பின்பற்றுபவர்கள்

28 மார்ச், 2007

ஒவ்வாமை !

ஒவ்வாமை மனிதருக்கு மனிதர் வேறுபாடு உள்ள ஒரு உணர்வு. சிலருக்கு மனதளவில் சிலவற்றைப் பார்க்கும் போது ஒவ்வாமையாக இருக்கும், சிலருக்கு சில மருந்துகளினால் ஒவ்வாமை ஏற்படும் அது உடலளவிலான ஒவ்வாமை. மன அளவிலான ஒவ்வாமை என்பது வேண்டிய வெறுப்போ வேண்டா வெறுப்போ, நேரிடையாக பாதிக்கப்படாவிட்டாலும் இவற்றை சில சமயங்களில் கொள்கையாகவே வைத்திருந்து அதிலிருந்து சற்றும் பின்வாங்காது அத்தகைய உணர்வுகளில் ஒப்புமையாகவே இருப்போம். தேவையற்ற வெறுப்பு, காழ்ப்புணர்வு இவைகளெல்லாம் மருத்துவ காரணமின்றி மனக் காராணங்களால் இருக்கும் ஒவ்வாமைகள். அவ்வாறு இருப்பவர்கள் தாம் மன அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று தெரியாமலேயே அதே நிலையில் இருப்பார்கள். நண்பர்கள், நன்கு தெரிந்தவர்கள் அவர்களுடன் பேசி இவற்றை சரிசெய்ய முடியும். மனம் விட்டுப் பேசினால் அதன் காரணிகள் தெரியும். உளவியல் ரீதியாக அனுகவேண்டியது இவை. இத்தகைய ஒவ்வாமைகள் நாளடைவில் சமபந்தப் பட்டவர்களின் இயல்பாகவே மாறிப் போகும் ஆபத்தும் மிக மிக அதிகம்.

பிறந்து வளரும் போதே நாம் சில விலங்குகள், பூச்சி இனங்கள், ஊர்வன ஆகியவற்றில் சிலவற்றின் மீது ஈர்ப்பு மற்றும் சிலவற்றின் மீது தேவையற்ற வெறுப்பு மற்றும் பயம் இயல்பாகவே அமைந்துவிடுகிறது. நான் எங்கள் ஊரில் சிலர் குறிப்பாக பெண்கள் பாம்புக்கு பயப்படுவார்களை அறிந்து இருக்கிறேன். அவர்களிடம் சென்று 'பாம்பு' என்று சொன்னாலே 'ப்ல் கிட்டி' மயங்கிவிடுவார்கள். அப்படிபட்டவர்களிடம் சிறுவயதில் 'பாம்பு' என்று சொல்லியும், தென்னை ஓலையை அவர்கள் மீது தூக்கிப் போட்டு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறேன். ஒரு மளிகைக் கடைக் காராரும் அப்படிபட்ட சிலரிடம் வம்பு வளர்த்தார். அதாவது மளிகை சாமனுடன் ப்ளாஸ்டிக் பாம்பு ஒன்றையும் கூடவே வைத்து அவர்களை பயப்படவைப்பார். பாம்புக்கு பயப்படும் அந்த பெண் (பேரிளம்) கடுமையான வசை மொழிகளை அவரை அறியாது சொல்லி திட்டுவார். இது எல்லாம் முன்பு தமாசாக இருக்கும்.

இன்னும் நான் பார்த்த சிலர் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் காத(10 மைல்) தூரம் ஓடுவார்கள். நண்பர் ஒருவர் திரைப்படத்தில் பாம்பு வரும் காட்சியை பார்த்தவுடன் 'உவ்வே' என்று தலையைக் குணிந்து கொள்வார். சிலர் நாய்களைப் பார்த்தால் நடுங்குவார்கள், பூனை சிலருக்கு அருகில் வரும்போது நடுக்கமே வந்துவிடும். நானும் கூட முறைத்துப் பார்க்கும் பூனைகளைப் பார்த்து நடுங்குவேன். தெரு நாய்கள் அருகில் வந்தால் உடனே மயிர்கூச்சல் வரும். பூரான், பல்லி (சென்னையில் Balli என்று சொல்வார்கள்) ஆகியவற்றை பார்த்தவுடனே சிலர் பயப்படுவார்கள்.
பாம்புகளை மிக அருகில் பார்த்தால் எனக்கும் பயமாகவே இருக்கும்.

இயற்கையிலேயே பருந்தைக் கண்டு தாய் கோழியின் இறக்கைக்குள் பதுங்கும் கோழிக் குஞ்சு போல நமக்குள் இருக்கும் பாதுகாப்பு உணர்வு நம்மை அறியாமல் நடுங்க வைத்துவிடுகிறது. விலங்குகள் திடீர்தாக்குதல் நடத்தும் என்ற அச்ச உணர்வும் ஒரு காரணமாக இருக்கும். மன அளவில் இருக்கும் ஒவ்வாமைகள் பெரும்பாலும் தேவையற்ற அச்சமாகவே இருக்கிறது. நண்பர்களே உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விலங்குகள், ஊர்வன உண்டா ?

9 கருத்துகள்:

காட்டாறு சொன்னது…

எனக்கு சின்ன வயதிலிருந்து பயமே கிடையாது. ஒரு சமயம் பாம்பாட்டி பாம்பை ஆட வைத்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் ஒருவித சங்கடம் வந்தது உண்மை. அது பயம்ன்னு சொல்ல முடியவில்லை. இன்று கூட எங்கள் வீட்டு பின்புறத்தில் சிறு பாம்பு ஒன்னு அழகா சுருண்டு மரத்துல ராஜாவாட்டம் தெனாவட்டா உட்கார்ந்திருந்ததை பாத்ததும் போட்டோ எடுக்கணும்ன்னு தான் தோணியது. இது நீங்கள் சொன்ன ஒவ்வாமை கீழ் வருமா?

கண்மணி/kanmani சொன்னது…

முதல் பின்னூட்டம் வந்ததா?பாம்பு,தேளைவிட சின்ன புழுவப் பார்த்தாதான்'உவ்வே'ன்னு குமட்டும்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

எனக்கு விலங்குகளிடத்தில் ஒவ்வாமை இல்லவே இல்லை.. பல்லி ரொம்ப friend. பல்லி இருக்கும் அறையில் மட்டும் தான் உட்கார்ந்து பாடம் படிப்பேன் என்று அடம்பிடிப்பேன்.

கரப்பு, மரவட்டை, தும்பி, பட்டாம்பூச்சி போன்ற கையில் பிடிக்கக் கூடிய அளவு பெரிய பூச்சிகளைப் பிடித்துத் தூர எறிந்துவிடுவேன் (யாராச்சும் பார்த்து அடிச்சி கொன்னுடறதுக்குள்ளே...). நாய், பூனை, யானை, பன்றி, பசு, எருமை, ஒட்டகம், குதிரை, கழுதை என்று தெருவில் பார்த்திருக்கும் மிருகங்களைப் பார்த்தும் ஒவ்வாமை ஏதும் இல்லை.

ஒவ்வாமை, பயம், டென்சன் எல்லாம் சில மனிதர்களைப் பார்க்கும் போது தான்! :)

MyFriend சொன்னது…

கண்ணா,

என்னால் இந்த பதிவை படிக்க முடியவில்லை. அந்த சர்ப்பத்தை பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது..

மன்னிச்சிடுங்கள்.

மங்கை சொன்னது…

//ஒவ்வாமை, பயம், டென்சன் எல்லாம் சில மனிதர்களைப் பார்க்கும் போது தான்! :)///

,, ,, ,, ,, எனக்கும்....

VSK சொன்னது…

ஒவ்வாமை உள்ளுக்குள் ஒளிர்ந்தாலும்
ஒவ்வி நடக்கும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு!

மற்ற இனங்களுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் பெரும் வேறுபாடு இது!

அதைத்தான் வள்ளலாரும்,
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்"
எனச் சொல்லி இருக்கிறார்.

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

//'ப்ல் கிட்டி' மயங்கிவிடுவார்கள்//

பல் கட்டி

கோவியாரே! எனக்கு தாங்கள் கூறியதுபோல் பல்லி, கரப்பான் பூச்சிகளின்மேல் பயமோ அல்லது ஒவ்வாமையோ கிடையாது, பொன்ஸ் அக்காவைப் போல் நானும் அதனுடன் நட்பு முறியிலேயே பழகுவேன்!

நல்ல பதிவை படிக்காமல் கால தாமதத்திற்க்கு மன்னிக்கவும்!அதற்குக் காரணம் தங்களின் பதிவில் இருக்கும் அந்த பாம்புதான்!ஐய்யோ சொல்லும் போதே எனக்கு ஒருவித பயம் வருகின்றது! மை ஃபிரண்ட் சொன்னது போல் உங்கள் பதிவிலிருக்கும் பாம்பும் பயங்கரம்(உமக்கு வேறு படமே கிடைக்கலையா?),பாம்பிற்க்கு பக்கத்திலிருக்கும் கருத்துக்களைக்கூடப் படிக்காமல் நேரடியாக படத்தின் கீழிருந்துதான் படிக்க முடிந்தது!

சேரில் உக்கார்ந்து டீவி பார்க்கும் போது அல்லது திரைப்படங்களில் பாம்பைப் பார்த்தால் கால்களை தூக்கி மேலே வைத்துக் கொள்வேன்(காலூக்கு கீழே ஊர்வது போன்ற ஒரு பய உணர்வு),

அன்புடன்...
சரவணன்

bala சொன்னது…

//ஒவ்வாமை, பயம், டென்சன் எல்லாம் சில மனிதர்களைப் பார்க்கும் போது தான்! :)//

பொன்ஸ் அம்மா,

வெளியே மிதக்கும் அய்யா,சிங்கப்பூர் கருப்பு போன்றவர்கள் ஒரு மாதிரி ஆசாமிங்க தான்.அதுக்காக இப்படியா கேவலமா எழுதுவது?

பாலா

பெயரில்லா சொன்னது…

//நண்பர்களே உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விலங்குகள், ஊர்வன உண்டா ? //
அதைப் பற்றி தனி பதிவே நான் போடலாம்.சரி உங்களுக்காக சுருக்கமாக சொல்கின்றேன் :)

கரப்பான் பூச்சி,புழு,அட்டை,சிலந்தி,நாய்(esp சோறி புடிச்ச நாய்),குரங்கு(ஒரு தடவை கடிக்க வந்துருச்சி),பாம்பு(ஆனால் சிங்கப்பூர் zoo வில மலைப்பாம்போடு படம் எல்லாம் பிடிச்சு இருக்கேன்),பல்லி,ஒணான்,உடும்பு,எருமை,காட்டு பன்றி,....மொத்ததில் எனக்கு மிருகங்களைக் கண்டாலே பயம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்