பின்பற்றுபவர்கள்

28 செப்டம்பர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா - T.V. Radhakrishnan

பெயர் : டி.வி.இராதா கிருஷ்ணன்
முழுப்பெயர் : வரதராஜன் இராதகிருஷ்ணன்
வயது : பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் வயது




துணைவியார் : காஞ்சனா இராதா கிருஷ்ணன் (மீரா கிச்சன், பாரதியார் ஆகிய தலைப்புகளில் வலைப்பதிபவர், கனரா வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்)

வலைப்பூக்கள் :

கற்க கசடற - அறிவியல், ஆன்மிகம் சமூகம் தொடர்பான கட்டுரைகள்

வள்ளுவன் - திருக்குறளுக்கு இரண்டு வரிகளில் எளிய விளக்கம்

தமிழா...தமிழா.. - அனுபவம், அன்றாட அரசியல், அதிபுத்திசாலி அண்ணாசாமி, வாய்விட்டு சிரிங்க மற்றும் கலாய்த்தல்

பணி : ஸ்டேட் வங்கி (விருப்ப ஓய்வு)


நீண்டகால சாதனை : தனது செளமியா தியேட்டர்ஸ் மூலம் எம்ஆர் இராதா, சோ இராமசாமி ஆகிய பிரபலங்களை வைத்து நாடகம் போட்டு, நாடக உலகில் வலம் வந்து, நாடகத் துறைக்கு வளம் தந்தது, பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்து வருவது, இலக்கிய துறையில் நீண்ட கால அனுபவம்

சமீபத்திய சாதனை : அரசியல்வாதிகளுக்கும், அவர்களது அடாவடி வாரிசுகளுக்கும் வலைப்பூக்களில் அளவான ஆப்பு வைப்பது. எழுத்துக்கள் மூலம் இளைஞர்களின் கவனம் பெற்றுவருவது, அடிக்கடி சூடான இடுகைகளில் இடம் பெறுவது

அடையாளம் : பெரிய மீசை, நேற்று ஓய்வு பெற்ற ஆசிரியர் போன்றும், மெகா சீரியல்களின் அப்பாக்களைப் போன்ற பொலிவான தோற்றம்

வசிக்கும் இடம் : சென்னை, பெசண்ட் நகர்

(பயோடேட்டாவை திருத்த உதவிய இராதா கிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றி)

20 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

வாழ்த்துக்கள்..

Subash சொன்னது…

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

விஜய் ஆனந்த் சொன்னது…

திரு. இராதாகிருஷ்ணன் அய்யாவுக்கு வணக்கங்களும், அவர்தம் பணி்களை மென்மேலும் சிறப்பாகத்தொடர வாழ்த்துக்களும்!!!!

பெயரில்லா சொன்னது…

இவ்வளவு பன்முகத் திறமை உள்ளவர் என்னைப் போல் சாதாரன வலைப்பதிவர்களுக்குப் பின்னூட்டமிடுவதும், அவரது வலையில் இட்ட பின்னூட்டதிற்கு பதில் போடுவதுமாக இருப்பது அவர் மீதான மரியாதையயை அதிகரிக்கிறது.

அவரைப் பற்றி அறியத் தந்த உங்களுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவி அவர்களுக்கு.. எனது பயோடேட்டா பார்த்தேன்..மீண்டும் ஒரு முறை தங்கள் பெருந்தன்மையை நிரூபித்துள்ளீர்கள்.
அவற்றில் சேர்க்க வேண்டிய மேலும் சில விஷயங்கள்.,

நான் State Bank ல் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவன்

எனது மனைவி Canara Bankல் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

தற்சமயம் நான் வசிப்பது பெசண்ட் நகர்.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
வாழ்த்துக்கள்..
//

விக்கி,
ஐயா சார்பில் உங்களுக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சுபாஷ் said...
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

12:56 PM, September 28, 2008
//

சுபாஷ் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
திரு. இராதாகிருஷ்ணன் அய்யாவுக்கு வணக்கங்களும், அவர்தம் பணி்களை மென்மேலும் சிறப்பாகத்தொடர வாழ்த்துக்களும்!!!!

1:23 PM, September 28, 2008
//

விஜய் ஆனந்த் நன்றி, இளைஞர்களின் நல் ஆதரவு தொடர்வதால் நன்றாக தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார். அவருடைய நகைச்சுவை துணுக்குகளை படிக்க மறக்காதிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
கோவி அவர்களுக்கு.. எனது பயோடேட்டா பார்த்தேன்..மீண்டும் ஒரு முறை தங்கள் பெருந்தன்மையை நிரூபித்துள்ளீர்கள்.//

கோவிலுக்குச் சென்றால் சாமிக்கு பூசாரி தீபாரதனைக் காட்டுவார், பக்தர்கள் அதைப்பார்த்து வழிபடுவார்கள், நான் இங்கே தீபாராதனைத்தான் காட்டினேன்.


//அவற்றில் சேர்க்க வேண்டிய மேலும் சில விஷயங்கள்.,

நான் State Bank ல் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவன்

எனது மனைவி Canara Bankல் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

தற்சமயம் நான் வசிப்பது பெசண்ட் நகர்.

நன்றி
//

தகவல்களைச் சேர்த்துவிட்டேன் நன்றி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
இவ்வளவு பன்முகத் திறமை உள்ளவர் என்னைப் போல் சாதாரன வலைப்பதிவர்களுக்குப் பின்னூட்டமிடுவதும், அவரது வலையில் இட்ட பின்னூட்டதிற்கு பதில் போடுவதுமாக இருப்பது அவர் மீதான மரியாதையயை அதிகரிக்கிறது.

அவரைப் பற்றி அறியத் தந்த உங்களுக்கு நன்றி.

2:31 PM, September 28, 2008
//

அண்ணாச்சி,

நீங்கள் சொல்லி இருக்கும் அதே கருத்தின் காரணமாகத்தான் இந்த பயடேட்டாவை எழுதினேன்.

கருத்துக்கு நன்றி அண்ணாச்சி.

சின்னப் பையன் சொன்னது…

//திரு. இராதாகிருஷ்ணன் அய்யாவுக்கு வணக்கங்களும், அவர்தம் பணி்களை மென்மேலும் சிறப்பாகத்தொடர வாழ்த்துக்களும்!!!!//

ரிப்பீட்டே....

ers சொன்னது…

ஐயாவுக்கு வணக்கங்கள்...

பரிசல்காரன் சொன்னது…

ஐயாவுக்கு வணக்கமுங்க!

நசரேயன் சொன்னது…

ஐயாவுக்கு வணக்கம்..
உங்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய வாழ்த்த வயது இல்லாமல் வணங்குகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ச்சின்னப் பையன் said...
//திரு. இராதாகிருஷ்ணன் அய்யாவுக்கு வணக்கங்களும், அவர்தம் பணி்களை மென்மேலும் சிறப்பாகத்தொடர வாழ்த்துக்களும்!!!!//

ரிப்பீட்டே....

10:44 PM, September
//

ச்சின்னப் பையன்,
ஐயா சார்பில் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
ஐயாவுக்கு வணக்கமுங்க!

2:18 AM, September 29, 2008
//

பரிசல்,,

ஐயா சார்பில் உங்களுக்கும் வணக்கம் !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//கோவிலுக்குச் சென்றால் சாமிக்கு பூசாரி தீபாரதனைக் காட்டுவார், பக்தர்கள் அதைப்பார்த்து வழிபடுவார்கள், நான் இங்கே தீபாராதனைத்தான் காட்டினேன்.//

severe cold from yesterday

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
//கோவிலுக்குச் சென்றால் சாமிக்கு பூசாரி தீபாரதனைக் காட்டுவார், பக்தர்கள் அதைப்பார்த்து வழிபடுவார்கள், நான் இங்கே தீபாராதனைத்தான் காட்டினேன்.//

severe cold from yesterday

9:18 PM, September 29, 2008
//
இராதா கிருஷ்ணன் ஐயா,

சொல்வது புரிகிறது. :)

தலைவலி, உடல்வலி, ஜலதோசம், மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணியாக அனாசின் எடுத்துக் கொள்ளுங்கள். அனாசின் தற்பொழுது நான்கு வழிகளில் வேலை செய்கிறது

:)))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

// tamil cinema said...
ஐயாவுக்கு வணக்கங்கள்...

11:48 PM, September 28, 2008
//

ஐயா சார்பில் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
ஐயாவுக்கு வணக்கம்..
உங்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய வாழ்த்த வயது இல்லாமல் வணங்குகிறேன்

3:56 AM, September 29, 2008
//

நசரேயன்,

ஐயா சார்பில் நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்