பின்பற்றுபவர்கள்

2 பிப்ரவரி, 2008

பெண்கள் இப்படியெல்லாம் பேசலாமா ?

பொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்பதே, பொதுமக்கள் பார்க்கும் காட்சியில் இவை இவையெல்லாம் மட்டுமே அனுமதி என்ற விதிகளையும் வைத்து எல்லை மீறும் இடங்களில் கத்தரி வைக்கின்றனர். அதிலும் வயது வந்தவர்கள் பார்க்கக் கூடிய என்ற பிரிவுகள் இருக்கிறது.

இது போன்றே வார இதழ்கள் இன்னும் செய்தி ஊடகங்கள் என தங்கள் எழுதும் பொருளுக்கு உட்பட்டு வாசகர்களுக்கு எவை எல்லாம் முகம் சுளிப்பாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு உணர்ந்தே எழுதுகின்றன. முன்பு போல் செய்தித் தாள்களில், 'கதற கதற கற்பழித்தனர்' என்பதற்கு பதில் 'பாலியல் வன்புணர்ச்சி' என்று மாற்றி எழுதிவருகின்றனர். வரவேற்க்கத்தக்கது.

முன்பெல்லாம் பெண்கள் எழுத்து துறையில் நாவல், சிறுகதை எழுதுவர்களாகவே அறியப்பட்டு வந்தனர். இன்று பெண்கள் பத்திரிக்கையாளராகவும், செய்தி சேகரிக்கும் நிருபர்களாகவும் வளர்ந்து நிற்கின்றனர். செய்தி ஊடகங்களில் பெண்களின் பங்கு கணிசமாகவே இருக்கிறது. வரவேற்கத்தக்கது.

ஆனால் சமூகம் பெண்கள் மீது வைத்திருக்கும் பார்வை, இன்னும் பெண்ணை பெண்ணாகத்தான் பார்க்கிறது. பெண் பெண்ணாக நடந்து கொள்ளாவிட்டால் பெண்ணே அல்ல என்று விமர்சனம் செய்கிறார்கள். உடலியல் தவிர்ந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஆண்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அதே போன்று நடந்து கொள்ளும் பெண்களும் அவ்வாறு நடந்து கொள்வதில் என்ன தவறு ? பெண்கள் பொது இடத்தில் புகைப்பிடிக்கலாமா, தண்ணி அடிக்கலாமா ? இதையெல்லாம் ஏற்றுக் கொள்வதோ தூற்றுவதோ பெண்கள் சார்ந்தது, அவற்றை விமர்சனம் செய்வதை பெண்ணிய அமைப்புகள் தான் முடிவு செய்ய முடியும். ஆண்களுக்கு அதில் கருத்து கூற உரிமை இல்லை. பெண்கள் குறித்தான ஆண்களின் அக்கறையை அவனுடைய குடும்பத்து பெண்களுடன் நிறுத்திக் கொள்வதே சரி. வேறு எந்த ஒரு பெண்ணையும் விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

பெண் சமூகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டமைக்க ஆணுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார் ?

************

சரி விசயத்துக்கு வருவோம்,

தமிழச்சி ஆபாசத் தலைப்புகளை வைப்பதாகவும், தொடர்ந்து அது போல் பதிவு எழுதி வருவதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த 'குறிச்சொற்கள்' தமிழ்மணத்துக்கு புதியது அல்ல. பல ஆண்பதிவர்கள் ஏற்கனவே அதே குறி சொற்களில் பல கட்டுரைகள், கவிதைகள், மறை பொருளில் படங்களுடன் வந்திருக்கிறது. பதிவரும் எனது நண்பருமான, கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் பெ.மகேந்திரன் 'குறிசொற்'களுடன் வெளியான சுகிர்த்தராணி, புதிய மாதவி, குட்டி ரேவதி கவிதைகள் எடுத்து எழுதி இருக்கிறார். இதுபோல் சுகுணா திவாகர், பொட்டீக்கடை ஆகியோர் 'குறி'சொற்களில் கவிதை கட்டுரைகள் எழுதி இருக்கின்றனர். அவர்கள் எழுதும் போதெல்லாம் ஒன்றும் சொல்லாமல் படித்து ரசித்தவர்கள், தமிழச்சியை மட்டும்
ஏன் கடிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது.

அவை நாகரீகங்கள் தேவை தான். ஆபசங்கள் தவிர்க்க வேண்டியதே, குற்றம் சுமத்தினால் எல்லோரையும் தான் குற்றம் சொல்ல வேண்டும். பெண் இப்படியெல்லாம் பேசலாமா ?
அதை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

11 கருத்துகள்:

ஜமாலன் சொன்னது…

உங்கள் கருத்துடன் எனக்கு மழு உடன்பாடு உண்டு. ஆண்கள் தங்களை ஒரு அத்தாரிட்டியாக நினைத்துக்கொள்வதின் விளைவுதான். எது ஆபாசம்? சகமனிதனை கூனிக் குறுக வைப்பதும் சமூக அவலங்களைக்கண்டு குறைந்நதபட்சம் மனத் துயரடையாத மன நிலையும் தனது சாதி தனது மதம் தனது இனம் தனது… தனது.. இப்படி எண்ணற்ற தனதுகளால் சகமனிதனை சாகடிப்பதும் ஆன கொடூரங்களே கொடுமைகளே ஆபாசமானவை மற்றவை எல்லாம் மனிதனை உய்விக்க வந்தவையே அவை யொனியா அல்லது லிங்கமா (ஆண்குறி) என்பதல்ல…

மலிவான விளம்பர உத்தி என்பவர்களுக்கு… அதனை பார்ப்பதும் அங்கீகரிப்பதும் நாம்தான். அதற்காக எதிராக போராடுவது என்பது அதை தடைசெய்வதாகாது. அது மீண்டும் வேறு வடிவில் வரத்தான் செய்யும்.

இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது விளம்பர உத்தி என்றால் அத நமது மன ஆரோக்கியம் தொடர்புடையதே? பதிப்பவரது அறிவையோ உணர்வையோ சார்ந்தது அல்ல.

இப்பிரச்சனைக்குறித்து சிறில்அலேக்ஸ் பதிவிலும் இதையேதான் சொன்னேன். ஆண்கள் தங்களது எல்லைகளை அக விரிக்க முயல்வதின் விளைவே.

அன்புடன்
ஜமாலன்

bala சொன்னது…

//எல்லோரையும் தான் குற்றம் சொல்ல வேண்டும். பெண் இப்படியெல்லாம் பேசலாமா ?
அதை தீர்மாணிக்கும் உரிமை எவருக்கும்//

கோவி.மு.கண்ணன் அய்யா,

சபாஷ்.இரட்டை நிலைபாட்டை கொண்ட, திராவிட ஆணாதிக்கவாதிகளை "குறி" வைத்து சாடியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
பாரிஸ் ஞானியம்மா, தப்பு தப்பு ,யோனியம்மா இப்போ மனம் குளிர்ந்து போவாங்க.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...

கோவி.மு.கண்ணன் அய்யா,

சபாஷ்.இரட்டை நிலைபாட்டை கொண்ட, திராவிட ஆணாதிக்கவாதிகளை "குறி" வைத்து சாடியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
பாரிஸ் ஞானியம்மா, தப்பு தப்பு ,யோனியம்மா இப்போ மனம் குளிர்ந்து போவாங்க.

பாலா//

ஜயராமன் சார்,

உங்களுக்கு ஆபாசம் என்றால் என்ன என்றே தெரியாதாமே ?

உங்கள் தோழி சல்மா நலமா ?

bala சொன்னது…

//உங்கள் தோழி சல்மா நலமா ?//

கோவி.மு.கண்ணன் அய்யா,

நலமாக இருக்கிறார்கள்.இப்பொழுது பாரிஸில் இருக்கிறார்கள்.ஆனால் பெரியாரிஸ்ட்களான நாங்கள் அவரை தோழர் என்று தான் அழைப்போம்.

பாலா

PS

அவர் பெயர் சல்மா அல்ல.முனியம்மா.பாரிஸ் போனவுடன் மாடர்னா யோனியம்மான்னு மாத்தி வச்சுக்கிட்டாங்க.நீங்க ஒருவேளை செல்லமா சல்மான்னு கூப்பிடுவீங்களோ?

உதயம் சொன்னது…

"குறிகளை பற்றி தைரியமாக தமிழ் மணத்தில் எழுதி ஆச்சரிய ''குறி'' ஏற்படுத்தியவர் தமிழச்சி, சில தற்''குறி''கள் விமர்சிகிறார்கள் என்று மேற்குறி'' இட்டுஎழுதிய உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.உங்கள் பெயர் வரலாற்றில் ''குறிக்க பட வேண்டும் எந்த பெண்ணுக்கும் எப்படியும் எழுதும் சுதந்திரம் உள்ளது , எழுதுவதை ''குறி'' சொல்லும் சோசியர் இடம் கேட்டு விட்டா எழுத முடியும்? அப்படி எழுதினால் அது கேள்விகுறி ஆகிவிடும்! பெண்களைஇப்படி அம்புகுறி'' வைத்து தாக்கும் ஆண் ஆதிக்க ஜாதிக்கு உங்கள் கட்டுரை அருமையான செருப்படி. நல்ல ''குறிக்கோள் உடன் எழுத பட்டபதிவு.

நன்குறி மன்னிக்கவும் நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//உதயம் said...

//

உதயம்,

கருத்துக்கு நன்றி.

TBCD சொன்னது…

பின்னுட்டம்..பெரிதாகி பதிவாக ஆகிப்போச்சு..

யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எழுதலாம்...ஆனா இங்கிதம் தெரியனும்... : TBCD

பிறைநதிபுரத்தான் சொன்னது…

கருத்து செறிவுடன் எழுதியிருக்கிறீர்கள் கோவி. இதே 'தேவ பாஷை'யில் வார்த்தைகள் புரானங்களிலும் - மதக்கதை புத்தகங்களிலும் பரவிக்கிடந்தால் படித்துவிட்டு - கண்ணிலும்- வாயிலும் ஒத்திக்கொள்பவர்களுக்கும்..
இத்தகைய வார்த்தைகளை - உயிரோட்டமுள்ள சிற்பங்களாக வடித்து ‘பூஜை-புனஷ்காரங்கள்' செய்பவர்களும் 'பெண்' எதை எழுதலாம்-எழுத கூடாது என்று பஞ்சாயத்து பண்ணலாமா?.

பிறைநதிபுரத்தான் சொன்னது…

சிறிய பிழை:

கருத்து செறிவுடன் எழுதியிருக்கிறீர்கள் கோவி. இதே வார்த்தைகள் 'தேவ பாஷை'யில் புரானங்களிலும் - மதக்கதை புத்தகங்களிலும் பரவிக்கிடந்தால் படித்துவிட்டு - கண்ணிலும்- வாயிலும் ஒத்திக்கொள்பவர்களும்,
இத்தகைய வார்த்தைகளை - உயிரோட்டமுள்ள சிற்பங்களாக வடித்து ‘பூஜை-புனஷ்காரங்கள்' செய்பவர்களும் 'பெண்' எதை எழுதலாம்-எழுத கூடாது என்று பஞ்சாயத்து பண்ணலாமா?.

என்று இருந்திருக்கவேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//பிறைநதிபுரத்தான் said...

பிறைநதிபுரத்தான்,

நான் மதரீதியில் கருத்து சொல்லவில்லை. சமூக ரீதியில் தான் சொன்னேன். மதரீதியில் பெண்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு ஆண்டவனே துணை போகிறானே.
:) அதையெல்லாம் பெண்கள் தான் புறக்கணிக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
பின்னுட்டம்..பெரிதாகி பதிவாக ஆகிப்போச்சு..

யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எழுதலாம்...ஆனா இங்கிதம் தெரியனும்... : TBCD
//

நிர்வாணம் தேசிய உடையாக அங்கீகரிப்பட்ட ஊரில் தான் நிர்வாணமாக செல்ல முடியும் என்கிறீர்கள். சரியா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்