கடன் பெற்றவர்களின் துயர் பெரும் துயரோ ? இலங்கை வேந்தன் 'கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான்' என்று கம்பர் குறித்திருக்கும் அளவுக்கு கடன் பற்றி சங்காலத்திலேயே எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கடன் வாங்கிக் கொண்டு கொத்தடிமைகளாக கலங்கிய வாழ்க்கை அந்த காலத்திலும் இருந்தது என்பதை குறிப்பிட்டுக் காட்டுவதாக அந்த வரிகளை நினைக்கிறேன்.
கடன் அன்பை முறிக்கும் ? யார் உண்மையானவர்கள் என்பது கடன் கேட்கும் போது தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் மாற்றியே புரிகிறது. நம்மிடம் இருந்தால் பொருளுதவி செய்யலாம். ஆனால் வேறு எங்காவது வாங்கி கைமாற்றிவிட்டால் இருபக்கமும் அன்பு முறிந்துதான் போகும் அபாயம் இருக்கிறது.
கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் என்று சொல்வதைவிட கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் என்று சொல்வதே பொருத்தம். நம்பிக்கையின்மையும் பொருளியல் ஆசையும் கூடிவிட்டதால் கடன் பெறுபவர்களுக்கு வாங்கும் போது இருக்கும் மகிழ்ச்சியைவிட கொடுக்கும் போது இருக்கும் முகசுழிப்பே மிக்கவை. தம் பொருள் கைவிட்டுப் போவது போலவே எண்ணிக் கொண்டு கொடுப்பர்.
அவசரத்துக்கு ஒருவரிம் போய் நிற்பதைவிட கடன் அட்டை மூலம் பெற்றுக் கொள்வதே சிறந்தது என்று அதை வைத்திருக்கும் நண்பர்கள் சொல்லும் போது ஆமோதிக்காமல் இருக்க முடியவில்லை. என்ன தான் திட்டமிட்டு செலவு செய்தாலும் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் போது எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும் கடன் பெற்றே ஆகவேண்டும் என்று நிலை இருக்கிறது.
நகர புறங்களில் தவணைத்திட்டம் என்று சொல்லி 100 ரூபாய் முதல் 500ரூபாய் வரை ஏழை எளியோரை குறிவைத்து பிஸினஸ் நடக்கும், வாங்கிய இரண்டு நாட்கள் தவணை செலுத்துவார்கள், மூன்றாவது நாள் முதல் தவணைக்காரன் தெருமுனையில் வருகிறான் என்றாலே மறைந்துவிடுவார்கள். அவன் வாசலில் நின்று வாய்க்கு வந்தபடி திட்டிச் செல்வான். எப்படியும் வசூலித்துவிடுவான். ஆனால் மீண்டும் அடுத்த நாளே தவணைக்கு கடன் தருவான். அவனுக்கும் அவர்களுக்கும் மாற்று இருக்காது.
******
கடன் அட்டையில் இருந்து எடுக்கும் பணத்தை கொடுக்காதவர்களை தாதாக்களை வைத்தே மிரட்டி வசூலிக்கப்படுகிறது என்று உலகெங்கும் புகார்கள் இருக்கிறது. சிங்கையில் அவ்வாறு பணம் பெற்றுக் கொண்டவர்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்கள் வீட்டின் கதவுகளில் வண்ணக் கலவையை கரைத்து ஊற்றுவார்களாம், அப்படியும் செலுத்தாவிட்டால் அவர்கள் போகும் இடத்திற்கெல்லாம் யாரையாவது பின் தொடரவைப்பார்களாம். கடன் பெற்றவர்கள் நெஞ்சம் கலங்காமல் உறுதியாக இருப்பதால் தான் இதையெல்லாம் மீறி தாக்குப் பிடிக்க முடிகிறது போலும்.
பின்பற்றுபவர்கள்
15 பிப்ரவரி, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
8 கருத்துகள்:
நன்றி! loan shark(Ahlong) பற்றி குறிப்பிட்டமைக்கு. அது சிங்கப்பூரில் இருக்கிறது.
கடன் அட்டை கையைக் கடிக்கும் அட்டை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
கோவியாரே..
இப்போதெல்லாம் கடன் அட்டை வாங்குவதற்கே பலரும் பயந்து கொண்டிருக்கிறார்கள். அதை முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு நண்பன்.. இல்லையெனில் தூக்குக் கயிறு..
நானும் இதைப் பற்றி இருபது பக்கத்துக்கு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.. நம்ம 'அனுபவம்' அப்படி..
அதென்ன கடைசில சூப்பர் ஸ்டார் பாட்டு.. மார்க்கெட்டிங் தந்திரமா..? ஒண்ணும் புரியல..? ஆனா எனக்குச் சுத்தமா சவுண்டே வரலை.. கடைசிவரைக்கும் ஊமைப் படமாத்தான் பார்த்தேன்..
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கோவியாரே..
இப்போதெல்லாம் கடன் அட்டை வாங்குவதற்கே பலரும் பயந்து கொண்டிருக்கிறார்கள். அதை முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு நண்பன்.. இல்லையெனில் தூக்குக் கயிறு..
நானும் இதைப் பற்றி இருபது பக்கத்துக்கு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.. நம்ம 'அனுபவம்' அப்படி..
அதென்ன கடைசில சூப்பர் ஸ்டார் பாட்டு.. மார்க்கெட்டிங் தந்திரமா..? ஒண்ணும் புரியல..? ஆனா எனக்குச் சுத்தமா சவுண்டே வரலை.. கடைசிவரைக்கும் ஊமைப் படமாத்தான் பார்த்தேன்..
//
உத சார்,
நீங்க போடுங்க அனுபத்தை வச்சு நீங்க எழுதும் பெரிய பதிவை படிச்சு நாளாச்சு.
பாட்டு ?
அதுவா ? கூடா ஒழுக்கம் பற்றிய பாடல். கடன் அட்டை வாங்கியவர்கள் எப்படி சீரழிஞ்சி போயிருக்காங்கன்னு ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம்.
//
ஜோதிபாரதி said...
நன்றி! loan shark(Ahlong) பற்றி குறிப்பிட்டமைக்கு. அது சிங்கப்பூரில் இருக்கிறது.
கடன் அட்டை கையைக் கடிக்கும் அட்டை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
ஜோதிபாரதி ஐயா,
எனக்கு அதுபற்றி முற்றிலும் தெரியாது, சீன நண்பர்கள் சொன்னதை வைத்து சொன்னேன். உங்களுக்கு விரிவாக தெரிந்தால் எவரையும் எந்த நிறுவனத்தையும் குறிக்காது பொதுவாக எழுதுங்களேன்.
//D The Dreamer has left a new comment on your post "கடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போல": //
உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாததற்கு மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் நிறுவனங்கள் செயல்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது.
இங்கே அடிப்படையான ஒரே விஷயம் பொறுப்புணர்வு தான் கோவி.கண்ணன்.
கடன் பெறும் போது இருக்கும் மனநிலை அதன் பலனை அனுபவித்து முடித்த மறுகணம் மாறிப் போவதற்கு யார் காரணம்?
ஒருவனுடைய அவசரத் தேவைகளைக் கடன் தந்தவன் உபயோகப்படுத்திக் கொள்கிறான் என்கிற வாதத்தைக் கூட ஒப்புக் கொள்ள முடியவில்லை. அடிப்படையாக ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்க்க வேண்டும்: அந்த கணத்தில் அந்த உதவி இல்லாமல் அந்தத் தேவையைத் தாண்டி இருக்க முடியுமா?
முடியும் என்றால் வாங்கியவருக்குக் கொழுப்பு என்று அர்த்தம்; முடியாது என்றால் அந்த நன்றி உணர்வுடனேயே நிபந்தனைகளுக்கு உடன்பட்டுத் திருப்பித் தரவேண்டியதைப் பொறுப்பாக உணர வேண்டும்.
இலங்கை வேந்தன் விஷயத்தில் கூடப் பாருங்கள். சீதையைத் தூக்கி வராமல் இராமனைப் பழி தீர்த்திருக்க முடியுமா என்கிற கேள்விக்கு அவனுடைய மனசாட்சி முடியும் என்றே சொல்லி இருக்கும். கொழுப்பெடுத்துப் போன செயலுக்கு சுற்றம் எல்லாம் இழந்தோமே என்கிற நிலை தான் கலங்க வைத்திருக்கிறது - கடன்பட்டார் நெஞ்சம் போல்.
//RATHNESH said...
இலங்கை வேந்தன் விஷயத்தில் கூடப் பாருங்கள். சீதையைத் தூக்கி வராமல் இராமனைப் பழி தீர்த்திருக்க முடியுமா என்கிற கேள்விக்கு அவனுடைய மனசாட்சி முடியும் என்றே சொல்லி இருக்கும். கொழுப்பெடுத்துப் போன செயலுக்கு சுற்றம் எல்லாம் இழந்தோமே என்கிற நிலை தான் கலங்க வைத்திருக்கிறது - கடன்பட்டார் நெஞ்சம் போல்.
//
ரத்னேஷ்,
நான் குறிப்பிட்டு இருந்த இலக்கிய மேற்கோளை இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்களுடன் வழங்கியதற்கு மிக்க நன்றி.
மேலோட்டமாக இலக்கிய கதைகள் தெரியும், இங்கு கூட இராவணனுக்கு கம்பர் எந்த சூழலில் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. பதிவில் அதையும் குறிப்பிட நினைத்தேன். நீங்கள் அதை சரியாக இங்கே சொல்லி இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி !
In USA Finance Companies made it "Too EASY to Get CREDIT". If that was Bad they made things Worst by "Making it TOO Easy,too, for NOT Repaying the Credit!"
Has any one heard of Hired Representatives[ Thugs] coming and knocking at their Doors for "Collections" in USA?
கருத்துரையிடுக