பின்பற்றுபவர்கள்

19 நவம்பர், 2009

கலவை 19/நவ/2009 !

மாவீரர் நாள் நெருங்குவதை ஒட்டி தமிழகத்தில் குறிப்பாக கருணாநிதியிடம் இருந்து சோக கீதம் எழுகிறது. அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம் என்று அப்துல்கலாம் போன்று கடந்து போனதற்கு அறிவுரை வழங்கிக் கொண்டு இருக்கிறார். சண்டை முடிந்ததாக அறிவித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, தமிழர்கள் இன்னும் குடியமர்த்தப்படவில்லை, இலங்கை அதிபருடன் விருந்து சாப்பிட்டு வந்த திருமாவளவன் உள்ளிட்டவர்கள் ஏப்பம் விட்டதுடன், இலங்கை அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்காமல் இருந்துவருவதைப் பார்க்கும் போது, இவர்கள் இலங்கை அரசின் நிலைப்பாடு அந்த நாட்டின் உள்விவாகாரம் என்ற அதே நிலையில் தொடர்கிறார்கள் என்றே நினைக்க வைக்கிறது. இருந்தும் இழவு வீட்டு ஒப்பாறியை காலம் கடந்து வைப்பதால் யாருக்கு பயன் என்று தெரியவில்லை. மாவீரர் நாள் நெருங்குவதை வைத்து அது குறித்து தகவல்களை கேட்க ஆவலுடன் இருக்கும் மக்கள் குழுக்களின் கவனம் ஈர்க்கும் முதல் துண்டு விரிப்பு என்பதைத் தவிர்த்து இந்திய, தமிழக தலைவர்களின் முகாரி எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்க முடிகிறது. ஈழவரலாறு, ஈரவரலாறு, உறைந்த இரத்தம், இரத்தமும் சகதியும் என்கிற புதிய புதிய தலைப்புகளில் நூல் எழுதி அதை வெளியிட்டு அவ்வப்போது மூக்கு சிந்திக் கொள்வதை பார்ப்பதற்கும் நமக்கும் சகிப்பு தன்மை மிகுதியாகவே இருக்கிறது.

*****

சச்சினும் தேசபக்தியும் பட்டிமன்ற தலைப்புகள் போல் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது, வினவு குழுவினர் சச்சின் பிராண்டிங்க் (Branding) பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் தேசப்பக்திக்கும் பின்னால் இருக்கும் கதைகள் அட போட வைக்கிறது. ஈவேரா சுதந்திர நாளை கருப்பு தினமாக அறிவித்தார், எனவே அவர் தேச தூரோகி என்பது போல் இணையம் இலவசமாக மறைவாகவும் இருக்கிறது என்கிற வசதியில் சிலர் பெரியாரைத் தூற்றி வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்பது போல் அவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறே இல்லை. பெரியார் வாழும் காலத்திலே விமர்சனங்களை விரும்பியவர் தான். அண்மையில் டி.ஞானையா எழுதிய 'இஸ்லாமும் இந்தியாவும்' என்ற நூலை வாசித்த போது ராஜாஜி, மூதறிஞர் என்றெல்லாம் புகழப்படுகின்ற இராஜகோபால் ஆச்சாரியார் பற்றி எழுதி இருந்தார், காந்தியும், நேருவும் வெள்ளைக்காரர்களை வெளியேற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்து ஆச்சாரியாரிடம் ஆதரவு கேட்ட போது அதற்கு ஆதரவு தர மறுத்தவர் ராஜாஜி என்று குறிப்பிட்டு இருந்தார். ஏடி ஞானையா தரவுகளுடன் தான் அதனை எழுதி இருந்தார்

*****

சீன தயாரிப்புகள் பற்றி பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்துவரும் வேலையில் 2012 படத்தில் உலக அழிவையே தாங்கும் சக்தி படைத்ததாகவும், அது சீன எல்லையில், சீனத் தயாரிப்பாகவும் மிகப் பெரிய கப்பலைக் இறுதிக்காட்சியில் காட்டுகிறார்கள். சீன அரசு படத்திற்கு பொருளுதவி செய்திருக்கும் என்று மலேசியா குடியுரிமை உள்ள சீன நண்பர் தெரிவித்தார். எங்கும் சீனா எதிலும் சீனா, மலையாளி டீக்கடை போல் உலகமெங்கும் சீன தயாரிப்புகள். மீண்டும் கம்யூனிசம் சீனாவின் மூலம் வலுப்பெறுமோ ? :)

*****

அமெரிக்காவில் பிடிபட்ட லஷ்கர் இ தொய்பா ராணா நடிகைகளுடன் தொடர்பு என்று செய்தி தாள்களில் மிகுதியாக பரப்பரப்பு பரப்பப்படுகிறது. நடிகைகளுடன் தொடர்பை மட்டும் ஏன் செய்தியாக்கவேண்டும், அவனுக்கு அரசியல்வாதிகளிடமும், முறைகேடாக விசா பெற்றது என அரசு அலுவர்களிடமும் கூட நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் செய்திவருகிறதே. நடிகைகளிடம் தொடர்பை ஏன் மற்றவற்றைவிட விளம்பரப்படுத்த வேண்டும் ? முன்பு கூட தாவூத் இப்ராமுடன் நடிகைகள் தொடர்பு என்று பரபரப்பு கிளப்பினார்கள். வசதி மற்றும் அழகாக இருக்கிறார்கள் என்பதால் பெண்களுக்கு எதிராக பரபரப்பு கிளப்புவதால் அவர்களிடம் பணம் பறிக்க முடியும், முடிந்த அளவுக்கு அவர்களை மிரட்டி மிரட்டி பாலியல் இச்சைகளள தீர்த்துக் கொள்ளமுடியும். இதைச் செய்பவன் பத்திரிக்கைகாரனாகவும் இருக்கிறான், அரசு அதிகாரத்திலும் இருக்கிறான். ராணாக்கள் ஒருமுறை தான் நடிகைகளைப் பயன்படுத்தி இருப்பார்கள். மற்றவர்கள் ?

*****

இன்று உலக கழிவறைநாள் (டாய்லெட் தினம் என்று தினமலரில் குறிப்பிட்டு இருந்தார்கள், வடமொழியில் சவுச்சாலய திதி ? :). 'இருக்க' இடமும், உடுக்க உடையும் மனிதருக்கும் மிகத் தேவை. இந்தியாவின் வசதிக்குறைவில் நான் முதன்மையாக கருதுவது பொதுக்கழிவறைகள். இருப்பவைகள் அனைத்துமே தூய்மை இன்மை, மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் இல்லா பற்றாக்குறை. பெரிய நகரங்களில் இருக்கும் கழிவறைகளில் கெட்டநாற்றத்தையும் பொருட்படுத்தாத பாலியல் தொழில். கழிவறை பற்றி முன்பு எழுதிய இடுகைகள்
இரட்டை விரல் ...
கலைகளின் உறைவிடம் ...

16 கருத்துகள்:

ரோஸ்விக் சொன்னது…

கலவை அருமை. முதல் பத்தியில் உங்களின் கோபம் மிக கண்ணியமாக வழாக்கம் போல. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

பதிவர் சந்திப்பு நடந்தால் கூறவும். கலந்துகொள்ள விரும்புகிறேன். :-)

அக்பர் சொன்னது…

கோபங்கள் நியாயமானவை. ஆனால் தீர்வதற்கு வாய்ப்பில்லை.

இப்படி ஆதங்கத்தை வெளிப்படுத்தவாவது முடிவது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி.

T.V.Radhakrishnan சொன்னது…

கலவை அருமை

கோவி.கண்ணன் சொன்னது…

//ரோஸ்விக் said...
கலவை அருமை. முதல் பத்தியில் உங்களின் கோபம் மிக கண்ணியமாக வழாக்கம் போல. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

பதிவர் சந்திப்பு நடந்தால் கூறவும். கலந்துகொள்ள விரும்புகிறேன். :-)
//

ரோஸ்விக்,
கண்டிப்பாக சந்திப்போம்.
மின் அஞ்சல் போடுங்கள் govikannan at gmail dot com

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கருணாநிதி-சோனா, சந்தி சிரிச்சுருக்கிறாங்க.

பிரச்சனை தீர வாய்ப்பு இருக்கு.

எதுக்கும் பொருத்திருந்து பாருங்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஷகிலா மீண்டு(ம்) சந்தி சிரிக்க வாய்ப்புள்ளதா?


பாவம் அந்த தினமலர் லெனின்!

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

கடந்த சில நாட்களா தினமலர் பற்றிய பதிவு அதிகமா இருக்கு :)

ஒன்னு அதை படிக்காதீங்க... இல்லை வேற பத்திரிகை படியுங்க :)

கலவையில் உங்களுக்கான கலக்கல் குறைவு.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\கடந்த சில நாட்களா தினமலர் பற்றிய பதிவு அதிகமா இருக்கு :)

ஒன்னு அதை படிக்காதீங்க... இல்லை வேற பத்திரிகை படியுங்க :)\\

இத படிச்சா இவரு பிராமணரு இல்ல போல இருக்கே:((

வேற எப்படி தாளிக்கறது.. ம்ம்ம்!!!

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அண்ணே எப்பவும் உங்களுக்கு கோபம் தானா ...

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
கோபங்கள் நியாயமானவை. ஆனால் தீர்வதற்கு வாய்ப்பில்லை.

இப்படி ஆதங்கத்தை வெளிப்படுத்தவாவது முடிவது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி.
//

நன்றி அக்பர் !

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
கலவை அருமை
//
நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கருணாநிதி-சோனா, சந்தி சிரிச்சுருக்கிறாங்க.

பிரச்சனை தீர வாய்ப்பு இருக்கு.

எதுக்கும் பொருத்திருந்து பாருங்கள்!
//

ஸ்பெக்ட்.....ரம் போதை தெளியுது போல !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஷகிலா மீண்டு(ம்) சந்தி சிரிக்க வாய்ப்புள்ளதா?


பாவம் அந்த தினமலர் லெனின்!
//
அவருதான் சிரிச்சிக்கிட்டே சிறை சென்றாரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
கடந்த சில நாட்களா தினமலர் பற்றிய பதிவு அதிகமா இருக்கு :)

ஒன்னு அதை படிக்காதீங்க... இல்லை வேற பத்திரிகை படியுங்க :)

கலவையில் உங்களுக்கான கலக்கல் குறைவு.
//

இந்த இடுகையில் தினமலர் செய்தியை விமர்சனம் செய்யல.

கோவி.கண்ணன் சொன்னது…

// நிகழ்காலத்தில்... said...
\\கடந்த சில நாட்களா தினமலர் பற்றிய பதிவு அதிகமா இருக்கு :)

ஒன்னு அதை படிக்காதீங்க... இல்லை வேற பத்திரிகை படியுங்க :)\\

இத படிச்சா இவரு பிராமணரு இல்ல போல இருக்கே:((

வேற எப்படி தாளிக்கறது.. ம்ம்ம்!!!//

யாரும் இங்கே இராமன் இல்லேங்கிற மாதிரி யாரும் இங்கே பிராமணரு கிடையாது. பார்பனர்கள் தான் அவங்க அப்படின்னு சொல்லிக்கிறாங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அண்ணே எப்பவும் உங்களுக்கு கோபம் தானா ...
//
பெருசாக பொருமையாக துவைக்கிற கல்லா எதையும் தாங்கிக் கொள்வதைவிட சின்னதாக இருந்தாலும் தீப்பிடிக்கிற சிக்கிமுக்கி கல்லா இருக்கனும் !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்