ஒரு சொல்லோ, செயலோ அதன் தன்மையில் இருக்கும் உண்மை இயல்பைவிட, அது யாரால் சொல்லப்பட்டது என்பதை வைத்துத்தான் வலிந்து பொருள் உறக்கவே உரைக்கப்படுகிறது.
ஒருமுறை அமெரிக்காவில் ஒரு மாநிலம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற போது அதில் தப்பிப்பிழைத்தவர்கள் பற்றிய செய்தியில் கருப்பர்களைப் பற்றி குறிப்பிடும் போது, "அங்குள்ள கடைகளில் உணவை திருடினார்கள்" என்றும் அதே செய்திதாளில் பிரிதொரு பக்கத்தில் வெள்ளையர்கள் பற்றிய குறிப்பிடும் போது, "உணவுக்காக ஒரு கடையில் இருந்த ரொட்டிக்களை எடுத்தார்கள்". அதாவது ஒன்று திருட்டு என்றும் மற்றொன்று உயிர்வாழ்வதற்கென்றும் சொல்லப்பட்டது.
ஒடுக்கப்பட்டவர்கள் வீறுகொண்டு எழுந்து போராடினால் அது தீவிரவாதம் என்றும், அவர்களுக்கு எதிராக ஆளும் வர்க்கம் எடுக்கும் நடவெடிக்கை உலகை அமைதி பூங்காவாக ஆக்குவதாற்கா என்று சொல்லுவார்கள்.
இது போன்ற கூத்து தமிழ் இலக்கியங்களை வைத்தும் செய்யப்படுவதுண்டு, இந்த இலக்கிய அரசியல் படி யார் தமிழை நேசித்தார்கள், சுவாசித்தார்கள் என்றெல்லாம் காட்டுவதற்கு எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும்.
பெரியார் தமிழை காட்டுமிராண்டு பாசை என்று சொன்னார், அவர் தமிழனல்ல என்றும் (இதுபற்றி முன்பே எழுதி இருக்கிறேன்) பெரியார் மீது பெரிய குற்றச்சாட்டுகள் எதையும் சொல்ல முடியாது போகும் போது இது போன்று அவர் (வெளியில் தொங்கிய மூத்திர பையில்) சிறுநீர் போனது , பாரிஸில் நிர்வாணமாக நின்றது, வயதான காலத்தில் மணியம்மையை திருமணம் செய்து கொண்டது என்பதையெல்லாம் சொல்லி பெரியார் ஒரு அயோக்கியன் என்று காட்ட முற்படுவார்கள்.
இளங்கோவடிகளையும், பாரதியையும் ஒப்பிட முடியுமா ? சிலப்பதிகாரம் என்ற பெருங்காதை படைத்த புலவன் எங்கே, வருண கீதையை மொழிப்பெயர்த்த பாரதி எங்கே ? பாரதி சிறந்த கவிஞர் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரை இளங்கோவடிகளுடன் ஒப்பிட முடியுமா ?
அப்படியும் ஒப்பிட்டு இளங்கோவை தாழ்த்தியும், பாரதி புரட்சிக்கென பிறந்ததாகவும் காட்டுகிறார்கள்.
இது ஒருபதிவில் இருந்து எடுத்த ஒரு பகுதி
//பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையை எரித்த கண்ணகியை தீவிரவாதி என்று நாம் இதுவரை சொன்னதில்லியே! பாண்டிய மன்னன் செய்தது தவறு என்று ஜல்லிதானே அடித்து இருக்கின்றோம்.
பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையையும் மதுரை மக்களையும் கண்ணகி ஏன் எரித்தாள் என்று யாரவது கில்லி அடித்து இருப்பார்களா?//
இளங்கோவின் சிலப்பதிகார நாயகி தனக்கு அநீதி கிடைத்தற்காக மதுரையை எரித்தாளாம் ! இது என்ன ஞாயம், பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் என்ன செய்ய முடியும் ? ஞாயமான கேள்வியே. இலக்கிய புனைவுக்காகவும், வளமைக்காகவும் புலவர்கள் பொய்யுரைப்பது வழக்கம் தான். கண்ணகி மதுரையை எரித்தாளா இல்லையா என்பது பற்றி சிலப்பதிகாரம் தவிர்த்து வேற எந்த தமிழ் இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை, கதையின் இலக்கியத்தையும், பயனையும் எடுத்துக் கொண்டு, அதை ஒரு புனைவு அல்லது அந்த கதையே புனைவு என்று கூட சொல்லிவிட முடியும்.
தனிமனித அநீதி எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மட்டுமே கண்ணகி மதுரையை எரித்தாக சொல்லப்பட்ட செய்தியை இளங்கோவடிகளின் கற்பனை என்றே எடுத்துக் கொள்ளலாம்.
அதே தனிமனித் நீதி பேசிய பாரதியின் செய்யுள் மட்டும் புரட்சியாக பரப்பபட்டு வருவது ஏன் ?
''தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’
என்று பாரதி ஆவேசப்பட்டது என்னவோ உண்மை. ஆனால் உணவின்றிப் பசியால் வாடுவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அந்தக் காரணத்தை அழிப்பதற்குப் பதிலாக ஜெகத்தினை அழித்திடுவது என்ற ஆவேசத்தில் அறவியல் இருக்கலாம்; அதில் அறிவியல் இல்லை.
- அறவியல் காரணமாக, அறிவியல் காரணம் என்றெல்லாம் திரிக்கிறார்கள், முதலில் இதை அறிவின் காரணமாகச் சொல்ல முடியுமா ?
பலர் பாரதியிடம் இருக்கும் பக்தியின் காரணமாகவும், நம்மவர் என்ற பாசத்திலும் பலவகையில் திரிக்கிறார்கள். கூகுளில் "ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று தேடிப்பாருங்கள்.
எவனோ ஒருவன் பட்டினியால் இரு(ற)ப்பதற்கு காரணம், அவன் சோம்பேறியாகக் கூட இருக்கலாம், உழைக்கத்தெரிந்தும் அந்த பொருளை சேமிக்கும் சக்தியற்றவனாக இருக்கலாம், அல்லது எதோ ஒரு புண்ணாக்கு காரணத்திற்காக, ஞாயமற்ற காரணத்திற்கு அவன் பட்டினியாக இருந்து இருக்கலாம், அந்த பட்டினியால் அவன் செத்தே போனதாகக் கூட வைத்துக் கொள்வோம், அந்த ஒருவனுக்காக முழு உலகையும் அழிக்கச் சொன்ன செயல் ஞாயமானதா ?
உலகத்தை(யே) அழிக்கச் சொன்ன பாராதி தீவிரவாதியா ? மதுரையை (மட்டும்) கண்ணகி எரித்தாள் என்று புனைவுக்காக எழுதிய இளங்கோ திவிரவாதியா ?
எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப்பப்படுகிறது, ஒன்று ஏன் தாழ்வாகவும், மற்றொன்று ஏன் உயர்வாகவும் சித்தரிக்கப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ந்தால் எல்லாவற்றிலுமே சாதி அரசியல் அசிங்கம் (நன்றி: இளா) இருப்பதுதான் தெரிகிறது.
:(
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
நண்பருக்கு...
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் கேள்வி எழுப்பியவர் நிலைப்பாடு என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனை. குறிப்பாகச் சொன்னால் “டீக்கடை பெஞ்ச்" வதம் தவிர வேறு ஒன்றும் இல்லை. முதலில் இளங்கோ மற்றும் பாரதி இருவரும் தமிழின் மிகச்சிறந்த உன்னத படைப்பாளிகள். அவர்களது தார்மீக அறமும் கொபமுமே அவர்களது படைப்புகளாக வெளிப்பட்டுள்ளது. அந்த உக்ரத்தை புரிந்து கொள்ளாமல் கண்ணகி திருகி எறிந்த முலை போல்ட் போட்டு முடுக்கப்பட்டிருந்ததா? என்று கேட்கிற அசட்டுத்னதம்தான் இது. மணிமேகலையின் அட்சயப்பாத்திரம் என்பதெல்லாம் ஒரு குறியீடுகள். சமீபத்தில் வெளிவந்து பிரபலமாகப் பேசப்பட்ட டாவின்சி கோட் திரைப்படத்தில் வரும் “புனிதக் கிண்ணம்“ என்பது என்ன? அது ஒரு ஏசுவின் வாரிசைச் சுமந்த கருமுட்டையைக் குறிக்கும் குறியீடு. அவற்றின் சொல்லப்படுபவை வேறு. இப்படி எளிமையாக கொச்சைப்படுத்திப் பார்ப்பது தவறு மட்டுமல்ல மலினப்படுத்தி மற்றவரை தாழ்த்திப் பார்க்கும் அசட்டுத்னதமான அரசியலாகும்.
கண்ணகியின் முலை என்பது பெண்மீது “பத்தினித்தனம்“ என்கிற பெயரில் தமிழ் அறத்தால் ஒடக்கிவைக்கப்பட்ட பாலியல் ஆற்றலின் வெளிப்பாடு. மதுரையை எரித்தது வீடு திரும்பிய கணவனுடன் இல்வாழ்வை துவங்கி எண்ணிய ஒரு பெண். தன்கணவன்அறமற்ற முறையில் கொல்லப்பட்டதை கேட்டவுடன் பீறிட்டுக் கிளம்பிய சமூகம் மற்றும் அரசு முறை மீதான கோபமும் அவளுக்குள் இத்தனை நாள் உடசெறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடந்த பாலுந்த ஆற்றலின் கொதிநிலையும்தான் மதுரையை எரித்த வெப்பம். முலை என்பது தாய்மையின் குறியீடு. அதை இவ்வளவு கீழாக கொச்சைப்படுத்த முனைவது மொண்ணைவாதம்தான். அதேபோல் பாரதியின் கோபத்தை மலினப்படுத்தும் இத்தகைய எழுத்துக்கள் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல நிராகாரிக்கப்பட வேண்டியவையும்கூட. அதற்கு முக்கியத்துவம் தந்து நீங்கள் பதிவிட்டிருப்பது கொஞ்சம் அதிகம்தான்.
//எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப்பப்படுகிறது, ஒன்று ஏன் தாழ்வாகவும், மற்றொன்று ஏன் உயர்வாகவும் சித்தரிக்கப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ந்தால் எல்லாவற்றிலுமே அரசியல் அசிங்கம் இருப்பதுதான் தெரிகிறது.//
முத்தாய்ப்பு வைத்தது போல முடித்திருக்கிறீர்கள். இருவரையும் ஒப்பிட இயலாது. ஒவ்வொருவருக்கும் தனி நடை உண்டு. சிலருக்கு கோபங்கள் வரும். சிலருக்கு குறைவாக வரும். பாரதி பிரயோகித்த வார்த்தைகளும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி மதுரையை எரித்ததாக வரும் நிகழ்வும், ஒரு படைப்பாளியின் கோபத்தின் வெளிப்பாடாகத் தான் இருக்க முடியும். கண்ணதாசனையும், பட்டுக்கோட்டையாரையும், இவர் நல்லா எழுதினார் அவர் நன்றாக எழுதவில்லை என்று சொல்ல எப்படி மனம் வரவில்லையோ அதே நிலை தான் இதற்கும் எடுக்க வேண்டியிருக்கிறது. காவியக் கவிஞர் வாலி தான் "தரைமேல் பிறக்கவைத்தான்" எழுதினார். அவரே "முக்காலா முக்காப்புலா" எழுதினார். "விழியில் விழுந்து இதயம் நுழைந்து" எழுதிய கருப்பட்டிக் கவிஞன் தான் "டேக் இட் ஈசி பாலிசி" என்று எழுதினான். இவர்களை எப்படி ஒப்பிடுவது?
அன்புடன்,
ஜோதிபாரதி.
//எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப்பப்படுகிறது, ஒன்று ஏன் தாழ்வாகவும், மற்றொன்று ஏன் உயர்வாகவும் சித்தரிக்கப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ந்தால் எல்லாவற்றிலுமே அரசியல் அசிங்கம் இருப்பதுதான் தெரிகிறது.//
உண்மை இதுவே!!!
"பாரதி" யார் என்று அவ்வப்போது ஆள் ஆளுக்கு வேட்டியயை உருவினால், கொஞ்ச பேர் ரொம்ப வருத்தப்படுவாங்களே... :)
இன்னும் கொஞ்ச நாளில், கண்+ணகி என்றுச் சொல்லி,
ணகி என்பது, இந்தி..இந்தியின் மூலம் தேவ பாடை என்றுச் சொல்லி,கண்ணகிக்கும் உரிமை கோருவாங்க..
//ஜமாலன் said...
நண்பருக்கு...
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் கேள்வி எழுப்பியவர் நிலைப்பாடு என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனை. குறிப்பாகச் சொன்னால் “டீக்கடை பெஞ்ச்" வதம் தவிர வேறு ஒன்றும் இல்லை. முதலில் இளங்கோ மற்றும் பாரதி இருவரும் தமிழின் மிகச்சிறந்த உன்னத படைப்பாளிகள். அவர்களது தார்மீக அறமும் கொபமுமே அவர்களது படைப்புகளாக வெளிப்பட்டுள்ளது. அந்த உக்ரத்தை புரிந்து கொள்ளாமல் கண்ணகி திருகி எறிந்த முலை போல்ட் போட்டு முடுக்கப்பட்டிருந்ததா? என்று கேட்கிற அசட்டுத்னதம்தான் இது. மணிமேகலையின் அட்சயப்பாத்திரம் என்பதெல்லாம் ஒரு குறியீடுகள். சமீபத்தில் வெளிவந்து பிரபலமாகப் பேசப்பட்ட டாவின்சி கோட் திரைப்படத்தில் வரும் “புனிதக் கிண்ணம்“ என்பது என்ன? அது ஒரு ஏசுவின் வாரிசைச் சுமந்த கருமுட்டையைக் குறிக்கும் குறியீடு. அவற்றின் சொல்லப்படுபவை வேறு. இப்படி எளிமையாக கொச்சைப்படுத்திப் பார்ப்பது தவறு மட்டுமல்ல மலினப்படுத்தி மற்றவரை தாழ்த்திப் பார்க்கும் அசட்டுத்னதமான அரசியலாகும்.
கண்ணகியின் முலை என்பது பெண்மீது “பத்தினித்தனம்“ என்கிற பெயரில் தமிழ் அறத்தால் ஒடக்கிவைக்கப்பட்ட பாலியல் ஆற்றலின் வெளிப்பாடு. மதுரையை எரித்தது வீடு திரும்பிய கணவனுடன் இல்வாழ்வை துவங்கி எண்ணிய ஒரு பெண். தன்கணவன்அறமற்ற முறையில் கொல்லப்பட்டதை கேட்டவுடன் பீறிட்டுக் கிளம்பிய சமூகம் மற்றும் அரசு முறை மீதான கோபமும் அவளுக்குள் இத்தனை நாள் உடசெறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடந்த பாலுந்த ஆற்றலின் கொதிநிலையும்தான் மதுரையை எரித்த வெப்பம். முலை என்பது தாய்மையின் குறியீடு. அதை இவ்வளவு கீழாக கொச்சைப்படுத்த முனைவது மொண்ணைவாதம்தான். அதேபோல் பாரதியின் கோபத்தை மலினப்படுத்தும் இத்தகைய எழுத்துக்கள் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல நிராகாரிக்கப்பட வேண்டியவையும்கூட. அதற்கு முக்கியத்துவம் தந்து நீங்கள் பதிவிட்டிருப்பது கொஞ்சம் அதிகம்தான்.
//
ஜமா,
வழக்கம் போல் கலக்கலாக பிரிச்சு மேஞ்சு பெரிய பின்னூட்டமிட்டதற்கு நன்றி !
இந்த இடுகையின் நோக்கம் இளங்கோ அடிகளை புகழ்வதோ, பாரதியைத் தூற்றுவதற்கோ இல்லை. ஒன்று போல் இருக்கும் சிந்தனைகளை சிலர் எப்படியெல்லாம் வசதிக்கு ஏற்றவாறு உள்நோக்கத்தோடு திரிக்கிறார்கள் என்று காட்டவே எழுதினேன்.
//ஜோதிபாரதி...said
காவியக் கவிஞர் வாலி தான் "தரைமேல் பிறக்கவைத்தான்" எழுதினார். அவரே "முக்காலா முக்காப்புலா" எழுதினார். "விழியில் விழுந்து இதயம் நுழைந்து" எழுதிய கருப்பட்டிக் கவிஞன் தான் "டேக் இட் ஈசி பாலிசி" என்று எழுதினான். இவர்களை எப்படி ஒப்பிடுவது?
அன்புடன்,
ஜோதிபாரதி.//
ஜோதி,
வேறெந்த கவிஞர்களைவிட எனக்கு வாலியை மிகவும் பிடிக்கும், இளமை மாறா எண்ணம் கொண்டவர்.
நட்சத்திர வாரத்தில் எழுதிய இடுகையில் அதனை குறிப்பிட்டு இருக்கிறேன்.
இங்கு இவற்றைச் சுட்டிக்காட்டியதன் நோக்கம் ?
நண்பர் ஜமாலன் அவர்களுக்கு இட்டு இருக்கும் அதே மறுமொழிதான்.
:)
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
உண்மை இதுவே!!!//
யோகன் ஐயா,
நன்றி !
//TBCD said...
"பாரதி" யார் என்று அவ்வப்போது ஆள் ஆளுக்கு வேட்டியயை உருவினால், கொஞ்ச பேர் ரொம்ப வருத்தப்படுவாங்களே... :)
இன்னும் கொஞ்ச நாளில், கண்+ணகி என்றுச் சொல்லி,
ணகி என்பது, இந்தி..இந்தியின் மூலம் தேவ பாடை என்றுச் சொல்லி,கண்ணகிக்கும் உரிமை கோருவாங்க..
7:10 PM, April 16, 2008
//
டிபிசிடி ஐயா,
பாரதி பஞ்சகச்சம் மாதிரி கட்டுவாரே, அவரின் வேட்டியை உருவுவது சுலபமா என்ன ? வே.மதிமாறன் ஐயா தான் அதை செய்ய முயன்று கொண்டிருக்கிறார்.
பாரதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் சொல்லும் புனித பிம்பங்கள், கண்ணகி - மதுரை 'பற்றிய' சிலப்பதிகாரத்தை குறிப்பிட்டு, கண்ணகியை தீவிரவாதி ரேஞ்சுக்கு சிலர் பழித்து எழுதும் போது அதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாவம்!ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற புரட்சிக் கவிஞரை மயிலாப்பூர் பட்டினி போட்டுக் கொன்றது.புதுவையில் இருந்திருந்தால் பட்டினியில் செத்திருக்க மாட்டார்!
இளங்கோவடிகள் கண்ணகி என்ன கோபத்தில் போனாலும் காட்ட வேண்டியவரிடந்தான் காட்டியுள்ளார்.
வாயில் காவலரை மரியாதையுடன்
வாயிலோயே வாயிலோயே என்றழைப்பவர் பாண்டிய மன்னரைத்
தேரா மன்னா என்றழைக்கிறார்.
கலைஞர் விளக்கு விழுந்து மதுரை எரிவது போல் காண்பித்துள்ளார்.
//அரசியல் அசிங்கம் //
ஜாதி அரசியல் அசிங்கம்னு மாத்திருங்க..
//Thamizhan said...

Thamizhan,
என்ன விளக்கம் கொடுத்தாலும் ... அதெல்லாம் இல்லை ஒப்புக் கொள்ள மாட்டேன், கண்ணகி தமிழ்பெண் அதனால் அவள் செய்தது (தமிழ்) தீவிரவாதம்,
பாரதி புரட்சிக்கென்றே பிற(ழ்)ந்தவர் அவர் சொன்னால் அது புரட்சி.
:)
//ILA(a)இளா said...
//அரசியல் அசிங்கம் //
ஜாதி அரசியல் அசிங்கம்னு மாத்திருங்க..
//
இளா,
நான் அசிங்கத்துக்கு முன் 'அரசியல்' அடைமொழி போட்டேன், நீங்கள் மேலும் ஒரு அடைமொழி சேர்க்கச் சொல்கிறீர்கள், நீங்கள் சொல்வது தான் இடுகைக்கு பொருத்தமானதும்.
மி(க்)க நன்றி !
மாற்றிவிட்டேன்
உங்கள் பதிவுகளை படிக்கும் ஆர்வம் இந்த கட்டுரையை படித்ததும் ஏற்படுகிறது தொடர்ந்து பேசுவோம்
நன்றி
பாலா
கருத்துரையிடுக