கண்ணகி(இளங்கோ), பாரதி ஒப்பீடு முன்பே எழுதி இருக்கிறேன். அதாவது 'கண்ணகி தன் கணவன் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்டான் என்று வீறு கொண்டு மதுரையை எரித்தாள்' என்று சிலப்பதிகார கதைகள் சொல்லுகின்றன. அதைப் படிக்கும் இன்றைய புரட்சியாளர்கள், 'என்னதான் இருந்தாலும் கோவலன் ஒருவனுக்காக மதுரையை எரித்தாள் என்றால் அப்பாவி பொதுமக்களும் சேர்ந்தே அழிக்கப்பட்டு இருப்பார்கள் இல்லையா, கண்ணகிக்கு மனிதாபிமானம் இல்லை, அவள் மதுரையை எரித்ததும் ஞாயம் இல்லை' என்று தங்களுக்கு தெரிந்த விளக்கம் (வியாக்யாணம்) சொல்லுவார்கள்.
அதே ஆட்கள் 'தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சொன்ன பாரதியையும் அந்த வரியையும் சிலாகித்துக் கூறுகிறார்கள். ஒருவருக்கு உணவு இல்லை என்பதற்காக உலகில் உள்ள ஏனையோரையும் சேர்த்து உலகையும் அழிக்க அழைப்பு விடுப்பது தான் புரட்சியா ? கதை புனைவாக இருந்தாலும் மெய்யாக இருந்தாலும் கண்ணகியின் அறச்சீற்றம் தொடர்புடைய ஊர் என்பதால் மதுரை என்ற அளவில் நின்றுவிட்டது. ஆனால் பாரதி சொல்லும் 'ஜெகம்' அந்த தனிமனிதனுக்கு தொடர்புடைய நாட்டில் எதோ ஒரு புண்ணாக்கு, ஊழல் காரணத்திற்காக உணவு கொடுக்கவில்லை, அல்லது அவனுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இதில் தொடர்பே இல்லாத மற்றநாடுகள் உட்பட்ட உலகை(ஜெகம்) அழிப்பது அறிவுடையதா ? பாரதிக்கு 'கஞ்சா' பழக்கம் இருந்தது என்று யாரும் சொல்லிவிட்டாலோ, பாரதியை கடவுளாகப் பார்ப்பவர்கள் அதைச் சொல்லுபவர்களை சொல்லால் சுடுவார்கள். ஆனால் அவர்கள் தான் கண்ணகியை விமர்சனம் செய்கிறார்கள்.
ஈழம் தொடர்பான இந்திய செயல்குறித்து வேதனை அடைந்த கவிஞர் தாமரை 'குழந்தைகள் தவிர அனைத்து இந்தியர்களுக்கும்' சாபம் இட்டிருக்கிறார். அவ்வாறு தாய்நாட்டின் மீதே சாபம் இடுவது தவறு என்று அப்பாவி முரு மற்றும் பலர் குறிப்பிடுகிறார்கள், கண்டனம் தெரிவிக்கிறார்கள். எழுத்தாளர்கள் அவர்களின் உணர்சிகளை எழுத்தின் வழியாகத்தான் பதிய வைக்க முடியும். தாமரை சொல்லிவிட்டால் அப்படியே நடந்துவிடப் போவதில்லை. கணவன், குழந்தைகள், பெற்றோர்களை இழந்த ஈழத்துப் பெண்கள்
தாமரையைவிட பல மடங்கு இந்தியாவைத் திட்டி சாபம் விட்டிருப்பார்கள்.
தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.
பாரதியின் வரிகள் புதுமை, புரட்சி என்றால், தாமரையின் வரிகள் உளறலா ? துக்கத்தில் இருப்பவர்களுக்குத்தான் இழப்பின் வேதனைத் தெரியும். தாமரையின் வரிகளில் சொற்குற்றம் பொருள்குற்றம் இருந்தாலும், வரிகளுக்கு என்று தனிப் பொருள் உணர்வின் அழுத்தம் என்று கொள்வது சரியாக இருக்கும்.
(பணம் பெறாத) பொதுமக்கள் தங்கள் வெறுப்பை தேர்தல் நேரத்தில் காட்டுவார்கள், படைபாளிகள் கவிதைவழிக் காட்டுவார்கள். அவர்களில் பாரதி என்றாலும், தாமரை என்றாலும் செயல் ஒன்று தான்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
24 கருத்துகள்:
கண்ணகி செய்தது சரியா? இல்லை தவறா?
பாரதி செல்வது சரியா? இல்லை தவறா என்ற இருவேறு கருத்துகள், சர்ச்சைகளாக இருக்கும் வேளையில்,
அதே மாதிரியான சர்ச்சையை மீண்டும் அறிவார்ந்த உலகத்தவர் உணர்ர்சி வசத்தாலும் எழுப்புதல் முறையா?
வரிகளில் சொற்குற்றம் பொருள்குற்றம் இருந்தாலும், வரிகளுக்கு என்று தனிப் பொருள் உணர்வின் அழுத்தம் என்று கொள்வது\\
எப்படி வேண்டுமானலும் உணர்வின் அழுத்தத்தை வெளிப்படுத்தலாம் என்பது சரியாகுமா.
எத்தனையோ தமிழர்கள்/இந்தியர்கள் ஈழத்தின் நிலைக்காக வருத்தம் தெரிவித்து பிரார்த்தனை புரிந்து(இவ்வளவு தான் இயன்றது எம்மால்) தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்தார்களே ...
அவர்களுக்கும் சாபமா!
சரி உணர்ச்சி கொந்தளிப்பாகவே இருக்கட்டும், அதற்கான வார்த்தை தெரிவுகள் ஏற்று கொள்ளும் படியாக இல்லையே!
அழிந்து போகட்டும், சாகட்டும் - இதெல்லாம் கூட கோபத்தில் வரட்டும், அதற்காக பெண்களை .......... சொல்லியிருப்பது எங்கணம் சரியாகும்
நம் பக்கத்து வீட்டுக்காரரின் கோபத்துக்கு நாம் ஆளாகிவிடுகிறோம், அல்லது சொந்த வீட்டிலேயே அந்நிலை என்று எடுத்து கொள்வோம், அவர்கள் கோபத்தில் எந்த வார்த்தையை வீசினாலும் - அந்த கோபம் ஞாயமான கோபமாக இருக்கும் பொருட்டு, எல்லாவிதமான வார்த்தைகளையும் பொருத்து கொள்ள இயலுமா.
கோபம் என்பது ஞாயமே, ஆனால் அதை எங்கனம் யார் மீது வீச வேண்டும் என்பதற்கு வரை முறை இருக்கு.
//அப்பாவி முரு said...
கண்ணகி செய்தது சரியா? இல்லை தவறா?
பாரதி செல்வது சரியா? இல்லை தவறா என்ற இருவேறு கருத்துகள், சர்ச்சைகளாக இருக்கும் வேளையில்,
அதே மாதிரியான சர்ச்சையை மீண்டும் அறிவார்ந்த உலகத்தவர் உணர்ர்சி வசத்தாலும் எழுப்புதல் முறையா?
11:15 AM, June 23, 2009
//
அவர்கள் சர்சை செய்யவில்லை, சினத்தை வெளிப்படுத்தினார்கள், நாம தான் சினத்தைத் தாண்டிய பொருள் அல்லது சினத்தை மறுக்கும் பொருள் கொள்கிறோம்.
//கோபம் என்பது ஞாயமே, ஆனால் அதை எங்கனம் யார் மீது வீச வேண்டும் என்பதற்கு வரை முறை இருக்கு.
11:20 AM, June 23, 2009
//
நெருப்பென்றால் வாய் வெந்துவிடும் என்று நினைப்பது போல் இருக்கு, தாமரையும் இந்தியர் தானே, அவருடைய சாபத்தினுள் அவரும் வருகிறார்.
//ந்து போகட்டும், சாகட்டும் - இதெல்லாம் கூட கோபத்தில் வரட்டும், அதற்காக பெண்களை .......... சொல்லியிருப்பது எங்கணம் சரியாகும்//
இதே கவிதையை ஆண் எழுதி இருந்தால் விமர்சனம் குறைந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்.
இந்தியாவே ! என்றால் ஆட்சியாளர்களையும், அவர்களின் செயலுக்கு துணை போனவர்களையும் தான் குறிப்பிடுகிறார். என்னைக் கேட்டால் திருடர்களைப் போலவே அவர்களது மனைவி மக்களையும் தண்டிக்க வேண்டும், ஏனென்றால் திருடன் திருடுவது அவனுடைய குடும்பதிற்காகத்தான், குடும்பத்தினருக்கு அவனுடைய செயல் நன்கு தெரியும், தடுக்காமல் இருப்பதால் திருடன் மட்டுமே குற்றம் செய்கிறான் என்று சொல்லிவிட முடியாது. அங்கே அவர் குறித்திருக்கும் பெண்கள் என்பதை அனைத்துப் பெண்களையும் சேர்த்துச் சொல்லி இருப்பதாக நான் கருதவில்லை.
பெண்களைக் குறித்து சொல்லிவிட்டார்களே என்று பெண்களுக்கு உயர்வு கற்பிக்கும், ஆதங்கப்படும் நம் சமூகம், பெண்களை புனிதப் பொருளாகவே அல்லது போகப் பொருளாகவே வைத்திருக்க விரும்புகிறது என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
என்னைக் கேட்டால் பெண்களை உயர்த்தவும் வேண்டாம் தாழ்த்தவும் வேண்டாம் தேவையற்ற செண்டிமெண்டுகளைவிட பெண்ணை மதிப்பதே பெண்ணைப் போற்றுவதாகும்.
இதே கவிதையை ஆண் எழுதி இருந்தால் விமர்சனம் குறைந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்.\\
இன்னும் அதிகம் ஆயிறுக்கும்...
\\பெண்களைக் குறித்து சொல்லிவிட்டார்களே என்று பெண்களுக்கு உயர்வு கற்பிக்கும், \\
கோபப்பட்ட பெண் கூட கோபத்தில் சாபம் கொடுக்க அந்த ஆயுதம் தானே எடுத்தார்கள் ...
ஆண்கள் கற்பழிக்கப்படட்டும்ன்னு எழுதலையே ...
அப்படி ஒன்று இருப்பதாகவே அடையாளம் காட்டலையே கவிஞர்களும், கதைஞர்களும் ...
எது எப்படியோ!
சிலது சிலருக்கும் சரியென்று படும் வேறு சிலருக்கு தப்பென்று படும்
இதுவும் உலக நியதி தான் ...
/(பணம் பெறாத) பொதுமக்கள் தங்கள் வெறுப்பை தேர்தல் நேரத்தில் காட்டுவார்கள், படைபாளிகள் கவிதைவழிக் காட்டுவார்கள். அவர்களில் பாரதி என்றாலும், தாமரை என்றாலும் செயல் ஒன்று தான்./
உண்மை தான்
என்னைப் பொருத்தவரை தாமரையின்
கருத்தோ/ கவிதையோ இதில் உடன்பாடு தான்
அப்படி என்றால் இது என்ன
வேதனையில் வெடிக்க வில்லை என்றாலும்,
வேடிக்கைப் பார்த்தாலும் அவன்
மனிதா?????????????????
//தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.//
பாரதி சொன்னது ரௌத்திரத்தின் வெளிப்பாடு, ஒருமனிதன் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தால், அந்த உணவை ஏதோ ஒரு ரூபத்தில் இன்னொருவன் தட்டி பறித்திருப்பான் எனும் கோபத்தின் வெளிப்பாடு....
தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
/தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்./
உண்மை தான் நண்பரே
மும்பையில் சிவசேனாவால் தமிழன் அடித்து நொறுக்கப்பட்டபோது, தாமரையும் ரோசாவும் எங்கே போயிருந்தார்கள் ?
ஆக ஈழத்தமிழனுக்கு மட்டுமே ஈரல்குலை துடிக்கும், மலேசியாவில் சிங்கையில் அடிபட்டால் கண்டு கொள்ள மாட்டார்கள்
எல்லா சாபத்திற்கும் விமோச்சனம் உண்டு..
// M Poovannan said...
மும்பையில் சிவசேனாவால் தமிழன் அடித்து நொறுக்கப்பட்டபோது, தாமரையும் ரோசாவும் எங்கே போயிருந்தார்கள் ?
ஆக ஈழத்தமிழனுக்கு மட்டுமே ஈரல்குலை துடிக்கும், மலேசியாவில் சிங்கையில் அடிபட்டால் கண்டு கொள்ள மாட்டார்கள்
12:20 PM, June 23, 2009
//
கலவரங்களுக்கும், இன அழிப்புக்கும் வேறுபாடு தெரியாதவரா நீங்கள் ?
/எங்கே போயிருந்தார்கள் ?
/
உறங்கிக் கிடப்பவன் விழித்தே எழக்
கூடாது என்பது என்ன வேதமா !!!!!!!!!!!!!!????????????????
சொல் குற்றம் , பொருள் குற்றம் பார்க்க இது ஒன்றும் திருவிளையாடல் படமும் அல்ல ,
நாம் ஒன்றும் நக்கீரர் அல்ல .
தப்பு செய்வது என்பது எல்லொருக்கும் பொதுவானதுதான் ....
Newton 3rd Law ? -:)
மடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்!
ஈழ மக்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தான் அந்த வன்னித் தாய் வசைமாறிப் பொழிகிறாள். அந்த வன்னித்தாயின் குரல் யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஊடகத்தானும் அங்கில்லை, எந்த மனித ஆர்வலனும் அங்கில்லை. அதைத் தான் இன்று தாமரை பிரதிபலித்திருக்கிறார். சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இது ஒரு பொதுவான உண்மை: ஒரு படைப்பு உன்னதத்தன்மை பெற வேண்டுமானால், ஒன்று படைப்பாளி அமரராகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறைய அரசியல் பண்ணத் தெரிந்திருக்க வேண்டும். A Contemporary only condemns another Contemporary! நம்மால் தீவிரவாதத்தன்மை கொண்ட பாரதியின் பாடலை ஏற்றுக் கொள்ளமுடியும், ஆனால் உண்மை நிலையை உரைக்கும் தாமரையின் கவிதையை ஏற்க மனமிருக்காது. ஏன்னா தாமரை சமகாலத்தவர்.
//தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.//
வழிமொழிகின்றேன்
//மடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்!
ஈழ மக்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தான் அந்த வன்னித் தாய் வசைமாறிப் பொழிகிறாள். அந்த வன்னித்தாயின் குரல் யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஊடகத்தானும் அங்கில்லை, எந்த மனித ஆர்வலனும் அங்கில்லை. அதைத் தான் இன்று தாமரை பிரதிபலித்திருக்கிறார். சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.//
வழிமொழிகிறேன்!
http://manamumninavum.blogspot.com/2009/06/blog-post_23.html
தங்கள் கருத்துடன்.... நூற்றுக்கு ஆயிரம் சதம் உடன்படுகிறேன்.
கண்ணகி ஊரை எரித்தாள் , அதை நாம் பாடப்புத்தகமாக படிக்கிறோம்.
அதில் சம்பவம் நடைபெற்றுள்ளது.(உண்மையோ, புனைவோ).துரோகம் செய்த(செய்யாவிட்டாலும்)
தன் புருஷனுக்காக ஊரையே எரித்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
பாரதியாரும் , தாமரையும் சொன்னது உணர்ச்சியின் வெளிப்பாடு, இதுவரை யாரும் ஜகத்தினை அழித்தாக ஞாபகம் இல்லை.
எனவே கண்ணகியையும் பாரதியையும் ஒப்பிட முடியாது.
ஈழத்தமிழருக்காக நம்மால் எதுவும் செய்ய முடியாததைக்கண்டு நான் வேதனைப்படுகிறேன்.தாமரையின் கோபம் சரிதான், அதிலுள்ள தவறை சுட்டிக்காட்டுவதும் நமது கடமை.
// அறிமுகம் //
முடிந்தால் இங்கு வாங்க.
http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_24.html
மனம் வருந்தி சாபமிடுவது தமிழச்சி தாமரை என்று பாராமல் பல உயிர்கள் பாதிக்கப்படுவது கண்டு பொங்கி எழுந்த சக மனிதராய் பாருங்கள்.
சரியாக கேள்வி? எல்லோரும் யோசிக்கவேண்டியது..?
எனக்கென்னமோ நீங்கள் தாமரையை புகழ்ந்துள்ளதாக தோன்றுகிறது!
வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே...
கருத்துரையிடுக