பெயர் : DR V.Sankar Kumar (VSK)
புனைப் பெயர் : மருத்துவர் ஐயா, VSK, SK
வயது : என் மகள் தாத்தா என்று கூப்பிடும் வயது
வசிக்கும் இடம் : நார்த் காரோலினா, அமெரிக்கா
தொழில் : ஆங்கில மருத்துவர்
துணைத் தொழில் : மூன்றாண்டு காலமாக தொடர்ந்து வலைப்பதிவது, பாட்டு எழுதி பஜனைகளில், பூஜைகளில் பாடுவது
அண்மைய சாதனை : பாலியல் கேள்விகளுக்கு பதில் சொல்லிவருவது (வலையுலக நாராயண ரெட்டி)
நீண்ட நாளைய சாதனை : மயிலை மன்னார் பெயரில் சென்னை மொழியில் திருக்குறள் விளக்கம் மற்றும் திருப்புகழ் பொருள் விளக்கம் எழுதிவருவது
நீண்ட நாள் எரிச்சல் : திமுக ஆட்சி
மிகவும் பிடித்த கவிஞர் : பாரதியார்
மிகவும் பிடித்த பத்திரிக்கையாளர் : சோ ராமசாமி
மிகவும் பிடித்த அரசியல் தலைவர் : விஜய்காந்த்
சிறப்பு குணம் : எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது
பதிவுகள் :
ஆத்திகம் ( அந்தந்த தெய்வங்களுக்கான இந்து பண்டிகைகளில் சிறப்பு பதிவுகள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியல், உள்குத்து அரசியல், அனுபவம், மொழிப்பெயர்ப்பு சிறுகதைகள், கலவைகள், மன்னார் குறள் விளக்கம்)
திருப்புகழ் ( அருணகிரிநாதர் திருப்புகழ்)
கசடற (மருத்துவ துறை சார்ந்த பதிவுகள், தொடர்கள்)
குழுப் பதிவுகள் :
விக்கி பசங்க
கற்பூர நாயகியே கனகவல்லி
முருகனருள்
தமிழ்ச் சங்கம்
நண்பர்கள் : ஆத்திகம் பேசுபவர்கள், விஜய்காந்தை ஆதரிப்பவர்கள், திராவிடம் பேசாதவர்கள்
அன்பான எதிரிகள் : கேஆரஎஸ், கோவியார்
எரிச்சல் அடைவது : ஆத்திகவாதிகள் சிலர் முற்போக்காக எழுதுவது
வாழ்நாள் சாதனை : இதயம் தொட்ட தொடர், எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு ஆகிய தொடர் கட்டுரைகள், இசைஞானி இளைய ராஜாவின் திருவாசகம் வெளியே வர அவருடன் இணைந்து செயல்பட்டது.
பொழுது போக்கு : விஜய் டிவி, பஜனை, அடிக்கடி வீட்டில் நடக்கும் பூஜைக்குக்கு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து சுவையான சிற்றுண்டி வகைகளை செய்து பரிமாறுவது (யாருக்காவது சைவ சிற்றுண்டி வகைகளில் சுவை கூட்டுவதற்கு டிப்ஸ் தேவைப்பட்டால் கேட்கலாம்)
அடையாளம் : மொட்டையுடன் இருந்தால் மகாத்மா காந்தி, முடியுடன் இருந்தால் மருத்துவர் இராமதாஸ்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
41 கருத்துகள்:
//வயது : என் மகள் தாத்தா என்று கூப்பிடும் வயது//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். புகைப்படத்தில் அவர் கட்டுரையாளரை விட இளமையாக தெரிகிறார். :)))))
////துணைத் தொழில் : மூன்றாண்டு காலமாக தொடர்ந்து வலைப்பதிவது, பாட்டு எழுதி பஜனைகளில், பூஜைகளில் பாடுவது///
வருமானம் ஈட்டக்கூடியது மட்டுமே தொழில் என்று விளிக்கப்படும். மற்றதெல்லாம் சேவை எனப்படும்.
அகவே வி.எஸ்.கே அவர்கள் செய்வது சேவை!
அதையே நீங்கள் செய்தால் (அதாவது பதிவுகளில் எழுதுவது) பொழுதுபோக்கு என்று பெயர்
மீக்கு அர்த்தமாயிந்தாண்டி?லேதண்ட்டே செப்பண்டி! மல்ல ஒக்கசாரிக்கு ஒச்சி டிடெய்ல்கா செப்தானண்டி!
நாத்திகம், ஆத்திகம் ரெண்டுக்கும் இடைப்பட்ட எங்களை டாக்டர் சேத்துக்குவாரா?
////நீண்ட நாள் எரிச்சல் : திமுக ஆட்சி////
தவறு. எரிச்சல்பட்டு அவருக்கு என்ன ஆகப்போகிறது? அவர் இங்கே படித்த காலத்தில் இருந்த ஊழலற்ற தமிழகம் இல்லையே என்ற ஆதங்கம் மட்டுமே அவருக்கு உண்டு. காமராஜரும், கக்கனும் அவர் மனைதில் பிடித்த இடத்தை இன்று வரை தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள். அந்த இடத்தை 1967ற்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் எவராலும் பிடிக்க முடியவில்லை? காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
////மிகவும் பிடித்த கவிஞர் : பாரதியார்////
திருவள்ளுவர் மற்றும் கவியரசர் கண்ணதாசன் - ஆகிய இருவரையும் விட்டுவிட்டீர்களே!
/////மிகவும் பிடித்த அரசியல் தலைவர் : விஜய்காந்த்////
அவர் சொன்னரா? நீங்களாக எழுதியிருக்கிறீர்கள். இதற்குப்பெயர்தான் நாகைப்பட்டிணம் குசும்பு!
//////சிறப்பு குணம் : எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது/////
விடுபட்ட சிறப்புக்குணங்கள்: நல்ல பதிவுகளை மனம் திறந்து பாராட்டுவது. யாரையும் மரியாதையுடன் விளிப்பது. ஏகாரத்தில் எந்தப் பதிவும் போடும் கசட்டுத்தன்மை இல்லாதது.
/////பதிவுகள் :
ஆத்திகம் ( அந்தந்த தெய்வங்களுக்கான இந்து பண்டிகைகளில் சிறப்பு பதிவுகள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியல், உள்குத்து அரசியல், அனுபவம், மொழிப்பெயர்ப்பு சிறுகதைகள், கலவைகள், மன்னார் குறள் விளக்கம்)
திருப்புகழ் ( அருணகிரிநாதர் திருப்புகழ்)
கசடற (மருத்துவ துறை சார்ந்த பதிவுகள், தொடர்கள்)////
உள்குத்து அரசியலா?
இதுவும் நாகைக் குசும்பு!
/////எரிச்சல் அடைவது : ஆத்திகவாதிகள் சிலர் முற்போக்காக எழுதுவது/////
ஆத்திகமே முற்போக்கான சிந்தனைதான். அதில் உட்பிரிவு எங்கே இருக்கிறது?
/////வாழ்நாள் சாதனை : இதயம் தொட்ட தொடர், எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு ஆகிய தொடர் கட்டுரைகள்////
இது மட்டும் எப்படி சாதனைப் பட்டியலுக்குள் அடங்கிவிடும்?. உங்களுக்கு அவருடைய பதிவுகள் மூலம் தெரிந்ததை மட்டும் எழுதி, அது மட்டும் வாழ்நாள் சாதனை என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?
அவர், அவருடைய துறைசார்ந்த வேலையில் எத்தனை உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்? - எத்தனை உயிர்கள் அவரை வணங்கிக் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற தகவலை விசாரித்து நீங்கள் இதில் எழுதியிருக்க வேண்டாமா? அதுதானே உயர்த்திச் சொல்லும் சாதனையாகும்?
மதிப்பிற்குரிய பதிவர் திரு.T.V ராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றிய பயோடேட்டா பதிவில் எழுதியதை அவரிடம் திருத்தி வாங்கிப் பதிவிட்டீர்களே - நினைவிருக்கிறதா? அதுபோல வி.எஸ்.கே சார் அவர்களிடமும் திருத்தி வாங்கியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை ராசா? விஜயகாந்த குறுக்கே வந்து தடுத்துவிட்டாரா?
/////பொழுது போக்கு : விஜய் டிவி, பஜனை, அடிக்கடி வீட்டில் நடக்கும் பூஜைக்குக்கு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து சுவையான சிற்றுண்டி வகைகளை செய்து பரிமாறுவது (யாருக்காவது சைவ சிற்றுண்டி வகைகளில் சுவை கூட்டுவதற்கு டிப்ஸ் தேவைப்பட்டால் கேட்கலாம்)//////
பஜனை செய்வது பொழுது போக்கா? உண்மையான பக்தர்கள் காதில் விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
உம்மைப் பழநிமலை உச்சியில் இருந்து உருட்டி விட்டுவிடுவார்கள்.சிங்கப்பூரில் இருப்பதால் தப்பித்தீர்:-))))
சுப்பையா சார்,
இது வீஎஸ்கே ஐயாவின் பயோடேட்டா உங்களது அல்ல.
:)
நண்பருக்காக வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்கள். :)
நன்றி !
ஒண்ணு ஒண்ணுக்கும் மறுமொழி போடுகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்க.
//குடுகுடுப்பை said...
நாத்திகம், ஆத்திகம் ரெண்டுக்கும் இடைப்பட்ட எங்களை டாக்டர் சேத்துக்குவாரா?
10:03 PM, September 30, 2008
//
ஒரு வேடிக்கைத் தெரியுமா ? கருத்தளவில் எனக்கும் வீஎஸ்கே ஐயாவுக்கும் 1 விழுக்காடு கூட கருத்தளவில் உடன்பாடுகிடையாது, ஆனாலும் நாங்க நல்ல நண்பர்கள்.
////அடையாளம் : மொட்டையுடன் இருந்தால் மகாத்மா காந்தி, முடியுடன் இருந்தால் மருத்துவர் இராமதாஸ்/////
வெண்பூ அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுதியுள்ளார்" புகைப்படத்தில் அவர் கட்டுரையாளரை விட இளமையாக தெரிகிறார்" இதையும் சேர்த்துக்கொள்ளவும்: கட்டுரையாளரை விட அழகான தோற்றத்துடனும் இருக்கிறார்
//SP.VR. SUBBIAH said...
////துணைத் தொழில் : மூன்றாண்டு காலமாக தொடர்ந்து வலைப்பதிவது, பாட்டு எழுதி பஜனைகளில், பூஜைகளில் பாடுவது///
வருமானம் ஈட்டக்கூடியது மட்டுமே தொழில் என்று விளிக்கப்படும். மற்றதெல்லாம் சேவை எனப்படும்.
அகவே வி.எஸ்.கே அவர்கள் செய்வது சேவை!
அதையே நீங்கள் செய்தால் (அதாவது பதிவுகளில் எழுதுவது) பொழுதுபோக்கு என்று பெயர்
மீக்கு அர்த்தமாயிந்தாண்டி?லேதண்ட்டே செப்பண்டி! மல்ல ஒக்கசாரிக்கு ஒச்சி டிடெய்ல்கா செப்தானண்டி!
10:02 PM, September 30, 2008
//
வாத்தியார் ஐயா,
தொண்டு என்று சொல்லுங்கள் ! தொழில் நேர்த்தியாக அதைச் செய்வதால் துணைத் தொழில் என்றேன்
// SP.VR. SUBBIAH said...
////மிகவும் பிடித்த கவிஞர் : பாரதியார்////
திருவள்ளுவர் மற்றும் கவியரசர் கண்ணதாசன் - ஆகிய இருவரையும் விட்டுவிட்டீர்களே!
10:09 PM, September 30, 2008
//
சுப்பையா சார்,
நீங்கள் சொல்லும் மற்ற இருவர்களும் பதிவில் வருவார்கள், பதிவு தலைப்பில் இருப்பது பாரதியார் தான். 'நல்லன சொல்வதில் நடுக்கமில்லை'
:)
//SP.VR. SUBBIAH said...
/////மிகவும் பிடித்த அரசியல் தலைவர் : விஜய்காந்த்////
அவர் சொன்னரா? நீங்களாக எழுதியிருக்கிறீர்கள். இதற்குப்பெயர்தான் நாகைப்பட்டிணம் குசும்பு!
10:10 PM, September 30, 2008
//
ஆசானே,
குசும்பல்லாம் இல்லை, நான் சொல்வது 100 விழுக்காட்டு உண்மை. அவர் தேர்த்தல் நேரத்தில் விஜயகாந்துக்குத்தான் பிரச்சார பதிவு எழுதினார்.
//SP.VR. SUBBIAH said...
//////சிறப்பு குணம் : எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது/////
விடுபட்ட சிறப்புக்குணங்கள்: நல்ல பதிவுகளை மனம் திறந்து பாராட்டுவது. யாரையும் மரியாதையுடன் விளிப்பது. ஏகாரத்தில் எந்தப் பதிவும் போடும் கசட்டுத்தன்மை இல்லாதது.
10:12 PM, September 30, 2008
//
ஆசிரியரே,
நீங்கள் சொல்வது பொதுவான சிறப்புகுணம், அது உங்களுக்கும் இருக்கிறது. அவர் என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை வைத்துதான் அதைமட்டும் நான் சிறப்பாகச் சொல்கிறேன்.
//SP.VR. SUBBIAH said...
உள்குத்து அரசியலா?
இதுவும் நாகைக் குசும்பு!
10:15 PM, September 30, 2008
//
இதுவும் குசும்பு இல்லை, உண்மை உண்மை !
:)
//SP.VR. SUBBIAH said...
/////எரிச்சல் அடைவது : ஆத்திகவாதிகள் சிலர் முற்போக்காக எழுதுவது/////
ஆத்திகமே முற்போக்கான சிந்தனைதான். அதில் உட்பிரிவு எங்கே இருக்கிறது?
10:19 PM, September 30, 2008
//
'இன்னுமே இப்படி எழுதுவியா?' ன்னு கேட்டு கேட்டு, மாதவி பந்தலில் கேஆர்எஸ்ஸை கட்டி வைத்து அடித்தார். எனக்கும் கே ஆர் எஸ்ஸுக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். :)
//SP.VR. SUBBIAH said...
இது மட்டும் எப்படி சாதனைப் பட்டியலுக்குள் அடங்கிவிடும்?. உங்களுக்கு அவருடைய பதிவுகள் மூலம் தெரிந்ததை மட்டும் எழுதி, அது மட்டும் வாழ்நாள் சாதனை என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?
அவர், அவருடைய துறைசார்ந்த வேலையில் எத்தனை உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்? - எத்தனை உயிர்கள் அவரை வணங்கிக் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற தகவலை விசாரித்து நீங்கள் இதில் எழுதியிருக்க வேண்டாமா? அதுதானே உயர்த்திச் சொல்லும் சாதனையாகும்?//
எனக்கு தெரிந்ததைத் தானே சொல்ல முடியும். நீங்கள் சொன்ன பிறகு மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டு இருக்கிறேன்.
//மதிப்பிற்குரிய பதிவர் திரு.T.V ராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றிய பயோடேட்டா பதிவில் எழுதியதை அவரிடம் திருத்தி வாங்கிப் பதிவிட்டீர்களே - நினைவிருக்கிறதா? அதுபோல வி.எஸ்.கே சார் அவர்களிடமும் திருத்தி வாங்கியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை ராசா? விஜயகாந்த குறுக்கே வந்து தடுத்துவிட்டாரா?
10:30 PM, September 30, 2008//
அவரிடமும் திருத்தி வாங்கிக் பதியவில்லை. அவரிடம் பதிவிட்டதைக் கூடச் சொல்லவே இல்லை. அவர் தான் படித்துவிட்டு திருத்தினார். உங்களிடம் திருத்தி வாங்கினேனா ?
:)
//SP.VR. SUBBIAH said...
பஜனை செய்வது பொழுது போக்கா? உண்மையான பக்தர்கள் காதில் விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
உம்மைப் பழநிமலை உச்சியில் இருந்து உருட்டி விட்டுவிடுவார்கள்.சிங்கப்பூரில் இருப்பதால் தப்பித்தீர்:-))))
10:34 PM, September 30, 2008
//
ஆசிரியரே,
பஜனை பொழுது போக்கு இல்லையா ? எதாவது பஜனையில் கலந்து கொள்ளுங்கள் பொழுது நல்லாப் போகும், கூடவே போஜனமும் கிடைக்கும் :)
//SP.VR. SUBBIAH said...
////நீண்ட நாள் எரிச்சல் : திமுக ஆட்சி////
தவறு. எரிச்சல்பட்டு அவருக்கு என்ன ஆகப்போகிறது? அவர் இங்கே படித்த காலத்தில் இருந்த ஊழலற்ற தமிழகம் இல்லையே என்ற ஆதங்கம் மட்டுமே அவருக்கு உண்டு. காமராஜரும், கக்கனும் அவர் மனைதில் பிடித்த இடத்தை இன்று வரை தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள். அந்த இடத்தை 1967ற்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் எவராலும் பிடிக்க முடியவில்லை? காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
10:07 PM, September 30, 2008
//
:) நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை.

//வெண்பூ said...
//வயது : என் மகள் தாத்தா என்று கூப்பிடும் வயது//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். புகைப்படத்தில் அவர் கட்டுரையாளரை விட இளமையாக தெரிகிறார். :)))))
9:56 PM, September 30, 2008
//
வெண்பூ,
கட்டுரை ஆசிரியர் கூடவே நிற்பதால் அப்படித்தான் தெரியும்.
:)
அருமையா Bio Data எழுதறீங்க கோவியாரே.
சுப்பையா சார் பின்னோட்டம் எல்லாத்தையும் ரசிச்சேன். (உங்களோட பதிலையும் தான்).
ஆனா அவரை பாத்தா தாத்தா மாதிரி தெரியல !
//மணிகண்டன் said...
அருமையா Bio Data எழுதறீங்க கோவியாரே.
சுப்பையா சார் பின்னோட்டம் எல்லாத்தையும் ரசிச்சேன். (உங்களோட பதிலையும் தான்).
//
நன்றி !
//ஆனா அவரை பாத்தா தாத்தா மாதிரி தெரியல !
//
ஹலோ நீங்க வேற இப்படி சொல்லிட்டிங்க மனுசன் பொண்ணு பார்க்க கிளம்பிடப் போறார், அப்பறம் எனக்கு தான் அம்மாவிடமிருந்து (திருமதி சங்கர் குமார்) திட்டு விழும்.
:)
//SP.VR. SUBBIAH said...
வெண்பூ அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுதியுள்ளார்" புகைப்படத்தில் அவர் கட்டுரையாளரை விட இளமையாக தெரிகிறார்" இதையும் சேர்த்துக்கொள்ளவும்: கட்டுரையாளரை விட அழகான தோற்றத்துடனும் இருக்கிறார்
10:42 PM, September 30, 2008
//
கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்கே, இப்படி சொல்லிட்டு ஜெமினி தாத்தா மாதிரி பொண்ணு தேட ஆரம்பிச்சிடுதிங்க சாமிகளா.
//SP.VR. SUBBIAH said...
ஆத்திகமே முற்போக்கான சிந்தனைதான். அதில் உட்பிரிவு எங்கே இருக்கிறது?
//
ஆத்திகம் முற்போக்கு சரி, அப்போ மதம் ?
வலை போடும் வலைஞர் கோவியார்!
இலைமறை காய்களை அடித்து கீழே விழாமல்
வலைபோட்டுப் பிடித்து விடுவார்.
//////கோவி.கண்ணன் said...
//SP.VR. SUBBIAH said...
ஆத்திகமே முற்போக்கான சிந்தனைதான். அதில் உட்பிரிவு எங்கே இருக்கிறது?
// ஆத்திகம் முற்போக்கு சரி, அப்போ மதம் ?/////
இறைவன் என்பது கடல். மதங்கள் என்பது ஆறுகள். ஆறுகள் எல்லாம் இறைவன் என்னும் கடலில் கலக்கின்றன. இறைவன் ஒருவன்தான். ஆத்மிகம் இறைவனை வணங்குதற்குரிய வழிகாட்டி! இறைவனை அடைவதற்குரிய வழிகாட்டி!
இறைவனை எந்த வடிவில் வேண்டுமென்றாலும் வழிபடலாம். அதற்குத் தடை எதுவும் இல்லை.
சிலர் இறைவனைக் கண்ணன் வடிவில் வழி படுகிறார்கள். சிலர் அவனைப் பழநிஅப்பன் வடிவில் வழிபடுகிறார்கள்.
+++++++++++++++++++++++++++++++++
சிலருக்கு பணம்தான் கடவுள்.
சிலருக்கு சீவா ரீகல் விஸ்கிதான் கடவுள்
சிலருக்கு நமீதாதான் கடவுள்
அதெல்லாம் அறியாமை அல்லது மயக்கத்தில் வருவது.
எல்லாமே மாயை (illusion) என்று உணரும்போது மயக்கம் தீரும்
அல்லது அந்த மயக்கம் தீராமலேயே சிலருடைய கட்டை சிதையில் வெந்து சாம்பலாகும்
அதெல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம்.
அதற்குத்தான் சொல்வார்கள்:
Donkey is always a donkey; donkey will not become a horse.
விளக்கம் போதுமா - கோவியானந்தா?
//இறைவன் என்பது கடல். மதங்கள் என்பது ஆறுகள். ஆறுகள் எல்லாம் இறைவன் என்னும் கடலில் கலக்கின்றன. இறைவன் ஒருவன்தான். ஆத்மிகம் இறைவனை வணங்குதற்குரிய வழிகாட்டி! இறைவனை அடைவதற்குரிய வழிகாட்டி! //
சுப்பையா சார்,
ஒரு உண்மை, ஆறுகள் அசுத்தத்தைத்தான் கடலில் சேர்கின்றன. கடலின் தன்மையை கெடுப்பதில் ஆறுகளுக்கே முக்கிய பங்கு இருக்கிறது. ஆறு கெட்ட நிலையில் தான் கடலில் கலக்கிறது. கிட்டதட்ட சாக்கடை என்னும் வடிவில் தான் ஆறுகள் அனைத்துமே கடலில் கலக்கின்றன.
:))))))
//எல்லாமே மாயை (illusion) என்று உணரும்போது மயக்கம் தீரும்
அல்லது அந்த மயக்கம் தீராமலேயே சிலருடைய கட்டை சிதையில் வெந்து சாம்பலாகும்
அதெல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம்.
அதற்குத்தான் சொல்வார்கள்:
Donkey is always a donkey; donkey will not become a horse.
விளக்கம் போதுமா - கோவியானந்தா?//
இப்படி பொதுவாகச் சொல்லக் கூடாது, மாயை என்று யார் உணர்ந்திருக்கிறார்கள் ? நீங்கள் ? ஏன் சிலர் என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். 99 விழுக்காடு எதோ ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள், நீங்கள் சொல்லும் சில அந்த ஒரு விழுக்காட்டினரா ?
அசுத்த ஆறுகளால் தான் கடலே உப்பானாது. மதங்களால் தான் இறைத் தன்மை பற்றிய புரிதலே சீர்குழைந்தது. நாத்திகம் வளர நாசமாகப் போன மதங்களே தான் காரணம்
- கோவியானந்தா
என்னைப் பற்றிய இந்தப் பதிவுக்கு என் நன்றி, கோவியாரே!.... ஒரு சில முரண்கள் கண்ணில் பட்டாலும், பொதுவாக இது என்னைப் பற்றிய ஒரு சிறந்த அறிமுகம் என்ற வகையில் !
ஆசான் சொல்லிய கருத்துகளுடன் ஒன்றுகிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி!
இரு கழகக் கூட்டணிகளும் வரவேண்டாம் என நினைத்ததாலேயே, கேப்டனைச் சென்ற தேர்தலில் ஆதரித்தேன் என்பது உமக்கும் தெரியும்.
சரி விடுங்க!
ஆறு, மதம் என நீங்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது உண்மை!
தன்னை அறிவதுதான் ஆன்மீகம்.
அதற்கு இந்த மதங்கள் எல்லாம் கொஞ்ச காலம் தேவைப்படுகிறது.
விளாம்பழ ஓடு போல அதனின்று விலகி இனிக்கக் கற்றுக் கொள்ளும் வரையில்.
அதன்பின், அவைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
நீங்கதான் எல்லாம் அறிஞ்சவராச்சே!
உங்களுக்குப் போய் சொல்லிகிட்டு உங்க நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
பெண்ணையும், பேத்தியையும் கேட்டதாகச் சொல்லவும்!
மீண்டும் நன்றி!
//கோவி.கண்ணன் said...
//இறைவன் என்பது கடல். மதங்கள் என்பது ஆறுகள். ஆறுகள் எல்லாம் இறைவன் என்னும் கடலில் கலக்கின்றன. இறைவன் ஒருவன்தான். ஆத்மிகம் இறைவனை வணங்குதற்குரிய வழிகாட்டி! இறைவனை அடைவதற்குரிய வழிகாட்டி! //
சுப்பையா சார்,
ஒரு உண்மை, ஆறுகள் அசுத்தத்தைத்தான் கடலில் சேர்கின்றன. கடலின் தன்மையை கெடுப்பதில் ஆறுகளுக்கே முக்கிய பங்கு இருக்கிறது. ஆறு கெட்ட நிலையில் தான் கடலில் கலக்கிறது. கிட்டதட்ட சாக்கடை என்னும் வடிவில் தான் ஆறுகள் அனைத்துமே கடலில் கலக்கின்றன.
:))))))//
சரியான போட்டி மற்றும் கற்பனை!
//VSK said...
என்னைப் பற்றிய இந்தப் பதிவுக்கு என் நன்றி, கோவியாரே!.... ஒரு சில முரண்கள் கண்ணில் பட்டாலும், பொதுவாக இது என்னைப் பற்றிய ஒரு சிறந்த அறிமுகம் என்ற வகையில் !
//
VSK ஐயா,
நன்றி, இது அறிமுகப் பதிவு அல்ல, எதாவது விழாவின் போது மண்டபங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்வார்களே, அலங்காரம் தான் அறிமுகம் இல்லை.
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்கள் நண்பரை (சுப்பையா சாரை) விட்டுக் கொடுக்காமல் வழி மொழிந்துவிட்டீர்கள். அதற்கும் நன்றி !
நன்றி,
நானெல்லாம் அவருக்கு எதிரி லிஸ்டு தான்னு நினைக்கிறேன்
********அசுத்த ஆறுகளால் தான் கடலே உப்பானாது.***********
உங்க சயின்ஸ் வாத்தியாருக்கு கண்ணு பட்டுடபோகுது. சுத்தி போட சொல்லுங்க !!
//அன்பான எதிரிகள் : கேஆரஎஸ், கோவியார்//
இது முற்றிலும் தவறான தகவலாச்சே! :)
இப்படி எல்லாம் எழுதி பயோ டேட்டாவை, பய-டேட்டா ஆக்கிட்டீங்க அண்ணா!
//ஒரு உண்மை, ஆறுகள் அசுத்தத்தைத் தான் கடலில் சேர்கின்றன//
இல்லை!
ஆறுகள், கனிமங்களையும், மண் வளங்களையும், உப்பையும் தான் கடலில் கலக்கின்றன!
//கடலின் தன்மையை கெடுப்பதில் ஆறுகளுக்கே முக்கிய பங்கு இருக்கிறது//
இல்லை!
ஆறுகளின் தன்மையைக் கெடுப்பதில் சுயநலமான மனிதர்களுக்கே பெரும் பங்கு உள்ளது!
//ஆறு கெட்ட நிலையில் தான் கடலில் கலக்கிறது. கிட்டதட்ட சாக்கடை என்னும் வடிவில் தான் ஆறுகள் அனைத்துமே கடலில் கலக்கின்றன//
பகுத்தறிந்தும் பகுத்தறியாமலும் இருக்கும் தன்னல மகா மனிதர்கள் பல பேர்! அவர்கள் ஒரு போதும் ஆறுகளை உருவாக்குவதில்லை! சாக்கடைகளைத் தான் உருவாக்குகிறார்கள்!
இப்போதெல்லாம் அப்படி உருவாக்கித் தான் ஆறுகளில் கலக்குகிறார்கள்!
ஆனால் ஆறுகள் அப்படி அல்ல!
மனிதன் உருவாக்கும் சாக்கடையைக் கூட, அவன் வாழும் இடத்திலிருந்து விலக்கி, தானே சுமந்து செல்கிறது!
ஆன்மீகமும் அப்படியே!
ஆறும் ஆன்மீகமுமான உங்கள் பார்வை அறிவியல் நோக்கிலும் முற்றிலும் தவறானது கோவி அண்ணா!
எவ்வளவு ஆறுகளை வேண்டுமானாலும் மனிதன் சாக்கடையாக்கலாம்!
ஆனால் எத்தனை ஆறுகள் சேர்ந்தாலும் பெருங்கடல் சாக்கடை ஆகவே ஆகாது!
சரி தானே வாத்தியார் ஐயா? :)
//kannabiran, RAVI SHANKAR (KRS) 10:08 PM, October 13, 2008

kannabiran, RAVI SHANKAR (KRS),
மிகச் சரியான உதாரணம் ஒன்றைக் கூட ஒப்புக் கொள்ள மனமில்லாவிட்டால் சாக்கடையை சுத்தப்படுத்துவோம் என்று கூட நினைக்காமல், சாக்கடையே இல்லை என்று தான் சொல்லுவீர்கள்,
புனித கங்கையின் மீன்கள் முன்பெல்லாம் பிணத்தைத் தான் தின்றனவாம், பிணங்களைத் தின்று தின்று தற்பொழுது ஜீன்களின் மாற்றம் ஏற்பட்டு கங்கையில் குளிப்பவர்களையும் கடித்து சுவைப்பதாக அண்மைய தகவல்.
//பெருங்கடல் சாக்கடை ஆகவே ஆகாது!
//
நானும் ஆறுகளைத்தான் சாக்கடை என்றேன். கடலை அல்ல, கடல் நீரின் சுவையே உ(வர்)ப்பானது ஆறுகளால் தான் என்று உங்களுக்கு ஒப்புக் கொள்ள மனமில்லை. இப்போதும் மீண்டும் அதை மறு உறுதி செய்கிறேன்.
தற்பொழுதும், கடலின் பல்வேறு பயன்பாடாக, அளவாக பயன்படுத்தும் உப்பு முதல் பல பல, பலருக்கு மிகத் தேவையான பயன்பாடுகள் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
கருத்துரையிடுக