முன்பு ஒருமுறை பிள்ளையாருக்கு கொடுக்கப்படும் தூக்கு தண்டனை வன்மையாக கண்டித்து பதிவிட்டு இருந்தேன். அதற்கு திரு ஜயராமன் கீழ்க்கண்ட பதில் அளித்திருந்தார்.
"பிள்ளையாரை களிமன்னில் பிடித்து பூசை செய்து பிறகு அதை ஆற்றிலோ, கடலிலோ கரைப்பதே சரியான பூசை விரத முறை. இதை நீங்கள் கொச்சையாக்குவது வருத்தம். பிடித்துவைத்தால் பிள்ளையார் என்ற சொல் வழக்கு இதையே குறிக்கிறது. பூசை ஆரம்பிக்கும்போது இந்த பிம்பத்தில் அந்த இறைவனை எழுந்தருள செய்து பின்னர் பூசை முடிந்ததும் அவரை மீண்டும் விடையனுப்பி அந்த பிம்பத்தை கடலிலோ, ஆற்றிலோ கரைப்பதே சாத்திரங்கள் சொல்லும் முறை. இல்லாவிட்டால் கிணற்றில் போடலாம். இதில் உன்மையாக ஆத்திகர்கள் மனவருத்தம் எங்கிருந்து வருகிறது என்பது புரியவில்லை. தங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம். தங்களுக்கு பிடிக்காததின் காரணம், தங்களுக்கு இந்த சாத்திரத்தில் நம்பிக்கை இல்லை என்பதால் என்றும் சொல்லிக்கொள்ளலாம். உன்மையான ஆத்திகர்களுக்கும் பிடிக்காது என்று சொல்வது உன்மையான ஆத்திகர்கள் இந்த சாத்திரத்தில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று தாங்கள் நம்புவது போல் இருக்கிறது"
2 ஆண்டுக்கு முன்பு எழுதிய பதிவின் பின்னூட்டம் அதற்கு மறுமொழியாக எழுதவில்லை, ஆனால் ஆண்டு தோறும் நடக்கும் நிகழ்வாக இருப்பதால், இந்த படங்களைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்,
1. 'தான் இந்து' என நினைக்கும் எவருக்குமே மனம் புண்படவில்லையா ?
2. புண்படவில்லை, அவை முறையான சடங்கு, ஏற்றுக் கொள்கிறேன் என்கிறீர்கள் ? ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், அந்த சிதைந்த சிலைகளின் மீது ஏறி நின்று சிறுவர்கள் ஒண்ணுக்கு அடித்தாலோ, மலமிருந்தாலோ உங்கள் மனம் புண்படாதா ?
****
இந்த வர்ண(!) விநாயகர் அதாவது முற்றிலும் இராசயணப் பொருட்களால் செய்யப்படும் விநாயகரால் ஆண்டு தோறும் மதக்கலவரத்திற்கான பிள்ளையார் சுழியாகவே மட்டுமில்லாமல் கடற்கரையும், கடல் நீரையும் மாசு படுத்தும் செயலாகவே இருக்கின்றன. இதையேன் ஆத்திகர்கள் கண்டிப்பதே இல்லை.
பிள்ளையார் சிலைகளால் பக்தியை விட மிகுந்து வளர்வது மதக்கலவரங்கள் தான். பார்வதியின் திரண்ட அழுக்கில் இருந்து தோன்றிய பிள்ளையார் போன்ற குப்பைக் கதைகளை மெய்யாக்கும் விதமாக பூமாதேவியின் அழுக்காக மாறிக் கொண்டு இருக்கிறது பிள்ளையார் சிலைகள்.
எங்கள் ஊரிலும் பிள்ளையார் ஊர்வலம் உண்டு, ஆனால் கடலில் துக்கிப் போட மாட்டார்கள். பத்திரமாக நீலாயதாட்சி அம்மன் கோவிலில் ஒரு இடத்தில் வைத்திருந்து, அடுத்த ஆண்டு புது வண்ணம் அடித்து பயன்படுத்துவார்கள்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
56 கருத்துகள்:
////இராசயணப் பொருட்களால் செய்யப்படும் விநாயகரால் ஆண்டு தோறும் மதக்கலவரத்திற்கான பிள்ளையார் சுழியாகவே மட்டுமில்லாமல் கடற்கரையும், கடல் நீரையும் மாசு படுத்தும் செயலாகவே இருக்கின்றன. இதையேன் ஆத்திகர்கள் கண்டிப்பதே இல்லை.//////
நீரை மாசுபடுத்துதுன்னு சொல்றது ஒத்துக் கொள்ளப்பட வேண்டியதுதான்.
ஆனா, வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கர விஷயம் பெருசா ஒண்ணும் பாதிக்காது என்பது அடியேன் எண்ணம்.
மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு 100 பெரிய புள்ளையார் இருப்பாரா?
பேப்பர் மெஷ்ல பெரிய ரசாயணம் இருக்காது. பெயிண்ட்ல கொஞ்சம் இருக்கும்.
கடல்ல கூவமே கலக்குது. அதைவிட இது பெரிய மோசம் இல்லை.
ஆனா, பர்ஸனலி, எனக்கு இது தவறான செயல்னுதான் தோணுது.
ஆனா, அதை வச்சு, ஆத்திக்ர் ஜல்லி அடிக்கரது தவறுன்னும் தோணுது ;)
///பிள்ளையார் சிலைகளால் பக்தியை விட மிகுந்து வளர்வது மதக்கலவரங்கள் தான்.////
இதுக்கு காரணம் யாருங்க? ;)
சபாஷ்!
நான் இங்கே அந்த ஊர்வலத்தில் சிறுவர்கள் ரௌடித்தனமாய்க் கத்திக் கொண்டு போவதைக் கண்டு வருத்தப்பட்டேன்!
எனக்கு என் சிறு பிராயத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு திருப்பாவை, திருவம்பாவை பாடிக் கொண்டு அக்கிரகாரத்தை சுற்றி வந்தது ஞாபகத்துக்கு வந்தது.
சர்வேஷன்,
புகைப்பிடிப்பதால் மாசு கெடுகிறது என்றும் கூட சொல்கிறார்கள், புகைபிடிப்பதன் மூலம் வெளியிடப்படும் புகை தொழிற்சாலைகளின் புகையை ஒப்பு நோக்க விழுக்காடு மிக மிக மிகக் குறைவு. வலிந்து மாசுக் கலப்பதைத் தவிர்க்கலாம் அளவில் மிகக் குறைந்ததென்றாலும்.
இந்த கொண்டாட்டங்களினால் இந்து வெறியைத் தூண்டியதைத் தவிர்த்து வெறு என்ன வளர்ந்திருக்கிறது,
நான் கேட்ட 'சிறுவர் ஒண்ணுக்கு' பத்தி எதுவுமே சொல்லவில்லை நீங்கள்.
//SurveySan said...
///பிள்ளையார் சிலைகளால் பக்தியை விட மிகுந்து வளர்வது மதக்கலவரங்கள் தான்.////
இதுக்கு காரணம் யாருங்க? ;)
//
பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக ஐஸ் ஹவுஸ் பகுதிக்குச் செல்லும் போது மசூதிகளுக்கு அருகில் வேண்டுமென்றே எழுப்பப்படும் டெசிபல்களுக்கும் எகிறும் பல்ஸ் ஆகியவற்றிற்கு யார் காரணம் ?
//பரிசல்காரன் said...
சபாஷ்!
நான் இங்கே அந்த ஊர்வலத்தில் சிறுவர்கள் ரௌடித்தனமாய்க் கத்திக் கொண்டு போவதைக் கண்டு வருத்தப்பட்டேன்!//
பரிசல்,
இது போன்ற ஊர்வலங்கள் தான் பிஞ்சிலேயே நஞ்சு கலக்கிறது. இந்து என்றாலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பார்பன சிறுவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதையும் அறிந்திருப்பீர்கள், பார்பனச் சிறுவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு இது போன்ற தேவையற்றவற்றில் கவனம் செல்லாததுமே காரணம்
சபாஷ் கோவி.கண்ணன். நான் ஆத்திகந்தான். இந்த சதுர்த்திக்கு கூட கொழுகட்டை செய்து கொண்டாடினோம்.
ஆனால் எனக்கும் இதே கேள்விகள்தான். ஆனால் யார் பதில் சொல்வது?
இன்னொரு விஷயம், மேலே பின்னூட்டத்தில் சொன்ன ஒருவர் 100 சிலைதானே என்றார். இங்காவது பரவாயில்லை. கடல். ஹைதராபாத்தில் அனைத்து சிலைகளும் நகரின் நடுவில் உள்ள ஹிஸைன்சாகர் ஏரியில் கரைக்கப்படும். எத்தனை தெரியுமா? மனதை திடப் படுத்திக்கொள்ளுங்கள், போன வருடம் 6,000+ சிலைகள். :(
அனைத்தும் களிமண்ணாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் பெரும்பாலான சிலைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்டு இராசாயன வர்ணங்கள் பூசப்படுகின்றன. அதைவிட மனதை வருத்தப்பட வைக்கும் விசயம், அவற்றை கடலில் ஆழத்தில் போடாமல் கடற்கரையிலேயே கரைக்க முயற்சி செய்வது, குறைந்தது ஒரு படகில் வைத்து கடலில் கொஞ்ச தூரம் சென்று கரைக்கலாம்.
படங்கள் மனதை பிசைகின்றன :(
25 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இவை இல்லை. இராம கோபாலன் வகையறா கீழக்கரையில் ஆரம்பித்தது. சென்னையில் விநாயகர் முரளி என்பவர் திருவல்லிக்கேணியில் தொடர்ந்தார். பின்னர் இது இங்கு சாஸ்திரமாகிவிட்டது.
//வெண்பூ said...
சபாஷ் கோவி.கண்ணன். நான் ஆத்திகந்தான். இந்த சதுர்த்திக்கு கூட கொழுகட்டை செய்து கொண்டாடினோம்.//
தகவலுக்கு நன்றி !, எனக்கு சிலைவழிபாடுகளில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், இல்லத்தினர் மகிழ்ச்சிகாக எங்கள் வீட்டிலும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்கள் எப்போதும் உண்டு. மற்ற சாமிகள் படமாக இருந்தாலும் எங்கள் வீட்டு பூசை அறையில் பிள்ளையாருக்கு மட்டும் தான் சிலையும் அதற்கு நல்ல அலங்காரம் இருக்கும்.
//ஆனால் எனக்கும் இதே கேள்விகள்தான். ஆனால் யார் பதில் சொல்வது?//
சொல்லமாட்டாங்க பிள்ளையாரை இந்துவெறிக்குத் தானே பயன்படுத்துகிறார்கள் அது அவர்களுக்கே தெளிவாகத் தெரியும்
//இன்னொரு விஷயம், மேலே பின்னூட்டத்தில் சொன்ன ஒருவர் 100 சிலைதானே என்றார். இங்காவது பரவாயில்லை. கடல். ஹைதராபாத்தில் அனைத்து சிலைகளும் நகரின் நடுவில் உள்ள ஹிஸைன்சாகர் ஏரியில் கரைக்கப்படும். எத்தனை தெரியுமா? மனதை திடப் படுத்திக்கொள்ளுங்கள், போன வருடம் 6,000+ சிலைகள். :(//
உசேன் சாகர் ஏரி சென்னை கூவத்தை விட தூய்மை கேடானது அதில் எப்படித்தான் மனம் வந்து பூஜை செய்து பிள்ளையாரைத் தூக்கிக் போடுகிறார்களோ, ஆதரவற்றவராக இறப்பவர்களுக்குக் கூட இவ்வளவு கொடுமையான இறுதிச் சடங்கு நடக்காது.
துக்கத்தில் பங்கெடுத்தற்கும் கருத்தாதரவிற்கும் மிக்க நன்றி வெண்பூ !
//நான் கேட்ட 'சிறுவர் ஒண்ணுக்கு' பத்தி எதுவுமே சொல்லவில்லை நீங்கள்.///
என்னை பாதிக்காது.
let me rephrase, அரசியல் நோக்குக்காக சீல கட்சிகள் புள்ளையாரை பகடையாக்குவது எனக்கு ஏற்பில்லை.
ஆனால், பக்தகோடிகள், புள்ளையாரை ஆத்துலயோ கொளத்துலையோ கெணத்துலையோ கடல்லையோ, ஏதோ காரணத்துக்காக போடறாங்களே, அது ஓ.கே.
அதிகாலை ஐந்து மணிக்கு திருப்பாவை, திருவம்பாவை பாடிக் கொண்டு அக்கிரகாரத்தை சுற்றி வந்தது ஞாபகத்துக்கு வந்தது.
நீங்களுமா? பரிசல்காரன்.
நான் சிறுவனாக இருந்த போது பக்கத்தில் இருந்த ஐயர்மார்கள்,பிள்ளையாரை கிணற்றில் போடுவதை மட்டுமே பார்த்திருக்கேன்,அதுவும் அளவு சிறியதாகவே இருக்கும்.
இந்த மாதிரி பெரிய பெரிய பிள்ளையார்கள் எல்லாம் வடக்கே இருந்து இறக்குமதியானவையே அதுவும் 1980 க்கு மேல்.இதற்கான ஆணி வேர் வேறெதுவோ!!
ஷம்போ மஹாதேவா!
உங்கள் பதிவு எனது மனவருத்ததின் நிழலாகவே பார்க்கிறேன்.
சுகந்திர போரட்டத்தில் பிரிட்டிஷ்காரர்களின் அடக்குமுறையால் பொது இடங்களில் கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மதத்தின் பெயரால் கூட்டம் போட திரு பாலகங்காதர திலகர் ஏற்பாடு செய்த யுக்தியே இந்த விநாயகர் ஊர்வலம்.
வழிபாட்டில் சாஸ்திர முறை என்று ஒன்று உண்டு. சாஸ்திரத்தை கட்டி காக்கிறோம்
என கூறும் சிலர் செய்யும் செயலால் இறைநிலைக்கும் சாஸ்திரத்திற்கும் அவமானமே சேருகிறது.
மார்கழி மாதத்தில் சாணத்தில் கன்னி பெண்கள் அமைக்கும் விநாயகரை காலால் மிதிக்க தயங்கி சுற்றி வீட்டிற்குள் போகும் கலாச்சாரம் நம்முடையது.
கணபதியம் எனும் விநாயகரை முழுமுதற் கடவுளாக பார்க்கும் பிரிவினர் அருகம்புல் மேல் கால் பட்டால் தவறு என அருகம்புல் இருக்கும் பாதையில் நடப்பதில்லை.
இத்தகைய சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது... பிளஸ்டர் ஆம் பாரிஸ் எனும் வேதி பொருளால் செய்த உருவ சிலையை குளம் ஏரிகளில் கரைக்கிறேன் என பேர்வழி என விக்ரஹத்தின் முகம் வயிறு பகுதிகளில் காலால் உதைத்தும் -மிதித்தும்-ஏறி நின்றும் கரைப்பது மஹா பாதகம் என்றே தோன்றுகிறது.
எனக்கு ஏற்பட்ட எளிய யோசனையை இந்த தருணத்தில் முன்வைக்கிறேன்.
பெரிய அளவில் விக்ரஹத்தை செய்து அதை கரைப்பதால் ஏற்படும் பொருள் செலவு மற்றும் சுற்றுசூழல் பிரச்சனையை சமாளிக்க...
பூஜை முடிந்ததும் அந்த பெரிய விக்ரஹத்தில் உள்ள ஆற்றலை மஞ்சளால் பிடித்த சிறு விநாயக உருவத்திற்கு மந்திரம் மூலம் மாற்றம் அடைய செய்து குளத்தில் கரைக்கலாம்.
பெரிய விக்ரஹத்தை பத்திரமாக வைத்திருந்து அடுத்த வருடம் பயன்படுத்தலாம். மஞ்சளை கரைப்பதால் குளம் ஏரி சுத்திகரிக்கப்படும்.
உண்மையான பக்திதான் இவர்களின் குறிக்கோள் என்றால் இந்த வழி சிறந்தது.
மேலும் எந்த மத நூலும் பிற மதத்தை வெறியுடன் பார்க்க தூண்டியது இல்லை.
மதத்தின் பெயரால் மதம் பிடிக்கும் செயலை இனியாவது இல்லாமல் போக கணபதியை வேண்டுவோம்.
ஸ்வாமி ஓம்கார்,
நீங்கள் உண்மையான ஆன்மிகப் பற்றாளர் என்று உங்கள் பின்னூட்டம் வழி மீண்டும் நிருபித்திருக்கிறீர்கள் பாராட்ட்டுக்கள்.
உங்களைப் போன்று ஊருக்கு நான்கு நல்ல மனிதர்கள் இருப்பதனால் தானோ பருவம் தப்பினாலும் முற்றிலும் ஏமாற்றாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
// வடுவூர் குமார் said...
அதிகாலை ஐந்து மணிக்கு திருப்பாவை, திருவம்பாவை பாடிக் கொண்டு அக்கிரகாரத்தை சுற்றி வந்தது ஞாபகத்துக்கு வந்தது.
நீங்களுமா? பரிசல்காரன்.
நான் சிறுவனாக இருந்த போது பக்கத்தில் இருந்த ஐயர்மார்கள்,பிள்ளையாரை கிணற்றில் போடுவதை மட்டுமே பார்த்திருக்கேன்,அதுவும் அளவு சிறியதாகவே இருக்கும்.
இந்த மாதிரி பெரிய பெரிய பிள்ளையார்கள் எல்லாம் வடக்கே இருந்து இறக்குமதியானவையே அதுவும் 1980 க்கு மேல்.இதற்கான ஆணி வேர் வேறெதுவோ!!
3:25 PM, September 07, 2008
//
குமார் அண்ணா,
ப்ரொபைல் படத்தில் புதிகாத இரு சிறுவர்கள், அமைத்திக்கு சொந்தமான அந்த முகத்துச் சிறார்கள் யார் ?
//SurveySan said...
//நான் கேட்ட 'சிறுவர் ஒண்ணுக்கு' பத்தி எதுவுமே சொல்லவில்லை நீங்கள்.///
என்னை பாதிக்காது.
let me rephrase, அரசியல் நோக்குக்காக சீல கட்சிகள் புள்ளையாரை பகடையாக்குவது எனக்கு ஏற்பில்லை.
ஆனால், பக்தகோடிகள், புள்ளையாரை ஆத்துலயோ கொளத்துலையோ கெணத்துலையோ கடல்லையோ, ஏதோ காரணத்துக்காக போடறாங்களே, அது ஓ.கே.
2:58 PM, September 07, 2008
//
என்னது உங்களைப் பாதிக்காதா ? உருவங்களுக்கு நீங்களும் மதிப்பு கொடுக்காதவரா ?
நம்ம வீட்டில் இருக்கும் சாமி படத்தை நடுரோட்டில் நாமாளே விரும்பி செருப்பால் அடிச்சா தப்பு இல்லை, நாத்திகன் அடிச்சாதான் தப்பா ?
நல்லா இருக்கு சார் உங்கள் இறை நம்பிக்கை.
கோவி,
அடுத்த இரு மாதங்கள் பண்டிகைக் காலமாக இருப்பதால் குயவர்களுக்கு அதிக வருமானம் வேண்டித்தான் விநாயகர் சிலை செய்து அதைக் கடலில் கரைக்கும் பழக்கம் இருந்தது. அதை கமர்சியலாக்கியது ராம கோபாலன் வகையறா.
மண்ணாக இருந்தாலும் பரவாயில்லை கரைந்துவிடும். பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யும் சிலைகளின் நிலை ரெம்பக் கொடுமையானது. கை இழந்து, கால இழந்து தலை இழந்த முண்டமாக என்று எத்தனை சித்திரவதை. நாம் அதிகமா நேசிக்கும் ஒருவருக்கு ஏற்படும் சிறு துன்பத்தைக் கூடத் தாங்க மாட்டோம் பின் எப்படி இதைச் செய்ய மனம் வருகிறது.
பிரசங்கத்துக்கு முன் பூனையைப் பிடித்துத் தூணில் கட்டும் சம்பிரதாயம் போல்தான் இது. உண்மைக் காரணம் மறைந்து, மதத்துவேஷம் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக ஆகிவிட்டது கொடுமை.
கரைக்கும் வரை சிலைக்குப் பாதுகாப்பும், போகுவரத்துச் சிரமும் என போலிசார் படும் சிரமம் வெகு அதிகம்.
வடுவூர் குமார் மற்றும் பரிசல்காரன் சிறுவயதிலேயே இதெல்லாம் செய்திருக்கிறீர்கள். ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. ஏன் கோவியார் வீட்டில் கூட சிறப்பாக கொண்டாடுகிறார்கள். எனக்கென்னவோ இதெல்லாம் அதிகமாகக் கொண்டாடுவது(பிள்ளையார் பவனி) மும்பை குண்டு வெடிப்புக்கு அப்புறம் என்றுதான் நினைக்கிறேன் (சரியாகத் தெரிந்தவர்கள் சொல்லலாம்). தென் இந்தியாவிற்கு பரவ பாம்பே படமும் ஒரு காரணம். எங்கள் வீட்டில் பொங்கல் அன்று பொங்கல் மேடையில் கிழக்கு பாக்க வைக்கப் படும் அருகம்புல் சாணப் பிள்ளையார்தான் எனக்கு மிகவும் பரிச்சயமான கண்பத்!
மற்றபடி எந்த கொண்டாட்டமும் செய்ததில்லை. அதற்காக நான் நாத்திகன் என்று சொல்வதுமில்லை.
:)))))))))
///
அந்த பெரிய விக்ரஹத்தில் உள்ள ஆற்றலை மஞ்சளால் பிடித்த சிறு விநாயக உருவத்திற்கு மந்திரம் மூலம் மாற்றம் அடைய செய்து குளத்தில் கரைக்கலாம்.
///
////என்னது உங்களைப் பாதிக்காதா ? உருவங்களுக்கு நீங்களும் மதிப்பு கொடுக்காதவரா ?
நம்ம வீட்டில் இருக்கும் சாமி படத்தை நடுரோட்டில் நாமாளே விரும்பி செருப்பால் அடிச்சா தப்பு இல்லை, நாத்திகன் அடிச்சாதான் தப்பா ?
நல்லா இருக்கு சார் உங்கள் இறை நம்பிக்கை.//////
கோவி, ரொம்பக் கொடுமைய சார் நீங்க பாயிண்ட்ட புடிக்கரது.
சிறுவர்கள், 'அறியாமல்' செய்யும் பிழை என்னை பாதிக்காது.
அதுக்குன்னு, கொழுப்பெடுத்து 'செருப்பால்' அடிக்கும் பொறம்போக்குச் செயல் என்னை பாதிக்கும், எரிச்சல் அடையவும் செய்யும். போதுமா?
;)
tbcd, கோவி,
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஓம்கார் சொல்வது மேலோட்டமா பாத்தா சிரிப்பை வரவழைச்சாலும் இது ஒரு நல்ல ப்ளான்.
சக்தி-ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் கண்டூக்காதீங்க.லூஸ்ல விடுங்க.
ஆனா, 100 பிள்ளையாரை கரைப்பதர்க்கு பதில், எல்லா பிள்ளையாரையும் வரிசையா கடல் கரைல ஒக்கார வச்சிட்டு எல்லா சிலையிலிருந்தும் ஒவ்வொரு பிட்டை எடுத்து ஒரு பொது பிள்ளையாரை உருவாக்கி அதை மட்டும் கடலில் கரைத்து, மத்த பிள்ளையார்ஸை ரீ-சைக்கிள் பண்ணச் சொல்லணும்.
இதை யாராச்சும் 'பெரியவா' அடுத்த வருஷம் முன்னின்று நடத்த வழிகாட்டணும். ;)
நல்ல யோசனை இது.
அப்படியே இதுக்கு, 'சமத்துவம், சன்மார்கம், புது நெறி' அது இதுன்னு புது கான்செப்ட பேரா வெச்சு, இதை 2009லிருந்து புது சதுர்த்தி நிறைவு விழாவாக மாற்றி,........ etc.. etc..
seriously, that is a good plan ;)
//////
அந்த பெரிய விக்ரஹத்தில் உள்ள ஆற்றலை மஞ்சளால் பிடித்த சிறு விநாயக உருவத்திற்கு மந்திரம் மூலம் மாற்றம் அடைய செய்து குளத்தில் கரைக்கலாம்.
///////
ஸ்வாமி ஓம்கார் சார், நீங்க பாட்டுக்கு தேமேன்னு ஏதோ கதையெல்லம் எழுதிக்கிட்டு எங்க கண்ணுல படாம இருந்திட்டீங்க.
இப்ப இங்க வந்து கருத்ஸ் எல்லாம் சொல்லிட்டீங்க. இனி உங்க நெலம கஷ்டம்தேன் ;)
இதுக்கும்..ஒரு :)))))
///
ஸ்வாமி ஓம்கார்
Age: 108
Location: ஈஸ்வரனின் மனதில் : புருவ மத்தியில
///
ஃஃஃஃஃ
ரூட் காஸை விட்டுவிட்டு, சிம்டத்துக்கு சிகிச்சையா... :P
ஃஃஃஃ
சிரிப்பான்களை ஒதுக்கிவிட்டு, இந்த அலப்பரை தேவையா..ஏன் அந்தக்காலத்தில் செய்ததுப் போல் சின்ன களிமண் பிள்ளையார் வைச்சி வீட்டிலே வைச்சி வழிப்படக்கூடாது...கிணற்றிலே போட்டாலும்..பாதகமில்லையே..அதில்..
///
அப்படியே இதுக்கு, 'சமத்துவம், சன்மார்கம், புது நெறி' அது இதுன்னு புது கான்செப்ட பேரா வெச்சு, இதை 2009லிருந்து புது சதுர்த்தி நிறைவு விழாவாக மாற்றி,........ etc.. etc..
///
//
இந்த வர்ண(!) விநாயகர் அதாவது முற்றிலும் இராசயணப் பொருட்களால் செய்யப்படும் விநாயகரால் ஆண்டு தோறும் மதக்கலவரத்திற்கான பிள்ளையார் சுழியாகவே மட்டுமில்லாமல் கடற்கரையும், கடல் நீரையும் மாசு படுத்தும் செயலாகவே இருக்கின்றன. இதையேன் ஆத்திகர்கள் கண்டிப்பதே இல்லை.
//
ஆத்திகர்களுக்கு மனம் புண்படுகிறதோ இல்லையோ, ஆனால் இது குறித்து அவர்களுக்கு கேள்விகளே இல்லையா?? அது என்ன தான் சாஸ்திரமாய் இருந்தாலும், முதல் நாள் சாமி என்று கும்பிட்டு விட்டு, அடுத்த நாள் இப்படி குப்பையில் போடுவது சரியா என்று அவர்களுக்கு கேள்வி வரவில்லையா??
ஆனால், மதக்கலவரங்களுக்கு காரணம் பிள்ளையார் என்ற ரீதியில் நீங்கள் எழுதுவது எனக்கு ஒப்புதல் இல்லை. நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், கலவரத்திற்கு காரணம் பிள்ளையார் மட்டுமா?? வேறு யாரும்/எதுவும் இல்லையா??
களிமண் பிள்ளையாரும்,வீட்டில் கிணறுகளும் இருந்தவரை சர்ச்சை ஏதும் இல்லாமலிருந்தது. வர்ண (Plaster of paris) பிள்ளையார்கள் வந்தது...கிணறு இல்லா வீடுகள்..தவிர..வடநாடுகள் போல பிள்ளையார் ஊர்வலம்..இதெல்லாம் வந்து சர்ச்சைகளையும் உருவாக்கியது..சுற்றுப்புறசூழலுக்கு கேடும் உண்டாக்கிவிட்டது.
//தென் இந்தியாவிற்கு பரவ பாம்பே படமும் ஒரு காரணம். எங்கள் வீட்டில் பொங்கல் அன்று பொங்கல் மேடையில் கிழக்கு பாக்க வைக்கப் படும் அருகம்புல் சாணப் பிள்ளையார்தான் எனக்கு மிகவும் பரிச்சயமான கண்பத்!
மற்றபடி எந்த கொண்டாட்டமும் செய்ததில்லை. அதற்காக நான் நாத்திகன் என்று சொல்வதுமில்லை.
//
ஜோதிபாரதி,
நாயகன் படத்திலும் கூட ஒரு காட்சி உண்டு. மணிரத்னத்திற்கு மும்பை பிள்ளையார் மிகவும் பிடித்தது போலும்.
//வடகரை வேலன் said...
சஞ்சய் கிராமத்தில் காணாமல் போனவை பதிவு போட்டிருக்கார் பாருங்க
6:55 PM, September 07, 2008
//
அண்ணாச்சி இணைப்புக்கு நன்றி !
//TBCD said...
:)))))))))
///
அந்த பெரிய விக்ரஹத்தில் உள்ள ஆற்றலை மஞ்சளால் பிடித்த சிறு விநாயக உருவத்திற்கு மந்திரம் மூலம் மாற்றம் அடைய செய்து குளத்தில் கரைக்கலாம்.
///
10:08 PM, September 07, 2008
//
டிபிசிடி ஐயர்,
ஒருவர் பெயரில் இருக்கும் பட்டாவை இன்னொருவருக்கு மாற்றுவது இல்லையா ? அவருடைய நம்பிக்கையில் அவர் சொல்கிறார். ஒரு நூலைப் படித்தால் அதிலிருந்து செய்திகளை நமது மூளைக்குள் மாற்றிக் கொள்வது இல்லையா ? உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள். சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. நல்ல ஆன்மிக வாதிகளும் இருக்கிறார்கள்.
//ஆனா, வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கர விஷயம் பெருசா ஒண்ணும் பாதிக்காது என்பது அடியேன் எண்ணம்.//
எல்லோரும் இப்படி நினைச்சா என்னங்க ஆவது?
//உங்களைப் போன்று ஊருக்கு நான்கு நல்ல மனிதர்கள் இருப்பதனால் தானோ பருவம் தப்பினாலும் முற்றிலும் ஏமாற்றாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.//
ஓ.... அறிவியல் பூர்வமான பதில்...
//SurveySan said...
ஸ்வாமி ஓம்கார் சார், நீங்க பாட்டுக்கு தேமேன்னு ஏதோ கதையெல்லம் எழுதிக்கிட்டு எங்க கண்ணுல படாம இருந்திட்டீங்க.
இப்ப இங்க வந்து கருத்ஸ் எல்லாம் சொல்லிட்டீங்க. இனி உங்க நெலம கஷ்டம்தேன் ;)//
சர்வேஷன்,
அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், குதர்கவாதிகள் வேண்டுமென்றே எதையாவது எழுதினால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பதிலால் அவர்கள் புண்படுவார்களா என்பது தெரியாது, அந்த நோக்கத்தில் நான் பதில் அளிப்பது இல்லை. சுவாமி ஓம்கார் போன்ற உண்மையான ஆன்மிக பெருமக்களை எனது பதிவில் எவரும் அவமதிக்க நான் அனுமதி அளிக்கமாட்டேன். இது கோவி.கண்ணனின் காலம், இங்கே யாரையும் அவமதிப்பது இல்லை.
//வழிபாட்டில் சாஸ்திர முறை என்று ஒன்று உண்டு. சாஸ்திரத்தை கட்டி காக்கிறோம்
என கூறும் சிலர் செய்யும் செயலால் இறைநிலைக்கும் சாஸ்திரத்திற்கும் அவமானமே சேருகிறது.//
என்ன சொல்ல வரிங்க... இறைவழிபாடு சாஸ்திரம் படிச்சவங்களுக்கு மட்டும் சொந்தமா? சாஸ்திரத்தை அறியாதவர்கள் என்ன செய்வார்கள்.
//SurveySan said...
கோவி, ரொம்பக் கொடுமைய சார் நீங்க பாயிண்ட்ட புடிக்கரது.
சிறுவர்கள், 'அறியாமல்' செய்யும் பிழை என்னை பாதிக்காது. //
இப்படி பொருப்பில்லாமல் விட்டுச் செல்லும் சிலைகளின் மீது அறிந்தே செய்தால் என்ன அறியாமல் செய்தால் என்ன ? ஒரு பொருளின் மதிப்பு அது இருக்கும் இடத்தைப் பொருத்து தானே. ஒரே தண்ணீர் தான், கால்கழுவிய பின் அதற்கான மதிப்பும், பூஜை அறையில் தீர்த்தமாக வைக்கப்பட்ட பிறகு அதன் மதிப்பும் வேறு வேறானது.
//அதுக்குன்னு, கொழுப்பெடுத்து 'செருப்பால்' அடிக்கும் பொறம்போக்குச் செயல் என்னை பாதிக்கும், எரிச்சல் அடையவும் செய்யும். போதுமா?
;)//
ஆக நம்பிக்கையோடு சீவி சிங்காரிச்சு செருப்பால் அடிப்பது தப்பி இல்லைங்கிறிங்க. நம்பிக்கை இல்லாமல், சீவி சிங்காரிக்காமல் அடித்தால் தான் தப்பா ? கடவுள் உங்கள் கண்ணைத் திறக்கட்டும்.
// SurveySan said...
tbcd, கோவி,
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஓம்கார் சொல்வது மேலோட்டமா பாத்தா சிரிப்பை வரவழைச்சாலும் இது ஒரு நல்ல ப்ளான்.
சக்தி-ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் கண்டூக்காதீங்க.லூஸ்ல விடுங்க.
ஆனா, 100 பிள்ளையாரை கரைப்பதர்க்கு பதில், எல்லா பிள்ளையாரையும் வரிசையா கடல் கரைல ஒக்கார வச்சிட்டு எல்லா சிலையிலிருந்தும் ஒவ்வொரு பிட்டை எடுத்து ஒரு பொது பிள்ளையாரை உருவாக்கி அதை மட்டும் கடலில் கரைத்து, மத்த பிள்ளையார்ஸை ரீ-சைக்கிள் பண்ணச் சொல்லணும்.
நல்ல யோசனை இது.
அப்படியே இதுக்கு, 'சமத்துவம், சன்மார்கம், புது நெறி' அது இதுன்னு புது கான்செப்ட பேரா வெச்சு, இதை 2009லிருந்து புது சதுர்த்தி நிறைவு விழாவாக மாற்றி,........ etc.. etc..
seriously, that is a good plan ;)
//
நல்ல யோசனை பாராட்டுகிறேன்.
//இதை யாராச்சும் 'பெரியவா' அடுத்த வருஷம் முன்னின்று நடத்த வழிகாட்டணும். ;)//
பெரியவாதான் செய்யனும் என்று எதும் பட்டா போட்டு இருக்கா ? அவர்கள் தான் இந்துக்களின் ஒரே வழிகாட்டியா ? காரணகர்த்தாக்களிடமே சென்று வரம் கேட்பது போல் இருக்கிறது
//அது சரி said...
ஆத்திகர்களுக்கு மனம் புண்படுகிறதோ இல்லையோ, ஆனால் இது குறித்து அவர்களுக்கு கேள்விகளே இல்லையா?? அது என்ன தான் சாஸ்திரமாய் இருந்தாலும், முதல் நாள் சாமி என்று கும்பிட்டு விட்டு, அடுத்த நாள் இப்படி குப்பையில் போடுவது சரியா என்று அவர்களுக்கு கேள்வி வரவில்லையா??//
இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கில் அவர்களது உடல்களை பத்திரமாக புதைப்பார்கள் அல்லது எரிப்பார்கள், அந்த மரியாதைக் கூட 'சக்தி' உடையவர் என்று நம்பப்படும் பிள்ளையாருக்கு தரவில்லையே என்று எவரும் நினைப்பது இல்லை, எதோ நம்பிக்கை என்றாலும் சுற்றுப்புர சூழல் மாசு படுகிறது என்பதற்காகவே இதனை எழுதினேன்.
//ஆனால், மதக்கலவரங்களுக்கு காரணம் பிள்ளையார் என்ற ரீதியில் நீங்கள் எழுதுவது எனக்கு ஒப்புதல் இல்லை. நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், கலவரத்திற்கு காரணம் பிள்ளையார் மட்டுமா?? வேறு யாரும்/எதுவும் இல்லையா??
1:33 AM, September 08, 2008
//
பிள்ளையார் வெறும் பெயர்காரணம் தான், பிள்ளையாரை வைத்து அரசியல் செய்பவர்களே காரணம்.
//ஃஃஃஃஃ
ரூட் காஸை விட்டுவிட்டு, சிம்டத்துக்கு சிகிச்சையா... :P
ஃஃஃஃ
சிரிப்பான்களை ஒதுக்கிவிட்டு, இந்த அலப்பரை தேவையா..ஏன் அந்தக்காலத்தில் செய்ததுப் போல் சின்ன களிமண் பிள்ளையார் வைச்சி வீட்டிலே வைச்சி வழிப்படக்கூடாது...கிணற்றிலே போட்டாலும்..பாதகமில்லையே..அதில்..
//
டிபிசிடி ஐயர்
ரூட் காஸையே ஆராய்ந்து முதலில் அதை அகற்றுவோம் என்று முனைந்தால், நோய் தொற்றியவர்களின் நிலை ? நோயின் பாதிப்பால் அகால மரணமடைவதையும் தடுக்க சிகிச்சையும் தேவைதான். வேறுபாடுகளைக் களைய இருவழி, ஒன்று பேதங்களே இல்லாமல் செய்தல், இன்னொன்று அனைத்தையும் சமமாக கருதுதல், முன்னது வேற்றுமையின்மை, பின்னது வேற்றுமையில் ஒற்றுமை, சரியான வழியில் சென்றால் இரண்டுமே சரிதான்.
///kanchana Radhakrishnan said...
களிமண் பிள்ளையாரும்,வீட்டில் கிணறுகளும் இருந்தவரை சர்ச்சை ஏதும் இல்லாமலிருந்தது. வர்ண (Plaster of paris) பிள்ளையார்கள் வந்தது...கிணறு இல்லா வீடுகள்..தவிர..வடநாடுகள் போல பிள்ளையார் ஊர்வலம்..இதெல்லாம் வந்து சர்ச்சைகளையும் உருவாக்கியது..சுற்றுப்புறசூழலுக்கு கேடும் உண்டாக்கிவிட்டது.
6:11 AM, September 08, 2008
//
இராத கிருஷ்ணன் ஐயா,
கருத்துக்கு நன்றி !
ஓம்கார் சொன்னது அதாவது வெள்ளையர்கள் ஆண்ட சமயம் மக்கள் கூட்டம் கூடத் தடை இருந்துச்சு. திலகர், மதசம்பிரதாயமுன்னு பிள்ளையார் பூஜையை 10 நாள் கொண்டாட்டமா ஆரம்பிச்சு அப்பக் கூடும் கூட்டத்தில் சுதந்திரப்போராட்ட விசயங்களை மக்கள் மனசுக்குள்ளே பரப்பினார்.
ஆனா... இது தென் இந்தியாவில் எப்ப எப்படி வந்துச்சுன்றது எனக்குத் தெரியலை.
"ரசாயனவர்ணங்களையெல்லாம் பூசிப் பிள்ளையார் செஞ்சா அதுக்குப் பலன் கிடையாது. வெறும் களிமண் பிள்ளையார் அதுவும் 9 அங்குலம் உயரம் மட்டும் செஞ்சு கும்பிட்டாத்தான் உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும் சேரும். உங்க புள்ளைங்க படிக்காமலேயே நல்ல மார்க் வாங்குவாங்க. அமெரிக்கா போய்க் கை நிறைய சம்பாதிப்பாங்க" ன்னு யாராவது சாமியார் அருள்வாக்கு அருளினால் மக்கள் மனம் மாற வாய்ப்பு இருக்கு. இதுக்கு டெஸ்டிமனி கொடுக்க நாலு பேர் வச்சு நாமே விளம்பரம் ஒன்னு பத்திரிக்கையில் கொடுக்கலாம். ஒன்பது அங்குலத்துக்கு மேலே எவ்வளவு பெருசாப் பண்ணூறாங்களோ அத்தனை மடங்கு துயரம் வருமுன்னு அதுக்கும் நாலுபேரை வச்சுச் சொல்ல வைக்கலாம்.
பெரிய பெரிய பிள்ளையார் செஞ்சாலும் அதை இப்படிப்போட்டுப் பாழாக்க எனெக்கெல்லாம் மனசு வராது. நம்ம கலெக்ஷனுக்கு வச்சுக்குவேன்.
சாமி அறையில் இருக்கும் நம்ம வீட்டுப் பிள்ளையார் பஞ்சலோகம். அவரைக் கரைக்க எல்லாம் முடியாது. வேணுமுன்னா ஒரு சின்ன வெல்லக்கட்டியைப் பிடிச்சுப் பிள்ளையாராக் கும்பிட்டு, அவரைக் கரைச்சுக் குடிச்சுறலாம்.
//துளசி கோபால் said...

9:42 AM, September 08, 2008//
துளசி அம்மா,
தகவல்கள் நன்றி, நீங்கள் தரும் யோசனையும் அருமை.
//இது போன்ற ஊர்வலங்கள் தான் பிஞ்சிலேயே நஞ்சு கலக்கிறது. இந்து என்றாலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பார்பன சிறுவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதையும் அறிந்திருப்பீர்கள், பார்பனச் சிறுவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு இது போன்ற தேவையற்றவற்றில் கவனம் செல்லாததுமே காரணம்//
மத்தவனுங்களையும் படிக்கவிட்டா அப்புறம் பார்புகளுக்கு போட்டி வந்துவிடாதா?
//கோவி.கண்ணன் said...
ஸ்வாமி ஓம்கார்,
நீங்கள் உண்மையான ஆன்மிகப் பற்றாளர் என்று உங்கள் பின்னூட்டம் வழி மீண்டும் நிருபித்திருக்கிறீர்கள் பாராட்ட்டுக்கள்.///
OK.சரி.
//உங்களைப் போன்று ஊருக்கு நான்கு நல்ல மனிதர்கள் இருப்பதனால் தானோ பருவம் தப்பினாலும் முற்றிலும் ஏமாற்றாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.//
இதெல்லாம் ஓவர். மழை வருவதற்கும் நல்ல மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?. இப்படியான அறிவுக்கு சம்பந்தம் இல்லாத புகழ்மொழிகள்தான் இந்தியாவின் சாபக்கேடு. ஒருவரை புகழ்வதில் கூட மூடநம்பிக்கையை ஊட்டும் கலையை .ம்ம்ம்..என்னத்த சொல்றது..மிக்க வருத்தம்
//இதெல்லாம் ஓவர். மழை வருவதற்கும் நல்ல மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?. இப்படியான அறிவுக்கு சம்பந்தம் இல்லாத புகழ்மொழிகள்தான் இந்தியாவின் சாபக்கேடு. ஒருவரை புகழ்வதில் கூட மூடநம்பிக்கையை ஊட்டும் கலையை .ம்ம்ம்..என்னத்த சொல்றது..மிக்க வருத்தம்
12:20 PM, September 08, 2008
//
தரண்,
நல்ல எண்ணங்களுக்கும் இயற்கைக்கும் தொடர்ப்பு இருப்பதாகத்தான் சொல்லுகிறார்கள், 'பெய்யென பெய்யும் மழை' என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே !
தினகரன் செய்திகளின்படி நேற்று சென்னையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை: 6,700
நல்ல ஆதங்கங்கள் உள்ள பதிவு. பாராட்டுக்கள்.
1.உங்கள் ஆதங்கம் மாசுபரவுதல் குறித்து என்றால்; தக்க தருணத்தில் மாசுகட்டுப்பாட்டுவாரியம், போகி டயர் எரிப்பு, தீபாவளிப் பட்டாசு ஒலி அளவு போன்றவைகளுக்குத் தடைகள் போட்டது போல் பிள்ளையார் செய்யப்பட வேண்டிய வேதிப் பொருள், அளவு குறித்தெல்லாம் கட்டுப்பாடுகள் கொண்டுவந்து விடும். உச்சநீதிமன்றம், பொது நல வழக்குகள் போன்றவை எதற்கு இருக்கின்றன?
2. ஆத்திகம் குறித்த ஆதங்கம் என்றால் . . . பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் ஆத்திகர்களுக்கும் எந்த அளவுக்கு சம்பந்தம் என்பது அனைவருக்கும் தெரியும்; மதுரையில் நடந்த பாராட்டு விழாவுக்கும் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கும் இருந்த சம்பந்தம் மாதிரி தானே இதுவும்?
3. இது மாதிரியான விஷயங்களைக் கிண்டலுக்குப் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர நாத்திகர்கள் உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறார்களா என்பதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா?

நான் சின்னப் பையனா இருக்குறப்போ எங்க கிராமத்தில பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூசை நடைபெறும். வீட்டில் கொழுக்கட்டை, சுண்டல் செய்வார்கள். சில பெரியவங்க வில்லுப்பாட்டு அது இதுன்னு ஏதாவது ஏற்பாடு செய்வாங்க. அவ்வளவுதான், விநாயக சதுர்த்தி.
நேத்து மதியம் கோவையிலிருந்து பெங்களூருக்குப் பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். வழியெங்கும் எத்தனை 'விநாயகர் விஸர்ஜன' (அதாங்க புள்ளையாரு உடைப்பு) ஊர்வலங்கள்? ஒவ்வொரு டெம்போவிலும் ஒரு 3/4 அடி பிள்ளையார் சிலை. சுற்றியும் 15-20 காவிக் கொடியை தலையில் சுற்றிக் கொண்டு அவர்கள் எழுப்பும் கோஷங்கள்; அதில் தேவையில்லாமல் பாகிஸ்தானை பற்றியவை பல (கோவை நூறடி ரோடு ஊர்வலத்தில் கேட்டது).
கூர்ந்து நோக்கினால், இலக்கில்லாமல் அலையும் இளைஞர்களை அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிடுவது நன்றாகத் தெரிகிறது.
பத்து நாள் சாமியா கும்பிட்டிட்டு பதினோறாம் நாள் மண்டையில போடுறது என்ன வகை பக்தியோ? என் மனதுக்கு வருத்தமா இருக்கு.
இதையெல்லாம் பாக்கும்போது agnostic--ஆ இருந்திடலாம் போலிருக்குது.
//வழியெங்கும் எத்தனை 'விநாயகர் விஸர்ஜன' (அதாங்க புள்ளையாரு உடைப்பு) ஊர்வலங்கள்? //
இந்தியன் சொன்னது சரியாத்தான் இருக்கு:-)
நாத்திகர் உடைச்சால் பிள்ளையார் சிலை அவமதிப்பு.
ஆத்திகர் உடைச்சால் அது விஸர்ஜனம்.
மாமியார், மருமகள் மண் குடம் பொன்குடம் இதெல்லாம் தேவை இல்லாமல் நினைப்புலே வருது(-:
புள்ளையார் நிஜமாவே ரொம்பப் பாவம்தாங்க(-:
வடமொழியில இத விசர்ஜனம்னு சொல்றாங்க. ஆனா பாருங்க.... அப்படிச் செய்ய வேண்டிய பிள்ளையாருங்க களிமண்ணால ஆகியிருக்கனும். இது பிளாஸ்டர் ஆப் பாரீஸ். இதை விசிறவும் முடியாது. ஜனமும் பண்ண முடியாது. அதான் இப்பிடிக் கெடக்குது.
கொல்கொத்தாவுலயும் துர்கா பூஜா பண்றாங்க. ஆனா எல்லா துர்காவும் களிமண்ல பண்றாங்க. தலைமுடி கூட நார்களால் செய்றாங்க. இயற்கை வண்ணங்கள். அதுக்கும் மேல ஒருவிதச் செடியின் தண்டிலிருந்து எடுத்ததில் வண்ணம் பூசி அலங்காரம். அதுனால துர்காவுக்கு இந்தக் கேவலம் நடக்கலை. தண்ணீல போட்டா....சல்லுன்னு கரைஞ்சு போயிரும். அது ஏத்துக்கக் கூடியது. ஆனா இது ஏத்துக்கவே முடியாதது. பி.ஆ.பா-ல பிள்ளையார் செய்ய ஆகம சாத்திரத்துல எடமிருக்கான்னு தெரியலை.
//RATHNESH said...
2. ஆத்திகம் குறித்த ஆதங்கம் என்றால் . . . பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் ஆத்திகர்களுக்கும் எந்த அளவுக்கு சம்பந்தம் என்பது அனைவருக்கும் தெரியும்; மதுரையில் நடந்த பாராட்டு விழாவுக்கும் //
ரத்னேஷ் அண்ணா,
பலர் உங்களை தேடியதில் ஞாயம் இருக்கிறது, இவ்வளவு துல்லியமாக இருவேறு நிகழ்வுகளை தொடர்பு படுத்துவர்கள் வேறு யாருமே இல்லை.
:)
//3. இது மாதிரியான விஷயங்களைக் கிண்டலுக்குப் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர நாத்திகர்கள் உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறார்களா என்பதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா?//
நாட்டார் தெய்வ வழிபாடுகளிலும், காவடி எடுக்கும் நிகழ்வுகளிலும் நாத்திகர்கள் மிகுந்து தலையிடுவதில்லை. ஆண்டுக்கு ஆண்டு வெளிப்படையாக தலைவலியாகவே நடக்கும் இந்நிகழ்வு நாத்திகனின் நாக்கும் தட்டுப்படுவதில் ஞாயம் இல்லை என்று சொல்ல முடியவில்லை. கிழே இந்தியன் பிள்ளையார் ஊர்வலத்தின் நோக்கட்த்தை நேரிடையாகவே கண்டு பதித்து இருக்கிறார்.
//வெண்பூ said...
தினகரன் செய்திகளின்படி நேற்று சென்னையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை: 6,700
1:08 PM, September 08, 2008
//
வெண்பூ,
ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை மிகவே செய்யும். பிள்ளையாரே வந்து இதெல்லாம் தேவையற்றது என்று சொன்னாலும் இவர்களெல்லாம் கேட்கப் போவதில்லை.
//Indian said...
நான் சின்னப் பையனா இருக்குறப்போ எங்க கிராமத்தில பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூசை நடைபெறும். வீட்டில் கொழுக்கட்டை, சுண்டல் செய்வார்கள். சில பெரியவங்க வில்லுப்பாட்டு அது இதுன்னு ஏதாவது ஏற்பாடு செய்வாங்க. அவ்வளவுதான், விநாயக சதுர்த்தி.//
நினைவு கூறும் தகவல்களுக்கு நன்றி !
///நேத்து மதியம் கோவையிலிருந்து பெங்களூருக்குப் பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். வழியெங்கும் எத்தனை 'விநாயகர் விஸர்ஜன' (அதாங்க புள்ளையாரு உடைப்பு) ஊர்வலங்கள்? ஒவ்வொரு டெம்போவிலும் ஒரு 3/4 அடி பிள்ளையார் சிலை. சுற்றியும் 15-20 காவிக் கொடியை தலையில் சுற்றிக் கொண்டு அவர்கள் எழுப்பும் கோஷங்கள்; அதில் தேவையில்லாமல் பாகிஸ்தானை பற்றியவை பல (கோவை நூறடி ரோடு ஊர்வலத்தில் கேட்டது).
கூர்ந்து நோக்கினால், இலக்கில்லாமல் அலையும் இளைஞர்களை அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிடுவது நன்றாகத் தெரிகிறது.
//பத்து நாள் சாமியா கும்பிட்டிட்டு பதினோறாம் நாள் மண்டையில போடுறது என்ன வகை பக்தியோ? என் மனதுக்கு வருத்தமா இருக்கு.//
அரசியல் வாதிகளின் நிலமையும் இதுதானே, நேற்றுவரை தலைவனாகக் கொண்டாடப் படுபவன், மறுநாளேக் கூட எதிரியாகிவிடுவான். பிள்ளையாரை இந்துத்துவாக்களின் அரசியல் தலைவராகத்தானே கொண்டு வருகிறார்கள். வேலை முடிந்ததும் 'காரியம்' செய்துவிடுகிறார்கள்.
//இதையெல்லாம் பாக்கும்போது agnostic--ஆ இருந்திடலாம் போலிருக்குது.//
மற்றவர்களின் செயல்கள் உங்கள் சொந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்கிறதா ? பலவீனம் தான் ! :)
//துளசி கோபால் said...
//வழியெங்கும் எத்தனை 'விநாயகர் விஸர்ஜன' (அதாங்க புள்ளையாரு உடைப்பு) ஊர்வலங்கள்? //
இந்தியன் சொன்னது சரியாத்தான் இருக்கு:-)
நாத்திகர் உடைச்சால் பிள்ளையார் சிலை அவமதிப்பு.
ஆத்திகர் உடைச்சால் அது விஸர்ஜனம்.
மாமியார், மருமகள் மண் குடம் பொன்குடம் இதெல்லாம் தேவை இல்லாமல் நினைப்புலே வருது(-:
புள்ளையார் நிஜமாவே ரொம்பப் பாவம்தாங்க(-:
3:59 AM, September 09, 2008
//
துளசி அம்மா,
உங்கள் வருத்தம் நெகிழ்ச்சியடைய வைக்கிறது, உருளைக் கிழங்கு முளைத்தால் வெட்ட மனது வராமல் அதை நட்டு வைத்து துளிக்க விட்டு அழகுபார்பவர் நீங்கள், பிள்ளையார்ர் படுகொலைகள் உங்களை மிகவும் வருத்தமடையச் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதை நினைக்கும் போது இந்த இடுகையை எழுதியதற்காக நானும் வருத்தப்படுகிறேன். :(
//G.Ragavan said...
வடமொழியில இத விசர்ஜனம்னு சொல்றாங்க. ஆனா பாருங்க.... அப்படிச் செய்ய வேண்டிய பிள்ளையாருங்க களிமண்ணால ஆகியிருக்கனும். இது பிளாஸ்டர் ஆப் பாரீஸ். இதை விசிறவும் முடியாது. ஜனமும் பண்ண முடியாது. அதான் இப்பிடிக் கெடக்குது.
கொல்கொத்தாவுலயும் துர்கா பூஜா பண்றாங்க. ஆனா எல்லா துர்காவும் களிமண்ல பண்றாங்க. தலைமுடி கூட நார்களால் செய்றாங்க. இயற்கை வண்ணங்கள். அதுக்கும் மேல ஒருவிதச் செடியின் தண்டிலிருந்து எடுத்ததில் வண்ணம் பூசி அலங்காரம். அதுனால துர்காவுக்கு இந்தக் கேவலம் நடக்கலை. தண்ணீல போட்டா....சல்லுன்னு கரைஞ்சு போயிரும். அது ஏத்துக்கக் கூடியது. ஆனா இது ஏத்துக்கவே முடியாதது. பி.ஆ.பா-ல பிள்ளையார் செய்ய ஆகம சாத்திரத்துல எடமிருக்கான்னு தெரியலை.
5:23 AM, September 09, 2008
//
ஜிரா,
கருத்துக்கு நன்றி ! உங்கள் பின்னூட்டம் வராவிட்டாலும் உங்களால் எழுதப்படும் பதிவுகள் குறைந்து விட்டது என்பதையே நானும் நினைக்கிறேன். மீண்டும் எப்போது முழுமூச்சாக களம் இறங்குவீர்கள் ?
///////// VIKNESHWARAN said...
//வழிபாட்டில் சாஸ்திர முறை என்று ஒன்று உண்டு. சாஸ்திரத்தை கட்டி காக்கிறோம்
என கூறும் சிலர் செய்யும் செயலால் இறைநிலைக்கும் சாஸ்திரத்திற்கும் அவமானமே சேருகிறது.//
என்ன சொல்ல வரிங்க... இறைவழிபாடு சாஸ்திரம் படிச்சவங்களுக்கு மட்டும் சொந்தமா? சாஸ்திரத்தை அறியாதவர்கள் என்ன செய்வார்கள்.
9:03 AM, September 08, 2008
//////////
விக்கி,
வழிபாடுகள் நம்பிக்கை அடிப்படையிலானது, அவரவர் தோற்றுவித்த சமயங்களில் வழிபாட்டு முறைகள் இருக்கும், அதனால் தான் 'இது எங்கள் சாமி' என்றெல்லாம் உரிமை கொண்டாடுகிறார்கள். இவை மாற்றாறிடத்தே பரப்பப் படும் போது தான் நீங்கள் கேள்வி கேட்கும் கேள்வி எழுகிறது, ஞாயமான கேள்வி. :))
சாஸ்திரம் தெரியாதவர்கள் சாஸ்திரத்தை மட்டுமே விரும்பிக் கேட்கும் சாமிகள் பக்கம் செல்லவேக் கூடாது, அவர்களுக்குத் தான் கையில் சூலாயுதம் ஏந்திய காளியும், சுடலை மாடனும் இருக்கிறார்களே, அவர்களை வழிப்பட்டாலே போதும் !
:))))))))
//
கோவி.கண்ணன் said...
//இதெல்லாம் ஓவர். மழை வருவதற்கும் நல்ல மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?. இப்படியான அறிவுக்கு சம்பந்தம் இல்லாத புகழ்மொழிகள்தான் இந்தியாவின் சாபக்கேடு. ஒருவரை புகழ்வதில் கூட மூடநம்பிக்கையை ஊட்டும் கலையை .ம்ம்ம்..என்னத்த சொல்றது..மிக்க வருத்தம்
12:20 PM, September 08, 2008
//
தரண்,
நல்ல எண்ணங்களுக்கும் இயற்கைக்கும் தொடர்ப்பு இருப்பதாகத்தான் சொல்லுகிறார்கள், 'பெய்யென பெய்யும் மழை' என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே !//
என்ன கொடுமை சார் இது. எப்பதான் தன் சொந்த புத்திய வைச்சு இந்த மனித சமுதாயம் யோசிக்குதோ அப்பதான் ஒரு தெளிவு பிறக்கும்.
நல்லவங்களா பார்த்து புடிச்சு ஒரு கிராமத்தில உட்காரவைச்சு மழை வரவையுங்க.அந்த கிராமத்தில் நல்லவர்களைத்தவிர வேறு யாரையும் அனுமதிக்காதீர்கள். அரசாங்கம் ஒரு அணை கட்டி அந்த கிராமத்திலிருந்து மற்றவர்கள் வாழம் ஊர்களுக்கு தண்ணீர் கொடுக்கட்டும்.
கோவி அவர்களே இதை நான் ஒரு காமெடிப்பதிவாக போடப்போகிறேன். தலைப்பே நீங்கதான்
//Dharan said...
என்ன கொடுமை சார் இது. எப்பதான் தன் சொந்த புத்திய வைச்சு இந்த மனித சமுதாயம் யோசிக்குதோ அப்பதான் ஒரு தெளிவு பிறக்கும்.
நல்லவங்களா பார்த்து புடிச்சு ஒரு கிராமத்தில உட்காரவைச்சு மழை வரவையுங்க.அந்த கிராமத்தில் நல்லவர்களைத்தவிர வேறு யாரையும் அனுமதிக்காதீர்கள். அரசாங்கம் ஒரு அணை கட்டி அந்த கிராமத்திலிருந்து மற்றவர்கள் வாழம் ஊர்களுக்கு தண்ணீர் கொடுக்கட்டும்.
கோவி அவர்களே இதை நான் ஒரு காமெடிப்பதிவாக போடப்போகிறேன். தலைப்பே நீங்கதான் /
தரண் தாராளமாகப் போடுங்கள் !
நல்லவர்கள் யார் என்று சொல்வதற்கு சுவாமி ஓம்காரை அளவுக் கோலகாக நான் இங்கே பரிந்துரைக்கவில்லை. அவரிடம் இருக்கும் நல்ல எண்ணங்களைப் பாராட்டினேன். நீங்கள் எண்ணாத்தாலும் இதுவரை யாருக்கும் தீயது நினைக்காதவர்கள் 4 பேரைக் கொண்டு வாருங்கள் மழைவருகிறதா என்று தான் பார்ப்போமே ! :))))))
பெரியார் படத்தில் காந்தியை மடக்குவார் பெரியார், "காந்திஜி உங்க கண்ணுக்குக் கூட ஒரே ஒரு வினோபாவாதான் நல்லவராகத் தெரிகிறார், சாமாண்யர்களை நினைத்துப்பாருங்கள்" என்று !
நல்லவர்களால் மழைபெய்கிறதா என்கிற ஆராய்சியை விட கொடியவர்கள் நால்வரை ஒன்றாக ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று ஒரு நாள் ஒன்றாக இருக்க வைக்க முடியுமா உங்களால் ?
ஒருவரின் குணநலனைப் உயர்வாக பாராட்ட ஒரு வார்த்தைச் சொன்னால் அதில் பெரிய குற்றமே கண்டு பிடிக்கிறீர்கள். சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லை என்று கருதுபவர் நீங்கள் என்றால் உங்களை தூற்றுபவர்களிடமும் பணிவாகப் பேசும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறதா ? நல்லதுக்கு நல்லது நடக்கும், கெட்டதற்கு கெட்டது தானே நடக்கும். என்னைப் பொருத்து பெரியார் என்றாலும் பண்டாரமாக இருந்தாலும் அவரால் நன்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும், தீமை இல்லாதிருந்தால் போற்றுவேன். வெறும் நடிகர்களின் விரலசைவில் ஒரு பெரும் கூட்டமே திரளும் போது, நான்கு நல்லவர்களின் உண்மையான வேண்டுதலுக்காக மேகக் கூட்டம் திரளும் என்று சொன்னதில் என்ன தவறு ?
//ஒருவரின் குணநலனைப் உயர்வாக பாராட்ட ஒரு வார்த்தைச் சொன்னால் அதில் பெரிய குற்றமே கண்டு பிடிக்கிறீர்கள். //
தாரளமாகப் புகழுங்கள், புகழுனூடே மூடநம்பிக்கையை நுழைக்காதீர்கள்.
கழுதைக்கு கல்யாணம் செய்துவைத்தால் மழை, கன்னிப்பெண்னை நிர்வாணமாக நடக்கவிட்டால் மழை, இதெல்லாம் வருவது மூடநம்பிக்கை என்கிற கொடுமையால்தான்.
நான் அதையெல்லாம் சொல்லவில்லையே என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அடிப்படை மூடநம்பிக்கை பற்றியது.
//சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லை என்று கருதுபவர் நீங்கள் என்றால் உங்களை தூற்றுபவர்களிடமும் பணிவாகப் பேசும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறதா ? //
சொற்களுக்கு பொருள் இருப்பதாக நான் நினைப்பதால்தான் நீங்கள் சொன்ன சொல்லின் பொருள் மூடநம்பிக்கயை விதைக்கிறது என்று சொன்னேன்.
///என்னைப் பொருத்து பெரியார் என்றாலும் பண்டாரமாக இருந்தாலும் அவரால் நன்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும், தீமை இல்லாதிருந்தால் போற்றுவேன்//
அடிப்படையில் என்னுடைய வினாவை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மூடநம்பிக்கைகளை விதைக்கும் படி புகழாதீர்கள். பெரியாராக இருந்தாலும் பெரியவளா இருந்தாலும், உங்கள் கருத்தை கூறுவது தவறில்லை என்பது என் கருத்து.
பண்டாரங்களை புகழக்கூடாது என்று நான் எந்த இடத்திலும் சொல்லவில்லையே. மூடநம்பிக்கைகளை விதைக்காதீர்கள் என்பதுதான் என் ஆதங்கம்.
//வெறும் நடிகர்களின் விரலசைவில் ஒரு பெரும் கூட்டமே திரளும் போது, நான்கு நல்லவர்களின் உண்மையான வேண்டுதலுக்காக மேகக் கூட்டம் திரளும் என்று சொன்னதில் என்ன தவறு //
தவறுதான், ஏனெனில் மேகக்கூட்டங்கள் முட்டாள்கள்(ரசிகர்கள்) அல்ல.
கருத்துரையிடுக