பார்ப்பது, கேட்பது, சுவைப்பது இதிலெல்லாம் புதியது தவிர்த்து மற்றதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிச்சையாகவே நடக்கும், சென்ற வாரத்தில் ஒருநாள் உண்ட அதே வகை உணவில் சுவை குன்றி இருந்தால் உடனே தெரிந்துவிடும். 'தொலைகாட்சி சீரியலை' சபித்துவிட்டு சாப்பிட்டுவிடுவோம். நேற்றைய நினைவு முற்றிலும் இல்லாதவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று சொல்ல முடியுமா ? . 'நான் இருக்கிறேன்' என்ற உள் உணர்வை உறுதிப் படுத்துவது நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் ஒப்பிட்டு அறியும் மனத்திரளின் தொகுப்பு. ஒவ்வொரு நாளின் பெரும்பகுதி ஒப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாகவே கழிகிறது.
நான் எதையும் எதனுடனும் ஒப்பிடமாட்டேன், அதற்கென்று தனிச்சிறப்பு இருக்கிறது அதனால் அவற்றை தனித்தனியாகத்தான் பார்க்கிறேன் என்று சொல்லவது மிகக் கடினம் தான். புதிதாக செல்லும் விமானப் பயணம் கூட பேருந்து பயணத்தைவிட இது நன்றாகவோ, மோசமாகவோ இருக்கிறது என்பதை உடனடியாக ஒப்பிட்டுவிடுவோம். ஒப்பீடுகளில் தனியாக தெரிவது எப்போதுமே நல்லது கெட்டது என்ற பெரும் வேறுபாடுதான்.
******
'எங்க அம்மா சமையல் மாதிரி வருமா ?'... 'அப்போ ஏன் என்னை கட்டிக்கிட்டிங்க, உங்க அம்மாவையே சமைக்கச் சொல்லி சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தானே ?' இப்பெல்லாம் யாரும் கன்னத்தில் அறைவதில்லை. மாறாக பொறுமையாக சமையல் கற்றுக் கொண்டு சமைத்தும் போடுவதால் 'எங்க வீட்டுக்காரர் சூப்பராக சமைப்பார்' என்று பெருமைபடும் படி நடந்து கொள்கிறார்கள்.
சந்தைகளில் விதம் விதமான ஒரே பயன்பாட்டிற்கான அழகுசாதன பொருள்களின் விற்பனை பெண்களின் ஒப்பீட்டு மனநிலையை மூலதனாமாக வைத்தே கடைதிறந்திருக்கிறது. பெண்கள் அவர்களுக்குள் பல பெண்களை ஒப்பிட்டுக் கொண்டு அவளுடைய புடவை / நகை மாதிரி இல்லை என்று நினைத்து கணவரை அதற்காக நச்சரிப்பது ... தமக்கு தேவை என்பதற்கு மட்டுமே பெண்கள் பெண்களை ஒப்பிடுவார்கள். (அட்சய த்ருதியைக்கு நாள் இருக்கிறது. பயப்படவேண்டாம்). அதுபோல் நாம் குறை கூறுவதற்காகவே ஒரு பெண்ணைக் காட்டி ஒப்பிட்டு சொல்லிவிட்டால் தொலைந்தோம். :)
பெண்கள் மட்டுமில்லை, ஒருவருடன் ஒருவரை குறைச் சொல்வதற்காகவே ஒப்பிடுவதை யாரும் விரும்புவதில்லை. அவரைவிட நீங்கள் நன்றாக செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டுக்கு ஒப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும், மாறாக குறைசொல்லும் நோக்கத்துடனோ / நோக்கம் இல்லாமலோ 'அவரே பரவாயில்லை' என்றால் கேட்பவருக்கு எரிச்சல் தானே வரும். ஒப்பிடே இல்லாமலே 'இன்னும் நன்றாக செய்திருக்கலாம்' என்று பாராட்டிக் கொண்டே குறைச் சொல்வதானால் பிரச்சனை இருந்தாலும் வெறும் பெருமூச்சோடு நிற்கும். ஒப்பீடு இல்லாமல் எதுவுமே இல்லை. மனிதர்களுக்குள் ஒப்பிடு செய்யும் போது மட்டும் கவனம் தேவை என்று நினைக்கிறேன்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
4 கருத்துகள்:
இதெல்லாம் குழந்தை பிறந்த உடனேயே ஆரம்பித்து விடுகிறதே, குழந்தை அம்மா மாதிரி இருக்கிறதா அப்பா மாதிரி இருக்கிறதா? அவனை விட கலராக இருக்கிறதா, இவனை விட குண்டாக இருக்கிறதா என்றெல்லாம். அந்தத் தொட்டிலில் தொடங்க்கும் பழக்கம் தான் . . .
// அதுபோல் நாம் குறை கூறுவதற்காகவே ஒரு பெண்ணைக் காட்டி ஒப்பிட்டு சொல்லிவிட்டால் தொலைந்தோம். :)//
"அந்தப் பெண்ணை விட நீ அழகாய் இருக்கற" என்று சொன்னால் கூடப் பிரச்னை வருதே கோவி.கண்ணன்.
இதெல்லாம் குழந்தை பிறந்த உடனேயே ஆரம்பித்து விடுகிறதே, குழந்தை அம்மா மாதிரி இருக்கிறதா அப்பா மாதிரி இருக்கிறதா? அவனை விட கலராக இருக்கிறதா, இவனை விட குண்டாக இருக்கிறதா என்றெல்லாம். அந்தத் தொட்டிலில் தொடங்க்கும் பழக்கம் தான் . . .
// அதுபோல் நாம் குறை கூறுவதற்காகவே ஒரு பெண்ணைக் காட்டி ஒப்பிட்டு சொல்லிவிட்டால் தொலைந்தோம். :)//
"அந்தப் பெண்ணை விட நீ அழகாய் இருக்கற" என்று சொன்னால் கூடப் பிரச்னை வருதே கோவி.கண்ணன்.
// RATHNESH said...
இதெல்லாம் குழந்தை பிறந்த உடனேயே ஆரம்பித்து விடுகிறதே, குழந்தை அம்மா மாதிரி இருக்கிறதா அப்பா மாதிரி இருக்கிறதா? அவனை விட கலராக இருக்கிறதா, இவனை விட குண்டாக இருக்கிறதா என்றெல்லாம். அந்தத் தொட்டிலில் தொடங்க்கும் பழக்கம் தான் . . .//
ரத்னேஷ்,
எங்க வீட்டில் 'எல்லாம் தவிட்டுக்கு' வாங்கியதாகச் சொல்லித்தான் வளர்த்தாங்க. எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இப்படித்தான் சொல்லுவாங்க போல
:)
//RATHNESH said...
"அந்தப் பெண்ணை விட நீ அழகாய் இருக்கற" என்று சொன்னால் கூடப் பிரச்னை வருதே கோவி.கண்ணன்.
//
ரத்னேஷ்,
எப்பவும் கணவர் பொய் சொல்கிறவர் என்ற நினைப்பு இருக்கத்தானே செய்யும். அது மட்டுமா ?
'அந்த பெண்ணை அவ்வளவு ரசித்து பார்த்திங்களோ ?' என்று எரிக்கத்தான் செய்வார்கள்.
ஆக மொத்தம் ஆண்கள் பொய் சொல்வதற்கு யார் காரணம். பாசமலர் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
:))
கருத்துரையிடுக