கலைஞர் ஐயா, வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் மோதலில் கடும் வேதனை அடைந்ததாகவும், தீர்ப்பதற்காக உண்ணா நோன்பு இருக்கப் போவதாகவும், சில நாளிதழ்கள் சாகும் வரை உண்ணா நோன்பு இருக்கப்போவதாக அறிவித்ததாக எழுதுகின்றன. என்பது வயதைக் கடந்த உங்களுக்கு இவையெல்லாம் தேவையா ?
ஏற்கனவே ஈழம் தொடர்பில் உங்கள் அணுகுமுறை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை, மாறாக உங்கள் மீது கடும் விமர்சனங்களையும், குற்றச் சாட்டுகளையுமே வைக்கிறார்கள். அவற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை முத்துகுமாரின் கடிதம் மூலம் அனைவருக்குமே தெரிவிந்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், சரியான அறிவுறுத்தலுக்கு பதில் தவறான அறிவுறுத்தல் வழங்குபவர்கள் (அம்மாவின் தோழியை அப்படித்தான் சொல்லுவார்கள்) அருகில் இருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்
இலக்கியம், திரைத்துறை, அரசியல் ஆகிய மூன்றிலுமே நீங்கள் நிகழ்த்திய சாதனைகளை உங்களுக்கு முன்பு அண்ணா ஒருவரால் தான் செய்ய முடிந்தது, அதற்கு பின்பும் எவரும் இல்லை. இந்த நீண்ட நெடிய அரசியல், சமூகப் பயணத்தில் கிடைத்த புகழைவிட தற்போதைய அரசியல் சூழலில் இந்த வயதில் மன அழுத்தமும், களைப்பும் மிகுதியாவே இருக்கும். இதிலிருந்துவிடுபட தங்கள் அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெருவதுதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று உங்களுக்கு அறிவுறுத்துபவர்கள் எவரும் இல்லை என்றே நினைக்க முடிகிறது
இதோ உங்கள் ஆட்சியில் முத்தாய்ப்பாக தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுதந்துவிட்டீர்கள், அதற்குமேலும் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் செய்ய வேண்டிய சூழலில் தற்போதைய அரசியல் சூழல் (திமுக அரசியலுக்கு) இல்லை என்பதை உங்கள் பல்வேறு முடிவுகளின் தடுமாற்றம் உணர்த்துகிறது.
உங்கள் பல்வேறு அரசியல் நிலைகளின் காரணங்களை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு அரசியலில் இருந்து முற்றிலும் விலகினால், கிடைத்த புகழ் குன்றாமல் பெருகும். கருணாநிதி (இந்த வயதில்) அரசியல் நாடகம் ஆடுகிறார், குடும்ப அரசியல் நடத்துகிறார் என்கிற எதிர்த்தாக்குதல்கள் உங்களை நோக்கி தொடர்ந்து சொல்பவர்கள் உத்தமர்கள் இல்லையான்றாலும் அப்படி குற்றம் சாட்டுவது கண்டிப்பாக குறையும். உங்கள் மருத்துவர்கள் விடுக்கும் வேண்டுகோள்கள் கூட பரிதாபம் வரவழைக்க முயலும் ஒரு அரசியல் முயற்சியாகவே விமர்சிக்கப்படுகிறது. எவ்வளவோ அரசியல், இலக்கிய சாதனைகள் செய்த உங்களுக்கு இது தேவையா என்றே பலரும் கேட்கிறார்கள்.
50 ஆண்டுகாலம் நீங்கள் வளர்த்த அரசியல்வாதிகள் அது உங்கள் மகன்களாக இருந்தாலும் உங்கள் இடத்தில் இருந்து அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு கிடைக்கட்டும். தமிழின தலைவர் என்று உங்களை குறிப்பிட்டு மகிழ்ந்தவர்கள் பலரும் தற்பொழுது காங்கிரசுடன் ஆன உங்கள் அரசியல் நிலையால் இகழ தொடங்கி இருக்கின்றனர். நீங்கள் அரசியலில் இருந்து விலகினால் உங்கள் வெற்றிடம் தற்போதைய சூழலில் தமிழனுக்கு தடைக்கல்லா ? படிக்கல்லா ? தமிழர்கள் அனைவருமே உணர்ந்து கொள்ளட்டுமே.
இப்படிக்கு,
திராவிடத் தலைவர், மிகச் சிறந்த தமிழறிஞர் என்ற முறையில் உங்கள் மீது பற்று கொணடுள்ள, உங்கள் உடல் நிலையில் அக்கறை கொண்டுள்ள ஒரு தமிழன்
பின்பற்றுபவர்கள்
25 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
37 கருத்துகள்:
குறைந்தபட்சம் ஸ்டாலினை துனை முதல்வர் ஆக்கி, கொஞ்சமாவது கலைஞர் ஓய்வு எடுக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் துனைமுதல்வராக அவரை ஆக்கிய பின் (மகன்,மகள், பேரன்,ஆதரவு கட்சி தலைவர்களுக்குள்) பஞ்சாயத்து செய்வதிலேய நேரம் போய்விடும் என்று கலைஞர் நினைக்கிறார் போல் இருக்கிறது.
ஈழத்தமிழருக்காக மத்திய அரசை வற்ப்புறுத்தி உண்ணா நோம்பு இராத கலைஞர், காவல்துறை-வழக்கறிஞர்களுக்காக (இவை இரண்டும் இவர் கையில் உள்ளது) உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பது இயலாமையைத் தான் காட்டுகிறது. வேறென்ன?
நியாயமான ஆதங்கங்களை கொண்ட கடிதம். அவரின் தமிழ் மீது காதல் கொண்டவர்களே, இப்போது வேதனையுடன் ஒதுங்கி வருகிறார்கள்!
///நியாயமான ஆதங்கங்களை கொண்ட கடிதம். அவரின் தமிழ் மீது காதல் கொண்டவர்களே, இப்போது வேதனையுடன் ஒதுங்கி வருகிறார்கள்!///
repeateyyyyy
Why to retire so early. He is yet to distribute Kalaimamani to Asin and Nayanthara.
கலைஞரின் பதவி ஆசையை பற்றி சொல்லி தெரிய தேவை இல்லை!
அவரின் அடிப்படையே தவறு!
அவரை தவிர வேறு யார் அந்த சமயத்தில் திமுக விற்கு பொறுப்பேற்றிருந்தாலும் தமிழ்நாடும் மொழியும் உருப்பட்டிருக்கும் என்பது திண்ணம்!
எரிச்சல் மேல் எரிச்சலை கூட்டிக்கொண்டு போகிறார் கலைஞர்..
//அவரை தவிர வேறு யார் அந்த சமயத்தில் திமுக விற்கு பொறுப்பேற்றிருந்தாலும் தமிழ்நாடும் மொழியும் உருப்பட்டிருக்கும் //
வந்துட்டாருப்பா சந்துல சிந்து பாட.
இதையே ஞாநி எழுதிய போது கண்டன கூட்டம் நடந்தது ஞாபகம் இருக்கிறதா?
தோழர் லக்கி சொன்ன மாதிரி, கலைஞரை திட்டவும் ஓய்வு எடுக்க சொல்லவும், கழக கண்மணிகளுக்கு மட்டும் உரிமை இருக்கிறதோ என்னவோ!
//ஆனால் துனைமுதல்வராக அவரை ஆக்கிய பின் (மகன்,மகள், பேரன்,ஆதரவு கட்சி தலைவர்களுக்குள்) பஞ்சாயத்து செய்வதிலேய நேரம் போய்விடும் என்று கலைஞர் நினைக்கிறார் போல் இருக்கிறது.//
குடும்பத்தினர் இவரது சொல்படி கேட்கவில்லை என்றால் ஒதுங்கிப் போகவேண்டியது தானே, இப்போது அவர்மீதான பல்வேறு தரபில் இருந்து விமர்சனங்களையும் அதனால் தவிர்க்கலாம் அல்லவா
//நியாயமான ஆதங்கங்களை கொண்ட கடிதம். அவரின் தமிழ் மீது காதல் கொண்டவர்களே, இப்போது வேதனையுடன் ஒதுங்கி வருகிறார்கள்!//
அவர்மீது வெறுப்புக் கொண்டு வேதனையாக தீக்குளித்த தொண்டரையும் அவர் எண்ணிப்பார்க்க வேண்டும்
//T.V.Radhakrishnan said...
///நியாயமான ஆதங்கங்களை கொண்ட கடிதம். அவரின் தமிழ் மீது காதல் கொண்டவர்களே, இப்போது வேதனையுடன் ஒதுங்கி வருகிறார்கள்!///
repeateyyyyy
//
நன்றி !
//siva said...
Why to retire so early. He is yet to distribute Kalaimamani to Asin and Nayanthara.
//
ம், இதுபோன்ற தரக்குறைவான நோக்கில் சொல்லப்படும் விமர்சனங்களை கலைஞர் எதிர்கொள்ள வேண்டுமா என்பதே எனது கேள்வி
நன்றி சிவா
// சிவாஜி த பாஸ் said...
கலைஞரின் பதவி ஆசையை பற்றி சொல்லி தெரிய தேவை இல்லை!
அவரின் அடிப்படையே தவறு!
அவரை தவிர வேறு யார் அந்த சமயத்தில் திமுக விற்கு பொறுப்பேற்றிருந்தாலும் தமிழ்நாடும் மொழியும் உருப்பட்டிருக்கும் என்பது திண்ணம்!
//
திமுக ? மற்றவர்களெல்லாம் வேறு அரசியல் கட்சி நடத்தினார்களா ? எல்லோருமே 'திராவிட' என்ற பெயரில் கட்சி நடத்தியவர்கள் தான். மற்றவர்கள் ஏன் கிழிக்கவில்லை, மொழிக்காக என்ன செய்தார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
// ஜோ / Joe said...
எரிச்சல் மேல் எரிச்சலை கூட்டிக்கொண்டு போகிறார் கலைஞர்..
//
புரிகிறது ஜோ. லக்கி லுக் எழுதிய பதிவில் இருந்தே தெரிந்து கொண்டேன். தற்பொழுது சரியான முடிவெடுக்கும் நேரம்.
//வால்பையன் said...
இதையே ஞாநி எழுதிய போது கண்டன கூட்டம் நடந்தது ஞாபகம் இருக்கிறதா?//
வால், ஞானி வயதை குறித்து கிண்டல் அடித்தார். அதுவேறு. தற்போதைய திமுக நிலைபாடு அரசியல் வேறு. தொண்டர்கள் வெளியே சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். திமுக அரசியல் லாபநோக்கில் இருப்பவர்கள் மட்டுமே அரசியல் நிலைப்பாட்டை கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
//தோழர் லக்கி சொன்ன மாதிரி, கலைஞரை திட்டவும் ஓய்வு எடுக்க சொல்லவும், கழக கண்மணிகளுக்கு மட்டும் உரிமை இருக்கிறதோ என்னவோ!
//
மிகச் சரியான வாதம் :)
தி.மு.க.வினர் உட்பட கருணாநிதி யாரையுமே நம்ப தயாராக இல்லை.
பிரதமர் மருத்தவமனைக்கு சென்றபோது தனது பொறுப்பை தற்காலிகமாக பிறரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்...
கியூபா அதிபர் மருத்துவமனைக்கு சென்றபோது தனது பொறுப்பை அவருடைய சகோரரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்...
இவர் ஏன் தனது பொறுப்பை தனக்கு அடுத்தபடியாக இருக்கும் பேராசிரியரிடம் ஒப்படத்துவிட்டு மருத்துவமனைக்கு செல்லவில்லை. அவர்மீது இவருக்கு நம்பிக்கையில்லையா? அல்லது அவர் நிர்வாகத்திரன் அற்றவரா?
ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்கும் தயக்கம்! ஏன் இந்த தயக்கம்? தனது குடும்பத்திற்காகத்தான் கட்சியினர் செயல்படவேண்டும் என்ற உண்மை தி.மு.க. தொண்டனுக்கு தெரிந்துவிடும் என்பதாலா?
போகட்டும் சார்.... விடுங்க....
கத்தரிக்கா முத்துனா கடைக்கு வந்துதானே ஆகணும்.
கலைஞர் ஐயாவுக்கு கண் மந்தம் ஏதும் இல்லை தானே :)) இதை படிப்பாரா?
//கலைஞர் ஐயாவுக்கு கண் மந்தம் ஏதும் இல்லை தானே :)) இதை படிப்பாரா?//
உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை . :(
//தி.மு.க.வினர் உட்பட கருணாநிதி யாரையுமே நம்ப தயாராக இல்லை.//
பாயிண்டைப் புடிச்சுட்டீங்க.. தன்னைத் தவிர வேறு யாரையும் நம்பவில்லையென்றால் அவர் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்க வேண்டும். இது ஒரு விதமான மன நோய். அவருடைய நடவடிக்கைகளும் இதையே காட்டுகின்றன. அய்யகோ.. முதல் கலைக்கிறாங்க.. கலைக்க முயற்சி பண்ணுறாங்க.. இன்னபிற..
இவருக்கு யார் அல்லது எதன் மூலம் ஆபத்து (அல்லது பாதுகாப்பற்ற தன்மை) நிலவுகிறது என கண்டறிந்து அதனை அல்லது அவரை தூக்கி எறிந்து விட்டு விலகி பாதுகாப்பு வலயப் பகுதிக்கு அவர் வர வேண்டும்.
இன்றைய சூழலில் அவருக்கு பாதுகாப்பற்ற சூழலும் ஆபத்தும் காங்கிரசு மற்றும் சோனியாவால் மட்டுமே நிலவுகிறது. அவர்களால் மட்டுமே இவரது ஆட்சியைக் கலைக்கவோ அல்லது கவிழ்க்கவோ முடியும்.
காங்கிரசிடம் பிணைக்கைதியாக இருக்கும் கருணாநிதி துணிந்து பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வர வேண்டும்.
இதனை அவரது ஆலோசகர்கள் அவரிடம் தெரிவிப்பார்களா?
சிவராத்திரி அன்னிக்கு கலைஞர் விரதம் ஆரம்பிச்சாரு. அதுனால இந்த முறை எல்லாம் நல்லாவே நடக்கும். கவலைப்படாதீங்க கோவி.
கரிகாலன், இன்றைய திமுகவின் நிலையில் இது சாத்தியம் இல்லை. அதை தவிர, அவர் அப்படி செய்தாலும் விமர்சனங்கள் இதை விட கடுமையாகவே இருக்கும். (chickening out !)
கோவி,
திமுக தலைவரா மட்டும் இருந்தா கழக குஞ்சுங்களுக்கு மட்டும் தான் உரிமை அவர விமர்சிக்க. அவரு தமிழ்நாட்டு முதலமைச்சரும் கூட. அவருக்கு வோட்டு போட்டவங்க, போடாதவங்க எல்லாருக்கும் இப்ப உரிமை இருக்கு. :)-
ஜோதி, உங்கள் வாதத்தில் நியாயம் இருக்கிறது. ஈழ தமிழர் பிரச்னையில் கலைஞரால் மட்டுமே ஒரு முடிவு எடுக்க முடியாது. மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் இவ்வாறான அறவழி போராட்டங்கள் சரியாக இருக்கலாம். இது தமிழ்நாட்டில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை. அதிலும் கலைஞர் அவர்கள் போலீஸ் துறை அமைச்சரும் கூட. (இல்லை என்றால் திருத்தவும்) இதற்கும் உண்ணா நோம்பு என்றால் வெறும் வோட்டு அரசியல் தான். வேறு ஒன்றும் கிடையாது.
/தாங்கள் அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதுதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது /
நான் ஏற்கிறேன்.
அவர் ஏற்கமாட்டார்;
இந்த அரியணை எனும் முள்ளுமெத்தைச் (அவர் கூற்றுப்படி); சொகுசு வாழ்க்கையும்; அதனால் அவர் சந்ததியே பெறும்; பெறப்போகும் பயன்.
இலகுவில் அவர் இறங்கமாட்டார். இது தொடர யாரிடமாவது இரப்பார். தொண்டர்களையும்;தமிழர்களையும் அவர் மறந்து வெகுகாலம்...இப்போது அவர் இன்னலெல்லாம் தமிழன்
சற்று சிந்திக்கிறானே...என்பதே!
இருந்து பாருங்கள்.
***
****
//siva said...
Why to retire so early. He is yet to distribute Kalaimamani to Asin and Nayanthara.
//
ம், இதுபோன்ற தரக்குறைவான நோக்கில் சொல்லப்படும் விமர்சனங்களை கலைஞர் எதிர்கொள்ள வேண்டுமா என்பதே எனது கேள்வி
****
இதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க ?
இன்னும் இந்த வருடம் கலைமாமணி விருது வாங்கியவங்க லிஸ்ட் பாக்கலியா நீங்க ?
லிஸ்ட் பாத்த உடன வந்த எரிச்சல்ல கூட எழுதி இருக்கலாம்.
அனேக வேண்டுகோள்கள் விடுத்து விடுத்து சலித்தோம்...
எதனால் , இன்னமும் கலைஞரின் தமிழ் மேலுள்ள பாசத்தினால்.
வயதானவர்களும் , குழந்தைகளும் ஒன்றென்பார்களே , சற்றேறக்குறைய கலைஞரும் அதே நிலையில்தான் இருக்கிறார் போலும்.
இதே நிலை நீடித்தால் ஸ்டாலினே முன் வந்து கட்சியைக் கைப்பற்றி விடுவார் என்று நினைக்கிறேன்.
அவர் அப்படிச் செய்தால் மட்டுமே இல்லை கோவியார் சொல்வது போல கலைஞர் ஓய்வெடுத்தால் மட்டுமே திமுக இனி பிழைக்க கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறது.
:)-
கடந்த 10 வருஷமா கலைமாமணி விருது வாங்கினவங்க பட்டியல் தேடி பார்த்தேன். கண்ண கட்டுது.
உங்க தானை தலைவி தீபா வெங்கட் போன வருடம் வாங்கி இருக்காங்க.
போன வருஷம் சிலம்பரசன் வாங்கினதுனால இந்த வருஷம் நயனுக்கு போல.
//திராவிடத் தலைவர், மிகச் சிறந்த தமிழறிஞர் என்ற முறையில் உங்கள் மீது பற்று கொணடுள்ள, உங்கள் உடல் நிலையில் அக்கரை கொண்டுள்ள ஒரு தமிழன்//
இந்த தமிழனின் பதிவுக்குள் பல இலட்சம் தொண்டர்களின் ஆசையும அடங்கியிருக்கிறது என்பதை கலைஞர் அறிவரோ.
//கரிகாலன் said...
தி.மு.க.வினர் உட்பட கருணாநிதி யாரையுமே நம்ப தயாராக இல்லை.
பிரதமர் மருத்தவமனைக்கு சென்றபோது தனது பொறுப்பை தற்காலிகமாக பிறரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்...
கியூபா அதிபர் மருத்துவமனைக்கு சென்றபோது தனது பொறுப்பை அவருடைய சகோரரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்...
இவர் ஏன் தனது பொறுப்பை தனக்கு அடுத்தபடியாக இருக்கும் பேராசிரியரிடம் ஒப்படத்துவிட்டு மருத்துவமனைக்கு செல்லவில்லை. அவர்மீது இவருக்கு நம்பிக்கையில்லையா? அல்லது அவர் நிர்வாகத்திரன் அற்றவரா?
ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்கும் தயக்கம்! ஏன் இந்த தயக்கம்? தனது குடும்பத்திற்காகத்தான் கட்சியினர் செயல்படவேண்டும் என்ற உண்மை தி.மு.க. தொண்டனுக்கு தெரிந்துவிடும் என்பதாலா?
//
நீங்கள் சொல்வது சரிதான். பொறுப்புகளை வேறு யாரிடமாவது விட்டு(தந்து) இருக்க வேண்டும்.
//VIKNESHWARAN said...
கலைஞர் ஐயாவுக்கு கண் மந்தம் ஏதும் இல்லை தானே :)) இதை படிப்பாரா?
//
அவர் படிப்பார் என்றெல்லாம் எழுதவில்லை. அவர் வலைப்பதிவெல்லாம் படிப்பது ஐயமே. இந்த செய்து சிலருக்கு எட்டி, அப்படியே காற்று வாக்கினால் எல்லோர் மனதிலும் இப்படி ஓர் எண்ணம் வளர்ந்திருப்பதை புரிந்து கொண்டால் போதும்
//நையாண்டி நைனா said...
போகட்டும் சார்.... விடுங்க....
கத்தரிக்கா முத்துனா கடைக்கு வந்துதானே ஆகணும்.
//
அதுசரிதான், ஆனால் முற்றிய கத்திரிக்காயை யாரும் வாங்க மாட்டார்கள். வத்தல் போட பயன்பட்டால் பெரியது
//கோவி,
திமுக தலைவரா மட்டும் இருந்தா கழக குஞ்சுங்களுக்கு மட்டும் தான் உரிமை அவர விமர்சிக்க. அவரு தமிழ்நாட்டு முதலமைச்சரும் கூட. அவருக்கு வோட்டு போட்டவங்க, போடாதவங்க எல்லாருக்கும் இப்ப உரிமை இருக்கு. :)-//
அந்த பொருளில் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். கலைஞரை கடுகளவு கூட புகழாதவர்களின் இகழ்ச்சியும் கூட எடுபடாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்
//மணிகண்டன் said...
***
****
//siva said...
Why to retire so early. He is yet to distribute Kalaimamani to Asin and Nayanthara.
//
ம், இதுபோன்ற தரக்குறைவான நோக்கில் சொல்லப்படும் விமர்சனங்களை கலைஞர் எதிர்கொள்ள வேண்டுமா என்பதே எனது கேள்வி
****
இதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க ?
இன்னும் இந்த வருடம் கலைமாமணி விருது வாங்கியவங்க லிஸ்ட் பாக்கலியா நீங்க ?
லிஸ்ட் பாத்த உடன வந்த எரிச்சல்ல கூட எழுதி இருக்கலாம்.
8:45 PM, February 25, 2009
//
நமீதாவுக்கு கூட கலைமாமனி விருது கொடுக்கலாம் அதில் தப்பே இல்லை. நடிகர்களைச் சொல்லாமல் நடிகைகளை மட்டும் அவர் குறிப்பிட்டு சொன்னதால் அப்படி சொன்னேன்.
// மணிகண்டன் said...
:)-
கடந்த 10 வருஷமா கலைமாமணி விருது வாங்கினவங்க பட்டியல் தேடி பார்த்தேன். கண்ண கட்டுது.
உங்க தானை தலைவி தீபா வெங்கட் போன வருடம் வாங்கி இருக்காங்க.
//
தனிமடலில் சொல்லி இருக்கலாம், :) இதைப் பார்த்தால் அபி அப்பா அப்பறம் உங்க மேல டென்சன் ஆகிடுவார்
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
/தாங்கள் அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதுதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது /
நான் ஏற்கிறேன்.
அவர் ஏற்கமாட்டார்;
இந்த அரியணை எனும் முள்ளுமெத்தைச் (அவர் கூற்றுப்படி); சொகுசு வாழ்க்கையும்; அதனால் அவர் சந்ததியே பெறும்; பெறப்போகும் பயன்.
இலகுவில் அவர் இறங்கமாட்டார். இது தொடர யாரிடமாவது இரப்பார். தொண்டர்களையும்;தமிழர்களையும் அவர் மறந்து வெகுகாலம்...இப்போது அவர் இன்னலெல்லாம் தமிழன்
சற்று சிந்திக்கிறானே...என்பதே!
இருந்து பாருங்கள்.
//
யோகன் பாரிஸ் ஐயா,
வாரிசுகள் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டவர்கள் தான். நான் இங்கு வாரிசு அரசியலை விமர்சிக்கவில்லை. காங்கிரசின் கைதியாக இருப்பதைத் தான் சுட்டினேன்
//மதிபாலா said...
அனேக வேண்டுகோள்கள் விடுத்து விடுத்து சலித்தோம்...
எதனால் , இன்னமும் கலைஞரின் தமிழ் மேலுள்ள பாசத்தினால்.
வயதானவர்களும் , குழந்தைகளும் ஒன்றென்பார்களே , சற்றேறக்குறைய கலைஞரும் அதே நிலையில்தான் இருக்கிறார் போலும்.
இதே நிலை நீடித்தால் ஸ்டாலினே முன் வந்து கட்சியைக் கைப்பற்றி விடுவார் என்று நினைக்கிறேன்.
அவர் அப்படிச் செய்தால் மட்டுமே இல்லை கோவியார் சொல்வது போல கலைஞர் ஓய்வெடுத்தால் மட்டுமே திமுக இனி பிழைக்க கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறது.
//
மதிபாலா,
பின்னுட்ட கருத்துக்கு நன்றி !
//சொல்லரசன் said...
//திராவிடத் தலைவர், மிகச் சிறந்த தமிழறிஞர் என்ற முறையில் உங்கள் மீது பற்று கொணடுள்ள, உங்கள் உடல் நிலையில் அக்கரை கொண்டுள்ள ஒரு தமிழன்//
இந்த தமிழனின் பதிவுக்குள் பல இலட்சம் தொண்டர்களின் ஆசையும அடங்கியிருக்கிறது என்பதை கலைஞர் அறிவரோ.
//
எதற்காக திமுகவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அது பொய்து போனால் வெறுப்பு வளரவே செய்யும்.
நல்ல கருத்து.. அருமையாய் உங்கள் காரணங்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள்.. கழக உடன்பிறப்புகள் யாரும் இதை சொல்ல மாட்டார்கள்/முடியாது.. குடும்பத்தினர் வேண்டுமானால் சொல்லலாம்..
<<>>
கடைசி வரியில்
// உங்கள் உடல் நிலையில் அக்கரை கொண்டுள்ள ஒரு தமிழன்//
அக்கரை அல்ல, அக்கறை.
<<>>
//பழூர் கார்த்தி said...
நல்ல கருத்து.. அருமையாய் உங்கள் காரணங்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள்.. கழக உடன்பிறப்புகள் யாரும் இதை சொல்ல மாட்டார்கள்/முடியாது.. குடும்பத்தினர் வேண்டுமானால் சொல்லலாம்..
<<>>
//
சோம்பேறி பையன், மிக்க நன்றி
//கடைசி வரியில்
// உங்கள் உடல் நிலையில் அக்கரை கொண்டுள்ள ஒரு தமிழன்//
அக்கரை அல்ல, அக்கறை.
<<>>
//
இந்த அக்கறையில் அக்கறையின்றி பலமுறை எனக்கு எழுத்து பிழைக்கள் நேர்ந்துவிட்டது. சுட்டியதற்கு மிக்க நன்றி !
கருத்துரையிடுக