பின்பற்றுபவர்கள்

26 செப்டம்பர், 2008

ரஜினி அரசியலில் குதிக்கிறார் - ஒரு ஹாஸ்யம் !

ரஜினி ரசிகர் மன்றங்கள் ஆவலோடு எதிர்நோக்கும் ரஜினியின் அரசியல் குதிப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வரும், ஆனால் அவர் நேரடியாக அரசியலில் ஈடுபடாமல சத்திய நாராயணாவின் தலைமையில் ரசிகர் மன்றத்தை களத்தில் இறக்கி வெள்ளோட்டம் பார்ப்பார். நேரடி அரசியலில் இறங்காததற்குக் காரணமாக நான் யூகிப்பது கலைஞருக்கு எதிராக அரசியலில் இறங்க அவருக்கு இருக்கும் தயக்கம்.


பார்ப்போம், விஜயகாந்த், சிரஞ்சீவி தங்கள் ரசிகர்களை வாக்குச் சீட்டாக மாற்றும் போது பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்ட ரஜினிக்கு அந்த ஆசை இல்லாமல் போகாது, ரசிகர்களும் வெறும் ரசிகனாகவே இருக்க விரும்பவில்லை என்று அறிந்திருக்கிறார். சரிந்து வரும் அவரது இமேஜ் நிமிர 'இயந்திரன்' வெளியிட்டாக வேண்டும், அதற்கு இன்னும் மூன்று ஆண்டுகளாகவது ஆகும். எனவே ரஜினிக்கு இப்போதைக்கு இந்த முடிவைத் தவிர்த்து வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை, அறிவிப்பு வந்த உடனேயே 'சுல்தான் த வாரியர்' வெளியிடப் படும் என்று நினைக்கிறேன்.


இவை நடக்கும் போது தமிழக அரசியல் களத்தில் பெறும் மாற்றங்கள் நிகழும்.

20 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கலைஞருக்கு எதிராக அரசியலில் இறங்க அவருக்கு தயக்கம்.
//
உண்மை தான்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ரசினி வந்தா தான் நம்ம தமிளுநாடு முன்னேறும்...!
அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர்.
அவர் ஒருவரால் மட்டுமே முடியும்...!
வாலுக! தமிளு மக்க.

தன்மானத் தமிழர் ரசினி வாழ்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
ரசினி வந்தா தான் நம்ம தமிளுநாடு முன்னேறும்...!
அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர்.
அவர் ஒருவரால் மட்டுமே முடியும்...!
வாலுக! தமிளு மக்க.

தன்மானத் தமிழர் ரசினி வாழ்க!
//

சிங்கைக்கு ஆட்டோ வராதுங்கிற தைரியமா ?
நம்ம கிரி இருக்கார் மறந்திடாதிங்க
:)))))

manikandan சொன்னது…

கோவி சார், பார்முலா 1 ரேஸ் போயிட்டு ஒரு நேரடி ரிப்போர்ட் தருவீங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
கோவி சார், பார்முலா 1 ரேஸ் போயிட்டு ஒரு நேரடி ரிப்போர்ட் தருவீங்களா ?

3:45 PM, September 26, 2008
//

அதற்கான அனுமதி சிட்டு விலை மிகவும் கூடுதல், கட்டுப்படியாகாது, உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ?

ரேஸ் நடக்கும் இடத்தின் அருகில் உயரமான கட்டிடங்களில் இருந்து இலவசமாக பார்த்துவிடுவார்கள் என்பதற்காக அந்த கட்டிங்களை நோக்கி கீழிருந்தே பவர் புல் வெளிச்சம் பாய்ச்சி தடுக்கப் போவதாக தகவல்

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கடையம் ஆனந்த் said...
கலைஞருக்கு எதிராக அரசியலில் இறங்க அவருக்கு தயக்கம்.
//
உண்மை தான்.

3:22 PM, September 26, 2008
//

நடக்கும்னு தான் நினைக்கிறேன்

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே , எதுக்கும் ரசினி ரசிகர் மன்ற லெட்டர் பேடு ஒன்னும் அடிச்சு வைச்சுகுவோமா? அங்கயும் ஒரு துண்ட போட்டு வைப்போம். யாரு வந்தா என்னா, நமக்கு பதவி வேணும். என்ன சொல்றீங்க?

நையாண்டி நைனா சொன்னது…

ஐயா சாமி...
எங்களுக்கு ரஜினி தேவையே இல்லை - அரசியலுக்கு.....

சாதாரண, அவரது கட்டுக்குள், அவர் சொன்னால் கேட்கக் கூடிய சினிமா உலகத்திலேயே ... அவரால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லையே.....
அதாவது நான் சொல்லுவது, இந்த குசேலன் படத்திலேயே அவர் பெயரை, அவர் பிம்பத்தை தவறாக பயன்படுத்தியதை
அவர் கண்டித்திருக்கலாம் ஆனால் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக்கூடாது என்று அவர் நினைத்து அமைதியாக இருந்திருந்தால்...
நாளை அவர் கட்சி ஆரம்பித்து, அதில் உள்ளவர்கள் பொருள் செலவு செய்தே ஆட்சியை பிடிப்பார்கள்.
அப்போது அவர்கள் நஷ்டம் அடைய கூடாது என்று அமைதியாக அனுமதிப்பாரோ ஊழல் செய்ய???

கிரி சொன்னது…

//சிங்கைக்கு ஆட்டோ வராதுங்கிற தைரியமா ?
நம்ம கிரி இருக்கார் மறந்திடாதிங்க
:)))))//

மைண்ட்ல வைத்து இருக்கேன் ;-) (உங்களை தான்)

வெண்பூ சொன்னது…

"ரஜினி படத்தை போட்டால்தான் புத்தகம் விற்கும் என்பது வார இதழ்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இப்போது அவரது பெயரை தலைப்பில் போட்டால்தான் சூடான இடுகையில் வரும் என்பது கோவி.கண்ணனுக்கும் தெரிந்திருள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா சூப்பர்ஸ்டாரின் மகிமை" அப்படின்னு யாராவது பின்னூட்டம் போடுவாங்க.. படிக்கறதுக்கு ரெடியாகிகோங்க.. :))))

நையாண்டி நைனா சொன்னது…

/* வெண்பூ said...
"ரஜினி படத்தை போட்டால்தான் புத்தகம் விற்கும் என்பது வார இதழ்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இப்போது அவரது பெயரை தலைப்பில் போட்டால்தான் சூடான இடுகையில் வரும் என்பது கோவி.கண்ணனுக்கும் தெரிந்திருள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா சூப்பர்ஸ்டாரின் மகிமை" அப்படின்னு யாராவது பின்னூட்டம் போடுவாங்க.. படிக்கறதுக்கு ரெடியாகிகோங்க.. :))))
*/

அப்படி சொல்லி, நீங்களே போட்டுட்டீங்கலே

விஜய் ஆனந்த் சொன்னது…

// அறிவிப்பு வந்த உடனேயே 'சுல்தான் த வாரியர்' வெளியிடப் படும் என்று நினைக்கிறேன் //

இது சூப்பரு!!!!

அடுத்த அறிவிப்பு (மட்டும்தான்!!) 3 வருஷம் கழிச்சு, எந்திரன் ரிலீஸுக்கு முன்பு!!!

வெண்பூ சொன்னது…

//நையாண்டி நைனா said...
அப்படி சொல்லி, நீங்களே போட்டுட்டீங்கலே
//

அட நையாண்டி நைனா.. நானே காண்டுல அந்த பின்னூட்டத்த போட்டிருக்கேன். நீங்க வேற... :)))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ரஜினி கட்சி ஆரம்பித்து..தேர்தலில் தோற்றார் என்று வைத்துக் கொள்வோம்..அப்போது அவருக்கு வாக்கு அளித்தவர்க்கு எதை திருப்பித் தருவார்...மண்டை குடைகிறது

புதுகை.அப்துல்லா சொன்னது…

யாரு வந்தா என்னா, நமக்கு பதவி வேணும். என்ன சொல்றீங்க?

//

நீங்கதான் நம்பள மாதிரியே திங் பண்ணூறீங்க :))))

manikandan சொன்னது…

/*********ரேஸ் நடக்கும் இடத்தின் அருகில் உயரமான கட்டிடங்களில் இருந்து இலவசமாக பார்த்துவிடுவார்கள் என்பதற்காக அந்த கட்டிங்களை நோக்கி கீழிருந்தே பவர் புல் வெளிச்சம் பாய்ச்சி தடுக்கப் போவதாக தகவல்*********/

இதுஎல்லாம் ரொம்பவே ஓவரு. சிங்கப்பூர் அப்படிங்கறதுனால பண்ண முடியுது. இதே மாதிரி ஐரோப்பால பண்ணுவாங்களா ?


பாக்கலாம். மழை வந்து எல்லாத்தையும் தடுத்தாலும் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.

manikandan சொன்னது…

/****** சாதாரண, அவரது கட்டுக்குள், அவர் சொன்னால் கேட்கக் கூடிய சினிமா உலகத்திலேயே ... அவரால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லையே.....
அதாவது நான் சொல்லுவது, இந்த குசேலன் படத்திலேயே அவர் பெயரை, அவர் பிம்பத்தை தவறாக பயன்படுத்தியதை
அவர் கண்டித்திருக்கலாம் ஆனால் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக்கூடாது என்று அவர் நினைத்து அமைதியாக இருந்திருந்தால்...
நாளை அவர் கட்சி ஆரம்பித்து, அதில் உள்ளவர்கள் பொருள் செலவு செய்தே ஆட்சியை பிடிப்பார்கள்.
அப்போது அவர்கள் நஷ்டம் அடைய கூடாது என்று அமைதியாக அனுமதிப்பாரோ ஊழல் செய்ய ********/

என்ன ஒரு analogy

நையாண்டி நைனா சொன்னது…

/*என்ன ஒரு analogy*/

அவனும் அவளும் அண்ணா... என்ன சொல்றீங்க?
கேலி பண்றீங்களா? இல்லை கிண்டல் பண்றீங்களா?

நான் சொல்ல விளைவது, ரஜினி ஒரு " எடுப்பார் கைபிள்ளை"

manikandan சொன்னது…

/********* கேலி பண்றீங்களா? இல்லை கிண்டல் பண்றீங்களா? ***********/

நீங்க ஏதோ நையாண்டி பண்றீங்கன்னு புரியுது.

குடுகுடுப்பை சொன்னது…

கெட்டகாலம் பொறக்காது,கெட்டகாலம் பொறக்காது,

இது நடக்காது,இது நடக்காது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்