பின்பற்றுபவர்கள்

16 நவம்பர், 2009

(அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் !

ஆன்மிகம் என்கிற பெயரில் உளறிக் கொட்டிவரும் ஞானாநந்தம் ( என்று சொல்லிக் கொள்ளும் வைரம் இராசகோபால்) எழுத்துகள் வழி பக்தியை வளர்த்துது லோகத்தை ஷேமமாக வைத்திருக்கிற உதவுகிறது தினமலர், இன்னிக்கு ஒரு கதையைப் படித்துவிட்டு புல்லரித்தது...நைசில் பவுடரைத் தேடினேன்.

எதற்கும் துணிந்தவர்கள்! (ஆன்மிகம்)


உலகில், நல்லவர்கள், தீயவர்கள் என்ற இரு வகையினரும் உள்ளனர். பிறருக்கு, நன்மை செய்வதிலேயே நாட்டமுள்ளவர்களாக இருப்பர் நல்லவர்கள்; இவர்கள், பிறருக்கு சிறு உதவியாவது செய்ய விரும்புவர். பிறருக்கு என்ன துன்பம் உண்டாக்கலாம் என்றே தீயவர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பர்; ஒருவர், மற்றொருவருக்கு ஏதாவது நன்மை செய்வதாகத் தெரிந்தாலும், அதை கெடுப்பதற்கே முயற்சி செய்வர். "இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார். இந்த நல்ல காரியம் நடக்கக் கூடாது...' என்று, அவனுடைய தீய புத்திக்குத் தோன்றினால், பணம் செலவழித்தாவது அதை தடுத்து விடுவர். இந்த குணம் இன்று மட்டுமல்ல; அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது!

பரீட்சித்து மகாராஜாவுக்கு, ஒரு முனிவரின் சாபம் ஏற்பட்டது. "இன்று முதல், ஏழாவது நாள் தட்சகன் என்ற நாகம் கடித்து மரணம்!' என்பது சாபம். இதையறிந்த ராஜா, ராஜ்ஜியத்தை விட்டு, கங்கை கரைக்கு வந்து புண்ணியம் சேர்க்க, பாகவத புராணம் கேட்டான்.

சாபத்தின்படி, ராஜாவை கொத்திக் கொல்ல காத்திருந்தது தட்சகன் என்ற நாகம். இந்த விபரமறிந்த காசியபர் என்ற முனிவர், ராஜாவைக் காப்பாற்ற வந்து கொண்டிருந்தார். இவருக்கு எந்தவிதமான விஷத்தையும் இறக்கிவிடக் கூடிய மந்திரம் தெரியும்.அதனால், ராஜாவை காப்பாற்றி விடவேண்டும் என்று வந்து கொண்டிருந்தார்.

இவரை பார்த்து விட்டான் தட்சகன். அவரைப் பின் தொடர்ந்து வந்து, "ஓய்... பிராமணரே! நீர் யார், எங்கே போகிறீர்?' என்று கேட்டான். காசியபரும், "ராஜாவை, தட்சகன் கடிக்கப் போகிறானாம். அப்படி நடந்தால், அந்த விஷத்தை என் மந்திர சக்தியால் முறித்து, ராஜாவை காப்பாற்றப் போகிறேன்...' என்றார்.
உடனே, "ஐயா! நான் தான் அந்த தட்சகன். உமக்கு தெரிந்த அந்த மந்திர சக்தி என் கடுமையான விஷத்தை முறியடிக்குமா?' என்றான் தட்சகன். "முடியும்!' என்றார் காசியபர்.

"அப்படியானால் இதோ இந்த மரத்தை நான் கடிக்கிறேன். என் விஷத்தால் அது பட்டுப் போகும். தங்கள் மந்திர சக்தியால் அதை மீண்டும் துளிர்க்கச் செய்ய முடியுமா?' என்றான்; "முடியும்!' என்றார் முனிவர்.
அந்த மரத்தை, தட்சகன் கடிக்க, மரம் உடன் சாய்ந்து கருகியது. தன் மந்திர சக்தியால் அந்த மரத்தை மீண்டும் துளிர்விட்டுப் பூத்துக் காய்த்து நிற்கச் செய்தார் காசியபர். ஆச்சரியப்பட்டான் தட்சகன். இருந்தாலும், துஷ்ட புத்தி போகவில்லை. "ஓய், பிராமணரே... நீர் ராஜாவின் விஷத்தை இறக்கினால் என்ன கிடைக்கும்?' என்று கேட்டான்.

"நிறைய பொன்னும், பொருளும் கிடைக்கும்!' என்றார் காசியபர். "சரி! அப்படியானால் அதைவிட பத்து மடங்கு அதிகமாக நான் பொன்னும், பொருளும் உம்மால் சுமக்க முடியாத அளவுக்கு தருகிறேன்...' என்றான் தட்சகன்.
அதன்படியே அவருக்கு பொன்னும், பொருளும் கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டு, சாபத்தின்படி பரீட்சித்து மன்னனை கடித்து விட்டான் தட்சகன். பரீட்சித்தும் வைகுண்டம் சேர்ந்தார் என்பது சரித்திரம்.

தங்கள் தீய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்வர் துஷ்டர்கள்; எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பர். பிறர் கெட்டுப் போவதில் இவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்! இன்றும் சிலர் அப்படியே இருக்கின் றனர். இது போன்ற துர் குணம் இல்லா மல், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற் குணத்துடன் நாம் இருக்க வேண்டும்.

********

எனது கேள்விகள், ஞானாநந்தம் சுட்டிய இந்தக் கதையின் படி உண்மையிலேயே துஷ்டன் யார் ?

1. தகாத செயல் எதையோ செய்துவிட்டு முனிவரிடம் சாபம் பெற்ற பரீட்சித்து மகாராஜாவா ?
2. அரசன் தானே போனால் போகட்டம் என்று குடிகளின் நலன் கருதாது சாபம் கொடுத்த முனிவரா ?
3. முனிவரின் சாபத்தை நிறைவேற்ற வந்த (வேலையாளான) தட்சகன் என்கிற நாகமா ?
4. தனக்கு தெரிந்த மந்திர சக்தி மூலம் பரீட்சித்து மகாராஜாவை காப்பாற்ற போகிறேன் என்று கிளம்பி நாகத்திடம் பொன்னுக்கு பொருளுக்கும் பேராசைப் பட்டு அதைப் பெற்றுக் கொண்டு ராஜாவைக் காப்பாற்றாமல் திரும்பி சென்ற காசியபர் என்னும் பார்பனனா ?

*******

இந்த கதையின் கட்டமைப்புகள் :

* எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் கங்கையில் கழுவினால் போய்விடும், இது கிட்டதட்ட ஆப்ரகாமிய மதங்கள் சொல்லும் 'மனம் வருந்தி மன்றாடினால், தொழுதால் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்பது போன்றது.
* எதிரிகளை விட்டுவிட்டு (ராஜா VS முனிவர்) அவர்களின் பகையை செயல்படுத்தவரும் அவர்களின் வேலைக்காரர்களே (தட்சகன் என்ற நாகம்) தீயவர்கள்
* பார்பனர்கள் எந்த சாபத்தையும் அல்லது எந்த தீமையும் மந்திரத்தால் நீர்த்து போகச் செய்யக் கூடியவர்கள் அல்லது மந்திரம் தெரிந்த பார்பனர்களால் எதையும் செய்ய முடியும்
* பார்பனர் அல்லது கதையில் சொல்லப்படும் பிராமணர்களின் தவறுகள் (பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டு பின் வாங்கியது) எப்போதுமே பேசக் கூடாத ஒன்று. எய்தவன் இருக்க, அதைத் தடுப்பவனும் இருக்க... அம்பு (மட்டுமே) தீயது என்றே பேசவேண்டும்.

********

நாம் வாழும் காலத்திலேயே ஆன்மிகம் என்ற பெயரில் குப்பைகளைக் கொட்டுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம், இன்னும் புராணங்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் குப்பை மலைகளையே அடையாளம் காண முடியும், பக்தி, கடவுள் நம்பிக்கை என்கிற பெயரில் உளரல்கள் கூட ஆன்மிகம் என்று விளம்பரப்படுத்தப்படுவது காலம் தோறும் நடந்தேறிவருகிறது, இதில் இன, சாதி அரசியலும் மிகுதியாகவே புகுத்தப்படுகிறது என்பதற்கு இந்த கதை ஒரு சிறிய காட்டுதான். :(

38 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

இந்தக் கதையை புத்தகத்தில் படித்தவுடன் பிடிக்கவில்லை, உங்களின் ஞாபகம் வந்தது,

சரியாப் போச்சு :))

அப்பாவி முரு சொன்னது…

//தொகுப்பு : ஆன்மீகம், போலி ஆன்மிகம்//

இந்த இடுகையிலேயே இதுதான் ரொம்ப பிடிச்சது.

ஆன்மீகத்தை தேடிவர்றவங்களுக்கும், போலி ஆன்மிகத்தை படிக்க வர்றவங்களுக்கும் ஒரே இடுகையில் தீனி போட்டிருப்பது, சிறப்பு.

:)

dondu(#11168674346665545885) சொன்னது…

வைரம் ராசகோபால் எழுதியது ஒரு பார்வை கோணத்தில். நீங்கள் பதிவு போட்டது இன்னொரு பார்வை கோணத்தில்.

மகாபாரதத்தை இன்னும் ஆழமாகப் பார்த்தால் இக்கதை ஆரம்பம் மட்டுமே. கலிக்காலம் வர இருப்பதை அறிந்த பரீட்சித்து மகாராஜா அவன் மேல் அஸ்திரங்கள் விட்டு அவனைத் தடுக்க, கலியும் தான் எங்காவது புகலிடம் பெற ஓர் இடத்தை கூறுமாறு அரசனை கேட்டார். கலிபுருடன் தங்கம் இருக்கும் இடத்தில் இருக்கலாம் என அரசர் கூற, அவரும் அரசனின் கிரீடத்தில் புகுந்து கொண்டதால்தான் மன்னன் மதி கலங்கி தவத்தில் இருக்கும் முனிவன் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்டு அப்பால் செல்கிறான். அதை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவரின் மகன் பரீட்சித்து பாம்பு கடித்து சாகுமாறு சாபம் இடுகிறான். தவம் கலைந்த பின்னால் முனிவர் நல்ல அரசனுக்கு ஏற்பட்ட சாபத்தை கண்டு வருந்த் அவனிடமே போய் விஷயத்தைக் கூறி அவனை தற்காத்து கொள்ளுமாறு கூற, அதற்குள் தான் செய்த அடாத செயலை குறித்து வருந்திய அரசனும் ஜாக்கிரதையாக இருக்கும் தருணத்தில்தான் நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்ட விஷயம் வருகிறது.

இதில் யாருமே குற்றவாளி அல்ல, விதியின் விளையாட்டுதான் அது என்று சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் சிஷ்யரும் தி.நகர் ராமகிருஷ்ணா உயர்நிலை பல்ளியில் வடமொழி ஆசிரியராக பணியாற்றிய ராமகிருஷ்ண சாஸ்திரிகள் தனது உபன்யாசத்தில் கூறியுள்ளார்.

பிறகு அரசன் தட்சகனால் தீண்டப்பட்டு உயிர் இழக்க, அவனது மகன் ஜனமேஜயன் வெகுண்டு பாம்புகளைக் கொல்ல சர்ப்ப யாகம் செய்ய என கதை போகிறது.

அவ்வாறு யாகம் நடக்கும் சமயத்தில்தான் சுகமுனிவரால் மகாபாரதக் கதை அரசனுக்கு கூறப்படுகிறது. ஜனமேஜயனின் தந்தை பரீட்சித்து அபிமன்யுவின் மகன், அபிமன்யுவோ அருச்சுனனின் மகன்.

மகாபாரதம் இதிகாசம். இதிகாசம் என்றால் இப்படி நடந்தது என்னும் பொருள் வரும்.

நைசில் பவுடர் எல்லாம் எதற்கு தேட வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

டோண்டு சார்,

நீண்ட தட்டச்சில் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி !

கதை எங்கிருந்து எடுத்தது என்பது பற்றிய பிரச்சனை இல்லை, ஆனால் அதில் அவருடைய சொந்தக் கருத்தை சொருகி, யார் கெட்டவர்கள், யார் நல்லவர்கள் என்கிற சுற்றல்களில் இருக்கும் கட்டுமானம் வாந்தி சொறிய வைக்கிறது.

நாகம் தீயது, நல்லவர்களையே அதாவது பொன்னும் பொருளும் கொடுத்து நல்லவன்யே கெடுத்துவிட்டது என்று இட்டுக்கட்டுகிறார். வாங்கினவனுக்கு புத்தி எங்கே போச்சு என்று கேட்கக் தோன்றுமா தோன்றாதா ? அனைத்து மந்திரங்களையும் அறிந்தவன் பொன்னையும் பொருளையும் வரவழைத்துக் கொள்ளத் தெரியாதா ? அனைத்து மந்திரங்களையும் தெரிந்தவன் ஒரு பேராசைக் காரனாகவும் இருக்கிறானே ? என்றெல்லாம் கதையில் சொல்லி இருந்தால் ஞானாநந்தம் எடுத்துச் சொன்னது சரி என்று சொல்லலாம்.

பித்தனின் வாக்கு சொன்னது…

// ஆன்மிகம் என்கிற பெயரில் உளறிக் கொட்டிவரும் ஞானாநந்தம் ( என்று சொல்லிக் கொள்ளும் வைரம் இராசகோபால்) எழுத்துகள் வழி பக்தியை வளர்த்துது லோகத்தை ஷேமமாக வைத்திருக்கிற //
இதை நாத்திகம், சமூக சிந்தனை என்ற பெயரில் அவித்துக் கொட்டும் எங்கள் அண்ணன் கோ.வி. யார் அவர்களே.
இந்தக் கதையில் காஸ்யபர் என்ற முனிவர் வருவது உண்மை, ஆனால் அவர் மன்னனை குடிமகன் காப்பது கடமை என்று தர்மம் பேச, தட்சகன், அதுபோல ஒரு முனிவனை, குடிமகனை அவமதித்த பரிசித்து மரணமும் அவனது தண்டனை. அதை நிறைவேற்றுவது என் கடமை. என்று தர்க்கம் செய்து திருப்பி அனுப்புகின்றார். கொஞ்சம் சிந்தியுங்கள் காஸ்யபர் ஒரு மகா முனிவர், காட்டில் பர்னசாலை அமைத்து தங்குவார். அவர் இந்த பென்னும் பொருளையும் வைத்து என்ன செய்வார்?. அந்தக் காலத்தில் முனிவர்கள் அரசரிடம் யாரும் பென்னும் பொருளும் வாங்க மாட்டார்கள். பாலுக்கு பசுமாடுகளும், உண்ண தானியங்களும் தான் யாசகம் செய்வார்கள். இந்தியர்களுக்கு அந்தக் காலத்தில் தங்கத்திற்கு அவ்வளவா செல்வாக்கு இல்லை. தங்கம் வெறும் அணிகலனாக மட்டும் பார்க்கப் பட்டது. பசுக்களை அவர்கள் மதித்த அளவு கூட தங்கத்தை மதித்தது இல்லை. பிற்காலத்தில்தான் தங்கம் சொத்தாக மதிக்கப் பட்டது. இது போல கதை எல்லாம் உங்க மாதிரி கும்மியடிக்கும் பதிவர்களுக்கு வசதியாக வந்த இடைச் சொருகல்கள்.
காஸ்யபர் இந்திரன் வணங்கும் முனிவர். அவர் நினைத்தால் இந்திர லோக சொத்தும், குபேரனிம் சங்க நிதியும் தருவிக்க முடியும். அப்படி இருக்க பாம்புகளின் அரசனான தட்சகனிடம் ஏன் யாசகம் பெறவேண்டும்.
நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//காஸ்யபர் இந்திரன் வணங்கும் முனிவர். அவர் நினைத்தால் இந்திர லோக சொத்தும், குபேரனிம் சங்க நிதியும் தருவிக்க முடியும். அப்படி இருக்க பாம்புகளின் அரசனான தட்சகனிடம் ஏன் யாசகம் பெறவேண்டும்.
நன்றி.//

பூணூல் தெறிக்க ஓடிவந்த பித்தனின் வாக்கு அவர்களே,

கதையை எடுத்து இட்டுக்கட்டிய வைரம் இராசகோபாலிடம் தான் இதைக் கூற வேண்டும்.

காஷ்ய முனிவர் மட்டும் அல்ல பார்பனர்கள் அனைவருமே வணங்கத்தக்கவர்கள், கண்ணன் பார்பனர்களின் காலைக் கழுவி வந்தான் என்றே இருக்கு வேதம் சொல்லுது. எதாவது கேணப்பயலுங்க அதையும் ஆமாம் போட்டுக் கேட்பானுங்க, நான் இல்லை

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

அமரர் வைரம் ராஜகோபாலின் இந்த கட்டுரை வருத்தமடைய செய்யும் கட்டுரையாக இருக்கிறது.

கடந்த இருவாரங்களாக அந்த பத்திரிகையில் வரும் ஆன்மீக பக்கம் அபத்தத்தின் உச்சம்.

எந்த ஒரு கர்மாவின் செயலுக்கும் அதற்குண்டான கர்மா செயல்பாடும் இருக்கும்.(every action..! Newtons 3 law).

பாகவத புராணம் சொல்லும் கருத்து மிகவும் எளிமையானது. அதற்காக விளக்கப்பட்ட சூழல் பரிசித்து மஹாராஜாவின் வாழ்க்கை.

சுக ப்ரம்மரிஷி மற்றும் ஏனையோர் ஜாதியின் அடிப்படையில் பிரிக்கபட்டவர்கள் கிடையாது.

முக்கியமாக ரிஷிகளுக்கு ஜாதி கிடையாது. காசிபர் ப்ராணமனர் என கூறப்பட்டது உலகமஹா நகைச்சுவை.
மேலும் எனக்கு தெரிந்த வரையில் காசிபர் மந்திரம் சொன்ன கதை புராணத்தில் இல்லை. நல்ல இடை செருகல்.

தன்னக்கு சார்ந்த ஜாதீய கருத்துக்களை கூறவேண்டும் என்பதை தவிர இக்கட்டுரையில் பாகவதமும் இல்லை, பக்தியும் இல்லை.

ஞான-அனர்த்தம்..!

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...

இந்தக் கதையை புத்தகத்தில் படித்தவுடன் பிடிக்கவில்லை, உங்களின் ஞாபகம் வந்தது,

சரியாப் போச்சு :))//

என்ன சரியாப் போச்சு ! யானைக்கு பானைக்கும் சரியா ?

பித்தனின் வாக்கு சொன்னது…

// அனைத்து மந்திரங்களையும் அறிந்தவன் பொன்னையும் பொருளையும் வரவழைத்துக் கொள்ளத் தெரியாதா ? அனைத்து மந்திரங்களையும் தெரிந்தவன் ஒரு பேராசைக் காரனாகவும் இருக்கிறானே ? என்றெல்லாம் //
பின்னூட்டத்தில் நீங்கள் தெளிவாக பதிவரின் உள் நேக்கை கண்டிக்கும் தாங்கள், பதிவில் இது போன்ற வரிகளை தெளிவாக கூறியிருந்தால் நன்று. இந்த வரிகள் பதிவில் வரவேண்டும். இல்லை என்றால் உங்களின் சிந்தனைகளை நாங்கள் அறியாமல் பின்னூட்டம் இடவேண்டியதாக இருக்கும், நான் கூறியதில் தவறு இருப்பின் மன்னிக்கவும். இது போல துக்கடா சாமச்சாரம் பரப்பும் அந்த பதிவரை நானும் கண்டிக்கின்றேன். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// அப்பாவி முரு said...

//தொகுப்பு : ஆன்மீகம், போலி ஆன்மிகம்//

இந்த இடுகையிலேயே இதுதான் ரொம்ப பிடிச்சது.

ஆன்மீகத்தை தேடிவர்றவங்களுக்கும், போலி ஆன்மிகத்தை படிக்க வர்றவங்களுக்கும் ஒரே இடுகையில் தீனி போட்டிருப்பது, சிறப்பு.

:)//

தலைப்பையும் மாற்றி இருக்கிறேன்

அப்பாவி முரு சொன்னது…

// கண்ணன் பார்பனர்களின் காலைக் கழுவி வந்தான் என்றே இருக்கு வேதம் சொல்லுது. எதாவது கேணப்பயலுங்க அதையும் ஆமாம் போட்டுக் கேட்பானுங்க, நான் இல்லை//

கண்ணன் வேணு்மானால் காலைக் கழுவலாம். கோவி. கண்ணனிடம் ஆகுமா?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

ஸ்வாமி ஓம்கார்,

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி,

அதைப் படித்தாவது பித்தனின் வாக்கு போன்றவர்களின் பித்தம் தெளியுமா என்று தெரியவில்லை.

:)

பித்தனின் வாக்கு சொன்னது…

// , கண்ணன் பார்பனர்களின் காலைக் கழுவி வந்தான் என்றே இருக்கு வேதம் சொல்லுது. எதாவது கேணப்பயலுங்க அதையும் ஆமாம் போட்டுக் கேட்பானுங்க, நான் இல்லை //
இந்த யாதவக் கண்ணுக்கு சத்திரிய தர்மர் பாதம் கழுவி உள்ளார். அது நேக்குத் தெரியுமோ? அந்தக் காலத்தில் அதிதி தேவோ பவ என்ற மந்திரம் இருந்தது. அதன் படி யார் வீட்டுக்கு விருந்தினாராக வந்தாலும் கால் அலம்பி விடுவது சம்பிரதாயம். பி இது சொம்பில் தண்ணீர் மொண்டு கொடுப்பதாக மாறி, இன்று வழக்கில் இல்லை. துரியோதனன், விதுரர், பீஷ்மர் என அனைவரும் கால் கழுவி இருக்கின்றார்கள்.
இராமரும் விபீஷ்னருக்கு கால் அலம்பி உள்ளார் என்பது நினைவில் வையுங்கள். இரானுக்கு குகனும், அயோத்தி வந்த குகனுக்கு இராமரும் கால் கழுவி உள்ளார்.

// பூணூல் தெறிக்க ஓடிவந்த பித்தனின் வாக்கு அவர்களே,//
எனது பின்னூட்டங்கள் அல்லது பதிவைப் படித்தால் உங்களுக்கு நான் ஜாதி எதிர்ப்பாளன் என்பது தெரியும், நான் ஜாதிகளை எதிர்க்கின்றேன். அதே சமயம் நமது புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் கடவுள்கள் என முன்னேர்கள் சொன்னவற்றை எதிர்ப்பவர்களை நான் எதிப்போன். சமூக மற்றும் ஜாதிய எதிர்ப்பில் நீங்கள் கட்டுரை எழுதும் போது நான் அதை ஆதரித்து இருக்கின்றேன் என்பதையும் பழைய பின்னூட்டங்கள் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
நான் கல்லூரி நாட்களிலும் சென்னை வாசத்திலும் பூனூல் போடுவது இல்லை. பின்னர் அதைக் கவனித்த என் தந்தையின் வேண்டுகோளுக்காக ஒரு கயிறாக தொங்குகின்றது. உங்களுக்கு வேண்டுமானால் கழற்றித் தருகின்றேன். நன்றி

Robin சொன்னது…

//இது கிட்டதட்ட ஆப்ரகாமிய மதங்கள் சொல்லும் 'மனம் வருந்தி மன்றாடினால், தொழுதால் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்பது போன்றது.// - பாவ மன்னிப்பு என்பது மனிதன் திருந்துவுவதற்காக கொடுக்கப்படும் வாய்ப்பே தவிர, திரும்ப திரும்ப தவறு செய்யும்படி ஊக்குவிப்பதற்காக அல்ல. சிலர் நினைப்பதுபோல எவ்வளவு தவறுகள் வேண்டுமானாலும் செய்துவிட்டு பிறகு பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளலாம் என்று கடவுளை ஏமாற்ற முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த யாதவக் கண்ணுக்கு சத்திரிய தர்மர் பாதம் கழுவி உள்ளார். அது நேக்குத் தெரியுமோ? அந்தக் காலத்தில் அதிதி தேவோ பவ என்ற மந்திரம் இருந்தது. அதன் படி யார் வீட்டுக்கு விருந்தினாராக வந்தாலும் கால் அலம்பி விடுவது சம்பிரதாயம். பி இது சொம்பில் தண்ணீர் மொண்டு கொடுப்பதாக மாறி, இன்று வழக்கில் இல்லை. துரியோதனன், விதுரர், பீஷ்மர் என அனைவரும் கால் கழுவி இருக்கின்றார்கள்.
இராமரும் விபீஷ்னருக்கு கால் அலம்பி உள்ளார் என்பது நினைவில் வையுங்கள். இரானுக்கு குகனும், அயோத்தி வந்த குகனுக்கு இராமரும் கால் கழுவி உள்ளார்.//

:) சூத்துக்கூட கழுவி விட்டதாகக் கூட எழுதி இருக்கலாம், குழுகூக்குறி, இடக்கரடக்கல், சபை நாகரீகம் கருதி எழுதி விடாமல் இருந்துட்டாங்கப் போல. நாம சூத்திரன் காலில் பிறந்தான், ப்ராமணன் மூக்கு சளியில் பிறந்தான் (முகத்தில் வழியாக வேறு எப்படி பிறப்பதுன்னு தெரியல) சொல்லிக்குவோம்.

அண்ணே அதிதி தேவோ பவ - ங்கிறது .....எப்படி அண்ணே சொல்வது....தமிழ் ஓவியாவிடம் அல்லது மற்றவர்களிடம் கேளுங்க.....இன்னொன்னும் சொல்லுவாங்க......ரொம்ப மோசமான விவகாரம்....நம்ம சித்தூர் முருகேசன் கூடச் சொல்லுவார். மனைவியை விருந்தினர்களுக்கும் தருவதாம்........ரொம்ப அசிங்கமானதுண்ணே. தருமம் கருமமெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கண்ணே. பழசை(புராணம்) கிண்டினால் ரொம்பவே நாறும்.

கோவி.கண்ணன் சொன்னது…

////இது கிட்டதட்ட ஆப்ரகாமிய மதங்கள் சொல்லும் 'மனம் வருந்தி மன்றாடினால், தொழுதால் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்பது போன்றது.// - பாவ மன்னிப்பு என்பது மனிதன் திருந்துவுவதற்காக கொடுக்கப்படும் வாய்ப்பே தவிர, திரும்ப திரும்ப தவறு செய்யும்படி ஊக்குவிப்பதற்காக அல்ல. சிலர் நினைப்பதுபோல எவ்வளவு தவறுகள் வேண்டுமானாலும் செய்துவிட்டு பிறகு பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளலாம் என்று கடவுளை ஏமாற்ற முடியாது.//

:) அதை வேற சொல்லிட்டிங்களே, இந்த லாஜிக் படி எல்லாப் பாவமும் செய்துவிட்டு கடைசி கடைசியாக பாவ மன்னிப்பு கேட்டுவிட்டால் பிறகு செய்ய மாட்டாங்க !

அதாவது ஒரு கொலை செய்து தூக்கு என்றாலும் 10 கொலை செய்துவிட்டு தூக்கு என்றாலும் இன்னும் 9 சேர்த்தே செய்துடுவோம் என்றும் நினைப்பாங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//எனது பின்னூட்டங்கள் அல்லது பதிவைப் படித்தால் உங்களுக்கு நான் ஜாதி எதிர்ப்பாளன் என்பது தெரியும், நான் ஜாதிகளை எதிர்க்கின்றேன். அதே சமயம் நமது புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் கடவுள்கள் என முன்னேர்கள் சொன்னவற்றை எதிர்ப்பவர்களை நான் எதிப்போன். சமூக மற்றும் ஜாதிய எதிர்ப்பில் நீங்கள் கட்டுரை எழுதும் போது நான் அதை ஆதரித்து இருக்கின்றேன் என்பதையும் பழைய பின்னூட்டங்கள் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
நான் கல்லூரி நாட்களிலும் சென்னை வாசத்திலும் பூனூல் போடுவது இல்லை. பின்னர் அதைக் கவனித்த என் தந்தையின் வேண்டுகோளுக்காக ஒரு கயிறாக தொங்குகின்றது. உங்களுக்கு வேண்டுமானால் கழற்றித் தருகின்றேன். நன்றி//

பித்தனின் வாக்கு ஐயா,
பூணூல் தெறிக்க என்று எழுதியது பூணுல் அணிவதைப் பற்றி அல்ல, பார்பனர் (வைரம் இராச கோபால்) எழுதியதற்கு பார்பனர் ஆதரவு என்னும் குறியீட்டில் எழுதியது. உங்கப் பூணுலை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். தங்கமாகப் போட்டு இருந்தாலும் வாங்கி எதும் ஏழைக்கு கொடுக்கலாம். அதுக்கு வாய்ப்பு இல்லை
:)

ஜோ/Joe சொன்னது…

இது ஒரு கதையா ? .பாட்டி வடை சுட்ட கதை கேட்கும் குழைந்தைகள் கூட இந்த கதையை சொன்னால் "சரி ..இப்போ நீ என்ன சொல்ல வர்ற?" -ன்னு கேட்கும் .

ஜோ/Joe சொன்னது…

கோவியார்,
பாவ மன்னிப்பு என்பது பாவத்தை எல்லாம் சொல்லி கிளியரன்ஸ் வாங்கிட்டு போறதில்ல .தவறு செய்தவர்கள் உண்மையாகவே உணர்ந்து இறைவன் சன்னிதானத்தில் மன்னிப்பு கேட்க விரும்பினால் ,சம்பிரதாயமாக அதற்கு ஏற்பாடு செய்யும் முறை.

நேரடியாக கடவுளிடம் சொல்ல வேண்டியது தானே என்று கேட்கலாம் ..தாராளமாக (என்னைப் போன்றவர்கள் அப்படித் தான் செய்கிறார்கள்) ..சிலருக்கு வாய் விட்டு இன்னொருவரிடம் சொன்னால் அதிகமான திருப்தியும் மன நிறைவும் ஏற்படும் .அவர்கள் ஆலயத்தில் பாதிரியாரிடம் சொல்லி அவர் ஆலோசனையை பெறலாம் ..அதுவே பாவமன்னிப்பு ..ஏதோ இவர்கள் சொன்னவுடன் ஏதோ கிரெடிட் கார்ட் -க்கு waiver கொடுக்குற மாதிரி பாதிரியார் பாவங்களை போக்கி விடுவார் என்ற ரீதியில் நீங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்குறது நெம்ப தான் தமாசு போங்க :)

dondu(#11168674346665545885) சொன்னது…

//கதை எங்கிருந்து எடுத்தது என்பது பற்றிய பிரச்சனை இல்லை, ஆனால் அதில் அவருடைய சொந்தக் கருத்தை சொருகி, யார் கெட்டவர்கள், யார் நல்லவர்கள் என்கிற சுற்றல்களில் இருக்கும் கட்டுமானம் வாந்தி சொறிய வைக்கிறது.//
அது அவரது இண்டெர்ப்ரெடேஷன். அதை எல்லோருமே செய்வார்கள். அதை வைத்து நீங்கள் பதிவு போட்டது உங்களது புரிதல், உங்களது பதிவை வைத்து வந்த இடுகை எனது இண்டெர்ப்ரெடேஷன், அவ்வளவே.

மற்றப்படி நான் கேட்ட மகாபாரத வெர்ஷனில் பாம்புவிஷத்தை முறிக்க வந்தது ஒரு பெரிய மந்திரவாதி, அவரது சாதி குறிப்பிடப்படவில்லை. மேலும் அவருக்கு விதியின் போக்கைக் கூறி அவரை கன்வின்ஸ் செய்தது மட்டுமே தட்சகன் செய்தது.

கூல், கூல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல சிந்தனைகளை தெரியப்படுத்துகிறவர் தன் கருத்துக்களை இடைசொருகாமல் சொன்னால் எல்லோரையும் சென்றடையும் .

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

முதலில், இதை எழுதி வரும் வைரம் ராஜகோபால் காலமாகி இரண்டு அல்லது மூன்று வருடமாகிறது என்று படித்த நினைவு. பழையதே மீள்பிரசுரமாகி வருகிறது போல இருக்கிறது.

இறந்துபோனவருடன் வம்புவழக்கு எதற்கு?

பிரசுரிக்கும் தினமலர், இதை ஒரு பார்ப்பன ஆதரவுப்பத்திரிகை, அல்லது பார்ப்பனப் பத்திரிக்கை என்று சொல்வதே கொஞ்சம் விநோதமாக இருக்கிறது. அவர்கள் செய்வது வியாபாரம்! அங்கே பார்ப்பனன், அல்லது பார்ப்பனரல்லாதவன் என்ற கேள்வியே இல்லை. முழுக்க முழுக்க லாபம் ஒன்று மட்டும் தான் குறி என்பதை இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டியதே இல்லை.

கடைசியாக, சொல்லப்பட்டிருக்கும் கதை! இதிகாசம் என்பது, டோண்டு ராகவன் சார் முதலில் சொன்னது போல இப்படி நடந்தது என்பது மட்டும் அல்ல, இப்படியும் நடக்கும் என்பதைச் சொல்வதற்காகவும் தான்!

தடம் பிறழ்வது என்பது எல்லோருக்குமே ஏற்படுவது தான். இந்தக் கதையில் கூட, தட்சகன் என்ற அந்தப் பாம்பு, விதியின் பாதையை எடுத்துச் சொல்வதாக, விதியின் போக்கில் குறுக்கிடுவதற்கான அதிகாரி தான் அல்ல என்று உணர்ந்து விலகிப்போனதாக மட்டும் பார்த்தால், கதையில் பார்ப்பனனும் இல்லை, பார்ப்பனீயமும் இல்லை.

விதியின் போக்கில் தலையிடுவது எவ்வளவு பெரிய அனர்த்தமாகிப்போய் விடும் என்பதை என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றிலேயே தெரிந்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் பார்க்கும் பொது இந்தக் கதை சொல்ல வருகிற உண்மையான அர்த்தம் தான் முன்னிற்கிறதே தவிர இரண்டு இடுகைகளாகத் தொடர்ந்து நீங்கள் கொதித்துப் போயிருப்பது போல அல்ல.

அவர் எழுதுவது பிடிக்கவில்லையா? படிக்காதீர்கள்! புறக்கணித்து விடுங்கள்! அவ்வளவுதானே! இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக்கலாமா?

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\என்ன சரியாப் போச்சு ! யானைக்கு பானைக்கும் சரியா ?\\

நினைச்சது நடந்திருச்சு அப்படினு சொன்னேன்.

யானைக்கும் பானைக்கும் சரியா இப்படி கேட்டா எனக்குத்தான் ஒன்னுமே புரியல:))

\\வாந்தி சொறிய\\
\\சூத்துக்கூட கழுவி \\

உணர்ச்சி வசப்பட்டா இது போன்ற வார்த்தைகள் அடிக்கடி வருமோ,

மனதிலிருந்து எடுத்திட்டீங்கன்னா நல்லா இருக்கும்,

நல்ல உணவு அருந்தும்போது இடையில் கல் கடைவாயில் மாட்டுவது போல் நான் உணர்கிறேன்.

உங்களிடம் இந்த வார்த்தைகளை எதிர்பார்த்து தினமும் சுமார் 500 படிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் கோவியாரே :))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் எழுதுவது பிடிக்கவில்லையா? படிக்காதீர்கள்! புறக்கணித்து விடுங்கள்! அவ்வளவுதானே! இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக்கலாமா?//

கிருஷ்ணமூர்த்தி ஐயா,

அவர் அமரரா இல்லையா என்று தெரியாது, பெரியார் கூட அமரர் தான், இருந்தாலும் பெரியார் துவேசம் ஒழிந்தாபாடில்லை. பெரியார் போற்றாத சாதியை அவருக்கு ஒட்டவைக்கப் பார்க்கும் கூட்டம் இங்குண்டு.

பிடிப்பது பிடிக்காதது பிரச்சனையே இல்லை. கோவிலுக்கு போகாத நாத்திகக் கூட்டம் தான் கோவிலுக்கு அனைவரும் சென்று வரும் உரிமை பெற்று தந்தது. கஞ்சா விதைகள் முளைக்கப் போடும் போது, கஞ்சாவால் பாதிப்பு அடைந்தவர் தான் அதற்கு எதிராக போராடி பிடிங்கி எரிய வேண்டும் என்பதில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் எதிர்ப்பு காட்டவேண்டுமென்றால் உலகில் தீமையை ஒழிக்க முடியாது.

பகவான் பாதிக்காவிட்டாலும் பக்தர்களுக்காக அவதாரம் எடுக்கிறாரா இல்லையா ?

வள்ளலாரும், இராமானுசரும், புத்தரும் சமூகத்தால் பாதிக்கப்பட்டு அப்படி ஆனவர்கள் இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மற்றப்படி நான் கேட்ட மகாபாரத வெர்ஷனில் பாம்புவிஷத்தை முறிக்க வந்தது ஒரு பெரிய மந்திரவாதி, அவரது சாதி குறிப்பிடப்படவில்லை. மேலும் அவருக்கு விதியின் போக்கைக் கூறி அவரை கன்வின்ஸ் செய்தது மட்டுமே தட்சகன் செய்தது.

கூல், கூல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார், வைரம் இராசகோபல் காசிய முனிவர் பிராமணர் என்று கதையில் சாதிக் குறிப்பிட்டது கதையின் இடைச் சொருகல், அது அவரின் பார்பனக் கொழுப்பு என்று ஒப்புக் கொள்கிறீர்களா ?
:)

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\கோவிலுக்கு போகாத நாத்திகக் கூட்டம் தான் கோவிலுக்கு அனைவரும் சென்று வரும் உரிமை பெற்று தந்தது\\

எதுக்கு கோவிலுக்குள் போகனும், அங்க என்ன இருக்குது ..அவ்வ்வ்...

\\பகவான் பாதிக்காவிட்டாலும் பக்தர்களுக்காக அவதாரம் எடுக்கிறாரா இல்லையா ?\\

அப்ப இருக்கார் அப்படிங்கறீங்களா...
அவ்வ்வ்வ்வ்வ்....

நான் அப்புறமா வர்றேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

//உணர்ச்சி வசப்பட்டா இது போன்ற வார்த்தைகள் அடிக்கடி வருமோ,

மனதிலிருந்து எடுத்திட்டீங்கன்னா நல்லா இருக்கும்,
//

சிவா,

அக்குள் சேவிங்க் பற்றி பதிவில் எழுதும் உங்களுக்கு இங்கே எழுதப்பட்ட சூத்து கழுவுதல் என்று சொல் அருவெறுப்பா இருக்குதா ?

அவ்வ்வ்வ்
இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது.

வெள்ளைக்காரான் Butt என்று சொல்லி தருவதைத்தான் நாம பயன்படுத்தனுமா ?

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//maruthu has left a new comment on your post "(அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் !": //

எனக்கு கொடுக்கல, ஆனால் எனக்கு கழுவ வரும் உங்களுக்கு அந்தப் பட்டத்தை கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

Unknown சொன்னது…

<<<
ஆப்ரகாமிய மதங்கள் சொல்லும் 'மனம் வருந்தி மன்றாடினால், தொழுதால் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்பது போன்றது.
>>>

ஆஆஆஆஆ.... என்ன கோவிஜி?, நீங்களுமா? மதங்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் இஸ்லாத்தில் உள்ளதை சொல்கிறேன். நீங்க தப்பா புரிந்து கொள்ள கூடாதுதான் எனது ஆசை, எனக்கு ரெம்ப தெரியாது...

இஸ்லாத்தின் படி, கடவுள் மன்னிக்க கூடியவை என்று இருக்கிறது, அதாவது கடவுளுக்கு மனிதன் செய்ய மறந்த கடமை, உம்.. தொழுகை, நோன்பு... இவைகள் நாம் கடவுளை வணங்குவதற்காக செய்கிறோம்... இவைதான் தொழுது மன்றாடினால் இறைவன் மன்னிப்பான் என்கிறது இஸ்லாம்.

மத்தபடி, பாம் போட்டு பலபேரை கொன்றுவிட்டு??? சான்சே இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//..:: Mãstän ::.. said...
<<<
ஆப்ரகாமிய மதங்கள் சொல்லும் 'மனம் வருந்தி மன்றாடினால், தொழுதால் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்பது போன்றது.
>>>

ஆஆஆஆஆ.... என்ன கோவிஜி?, நீங்களுமா? மதங்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் இஸ்லாத்தில் உள்ளதை சொல்கிறேன். நீங்க தப்பா புரிந்து கொள்ள கூடாதுதான் எனது ஆசை, எனக்கு ரெம்ப தெரியாது...

இஸ்லாத்தின் படி, கடவுள் மன்னிக்க கூடியவை என்று இருக்கிறது, அதாவது கடவுளுக்கு மனிதன் செய்ய மறந்த கடமை, உம்.. தொழுகை, நோன்பு... இவைகள் நாம் கடவுளை வணங்குவதற்காக செய்கிறோம்... இவைதான் தொழுது மன்றாடினால் இறைவன் மன்னிப்பான் என்கிறது இஸ்லாம்.

மத்தபடி, பாம் போட்டு பலபேரை கொன்றுவிட்டு??? சான்சே இல்லை :)
//

மஸ்தான்,

அது பொதுப் புரிதல்....இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறது என்பதற்காக 4 பெண்களை திருமணம் செய்ய இந்த காலத்தில் ஆண்களுக்கான தேவை என்ன இருக்கிறது ? ஆனாலும் நடக்கிறது அல்லவா ? அப்படி தவறாக விளங்கிக் கொள்பவர்கள் மதங்களில் மிகுதியாக இருக்கிறார்கள் என்பதற்காக பாவ மன்னிப்பு குறித்து கூறினேன்.

Unknown சொன்னது…

<<<
ஸ்வாமி ஓம்கார் said...

எந்த ஒரு கர்மாவின் செயலுக்கும் அதற்குண்டான கர்மா செயல்பாடும் இருக்கும்.(every action..! Newtons 3 law).
>>>

சூப்பர் ஸ்வாமி ஓம்கார் :)

dondu(#11168674346665545885) சொன்னது…

//வைரம் இராசகோபல் காசிய முனிவர் பிராமணர் என்று கதையில் சாதிக் குறிப்பிட்டது கதையின் இடைச் சொருகல், அது அவரின் பார்பனக் கொழுப்பு என்று ஒப்புக் கொள்கிறீர்களா ?
:)//
அது பார்ப்பனக் கொழுப்பு என்பது உங்கள் புரிதல். இங்கு மட்டுமின்றி பல இடங்களில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு பார்ப்பன வெறுப்பு என்பது எனது புரிதல்.:)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown சொன்னது…

//அது பார்ப்பனக் கொழுப்பு என்பது உங்கள் புரிதல். இங்கு மட்டுமின்றி பல இடங்களில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு பார்ப்பன வெறுப்பு என்பது எனது புரிதல்.:)))))))//

இல்லை டோண்டு.அது கோவியாரின் ஜாதி வெறி என்பது என் துணிபு.

Jawahar சொன்னது…

white collar crimes என்பது குறித்து ஜனங்களிடையே தெளிவில்லை.

இந்தக் கதையில் காஷ்யப முனிவர் செய்ய முயன்றது ஒரு white collar crime.

பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தப்புக்குத் துணை போனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் கோவி கண்ணன் வரை எல்லாரும் தூற்றுவார்கள் என்பது கதையின் ஆக்சில்லறி நீதி. :)

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

டோண்டு சார்,

பார்பன சித்தாந்தம் பிராமணப் பெருமைப் பேசுவதை பார்பன வெறி இன்றி வேறு என்ன சொல்வது, திராவிடன், ஆரியனே இல்லை என்றால் ஆரிய பவன்கள் எங்கிருந்து வந்தது ? தன்னை பிராமணன் என்று கூறிக் கொள்ளும் போது சூத்திரன் இருக்கிறான் என்று சொல்லாமல் சொல்வதை பார்பன வெறி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது ?

பார்பனர்கள் பிராமணன் என்பதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு பிறரிடம் இருந்து பலமாக எதுவும் கிடைக்கவில்லை என்றால் பிராமணப் பட்டம் போட்டுக் கொள்ளலாமே.

எனக்கு பார்பன நண்பர்கள் வலையுலகிலும் நிறையயே உண்டு, தனிமனிதர்களை நான் விமர்சனம் செய்வது இல்லை, ஆனால் பார்பனக் கருத்துகளை புனிதம் பேசி கூறினால் விமர்சனம் செய்வதையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். காசியப முனிவர் பிராமணர் என்று கதையில் இல்லாத ஒன்றை இட்டுக் கட்டுக் கூறிய வைரம் இராசகோபாலை ஞான நந்தம் என்று நீங்கள் கொண்டாடுங்கள். நான் அவரின் செயலை பார்பன கொழுப்பு என்றே விமர்சனம் செய்வேன். பார்பனரை பிராமணர் என்று கூறுவது உரிமை என்றால் நான் விமர்சனம் செய்வது எனது உரிமை அதை நீங்கள் பார்பன வெறுப்பாக எடுத்துக் கொண்டாலும் எனக்கு நட்டமில்லை.

வெறும் 8 ஆம் நம்பர் நூல் ஒரு பார்பனரை பிராமணர் ஆக்கிவிடுமா ? என்று சோ இராம சாமியிடம் கேட்டுச் சொல்லுங்கள் அவர் தான் பூணூல் வலை போட்டு பார்பனர்களை நோக்கி எங்கே பிராமணன் என்று தேடுகிறார். கண்டு பிடித்து என்ன செய்யப் போகிறார் என்றும் கேட்டு எழுதுங்கள்

Unknown சொன்னது…

//பூணூல் வலை போட்டு பார்பனர்களை நோக்கி எங்கே பிராமணன் என்று தேடுகிறார். கண்டு பிடித்து என்ன செய்யப் போகிறார் என்றும் கேட்டு எழுதுங்கள்//

நான் கண்டுபிடித்து விட்டேன்.கோவியார் தான் உண்மையான பிராம்மணன்.

//கண்டு பிடித்து என்ன செய்வது//

வேறு என்ன செய்வது ;அவருக்கு அடுத்த "அண்ணா பெரியார் விருது" அல்லது "பெரியார் அண்ணா விருது" வேண்டுமானால் அளிக்கலாம்.

Jawahar சொன்னது…

முனிவர்களுக்கு ஜாதி கிடையாது என்று சுவாமி ஓம்கார் சொல்வது என்னமோ நிஜம்தான். ஆனால் நடைமுறையில், சபாநாயகர் கட்சி சார்பற்றவர் என்பது எத்தனை தூரம் கடைபிடிக்கப் படுகிறதோ அத்தனை தூரம்தான் இந்த விதி முறையும் கடைபிடிக்கப் படுகிறது. ஆகவே காஷ்யபருக்கு பூர்வாஸ்ரமத்தில் தானொரு பிராமணர்தான் என்கிற உணர்வு இருந்திருக்க சாத்தியங்கள் இருக்கின்றன.

http://kgjawarlal.wordpress.com

dondu(#11168674346665545885) சொன்னது…

//பார்பனரை பிராமணர் என்று கூறுவது உரிமை என்றால் நான் விமர்சனம் செய்வது எனது உரிமை அதை நீங்கள் பார்பன வெறுப்பாக எடுத்துக் கொண்டாலும் எனக்கு நட்டமில்லை.//

இது, இது, இதைத்தான் நானும் சொல்கிறேன். அவரவர் பார்வை அவரவருக்கு. கூல், கூல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்