தொண்டர் 1 : தலைமையை மாற்றி அமைக்கப் போறதாக உயர்மட்ட குழுவில் பேசியதற்கு தலைவரின் ரியாக்சன் எப்படி ?
தொண்டர் 2 : அந்த கூத்தை ஏன் கேட்கிற, ஒரு அரை மணி நேரம் டைம் கேட்டுட்டு போய் பக்கத்து சலூன் கடையில் டை அடிச்சுட்டு வந்து இப்ப தலைமையை மாற்றியாச்சு ஓகேவான்னு கேட்கிறார்
***
தொண்டர் 1 : தலைவர் திடீர்னு உண்ணாவிருதம் இருக்கேன்னு அறிவிச்சு இருக்கார், பிரச்சனை தீர்ந்திடுமா ?
தொண்டர் 2 : உடம்புல கொழுப்பு கூடிப் போச்சு, 2 வேளை டயட்டுல இருங்கன்னு டாக்டர் சொன்னார், தலைவர் மூன்று வேலையாக டயட்டுல இருக்கப் போறார்ர்னு நான் கேள்வி பட்டேனே. கொழுப்பு பிரச்சனை தீர்ந்துடும்
***
ஒருவர் : வாய்சொல் சாமி மீது முட்டை வீசியதால் எலுமிச்சை விலை சரிந்துவிடும் போலிருக்கு
மற்றொருவர் : முட்டைக்கும் எலுமிச்சைக்கும் என்னைய்யா சம்பந்தம் ?
ஒருவர் : தலையில் விழுந்த முட்டையை கழுவ குளித்ததும் உடம்பு கூலாகிவிட்டதாம், இது நன்னா இருக்கு இனிமே பார்க்கவருகிறவா எலுமிச்சைக்கு பதிலாக முட்டை கொண்டுவாங்கன்னு சொல்லிட்டாராம்
***
அய்யாவு : நம்ம அமைச்சர் எதிர்கட்சிக்கு எதிராக அறிக்கை விடுத்து இருக்கிறார்...பார்த்திங்களா ?
அப்பாவு : ஆமாம் பார்த்தேன்...இனிமே எதிர்கட்சி ஆட்சிக்கு வந்து மீண்டும் கொள்ளையை தொடர முடியாது என்று சொல்லி இருக்கிறார்
அய்யாவு : சரியாத்தான் சொல்றார்...இவங்க ஆட்சியில் எதையும் மிச்சம் வைச்சதானே அவங்க வந்து கொள்ளை அடிக்கப் போறாங்க. சூசகமாகச் சொல்றார்
***
குபபன் : நம்ம தலைவர், முதல்வரின் அறிவிப்பு ஒரு கண் துடைப்பு நாடகம் என்கிறாரே ?
சுப்பன் : இருக்கலாம், முன்பு பக்கதுல இருந்து கைக்குட்டை கொடுத்தவராச்சே இவருக்கு தெரியாதா என்ன ?
பின்பற்றுபவர்கள்
26 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
24 கருத்துகள்:
mee the first.
haa haaha haa hhaa
எல்லா ஜோக்குகளும் அருமை. அதிலும் இரண்டாவது ஜோக்........ ரசித்தேன்
நகைச்சுவை அருமையா இருக்கு கோவியாரே!
கலக்குங்கள்!!
கோவி கண்ணன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புங்கய்யா! ;-)
//கிரி said...
கோவி கண்ணன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புங்கய்யா! ;-)//
அடுக்கு மாடியில் ஆட்டோ ஏறாது என்கிற தைரியம் தான்!
வெகுஜன பத்திரிக்கையில் வர அனைத்து தகுதிகளும் உடைய நகைச்சுவைகள்
//வால்பையன் said...
வெகுஜன பத்திரிக்கையில் வர அனைத்து தகுதிகளும் உடைய நகைச்சுவைகள்
//
அம்புட்டு மோசமா ?
:)
//நையாண்டி நைனா said...
haa haaha haa hhaa
//
நன்றி
//அத்திரி said...
எல்லா ஜோக்குகளும் அருமை. அதிலும் இரண்டாவது ஜோக்........ ரசித்தேன்
//
அதுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் என்று இன்னொரு அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
:)
//ஜோதிபாரதி said...
நகைச்சுவை அருமையா இருக்கு கோவியாரே!
கலக்குங்கள்!!
//
கற்பனை குதிரை கடிவாளம் இல்லாம்மல் ஓடுதுன்னு சொல்ல வர்றீங்க. :)
//ஜோதிபாரதி said...
நகைச்சுவை அருமையா இருக்கு கோவியாரே!
கலக்குங்கள்!!
//
கற்பனை குதிரை கடிவாளம் இல்லாமல் ஓடுதுன்னு சொல்ல வர்றீங்க. :)
//ஜோதிபாரதி said...
நகைச்சுவை அருமையா இருக்கு கோவியாரே!
கலக்குங்கள்!!
//
கற்பனை குதிரை கடிவாளம் இல்லாமல் ஓடுதுன்னு சொல்ல வர்றீங்க. :)
//கிரி said...
கோவி கண்ணன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புங்கய்யா! ;-)
//
நீயே ஓட்டிவராமல் இருந்தால் சரிதான்
// ஜோதிபாரதி said...
//கிரி said...
கோவி கண்ணன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புங்கய்யா! ;-)//
அடுக்கு மாடியில் ஆட்டோ ஏறாது என்கிற தைரியம் தான்!
3:36 PM, February 26, 2009
//
:)
நன்றாக இருக்கிறது அண்ணா உங்கள் நகைச்சுவை!!
நானும் கொஞ்சம் எழுதி இருக்கிறேன் சற்று பாருங்களேன்
முதன் முறையாக என்னுடைய வலைப்பதிவிற்கு வந்துள்ளீர்கள்
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நல்லாச் சிரிச்சாச்சு...அதிலும் அந்த முட்டை எலுமிச்சம்பழம் டாப்..
தலைமை ஜோக் சூப்பர் சார்.
நல்லா இருக்கு கோவி.
இன்றைய தலைமை அப்படித்தானே இருக்கு.
கோவி கண்ணன் உங்கள் வரவுக்கு நன்றிகள்.
நிறையவே எழுதுகின்றீர்கள். விதிகள் காலத்தால் மாறும் என்ற கருத்து எப்படி உங்களுக்குள் உதித்தது. விதியை மாற்ற முடியாது என்றுதானே சொல்லப்படுகின்றது. மாறவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் விரும்புவதெல்லாம் சரி என்று இல்லைதானே. உங்கள் பதில் என்ன இதற்கு கோவி கண்ணன்.
ஏகப்பட்ட உள்குத்து இருக்கும் போல
//BOOPATHY said...
கோவி கண்ணன் உங்கள் வரவுக்கு நன்றிகள்.
நிறையவே எழுதுகின்றீர்கள்.//
பூபதி, பாராட்டுக்கு மிக்க நன்றி !
//விதிகள் காலத்தால் மாறும் என்ற கருத்து எப்படி உங்களுக்குள் உதித்தது. விதியை மாற்ற முடியாது என்றுதானே சொல்லப்படுகின்றது. மாறவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் விரும்புவதெல்லாம் சரி என்று இல்லைதானே. உங்கள் பதில் என்ன இதற்கு கோவி கண்ணன்.
6:30 AM, February 27, 2009
//
ஒருகாலத்தில் யார் யாரெல்லாம் படிக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாதெல்லாம் என்று விதி இருந்தது, அப்படி செல்ல முடியாதவர்கள் அதை தலைவிதி என்றே நினைத்தார்கள். மாற்றம் என்பது மானிட தத்துவம் என்று தானே சொல்லுவார்கள். ஆக (வாழ்வியலில்) விதிகளை தீர்மாணிப்பவர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள், இந்த விதிகள் இயற்கையாக இல்லாமல் உருவாக்கப்படுவதால் குறிப்பிட்டகாலத்திற்கு பிறகு நீர்த்து போகும். முன்பெல்லாம் பிரசவசாவுகள் மிகுதியாக இருந்தது, மருத்துவ வசதி முன்னேறியதும் அவை குறைந்துவிட்டன. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். விதிகள் மாறுவதற்கு அறிவியல் வளர்ச்சியும், நல்லறிவு வளர்ச்சியும் காரணம்
ஹா! ஹா! சுட சுட போட்ட பஜ்ஜி மாதிரி சூடான நகைச்சுவைகள்... இனிமே அடிக்கடி எட்டிப்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே!
கருத்துரையிடுக