பின்பற்றுபவர்கள்

1 பிப்ரவரி, 2008

இதறக்கெல்லாம் கீ.வீரமணி பதில் சொல்வாரா ?

டாக்டர் இரா.அசோகன், ஆவடி, சென்னையிலிருந்து எழுதுகிறார்:

"ஆண்டவன் எனக்கு நடிகன் என்ற பாத்திரத்தை வழங்கியதை இப்போது நான் செய்து கொண்டு இருக்கிறேன். எனவே, நாளை நான் அரசியலுக்கு வருவேனா என்பதையும் ஆண்டவன் தான் தீர்மானிக்க முடியும்...' என்று, தூய தெய்வ பக்தியுடன் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நம்பிக்கை என்பதைத் மட்டுமே கொண்டு முட்டாள் தனமாக எழுப்பிய கேள்விகளுக்கு வீரமணி ஓடி வந்து பதில் சொல்ல வேண்டுமா ?

ரஜினிகாந்த் தனக்கு ஆசை இல்லை என்று காட்டிக் கொள்ள அடிக்கடி விடுக்கும் ஸ்டேட்மண்டுகளில் அதுவும் ஒன்று, 100 கோடி பட்ஜெட்டில் தான் இப்போதெல்லாம் இவர் படம் தயாராகுதாம், இதெல்லாம் வியர்வையால் உழைக்கும் ஏழை ரசிகனின் பணத்தில் இருந்து ஈடு செய்யப்பட்டும், லாபமாகவும் ஆகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுவோம் என்று சொன்ன நாத்திகன் அறிஞர் அண்ணா இருந்த நாட்டில் ஏழையை சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் லெட்சுமியை (தங்க காசு ) காணும் ரஜினிகாந்தின் ஸ்டேட்மண்டை வைத்து வீரமணிக்கு புளி கரைக்குதா ? பெரியார் வீரமணி கருணாநிதி ஆகியோர் யார் செய்த முடிவினால் அரசியலுக்கு வந்தார்கள் ?

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால், ஏமாற்றமாக இருக்கும். ஏமாற்றத்துடன் வாழ்வதற்கும், பழகிக் கொள்ளவும் எனக்கு தைரியத்தை வழங்குமாறு கடவுளை நான் எப்போதும் பிரார்த் தனை செய்கிறேன்...' என்று, தணியாத கடவுள் பக்தியுடன் பேசியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

பிரதமர் சொல்லுவதை தன்னம்பிக்கை இன்மை, எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்று தான் சொல்ல முடியும், எந்த ஒரு நாத்திகனும் ஏமாற்றத்தை தாங்கமுடியவில்லை என்று தற்கொலை செய்து கொள்வது கிடையாது. நாத்திகன் காரணங்களை ஆராய்வான், எல்லாவற்றிற்கும் காரணம் கடவுள் என்று தன் இயலாமைக்குக் கூட கடவுள் மேல் குற்றம் சுமத்தி தன்னை தேற்றிக் கொள்ளலாம் என்று தாழ்வாக நினைக்க மாட்டான். தன் செயலை பிறர் மீது போட்டு தப்பிப்பது உளவியல் காரணமே, அதற்கு கடவுள் பெயர், நம்பிக்கை கருவியாகிவிடுகிறது. அது இல்லாதவன் தானே பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அடுத்த முறை திருத்திக் கொள்ளலாம், அல்லது விட்டுவிடலாம் என்று நினைப்பான்.

எங்கள் ஆட்சியை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்...' என்று, கடவுள் மீது நம்பிக்கை வைத் ததால், ஆட்சியை தக்க வைத்து வெற்றி பெற்று விட்டார் கோவா முதல்வர் திகம்பர் காமத்.


ஆட்சி என்பது அய்ந்து ஆண்டுகள் தான், எதுவும் நிலை இல்லை என்று வாய்கிழிய ஆன்மிகம் பேசினால் மட்டும் போதாது, அதை சந்திக்கும் போது அதற்க்கான மனநிலையில் இல்லாமல் கூப்பாடு போட்டுவிட்டு, காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக எதோ நடந்தால் எல்லாம் கடவுள் செயல் என்று கூறினால், ஆட்சி ஆட்டம் கான வைத்தது மட்டும் யார் செயலாம் ? தமிழக அம்மா வேண்டாத தெய்வங்களா ? பண்ணாத யாகங்களா ? என்ன ஆச்சு. கடவுள் கைவிட்டுவிட்டாரா ? அல்லது கடவுளுக்கு தமிழக தேர்த்தல் நடந்த சமயங்களில் காது கேட்காமல் போய்விட்டதா ? தேர்த்தலில் வெற்றிபெருவது கடவுள் செயல் என்றால் தோற்ற கட்சியை சேர்ந்தவர்கள் நாத்திகர்களா ? பிஜேபி தோல்வியை சந்தித்தது இல்லை ? ஆட்சி கவிழ்ந்தது இல்லை ?

ராமநாதபுரம் மாவட் டம் ஏனாதிகோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு, அமைச்சரிலிருந்து அதிகாரிகள் வரை முறையிட்டும் பலன் இல்லாததால், "அரசு தீர்க் காததை பழநி ஆண்டவரிடம் முறையிடுவோம்...' என, அவ்வூர் மக்கள் முடிவு செய்து, 40 நாள் விரதம் இருந்து 60க்கும் மேற்பட்டோர் முருகனிடம் முறையிட பழநிக்கு பாத யாத்திரை சென்றுள்ளனர்.

பழனி கோவிலில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்கள், பணம் பிடுங்குதல் உலக பிரசித்தம். பழனி ஆண்டவர் தன்னைச் சுற்றி நடப்பதைப் பார்த்துக் கொண்டு அமைதியாகத்தானே இருக்கிறார். ஊர் மக்கள் எதோ ஒரு நம்பிக்கையில் செல்வதற்கும், வீரமணிக்கும் என்ன சம்பந்தம் ?

"வீரமணி தலைமையிலான சேது சமுத்திர குழுவை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. ராமர் இல்லை என்று திராவிடக் கழகம் கூறுகிறது. காங்கிரஸ் கட்சியினர் கடவுளை நம்புகின்றனர்....' என்று, தெய்வ நம்பிக்கையுடன் சொல்லியுள்ளார் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம்.

ஆமாய்யா, ராமர் இருந்தார் என்று சொல்லுவீர்கள், அதே சமயத்தில் அல்லா என்று சொன்னால் குல்லாவா ? என்று கேட்பிங்க, நம்பிக்கை என்பது என்ன அவரவர் நம்புவதுதானே? இதில் பொதுப்படுத்துதல் எங்கிருந்து வந்தது ? கடவுள் நம்பிக்கை உடைய, இஸ்லாமியரும், கிறித்துவரும் சேது சமுத்திரத்திட்டத்தை ஆதரிக்கிறார்கள். அவர்களும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தானே ? தெய்வ நம்பிக்கை என்றால் என்ன தான் நம்பும் கடவுளை மட்டும் நம்புவதா ? எங்கும் நிறைந்திருப்பது இறை என்று சொல்லிக் கொண்டு இராமர், இராமர் பாலம் என்று கருத்தை சுறுக்கி கொள்வது இறை நம்பிக்கையின் மீதான அவநம்பிக்கை இல்லையா ?

"ஜல்லிக்கட்டு என்பது மக்களுடைய நம்பிக் கையை சார்ந்த விஷயம் என்று தமிழக அரசு சுபரீம் கோர்ட்டில் வாதாடி தடை யை நீக்கியுள்ளது. இதே போல் தான் ராமர் பாலம் என்பதும் உலகமெங்கும் உள்ள 100 கோடி இந்து மக்களின் நம்பிக்கையை சார்ந்த விஷயம். இதை அடிப்படையாக வைத்து, சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவேன்...' என்று, உண்மையான ராமர் பக்தர்கள் சார் பாக சாடியுள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி.
கடவுளை பூஜிப்பவர்களுக்கு கைமேல் பலன் உண்டு என்பதற்கிணங்க, மேலே கூறியவர்களின் தெய்வ நம்பிக்கைகளுக்கு வீரமணி என்ன பதில் சொல்லப் போகிறார்...?உண்மையிலேயே வீரமணிக்கு வீரமும் தைரியமும் இருந்தால் துõய தெய்வ பக்தியுள்ள, சூப்பர் ஸ்டாரை எதிர்த்து போராடுவாரா...? பிரதமர், கோவா முதல்வர், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஆகியோருக்கு, "கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி...' என்று கனல் கக்கி கடிதம் எழுதுவாரா...?மேலே கூறியபடி எல்லாம் எள்முனையளவு கூட எதிர்ப்பே தெரிவிக்க மாட்டார். ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு சமுதாயப் பணியாற்றுவதாக பீற்றி கொள்ளும் வீரமணி எதுவும் செய்ய மாட்டார்.ஆனால், இளிச்சவாய இந்துக்களின் மனம் புண்படும்படி இழிவுபடுத்துவது தான் வீரமணிக்குத் தெரியும்.அதேநேரம், காரியத்தில் கண் வைத்து, பெறவேண் டிய "பரிசுகள்' இன்னும் எவ்வளவோ இருப்பதால், ஆளும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து அணுஅளவு கூட போராடவோ அறிக்கை வெளியிடவோ விரும்பமாட்டார் வீரமணி.ஆனால், கடவுளை நம்பியோர் கைவிடப்படார் என்பதை தெரிந்து, புரிந்து விட்டால் யாருக்கும் தெரியாமல் கடவுளையும் வணங்குவார் வீரமணி...!

- இங்கே தான் குட்டையை குழப்ப முயற்சி நடக்குது. ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது, அதற்கும் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனையாக சொல்வதற்கும் என்ன தொடர்பு ? இயேசுவுக்கு திருமணம் ஆகவில்லை என்று கிறித்துவன் சொன்னால் அது அவன் நம்பிக்கையாக தெரியாது, எவனோ ஒருவன் டாவின்சி கோட் என்று கிளப்பி விட்டால், ஏசுவின் லட்சணத்தைப் பார் என்பீர்கள். சுப்பிரமணிய சாமிக்கு தன் மீது கவனம் திரும்புவதாக அடிக்கும் கூத்துகளுக்கு வீரமணி பதில் சொல்ல வேண்டுமா ? வீரமணி மனநல மருத்துவர் அல்ல, வழக்கறிஞர் தான்.

ஏன் இப்படி புலம்புகிறார்கள் என்றே தெரியவில்லை, கடவுள் நம்பிக்கையை தகர்த்த பெரியார் ஆயுள்களோடுதான் இருந்தார், கலைஞர், கி.வீரமணி எல்லோரும் நீண்ட ஆயுள்களோடுதான் இருக்கிறார்கள். கடவுளை பூஜிப்பவர்களுக்கு கைமேல் பலன் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பூஜை செய்து கொடுப்பவர்களுக்கு தட்டுமேல் பலன் பணமாகவே கிடைக்கும். அதில் ஐயமே இல்லை. :)

கோவிலில் வெட்டிக் கொள்ளப்பட்ட சங்கரராமன் நாத்திகரா ? கடவுள் அன்றுமட்டும் சற்று கண் அயர்ந்தாரா ?

சாமி எது ? எங்கே இருக்கிறது ... என்று காட்டினால் வீரமணி நிச்சயம் வணங்குவார். சாமி எது என்று தெரியாமல் தானே மதச் சண்டையே நடக்கிறது, இந்த கூத்தில் வீரமணியும் வந்து கலந்து கொள்ள வேண்டுமாக்கும். வீரமணியே கும்பிட்டுவிட்டார் என்று சொல்லிக்கொண்டு இன்னும் அரை மில்லியன் வருடத்திற்கு இந்(து)த வருணாசிரம கருமத்தை (கர்மா) :) வழிநடத்திச் செல்லலாம் என்ற நப்பாசை போல தெரிகிறது.

எல்லாம் கடவுள் விருப்பப்படிதான் நடக்குது சாமியோவ்.

12 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஒழுங்காகப்
பாடுபடாவிட்டால் தமிழ்நாட்டில்
காங்கிரசைக் கல்லறைகளில் தான்
தேட வேண்டி வரும்.
ராமர்-பாலம்-பருப்பு என்று தமிழர்களைக் காது குத்த நினைப்பவர்கள் தங்கள்
காதுகளைத் தீட்டிக் கொண்டு
கவனித்து உடன் செயல் படுதல்
நலம்.இல்லாவிடில் அரசியல் தற்கொலை செய்து கொள்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

சம்பூகன் சொன்னது…

கண்ணன்

இந்த பதிவை படித்து உங்கள் கருத்தை கூறுங்களேன்.

சம்பூகன்

கோவி.கண்ணன் சொன்னது…

//1 Comment - Show Original Post

Thamizhan said...
சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஒழுங்காகப்
பாடுபடாவிட்டால் தமிழ்நாட்டில்
காங்கிரசைக் கல்லறைகளில் தான்
தேட வேண்டி வரும்.
ராமர்-பாலம்-பருப்பு என்று தமிழர்களைக் காது குத்த நினைப்பவர்கள் தங்கள்
காதுகளைத் தீட்டிக் கொண்டு
கவனித்து உடன் செயல் படுதல்
நலம்.இல்லாவிடில் அரசியல் தற்கொலை செய்து கொள்பவர்களாகத்தான் இருப்பார்கள்.
//

தமிழ்நாட்டில் காங்கிரஸ் இருக்கிறது என்பதை காட்டவே சத்திய மூர்த்தி பவனில் வெட்டு குத்து நடக்குது.
:)

TBCD சொன்னது…

ஏன் சொல்ல மாட்டார்...

அவர் மூஞ்சி மூன்னாடி நின்னுக் கேட்டா, அவர் மூஞ்சி மேலேயே சொல்லுவார்..

(தலைப்பு, பதிவு இரண்டும் படித்து பின்னுட்டம் போட்டு பழகுபவன்)

உதயம் சொன்னது…

இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டுமா ? G.K

இது உங்கள் இடம் என்பது தினமலத்தின் கழிப்பிடம் இங்கு ஆரிய மணிகள் தான் அதிகம் ஆட்டுவார்கள், அவர்கள் சிந்தனைகளை பரப்ப இதுவும் வழி.

நமக்கு ஒரு பத்திரிக்கை இருந்தால் " பெரியார் சிலைக்கு மாலை இட்ட காஞ்சி பெரியவா நேராக பாய் கடைக்கு சென்று மட்டன் பிரியாணியை மனதார சாப்பிட்டார்" என்று எழுத மாட்டோமா ?

இதுஎல்லாம் சகஜம் அப்பா!

ஜமாலன் சொன்னது…

நீங்கள் கூறியதுபோல அவர்களது கடவுளுக்கு அங்கீகாரம் தேடித்தான் வீரமணியிடம் வருகிறார்கள்.

வீரமணி அங்கீகரித்தவிட்டால் நோ அப்பீல்... இதுதான் சு.சாமியின் நிலை.

வீ. எம் சொன்னது…

டாக்டர் அசோகன் என்ன காமெடியனா? இப்படி கேள்வி கேட்டிருக்காரு

உதயம் சொன்னது…

அவர் காமெடியன் அல்ல, மன நிலை சரியில்லாத டாக்டர்.

thiru சொன்னது…

நண்பர் கோவி,

உங்கள் பதிவுடன் உடன்படுகிறேன்.

'கடவுள்' பற்றிய கேள்வி எழுப்பிய புத்தனையே கடவுளாக/கடவுளின் அவதாரமாக்கி பழையபடியே புத்தன் எதிர்த்த யாகங்கள், புரோகித தொழிலை தொடர்ந்தவர்கள் பார்ப்பனீயவாதிகள்.

இராமன் பெயரால் இன்று அரசியல் இலாபமடைய முனைகிறார்கள். நாளையே இராமனால் பலனில்லை என்று தெரிந்தால் இராமனை கைகழுவி விட்டு வேறு ஏதோ ஒன்றை தூக்கிவிடுவார்கள். பார்ப்பனீயவாதிகளது அதிகாரத்திற்கு எப்போதெல்லாம் சிறிதளவு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் இப்படிப்பட்ட தந்திரங்களை கடைபிடித்தது வரலாறு.

தி.க தலைவர் வீரமணி அவர்களால் பார்ப்பனீயம் வளர வாய்ப்புண்டு என்றால் பெரியாரை ஏற்று வீரமணியை ஏற்றுக்கொண்டு காவடி எடுக்க தயங்கமாட்டார்கள். சில ஆண்டுகளாக அரசியல் அனாதையாக இருந்த சுப்பிரமணிக்கு மீண்டும் பரபரப்பு அரசியலில் 'அறுவடை' செய்ய சேதுக்கால்வாய் பயன்படுகிறது.

4 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சேதுக்கால்வாய் மணல் திட்டுகளுக்கு இல்லாத ஒரு புதிய பெயரை உருவாக்கி,பொதுப்புத்திக்குள் நுழைத்து அதையே ஊடகங்களும், எதிர்ப்பாளர்களும் பயன்படுத்துமாறு செய்த தந்திரத்தை நாம் கவனிக்க தவறியிருக்கிறோம். மீண்டும் மீண்டும் இல்லாத ஒரு பாலத்துக்கு _______ பாலம் என சொல்லவைத்தது நம் முன் நடந்த நிகழ்வு. வருங்காலங்களில் இந்த மணல்திட்டுகள் எப்படி அழைக்கப்படும்?

இது போலவே, இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி அதையே மற்றவர்களும் நம்பவேண்டுமென்று அடம்பிடிப்பது 'கடவுள்' பிரச்சனையிலும் ஏற்பட்டிருக்கிறது.

வஜ்ரா சொன்னது…

//
சிதம்பரம் கோவிலுக்குள் ஜட்டி அணிந்து செல்லமுடியுமா ?
//

பாண்டுக்குள் அல்லது வேட்டிக்குள் தான் ஜட்டிய அணியவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Vajra said...

பாண்டுக்குள் அல்லது வேட்டிக்குள் தான் ஜட்டிய அணியவேண்டும்.

10:32 AM, April 15, 2008
//

பஞ்ச கச்சம் அணிந்தால் தேவை இல்லை என்கிறீர்களா ?

Chittoor Murugesan சொன்னது…

Thank you for your comment about my operation india (spl army to link rivers)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்