பின்பற்றுபவர்கள்

12 பிப்ரவரி, 2008

சு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது ?

ஒரு காலத்தில் சு.சாமி என்கிற நகைச்சுவை அரசியல்வாதி சுப்பிரமணிய சாமி தான் தமிழகத்தை / இந்தியாவை சிங்கப்பூர் ஆக மாற்றுவதாக கூறிக் கொண்டு இருந்தார், அதைத் தொடர்ந்து மணி சங்கர் அய்யர் மயிலாடுதுறையை சிங்கப்பூர் ஆக்கிவதாக சொன்னார். தற்பொழுது சரத்குமார் தமிழகத்தை சிங்கப்பூர் ஆக்குவதற்கு சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள், கூட்டணி ஆட்சியை விட தனித்த ஆட்சியே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

சிங்கப்பூர் இயற்கை வளம் எதுவுமின்றி, தொழில் வளத்தையும், தன் நாட்டிலும், சுற்றிலும் உள்ள நாடுகளில் உள்ள மனித வளத்தை மட்டுமே நம்பி இருக்கும் நாடு. தமிழ் நாடு தண்ணீர் இடற் (பிரச்சனை) தவிர்த்து மற்ற எல்லா விதத்திலும் தன்னிறைவு பெற்ற மாநிலம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ? விடையைச் சொல்லி கேள்வி கேட்கும் இந்த பாடலில் இருக்கும் பொருளை ஆட்சியாளர்கள் எவரும் முழுமையாக முன்னெடுத்துச் செல்லவில்லை.

சிங்கப்பூர் வாசிகளின் வருமானமும் செலவும் சரியாக இருக்கும், சிங்கப்பூர் வெள்ளியின் இந்திய மதிப்பீட்டின் அளவு பெரும் வேறுபாடு ( 1 வெள்ளி = 27 இந்திய ரூபாய்) இருப்பதால் சிங்கை வெள்ளி பெரிதாக தெரிகிறது. இங்கு மூன்று அறை முழுவீட்டின் மாதவாடகை 1200 வெள்ளிகள் வரை இருக்கிறது, ஒருவர் 3000 வெள்ளிகள் ஊதியம் பெற்றாலும் உரிமை வீடு இல்லாவிட்டால் 35 விழுக்காடு வாடகைக்கே சென்றுவிடும். உரிமையுள்ள வீடு இருப்போர்களுக்கும் ஏறத்தாள அதே நிலமைதான். 30 ஆண்டுகளுக்கான தவணைத் தொகையாக 35 விழுகாடு வீடுவாங்கிய கடனுக்கான வட்டியும் அசலுமாக மாத மாதம் செல்லும். குடிமக்கள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் குறைந்த கடனுக்கு அரசு உதவியில் அனைவருக்கும் வீடு இருக்கிறது. நிரந்தரவாசிகளும் வங்கியில் கடன் பெற்று வீடு வாங்கிக் கொள்ளலாம். மற்றபடி சிங்கையில் உள்ள கட்டிடங்களைப் பார்த்து அனைவரும் பணக்காரர்கள் போல நினைத்து தமிழக அரசியல் வாதிகள் பேசிவருகின்றனர்.

ஏற்கனவே சிங்கை / மலேசியாவை விட நில விற்பனையில் சென்னை எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. சிங்கையில் விற்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் மூவறை வீடு சென்னையில் விற்கப்படும் மூவறை வீட்டைவிட சில / பல லட்ச ரூபாய்கள் குறைவுதான். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா கதவை திறந்துவிட்டதில் இருந்து வெளிநாட்டு பொருள்கள் அனைத்துமே இந்தியாவில் கிடைக்கிறது. சிங்கையிலும் கிடைக்கிறது.

பதிவர் சித்தூர் முருகேசன் சொல்வது போல் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், வேலையில்லாமல் இருக்கும் காலத்தில் இரானுவ / காவல் / அரசு துறைகளைச் சேர்ந்தவர்களை மறுநிர்மானப்பணிகளுக்கு பயன்படுத்தி அதன் மூலம் இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தி, அணைக்கட்டுவது, நதி நீர் இணைப்பு போன்றவகைகளை திட்டமிட்டு செய்தால், உணவு பொருள் உற்பத்தியியால் ஏற்றுமதி மிக்கவையாக ஆகி இந்தியாவே ஆசியாவில் பணக்கார நாடாக மாறிப் போகும். மணமிக்க பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்துவிட்டு வெளிநாட்டுக் காரன் கொடுக்கும் கெமிக்கல் சோப்பை வாங்கி தேய்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம். நம் நாட்டில் கிடைக்கிற வேலையை பார்பதைவிட்டு விரும்பிகிற வேலையை தேடுவோம் என்கிற சோம்பேறித்தனம் இருக்கிறது. சிங்கையில் நல்ல வேலையில் இருந்து எதோ காரணத்தினால் வேலை இழந்திருந்தால் தயங்காமல் டாக்ஸி ஓட்டச் செல்கிறார்கள். கிடைக்கிற வேலையைப் பார்கிறார்கள். வேலை இல்லை என்றால் வாழவே முடியாது என்பதால் அவர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள்.

அரசியல் வாதிகள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று தண்ணிக்காட்டுறார்கள் என்று நினைக்கிறேன். பயன்படுத்தும் தண்ணீர் குறித்து தமிழகம் ஏற்கனவே சிங்கப்பூராகத் தான் இருக்கிறது. சிங்கப்பூர் பெரும்பகுதி தண்ணீரை மலேசியாவில் இருந்துதான் பெற்றுக் கொள்கிறது.
:))

தமிழத்தின் சென்னை ஏற்கனவே சிங்கை போல் தான் உள்ளது.

20 கருத்துகள்:

Arun Kumar சொன்னது…

கருத்து கந்தசாமி அவர்களே உங்கள் கருத்தை கண்டு மிக்க மன அவா

எப்படிதான் ப்ளேடு போடுவது போல எழுதுறீங்களோ தாவு தீருதுப்பா.

RATHNESH சொன்னது…

நண்பரே!

இப்படி சிங்கப்பூர் ரகசியங்களை அப்பட்டமாக வெளிச் சொல்லி சிங்கை மாப்பிள்ளைகளின் தமிழக கல்யாண மார்க்கெட் மதிப்பைத் தரை மட்டமாக்குகிறீர்களே! நியாயமா?

இன்னொரு விஷயம்: மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்ததாக ஞாபகம். (மயிலாடுதுறையில் சில ஒட்டகங்களை நடமாட விடப் போகிறார் என்று எதிர்க்கட்சியினர் கேலி செய்த காலங்களில் நான் பக்கத்து காரைக்காலில் தான் இருந்தேன்).

வெட்டிப்பயல் சொன்னது…

நல்ல கருத்து...

குலவுசனப்பிரியன் சொன்னது…

//தமிழத்தின் சென்னை ஏற்கனவே சிங்கை போல் தான் உள்ளது.//

உதாரணத்திற்கு மேலும் சில படங்கள்:
http://www.skyscrapercity.com/showthread.php?t=306830

கோவி.கண்ணன் சொன்னது…

//

Talan said...
கருத்து கந்தசாமி அவர்களே உங்கள் கருத்தை கண்டு மிக்க மன அவா

எப்படிதான் ப்ளேடு போடுவது போல எழுதுறீங்களோ தாவு தீருதுப்பா.
//

நான் வெற்றிலை பாக்கு வச்சி அழைக்கவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
நண்பரே!

இப்படி சிங்கப்பூர் ரகசியங்களை அப்பட்டமாக வெளிச் சொல்லி சிங்கை மாப்பிள்ளைகளின் தமிழக கல்யாண மார்க்கெட் மதிப்பைத் தரை மட்டமாக்குகிறீர்களே! நியாயமா?

இன்னொரு விஷயம்: மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்ததாக ஞாபகம். (மயிலாடுதுறையில் சில ஒட்டகங்களை நடமாட விடப் போகிறார் என்று எதிர்க்கட்சியினர் கேலி செய்த காலங்களில் நான் பக்கத்து காரைக்காலில் தான் இருந்தேன்).
//

சிங்கை மாப்பிள்ளைகளா ? அது பற்றி ஒரு இடுகை எழுதிடுவோம்.
:)

நாகையில் ஜெவுடன் மேடை ஏறியதும் எதோ பிரச்சனையில் மணிசங்கர் ஐயரை காரைக்கால் வரை அதிமுகவினர் துறத்திச் சென்றார்களாம். மணிசங்கர் இன்னும் நிறைய காமடி பண்ணி இருக்கார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
நல்ல கருத்து...
//

மிக்க நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தமிழத்தின் சென்னை ஏற்கனவே சிங்கை போல் தான் உள்ளது.//

சிங்கையில் கூவம் இல்லை!

சென்னைக்கு அந்த பாக்கியம் உண்டு!!

இதை படியுங்களேன்!!!

http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_2905.html

அன்புடன்,
ஜோதிபாரதி.

DtheD சொன்னது…

Delete my email address in the previous Commet........ Will you?????????????????

கோவி.கண்ணன் சொன்னது…

D The Dreamer said...
Kovi:
I dont believe that you are ignorant as you have portrayed yourself here.

Do you believe that the situation in Singapore and Tamilnadu are same?

In my humble opinion, there are several differences. Able and foresighted leadership, relatively clean and crime free living environment, efficient government machinary, winning the confidence of the investors, are some key strengths of Singapore. Merely comparing Singapore and India in terms of availability of luxury goods and lan prices is not fair and just.
Just tell me one thing, Singapore Airlines is one among the best commercial flier in the world. Does India have one??????
Cheers
I wish to be anonymous. This comment is just my thoughts. You can email me at ******** if you wish.

வவ்வால் சொன்னது…

//In my humble opinion, there are several differences. Able and foresighted leadership, relatively clean and crime free living environment, efficient government machinary, winning the confidence of the investors, are some key strengths of Singapore.//

சிங்கப்பூர் அளவுக்கு மற்ற விஷயத்தில் இந்தியா இல்லை தான், ஆனால் அதுக்கு காரணமே இப்படி சிங்கப்பூர் ஆக்குவேன்னு சொல்ற அரசியல்வியாதிகள் தானே, இவனுங்களை நாடு கடத்தினா தான் அதெல்லாம் சாத்தியம்.

முதலில் இவனுங்க பொது இடத்தில பேனர் வைக்காம இருக்கட்டும், மாநாடுனு சொல்லிக்கிட்டு லாரில ஆள்கூட்டி வந்து அந்த ஊரை படுத்தாம இருக்கட்டும், இருக்கிற சுவற்றில் எல்லாம் பல கலர்ல அண்ணன் மதுரைக்கு அழைக்கிறார் வாரீர்னு எழுதாம இருக்கட்டும்.

தெரு முக்குல மேடைப்போட்டு போக்குவரத்தை தடுத்து, புனல் மைக் வச்சு எதிர்க்கட்சிக்கு சவால் விடுறத நிறுத்திட்டு அப்புறமா சிங்கப்பூர் ஆக்கட்டும், முதலில் சிங்கப்பூர் அரசியல்வாதிகள் போல ஒழுக்கமா இருங்கடா, அப்புறமா தமிழ் நாடு தானா சிங்கப்பூர் ஆகிடும் :-))

சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் சரிதான் அவங்க வாங்குற அளவுக்கு கட்டணம் போட்டா , இங்கேவும் சிறந்த சேவை தரலாம், ஆனால் இங்கே மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப எதையும் விலை நிர்ணயிக்கணும். ஒரு சிலருக்கு கைல அதிகம் காசு இருக்கலாம், எல்லாருக்கும் இருக்குமா?

இயற்கை வளம், மனித ஆற்றல், கல்வி, திறமை எல்லாம் இங்கே இருக்கு, என்ன ஊழல் இல்லா ஆட்சி அளிக்க அரசியல்வாதிகள் தான் இல்லை. அது இருந்தா எப்போவோ இந்தியா வல்லரசாக மாறி இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்ஸ் கருத்துக்கு நன்றி,

உங்கள் கருத்துடனே நானும் ஒரு பிட்டைப் போட்டுக் கொள்கிறேன்.

சிங்கப்பூர் பரப்பளவில் மிக சிறிய நாடு, எனவே வழிகாட்டல் வழிநடத்துதல் எல்லாமே சாத்தியம், சிங்கையில் இருப்பது ஒரே ஒரு ஏர்போர்ட் அதில் 3 முனையங்கள் வைத்திருக்கிறார்கள், பரமரிப்பதற்கும், அழகுபடுத்துவம் ஒரே இடமாக இருப்பதால் எளிது. ஒன்றைக் கூட சரியாக வைத்திருக்காமல் இருக்க முடியுமா ?

இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு அதன் பிறகு சிங்கையுடன் ஒப்பிட்டால் நன்றாக இருக்கும். ஒரு நகரத்தை நகரத்துடன் ஒப்பிடுவதற்கும் நாட்டை ஒப்பிடுவதற்கும் வேறுபாடு பலருக்கு தெரியவில்லை. சிங்கை மலேசியாவில் இணைந்திருந்த முன்னாள் மலேசிய நகரம். பின்பு நாடாக மாறி இருக்கிறது. அருகில் உள்ள மலேசியாவிற்கும் சிங்கைக்கும் பராமரிப்பில் வேறுபாடுகள் இருக்கும் போது, இந்தியாவை சிங்கையுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா ?

DtheD சொன்னது…

Kovi: i still wish to be anonymous. Thanks for your consideration and understanding.

Vavval:
//தெரு முக்குல மேடைப்போட்டு போக்குவரத்தை தடுத்து, புனல் மைக் வச்சு எதிர்க்கட்சிக்கு சவால் விடுறத நிறுத்திட்டு அப்புறமா சிங்கப்பூர் ஆக்கட்டும், முதலில் சிங்கப்பூர் அரசியல்வாதிகள் போல ஒழுக்கமா இருங்கடா, அப்புறமா தமிழ் நாடு தானா சிங்கப்பூர் ஆகிடும் :-))//

Cant agree more.....

//சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் சரிதான் அவங்க வாங்குற அளவுக்கு கட்டணம் போட்டா , இங்கேவும் சிறந்த சேவை தரலாம், ஆனால் இங்கே மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப எதையும் விலை நிர்ணயிக்கணும். ஒரு சிலருக்கு கைல அதிகம் காசு இருக்கலாம், எல்லாருக்கும் இருக்குமா?//
Very good question. But did you know that the foundation for the Singapore Airlines was laid in the 1970's when Singapore still struggling to identify its niche and this was way before Singapore reached the genith we witness now? Dont blame the consumers/people. They are willing to pay for good service. But do we have what it takes to provide the same???

My view is that India has a long way to go to match up with Singapore.

DtheD சொன்னது…

Kovi:
//சிங்கப்பூர் பரப்பளவில் மிக சிறிய நாடு, எனவே வழிகாட்டல் வழிநடத்துதல் எல்லாமே சாத்தியம், சிங்கையில் இருப்பது ஒரே ஒரு ஏர்போர்ட் அதில் 3 முனையங்கள் வைத்திருக்கிறார்கள், பரமரிப்பதற்கும், அழகுபடுத்துவம் ஒரே இடமாக இருப்பதால் எளிது. ஒன்றைக் கூட சரியாக வைத்திருக்காமல் இருக்க முடியுமா?//

You know what? This argument is sheer escapism. Where there is a will there is a way...

There should be a starting point for any thing. Afterall, a journey of thousand miles begins with a humble step (Confucious). Why dont we begin from one airport in one state. Make it world's best in 5 years time. Is there any effort to do it? Is there a leader who has a vision to do it and who would be allowed to do it (by both opposition and coalition parties)?????

பிறைநதிபுரத்தான் சொன்னது…

சிங்கப்பூர் முன்னேற காரணங்களாக அதன் அரசியல் நிலைத்தனமை - 'முக்குல மேடைப்போடவிடாத' கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்

'குட்டி' தீவாக சிங்கப்புர் விளங்குவதால்தான் - சிறப்பான நிர்வாகத்திற்கு எளிதாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கேரள மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்களேன் -
சுகாதரத்திலும் - கல்வியிலும் ‘பொருளாதரத்தில்' சிறந்த மற்ற இந்திய மாநிலங்களை விட சிறந்து விளங்கவில்லையா?

வவ்வால் சொன்னது போல் சிங்கப்பூர் அரசியல்வாதிகளைப் போல ஒழுக்கமாக வாழக்கற்றுக்கொள்ளவேண்டும்.

சிங்கப்பூர் அரசியல் வாதிகள்
ஒழுக்கமாக இருக்க பல காரணங்கள் அவற்றுள் தலையானது - அவர்களின் சம்பளம். உலகிலேயே மிகவும் அதிகமாக ஊதியம் பெறும் அரசியல்
வாதிகள் அவர்கள்தான். அவர்களின் வருடாந்திர வருமானம்: சிங்கப்பூர் பிரதமர் (US$2.04 மில்லியன்), மூத்த அமைச்சர் (US$2.01 மில்லியன்), Minister Mentor எனப்படும்
அமைச்சரின் ஆலோசகர்/வழிகாட்டி (US$2.01 மில்லியன்) , துனை பிரதமர் (US$1.62 மில்லியன்), சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் (S$216,300). அதிக சம்பளம் வாங்குவதால்
அரசியல் வாதிகள் ஊழலில் ஈடுபடுவதில்லை.

கொசுறு செதி:
உலகிலேயே மிகவும் குறைந்த சம்பளமாக மாதத்திற்கு ஒரு ரூபாய் வாங்கி புரட்சி செய்தவர் - தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதா!

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

இப்பதிவைப் பொறுத்தவரை Dreamer ன் கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகிறேன்.
Defenitely,it's leaders with vision that makes the difference.
Singapore doesn't fall from heaven to earth on one fine morning.
It needed a great visionary called LKY to build it to its today's status.
LKY had written his early years of interaction with indian prime ministers,starting from Nehru to Indira.(late 1950 & early 1960's).
He had beautifully portrays what we can call as erotion of standard in Indian politicians.

உதயம் சொன்னது…

முழுமையாக ஒன்றும் அறியாமல் சிங்கப்பூர் ஆக்குவேன்,துபாய் ஆக்குவேன் என்று முழங்கும் அரை வேக்காட்டு அரசியல்வாதிகளை வைத்து என்ன செய்ய? வெறும் படபிடிப்புக்கு சென்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து சிங்கபூரை பார்த்து விட்டு அறிக்கை விடும் இவர்கள் எல்லாம் நாடாள வந்தால் .............. !

Arun Kumar சொன்னது…

//கோவி.கண்ணன் said...

//

Talan said...
கருத்து கந்தசாமி அவர்களே உங்கள் கருத்தை கண்டு மிக்க மன அவா

எப்படிதான் ப்ளேடு போடுவது போல எழுதுறீங்களோ தாவு தீருதுப்பா.
//

நான் வெற்றிலை பாக்கு வச்சி அழைக்கவில்லை.
//
அப்படின்னா தனியா ஒதுங்கி பதிவு போடலாமே திரட்டில போட்டா பாக்கதான் செய்வாங்க. உங்களுக்கு புடிச்சவங்க மட்டும் படிக்கனும்னா தனியா போட வேண்டியது தானே. பொது இடம்ன்னா இதேல்லாம் சகிச்சிகிட்டுதான் ஆவனும் கருத்து கந்தசாமி.உங்க கருத்தையும் எவனாவது படிப்பான்னு தமிழ்மணத்துல வறீங்க ?? தமிழ்மணம் என்ன உங்களை வெத்தலை பாக்கு வெச்சு அழைத்தார்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Talan said...
அப்படின்னா தனியா ஒதுங்கி பதிவு போடலாமே திரட்டில போட்டா பாக்கதான் செய்வாங்க. உங்களுக்கு புடிச்சவங்க மட்டும் படிக்கனும்னா தனியா போட வேண்டியது தானே. பொது இடம்ன்னா இதேல்லாம் சகிச்சிகிட்டுதான் ஆவனும் கருத்து கந்தசாமி.உங்க கருத்தையும் எவனாவது படிப்பான்னு தமிழ்மணத்துல வறீங்க ?? தமிழ்மணம் என்ன உங்களை வெத்தலை பாக்கு வெச்சு அழைத்தார்களா?
//

எங்கே போடவேண்டும் என்பது என் விருப்பம். விருப்பம் இருந்தால் படிங்க, இல்லாட்டி போங்க. கிட்டவந்தால் அரிக்குது என்று சொன்னது தாங்கள் தான். இவன் இப்படித்தான் எழுதுவான் என்று தெரியுமுல்ல, பெயரோடுதானே வருது, திறக்காமல் இருக்க வேண்டியது தானே, வாய்யா வந்து கருத்துச் சொல்லுய்யா என்று நான் சொன்னேனா ?

Chittoor Murugesan சொன்னது…

அன்புடையீர்,
எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய அம்சமான 10 கோடி நிருத்யோகர்களை கொண்ட சிறப்பு ராணுவம் திட்டத்தை தங்கள் பதிவில் குறிப்பிட்ட்மைக்கு நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்