பின்பற்றுபவர்கள்

18 மே, 2006

உதய சூரியன் சாமி ...

பக்த கோடிகளுக்கு ஒரு நற்செய்தி, அர்சகர் ஆவதற்கு திமுக சார்பில் ஒரு சாமியார் தயாராகிவிட்டது போல் தெரிகிறது. எல்லோரும் போய் ஆசிர்வாதம் வாங்கிகொண்டு வாருங்கள்.

சாமி ஒரு நாள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உதய சூரியன் தெரிந்ததாம், அப்போது 'ஏ மானிடனே, நான் தான் உதய சூரியன், இந்த பூமியை படைத்து, காத்து, வளர்பவன், என்னை விட்டு விட்டு இந்த மானிட பதர்கள் இல்லாத ஒன்றை கடவுளாக நினைக்கிறார்கள். இவற்றை எடுத்து சொல்லி என்னை வணங்கச் சொல் இல்லையென்றால் வரும் 2007 பிப்ரவரி மாதம் 29ம் தேதி சூரிய உதயம் இருக்காது, இருட்டு நரகத்தில் எல்லோரும் அழிந்து போவார்கள். என்று எச்சரித்தாம்.

சாமி பயந்து வியர்த்துவிட்டதாம், சாமி சந்தேகத்துடன் தன் மனைவியிடம் , 'ஏன்டி இங்க யாராவது வந்து பேசினார்களா' என்று கேட்க.

வழக்கமாக 'கலை பத்து மணியாகியும் உனக்கு குடிபோதை ஓயலையா, இப்படித்தான் நிதம் ஏதாவது சொல்லி என்னை சந்தேகப் படுவே' என்று எடுத்தெரிந்து பேசினார்களாம் சாமியாரின் மனைவி.

மறுபடியும் அதே அசரிரி அவர் மனைவிக்கும் கேட்க, சாமி என்னை மண்ணித்துக் கொள்ளுங்கள் என்று சாமியின் காலில் விழுந்துதார்களாம். இப்படியாக வேல்சாமி உதய சூரியன் சாமியான கதையை அவர் மனைவி விவரித்தார்.

பக்தர்கள் காணிக்கையாக சூரியன் உதயத்திற்கு முன் கரந்த பாலும், டார்ச்சி விளக்கும் கொடுக்க வேண்டும். காணிக்கை பணமாக தரத்தேவையில்லை. விருப்பமுள்ளோர் உண்டியலிலும் போடலாம். சாமி, பக்தர்கள் எடுத்துவரும் டார்ச்சி லைட்டை பக்தர்கள் முகத்துக்கு நேராக காட்டி குறி சொல்வார். ஏழை எளியோர் பேட்டரி மட்டும் வாங்கிவந்தால் போதும். ஒரு பக்தருக்கு உபயோகித்த பேட்டரி மறுபடியும் உபயோகிப்பட மாட்டது.

படம்: நன்றி தமிழ்முரசு

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டு தான் இருப்பான்

பெயரில்லா சொன்னது…

இருட்டடி கொடுக்கப் படவேண்டியவர்கள்!
யோகன்
பாரிஸ்

பெயரில்லா சொன்னது…

எனக்கென்னமோ கருணாநிதி தான் காசு கொடுத்து இப்படி செய்யச் சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

என்னத்தைச் சொல்ல?
ஏய்யா இதுவும் ஒரு செய்தின்னு நீங்களும் போடுறீங்களே...

பெயரில்லா சொன்னது…

Govikannan,

Please don't do Text alignment of your posts. Because of this, we are not able to read your posts in Firefox.

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னத்தைச் சொல்ல?
ஏய்யா இதுவும் ஒரு செய்தின்னு நீங்களும் போடுறீங்களே//
படமும் செய்தியும் தான் உண்மை, மற்றபடி வேலு சாமி உதயசூரியன் சாமியான கதை, சுவைக்காக சேர்த்த நம் சொந்த கற்பனை.

பெயரில்லா சொன்னது…

விரைவில் இலை சாமி, முரசு சாமி உருவாகும் பாருங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

//விரைவில் இலை சாமி, முரசு சாமி உருவாகும் பாருங்க... //

ரவி,
பம்பர சாமியை விட்டுட்டீகளே

பெயரில்லா சொன்னது…

ஆமாங்க...மறந்துட்டேன்...அத தொப்(*&)ளியே வரைந்து கொள்ளலாம்..

முரசாருடன் கூட்டனி வைத்தது மாதிரி இருக்கும்....

ரவி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமாங்க...மறந்துட்டேன்...அத தொப்(*&)ளியே வரைந்து கொள்ளலாம்..//
தேமுதிகவை வம்புக்கு இழுப்பது மாதிரி தெரியுது

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கென்னமோ கருணாநிதி தான் காசு கொடுத்து இப்படி செய்யச் சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது. //
உங்கள் கருத்து ஜெய மானவரின் மனசாட்சி போல் இருக்கிறது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்