பின்பற்றுபவர்கள்

25 மார்ச், 2007

தமிழாசிரியர் ஆன கைப்புள்ள

நம்ம கைப்புள்ள ஈரோ வேசம் கட்டினாராம் காட்டியும் அடிக்கடி காணாமல் போய்டுறார். தேடிப் புடிச்சு கலாய்க்கலாம்னு தேடினதில் ஒரு எலிமென்டிரி ஸ்கூலுல வாத்தியார் கெட்டப்புப் போட்டது பற்றி ரகசிய தகவல் கசிய. ...விடுவோமா ? நைசா பார்த்திக்கு கைப்பேசி வழி தகவகல் கொடுத்தாச்சு. பார்த்தி யாரு ? அவரும் முட்டி மோதி மாவாட்ட (எபி அல்ல) கல்வித்துறையில் இயக்குனராக பொறுப்பேற்று குண்டக்க மண்டக்க விலாச ஆரம்பிச்சு இருக்கார். இன்ஸ்பெக்சன் என்ற பெயரில் குறிப்பிட்ட ஸ்கூலுக்கு தடாலடியாக நுழைந்துவிட்டார்.

இடம் : மாநகராட்சி பள்ளி

கைப்புள்ள : பசங்களா, நல்லா திரும்வும் சொல்லுங்க

பசங்கள் : "அறம் செய்ய விரும்பு" கோரசாக சொல்கிறார்கள்

கைப்புள்ள : அது...! நல்லா பாத்துக்குங்க, கேட்டுக்குங்க, எவனோ ஒரு கேணப்பய இன்னிக்கு இன்ஸ்பெக்சனுக்கு வரப் போறானாம், நீங்க சொல்ற ஆத்திச் சூடியைக் கேட்டுவிட்டு, ஆத்தாடி பய புள்ளைங்க இருக்குற ஸ்கூல் பக்கம் இனி எட்டிக் கூடப் பார்க்கப் படாதுன்னு ஓடிடனும் சரியா ?

பசங்க : சரிங்க ஐயா (கோரசாக கத்துகிறார்கள்)

பார்த்தி உள்ளே நுழைகிறார், கைப்புள்ளையைப் பார்த்து 'இவன எங்கேயோ பார்த்து இருக்கிறோமே, ம் ஹூம் இருக்காது' கைப்புள்ள ஆசிரியர் கெட்டப்பில் இருப்பதால் உடனடியாக கண்டு கொள்ள முடியவில்லை.

கைப்புள்ள : வணக்கம் சார், பசங்களா சாருக்கு குட் மார்னிங் சொல்லுங்க

பசங்க : காலை வணக்கம் ஐயா - (கோரசாக கத்துகிறார்கள்)

பார்த்தி : மிஸ்டர் ... சாரி .. ஐயா கைப்புள்ள நீ தமிழாசிரியர் தானே ?

கைப்புள்ள : பார்த்தா தெரியல,

பார்த்தி : பார்த்தா தெரியறத்துக்கு நீ... சாரி நீங்க என்ன பாம்பே மிட்டாய் விக்கிறவனா ?

கைப்புள்ள மனசுக்குள்... இவன் அவன் தான் எச்சரிக்கையாக இருக்கனும், வாயைக் கொடுத்து வம்பில மாட்டிக்கக் கூடாது' ன்னு நெனச்சு



கைப்புள்ள : ஆமாம் நான் தமிழாசிரியர் தான். பரவாயில்ல சின்னவன் தான் நானு நிய்யீ வாப்போன்னு கூப்பிடு... அப்பு நம்ம பக்கமெல்லாம் எல்லாரையும் அப்புன்னு தான் கூப்பிடுவோம்.

பார்த்தி : அப்படி வா வழிக்கு, நீ தமிழாசிரியர்னு சொல்ற... அப்பறாம் ஏன் பசங்க கிட்ட 'குட் மார்னிங் சொல்ல சொன்னே, வணக்கம் னு தமிழ்ல சொல்லச் சொல்லி இருக்கனுமே ?

கைப்புள்ள : அப்பு, அப்பு தமிழலில சொன்னாலும் ஆங்கிலத்தில சொன்னாலும் ஒன்னுதானப்ப்பு ?

பார்த்தி : இப்ப ரெண்டு அப்பு அப்பப் போறேன், அது எப்படி தமிழில சொல்றதும் ஆங்கிலத்துல சொல்றதும் ஒன்னா இருக்க முடியும் ? உங்க சித்தப்பாவை போய் அங்கிள் னு ஆங்கிலத்தில் சொன்னினா செருப்பால அடிப்பாரு தெரியுமா ?

கைப்புள்ள : தப்புதேங். ..

பார்த்தி : உங்கிட்ட படிச்சாலும் பசங்க ஒழுங்காதான் தமிழில்ல சொல்றாங்க, கெடுத்துப்புடாதா.. சரி இங்கே என்ன பாடம் நடக்குது ?

கைப்புள்ள : 'அரஞ் செய்ய விரும்பு' சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

பார்த்தி : ம்...அரம்... செய்ய விரும்பு சொல்லிக் கொடுக்கிற...? (நோட்டமிட்ட வாறு )அதுக்கு தான் மேஜயில் ரம்பம் எல்லாம் எடுத்து வச்சிருக்கியா ?

கைப்புள்ள : ஏட்டுக் கல்வி சோறுபோடுமாப்பு ? வெறும் பாட்ட மட்டும் படிச்சா போதாதுன்னு தான் கைத்தொழிலும் சொல்லித் தர்ரேன். தமிழாசிரியர்னு தமிழு மட்டும் சொல்லிக் கொடுக்கல அப்பு, வேலையும் கத்துக் கொடுக்கிறேன்


பார்த்தி புரிந்து கொண்டு கடுப்பாகிறார்

பார்த்தி : மண்ணாங்கட்டி, முதலில் அறம்னா என்னன்னு சொல்லு ?

கைப்புள்ள : இவ்வளத்தண்டி மேசையில இருக்குது பார்த்தா தெரியல...? அரம்னா... அரம்னா ரம்பம்!!! அதான் சொல்லிக் கொடுக்கிறேன். பசங்க ரம்பம் செய்யக் கத்துக்கிட்டா ஆசாரி வேலை செஞ்சு பொழைச்சுக்க மாட்டாங்களா ? எல்லா புள்ளையுமே நல்லா படிக்கிறதுல்ல அப்பு, அவிங்க எதாவது வேலை செஞ்சு பொழைச்சுக்க வேணாமா ? எப்படி....?

பார்த்தி : மடைய மடையா , அறம்னா தருமம் ! தருமம் என்றால் ஏழைக்களுக்கு உதவனும் னு சொல்வது.

கைப்புள்ள : அட இதுல இம்புட்டு பெரிய சங்கதி இருக்கா ?

பார்த்தி : பேச்ச மாத்தாதே, ஆமாம் உன்னை எங்கேயோ பார்த்து இருக்கிறேன், உன் கையைக் காட்டு... கைப்புள்ள காட்டுகிறார், இரும்பு பிடித்த முரடாக இருக்கிறது உள்ளங்கை

பார்த்தி : இதுக்கு முன்னால் மரத்தடி ஸ்கூலுக்கு நீ தானே மணி அடிச்சுகிட்டு இருந்த ?

கைப்புள்ள மனசுக்குள் ' ஆக கண்டுபிடிச்சுட்டான்யா கண்டுபிடிச்சிட்டான்' மறைக்க முடியாது என்று நினைத்தவராக

கைப்புள்ள : ஆமாப்பு, அங்கிட்டு நான் பாட்டுக்கு மணி அடிச்சு பொழப்பு நடத்திக்கிட்டு இருந்தேன், அங்கிட்டும் கரண்டு பெல்ல வச்சு ஆப்பு அடிச்சிட்டானுங்க, அங்கின இங்கின கொஞ்சி வாத்தியார் வேலைய வாங்கினா... மணியாட்டி சார்னு கூப்பிட ஆரம்பிச்சிடுச்சி பயபுள்ளைங்க... அதான் அந்த ஸ்கூலு வேணாம்னு இங்கிட்டு வந்திட்டேன்

உடனே..
பசங்க : "மணியாட்டி சார்... மணியாட்டி சார் " - மாணவர்கள் கோரசாக கத்துகிறார்கள்

கைப்புள்ள : நல்லா இருப்பிய்யா நிய்யீ ... இங்கிட்டும் வந்து போட்டு கொடுத்திட்டியே பாவி... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பார்த்தி : அமாண்டா.... அறத்துக்கு என்ன அர்த்தம்னு தெரியாம பாடம் நடத்திக்கிட்டு இருப்ப.. அத நாங்க பார்த்துட்டு உனக்கு 'சபாஷ்' போட்டுட்டு போவனுமா ?

கைப்புள்ள : அப்பு ! இது கெவர்மண்ட் வேல அம்புட்டு சீக்கிறமா கை வச்சிட முடியாது தெரியுமுல்ல ?

பார்த்தி : அவ்வளவு தெணாவெட்டா ? உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்தா சொல்றேன்.. ம் ஹூம் சரிப்படாது அங்கிட்டும் போய் 'கண்றொன்று சொல்லேல்' னு கன்னுக்குட்டிக்கு ஒன்னு ரெண்டு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிடுவ... இனி என் ஆபிசில நீ தான் பெருக்கி, கூட்டி தண்ணி பிடிச்சு வக்கிற. என்ன சரியா ?

கைப்புள்ள : ஆகா தூக்க வச்சுட்டான்யா தூக்க வச்சுட்டான் தண்ணிப் பானையை தூக்க வச்சுட்டான்

பார்த்தி எதையோ எழுதி தலமை ஆசிரியரிடம் கொடுக்கிறார்.

கைப்புள்ள : மணியடிச்சு சோறுதின்னேன் இப்ப இவன்கிட்ட போயி தண்ணி வச்சுட்டுத்தான் திங்கனும் போல இருக்கு........ம் விதி யார விட்டுச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

13 கருத்துகள்:

MyFriend சொன்னது…

//ரகசிய தகவல் கசிய. ...விடுவோமா ? நைசா பார்த்திக்கு கைப்பேசி வழி தகவகல் கொடுத்தாச்சு.//

நாராயணா நாராயணா.. :-P

MyFriend சொன்னது…

//கைப்புள்ள ஆசிரியர் கெட்டப்பில் இருப்பதால் உடனடியாக கண்டு கொள்ள முடியவில்லை.//

பார்த்தி நல்லா பார்த்தாரா? தலையிலெ குடுமி ஏதும் தெரிஞதா?

அபி அப்பா சொன்னது…

சும்மா நச்சுன்னு ஒரு காமடி:-)) சூப்பர் போங்க, ரொம்ம நல்லா இருக்கு:-))

கோவி.கண்ணன் சொன்னது…

//நாராயணா நாராயணா.. :-P //

.:: மை பிரண்ட் :: வாங்க ! கிரிக்கெட் வயிற்றெரிச்சலில் எல்லோரும் இருக்கும் போது கொஞ்சம் சிரிக்க வைப்போம்னு..
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பார்த்தி நல்லா பார்த்தாரா? தலையிலெ குடுமி ஏதும் தெரிஞதா?

5:07 PM, March 25, 2007
//

.:: மை பிரண்ட் :: அது அந்தகால வாத்தியாருக்குத்தான் இப்ப நம்ம வாத்தியார் ஐயாவைக் கூட எடுத்துக்குங்க டிரிம்மா தான் இருக்கார் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// அபி அப்பா said...
சும்மா நச்சுன்னு ஒரு காமடி:-)) சூப்பர் போங்க, ரொம்ம நல்லா இருக்கு:-))

5:45 PM, March 25, 2007
//

அபி அப்பா உங்க காமடிக்கும் முன்னால என் காமெடியெல்லாம் வெறும் நெடி... உங்க சன் டீவி காமெடி டைம் ஒரு கலக்கல் நகைச்சுவை !
:)

Subbiah Veerappan சொன்னது…

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!
ஆயிரம் பதிவுகள் போட்டாலும் ஆசிரியர் கெடுவதில்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. சுப்பையா said...
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!
ஆயிரம் பதிவுகள் போட்டாலும் ஆசிரியர் கெடுவதில்லை!
//

வாங்க ஐயா,

மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்தாங்களான்னு கேட்டால் வேற எப்படி நிரூபணம் செய்வது ?
இந்த பதிவு ஆசிரியருக்கு அர்பணம் !
:))))

கோவி.கண்ணன் சொன்னது…

செந்தழலார் கொட்(டு)
அmazing funny post...
:))

Subbiah Veerappan சொன்னது…

///மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்தாங்களான்னு கேட்டால் வேற எப்படி நிரூபணம் செய்வது ?
இந்த பதிவு ஆசிரியருக்கு அர்பணம் !
:))))///

கதை, திரைக்கதை, வசனம், பாடலகள், இசை, ஒளிப்பதிவு, ஸடண்ட் மாஸ்டர், நடிப்பு, இயக்கம் என்று சகலகலாவல்லவ்ர் கோவியார்!

ஒப்புக்கொள்கிறேன். போதுமா?
வேண்டுமென்றால் புதுப்பட்டமும் தருகிறேன்
"பதிவுலக வீராச்சாமி"

சிவபாலன் சொன்னது…

GK,

Ha Ha Ha,,

நல்ல நகைச்சுவை.. வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டீர்கள்.. நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// SP.VR. சுப்பையா said... கதை, திரைக்கதை, வசனம், பாடலகள், இசை, ஒளிப்பதிவு, ஸடண்ட் மாஸ்டர், நடிப்பு, இயக்கம் என்று சகலகலாவல்லவ்ர் கோவியார்!

ஒப்புக்கொள்கிறேன். போதுமா?
வேண்டுமென்றால் புதுப்பட்டமும் தருகிறேன்
"பதிவுலக வீராச்சாமி" //

ஐயா,
பதிவுலகில் ஏற்கனவே செந்தழளார் இருக்கிறார் ! 'முதல் பெஞ்ச் மாணவன்' என்ற பட்டம் போதும்

காட்டாறு சொன்னது…

ஹா ஹா ஹா..... பார்த்தீபனின் குண்டக்கா மண்டக்கா காட்சி கண்முன்.... கலக்கல்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்