பின்பற்றுபவர்கள்

19 மே, 2006

என் இனம் உயர்ந்தது ?

வெளிநாடு வாழ்மக்களுக்கு இன உணர்வு உண்டு, எப்பொழுதும் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி எப்பொழுதும் உயர்வான எண்ணம் உண்டு. அது தவறும் அல்ல. இனங்களைத் தாண்டி எல்லோரும் ஓர் இனம் என்ற உணர்வும் இருக்க வேண்டும் என்று நம் தமிழர்களே 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று வழியுறுத்துகிறார்கள். அதைப் பற்றிய சிந்தனையாக எழுத நினைத்து எழுதியது இது.

இனம் என்பதற்கு பதில் சாதிக்கும் இது நன்றாக பொருந்தும்.

இனம் கண்டேன் !

அன்றாடச் செய்தித் தாள்களில்,
அனைவரின் கவனமாக, குற்றச்செயல் செய்திகள் !
அச்செய்திகள் காட்டும் பெயர்கள்,
அவைக்கு வந்த அவப்பெயர்கள் மட்டின்றி,
அவைகள் இனாமாக 'இனம்' காட்டும் முகப்பருக்கள்.

ஏனையதில் உயர்வாக நான் கருதும்,
என் இனத்தின் பெயர், செய்தியின் சேதி,
எல்லாம் தனிமனித ஒழுங்கீனம் என்ற ஆறுதல் !
ஏனைய மாற்று இனப் பெயர், அவை
எல்லாம் இன ஒழுங்கீனமென்ற இழித்தல் !

என் இனத்தோரால் நான் காயப்பட்டபோது
எனக்குள் வந்த மின்னல் வெளிச்சத்தில்,
என்னை, நானே இனம் கண்ட பொழுது,
எனக்குள் பேரிடி உணர்ந்து, முதன்முதலில்
என்னை, நான் பார்த்து உரக்கக் கேட்டேன்,

களவு, சூது, வஞ்சகம், பொய் மற்றும் விபசாரமென
ஊறு, கேடுசெய்யும் பஞ்சமா பாதகர்கள்,
உன் இனத்தில் ஒருவரும் இல்லையா ? இருந்தால்,
நீ பெருமைப்பட்டுக் கொள்ளலாம்,
உன் இனம் உயர்ந்ததென. அதுவரை என்றுமே
உலக மக்கள் யாவரும் ஒர் இனம் !

- கோவி.கண்ணன்

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பார்ப்பனர்கள் ஆரம்பித்து வைத்த ஜாதீ பற்றிக் கொண்டு எரிகிறது வலைமுழுதும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பார்ப்பனர்கள் ஆரம்பித்து வைத்த ஜாதீ பற்றிக் கொண்டு எரிகிறது வலைமுழுதும்! //
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லது என்று தெரியவில்லை. யாரவது எக்கேடாவது கெடடட்டும்.

பெயரில்லா சொன்னது…

மேற்கண்ட வரிகளை உருவாக்கியது நீர்தானோ என்று தோன்றுகிறது...

கோவி.கண்ணன் சொன்னது…

//மேற்கண்ட வரிகளை உருவாக்கியது நீர்தானோ என்று தோன்றுகிறது...//
முதல் பின்னூட்டத்தை சொல்கிறீர் என்று நினைக்கிறேன்.
தன்னை போலவே பிறரையும் நல்ல விசயத்துக்காக நினைப்பது நல்லது என்று மட்டும் கூறிக் கொள்கிறேன். எனது 'இந்தி யா?' பற்றிய பதிவை எதிர்ப்பு என்பதற்கு பதிலாக 'சிஙப்பூரிலிருந்து ஆதரவு' என்று எழுதி மகிழ்ந்தவர் நீர். நல்லவை உமது கண்களில் படவில்லை என்றால் நான் என்ன செய்யட்டும்

பெயரில்லா சொன்னது…

மனிதரில் நிறம்தான் வேறானது. உடலும், உள்ளமும், இரத்தமும், சதையும் ஒன்றே! அற்புதம் அன்பரே அற்புதம்.

பெயரில்லா சொன்னது…

//உலக மக்கள் யாவரும் ஒர் இனம் !
//
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிறீர்களா?? :-)))

பெயரில்லா சொன்னது…

அருமை கண்ணன்!
//தமிழன் என்று ஒரு இனம் உண்டு
தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு//

பெயரில்லா சொன்னது…

மூடனுக்கும் மனிதனைப் போல் முகமிருக்குதடா!
மோசம்;வேசம்; நாசம் எல்லாம் கலந்திருக்குதடா!
பிறப்பால் ஒன்றான ;நாம் ,நமக்குள் பெயரிட்டுப் பிரிவைனை வளர்த்து; பிரிந்து கிடந்து ;உயர்வு தாழ்வு பேசி மகிழ்கிறோம்.
நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தாம் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தாம் கற்ற கல்வி
குணத்ததளவே ஏகும் குலம்!
ஆகவே இனம்; குலம்;சாதி;மதம் மற்றும் இன்னேரன்ன! யாவும்...;ஒருவர் குணத்திலே தான் தங்கியுள்ளது.
பிறகும் போது எல்லாம் பிள்ளையே, அவன் கற்கும் கல்வியும்;வாழும் சூழலுமே! நற்குணமுடையோன் ஆக்கிறது.
யோகன்
பாரிஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

//மனிதரில் நிறம்தான் வேறானது. உடலும், உள்ளமும், இரத்தமும், சதையும் ஒன்றே! அற்புதம் அன்பரே அற்புதம். //

யாரு சொல்லி யாரு கேட்கப் போறார்கள்? சங்கு சும்மா இருந்ததது, சரி ஊதிவைப்போமே

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிறீர்களா?? :-))) //
பன்றிகள் என்று கூடச் சொல்லுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//paarvai said...
மூடனுக்கும் மனிதனைப் போல் முகமிருக்குதடா!//

பார்வையின் உணர்ச்சி கவிதை நன்று பாராட்டுகள்

பெயரில்லா சொன்னது…

கோவைக்கண்ணனுக்கு!
அவ் வரிகள் என் வரிகள் அல்ல ! கவியரசர் கண்ணதாசன் வரிகள்!
"யாரை எங்கே? வைப்பது எங்கே! என்ற பாடலில் வரும் ஒரு சரணம்
யோகன்
பாரிஸ்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்