பின்பற்றுபவர்கள்

21 பிப்ரவரி, 2008

தாய் மொழி வேறு, தாய் நாடு வேறா ?

அண்மையில் பெங்களூரில் இருந்து ஒரு க்ளைண்ட் வந்திருந்தார். அவரை அழைத்துவர விமான நிலையம் சென்றேன். 'நீங்க பெங்களூரா ? அல்லது வட இந்தியாவா ? என்று ஆங்கிலத்தில் கேட்டேன். நான் பெங்களூர்காரன், தயக்கத்திற்கு பிறகு 'கன்னடன்' என்றார், எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் தெரியும் என்றார். சிறுது நேர ஆங்கில உரையாடலுக்குப் பிறகு தமிழில் பேசினார். பேச்சில் பெங்களூரில் தமிழ் பேசுபவர்களின் மணம் கலந்து இருந்தது. ஒருவேளை என்னுடன் தமிழில் பேசுவது எனக்கு மகிழ்வாக இருக்கும் என்று நினைத்தார் போலும் என்று நானும் தமிழிலேயே பேச ஆரம்பித்தேன். பிறகு அவரது வீட்டுக்கு தொலைப்பேசி பத்திரமாக வந்து சேர்ந்ததை தெரிவிக்க வேண்டும், இங்கே எங்கு சென்று தொலை பேச முடியும் ? என்று கேட்டார்.

என் கைத்தொலைபேசியிலேயே பேசலாம் தொலைபேசி எண்ணைச் சொல்லுங்க என்றேன். நானே எண்ணை அழுத்தினேன். பெங்களூருக்கு அவரது வீட்டில் மணி அடித்தது, ஒரு சுவாரிசியத்துக்காக, நானே அவர் எதிரில் அவரது அப்பாவிடம், க்ளையிண்டின் பேரைச் சொல்லி, 'சந்துரு மனையல்லி இதாரா ?' என்று கன்னடத்தில் கேட்டேன். எதிர்தரப்பில், 'நீங்க யார் பேசறது ?' என்றார்கள். நான் கன்னடத்தில் பேசினால் தொலைபேசியில் பேசுவது தமிழன் தான் என்று எப்படி கண்டு கொண்டார்கள் என்று நினனத்துக் கொண்டே அந்த 'க்ளைண்டிடம்' கைப்பேசியைக் கொடுத்தேன். அவர் என்னிடம் பேசிய அதே (பெங்க்களூர்) தமிழில், 'அப்பா நான் வந்து சேர்ந்துட்டென், ஒன்னும் பிரச்சனை இல்லை' என்றார். அவர் பேசி முடித்ததும். உங்கள் தாய்மொழி தமிழா ? என்று கேட்டேன். ஆமாம், என் தாய்மொழி தமிழ்தான் வீட்டில் தமிழில் பேசுவோம். வெளியில் கன்னடம் பேசுவோம்.
எங்கள் மூதாதையர்கள் பல தலைமுறைக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்து வந்து இங்கே செட்டில் ஆனவர்கள் என்றார்.

என்னை சந்திக்கும் போது அவர் தன்னை தமிழன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. 'கன்னடன் என்று தான் சொன்னார், பின்பு தாய்மொழி தமிழ் என்று மட்டும் சொல்லிக் கொண்டார். இதுபோல் தாய்மொழி எந்த மொழிபேசினாலும், எங்கு வாழ்கிறோமோ அதுதான் தாய்நாடு என்று நினைப்பது தமிழன் மட்டும் தானா ? தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என பலரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், அவர்கள் எவரும் தன் தாய்மொழியை சொல்லி பிறரிடம் அல்லது அந்த அந்த மொழிபேசுபவர்களிடம் அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை, மாறாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவன், 'தமிழன்' என்றே சொல்லிக் கொள்கிறார்கள். இங்குள்ள நம் அரசியல்வாதிகளோ தமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் என்று சான்றிதழ் வழங்குகிறார்கள். :)

தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி பேசும் காதலர்கள் மணந்து கொண்டால் அவர்களின் வாரிசுகள் பேசும் மொழி எப்போதும் 'தந்தை' மொழியாகவே இருக்கிறது. அவர்களது குழந்தை(களு)க்கு கற்றுக் கொடுத்து பேசவைக்கும் மொழி தந்தைமொழியாகவே இருக்கிறது, அதற்கு அந்த குழந்தையுடன் சேர்ந்து அந்த தாயும் தன் கணவரின் மொழியை கற்றுக் கொள்கிறார் (ஆணாதிக்கம் ?) :(

தாய்மொழி வேறு, தாய் நாடு வேறு, இரண்டும் ஒன்றாக அமையாவிட்டால், தாய்மொழியில் பேசுவது அவர்களது தனித்தன்மை, அதைவிட நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஊரை / மானிலத்தை / நாட்டை / அங்கு பேசப்படும் மொழியை மிகுந்தே போற்றதல் அது அவர்களது பொதுத்தன்மை.

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இங்கு பெங்களூரில் குடியேறியிருக்கும் பெரும்பாலான தமிழர்களும் தங்களை பெங்களூரியன் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுகின்றார்கள். இதே போல் நிறைய பேர் கூறிக்கேள்விப் பட்டிருக்கின்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இ.கா.வள்ளி said...
இங்கு பெங்களூரில் குடியேறியிருக்கும் பெரும்பாலான தமிழர்களும் தங்களை பெங்களூரியன் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுகின்றார்கள். இதே போல் நிறைய பேர் கூறிக்கேள்விப் பட்டிருக்கின்றேன்.
//

அதில் தப்பே இல்லை. வாழும் இடத்திற்க்கு பிறகு, அங்கு பேசும் மொழிக்கு பிறகு தான் தன் தாய் மொழிக்கு மரியாதை செய்ய வேண்டும்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//தாய்மொழி வேறு, தாய் நாடு வேறு, இரண்டும் ஒன்றாக அமையாவிட்டால், தாய்மொழியில் பேசுவது அவர்களது தனித்தன்மை, அதைவிட நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஊரை / மானிலத்தை / நாட்டை / அங்கு பேசப்படும் மொழியை மிகுந்தே போற்றதல் அது அவர்களது பொதுத்தன்மை.//

"மிகுந்தே போற்றுதல்" என்பது இயல்பாக வருமெனில் சரிதான்..வலிந்து வரவழைக்கப்பட்டால் அதன் நிலையாமை கேள்விக்குறிதான்..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

முதலில், தமிழனாகப் பிறந்த உங்கள் க்ளையண்ட் தமிழன் என்று சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. முகவரியை மாற்ற எப்படி மனசு வந்தது.

//தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி பேசும் காதலர்கள் மணந்து கொண்டால் அவர்களின் வாரிசுகள் பேசும் மொழி எப்போதும் 'தந்தை' மொழியாகவே இருக்கிறது. அவர்களது குழந்தை(களு)க்கு கற்றுக் கொடுத்து பேசவைக்கும் மொழி தந்தைமொழியாகவே இருக்கிறது, அதற்கு அந்த குழந்தையுடன் சேர்ந்து அந்த தாயும் தன் கணவரின் மொழியை கற்றுக் கொள்கிறார் (ஆணாதிக்கம் ?) :(//

நான் பார்த்த வரையில் மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்ணை தமிழன் திருமணம் செய்திருந்தால் கூட பிள்ளைகள் மலையாள மொழியையே தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்.(கணவர் மிகப்பெரிய தமிழ் ஆர்வலராக இருந்தும் கூட)மற்றவர்கள் வேறுமாதிரி இருக்கலாம்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

துளசி கோபால் சொன்னது…

//தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி பேசும் காதலர்கள் மணந்து கொண்டால் அவர்களின் வாரிசுகள் பேசும் மொழி எப்போதும் 'தந்தை' மொழியாகவே இருக்கிறது. அவர்களது குழந்தை(களு)க்கு கற்றுக் கொடுத்து பேசவைக்கும் மொழி தந்தைமொழியாகவே இருக்கிறது, அதற்கு அந்த குழந்தையுடன் சேர்ந்து அந்த தாயும் தன் கணவரின் மொழியை கற்றுக் கொள்கிறார் (ஆணாதிக்கம் ?) :(//

மெய்யாலுமா?

நீங்க சொன்னமாதிரி ஒரு தம்பதிகள் தங்கள் வெவ்வேறு தாய்மொழிகளை ஒரு பக்கம் வச்சிட்டு, இருவருமே வீட்டிலும்சரி, வெளியிலும் சரி பொது மொழியாத் தமிழையே பேசறாங்க. அவுங்க மகளும் தமிழ்தான் பேசறார்.

எந்தக் குடும்பம் இதுன்னு உங்களுக்கு மெய்யாலுமே தெரியாதாக்கும்? :-)))))

சின்னப் பையன் சொன்னது…

அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழர்தான் என்று நினைக்கிறேன்...

உதாரணத்திற்கு, அமெரிக்காவில் பிறந்து பெற்றோருடன் சிறிது காலம் வாழும் குழந்தைகள் - தமிழர்கள்தானே - ஆங்கிலேயர் இல்லையெ?.. இதே உதாரணத்தை இந்தியாவிலும் பொருத்தலாம்தானே?...

கோவி.கண்ணன் சொன்னது…

துளசி கோபால் said...
//தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி பேசும் காதலர்கள் மணந்து கொண்டால் அவர்களின் வாரிசுகள் பேசும் மொழி எப்போதும் 'தந்தை' மொழியாகவே இருக்கிறது. அவர்களது குழந்தை(களு)க்கு கற்றுக் கொடுத்து பேசவைக்கும் மொழி தந்தைமொழியாகவே இருக்கிறது, அதற்கு அந்த குழந்தையுடன் சேர்ந்து அந்த தாயும் தன் கணவரின் மொழியை கற்றுக் கொள்கிறார் (ஆணாதிக்கம் ?) :(//

//மெய்யாலுமா?

நீங்க சொன்னமாதிரி ஒரு தம்பதிகள் தங்கள் வெவ்வேறு தாய்மொழிகளை ஒரு பக்கம் வச்சிட்டு, இருவருமே வீட்டிலும்சரி, வெளியிலும் சரி பொது மொழியாத் தமிழையே பேசறாங்க. அவுங்க மகளும் தமிழ்தான் பேசறார்.

எந்தக் குடும்பம் இதுன்னு உங்களுக்கு மெய்யாலுமே தெரியாதாக்கும்? :-)))))
//

துளசி அம்மா,

நான் பார்த்தது கூட கிட்டதட்ட அதே போன்று தான், கணவருக்கு தெலுங்கு தாய்மொழி மனைவிக்கு மலையாளம் இருவரும் பொதுவாக பேசிக் கொள்வது தமிழ், ஆனால் குழந்தையிடம் தெலுங்கில் தான் பேசி வளர்க்கிறார்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்