பின்பற்றுபவர்கள்

27 மார்ச், 2007

கிரிக்கெட் வீரர்களை எந்த அளவுக்கு நம்பலாம் ?

விளையாட்டு வீரர்கள் ஆகட்டும் சினிமா நடிகர்கள், அரசியல் வாதிகள் ஆகட்டும் நம்ம ஆளுங்க அவங்களுக்கு ரசிக கண்மணிகள் ஆகிவிட்டால் அதன் பிறகு இவர்கள் அவர்களை கடவுள் அளவுக்கு உயரத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். இதில் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் வெறி எடுத்தவர்கள் என்று சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. அது போல இந்திய அளவுக்கு கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு ஆதரவு அடியார்கள் இருக்கிறார்கள்.

சச்சினுக்கு வயது ஆகிவிட்டது அவரால் விளையாட்டில் முன்னைப் போல் முனைப்புடன் விளையாட முடியாது. கிரிக்கெட், கால்பந்து ஆகிய பல விளையாட்டுக்களில் புது இரத்தங்களால் தான் சாதனை படைக்க முடியும். அதிக ரன் குவித்தவர் என்பதற்காக இந்த உலக கோப்பை கால் இறுதி போட்டி வாய்பைக் கூட சச்சின் போன்றவர்களின் காலடியில் வைத்துவிட்டு தலை குணிகிறது கிரிக்கெட் வாரியம். விளையாட்டு போன்ற துறைகளில் திறமைக்குத்தான் மதிப்பு கொடுக்க வேண்டும் அனுபவத்துக்கு அல்ல. கிரிக்கெட் வீரர்கள் சம வயது உடைய வீரர்களிடமே மோதுகிறார்கள் என்று சொல்லவே முடியாது. இவர்களுடைய கடந்த கால தவறுகளை புதியவர்கள் நன்றாக படித்தே வந்து இருப்பார்கள். எனவே அனுபவ மிக்கவர்களை வீழ்த்துவது என்பது அவர்களுக்கு மிகவும் எளிது. புதியவர்களின் அனுகுமுறை எவ்வாறு அமையும் என்பது அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு புரியாமல் போவதால் எளிதில் பெவிலியனுக்கு திரும்பி விடுகிறார்கள்.

100 கோடி இந்தியர்களில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களே இல்லை என்பது போல் பழம் பெருச்சாளிகளையே அனுப்பி தோல்வியை சந்தித்து இருப்பது வெட்கக் கேடு. வாய்ப்புக்காக காத்திருப்போர் பலர் இருக்கையில் சச்சின், கங்குலி போன்றவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கி அதிக ரன் குவித்தவீரர் என்ற உயரத்தை எவரும் தொடாத வண்ணம் அவர்கள் மேலும் மேலும் அடைய செய்வது தான் சாதனையா ?
கிரிக்கெட் வாரியத்தை ஏமாற்றும் புக்கிகள் போலத்தான் நம்பும் கிரிக்கெட் ரசிகர்களை கிரிக்கெட் வாரியம் ஏமாற்றி வருகிறது.

சச்சின் போல தோற்றம் உடையவர்களை தேடி தேடி உதைக்கிறார்கள் என்பது கண்டனத்துக்கு உரியது. அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்ட ஆட அவர் சொன்னாரா ? அவரின் சக்தியை மீறி அவரை நம்பிவிட்டதற்கு அவர் எப்படி காரணமாக முடியும். இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை ரசிகர்கள் நிறுத்திவிட்டு நன்றாக ஆடக் கூடியவர்கள் எவராக இருந்தாலும் அது பாகிஸ்தான் வீரராக இருந்தாலும் பாராட்டுவது நலம். இந்தியா வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதாது, சம பலம் உள்ளவர்களிடம் மோதுகிறோம் என்று விளையாட்டை விளையாட்டாக நினைக்க வேண்டும். இங்கு பிரார்தனைகள் யாகங்கள் இவையெல்லாமே வீரர்களின் தன்னம்பிக்கையை குறைப்பது என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. இது போன்ற தேவையற்றதை செய்வதைவிட வீரர்களின் தன்னம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் அவர்கள் தோல்வியை தழுவும் போது பாராட்டி தட்டிக் கொடுப்பது நல்லது.

தோல்விக்கு காரணமாக வீரர்களை மட்டும் குறை சொல்வது என்னைப் பொருத்த அளவில் கண்டனத்துக்கு உரியது. குருவி தலையில் பனம்பழம் போல் பெரும் சுமையை ஏற்றிவிட்டு அவரகளை மட்டும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல.

9 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

அருமையான கருத்துக்கள் கோவியாரே!

கோவி.கண்ணன் சொன்னது…

// Parama Pitha said...

எல்லையில் உங்களுக்கும் எனக்கும் கைக்கூலிகளை எதிர்த்து பாரதத்திற்காக போராடிவரும் விரனிடம் இதை சொல்லுங்கள் அப்புறம் தெரியும் யாரை பாராட்டுவது என்று
//

தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் வீரர்களும், இந்திய வீரர்களும் நட்புடன் இருக்கிறார்கள் என்று பத்திரிகையை படித்ததே இல்லையா ?
அப்போ அவர்களையும் தேச துரோகி என்று சொல்லுவிங்களா ?
விளையாட்டு வேறு, நாட்டுப்பற்று வேறு நம் நாடு வெல்ல வேண்டும் என்ற ஆவலில் இருந்தால் ஒன்று நன்றாக விளையாட வேண்டும் இல்லையென்றால் எதிரி என்று கருதி விளையாட போகமல் இருக்கவேண்டும். இங்கே வந்து தேசபக்தி பேசுவது நகைப்புக்கு இடமானது, இரு நாட்டு எல்லையில் நிற்கும் வீரர்கள் என்னேரமும் சண்டை இட்டுக் கொள்வதில்லை நண்பரே. நமது நாட்டிலும் *கைகூலிகள்* இருந்ததால் தான் எதிரிகளால் நாட்டை பிடிக்க முடிந்தது.

பரமபிதா ன்னு பேரை வச்சிக்கிட்டு ஜயராமன் படம் போட்டு இருந்திங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்
:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஜோ / Joe said...
அருமையான கருத்துக்கள் கோவியாரே!
//

நன்றி ஜோ,

எனக்கு எப்பவும் பெயர் குழப்பம், ஜோவும், தேவ்-வும் என்னை ரொம்பவே குழப்புறாங்க.

நேற்று நீங்க எழுதிய பதிவை தேவ் என்று தருமி ஐயாவிடம் தெரிவித்தேன்

இருவருமே ஜோ / Joe; தேவ் / Dev

என்று வைத்திருப்பதால் எனக்கு குழப்பம் நடந்திருக்கலாம் !
:))

ஜோ/Joe சொன்னது…

//எனக்கு எப்பவும் பெயர் குழப்பம், ஜோவும், தேவ்-வும் என்னை ரொம்பவே குழப்புறாங்க.

நேற்று நீங்க எழுதிய பதிவை தேவ் என்று தருமி ஐயாவிடம் தெரிவித்தேன்

இருவருமே ஜோ / Joe; தேவ் / Dev

என்று வைத்திருப்பதால் எனக்கு குழப்பம் நடந்திருக்கலாம் !
//
இதை உங்க wierd பதிவுல சேர்துக்கலாம் போலிருக்கே..ஹி.ஹி.

கோவி.கண்ணன் சொன்னது…

பரமபிதா சார்,

கோவிச்சிக்காதிங்க... என் பதிவை அவ்வப்போது படித்து அடிக்கடி பின்னூட்டம் போடுபவர் என்ற உரிமையில் நான் உங்களை பெரிதும் மதித்து பாராட்டுகிறேன். கருத்தியல் மறுப்பு மட்டும்தான் இங்கே, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில்.. வெறுப்புகள் எப்போதும் இல்லை. விருப்புகளே உண்டு !

ஜோ/Joe சொன்னது…

//எல்லையில் உங்களுக்கும் எனக்கும் கைக்கூலிகளை எதிர்த்து பாரதத்திற்காக போராடிவரும் விரனிடம் இதை சொல்லுங்கள் அப்புறம் தெரியும் யாரை பாராட்டுவது என்று//

இவ்வளவு சின்னப் பிள்ளைத் தனமாக யோசிப்பவர்கள் கூட வலைப்பதிய வருவதே ஒரு wired தான்.

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரே
கிரிக்கெட் போர்டில் அரசியல் மிகவும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கேன்.
வடக்கு/தெற்கு பாகுபாடுகள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும்.
ரொம்ப கிட்டத்தில் நடந்த உதாரணம் வேண்டுமா??
நான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் எங்களுக்கு பயிற்சி கொடுக்க திரு.சடகோபன், இப்போது ஆடிட்டரகா இருப்பதாக கேள்வி (நம்மூரில்) வருவார்.அவருடைய வீச்சை சந்தித்து மண்டையில் பந்து மாதிரி வாங்கிகட்டிக்கொண்டேன்.அவர் ஸ்டேட் செலக்ஷன் போய் திரும்பி வந்தது கூட அங்கு நடக்கும் அரசியலால் தான்.
அந்த சமயத்தில் அவர் பந்துவீச்சை எதிர்கொள்ள சிலரே இருந்தனர்.
திறமை உள்ளவர்கள் பலர் இது மாதிரி ஒதுக்கப்பட்டுள்ளனர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
கோவியாரே
கிரிக்கெட் போர்டில் அரசியல் மிகவும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கேன்.
வடக்கு/தெற்கு பாகுபாடுகள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும்.
ரொம்ப கிட்டத்தில் நடந்த உதாரணம் வேண்டுமா??
நான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் எங்களுக்கு பயிற்சி கொடுக்க திரு.சடகோபன், இப்போது ஆடிட்டரகா இருப்பதாக கேள்வி (நம்மூரில்) வருவார்.அவருடைய வீச்சை சந்தித்து மண்டையில் பந்து மாதிரி வாங்கிகட்டிக்கொண்டேன்.அவர் ஸ்டேட் செலக்ஷன் போய் திரும்பி வந்தது கூட அங்கு நடக்கும் அரசியலால் தான்.
அந்த சமயத்தில் அவர் பந்துவீச்சை எதிர்கொள்ள சிலரே இருந்தனர்.
திறமை உள்ளவர்கள் பலர் இது மாதிரி ஒதுக்கப்பட்டுள்ளனர்.
//

குமார் உங்கள் அனுபவத்தையும் உணர்வையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ... இது பற்றி நீங்கள் ஒரு தனிப்பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும் ! கிரிக்கெட் கிரிக்கெட் என்று மற்ற விளையாட்டுகளை பாராமுகமாக இருக்கிறது அரசும் !

நன்றி குமார் !

கோவி.கண்ணன் சொன்னது…

//இவ்வளவு சின்னப் பிள்ளைத் தனமாக யோசிப்பவர்கள் கூட வலைப்பதிய வருவதே ஒரு wired தான். //

ஜோ,

அவர் இந்திய தேசியம் பற்றி எப்போதும் சிந்தித்து கொண்டிருக்கும் தேச பக்தர் என்று நினைக்கிறேன்.

இது மாதிரி நல்லவங்க தான் நாட்டுக்குத் தேவை !
:)))))))))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்