பின்பற்றுபவர்கள்

5 செப்டம்பர், 2008

1 ரூபாய் அரிசி - கலைஞர் கவிதை !


அரக்கியின் ஆட்சியிலே அடிவயிறு காய்ந்த தடா !
அண்ணாவின் தம்பி ஆட்சியிலே பாலாறுகள் ஓடுதடா !
ஒரு ரூபாய்க்கு எண்ணை வாங்க முடியுமா ?
ஒரு கிலோ அரிசியே வாங்கமுடியும் - பாலகரும் சொல்கின்றனரே !
அண்ணாவின் ஆட்சி இது, பெரியாரின் ஆட்சி இது !
பேராசை பேய்களின் வீழ்ச்சி எது ?

வஞ்சகர் என்பார், பேய்கள் என்பார், இவையெல்லாம்
ஒரு வஞ்சியின் வடிவிலே இங்கு வந்ததென்பேன் !
ஓடுகாலிகள் வீடுகாலிசெய்துவிட்டு ஓடும் இடம் தான் அது,
நாடி வருபவர்களுக்கு மாடாய் உழைக்கும் இடமே நம் கழக வீடு !

தேசிய முற்போக்கு கூட்டணித் தேரின் இழு கயிற்றை அறுத்துவிட்டு
அச்சாணி முறிந்ததாக அளந்துவிடுகின்றனர் !
கயிற்போனால் புதுக்கயிற்கள் வரும், அய்யகோ அங்கே
அச்சாணி இல்லா நிலையடித் தேரை
வீதிவுலாவில் வரும் உற்சவ தேர் என்கிறார்கள் !

தேட்ட்டக்காரர்களின் (ஜெ, இராமதாஸ்) கண்ணிகள்
குயில்களை குழப்பும், வல்லுருவை குழப்புமா ?
கழக சூரியன் மீது கருமேகம் படிந்துவிட முடியுமா ?
அடியில் தீவை வைத்து அடுப்பு மூட்டி
கடலைத்தான் வற்ற வைக்க முடியுமா ?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுவோம்
அண்ணா அன்று சொன்னார், இன்று கழக ஆட்சியிலே
ஏழையின் சிரிப்பில் நாம் அரிசியையும் பார்க்கிறேம்
அவலையும் பார்க்கிறோம்.

ஒற்றை ரூபாய் அரிசித்திட்டம் உலகும் காணாத்திட்டம்
சுற்றி இருக்கும் மாநிலங்கள் மழைத்துப் போய் பார்கும் திட்டம்
தேர்த்தலின் சாக்காக அரிசி போடுகின்றோமாம்,
எள்ளி நகைக்கின்றனர் நச்சு கும்பல்கள் !
தேர்தல் நேரத்தில் யாருக்குமே பசிக்காதா ?
கையிருப்பு இருந்தால் கால்ரூபாய்க்கும் படி கொடுப்போம் !

வாழ்க அண்ணா ! வளர்க (இளைய) கழகம் !

(கலைஞர் எழுதல... அவர் மாதிரி எழுத முயற்சித்தேன்... கழக கண்மணிகள் பொருத்தருள்க)

10 கருத்துகள்:

விஜய் ஆனந்த் சொன்னது…

கவிதை சூப்ப்பர்ர்ர்ர்ருரூரூ!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கலை(வி)ஞர் கோவி.கண்ணன் அவர்களே சூப்பர்...!

சீக்கிரம் தவறு இருந்தால் திருத்திடுங்கோ!

இல்லன்னா கலைஞர் திருத்திவிடக் கூடும்.

உடன் பிறப்புகளும், அடலேறுகளும் கோவியாரை வாழ்த்துவார்களாக!

Nilofer Anbarasu சொன்னது…

ரொம்ப சூப்பர்....... ரொம்பவும் ரசிச்சுப் படித்தேன்.

ALIF AHAMED சொன்னது…

விஜய் ஆனந்த் said...
கவிதை சூப்ப்பர்ர்ர்ர்ருரூரூ!!

//



rippitte

ALIF AHAMED சொன்னது…

அரக்கியின் ஆட்சியிலே அடிவயிறு காய்ந்த தடா !
//


muttai piriyaani njapakam varuthe...

ALIF AHAMED சொன்னது…

அண்ணாவின் தம்பி ஆட்சியிலே பாலாறாய் ஓடுதடா !
//

engka engka..??


piir aaru thaan otuthu taaSmaarkula..:)

முரளிகண்ணன் சொன்னது…

அவர் எழுதுன மாதிரியே இருக்கு

குமரன் (Kumaran) சொன்னது…

எழுத்துப்பிழைகளை கொஞ்சம் கவனியுங்கள் கோவி.கண்ணன்.

அண்ணாவின் தம்பி எழுத்துப்பிழைகள் விடமாட்டார் என்றே நினைக்கிறேன். :-)

கொண்டோடி சொன்னது…

///கயிற்போனால் புதுக்கயிற்கள்

வல்லுறுவை///


எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் அதிகமுள்ளன.
முதற்பத்தி வாசித்தபோதே விளங்கிவிட்டது இது கருணாநிதியின் எழுத்தில்லையென்று.

கோவி.கண்ணன் சொன்னது…

// கொண்டோடி said...
///கயிற்போனால் புதுக்கயிற்கள்

வல்லுறுவை///


எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் அதிகமுள்ளன.
முதற்பத்தி வாசித்தபோதே விளங்கிவிட்டது இது கருணாநிதியின் எழுத்தில்லையென்று.
//

கொண்டாடி,
கலைஞர் தவறாக எழுத மாட்டார், தட்டச்சு செய்தவர்களின் பிழை !

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்