'வி'னா 'வா'னா விவாகரத்தில் வடிவேலு அதுவும் சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த்துக்கு குடை பிடித்தவர் அவரை எதிர்த்து தேர்த்தலில் போட்டி இடுவேன் என்பதும் அதற்காக கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறுவதெல்லாம் சரியா ? என்பது போல் சில கருத்துக்களை சில இடங்களில் படிக்க நேர்ந்தது.
இந்த அளவீட்டில் பார்த்தால் விஜயகாந்த் கலைஞர் காலில் பொது நிகழ்ச்சியில் பலமுறை விழுந்து இருக்கிறார். கலைஞருடன் அரசியலுக்கு ஆதரவளித்து தன்னை திமுக ஆதரவாளனாகவே காட்டிக் கொண்டு இருந்தார். இப்போதெல்லாம் அவர் கலைஞருக்கு கொடுக்கும் மதிப்பு எல்லோரும் அறிந்தது தான். மூத்த அரசியல் வாதி, வயதானவர் என்பதைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாது, விஜயகாந்த் செய்தி இதழ்களுக்கு பேட்டி அளிக்கையில் கைதேர்ந்த அரசியல் வாதியாக மட்டுமே தெரிகிறாரேயன்றி, நலமான அரசியல் நடத்துபவராகத் தெரியவில்லை.
அரசியல் என்று இறங்கிவிட்டாலே முன்பு தெரிந்தவர், மூத்தவர், குடைபிடித்தவர் என்றெல்லாம் கிடையாது, போர்களத்தில் எதிரே நிற்பவர் போன்று தான், இது தவறுதான் என்றாலும் விஜயகாந்த் இதைச் சரியாகச் செய்கிறார். வடிவேலு அப்படி செய்யக் கூடாது என்பது மட்டும் என்ன ஞாயம் ?
வடிவேலுக்கு தகுதி இருக்கிறதா ? என்பது போல் கேட்கப்படும் கேள்விகளெல்லாம் நிராகரிக்கப் படவேண்டியவை. வடிவேலு அரசியலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக இருப்பதும் அவருடைய விருப்பம், நாட்டின் கடைசி குடிமகன் வரையிலும் அரசியலுக்கு வரும் தகுதி இருக்கிறது. தகுதி, திறமை, முன்பு இப்படி இருந்தாயே என்பது போல் பேசுவதெல்லாம் ஆண்டை மனப்பான்மையே. அரசியலில் மேலே வந்தவர்களில் பலர் விபத்தாக வந்தவர்கள், போட்டியில் வந்தவர்கள், வாரிசாக வந்தவர்கள் என்றெல்லாம் இருக்கிறது, யாருமே பிறவி அரசியல் வாதியாகப் பிறக்கவில்லை.
விஜய்காந்துக்கு கலைஞரைக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறதோ, அதே தகுதி வடிவேலுவுக்கும் உண்டு !
வடிவேலு தொடர்ந்து கைப்புள்ளையாக, நகைச்சுவை நடிகராக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
36 கருத்துகள்:
அரசியல் என்று இறங்கிவிட்டாலே முன்பு தெரிந்தவர், மூத்தவர், குடைபிடித்தவர் என்றெல்லாம் கிடையாது, போர்களத்தில் எதிரே நிற்பவர் போன்று தான், இது தவறுதான் என்றாலும் விஜயகாந்த் இதைச் சரியாகச் செய்கிறார். வடிவேலு அப்படி செய்யக் கூடாது என்பது மட்டும் என்ன ஞாயம் ?''''''''
அப்படி போடுங்க அருவாள?
//வி'னா 'வா'னா விவாகரத்தில் வடிவேலு அதுவும் சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த்துக்கு குடை பிடித்தவர் அவரை எதிர்த்து தேர்த்தலில் போட்டி இடுவேன் என்பதும் அதற்காக கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறுவதெல்லாம் சரியா ? என்பது போல் சில கருத்துக்களை சில இடங்களில் படிக்க நேர்ந்தது.//
இம்மாதிரி அவருடைய தகுதியைக் குறைச்சொல்லி எழுதுவது முட்டாள்தனம்.ஹீரோவாக நடித்தவர்தான் அரசியலுக்கும்,நாடாளுவதற்க்கும் தகுதியானவர் என்று நினைப்பதே அபத்தம்.ஆனால் வடிவேலுவும் தன்னைப் பார்த்து ஜனங்கள் சிரித்து ரசிப்பதாலேயே தனக்கு ஓட்டு விழும் என்று நம்பி ஆவேசப் பேட்டி கொடுப்பதும் தமாஷாகத்தான் இருக்கிறது.அவர் இருக்கிற பிழைப்பை கெடுத்துக் கொள்வதாகத்தான் தெரிகிறது.அவருக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது.விஜயகாந்த் போல மார்க்கெட் காலியான பிறகு அரசியலுக்கு வந்தால் போதும்.
//வடிவேலு தொடர்ந்து கைப்புள்ளையாக, நகைச்சுவை நடிகராக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.//
ததாஸ்து! ததாஸ்து!
//வடிவேலுவும் தன்னைப் பார்த்து ஜனங்கள் சிரித்து ரசிப்பதாலேயே தனக்கு ஓட்டு விழும் என்று நம்பி ஆவேசப் பேட்டி கொடுப்பதும் தமாஷாகத்தான் இருக்கிறது.அவர் இருக்கிற பிழைப்பை கெடுத்துக் கொள்வதாகத்தான் தெரிகிறது//
கொஞ்சம் தலைக்கணமும் இருப்பதாகத் தோன்றுகிறது!
இப்படியே கைப்புள்ளையாகவே காலத்தைத் தள்ளினால் நன்றாக இருக்கும்!
//கொஞ்சம் தலைக்கணமும் இருப்பதாகத் தோன்றுகிறது!//
:)
//இம்மாதிரி அவருடைய தகுதியைக் குறைச்சொல்லி எழுதுவது முட்டாள்தனம்.ஹீரோவாக நடித்தவர்தான் அரசியலுக்கும்,நாடாளுவதற்க்கும் தகுதியானவர் என்று நினைப்பதே அபத்தம்.ஆனால் வடிவேலுவும் தன்னைப் பார்த்து ஜனங்கள் சிரித்து ரசிப்பதாலேயே தனக்கு ஓட்டு விழும் என்று நம்பி ஆவேசப் பேட்டி கொடுப்பதும் தமாஷாகத்தான் இருக்கிறது.அவர் இருக்கிற பிழைப்பை கெடுத்துக் கொள்வதாகத்தான் தெரிகிறது.அவருக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது.விஜயகாந்த் போல மார்க்கெட் காலியான பிறகு அரசியலுக்கு வந்தால் போதும்.
//
:)))))))) சரிதான்
அகில உலக வருத்தப்படாத வாலிபர் முன்னேற்ற கழகத்தின் கொ.ப.செ நீங்கதான்னு பதிவுலகத்தில பல கிசுகிசுக்கள் வருதே உண்மையா
//அதிஷா said...
அகில உலக வருத்தப்படாத வாலிபர் முன்னேற்ற கழகத்தின் கொ.ப.செ நீங்கதான்னு பதிவுலகத்தில பல கிசுகிசுக்கள் வருதே உண்மையா
//
:)
அது வவாசங்க குழு ! சிபி கூட பல்வேறு தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
//tamil cinema said... அப்படி போடுங்க அருவாள?//
வேலு அருவா வேலு ஆகிட்டார்
//நாமக்கல் சிபி said...
கொஞ்சம் தலைக்கணமும் இருப்பதாகத் தோன்றுகிறது!
இப்படியே கைப்புள்ளையாகவே காலத்தைத் தள்ளினால் நன்றாக இருக்கும்!
10:22 PM, September 24, 2008//
ரிப்பீட்டே....! அவர் அதில் ஈடுபாடு காட்டினால் கட்டதுரையால் ஆபத்தை எதிர்நோக்குவார் :)
இந்தக்கொடுமைய எங்க போய் சொல்றது.
\\வடிவேலு அப்படி செய்யக் கூடாது என்பது மட்டும் என்ன ஞாயம் ?
\\
நல்ல கேள்வி. உங்க ஒப்பனிங்கும் பினிஷிங்கும் நல்லாயிருக்கு
கோவி,
மத்ததெல்லாம் சரிதான்.
//மூத்த அரசியல் வாதி, வயதானவர் என்பதைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாது, விஜயகாந்த் செய்தி இதழ்களுக்கு பேட்டி அளிக்கையில் கைதேர்ந்த அரசியல் வாதியாக மட்டுமே தெரிகிறாரேயன்றி, நலமான அரசியல் நடத்துபவராகத் தெரியவில்லை.//
நீங்கள், கலைஞர் மூத்த அரசியல்வாதி, வயதானவர் என்பதால் அவரை எதிர்த்து எப்படி நலமான அரசியல் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?!;-)
//நீங்கள், கலைஞர் மூத்த அரசியல்வாதி, வயதானவர் என்பதால் அவரை எதிர்த்து எப்படி நலமான அரசியல் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?!;-)//
எல்லோரும் நலமான அரசியல் நடத்தவேண்டும் என்றே விரும்புவார்கள், இங்கு கலைஞரைக் குறிப்பிட்டதற்கு காரணம் அவர் முன்பு கலைஞருடன் நெருக்கமாக இருந்தவர், விஜய்காந்த் கலைஞரை தனது அரசியல் ஆசான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவ்வாறு சொல்லியவர் அதற்கு மதிப்பு எதையும் தற்போது கொடுப்பது போல் தெரியவில்லை என்றேன்.
நலமான அரசியல் உங்களுக்கு விருப்பம் இல்லாதா ஒன்றா ?
வடிவேலு தொடர்ந்து கைப்புள்ளையாக, நகைச்சுவை நடிகராக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.
//
இதுக்கெல்லாம் பயப்பிடுற மானா அவரு
சிங்கமுலல
கட்டதுரைக்கே பயப்பிடாமல் சிங்கிளாவே சமாளிச்சவரு விஜயகாந்த் எம்மாத்திரம் :)
இதுக்கெல்லாம் பயப்பிடுற மானா அவரு
சிங்கமுலல
கட்டதுரைக்கே பயப்பிடாமல் சிங்கிளாவே சமாளிச்சவரு விஜயகாந்த் எம்மாத்திரம் :)
///
அடேய்
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமா இருக்கு உடம்பு :)
வடிவேலுக்குமட்டுமில்லை..விஜய்காந்திற்கு மட்டுமில்லை..ஒவ்வொரு குடிமகனுக்கும்..எதைப்பற்றி வேண்டுமானாலும் கனவு காணும் உரிமையும் உள்ளது.
சுப்பர் தல !!
நம்ம அடுத்த பதிவுக்கு லிங்க் ரெடி :-)
அண்ணே, அருமையான பதிவு.
ஆனா நம்ம தமிழ் மக்கள் கதாநாயகர திரையில நல்லவரா நடிச்சவரு உண்மையிலயும் நல்லவராத்தான் இருப்பாருன்னுல்ல நம்புரவங்க.
எம்.என்.நம்பியார் வில்லானவே நடிச்சவரு, எம்.ஜி.ஆர் கதாநாயகனாவே நடிச்சவரு. திரைக்கு அப்பால் இவங்க ரெண்டு பேரையும் ஒப்பிட்டா யாரு நல்லவருன்னு நமக்கு தெரியும். ஆனா நிசத்துல நடந்தது என்ன? எம்.ஜி.ஆரு தானே நாடாண்டுட்டு போனாரு?
சாதாரண இன்ஸ்பெக்டர் வேசத்துல நடிச்சாலும், போலிஸ் மீட்டிங் காட்சியில எல்லாம் கண் சிவக்க விசயகாந்து பேசுற வசனமெல்லாம் உண்மையின்னு நம்புற ஆளுங்க நிறைய பேரு இருக்காங்கள்ல? ஆனா வடிவேலுவ வெறும் அடிவாங்குறவறாத்தானே பார்ப்பாய்ங்க? வடிவேலுக்கு கிடைக்கிற கைத்தட்டல் எல்லாம் அவரு வித விதமா அடிவாங்குறதுக்கும் , அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு ஒரு அழுகை அழுவாறே அதுக்கும் தான். இத அவரு புரிஞ்சுக்கணும்.
தன் கண்ணுலயும், கட்சியிலயும் இருக்க குப்பைய துடைச்சு சுத்தம் பண்ணிட்டு விசயகாந்த் மத்தவங்கள குத்தம் சொல்லட்டும். வி யும் சரியில்ல. வ வும் சரியில்ல. இதுகள பத்தி இதுக்கு மேலயும் பேசுறது நமக்கும் சரியில்ல.
சொல்லும் விதயம் சரி.
ஆனால் வடிவேலுவின் பேட்டியில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிகிறது.அதைக் கவனித்தீர்களா?
வி.கா.முதலில் முன் ஜாமீன் விண்ணப்பித்தவர் இப்போது அதை ரத்து செய்ய விண்ணப்பித்திருக்கிறார்...முழு அரசியல்!
வாண வேடிக்கைகள் காத்திருக்கின்றன என்பது மட்டும் தெரிகிறது...
யப்பா விசயகாந்தந்துக்கு அவரு நடிச்ச வல்லரசு படத்த ஒரு பத்து வாட்டி போட்டு காமிங்கப்பா
//
இந்த அளவீட்டில் பார்த்தால் விஜயகாந்த் கலைஞர் காலில் பொது நிகழ்ச்சியில் பலமுறை விழுந்து இருக்கிறார். கலைஞருடன் அரசியலுக்கு ஆதரவளித்து தன்னை திமுக ஆதரவாளனாகவே காட்டிக் கொண்டு இருந்தார். இப்போதெல்லாம் அவர் கலைஞருக்கு கொடுக்கும் மதிப்பு எல்லோரும் அறிந்தது தான்.
//
தி.மு.க தலைவருக்கு விஜயகாந்த் என்ன மரியாதை கொடுக்காமல் விட்டுவிட்டார்? வி.கா. தி.மு.க ஆதரவாளராக காட்டிக்கொண்டு இருந்தது உண்மையே. ஆனால், மாற்றம் என்பது எல்லாருக்கும் உண்டு. அவர் ஒன்றும் தி.மு.க கூட்டணியில் இரு ந்துவிட்டு ஓடிப்போகவில்லையே? மந்திரி பதவி அனுபவித்து விட்டு வசை பாடவில்லையே?
என்ன விதமான மரியாதை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? கருணானிதி என்பது தானே அவர் பெயர்? (அதுவும் அவரே தேர்ந்தெடுத்த பெயர்! அவரது இயற்பெயர் அதுவல்ல!)
கலைஞர் என்று தான் அழைக்கவேண்டுமானால், அடுத்து செல்வி ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்றும், நடிகர் விஷாலை "பொர்ச்சி தளபதி" என்றும் தான் அழைக்க நேரிடும்!
//
விஜயகாந்த் செய்தி இதழ்களுக்கு பேட்டி அளிக்கையில் கைதேர்ந்த அரசியல் வாதியாக மட்டுமே தெரிகிறாரேயன்றி, நலமான அரசியல் நடத்துபவராகத் தெரியவில்லை.
//
இருக்கட்டும். நலமாக அரசியல் நடத்துபவர்கள் யாராவது இரு ந்தால் அவர்களை பின்பற்றலாம். யாருமே இல்லை எனும்போது அவர் மட்டும் என்ன செய்ய முடியும்?
//
விஜய்காந்துக்கு கலைஞரைக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறதோ, அதே தகுதி வடிவேலுவுக்கும் உண்டு !
//
இது சரி. கருணானிதியையும், ஜெயலலிதாவையும் கேள்வி கேட்க விஜயகாந்துக்கு எல்லா உரிமையும் உண்டு. அதே போல் வடிவேலுவுக்கும் அந்த உரிமை உண்டு. அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்பதெல்லாம் நீங்கள் சொல்வது போல் அபத்தம்!
பதிவின் கருத்தாக்கம் நியாயமானதுதான்.
தமிழ்நாட்டின் தலைவிதி அப்படி.
சனநாயக நாட்டில் யாரும் ஆட்சிக்கு வரலாம்.
எனக்குத் தெரிஞ்சு விசயகாந்து தலைமையில் நடிகர்கள் வெளிநாடு செல்லும் பொது, வடுவேலு விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசும் போது, என் தானைத் தலைவர் தலைமையில் செல்கிரோம்னு மகிழ்ச்சி பொங்க சொன்னார்.
பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு தமிழகத்தை ஆள்வதர்கானத் தகுதியைத் தேர்தல் கமிசன் மாற்றி விட்டதே தெரியாதா...?
பாழாப்போன படித்தவர்களை அமைச்சராக்கினால் ஊழல் செய்கிறார்கள். என்ன செய்வது? சமீபத்தில் காலத்தின்(உங்க வலைப்பக்கத்தின் பெயரை நான் இதில் இழுக்கவில்லை) கட்டாயத்தின் பேரில் தாவல் நடத்திய பேராசிரியர் மருங்காபுரி பொன்னுசாமியை உதாரணமாகச் சொல்லலாம்.
இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
விஷய காந்து வந்தே ஆகணும் என்றெல்லாம் சொல்லுவது கூடாது. அது வடுவேலுக்கும் பொருந்தும். அப்படிதான் சொல்லுவேன்னு யாராவது சொன்னால், தமிழனுக்கு (நமக்கு) வறட்சி தலையிலையும் இருக்குன்னுடப் போறாங்க.
உலக வரலாற்றில் நடிப்புக் கவர்ச்சி/பிரபலம் ஓட்டு வங்கியை ஏற்படுத்துகிறது என்பது நிதர்சன உண்மை.
அமெரிக்காவில் கென்னெடி,இப்ப அர்னால்டு, பிலிபைன்சில் ஒரு ஜோசெப் எஸ்ட்ராடா, தமிழகத்தில் ஓர் எம்.ஜி.ஆர்., ஆந்திராவில் ஓர் என்.டி.ஆர்.
தவறுகள் செய்தாலும் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் கூட்டம் எப்போதும் இவர்களுக்கு இருக்கும்.(கலைஞர் ஜெயலலிதா பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானே. ஒன்னு பச்சை மட்டை இன்னொன்னு பழுத்த மட்டை. பழுத்த மட்டையை கொஞ்சம் சுலபமாப் பின்னலாம், பச்சை மட்டையை சுலபமாப் பின்னமுடியாதில்லையா?)
//என்ன விதமான மரியாதை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? கருணானிதி என்பது தானே அவர் பெயர்?//
விஜயகாந்த் அவ்வளவு சுயமரியாதையும் யோக்கியதையும் உள்ளவராக இருந்தால் ,அவர் கட்சி ஆரம்பிக்கும் முன் ,கருணாநிதிக்கு பொன்விழா எடுத்த போது ,அதற்கு முன்னரே கருணாநிதிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த போது ,கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டிருந்த போதே 'கலைஞர்' என்று சொல்லாமல் 'கருணாநிதி' என்றழைத்திருக்க வேண்டும் .
இந்த விஜயகாந்தெல்லாம் "யோக்கியவான் வர்றாரு .சொம்ப எடுத்து உள்ள வை" கேசு.
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜி! அரசியலைப் பொறுத்தவரை எந்தத் தகுதியும் தேவையில்லை, உடனே குதிக்கலாம் என்றாலும் வடிவேலுவும் பிற காமெடி கலைஞர்களைப் போல அரசியலில் காணாமல் போய்விடக் கூடாது என்ற கவலை இருக்கிறது. ஆனானப் பட்ட ஆச்சியே சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு பேசி வெறுப்பை சம்பாதித்ததுதான் மிச்சம்! அதனால்தான் உங்களுக்கு இது வேணாமே வடிவேலு என்றெழுதினேன்.
அப்படி விஜயகாந்தை இவர் எதிர்ப்பதானால், சுயேட்சை அது இதுவென்றெல்லாம் ஃபிலிம் காட்டாமல், அவரை எதிர்க்கும் ஏதாவது கட்சியில் சேர்ந்து இப்போதிலிருந்தே கொஞ்சம் அரசியலனுபவம் வளர்த்துக் கொண்டு பிறகு முழுமையாக குதிப்பது நலம்.
ஆனால்
//வடிவேலு தொடர்ந்து கைப்புள்ளையாக, நகைச்சுவை நடிகராக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்//
இதுவே என் எண்ணமும்!
//பரிசல்காரன் said...
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜி! அரசியலைப் பொறுத்தவரை எந்தத் தகுதியும் தேவையில்லை, உடனே குதிக்கலாம் என்றாலும் வடிவேலுவும் பிற காமெடி கலைஞர்களைப் போல அரசியலில் காணாமல் போய்விடக் கூடாது என்ற கவலை இருக்கிறது. ஆனானப் பட்ட ஆச்சியே சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு பேசி வெறுப்பை சம்பாதித்ததுதான் மிச்சம்! அதனால்தான் உங்களுக்கு இது வேணாமே வடிவேலு என்றெழுதினேன்.
அப்படி விஜயகாந்தை இவர் எதிர்ப்பதானால், சுயேட்சை அது இதுவென்றெல்லாம் ஃபிலிம் காட்டாமல், அவரை எதிர்க்கும் ஏதாவது கட்சியில் சேர்ந்து இப்போதிலிருந்தே கொஞ்சம் அரசியலனுபவம் வளர்த்துக் கொண்டு பிறகு முழுமையாக குதிப்பது நலம்.
ஆனால்
//
பரிசல்,
வடிவேலு 'அண்ணாமலை' ஆக ஆசப்படுறார். :)
30 கோடியை 30 நாளில் செலவு செய்வதாமே :)
//ஜோ / Joe said...
விஜயகாந்த் அவ்வளவு சுயமரியாதையும் யோக்கியதையும் உள்ளவராக இருந்தால் ,அவர் கட்சி ஆரம்பிக்கும் முன் ,கருணாநிதிக்கு பொன்விழா எடுத்த போது ,அதற்கு முன்னரே கருணாநிதிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த போது ,கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டிருந்த போதே 'கலைஞர்' என்று சொல்லாமல் 'கருணாநிதி' என்றழைத்திருக்க வேண்டும் .
இந்த விஜயகாந்தெல்லாம் "யோக்கியவான் வர்றாரு .சொம்ப எடுத்து உள்ள வை" கேசு.
9:56 AM, September 25, 2008//
:) அவரு எவ்வளவு நல்லவரு, ஏழை எளியோருக்கு திருமணம் செய்து கொடுக்கும் திருப்பணியை செய்து வந்த அவர் திருமண மண்டபத்திற்கு கருணாநிதி அரசு தான் பிரச்சனை கொடுத்தார்கள்.
:)))))))))
//ஜோதிபாரதி said...
பதிவின் கருத்தாக்கம் நியாயமானதுதான்.
//
ஜோதிபாரதி,
நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பின்னூட்டம், தனிப்பதிவாக எழுதிப் போடவேண்டியவற்றை பின்னூட்டமாக்க்குகிறீர்கள், பெரிய மனசு, நல்ல கருத்துகள். நன்றி
//தி.மு.க தலைவருக்கு விஜயகாந்த் என்ன மரியாதை கொடுக்காமல் விட்டுவிட்டார்? வி.கா. தி.மு.க ஆதரவாளராக காட்டிக்கொண்டு இருந்தது உண்மையே. ஆனால், மாற்றம் என்பது எல்லாருக்கும் உண்டு. அவர் ஒன்றும் தி.மு.க கூட்டணியில் இரு ந்துவிட்டு ஓடிப்போகவில்லையே? மந்திரி பதவி அனுபவித்து விட்டு வசை பாடவில்லையே?
என்ன விதமான மரியாதை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? கருணானிதி என்பது தானே அவர் பெயர்? (அதுவும் அவரே தேர்ந்தெடுத்த பெயர்! அவரது இயற்பெயர் அதுவல்ல!)
கலைஞர் என்று தான் அழைக்கவேண்டுமானால், அடுத்து செல்வி ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்றும், நடிகர் விஷாலை "பொர்ச்சி தளபதி" என்றும் தான் அழைக்க நேரிடும்!
//
நான் வி.காந்த் அப்படி நடந்து கொண்டார் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அது சரி தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. அரசியல் முடிவுகள் ஆதாயத்துக்காக எடுக்கப்படுபவை, இதில் கருத்துக் கூற ஒன்றும் இல்லை, அரசியல் களத்தில் வடிவேலுவோ, விஜயகாந்தோ, கஞ்சாகருப்போ எல்லாம் ஒண்ணு தான்.
//குடுகுடுப்பை said...
யப்பா விசயகாந்தந்துக்கு அவரு நடிச்ச வல்லரசு படத்த ஒரு பத்து வாட்டி போட்டு காமிங்கப்பா
4:24 AM, September 25, 2008
//
அதைப்பார்த்துட்டு முறுக்கேறி காஷ்மீர் தீவிரவாதிகளை நேரிடையாக சந்தித்து போட்டுத்தள்ளப் போறிங்களாக்கும் ?
:)
//அறிவன்#11802717200764379909 said...
சொல்லும் விதயம் சரி.
ஆனால் வடிவேலுவின் பேட்டியில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிகிறது.அதைக் கவனித்தீர்களா?//
அறிவன் சார்,
அரசியல் வாதியாக ஆகப்போறேன் என்று அறிக்கைவிட்ட உடனேயே, நாவில் பொய் குடியோறிடுமே, அப்பறம் பதட்டத்திற்கு பஞ்சம் என்ன ?
:)
//வி.கா.முதலில் முன் ஜாமீன் விண்ணப்பித்தவர் இப்போது அதை ரத்து செய்ய விண்ணப்பித்திருக்கிறார்...முழு அரசியல்!//
பொய்வழக்கு, கருணாநிதியின் சதி என்று சொல்ல வெளியில் இருக்கனும், அதற்குத்தான் முன் ஜாமின். அது ஆனவுடனேயே, 'நான் எதையும் சந்திப்பேன்' மார்தட்டனும் அதற்குத்தான் வாபஸ், :) இதெல்லாம் அவர் ஒரு கைதேர்ந்த அரசியல் வாதியாக மாறிவிட்டார் என்றே காட்டுது.
//வாண வேடிக்கைகள் காத்திருக்கின்றன என்பது மட்டும் தெரிகிறது...
12:43 AM, September 25, 2008
//
:)))))))
//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, அருமையான பதிவு.
ஆனா நம்ம தமிழ் மக்கள் கதாநாயகர திரையில நல்லவரா நடிச்சவரு உண்மையிலயும் நல்லவராத்தான் இருப்பாருன்னுல்ல நம்புரவங்க.
//
ஜோசப் பால்ராஜ்,
முழு ஆதரவு கிடைத்ததெல்லாம் அந்த காலம், நாளைக்கே ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார் என்ற செய்தி வந்தால் விஜய்காந்தின் தொண்டர்களெல்லாம் பறந்துடுவாங்க.
// T.V.Radhakrishnan said...
வடிவேலுக்குமட்டுமில்லை..விஜய்காந்திற்கு மட்டுமில்லை..ஒவ்வொரு குடிமகனுக்கும்..எதைப்பற்றி வேண்டுமானாலும் கனவு காணும் உரிமையும் உள்ளது.
11:36 PM, September 24, 2008//
இதுக்கு ரஜினி பானி பதில் தான்.
கனவு காணுங்க, வாழ்கையை தொலச்சிடாதிங்க
காத்தாடி விடுங்க, நூலையும் சேர்த்து விட்டுடாதிங்க
இது எப்படி இருக்கு !
:)
// உடன்பிறப்பு said...
சுப்பர் தல !!
நம்ம அடுத்த பதிவுக்கு லிங்க் ரெடி :-)
//
உங்கள் பதிவில் கலைஞர் புகழ்பரவ நானும் காரணாமா ?
:)
//சும்மா அதிருதுல said...
இதுக்கெல்லாம் பயப்பிடுற மானா அவரு
சிங்கமுலல
கட்டதுரைக்கே பயப்பிடாமல் சிங்கிளாவே சமாளிச்சவரு விஜயகாந்த் எம்மாத்திரம் :)
11:17 PM, September 24, 2008
//
திரைப்படத்தில் வரும் கைப்புள்ளைக்கு கிடைக்கும் அள்ளக் கைகளைவிட, அரசியல் வடிவேலுக்கு நிறையவே கிடைப்பார்கள். எவ்வளவு அடிச்சாலும் தாங்கவாரா அரசியல் வாதின்னு தெரியல
:)
//முரளிகண்ணன் said...
நல்ல கேள்வி. உங்க ஒப்பனிங்கும் பினிஷிங்கும் நல்லாயிருக்கு//
முரளி சார்,
கடைசியில் கருத்து சொல்லவில்லை என்றால் கட்டுரை முற்று பெறாதே !
:))))
//என்ன விதமான மரியாதை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? கருணானிதி என்பது தானே அவர் பெயர்? (அதுவும் அவரே தேர்ந்தெடுத்த பெயர்! அவரது இயற்பெயர் அதுவல்ல!)//
மெத்த சரி!
அவரது உண்மையானப் பெயர் "மூர்த்தி"
அதான் தெட்சிணாமூர்த்தி.
கருத்துரையிடுக