பின்பற்றுபவர்கள்

18 செப்டம்பர், 2008

பொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் !

//தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறி போனாலும் அவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சலுகை வழங்க வேண்டும் என்று ரங்கநாதன் மிஸ்ரா அறிக்கை தந்துள்ளது.

இதை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சட்ட மசோதாவாக கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

எனவே மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க கூடாது என்று டெல்லியில் 21ம் தேதி பாஜக தாழ்த்தப்பட்டோர் அணி சார்பில் பேரணி நடைபெறுகிறது.

மேலும் இந்து ஹரிஜன மக்கள் மத்தியில் விழிப்புணர்வு யாத்திரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.//


தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்துவர்களுக்கான இட பங்கீடு குறித்து முன்பே எழுதி இருந்தேன்.

மதம் மாறும் தாழ்த்தப்பட்டவர்களை பிற்பட்டவராக அறிவிக்கிறது இந்திய அரசியல் சட்டம். இது எந்த வகையில் ஞாயம் என்பது தெரியவில்லை.

ஒரு சாதியின் சமூக நிலையை வைத்தே இட ஒதுக்கீட்டிற்குள் அந்த சாதி குறிப்பிட்ட பிரிவுக்குள் வருகிறது.
மதமாற்றம் ஒருவரின் சமுக நிலையை அடுத்த நாளே மாற்றிவிடுகிறது என்பது வெறும் மத விளம்பரங்கள் தான், தலித்துகள் மதம் மாறிய பிறகும் தலித்துகளாகவே நடத்தப்படுவதுதான் கொடுமையே. அவர்கள் எதை நம்பி மதம் மாறினார்களோ அதன் பயனை அடைந்தவர்கள் என்பது விழுக்காட்டு அளவில் மிக மிகக் குறைவே. சாதிவெறி என்பது கிறித்துவ மதத்தில் இருக்கிறது என்பதை கிறித்துவர்களே ஒப்புக் கொண்ட விசயம் தான். நான் அறிந்த வகையில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படும் என்பதற்காகவே இந்து மத வழிபாடுகளில் இருந்து கிறித்துவ வழிபாட்டுக்கு மாறினாலும் இந்துவாகவே சர்டிபிகேட் அளவில் தொடர்பவர்கள் உள்ளனர். அவர்கள் இட பங்கீட்டு சலுகைகளையும் அனுபவத்தே வருகிறார்கள். இந்த யோசனை இல்லாத பல தலித் கிறித்துவர்கள் உரிமையை இழந்து 50 ஆண்டுகளாகப் போராடியே வருகிறார்கள். அவர்களுக்கும் கொடுப்போம் என்ற வாக்குறுதி தேர்தல் காலங்களோடு நிற்கிறது.

மதம் மாறினால் சமூக பொருளாதாரம் மாறும் என்று எந்த மதமாவது எழுத்தளவில் இந்திய அரசுக்கு ஆவணங்கள் வழங்கியுள்ளதா ?

எதன் அடிப்படையில் தலித் கிறித்துவர்கள் பிற்பட்டவர் பிரிவுக்கு தள்ளிவிடப் படுகின்றனர் ? தனக்கு பிடித்த மதத்துக்கு ஒருவர் மாறுவதற்கும் அவரது சமூக, பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு ?

மதம் மாறுவது சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது அதனால் தான் தலித் கிறித்துவர்களை பிற்பட்டோருக்கு மாற்றுகிறோம் என்று அரசாங்கம் சொல்ல முடிந்தால்... அனைத்து தலித் பெருமக்களையும் கிறித்துவ மதத்திற்கு மாறச் சொல்லி அரசாங்கமே சிபாரிசு செய்து, இட ஒதுக்கீட்டு தலைவலிகளை குறைத்துக் கொள்ளலாமே...ஏன் செய்வது இல்லை ?

இந்த கேள்விகளை வைத்து தலித் கிறித்துவர்கள், அல்லது அவர்கள் சார்பில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அரசாங்கத்தின் மவுனம் கலையும்.

தற்போதுள்ள நடைமுறை அதாவது, 'மதச்சார்பற்று நடந்து கொள்வோம்' என்று உறுதி எடுத்துக் கொண்ட அரசாங்கத்தின் செயல், இந்து தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் தான் இடப்பங்கீடு என்பது இந்து மதத்தின் மக்கள் தொகையைக் கட்டிக் காக்கும் கேடயமாகவே இருக்கிறது என்று யாரும் குற்றம் சாட்டினால் இந்திய அரசாங்கம் என்ன பதில் அளிக்கும் ?

பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நசுக்கப்பட்டுள்ள தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் எதிராக போராடும் உரிமை அதே போன்ற நிலையில் இருக்கும் இந்து தலித் அமைப்புகளுக்குக் கூட கிடையாது என்றே நினைக்கிறேன். வேண்டுமென்றால் இந்து தலித் அமைப்புகள், கிறித்துவ தலித் மக்களுக்கும் சேர்த்தே இட ஒதுக்கீட்டு அளவை கூடுதலாக்கச் சொல்லி கோரிக்கை வைத்து போராடுவது தான் சிறந்த வழி.

********

1. தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை - இல.கனேசன்

தகவலுக்கு நன்றி ! அப்படியென்றால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எப்போதும் கைவைக்காமல் முன்னேற்றம் அடையும் வரையில் அப்படியே தொடரலாம்.

2. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். - இல.கனேசன்

என்ன ஒரு கரிசனம் - சிலிர்க்கிறது ! இப்போதாவது தெரிகிறதா ? இந்து தாழ்த்தப்பட்டவராக தொடர சம்மதம் தெரிவித்தால் வெகுமதியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம், என்பதை இவ்வளவு கரிசனமாக, அழகாகச் சொல்ல முடியுமா ?

3. மதம் மாறிய தலித்துகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கூடாது என பாஜக கூறியுள்ளது.

அவர்களைத்தான் நாங்கள் தாழ்த்த முடியாதே பிறகு எப்படி தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லமுடியும் என்பதைத்தான் சொல்லமுடியாமல் சொல்கிறார்கள் போலும்.

சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?

21 கருத்துகள்:

manikandan சொன்னது…

கொஞ்சம் கடியான கேள்வி தான். நிச்சயமா ஒரு தலித் மதம் மாறுவதால் சமூகத்துல ஒரு அந்தஸ்து கிடைக்காது. அதுனால அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாம். இந்து மதத்துல உள்ள தலித் இது மூலமா ஒரு வித பாதிப்பும் கிடையாது... கணேசன் சொல்வது எல்லாம் சுத்த அம்பக்கு.

ஆனா ஒரு தலித் கிறிஸ்டியனா மாறும் போது அவர் மைனாரிட்டில வர்றாரு. அதுல வரும் சலுகைகள் அதிகமே. வேலை கிடைப்பதில் தெரியவில்லை ஆனால் படிப்பில் மைனாரிட்டி காலேஜ் தமிழ்நாட்டில்/ இந்தியாவில் மிக அதிகம். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன.

மதம் மாறும் பொழுது இந்து சமயத்தில் உள்ள ஜாதியையும் சேர்த்து எடுத்து செல்ல வேண்டும் என்றால், இந்திய சட்டம் அந்த ஜாதியை அந்தந்த மதத்தில் அங்கீகரிக்க வேண்டும். (இது தேவையா என்று எனக்கு நிச்சயமாக தெரியாது)

manikandan சொன்னது…

me was the first !

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...

ஆனா ஒரு தலித் கிறிஸ்டியனா மாறும் போது அவர் மைனாரிட்டில வர்றாரு. அதுல வரும் சலுகைகள் அதிகமே. வேலை கிடைப்பதில் தெரியவில்லை ஆனால் படிப்பில் மைனாரிட்டி காலேஜ் தமிழ்நாட்டில்/ இந்தியாவில் மிக அதிகம். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன.
//

எல்லா சலுகையும் கிடைப்பதாக இருந்தால் அவர்கள் ஏன் 'தாய்' மதம் திரும்பி வருகிறார்கள், அதைக் கொண்டாடி, பெருமையாக காவி கோஷ்டி எழுதுதா இல்லையா ?

ஜோ/Joe சொன்னது…

//மதம் மாறும் பொழுது இந்து சமயத்தில் உள்ள ஜாதியையும் சேர்த்து எடுத்து செல்ல வேண்டும் என்றால், இந்திய சட்டம் அந்த ஜாதியை அந்தந்த மதத்தில் அங்கீகரிக்க வேண்டும். (இது தேவையா என்று எனக்கு நிச்சயமாக தெரியாது)//

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கிறிஸ்தவர்களெல்லாம் BC என்பதாக சொல்கிறீர்கள் .அப்படி அல்ல ..இந்து நாடாரும் ,கிறிஸ்தவ நாடாரும் இட ஒதுக்கீட்டில் ஒரே பிரிவு தான் .இந்து வெள்ளாளர் கிறிஸ்தவராக மாறினால் அவர் அதே பிரிவில் தான் இருப்பார் .ஆனால் பாரபட்சம் தலித்துக்கு மட்டும் தான் .

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் பாரபட்சம் தலித்துக்கு மட்டும் தான் .//

ஜோ தகவலுக்கு நன்றி, மிகக் கொடுமை, சமூக நீதியைக் காப்பதாகச் சொல்லும் அரசியல் சட்டத்தில் நகைப்புக்கு இடமானது, 50 ஆண்டுகாலமாக தொடரும் இந்த சட்ட அவலம் உடனடியாக திருத்தப்பட வேண்டும்.

Subbiah Veerappan சொன்னது…

பொது நல வழக்கா?
சவுக்குக் கட்டைக் கலாச்சாரம், ஆட்டோவில் வீடு தேடி ஆட்கள் வரும் கலாச்சாரம் இதெல்லாம் தெரியுமா? தெரியாதா?

பரிசல்காரன் சொன்னது…

:-)

manasu சொன்னது…

மதம் மாறினால் சமூக பொருளாதாரம் மாறும் என்று எந்த இந்திய அரசு ஆவணமாவது எழுத்தளவில் உறுதி வழங்கியுள்ளதா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
பொதுநல வழக்கா?
அரசாங்கத்தின் அடிவருடிகளின் உதவியால்
விறகுக்கடை வைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
ஜல்லி வியாபார வாய்ப்பும் அதிகம்.

ட்ராபிக் ராமசாமி வாழ்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியாரே!
பொதுநல வழக்கா?
அரசாங்கத்தின் அடிவருடிகளின் உதவியால்
விறகுக்கடை வைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
ஜல்லி வியாபார வாய்ப்பும் அதிகம்.

ட்ராபிக் ராமசாமி வாழ்க!

10:10 AM, September 19, 2008
//

ட்ராபிக் ராமசாமி :)

ட்ராபிக் சிக்னல் - தன்னை ஒழுங்கு படுத்துவதாக அதுவே நினைத்துக் கொண்டாலும், எதிர்கொள்பவர்களுக்கு என்றுமே அது தடைதான் !

கோவி.கண்ணன் சொன்னது…

//manasu said...
மதம் மாறினால் சமூக பொருளாதாரம் மாறும் என்று எந்த இந்திய அரசு ஆவணமாவது எழுத்தளவில் உறுதி வழங்கியுள்ளதா ?

4:07 AM, September 19, 2008
//

இதைத்தான் கேட்கனும். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிழை இருக்கிறது. மாற்ற வேண்டும். இந்த மதத்துக்குள்ளேயே இரு அப்போது தான் சலுகை என்று சொல்வது தனி மனித உரிமையில் அரசாங்கம் தலையிடுவதாகும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
பொது நல வழக்கா?
சவுக்குக் கட்டைக் கலாச்சாரம், ஆட்டோவில் வீடு தேடி ஆட்கள் வரும் கலாச்சாரம் இதெல்லாம் தெரியுமா? தெரியாதா?
//

கோவையிலிருந்து வராதில்லே, நான் இருக்கிற தொலைவும் அதிகம், ஆட்டோ வங்காளவிரிகுடாவைக் கடக்க முடியாது.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சரியான விசயம். உரக்கச் சொல்லப்பட வேண்டிய விசயம் இது.

கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு இடையே கூட மிகக் கொடூரமாக சாதி மோதல்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதையே ஒன்னும் செய்ய முடியல. இதுல தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுனா எப்படி அவங்க வாழ்க்கை முன்னேறிடுச்சுன்னு சொல்ல முடியும்? மதம் எந்த விதத்திலும் சாதி வித்தியாசங்களை போக்கவில்லை. மாற்றத்தை உண்டு பண்ணவும் இல்லை. பெயர் தான் மாறியிருக்கும். வேற எந்த மாற்றமும் இல்லை.

பாஜக அழுவது, ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுற மாதிரித்தான் இருக்கு. எத்தனையோ இந்து கோயில்களில் தலித்களை உள்ளே விட மறுக்கிறார்களே, அதற்கு எங்காவது போராடியிருக்கிறதா பாஜகா? துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்போட எல்லா இடத்துக்கும் போய் வன்முறைய தூண்டும் விதமாவே பேசிக்கிட்டு இருக்காரே இராம.கோபலன்னு ஒருத்தர் அவர் ஏன் இந்த கோரிக்கைகளைப் பத்தி பேசுறதே இல்ல? முதல்ல தங்கள் பக்கம் இருக்க தப்ப சரி செஞ்சுட்டு அடுத்தவங்களப்பத்தி பேசட்டும்.

tamilraja சொன்னது…

ஜோசப் பால்ராஜின் கருத்து மிக உண்மையானது
ஆமாம் எந்த மதவாதியும் ஏன் அதை செய்ய தயங்குகிறான் ?
காரணம் ராமகோபாலன்,அர்ஜுன் சம்பத் போன்ற ரத்த வெறியாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தேவர் இனத்தவரையோ,வன்னியரையோ ,கவுண்டரையோ,மற்ற பிற பிர்ப்பட்டவர்களுக்கு எதிரான போக்காய் மாறினால் இங்கு ரத்தம் குடிக்க வழியில்லை என்பது தெரியும்
மதுரையில் போய் ராமகோபாலனோ ,அர்ஜுன் சம்பத்தோ தலித்துகளை ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் இவர்கள் நிலைமை என்ன ஆகும் ???
மதுரை மாவட்டத்தில் இன்றும் எத்தனை கிராமங்களில் தலித்துகள் பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியும் நாற்காலியில் உட்கார முடியாத நிலை ,இதை ஏன் இவர்கள் தீவிரமாக எதிர்க்கவில்லை ?திருச்சி அருகே மலம் தின்ன வைத்தவர்களை ஏன் இவர்கள் தட்டி கேட்டு திருத்தவில்லை???போலிகள் அப்படித்தான் இருப்பார்கள் என்ன செய்வது ..மேலும் இவர்கள் கோழைகள்

மாயவரத்தான் சொன்னது…

கட்டுரையின் உள் விஷயத்தில் நான் நுழைய விரும்பவில்லை.

பொது நல வழக்கு தொடர 'யாராவது' முன் வர வேண்டும்..

ம்.. நல்ல விஷயம். அந்த 'யாராவது' ஏன் நீங்களாக இருக்கக் கூடாது?!

மாயவரத்தான் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாயவரத்தான் சொன்னது…

ஜோசப் பால்ராஜ்..உங்கள் பின்னூட்டத்தின் இரண்டாவது வரியைப் படித்து விட்டு அப்படியே அதற்கான உங்களுக்கான பதிலாக உங்களின் பின்னூட்டத்திலேயே இருக்கும் கடைசி வரியையும் படித்துக் கொள்ளவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாயவரத்தான்.... said...
கட்டுரையின் உள் விஷயத்தில் நான் நுழைய விரும்பவில்லை.

பொது நல வழக்கு தொடர 'யாராவது' முன் வர வேண்டும்..

ம்.. நல்ல விஷயம். அந்த 'யாராவது' ஏன் நீங்களாக இருக்கக் கூடாது?!

1:28 PM, September 19, 2008
//

நான் விதைப் போடுகிறேன், நல்ல விதை முளைத்தால் பலன் இருக்கும் என்று நினைப்பவர் செய்வார்கள். நல்ல செயல் என்று நினைத்தால் 'இல.கனேசன்' அல்லது நீங்கள் கூட செய்யலாம் எனக்கு எதிர்ப்பு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாயவரத்தான்.... said...
ஜோசப் பால்ராஜ்..உங்கள் பின்னூட்டத்தின் இரண்டாவது வரியைப் படித்து விட்டு அப்படியே அதற்கான உங்களுக்கான பதிலாக உங்களின் பின்னூட்டத்திலேயே இருக்கும் கடைசி வரியையும் படித்துக் கொள்ளவும்.

1:31 PM, September 19, 2008
//

மாயவரத்தான் அண்ணே,

கட்டுரையை நல்லா புரிந்து கொள்ளுங்கள், மதம் மாறுவது சரி என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. மாறினாலும் பலன் இல்லை என்றே சொல்லி இருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் உரிமையில் ஏன் கைவைக்க வேண்டும் என்று தான் கேட்டு இருக்கிறேன்.

கண்டிக்கப் படவேண்டியவர்கள்,' உயர்வு தருவதாகா' ஆசைக் காட்டியவர்களேயன்றி, அதனை நம்பி ஏமாந்த அப்பாவிகள் அல்ல.

Subbiah Veerappan சொன்னது…

/////கோவையிலிருந்து வராதில்லே, நான் இருக்கிற தொலைவும் அதிகம், ஆட்டோ வங்காளவிரிகுடாவைக் கடக்க முடியாது.////

திசை திருப்பும் பதில். கேள்வி: பொது நல வழக்குப்போடச் சொல்லி நீங்கள் வலியுறுத்தி எழுதியுள்ளீர்களே, அவர்களுக்கு (அவர்கள் உங்களைப் போல சிங்கப்பூரில் பாதுகாப்பாக இல்லாமல்) சென்னையில் இருப்பவரென்றால், அவருக்கு என்ன நேரும் என்று தெரியுமா? தெரியாதா?
தெரிந்திருந்தால் அவரை ஏன் பரிந்துரை செய்து சிக்கலில் மாட்டிவிடுகிறீர்கள்?
அல்லது யாருக்கு நீங்கள் இதைப் பரிந்துரைக்கிறீர்கள் - அதைச் சொல்லுங்கள்!
ஒரு வழக்கறிஞரை (யாராவது வழக்கறிஞர் முன்வந்தால்) வைத்து நீங்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது?

manikandan சொன்னது…

**********எல்லா சலுகையும் கிடைப்பதாக இருந்தால் அவர்கள் ஏன் 'தாய்' மதம் திரும்பி வருகிறார்கள், அதைக் கொண்டாடி, பெருமையாக காவி கோஷ்டி எழுதுதா இல்லையா ?***********

எல்லா சலுகையும்ன்னு எத சொல்றீங்கன்னு எனக்கு தெரியல. அவங்க ஒருவேள வாடிக்கன் சொத்து முழுக்க கிடைக்கும்ன்னு எதிர்பார்த்து இருப்பாங்க.

மைனாரிட்டி சலுகையும் உண்டு - தலித் சலுகையும் உண்டு - இத கொஞ்சம் அதிகபடியாக இருந்தாலும் கொடுக்கலாம். ஒண்ணும் தப்பு இல்ல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்