பின்பற்றுபவர்கள்

22 ஜனவரி, 2008

50லும் ஆசை வரும் ...

50லும் பலருக்கு ஆசை மட்டுமல்ல அதில் ஒரு சிலருக்கு பேராசையும் வரும் என்பதை கீழ்கண்ட செய்தியை படித்தவுடன் தான் தெரிந்தது.

******

மோசடி இ மெயிலால் பல ஆயிரம் பண மோசடி
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 22, 2008

நாகை: நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், மோசடி இ- மெயிலை நம்பி பல ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). இவர் மஸ்கட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஒரு இ மெயில் வந்தது. அதில், ஒரு மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (ரூ 80 ஆயிரம்) அனுப்பினால் ரூ 8 கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்படிருந்தது.

8 கோடி வருகிறதே என்று ஆசைப்பட்ட பாலசுப்பிரமணியன் அந்த இ -மெயிலில் குறிப்பிட்ட படி ரூ 80 ஆயிரத்தை வங்கி மூலம் நைஜீரியாவில் உள்ள ஆப்ரிக்கன் டெவலப்மெண்ட் வங்கிக்கு செலுத்தினார்.

இதையடுத்து உங்களுக்குரிய ரூ 8 கோடி பணம், மயிலாடுதுறையில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள உங்களது கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பதில் வந்தது.

இதனால் குஷியானார் பாலசுப்ரமணியன். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஆகியும் குறிப்பிட்டபடி ரூ 8 கோடி பணம் வரவில்லை. அதனால் மீண்டும் இ - மெயில் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் பதில் இல்லை.

இதனால் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து யாரிடம் புகார் கொடுப்பது. அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல் பாலசுப்பிரமணி பெரும் குழப்பமடைந்துள்ளார்.

- தட்ஸ்தமிழ்

*********

சோமாலியா, கென்யா, நைஜீரியா என எல்லா "யா" க்களும் பசி, பட்டினி பஞ்சம் என்று ஆப்பிரிக்காவின் வறுமை பெருமைகளை பறைசாற்றும் தேசமாக இருக்கும் போது...இதெல்லாம் ஓரளவு தெரிந்தே அங்குள்ள நைஜீரியாவில் இருந்து கோடிக்கனக்கான பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் இலவசமாக கிடைப்பதாக எதிர்ப்பார்த்து செயல்பட்டவர் எவ்வளவு பேராசைக்காரராக இருப்பார் ?
:)))

அவர் ஏமாந்ததற்கு ஐயோ பாவம் என்று சொல்ல முடியுமா ? பேராசை பெருநஷ்டம் சொல்ல முடியுமா ? அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுபவர்களின் பேராசையே ஏமாற்றுபவர்களின் மூலதனாமாகிவிடுகிறது.

14 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//இவருக்கு ஒரு இ மெயில் வந்தது. அதில், ஒரு மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (ரூ 80 ஆயிரம்) அனுப்பினால் ரூ 8 கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்படிருந்தது//

தட்ஸ் தமிழ் பவுண்டை இவ்வளவு குறைவாக மதிப்பிடக் கூடாது
:)))

1 மில்லியன் பவுண்ட் =? Rs. 80,000 /-
:)))))))

Yogi சொன்னது…

எனக்கும் அடிக்கடி UK online Lottery என்ற முகவரியில் இருந்து 1000 பவுண்ட் விழுந்திருப்பதாக மின்னஞ்சல் வருகிறது. எல்லாம் ஃப்ராட் என்று தெரிந்ததால் மதிப்பதேயில்லை. பாவம் அப்பாவி ஒருவர் ஏமாந்திருக்கிறார் :(

Unknown சொன்னது…

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வீதம் எனக்கு இந்த மாதிரியான மெயில்கள் வந்து கொண்டிருக்கின்றன.
உழைப்பின்றி வரும் பொருளுக்கு ஆசைப்படுபவர்களை வலையில் வீழ்த்துவதுதான் இது மாதிரி மெயில்களுக்கு ஆதார சுருதி.
பேராசை பெரு நட்டம் என்பது நீதி.

துளசி கோபால் சொன்னது…

வெறும் 100 பவுண்டுதானா பொன்வண்டு?

நியூஸிக்கு ஸ்பெஷல் ப்ரைஸ் இருக்குபோல.
எனக்கு 750,000 பவுண்டு வந்துருக்காம். அதுவும் இமெயில் ஐடி குலுக்கல்லே!!!!!

பணம் எதுவும் நான் அனுப்ப வேண்டாமாம். சில விவரம் மட்டும் தந்தால் போதுமாம்.

ஏற்கெனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கிடைச்ச ( இதுவரை ஒரு பில்லியன் தேறும்)தையெல்லாம் எங்கே வைக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறேன். இதுலே இந்த முக்கால் மில்லியன் வேறவேணுமா:-))))

பாச மலர் / Paasa Malar சொன்னது…

எங்கள் உறவினர் ஒருவரும் இந்த விஷயத்தில் மாட்டிக் கொள்ள இருந்தார்..தற்செயலாக எங்களுக்கு அந்த அஞ்சலை அனுப்பி கருத்துக் கேட்க...நாங்கள் இது சும்மா என்று சொல்ல..அவர் தப்பித்தார்..இது போல் அன்றாடம் எத்தனை அஞ்சல்கள் வருகின்றன இன்னமும்..

சின்னப் பையன் சொன்னது…

எல்லா 'யா' நாட்டிலும் பிரச்சினை என்கிறீர்களே, இந்தி'யா' வின் பிரச்சினை - அதிகம் உழைக்காமல், கஷ்டப்படாமல் - உடனடி (இன்ஸ்டண்ட்) பணக்காரன் எப்படி ஆவது என்று நினைக்கும் இப்படிப்பட்ட ஆட்கள்தானே???

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்வண்டு said...
எனக்கும் அடிக்கடி UK online Lottery என்ற முகவரியில் இருந்து 1000 பவுண்ட் விழுந்திருப்பதாக மின்னஞ்சல் வருகிறது. எல்லாம் ஃப்ராட் என்று தெரிந்ததால் மதிப்பதேயில்லை. பாவம் அப்பாவி ஒருவர் ஏமாந்திருக்கிறார் :(
//

பொன்வண்டு,
அப்பாவி ஏமாந்துட்டார், உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பிய அடப்பாவியும் ஏமாந்துட்டார். மல்டி மார்கெட் அனுபவம் இருக்கிறதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
வெறும் 100 பவுண்டுதானா பொன்வண்டு?

நியூஸிக்கு ஸ்பெஷல் ப்ரைஸ் இருக்குபோல.
எனக்கு 750,000 பவுண்டு வந்துருக்காம். அதுவும் இமெயில் ஐடி குலுக்கல்லே!!!!!

பணம் எதுவும் நான் அனுப்ப வேண்டாமாம். சில விவரம் மட்டும் தந்தால் போதுமாம்.

ஏற்கெனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கிடைச்ச ( இதுவரை ஒரு பில்லியன் தேறும்)தையெல்லாம் எங்கே வைக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறேன். இதுலே இந்த முக்கால் மில்லியன் வேறவேணுமா:-))))

4:40 PM, January 22, 2008
//

துளசி அம்மா,

வெறும் முக்கால் மில்லயன் தானா ?
நீயூசிக்கு அது போதும் என்று நினைத்திருப்பார்கள் போல, எனக்கு 5 மில்லியன் பவுண்ட் மின் அஞ்சல் வந்திருந்தது !
:)

அப்பறம் கிடைத்துவிட்டால் யாராவது கடத்திக் கொண்டு சென்று விடுவார்களோ என்று அச்சப்பட்டு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
எங்கள் உறவினர் ஒருவரும் இந்த விஷயத்தில் மாட்டிக் கொள்ள இருந்தார்..தற்செயலாக எங்களுக்கு அந்த அஞ்சலை அனுப்பி கருத்துக் கேட்க...நாங்கள் இது சும்மா என்று சொல்ல..அவர் தப்பித்தார்..இது போல் அன்றாடம் எத்தனை அஞ்சல்கள் வருகின்றன இன்னமும்..

4:43 PM, January 22, 2008
//

பாசமலர்,

நல்ல விசயம் தான், உறவினரை கண்காணியுங்கள்...அவருக்கு வந்த அதிர்ஷ்ட தேவதையை நீங்கள் விரட்டிவிட்டதாக கூறிக் கொண்டு இருக்கப் போகிறார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ச்சின்னப் பையன் said...
எல்லா 'யா' நாட்டிலும் பிரச்சினை என்கிறீர்களே, இந்தி'யா' வின் பிரச்சினை - அதிகம் உழைக்காமல், கஷ்டப்படாமல் - உடனடி (இன்ஸ்டண்ட்) பணக்காரன் எப்படி ஆவது என்று நினைக்கும் இப்படிப்பட்ட ஆட்கள்தானே???
//
யா யா.....!
:)

மங்களூர் சிவா சொன்னது…

//
தட்ஸ் தமிழ் பவுண்டை இவ்வளவு குறைவாக மதிப்பிடக் கூடாது
:)))
//
அதுதானே!!

மங்களூர் சிவா சொன்னது…

//
கோவி.கண்ணன் said...
//துளசி கோபால் said...
வெறும் 100 பவுண்டுதானா பொன்வண்டு?

நியூஸிக்கு ஸ்பெஷல் ப்ரைஸ் இருக்குபோல.
எனக்கு 750,000 பவுண்டு வந்துருக்காம். அதுவும் இமெயில் ஐடி குலுக்கல்லே!!!!!

பணம் எதுவும் நான் அனுப்ப வேண்டாமாம். சில விவரம் மட்டும் தந்தால் போதுமாம்.

ஏற்கெனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கிடைச்ச ( இதுவரை ஒரு பில்லியன் தேறும்)தையெல்லாம் எங்கே வைக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறேன். இதுலே இந்த முக்கால் மில்லியன் வேறவேணுமா:-))))

4:40 PM, January 22, 2008
//

துளசி அம்மா,

வெறும் முக்கால் மில்லயன் தானா ?
நீயூசிக்கு அது போதும் என்று நினைத்திருப்பார்கள் போல, எனக்கு 5 மில்லியன் பவுண்ட் மின் அஞ்சல் வந்திருந்தது !
:)

அப்பறம் கிடைத்துவிட்டால் யாராவது கடத்திக் கொண்டு சென்று விடுவார்களோ என்று அச்சப்பட்டு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
:))

//

அவ்வ்வ்வ்

எனக்கு வரும் லாட்டரி ப்ரைஸ் எல்லாம் ஸ்பாம் மெயிலுக்கு தானாவே போயிடுது எவ்வளவு லாட்டரி அடிச்சிருக்குன்னு தெரியாததால நான் இன்னூம் லாட்டரி அடிக்காம இருக்கேன்!!

நந்து f/o நிலா சொன்னது…

எனக்கு நைஜீரியால இருந்து ஒரு பொண்ணு போட்டோவோட மெயில் பண்ணிகிட்டே இருக்கா. அவ அப்பாரு எதோ கெவருமண்ட்டுல இருந்தாராம். 500 கோடி சொத்து இருக்காம். கொஞ்சூண்டு எல்ப் பண்ணுனா அந்த பணத்த எடுத்துடலாமாம்.

எதோ மெயில் லிஸ்ட்ல தேடுச்சாம். அதுல நாந்தான் யோக்கியன்னு தெரிஞ்சுச்சாம்.

பணம் முச்சூடும் எடுத்துகிட்டா அந்த கருத்த குட்டிய நானே கல்யானமும் பண்ணிக்கலாம்ன்னும் சொல்றா.

அந்த மெயில எங்க வீட்டம்மினிக்கு தெரியாம ஒளிச்சு வைக்கற்றதுகுள்ளாற தாவு தீந்து போவுது.

கோவி கண்ணன் நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க

பி.கு ஹி ஹி அந்த கருத்த குட்டி போட்டோல அம்சமாத்தான் இருக்கா

நந்து f/o நிலா சொன்னது…

சொல்ல மறந்துட்டனே, இன்னொரு ஆஃபர் கூட வந்திருக்கு. அமவுண்ட் 300 கோடிதான். ஆனா அக்கா தங்கச்சி ரெண்டு பேர் இதுல.

அதுனால இந்த ஆஃபர நான் கண்டுக்கல. கோவி. கண்ணன் உங்க மெயில் ஐடிய கொடுதிரட்டுமா? :P

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்