எல்லோரும் உடனடியாக சந்திப்பு நடக்க குறித்த இடத்தை, ஜோ வழிகாட்ட அவரது பின்னால் தொடர்ந்தோம்.
ஜோசப் பால்ராஜ் (1) புகைப்படக் கருவியுடன் காட்சி அளித்தார், ஜோ (2), சிங்.ஜெயகுமார் (3), பதிவராகப் போகும் அவரது நண்பர் தெட்சினா மூர்த்தி(4), ஜெகதீசன்(5), பாஸ்கர் (6) (வலைப்பதிவு வாசிப்பாளர்) , அகரம்.அமுதன்(7), முகவை மைந்தன் இராம்(8), சிங்கை நாதன் செந்தில் (9), அழகர்சாமி(10), ஜோதி.பாரதி(11), விஜய்.ஆனந்த்(12), டொன்லி (தயாளன்) (13), கோவி.கண்ணன்(14),ரவிச்சந்திரன்(15)
அனுமதி இல்லாமல் செல்லும் ஒரு சிறு ஊர்வலம் போல அணிவகுத்து செல்ல, அந்தப் பகுதி மக்கள் வியப்போடு பார்த்தார்கள்.
சுமார் மாலை 4.10 மணி அளவில் அந்த இடத்தை அடைந்ததும் பெரும் வியப்பு, அவ்வளவு அமைதியான, இயற்கைச் சூழல் உள்ள இடத்தில் இதுவரை சந்திப்பு நடந்தது இல்லை. சிறிய ஏரியுடன் (குவாரி பள்ளம்) இணைந்த சிறிய மலை (உடைத்தது போதும் என்று அப்படியே இயற்கையாக விட்டுவிட்டார்கள், அந்த சூழலில், ஏரிக்கரையில் சற்று சரிவான பகுதியில் அமர்ந்தோம். ஒவ்வொருவராக அறிமுகத்துடன் பதிவர் சந்திப்பு தொடங்கியது,
'அ' வரிசையில் என்ற கணக்கில் அகரம்.அமுதா பேசினார், பெயர்காரணம், அவரது எழுத்துப் பணியின் நோக்கம் குறித்துச் சொன்னார், ஜோதிபாரதி - அத்திவெட்டி அலசலில் எழுதிவருகிறார், அண்மையில் தமிழ் பிராவகம் என்ற இணைய இதலின் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களைப் பற்றிய கட்டுரைக்கு முதல் பரிசுபெற்றதையும், கவிதைகள் மீதுள்ள ஈடுபாட்டை பகிர்ந்தார். அடுத்து சிங்.ஜெயக்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி எழுதினாராம், தற்பொழுது நேரமின்மையால் வாசிப்புடன் வலையுலகில் எப்போது தொடர்பில் இருக்க்கிறார். அவரது நண்பர் தெட்சனாமூர்த்தி பதிவுகளை வாசித்து வருகிறார், 'மூர்த்தி' என்ற பெயரில் பதிவு ஆரம்பிக்க உள்ளேன் என்றார், பல பதிவர்கள் பொருளோடு சிரித்துக் கொண்டு என்னைப் பார்த்தார்கள் :). அடுத்து தம்பி ஜெகதீசனின் ஆமத்தூர் பற்றிய பகிர்தல், அதன் பிறகு அழகர்சாமி அவரைப் பற்றிய அறிமுகத்துடன் வலைப்பதிவில் வாசிப்பு அனுபவம் பற்றி பகிர்ந்தார். வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் பாஸ்கர், இராம், ஆகியவர்கள் சற்று பெரிய உரைகளை ஆற்றினார்கள், டொன்லி தன்னைப் பற்றிய அறிமுகத்துடன், தாம் ஒரு ஈழத்தமிழர், சிங்கையில் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்றும் குறிப்பிட்டார். முதன் முதலாக ஒரு ஈழத்தமிழ் பதிவரை சந்தித்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி அடுத்து ரவிச்சந்திரன் தனது மரத்தடி எழுத்து (பொன்னி வளவன் ) அனுவங்களையும், கிராமங்களுக்கு கல்வி உதவி செய்யும் அமைப்பை (AIMS India) ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்துவருவதைக் குறிபிட்டார், கேட்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. பிறகு நான், ஜோ, பால்ராஜ் மற்றும் சிங்கைநாதன் பற்றிய அறிமுகங்கள் முடிந்தது.
இடையில் சிங்.ஜெயகுமார், தட்சினாமூர்த்தி மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர்கள் சிற்றூண்டி உணவுகளை அனைவருக்கும் வழங்கும் பொறுப்பை அவர்களாக ஏற்றுக் கொண்டு, பேப்பர் தட்டுகளில் பண்டங்களை வழங்கி, அனைவரின் அன்பையும் பெற்றனர். பஜ்ஜி, வடை, இனிப்பு பூரி, சீனி உருண்டை, ஜோதிபாரதி கொண்டு வந்திருந்த கேசரி, மற்றும் கோக், மிராண்டா, செவன் அப் என பானங்களுடன் தேவையானவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது,
அறிமுகம் முடிந்ததும் மிகுந்து பேசப்பட்டவை தமிழ் மேம்பாடு குறித்தான விவாதங்கள் தான், அதுபற்றி பதிவர் இராம் எழுதுவார், இதில் விடுபட்ட தகவல்களை ஜோசப்பால்ராஜ் எழுதுவார்.
பிள்ளையாரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். எப்படி ? பதிவர் சந்திப்பு நடந்த ஏரிக்கரையில் பிள்ளையார் சதுர்த்திக்கு பிறகு சிறிய பிள்ளையார் சிலையை கொண்டு வந்து போட்டு இருக்கிறார்கள், தண்ணீர் தெளிவாக இருந்ததால் பிள்ளையார் கிடப்பது தெரிந்தது. தண்ணீரில் இருந்து எடுத்துப் பார்த்தோம், வண்ணம் போய் இருந்தது.
சந்திப்பு மாலை 7 மணிக்கு முடிவுற்றது, அதன் பிறகு தேனீர் கடையில் தேனிர் வாங்கிக் கொண்டு சுமார் 8 பதிவர்களுடன் அருகில் இருந்த விளையாட்டு மைதனாத்தில் தொடந்தது, அதில் ஜோ, நான் மற்றும் விஜய் ஆனந்த் மதங்களின் உள்விவகாரங்கள் பற்றி முவருக்குள் பேசினோம். அங்கிருந்து சுமார் இரவு 9 மணிக்கு 5 பேராக டாக்சியில் குட்டி இந்தியாவை அடைந்து இரவு 10 மணி வரை பேசிக் கொண்டு இருந்து விடைபெற்றோம்.
மேலும் பதிவர்களின் பெயருடன் கூடிய படங்கள்
இந்த வரலாறு காணாத சிங்கைப் பதிவர் சந்திப்பை அருமையாக ஏற்பாடு செய்து வழி நடத்திய பதிவர் ஜோசப் பால்ராஜுக்கு கலந்து கொண்ட பதிவர்கள் சார்பில் நன்றி.
39 கருத்துகள்:
அடேங்கப்பா
தலைவா பொறாமையா இருக்கு இப்பல்லாம் சென்னைல கூட இப்படிலாம் சந்திப்பு நடக்கறதில்ல
கலக்கல்
கலக்குங்க :-)
நிழல் படத்துல இருக்குறவங்க இன்னன்னார்னு சொல்லி ஒரு படம் போட்டாத் தேவலை...
நான் ஒரு குருடன்... அதான் தொடுப்பு இருக்கே....
தவிர்க இயலாத வேலையின் நிமித்தமாக கிரியும், பாரி.அரசும் வரவில்லை. ஜோஸ் பெனடிக்ட் ( எல் எல் தாஸ்), மகேஷ், கிஷோர் போன்றவர்கள் இந்தியா சென்றுவிட்ட காரணத்தால் வர இயலவில்லை. அப்படி அவர்களும் எல்லாரும் வந்திருந்தால் இன்னும் மிகப் பெரிய சந்திப்பாக இருந்திருக்கும்.
சிங்கை பதிவர் சந்திப்பு படங்கள் எல்லாம் கீழ்கண்ட வலைப் பூவில் இரு பதிவுகளாக இணைக்கப்பட்டுள்ளன.
http://thirdeye-joseph.blogspot.com/
//இந்த வரலாறு காணாத சிங்கைப் பதிவர் சந்திப்பை அருமையாக ஏற்பாடு செய்து வழி நடத்திய பதிவர் ஜோசப் பால்ராஜுக்கு கலந்து கொண்ட பதிவர்கள் சார்பில் நன்றி.//
எனக்கு எதுக்குண்ணே நன்றியெல்லாம். இந்த முறை எல்லோரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டார்கள். இனிவரும் சந்திப்புகள் எல்லாம் இதைவிட மிக பிரமாண்டமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கிரி நீங்க கலந்துக்கலயா?
ஒரு அருமையான சந்திப்பு.இத்தனை பேர் வருவார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை.புதியவனாக இருந்தாலும் என்னையும் அன்புடன் இணைத்துக்கொண்டமைக்கு நன்றிகள்...!
அற்புதமான இடத்தில் அருமையான நண்பர்களுடன் சந்திப்பு. அதுவும் முன்னரே முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டு வார இறுதியின் ஒரு மாலை முழுவதும் வலையுலக நண்பர்களுடன். பொறாமையாத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்.
பொறாமையா இருக்குங்க. அடிக்கடி சந்திக்கிறீங்க.
//புதுகை.அப்துல்லா said...
கிரி நீங்க கலந்துக்கலயா?//
இல்லைங்க அப்துல்லா ..நான் அடுத்த வாரம் ஊருக்கு வருவதால் திடீர்னு BCP(Business Continuity Plan) டெஸ்ட் இந்த வாரம் மாத்திட்டாங்க..:-( அதனால கலந்துக்க முடியாம போச்சு
வாழ்த்துக்கள் கோ.வி-ஜி!
சந்திப்புக்கும்...
உங்க வலைப்பூ முதல் பத்து இடங்களுக்குள் வந்ததற்கும்!
(என்னோட எஸ்.எம்.எஸ் வந்துச்சா?)
:)
konjam late
anputan
singai nathan
//ஜோசப் பால்ராஜ் முதல் ஆளாக 2:45 மணிக்கே சென்றுவிட்டார், அதன் பிறகு இளம் சிங்கம் ஜெகதீசன், இளம் புயல் விஜய் ஆனந்த் ஆகியோர் 3 மணிக்கு கூடிவிட்டனர்.//
பால் மனம் பால்ராஜ், புன்னகை மன்னன் ஜெகதீசன், இளம்புயல் விஜய் ஆனந்த்
ஆகியோருக்கும் மற்றும் மாநாட்டை சிறப்பித்த மற்ற பதிவர்களுக்கும் நன்றி!
//நண்பர் தெட்சனாமூர்த்தி பதிவுகளை வாசித்து வருகிறார், 'மூர்த்தி' என்ற பெயரில் பதிவு ஆரம்பிக்க உள்ளேன் என்றார், பல பதிவர்கள் பொருளோடு சிரித்துக் கொண்டு என்னைப் பார்த்தார்கள் :).//
இவர் பொள்ளாச்சி இளைஞர் (இளநீரும் புகழ் கொடுக்கும் பொள்ளாச்சிக்கு). இவரும் புகழ் கொடுப்பார் என்று நம்புவோம்.
நம் ஈழத்து சகோதரன் தயாளனைச் சந்த்தித்து அளவளாவியதில் மகிழ்ச்சி!
அகரம் அமுதாவின் வெண்பாவின் வீரியம் வியக்க வைத்தது.
முகவை ராமின் முயற்சிகளுக்கு வானமே எல்லை! நண்பர்களோடு இணைந்து திருக்குறள் உரை, இராமாயணத்தை வெண்பாவில் புனையும் முயற்சி! வாழ்த்துக்கள் ராம்!
ஜோவின் வியட்நாமில் மதுரைவீரன்(ஆனந்த விகடனில் வெளிவந்தது) போன்ற சுவாரஸ்யமான கலந்துரையாடல். நாஞ்சில் மண்ணில் பிறந்த கடற்புரத்து முத்து!
பொன்னி வளவனாக திண்ணையில் எழுதிய மூத்த பதிவர் சமூக சேவகர் இரவிச்சந்திரன் பதிவர் சந்திப்பிற்கு பெருமை சேர்த்தார்.
சிங் செயக்குமாரின் சிறப்பான அரவணைப்பு, உபசரிப்பு. நீங்கள் மீண்டும் எழுத வேண்டும்.
ஆவி பறக்க பஜ்ஜி கொண்டு வந்த கோவியாரோ, தன்னைப் பற்றிய அறிமுகத்தில் அதிகம் அவரைப் பற்றி தெரிவிக்கவில்லை என்று ஒரு சில பதிவர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து பதிவுகளைப் படியுங்கள் என்று தேற்றி அனுப்ப வேண்டியதாகிவிட்டது.(அவரைப் பற்றி சொல்லித்தான் தெரியனுமா என்ன?)
திரு பாஸ்கர், அழகர்சாமி ஆகியோரும் விவாதங்களில் பங்கெடுத்தனர்.
ஜோசெப் பால்ராஜ் அவர்கள் செய்துவரும் சமூக சேவையை பற்றி அறிந்து நெகிழ்ச்சியடைந்தேன்.
:))
கலக்குங்க...
நான் தான் வரமுடியாமப் போயிருச்சி.. :P
என் புகைப்படத்தைப் போடாமல் புறக்கணித்த கோவியாருக்கு இன்னும் யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதற்கு கடும் கண்டனங்கள்!!!!
ஜோதிபாரதி,
விடுபட்ட தகவல்களை அள்ளி வழங்குவதற்கு மிக்க நன்றி !
//ஜெகதீசன் said...
என் புகைப்படத்தைப் போடாமல் புறக்கணித்த கோவியாருக்கு இன்னும் யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதற்கு கடும் கண்டனங்கள்!!!!
//
என்படமும் இல்லை !
:(
எதார்த்த பேச்சுடன் தகவல் களஞ்சியமாக தெரிந்தார் திரு. சிங்கை நாதன்.
உலகத் தமிழ்ப் பதிவர்கள் மாநாடுகளிலேயே அதிகமான பதிவர்கள் கலந்துகொண்ட மாநாடு இந்த மாநாடாகத் தான் இருக்கும்.
அனைவருக்கும் நன்றி!(நன்றி நவில்தல் இங்கதான் நடக்குது)
ஜோதிபாரதிக்கு அலுவலகத்தில் இன்று ஆணி எதும் இல்லைன்னு நல்லாத் தெரியுது...:P
ஆஹா..... புள்ளையார் வந்துட்டாரா? பேஷ் பேஷ். இதுதான் சம்மன் இல்லாம ஆஜர் ஆவதா? :-)))))
சிங். செயகுமார் கவுஜ எழுதுபவர். மீண்டும் எழுத வரணும் ( எனக்குக் கவுஜ அவ்வளவாப் புரியாது அதனால் அவ்வளவாப் பிடிக்காது)
பதினைஞ்சுபேருக்கே வரலாறுன்னா எப்படி?
சமீபத்தில் (ஒரு நாலுவருசம் முந்தி) ஒரு இருபதுபேர் கலந்துக்கிட்ட கூட்டம் நடந்துருக்கு:-))))
//துளசி கோபால் said...
பதினைஞ்சுபேருக்கே வரலாறுன்னா எப்படி?
சமீபத்தில் (ஒரு நாலுவருசம் முந்தி) ஒரு இருபதுபேர் கலந்துக்கிட்ட கூட்டம் நடந்துருக்கு:-))))
11:12 AM, September 22,
//
எதோ சின்னப்பசங்க பெருமை படட்டுமே என்று விட்டு பிடித்து இருக்கலாமே :)
//துளசி கோபால் said...
ஆஹா..... புள்ளையார் வந்துட்டாரா? பேஷ் பேஷ். இதுதான் சம்மன் இல்லாம ஆஜர் ஆவதா? :-)))))
சிங். செயகுமார் கவுஜ எழுதுபவர். மீண்டும் எழுத வரணும் ( எனக்குக் கவுஜ அவ்வளவாப் புரியாது அதனால் அவ்வளவாப் பிடிக்காது)
பதினைஞ்சுபேருக்கே வரலாறுன்னா எப்படி?
சமீபத்தில் (ஒரு நாலுவருசம் முந்தி) ஒரு இருபதுபேர் கலந்துக்கிட்ட கூட்டம் நடந்துருக்கு:-))))//
பதிவு செய்திருந்தால் தொடுப்பானைக் கொடுக்கலாமே!
கருப்பு பூனையும் அழகுதான்!
//ஜெகதீசன் said...
ஜோதிபாரதிக்கு அலுவலகத்தில் இன்று ஆணி எதும் இல்லைன்னு நல்லாத் தெரியுது...:P//
ஞானிகள் பணி செய்யும் இடத்தில் ஆணி ஏது?
எழுத்தாணியே எங்கள் பணி!
அருமையான சூழலில் நடந்த இனிமையான சந்திப்பு.
நீண்ட அனுபவம் மிக்க ,அனைவரையும் ஊக்கப்படுத்திய ரவிச்சந்திரன் ,பெயருக்கேற்ற புன்னகை ஜோதியோடு திகழ்ந்த ஜோதிபாரதி ,கோவில் பட்டி அழகர்சாமி ,ஈழத்து சொந்தம் தயாளன் ,பொள்ளாச்சி தட்சணா மூர்த்தி ,கடலூருக்கே உரித்தான கலகலப்புடன் தம்பி விஜய் ஆனந்த் போன்றவர்களை முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி .
//ஜோ / Joe said...
அருமையான சூழலில் நடந்த இனிமையான சந்திப்பு.
நீண்ட அனுபவம் மிக்க ,அனைவரையும் ஊக்கப்படுத்திய ரவிச்சந்திரன் ,பெயருக்கேற்ற புன்னகை ஜோதியோடு திகழ்ந்த ஜோதிபாரதி ,கோவில் பட்டி அழகர்சாமி ,ஈழத்து சொந்தம் தயாளன் ,பொள்ளாச்சி தட்சணா மூர்த்தி ,கடலூருக்கே உரித்தான கலகலப்புடன் தம்பி விஜய் ஆனந்த் போன்றவர்களை முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி .
//
ஜோ,
உங்களைப் பற்றியும், நீங்கள் பேசிய விவாதங்களை இங்கே நான் குறிப்பிடவில்லை, உங்களைப் பற்றி பலருக்கும் தெரியும், அது மட்டுமா ?
நிலவின் எந்த பகுதி குளிர்ச்சியானது ? என்ற கேள்விக்கு பதில் சொல்வது கஷ்டம் தானே. :)))
//எதோ சின்னப்பசங்க பெருமை படட்டுமே என்று விட்டு பிடித்து இருக்கலாமே :)//
விட்டுருக்கலாம்தான். ஆனால் இந்தப் பாழும் மனசு அப்பப்பத் தம்பட்டத்தைத் தூக்கிருதே!!!!!
இங்கே பாருங்க
//துளசி கோபால் said...
//எதோ சின்னப்பசங்க பெருமை படட்டுமே என்று விட்டு பிடித்து இருக்கலாமே :)//
விட்டுருக்கலாம்தான். ஆனால் இந்தப் பாழும் மனசு அப்பப்பத் தம்பட்டத்தைத் தூக்கிருதே!!!!!
இங்கே பாருங்க
11:34 AM, September 22, 2008
//
தகவலுக்கு நன்றி, படிச்சுப்பார்த்தேன் எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க, அவங்களெல்லாம் இப்ப என்ன் ஆனாங்க, அதில் குறிப்பிட்டு இருப்பதில் சிங்கை நாதனும், நீங்களும் மட்டும் தான் வலையுல தொடர்போடு இருக்கிங்க.
நல்ல முயற்சி, அது வெற்றி அடைந்ததற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மாதிரி சந்திப்புகள் சிங்கை மட்டுமல்லாமல் உலகு எங்கிலும் உள்ள நாம் இணைய தள தமிழ் நண்பர்கள் அவர்கள் இருக்கும் இடங்களிலே சந்திக்க ஒரு முன் உதாரணமாய் இருக்கும் என நம்புகிறேன்.
//சமீபத்தில் (ஒரு நாலுவருசம் முந்தி) ஒரு இருபதுபேர் கலந்துக்கிட்ட கூட்டம் நடந்துருக்கு:-)))) //
அது உங்களுக்ககாக கூடியது ;)
come again we will make history .
//ஆஹா..... புள்ளையார் வந்துட்டாரா//
எனக்கு நீங்கள் தான் நினைவிற்கு வந்தீர்கள்
//எதார்த்த பேச்சுடன் தகவல் களஞ்சியமாக தெரிந்தார் திரு. சிங்கை நாதன்//
First half ok . Second half no comments :)
anputan
singai nathan
போங்கண்ணே, பதிவு வரும், வரும்னு நேத்து இரவு வரை காத்திருந்து தூங்கப் போனதுக்கு அப்புறம் போட்டிருக்கீங்க. கொஞ்சம் ஆணி, திரும்ப வர்றேன்.
ஆத்துல போட்ட புள்ளையாரை வெளீல எடுத்ததுயாரு?
தெய்வகுத்தம்னேன்.
யாரு எடுத்தாகளோ, அவிக வீட்டு வாசல்ல, செருப்ப தொங்க விட்டு, கறுப்பு பொட்டு வெக்க சொல்லுங்க. சொல்லிப்புட்டேன்
;)
அண்ணே இனிம சந்திப்பு நடக்கவில்லை என்றால் மட்டும் பதிவு போடுங்க!!!
//
SurveySan said...
ஆத்துல போட்ட புள்ளையாரை வெளீல எடுத்ததுயாரு?
தெய்வகுத்தம்னேன்.
யாரு எடுத்தாகளோ, அவிக வீட்டு வாசல்ல, செருப்ப தொங்க விட்டு, கறுப்பு பொட்டு வெக்க சொல்லுங்க. சொல்லிப்புட்டேன்
;)
//
சர்வே,
இந்த கமெண்ட்டை டெலிட் செய்ய முடியுமா? ஏன்னா, அப்புறம் நான் தான் சர்வேசனோன்னு யாராவது சந்தேகப்பட்டுடப் போறாங்க...
(ஹிஹிஹி... அந்தப் பிள்ளையார் தண்ணியை விட்டு வெளிய வந்ததும் நானும் இதைத் தான் சொன்னேன்...):P
//குசும்பன் said...
அண்ணே இனிம சந்திப்பு நடக்கவில்லை என்றால் மட்டும் பதிவு போடுங்க!!! //
பொறாமை, பொறாமை.
//ஜெகதீசன் said...
//
SurveySan said...
ஆத்துல போட்ட புள்ளையாரை வெளீல எடுத்ததுயாரு?
தெய்வகுத்தம்னேன்.
யாரு எடுத்தாகளோ, அவிக வீட்டு வாசல்ல, செருப்ப தொங்க விட்டு, கறுப்பு பொட்டு வெக்க சொல்லுங்க. சொல்லிப்புட்டேன்
;)
//
சர்வே,
இந்த கமெண்ட்டை டெலிட் செய்ய முடியுமா? ஏன்னா, அப்புறம் நான் தான் சர்வேசனோன்னு யாராவது சந்தேகப்பட்டுடப் போறாங்க...
(ஹிஹிஹி... அந்தப் பிள்ளையார் தண்ணியை விட்டு வெளிய வந்ததும் நானும் இதைத் தான் சொன்னேன்...):P//
பிள்ளையாரை "தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா!"(நன்றி:பாரதி)
பதிவர்கள் சந்திப்பை சிறப்பாக ஒருங்கினைத்து நடத்தி, படங்களுடன் கவர் செய்த நண்பர்கள் கோவி.கண்ணன், ஜோசப் பால்ராஜுக்கு நன்றி!. நான் சிங்கைக்கு திரும்பி வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இதுவரை நடந்த பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த பதிவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பதிவுலக நண்பர்களை சந்தித்து பேசி மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
ஜொசப் பால்ராஜ் செய்து வரும் சமூக சேவைககளுக்கு பாரட்டுகள்.
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
கருத்துரையிடுக