ஒரு நாளைக்கு சராசரியாக 120 பதிவுகள் (இடுகைகள்), சராசரியாக 600 பின்னூட்டங்கள் என்ற எண்ணைக்கையாக தமிழ் மணம் தொகுப்பில் தகவல் இருக்கிறது. படிப்பதற்காக எழுதப்படும் பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டத்திற்கு முன்னோட்டமாக எழுத்தப்படும் பதிவுகள் அதிகம்.
இந்த 600 பின்னூட்டங்களில், பின்னூட்டம் அளித்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக வைத்துக் கொள்ளலாம், மீதம் 300 பதிவாளர் பின்னூட்ட மிட்டவருக்கு எழுதிய பதில் பின்னூட்டம் அல்லது நன்றி என்று வைத்துக் கொள்ளலாம்.
இங்கு போலியாக சென்று பின்னூட்டமிடும் பதிவாளர்களைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் பொதுவாக எழுதப்படும் விவாதப்பதிவுகளில் பின்னூட்டங்கள் நாகரீகமாக வருகிறாதா ?. எதிர்வினைப் பதிவுகளில் அநாகரிக பின்னூட்டங்களே அதிகம் வருகின்றன. ஒருமையில் எழுதுதல், குடும்பத்தினரை இழுத்து, இழித்து கூறுதல் இன்னும் எத்தனையோ.
முகமும், வயதும் ஏன் இடமும் கூட தெரிவிக்காமல் பதிவாளர்கள் எழுதுகிறார்கள். அதில் நன்மையும் கூட. எல்லோரும் செய்வதுதான் அது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதே போல் பின்னூட்டம் இடுபவர்களின் பின்புலமும் இருக்கிறது.
20 வயது முதல் 70 வயதுவரை உள்ள பதிவாளர்கள் இருக்கிறார்கள். மூத்த வயதுள்ள ஒரு பதிவாளர் எழுதுகிறார் என்று தெரியாமல் எத்தனையோ இளசுகள் மரியாதை குறைவான ஒருமை சொற்களை பின்னூட்டத்தில் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் பதிவு எழுதுபவர் இவருக்கு அப்பா வயது உடையவராக கூட இருக்கலாம்.
முன்பு ஒருமுறை நான் ஒரு பதிவாளருக்கு பின்னூட்டமிட்ட போது, அந்த பதிவாளர் 'ஏன் அந்த கட்சியை உயர்வாக சொல்கிறீர்கள், அவருக்கு உங்கள் தங்கையை திருமணம் செய்து கொடுப்பீர்களா ?' என்று கேள்வி எழுப்பினார்.
நான் அவர் பதிவை ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவு செய்து பின்பு மறுமொழியாக பின்னூட்டம் இட்டதற்காக, இவர் வந்து என் தங்கைக்கு வரன் பார்ப்பாராம். இப்படித்தான் இருக்கிறது பின்னூட்ட நாகரீகம்.
இன்னும் சில ஏனய்யா இப்படி சொல்கிறீர் என்று கேட்பார்கள், ஏன் ஐயா என்பதற்கும் ஏனய்யா என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளனவே.ஏனய்யாவோ, ஏன் ஐயாவோ போட தேவையில்லை, வெறும் பெயரை குறிப்பிட்டாலே போது.
ஆகவே பதிவாளர் ஆணா, பெண்ணா, வயது தெரியாதவரையோ, அவர் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் மரியாதைக் குறைவாக விளித்து பின்னூட்டம் இடுவது பண்பாடல்ல. வயது குறைந்த பதிவாளர்களாக இருந்தாலும் மூத்தப் பதிவாளர்கள், அவர்களையும் மரியாதைக் குறிய செற்களைப் பயன்படுத்தி விளித்து எழுதினால் ஒன்றும் பெரிய குறையாகாது.
பின்னூட்டத்திற்கு மறுமொழியிடும் போது, பதிவாளர்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், உங்களை இழித்துக் கூறினாலும் உங்கள் பதிவை நேரம் செலவழித்துப் படித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், அதற்கு தக்கவாறு மறுமொழியோ, மட்டுறுத்தலோ செய்தால் நலம்
24 கருத்துகள்:
நல்ல பதிவு. வரவேற்கிறேன்.
நல்ல முயற்சி.... திருந்த வேண்டியவர்கள் திருந்த வேண்டும்....
Kannan,
//பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டத்திற்கு முன்னோட்டமாக எழுத்தப்படும் பதிவுகள் அதிகம்.//
:-)
In the same not bringing in hierarchy (based on age/how long someone is blogging/ sex etc ) in the blogs is not a good idea .
Addressing someone by name is a way of acknowledging we all are equal.Web is a powerful tool to reach people breaking all sort of "age" "class" and "group" barriers , it should be allowed to evolve that way.
my 2 cents
//நல்ல பதிவு. வரவேற்கிறேன்//
சீனு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//luckylook said...
நல்ல முயற்சி.... திருந்த வேண்டியவர்கள் திருந்த வேண்டும்....//
அதிர்ஷ்ட பார்வை,
பார்வையிட்டதற்கு நன்றி
//Addressing someone by name is a way of acknowledging we all are equal.//
Calling by name is not harm. it is better too.
வரவேற்கிறேன் கோவி. சார்,
திருந்த வேண்டியவர்கள் திருந்த வேண்டும் என்பது என் வேண்டுதல்.
தானாய் பார்த்து திருந்தாவிட்டால் ... ஒழிக்க முடியாது. என்பார்களே அது போல் தான்.
I second Karthikvelu. Probably if all replies are in English, then the singular 'you' instead of all these நீங்க, சொல்லுங்க... will be redundant :-)
அய்யா,
பின்னூட்ட விளையாட்டு விளையாடினாலும் நாகரிக எல்லை தாண்டாத என்னைப் போன்ற ஆசாமிகளை நீங்கள் சாட வில்லை என நம்புகிறேன். :)
//Probably if all replies are in English,//
பாஸ்டன் பாலா அவர்களே, அப்புறம் தமிழ் வலைப்பூக்கள் எதற்கு? ஆங்கிலத்திலேயே எழுதலாமே.
எல்லாரையும் நீங்க வாங்க என மரியாதையாய் கூப்பிட்டால் யாரும் எதுவும் குறைந்து விடப்போவதில்லை.
பேசும் போது வாடா போடா என அழைக்கும் எனது நெருங்கிய நண்பர்களை பற்றி எழுதும் போது நான் மரியாதை கொடுத்து எழுதுவதுதான் வழக்கம். நாலு பேர் வந்து படிக்கும் இடமில்லையா?
மற்றபடி அநாகரிகமாக எழுதுபவர்களைப் பற்றி நான் சொல்வதற்கெதுவுமில்லை.
//I second Karthikvelu. Probably if all replies are in English//
Bala, even english reply also start with sir, dear, mr and so. And
Also have many four letter bad words are used in general. I try to say that every one give attention to respect by the way they speak by language
சார் சார்,
ரொம்ப சரியா சொன்னீங்க சார்.
நான் கடந்து மாட்டிக்கிட்டு வலியில அழும்போது இந்த பதிவ படிச்சேன். ரொம்ப தாங்க்ஸ் சார்.
வேண்டாத வேலயா 'பார்ப்பனர்கள்....' என்று இரு கட்டுரையை பற்றி எழுதிபுட்டேன் சார். அவ்வளவுதான். அத்தனை அசிங்கங்களும் என் வீட்டு வாசல்ல வந்து குலைக்க ஆரம்பிச்சுட்டாங்க சார்.
வேற எடத்துல என்னப்பத்தி என் சாதி என் பணம் என் வயசு (நான் பேபியாம் சார்....) எல்லாம் ஆராய்ச்சி வேற.
ஏதோ என் மன அங்கலாப்பு. கொட்டிபுட்டேன்.
ஆனா, நீங்க சொன்னது ரொம்ப சரிங்கசார்.
நன்றி
"நீங்க" "வாங்க" என்று விளிப்பதிலோ வட்டார வழக்கில் விளிப்பதிலோ எதும் ஆட்சேபங்கள் இருக்க முடியாது.(As long as both parties are not offended)ஆனால் வயதுக்கோ , அனுபவதிற்கோ, வேறு பல காரணங்களுக்கோ "தனியே" மரியாதை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வலையுலகிலும் படிமுறைச் சமூகத்திற்கே வழிவகுக்கும்.
உங்கள் கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப் போகிறேன்!
பின்னூட்டங்கள் பற்றிய விசயங்களை எழுதி சற்று விழிப்புணர்வு ஏற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் நாம். இந்த பதிவுற்கு நன்றி கோவி!
நானும் ஒரு பதிவு போட்டேன், மற்ற நல்ல ஆங்கிலப் ப்ளாக்குகளை (தீபக் சாப்ரா) சென்று படித்து அங்கு பதிப்பவருக்கும் வாசிப்பவருக்குமிடையே உள்ள கருத்துப் பறிமாறல்கள், பொறுப்புகள் போன்றவைகளை காணும் போது எனக்கு சற்று அயற்சி தோன்றும் நாம் இருக்கும் சூழ்நிலையை காணும் போது.
நானும் பெயர் சொல்லி அழைப்பதின் மூலம் பல சிக்கல்களை தவிர்க்கலாம் என்பதனை நம்புகிறேன்.
இந்த பதிவிட்டமைக்கு மிக்க நன்றி மீண்டும்.
தெகா.
நண்பர் தனி மடலில் முன்பு எழுதியிருந்தார்:
* விகடன்/குமுதம்/கல்கி இதழ் ஆசிரியருக்கு பதில் எழுதுவது message in a bottle. போய் சேர்ந்ததா... படித்தார்களா? பதில் போட்டார்களா? என்று எதுவும் தெரியாது.
* திசைகள்/திண்ணை/தமிழோவியம் எழுத்தாளருக்கு எழுதும்போது அணுக்கம் கிடைப்பதில்லை. அதிகம் பேர் பொறுமையாக பதில் எழுதுவதில்லை. கொஞ்சம் தள்ளி நின்று படிப்பதோடு சென்று விடுவார்கள்.
* வலைப்பதிவில் நெருக்கம் இருப்பதால், உரிமையோடு ஸ்மைலி மட்டும் கூட இட்டு சென்று விடுகிறார்கள்.
* தொலைபேசியில் பேசும்போது விஷயமே வேறு. இயல்பாக உரையாடல் செல்லும்
* நேரில் பார்த்துக் கொண்டால் கொள்கை விவாதங்கள் கூட நட்போடு முக பாவனைகளின் தெளிவோடு சிறப்பாக இருக்கும்.
திரு கோவி கண்ணன், எங்கள் மனதில் உறுத்திய விஷயஙள் பற்றீ எழுதினதற்கு நன்றி.
நல்லனவற்றை பற்றி மட்டும் அறிய நாட்டம் கொண்டவர்களால் சில சமயம் இந்த அதீத கலாச்சாரத்தை புரியவில்லை.
//அனுபவதிற்கோ, வேறு பல காரணங்களுக்கோ "தனியே" மரியாதை வழங்க வேண்டும்//
தனியாக மரியாதை கொடுக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்ர்பதில்லை. அதே சமயத்தில் மரியாதைக் குறைவான சொற்களான ஏன்யா, என்ன ஓய் என்று படிக்கும் போது மனது வருத்தப்படாமல் இருப்பார்கள் என்று சொல்லவும் முடியாது, அனைவரை அவர், இவர், ங்கள் போட்டும் பொதுவாக எழுதினால் பெரும் குறை ஒன்றும் ஆகப்போவதில்லை. வயது குறைந்தவராயினும் தெரியாதவரை பன்மையில் விளிப்பது நமது பண்பாடு. பெயருக்கு முன் சார், ஐயா போடுவது அவரவர் மற்றவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையைப் பொருத்தும் இருவருக்கும் இடையில் உள்ள பழக்கம் தான் தீர்மாணிக்கிறது.
அந்த வகையில் திரு ஞான வெட்டியான் மற்றும் திரு ஜோசப் அவர்களை எல்லோரும் ஐயா என்றும் சார் என்றும் அழைக்கிறார்கள். அதே சமயத்தில் ஞானவெட்டியான் அவர்களே அல்லது, ஞானவெட்டியான் என்று விளித்து எழுதினாலும் அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் 'யோவ் ஞானவெட்டி' என்றால் கண்டிப்பாக புண்படச் செய்யும். நான் சொல்வது இதுதான் நெருக்கம் இல்லாதவர்கள் அனைவரையும் நல்ல மரியாதையுடன் அழைத்தால் நாம் குறைந்தா போய்விடுவோம் என்பது தான். இதில் பின்னூட்டமிடுபவர்களைவிட வலைப்பதிவாளர்களுக்கு இடுபவர்களுக்கு பொறுப்பு அதிகம் இருக்க வேண்டும்.
பாலவுக்கு நன்றி
தகவல் பரிமாற்றம் நல்ல முறையில் நடக்கவேண்டும் என்று தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். ஒரு பதிவாளரைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவதற்கு அநாகரீக பின்னூட்டங்கள் துணைபோகிறது. பதிலுக்கு பதில் பதிவாளரும் அநாகரிக பின்னூட்டம் பதிலிட்டால் அவருடைய பிம்பம் உடைந்து போகிறது. இருவருக்கும் நஷ்டம்
//அத்தனை அசிங்கங்களும் என் வீட்டு வாசல்ல வந்து குலைக்க ஆரம்பிச்சுட்டாங்க சார்.//
ஜயராமன் அவர்களே, இப்படித்தான் தெரியாமல் நாமும் 'குலைக்க' என்று நம்மை அறியாமல் எழுதிவிடுவோம். படித்துவிட்டு திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
நல்ல பதிவு கோவிகண்ணன் ஐயா. தங்கள் வயது எனக்குத் தெரியாததால் இதுவரை ஐயா என்றோ சார் என்றோ அண்ணா என்றோ சொல்லாமல் வெறும் பெயர் மட்டுமே சொல்லி விளித்திருக்கிறேன். அதனால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
இதே நேரத்தில் எங்காவது எப்போதாவது யாரையாவது அறியாமல் மரியாதையின்றிப் பேசியிருந்தால் (அதாவது எழுதியிருந்தால்) எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள். சில நேரம் என்னை அவமரியாதையாகப் பேசியவர்களுக்குப் பதிலுரையாக நான் மரியாதையின்றிப் பேசியிருப்பேன். அவர்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும் என்று தோன்றினாலும் அது அறிந்தே செய்ததாகையால் மன்னிப்பு கேட்பது நேர்மையின் பாற்பட்டதன்றாகையால் விடுக்கிறேன்.
Thekkikattan said...
//நானும் பெயர் சொல்லி அழைப்பதின் மூலம் பல சிக்கல்களை தவிர்க்கலாம் என்பதனை நம்புகிறேன்.//
சொல்வது சரிதான், வெளினாட்டவர் அனைவரும் அப்படித்தான் செய்கிறார்கள்
bala ,
what u have said is true .In a way comments are more spontaneous , informal and uninterrupted form of thought exchange.
பின்னூட்டமிட்ட நண்பர்கள், மற்றும் அனைவரும் கீழ்க்கண்ட இந்த பதிவையும் சற்று படித்துவிட்டு செல்வீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இருபதிவுகளுக்கும் ஓரளவு தொடர்புள்ளது
http://govikannan.blogspot.com/2006/05/1.html
கோவிகண்ணன், சரியாகச் சொன்னீர்கள். நான் என் நட்சத்திர வார முகவுரையில் கூறியதை கார்திக்வேலு வழிமொழிந்து அனைவரும் உடன்பட்டிருப்பது மனதிற்கு இதமளிக்கிறது. எல்லோரும் நாகரீகமானவர்கள் தான், உணர்ச்சிவயப்படும் வரை.
கருத்துரையிடுக