பின்பற்றுபவர்கள்

7 மார்ச், 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - சென்னை 1

கோவை பேருந்து நிலையத்தில் ... சென்னைக்கு கிளம்பும் முன் ... 'புகை உடலுக்குப் பகை' என்ற வாசகம் சிபியாரின் பதிவில் இருப்பதைக் குறித்து கேட்டேன். அது நல்ல செய்தி பதிவில் வழிவுறுத்துவது நன்மை என்றார். நல்லது... பகையை மறக்கலாம் தவறில்லை என்று நின்று ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு ... சென்னைச் செல்லும் பேருந்து அந்த நேரத்தில் இருக்காது என்பதால் சேலம் சென்று சென்னை செல்லலாம் என நினைத்து சேலம் பேருந்தில் ஏறச் சென்றேன். சிறு நினைவு பரிசு ஒன்றை கொடுத்தார். ஊரில் சென்று பிரித்துப் பாருங்கள் என்று சொல்லி விடை பெற்றார்.

கோவையிலிருந்து சேலம் 4 மணி நேர பயணம் ரூ 52 கட்டணம். படக்காட்சி (வீடியோ) ஓடியது. தொடர்ச்சியான பயணத்தால் உடல் சோர்வு ... இருந்தாலும் நள்ளிரவு தாண்டி பேருந்தில் செல்வதால் திருட்டு பயம் ... இரவு பயணத்தில் ஏற்படும் சங்கடம் ...தூக்கத்தை தள்ளிப் போட்டது ... 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பேருந்து பயணத்தின் போது நடுத்தர வயதை தாண்டிய ஒரு நபர் ... நல்ல தூக்கத்தில் இருந்த என்னிடம் அடிமடியில் கைவைக்க (பணம் தேடுவதற்கு அல்ல) ... நான் திடுக்கிட்டு எழுந்து என்ன நடக்கிறது என புரிந்து கொண்டு ... வேறு ஒரு இருக்கையில் அமர்ந்தேன். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துவிட்டால்... அல்லது நல்ல தூக்கத்தில் பணப்பை திருடு போனால் என்ன செய்வது என நினைத்து பணத்தை பிரித்து... பிரித்து இரண்டு மூன்று இடங்களில் வைத்து யோசித்துக் கொண்டே இருக்கும் போது ... என்னை அறியாமல் தூங்கிவிட்டேன்.

பேருந்தில் அனைத்து விளக்குகளும் எரிந்து என்னை விழிப்படைய செய்த போது சேலம் வந்து சேர்ந்ததையும், உடமைகள் பத்திரமாக இருப்பதையும் அறிந்து கொண்டேன். மணி அப்போது அதிகாலை 4 மணி. சேலத்தில் இறங்கி ஆகிவிட்டது ...அடுத்து சென்னை செல்ல வேண்டும் அதுவும் நெடும் பயணம் என்பதால் ... காலை கடமைகளை முடிக்கலாம் என்று நினைத்து சேலம் பேருந்து நிலையத்தில் பொது குளியல் அறையை (இடக்கரடக்கல்) தேடிச் சென்றேன். மாநகராட்சிக்கே உள்ள ...வழக்கம் போல் பராமரிப்பு இன்றி ... விளக்கின்றி இருந்தாலும் பலர் சென்று வந்தனர்... உள்ளே குவாட்டர் பாட்டிலில் மண்ணெண்ணை ஊற்றப்ப்ட்டு எரிய வைக்கப்பட்ட விளக்கு ஒன்று மட்டுமே இருந்தது. அதுவும் தனி அறையில் இல்லை. கரும் இருட்டு ... வேறு வழி இல்லை என்று பயன்படுத்தினேன். வெளியில் காசு வசூலிப்பவர் சப்த்தமாக பாடிக் கொண்டிருந்தார் 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே' ஆகா ! ... என்ன சூழ்நிலை!! எத்தகைய பொருத்தமான பாடல்!!! சுகாதாரத்தை எளிமையாக வழியுருத்துகிறாரே என்று மனதுக்குள் சிரித்தபடி முகம் கை கால் கழுவிவிட்டு ... அங்கு தண்ணீர் எடுத்து ஊற்றுபவரும் காசு கேட்டு கெஞ்ச அவருக்கும் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன்.

சென்னை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி அமரும் போது மணி 5 ஆகி இருந்தது. பகல் 12 மணியைத் தாண்டி சென்னையை அடைவதாக நடத்துனர் சொன்னார். முதலில் வசந்த மாளிகை ஓடியது... பின்பு உலகம் சுற்றும் வாலிபன் அப்போது உளுந்தூர் பேட்டையை தாண்டி விழுப்புரம் அருகில் சென்று கொண்டிருந்தது பேருந்து. நீண்ட வாகன நெருக்கடி (டிராபிக் ஜாம்) ... மெதுவாக ஊர்ந்து சென்றது பேருந்து... பிறகு எதோ ஊருக்குள் திருப்பி குறுக்கு வழியில் விழுப்புரம் வந்து சேர்ந்தது பேருந்து. இடையில் ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்தி இளைப்பாறினார்கள். திண்டிவனம் தாண்டி செல்லும் போது மணி காலை 10க்கு மேல் ஆகி இருந்தது. அப்போது படக்காட்சியில் 'திருடா திருடி' படம் ஓடியது... படம் முடிவை நெருங்குவதற்குள் சென்னை கத்திப்பாரா சந்திப்பை அடைந்ததும் அங்கேயே இறாங்கினேன். மணி பிற்பகல் 1. அங்கிருந்து சகோதரி வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு ... மதிய உணவிற்கு பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு கைத்தொலைபேசியை எடுத்து பா.க.ச பொதுச் செயலாளர் பதிவர் பாலபாரதிக்கு தொலைபேசினேன்.

5 மணி வரை வித்லோகவில் இருப்பதாக பாலபாரதி சொன்னார். சரி அங்கேயே சென்று சந்திக்கலாம் என முடிவு செய்து என் நண்பரை இரு சக்கர வாகனம் (பைக்) எடுத்துவரச் சொல்லி ... பால பாரதியை சந்திக்க வித்தலோகா புத்தகக் கடைக்குச் சென்றேன்.

தொடரும்...

முந்தைய இடுகைகள் ...

சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2
சுத்திச் சுத்தி வந்தேங்க - கோவை 1
சுத்திச் சுத்தி வந்தேங்க - கோவை 2

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

என்னங்க இரவுப்பயணத்தில் 'இப்படி' வேற இருக்கா? ஆபத்து இப்ப ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது!

பாலபாரதி அஞ்சு மணிவரை இருப்பேன்னு சொன்னாரா? ரொம்ப அநியாயம். என்னிடம் 3 வரைதான்
இருப்பேன்னு சொல்லி இருந்தார்:-))))

SP.VR. SUBBIAH சொன்னது…

//பா.க.ச பொதுச் செயலாளர் பதிவர் பாலபாரதிக்கு //
என்ன வம்பாயிருக்கிறது?

பாலபாரதியை கலாய்ப்பதற்கு உள்ள அமைப்பு பா.க.ச!

அதில் எப்படி பாலபாரதி செயலாளராக
இருக்க முடியும்.

குழப்பமாக இருக்கிறதே!

ஜெய் சங்கர் சீக்கிரம் வாருங்கள் - இதைக் கொஞசம் தெளிவு படுத்துங்கள்!

நாமக்கல் சிபி சொன்னது…

//'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே' ஆகா !//

:)))

டைமிங்க் சென்ஸோட ஒரு பாட்டு!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்