பின்பற்றுபவர்கள்

22 செப்டம்பர், 2008

ஒரு கதையும், தொடர்பில்லாத ஒரு செய்தியும் !

ஒரு ஊரில் ஒருவன் திடீர் பேமஸ் ஆகனும் என்று நினைத்தானாம், தன்னைப் பற்றி, எல்லோரையும் பேச வைக்கனும் என்று நினைத்துக் கொண்டானாம். அதற்கு என்ன செய்வது ? ஊரில் இருக்கும் நாட்டாமைக் காரரிடம் வம்பிலுத்தால் பஞ்சாயத்தைக் கூட்டுவாங்க, அப்பறம் ஊரே நம்மைப் பற்றி தான் பேசும் என்று திட்டம் போட்டானாம்.

அடிக்கடி நாட்டாமையைச் சீண்டி வந்தானாம், நாட்டாமைக்கு இந்த பய அடிக்கடி நம்மை சீண்டுகிறான், இதைக் கண்டித்தோம் என்றால் அதை வச்சு மறுபடியும் சீண்டுவான், கண்டுகாமல் விடுவோம் என்று இருந்துவிட்டாராம். ஒரு நாள் பாம்பு கடித்து மாடு இறந்ததை நாட்டாமை தான் விசம் வச்சிக் கொன்றார் என்று கிளப்பி விட்டானாம். நாட்டாமைக்கு கோபம் வந்தது, என்ன செய்திருப்பார் ? பஞ்சாயத்தைக் கூட்டினால் அந்த பயலுக்கு விளம்பரம் கொடுத்தது போல் ஆகிடும் என்று பேசமால் கோபத்தை அடக்கிக் கொண்டு இருந்தாராம்.

திட்டம் பழிக்கவில்லை என்பதால் புதுப்புது பழிகளை நாட்டாமைக்காரர் மேல் சொல்லிக் கொண்டே வந்தானாம். அதன் பிறகு இவனுக்கு இதே வேலையாகிப் போச்சு என்று யாருமே கண்டு கொள்ளவில்லையாம், புகழ்விரும்பி தன்னோட செயலை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறான், நண்பர்களிடம் மட்டும் சொன்னானாம் நாட்டாமைக்கு கண்டிப்பாக ஒரு நாள் கோபம் வரும் அப்போ என்னை கட்டி வச்சி உறிப்பார், அப்போ நான் போடும் சத்தம் ஊர் முழுக்கக் கேட்கும், நான் பேமஸ் ஆகிடுவேன் என்று சொன்னானாம். நாட்டமை மீது மேலும் மேலும் கடுமையான பழிகளை சொல்லிக் கொண்டே வருகிறானாம்.

அது முடிந்தது போல் தெரியல.

*****

- முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே, வடிவேலு வீட்டை நான் தாக்கியதாக அவதூறு கிளப்பியுள்ளனர். வடிவேலு மட்டுமல்ல, கருணாநிதியே என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அதை சந்திக்க நான் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்

இந்த செய்திக்கும் மேற்கண்ட முடியாத கதைக்கும் தொடர்பு இல்லை.

22 கருத்துகள்:

Rajaraman சொன்னது…

அப்புறம் எதுக்கு அந்த யாரோ ஒருவன் சொல்வதை கேட்க ஊருக்கு ஊர் அவ்வளவு கூட்டம் கூடுகிறது. மேலும் நாட்டாமை அடி வயிற்றில் பயத்தோடு இருக்கிறார். ஒவ்வொரு கூச்சலுக்கும் பதில் கூறுகிறார்.

ஜோ/Joe சொன்னது…

நாட்டாமை இவரை கண்டுக்காம விடுவதில் தான் நாட்டாமையின் புத்திசாலித்தனம் தெரியும்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

இப்ப எல்லாம் நாட்டாமை கயிற்றைப் பார்த்தாலும் 'பாம்பு..பாம்பு'என பயப்படுவதாகவும் ஒரு தகவல்

manikandan சொன்னது…

உண்மையான காமெடிக்கு ஒரு எல்லையே இல்லாம போய்கிட்டு இருக்கு !

இதே மாதிரி ஒரு சினிமா நடிகர கட்சில வளரவுடாம தடுக்க பாத்து 11 வருஷம் வனவாசம் இருந்த நாட்டாமை !

Athisha சொன்னது…

சின்னகவுண்டரும் நாட்டாமைக்கும் என்ன சம்பந்தம் ?

narsim சொன்னது…

இது வேற ஏதோ ஒரு மேட்டர் மாதிரியும் இருக்கு..

(வேணாம்.. நம்ம யாரு வம்புக்கும் போறதில்ல.. தும்புக்கும் போறதில்ல..)


நர்சிம்

நையாண்டி நைனா சொன்னது…

/*சின்னகவுண்டரும் நாட்டாமைக்கும் என்ன சம்பந்தம் ?*/

சின்ன கவுண்டர் அந்த ஊருக்கு நாட்டாமை, ஆனால் நாட்டாமை அந்த ஊருக்கு இல்லீங்கோ சின்ன கவுண்டர்.....

நான் சத்தியமா, சினிமா கதையத்தான் சொல்றேன்.....

tamilraja சொன்னது…

ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
வயிறு வலிக்கிறது !!!உண்மைதான்!

பெயரில்லா சொன்னது…

:-)))))))))))

இனியா சொன்னது…

Good One buddy!!!

Bharath சொன்னது…

நாட்டாமைக்கு அவரு குடும்பத்தை சமாளிப்பதற்குள்ளாவே டவுசர் கிழியுதாம்.. இதுல இவன் கூட வேற மல்லுக்கட்ட வேண்டியிருக்கேன்னு முழி பிதிங்கி ஓக்காந்திருக்காராம்..

கோவி.கண்ணன் சொன்னது…

// Rajaraman said...
அப்புறம் எதுக்கு அந்த யாரோ ஒருவன் சொல்வதை கேட்க ஊருக்கு ஊர் அவ்வளவு கூட்டம் கூடுகிறது. மேலும் நாட்டாமை அடி வயிற்றில் பயத்தோடு இருக்கிறார். ஒவ்வொரு கூச்சலுக்கும் பதில் கூறுகிறார்.
//

:) இருக்கலாம் !

ஆனால் நமீதாவுக்கும் பெரிய கூட்டம் கூடுது அதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
நாட்டாமை இவரை கண்டுக்காம விடுவதில் தான் நாட்டாமையின் புத்திசாலித்தனம் தெரியும்.

6:12 PM, September 22, 2008
//

ஜோ,
நாட்டாமை ஆட்சி அதிகாரத்தை பிரிச்சு கொடுக்கப் போகிறாராமே.
வேற வழியும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
இப்ப எல்லாம் நாட்டாமை கயிற்றைப் பார்த்தாலும் 'பாம்பு..பாம்பு'என பயப்படுவதாகவும் ஒரு தகவல்

6:25 PM, September 22, 2008
//

காலை சுற்றியும், இவரே கழுத்தில் போட்டுக் கொண்ட பாம்புகளும் இருக்கிறதல்லவா, அதனால் அவருக்கு அப்படியும் தெரியலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
உண்மையான காமெடிக்கு ஒரு எல்லையே இல்லாம போய்கிட்டு இருக்கு !

இதே மாதிரி ஒரு சினிமா நடிகர கட்சில வளரவுடாம தடுக்க பாத்து 11 வருஷம் வனவாசம் இருந்த நாட்டாமை !

6:43 PM, September 22, 2008
//

அதுவேற கதை, அப்போதும் திமுகாவின் எதிர்கட்சிகளின் பேராதரவோடு தான் நடிகர் வென்றார், ஆனால் தற்போதைய நிலை அப்படி எதுவுமில்லை. தேமுதிக நன்றாக அரசியல் செய்கிறார்கள். நல்ல அரசியல் செய்யவில்லை..

கோவி.கண்ணன் சொன்னது…

// அதிஷா said...
சின்னகவுண்டரும் நாட்டாமைக்கும் என்ன சம்பந்தம் ?

6:57 PM, September 22, 2008
//

சின்ன கவுண்டர் நாட்டாமை மேல பிராது கொடுத்து இருக்கிறார்

கோவி.கண்ணன் சொன்னது…

//narsim said...
இது வேற ஏதோ ஒரு மேட்டர் மாதிரியும் இருக்கு..

(வேணாம்.. நம்ம யாரு வம்புக்கும் போறதில்ல.. தும்புக்கும் போறதில்ல..)


நர்சிம்

7:13 PM, September 22, 2008
//

எஸ்கேப்பா ? நடத்துங்க !
:))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
/*சின்னகவுண்டரும் நாட்டாமைக்கும் என்ன சம்பந்தம் ?*/

சின்ன கவுண்டர் அந்த ஊருக்கு நாட்டாமை, ஆனால் நாட்டாமை அந்த ஊருக்கு இல்லீங்கோ சின்ன கவுண்டர்.....

நான் சத்தியமா, சினிமா கதையத்தான் சொல்றேன்.....

7:14 PM, September 22, 2008
//

நாட்டாமைக்குச் சொந்த பிரச்சனையும் நிறைய இருக்கு, இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கதான் சின்ன கவுண்டரும் நினைக்கிறார். கல்யாண மண்டப கோவம் அவ்வளவு சீக்கிரம் ஆறுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//the new cinema said...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
வயிறு வலிக்கிறது !!!உண்மைதான்!

12:35 AM, September 23, 2008
//

சினிமா நிருபர், நன்றி !

// வடகரை வேலன் said...
:-)))))))))))

2:39 AM, September 23, 2008//

அண்ணாச்சி நன்றி !


// இனியா said...
Good One buddy!!!

3:43 AM, September 23, 2008//

இனியா நன்றி !


// Bharath said...
நாட்டாமைக்கு அவரு குடும்பத்தை சமாளிப்பதற்குள்ளாவே டவுசர் கிழியுதாம்.. இதுல இவன் கூட வேற மல்லுக்கட்ட வேண்டியிருக்கேன்னு முழி பிதிங்கி ஓக்காந்திருக்காராம்..

12:29 PM, September 23, 2008
//
அதும் சரிதான், கட்சியைக் காப்பத்தனும், தேர்தலில் கூட்டணி அமைக்கனும், ஜெயிக்கனும் எத்தனையோ கவலைகள் அதனால் கண்டுகொள்ளாமல் கூடு விடுவார்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:)))

இக்பால் சொன்னது…

எப்படின்னா அழகா முடிச்சி போடுறிங்க

குடுகுடுப்பை சொன்னது…

என் பெயரில் நான் சொல்ல வந்த கருத்து இருக்கிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்