ஒரு பெளத்த சன்யாசியிடம் ஒரு பணக்காரர் சென்று கேட்டாராம்
"சுவாமிஜி....எனக்கு பணக் கஷ்டம் இல்லை.....ஆனா வாழ்கையில் நிம்மதி இல்லை..."
சன்யாசி அவர் முகத்தை ஒரு நிமிடம் வரை உற்று நோக்கிவிட்டு
"ஒன்று சொல்கிறேன் பயப்படாமல் கேள்....நாளைக்கு நீ இறக்கப் போகிறாய்...நாளை முதல் நீ நிம்மதியாக இருக்கலாம்..."
பணக்காரர் திடுக்கிட்டார்... மனம் வருந்திய படி...,
"நிம்மதி ? முடியாதே சாமி.....நான் தெரிந்தே சில பாவங்கள் செய்து இருக்கிறேன்"
"அஞ்சாதே....இப்போது இன்னும் நேரம் இருக்கிறது.... நல்லக் காரியம் எதாவது செய்து கொள் ... உடனடியாக சரிசெய்ய முடியாதபடி அப்படி என்ன பாவம் செய்தாய் ? "
"சொந்தக்காரர்களிடம் இருந்து சொத்துக்களை வளைத்தேன்....அதையெல்லாம் திருப்பிக் கொடுக்கும் அவாகாசாம் கூட இப்போது இல்லையே....."
"ஏன் நாளை வரை அவகாசம் இருக்கிறதே....."
"சுவாமிஜி ... அவர்களெல்லாம் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது.....எங்கிருந்தாலும் எனக்கு சாபம் இட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்...."
"இப்போது மனம் வருந்தும் நீ அவர்களைத் தேடி இருக்கலாமே......"
"எனது தந்தை 90 வயது வரை வாழ்ந்தவர் எனக்கு இப்போது 60 வயதுதான் ஆகிறது....என்றாவது ஒருநாள் திருப்பிக் கொடுக்கத் தான் நினைத்தேன்....நாளையே எனக்கு மரணம் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை..... இப்பொழுது என் பாவங்களைப் போக்கிக் கொள்ள வழியே இல்லையா ?"
சன்யாசி ஒரு நெடிய விளக்கம் கொடுத்தார்.......
"அடுத்த நொடி வாழ்க்கை எப்போதுமே நிச்சயமற்றது தான்......நம்மால் பிறருக்கு வருத்தம் ஏற்பட்டது...பிறர் நம்மை சாபம் விடுகிறார்கள் என்று நமக்கு நன்கு தெரிந்து ...அதற்காக நாம் மனம் வருந்தினால்.......உடனடியாக அந்த வருத்ததை நீக்கிக் கொள்ள நம்மால் ஏற்பட்ட பாதிப்பை நாம் சரி செய்ய முயன்று அதிலிருந்து விட்டுபடவேண்டும்.......ஒரு மனிதன் தன் பாவங்களைப் போக்கிக் கொள்ள அவனுக்குக் கொடுக்கப்படும் அவகாசமும் அவன் வாழும் நாட்களுக்குள்ளேயே இருக்கிறது"
"சுவாமி இப்பொழுது எனக்கு காலம் கடந்துவிட்டதே.... இந்த பாவங்களுக்காக நான் அடுதத பிறவியில் தண்டனை அடைவேனே......என்ன செய்வதென்று தெரியவில்லையே....."
"அடுத்தப் பிறவி பற்றியெல்லாம் எப்போதும் கவலைப்படாதே......"
"பிறகு எப்படி நான்...இதனை சரிசெய்ய முடியும் ?"
"வருத்தப்படாதே....நாளை உனக்கு மரணம் என்று நான் சொன்னது உன் உணர்வுகளை வெளியே கொண்டுவரத்தான்..... இப்பொழுது மகிழ்ச்சியுடனே சென்று உன்னால் பாதிக்கப்பட்டவர்களை தேடிப்பிடித்து மன்னிப்புக் கேட்டுவிட்டு... அவர்களுடைய செல்வங்களை அவர்களுக்கே திருப்பிக் கொடு...."
"மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சுவாமி.....உடனடியாகச் செய்கிறேன்"
"உன் பாவங்களுக்கான ஈடுகளை நாளைச் செய்யலாம் என்று ஒரு போதும் நினைக்காதே.......காலம் எதற்கும் காத்திருப்பது இல்லை... உன் இறப்புக்கு முன்பே உனது பாவக் கணக்குகள் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும்... நாளையே இறப்பென்றாலும் மகிழ்வுடன் அதனை வரவேற்கும் மாசற்ற மனதுள்ளவனாக இரு"
பின்பற்றுபவர்கள்
4 செப்டம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
19 கருத்துகள்:
நல்ல மாரல் ஆஃப் த ஸ்டோரி...இதுல சொன்ன மாதிரி நடந்துக்க முயற்சிக்கிறேன்...
//விஜய் ஆனந்த் said...
நல்ல மாரல் ஆஃப் த ஸ்டோரி...இதுல சொன்ன மாதிரி நடந்துக்க முயற்சிக்கிறேன்...
//
ஆஹா இந்த கதை கேட்டாவது திருந்துந்துனீகளே பாஸ்!
நானும் எவ்ளோ சாபம்தான் விட்டுக்கிட்டு உக்காந்திருக்குறது சீக்கிரம் எனக்கு சேரவேண்டிய பணத்தை செட்டில் பண்ணுங்க ஒ.கே :))))
கும்மி அலவ்டா ????????????
//ஆயில்யன் said...
கும்மி அலவ்டா ????????????//
அவரே சொல்லியிருக்காரு ஆயில்யன்.. //காலம் எதற்கும் காத்திருப்பது இல்லை.// அதனால இப்பவே கும்மீடுங்க!
அண்ணே, என்ன ஆச்சு? ஏன் இப்டியெல்லாம்.
அண்ணே நீங்க தரவேண்டிய 50 ஆயிரம் டாலர குடுத்துருங்க, அப்டியே உங்க சிஷ்யன் விஜய் ஆனந்த் எனக்கு தரவேண்டிய 50 ஆயிரம் டாலரையும் வாங்கிக்குடுத்துருங்கண்ணே.
/ஆயில்யன் said...
கும்மி அலவ்டா ????????????
11:13 AM, September 04, 2008
//
அதுக்குத்தானே பதிவே வச்சிருக்கோம் !
//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, என்ன ஆச்சு? ஏன் இப்டியெல்லாம்.
அண்ணே நீங்க தரவேண்டிய 50 ஆயிரம் டாலர குடுத்துருங்க, அப்டியே உங்க சிஷ்யன் விஜய் ஆனந்த் எனக்கு தரவேண்டிய 50 ஆயிரம் டாலரையும் வாங்கிக்குடுத்துருங்கண்ணே.
11:36 AM, September 04, 2008
//
பால்ராஜ்,
எனக்கு இமெயில் லாட்டரி மூலம் கிடைத்த 5 மில்லியன் பவுண்ட் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன், இப்பவே உங்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.
ஓகே..ஓகே..ஓகே..
நா திருந்திட்டேன்..நா திருந்திட்டேன்..நா திருந்திட்டேன்...
நானும் நல்லவந்தான்...
யார் யாருக்கு எவ்ளோ செட்டில் பண்ணனும்ன்ற தகவலோட சாயங்காலம் வூட்டாண்ட வந்துடுங்க...ஒரே செக்குல முடிச்சிடலாம்..
"நாளைக்கே செத்துட்டா ?"//
நாள்ளான்னிக்கி பால்!!
(தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்)
சத் சித் பதிவானந்த சுவாமிகள் கோவி அடிகளார் பக்தி கதைகள் எல்லாம் சொல்கிறார் ஓடி வாங்கோ ஓடி வாங்கோ!!!
//"நாளைக்கே செத்துட்டா ?"//
ஒரு பதிவு எழுதி அதை ஒவ்வொரு கிழமையும் (வாரமும்) மேம்படுத்திட்டே வரணும். அப்படி மேம்படுத்தலைன்னா அந்த பதிவு தானாக வெளியாகற மாதிரி (post dated)இருந்துச்சுன்னு வைங்க, செத்தும் பதிவு போட்றலாம்...!
கீழே மாதிரிப் பதிவு ;-(
'பதிவர்களே, இந்த பதிவை நீங்கள் படிக்கும் இந்தக் கணம் நான் உயிரோடு இல்லை என்பதை....'
//(தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்)//
நாங்களுந்தாம்லே!
கும்மி என்பதை நான் இரண்டு வகைகளில் அர்த்தம் கொள்கிறேன்.
உதாரணத்திற்கு,
1) பலர் சேர்ந்து வட்டமாகக் கும்மியடித்து குலவையிடுவது.(நன்றி: சின்னக் கலைவாணர் விவேக்)
2) பலர் சேர்ந்து ஒருவரைக் கீழே போட்டு கும்முவது. (நன்றி: வைகைப் புயல் வடிவேலு-குப்பாயி அக்கா மவன்)
அனுமதிக்கப் பட்டக் கும்மி எந்த வகையைச் சார்ந்தது.
புதுவகையாக இருந்தால் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னூட்டங்களைப் பார்த்தால்....நல்லதாக நாலு பேச விடமாட்டேங்கே போல இருக்கே
தலைப்பைப் பார்த்தவுடன் நம்ம குசும்பன் சொன்னதுதான் 'டக்'ன்னு மனசுலே வந்துச்சு.
அதெல்லாம் இருக்கட்டும். கோவியானந்தா ஆஸ்ரமத்துக்கு நாந்தான் பொருளாளர்:-)
//துளசி கோபால் said...
தலைப்பைப் பார்த்தவுடன் நம்ம குசும்பன் சொன்னதுதான் 'டக்'ன்னு மனசுலே வந்துச்சு.
அதெல்லாம் இருக்கட்டும். கோவியானந்தா ஆஸ்ரமத்துக்கு நாந்தான் பொருளாளர்:-)
//
துளசி அம்மா,
ஆஸி, நியூஸியின் தலைமை மாதாஜி பொறுப்பே உங்களுக்கத்தானே... !
****அடுத்த நொடி வாழ்க்கை எப்போதுமே நிச்சயமற்றது தான்......நம்மால் பிறருக்கு வருத்தம் ஏற்பட்டது...பிறர் நம்மை சாபம் விடுகிறார்கள் என்று நமக்கு நன்கு தெரிந்து ...அதற்காக நாம் மனம் வருந்தினால்.......உடனடியாக அந்த வருத்ததை நீக்கிக் கொள்ள நம்மால் ஏற்பட்ட பாதிப்பை நாம் சரி செய்ய முயன்று அதிலிருந்து விட்டுபடவேண்டும்.......***
இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு!!!
இது தமிழர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா?
இல்லை, கன்னடிகா, மராத்திக்காரங்களுக்கும், அதாவது தமிழர் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் பொருந்துமா?
மன்னிப்புக்கேட்டால், சமண முனிவர் சந்ஷோப்படுபடுவார் சரி.
மறத்தமிழர்கள் என்ன சொல்வார்கள், கோவி.கண்ணன்???
துரோகி என்று தானே?!!
//வருண் said...
இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு!!!
இது தமிழர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா?
இல்லை, கன்னடிகா, மராத்திக்காரங்களுக்கும், அதாவது தமிழர் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் பொருந்துமா?
மன்னிப்புக்கேட்டால், சமண முனிவர் சந்ஷோப்படுபடுவார் சரி.
மறத்தமிழர்கள் என்ன சொல்வார்கள், கோவி.கண்ணன்???
துரோகி என்று தானே?!!
//
வருண்,
என்னது கொடுமையாக இருக்கு, நான் தமிழர்களுக்கு என்று எங்கே எழுதி இருக்கிறேன். தவறு செய்துவிட்டு வருந்தும் நல்லவர்கள் எவராக இருந்தாலும் தவறுகளை வாழும் காலத்திற்குள்ளேயே திருத்திக் கொள்ளவேண்டும் என்ற பொருளில் தானே எழுதி இருக்கிறேன்.
தமிழில் எழுதி இருப்பதால் தமிழர்களுக்காகச் சொல்கிறேன் என்று நினைத்துவிட்டீர்களா ?
நான் சொல்ல வந்தது அது இல்லைங்க!
நம்ம நடிகர் ஒருவர், உதைத்துவிடுவேன் என்று மேடையில் பேசிவிட்டார்.
பிறகு, அப்படி நான் பேசி இருக்கக்கூடாது என்று மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டார்.
இந்த உதாரணம் நம்ம சமண முனிவரை வைத்து தாங்கள் சொல்லும் கருத்துக்கு உகந்து வருவதால் சொல்கிறேன்.
மன்னிப்புக்கேட்டுவிட்டால் அவருக்கு நிம்மதி வந்துவிட்டதா என்ன?
அந்த நடிகர் என்று வரும்போது, அவர் கேட்ட மன்னிப்பு அவர் மன அமைதிக்கு கிடையாது, வியாபார நோக்கம், தமிழர்களுக்கு செய்ற துரோகம் னு தானே சொல்கிறோம்?
ஏன் நீங்களே அப்படித்தானே சொல்வீர்கள்?
நீங்க சொல்கிறதெல்லாம் உலகத்துக்கு ஒவ்வாது என்கிறேன்!
//குசும்பன் said...
"நாளைக்கே செத்துட்டா ?"//
நாள்ளான்னிக்கி பால்!!
(தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்)//
அதெல்லாம் அந்த காலம்...இப்ப எல்லாம் இன்னிக்கு செத்தா இன்னிக்கே பால்(மின்சார எரியூட்டிலே)
கருத்துரையிடுக