுக்கு வியாதியாகிப்போய்விடுகிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?
4:03 PM, November 19, 2009
//
கிருஷ்ணமூர்த்தி ஐயா, சாதிவெறியை கண்டிபவன் சாதிவெறிப்பிடித்தவன் என்று சொல்வது போன்ற கூற்று, ஒதுக்கப்படுபவர்கள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பது பிரிவினை என்றால் அந்த சூழலை ஏற்படுத்துவது, உருவாக்குவது தானே அதன் வேர் ?
தனக்கும் முன் துப்பாக்கியை நீட்டுபவனிடம் நீதிபதி சட்ட புத்தகங்களைப் பார்த்து அதன் அடிப்படையில் தான் அவர் சூழலை எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்வது சரியான வாதமா ?
அரசசங்கம், அரசுகள், சட்டதிட்டம் இவைதான் சமூக அளவுகோள் என்று கூறினால் எந்த ஒரு ஞாயமான மக்கள் போராட்டங்கள் கூட ஞாயமற்றதே.
/அரசசங்கம், அரசுகள், சட்டதிட்டம் இவைதான் சமூக அளவுகோள் என்று கூறினால் எந்த ஒரு ஞாயமான மக்கள் போராட்டங்கள் கூட ஞாயமற்றதே./
சமூகத்தின் அளவுகோல்களாக இவை இருப்பதில்லை என்பது தான் உண்மை.
மேலோட்டமாகப் பார்த்தாலே, இவை அனைத்தும், சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதில், ஒரு தற்காலிகமான சமரசம், அல்லது சால்ஜாப்பு என்று மட்டுமே இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
மாற்றங்கள் வரவேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அதே நேரம்,மாற்றம் என்பது தானாக நிகழ்வதோ, அல்லது ஒரு போராட்டத்திலோ நடந்து முடிந்து விடுவதுமல்ல.
நதி கடலில் கலக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? நன்னீரும், உப்பு நீரும் உடனடியாகக் கலந்து விடுவதில்லை.அதுவும் ஒரு முரண் இயக்கமாகத் தான், அதன் போக்கில் நடக்கிறது. முரண் இயக்க விதிகளைத் தீர்மானிக்கும் வல்லமை நம்மிடம் இல்லை என்பது தான் இத்தனை வார்த்தைகளுக்குப் பிறகும் கூட, நான் முழுமையாகச் சொல்ல முடியாத நிதர்சனமாக இருக்கிறது.
உணர்ச்சிக் கொந்தளிப்பில், தோல்வி நிச்சயம். அவ்வளவுதான்.
கோவியாரே,இதே கருத்தை ஒட்டிய எனது பதிவு. http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_23.html
ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு காரணமாக அவர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதாக தனது கண்டிபிடிப்பில் ஒரு கட்டுரையை எழுதி வெளி இட்டிருக்கிறது தினமலர். இதே தினமலர் நேற்று இந்தி எதிர்பாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி அளிக்கிறார்கள் அவர்கள் தேசவிரோதிகள் போல் காட்டி (தேசத்தின் மொழியைப் புறக்கணிக்கிறவர்கள் தேசவிரோதிகள் தான் என்பது அவர்கள் சித்தாந்தம்) ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறது.
//
வெவ்வேறு கட்டுரையாளர்கள் எழுதியிருக்கக்கூடும்! :)
ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் இந்திய குடிஉரிமை வச்சுருந்தாங்க, மலேசியாவில் அப்படியா ? போராட்டாம் பன்னவுங்க எந்த நாட்டு குடிஉரிமை வச்சுருந்தாங்க ?
//
மலேசியாவிற்கு பணிக்கு சென்ற இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை வல்லுநர்களின் கடவுச்சீட்டுகள் கிழித்து எறியப்பட்டு பித்தன் வாக்கு சொன்னமாதிரி மொத்து மொத்துன்னு மலேசிய காவல் துறை மொத்தியதே அது இவருக்குத் தெரியுமா?
எத்தனை பேர் காயப்பட்டார்கள்!?
அந்த இந்திய குடிமகன்கள் செய்த தவறு என்ன என்று சொல்ல முடியுமா?
இல்ல அவங்க மலேசிய குடியுரிமை வச்சுகிட்டு போராடுனாங்களா?
அங்கு இந்திய கடவுச் சீட்டு உள்ளவர்களைத் தங்கத் தாம்பாளத்தில ஏந்துற மாதிரி பேசப்புடாது!
கோவி,
நிதர்சனத்தை சொல்லும் இந்த இடுகைக்கு ஒரு சல்யூட்!!!
கருத்துரையிடுக