பின்பற்றுபவர்கள்

12 பிப்ரவரி, 2009

அகோரி VS அந்நியன் :)

சில பாத்திரங்கள் நீண்ட நாள் பேசப்படும், அதை வைத்து நிறைய காமடிகளை உருவாக்குவார்கள், என்னோட முயற்சியில்...

********

அந்யாயத்தைக் கண்டா அப்படியே பொங்கனும்.....ரஜினி பாணியில் கொள்கை வைத்திருக்கும் அகோரியும், அந்நியனும்....

அகோரி தலைகீழ் யோகா பண்ணும் இடத்திற்கு வந்த அந்நியன்

இருவரும் கரகரத்தகுரலில்

அந்நியன் : அந்த போலிஸ்காரனும் தானே பிச்சைக்காரர்களை கொடுமை படுத்தினான் அவனையேன் கொல்லலை ?

அகோரி : கஞ்சா இருக்கா...

அந்நியன் : கஞ்சா.... குடிக்கிறது சட்ட விரோதம்

அகோரி : எனக்கு சட்டம் கிடையாது....தொண்டை ரொம்ப கெட்டுப் போய் இருக்கு போய் இருமல் மருந்து வாங்கி சாப்பிட்டுவா




அந்நியன் : உனக்கும் தான் இருமல் மருந்து தேவைப்படுதே ... அதனால அதை நீ சொல்லாதே...நீயும் இந்த நாட்டுல ஒருத்தன் தான், ஏன் சட்டம் உன்னை கட்டுப்படுத்தாது...?

அகோரி : கஞ்சா இருக்கா... இருந்த கொடு ......சும்மா தொன தொனக்காதே...தலைக்கீழே யோகா பண்ணிக்கிட்டு இருக்கேங்கிற தைரியத்துல பேசுற......எறங்கினேன்......அம்பி ஆகிடுவே

அந்நியன் : கஞ்சா குடிக்கிறது சட்டப்படி குற்றம், அதையும் மெரட்டி கேட்கிறது அதவிட குற்றம்

அகோரி : ஓம் ரீம் க்லீம்........என்று சொல்லிக் கொண்டே அந்நியன் மீது ஏறி அவரை சாத்துகிறார்

...அந்நியன் அம்பி ஆகிறார்

அம்பி : யார் நீங்க...எதுக்காக என்னை பின்னுறேள்

அகோரி : உன்னைய மாதிரி சட்டத்தை கையில எடுக்கிறவனுக்கு மரணம் கொடுப்பவன் நான்......கடவுள் அகம்.....ப்ரம்மாஸ்மி' ......அதிர அதிர கத்துகிறார்

அம்பி : என்னது ஐயராத்து மாமியா ?

அகோரி பளாரென்று அம்பியின் கன்னத்தில் அறைவிட

அம்பி மீண்டும் அந்நியனாக மாறுகிறார்

அந்நியன் : உன்னைய மாதிரி சட்டத்தை மதிக்காமல் கஞ்சா குடிச்சிட்டு தூங்கும் சோம்பேறிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் அந்நியன் நான்

இருவரும் பலமாக மோதிக் கொள்கிறார்கள்....இருவரின் தலைமுடிகள் சிக்கிக் கொள்கிறது, சிக்கிய முடியுடன் ஒருவருக்கு ஒருவர் முட்டிக் விருமாண்டி பாணியில்

'உர்ர்ர்ர்ர்ர். உர்ர்ர்ர்ர்ர்ர்ர்' இருபக்கமும் ஒரே உறுமல் சத்தம்

பொதுஜனம் கூடிவிட்டார்கள்

ஒருவர் : நிறுத்துங்கப்பா உங்க சண்டையை.......'எங்களையெல்லாம் பார்த்தால் இளிச்சவாயனாக தெரியுதா ?' எதோ பொழுது போக்குன்னு ரசித்தால் ஆள் ஆளுக்கு நாட்டுக்கு அட்வைஸ் மழை....தலை முடியை வளர்த்து இன்னும் என்ன கேரக்டர்கள் வரப்போகுதோ.... இந்த ஷங்கரையும்...பாலாவையும் புடிச்சு மரத்துல கட்டிவச்சி உறிக்கனும். அப்பதான் ஒருத்தரும் இப்படி பட்ட கேரக்டர்களை உலாவிட மாட்டாங்க.

மற்றொருவர் ஒருவர் : சரி சரி வேடிக்கைப் பார்க்கமல் எல்லோரும் காசைப் போடுங்க, அந்நியனுக்கும் அகோரிக்கும் முடிவெட்டிவிட்டு ஏர்வாடிக்கு அனுப்பனும்.

பிகு : இன்னும் சிறப்பாக எழுதனும் என்று நினைத்தேன். நேரமில்லை

17 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

தலைப்பு புரியாமா உள்ள வந்தா

படங்கள் புரியவைக்குது

நட்புடன் ஜமால் சொன்னது…

பாலா vs சங்கரா

ஜெகதீசன் சொன்னது…

Better luck next time...

cheena (சீனா) சொன்னது…

முடி வெட்ட காசு போட்டுட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//இன்னும் சிறப்பாக எழுதனும் என்று நினைத்தேன். நேரமில்லை//

நேரம் கிடைக்கும் போது பகுதி 2 எழுதிட்டா போகுது

Cable சங்கர் சொன்னது…

super sir.. மிக அருமை..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்த ஷங்கரையும்...பாலாவையும் புடிச்சு மரத்துல கட்டிவச்சி உறிக்கனும். அப்பதான் ஒருத்தரும் இப்படி பட்ட கேரக்டர்களை உலாவிட மாட்டாங்க.//


வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.!~~~~~~|~~~~~~

Bharath சொன்னது…

//அதை வைத்து நிறைய காமடிகளை உருவாக்குவார்கள், என்னோட முயற்சியில்...
//
காமெடி இந்த பதிவுலயே இருக்கா?? எந்தெந்த இடத்தில் சிரிக்கனும்னு சொல்லிருங்களேன்..

//பிகு : இன்னும் சிறப்பாக எழுதனும் என்று நினைத்தேன். நேரமில்லை//
கண்டுப்பிடிச்சுட்டேன்... காமெடியைய் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath 12:06 PM, February 12, 2009
//அதை வைத்து நிறைய காமடிகளை உருவாக்குவார்கள், என்னோட முயற்சியில்...
//
காமெடி இந்த பதிவுலயே இருக்கா?? எந்தெந்த இடத்தில் சிரிக்கனும்னு சொல்லிருங்களேன்..//

என்ன கிண்டலா, கோவித்துக் கொள்ளக் கூடாது, எந்த இடத்துல சிரிக்கனுமா ? எல்லோரும் வாயால் தான் சிரிப்பாங்க. வேற எங்கே :)

//பிகு : இன்னும் சிறப்பாக எழுதனும் என்று நினைத்தேன். நேரமில்லை//
கண்டுப்பிடிச்சுட்டேன்... காமெடியைய் :)
//
:)

நாமக்கல் சிபி சொன்னது…

///பிகு : இன்னும் சிறப்பாக எழுதனும் என்று நினைத்தேன். நேரமில்லை//
கண்டுப்பிடிச்சுட்டேன்... காமெடியைய் :)//

:))

சூப்பர்!

வெண்பூ சொன்னது…

//
பிகு : இன்னும் சிறப்பாக எழுதனும் என்று நினைத்தேன். நேரமில்லை
//

இதுவே நல்லாத்தானு இருக்கு.. ஆனா இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாம். சிரிக்க ஆரம்பிக்கறதுகுள்ள முடிஞ்சிடுச்சி. :)))

நையாண்டி நைனா சொன்னது…

மிக நன்றாக‌ இருந்தது.

வால்பையன் சொன்னது…

ஜூப்பரு காமெடி

சி தயாளன் சொன்னது…

என்ன இது ...!
சைவ அகோரியையும் வைணவ அம்பியையும் மோத விட்டு காசு பார்த்த கோவியாரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....!
:-))

இருந்தாலும் நல்ல கற்பனை...:-))

முரளிகண்ணன் சொன்னது…

:-)))))))))))))))))))))))

மங்களூர் சிவா சொன்னது…

/
சரி சரி வேடிக்கைப் பார்க்கமல் எல்லோரும் காசைப் போடுங்க, அந்நியனுக்கும் அகோரிக்கும் முடிவெட்டிவிட்டு ஏர்வாடிக்கு அனுப்பனும்.
/

:))))))))))))))

அத்திரி சொன்னது…

)))))))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்